மோடிஜி போர் விமானங்கள் வாங்கும்போது – மிலிடரி மந்திரி மீன் வாங்கிக் கொண்டிருக்கிறார்….!!!

.

.

தனக்கு கிடைக்கும் மரியாதை, புகழ், வரவேற்பில் –
தப்பித்தவறிக்கூட தன் சக அமைச்சர்களுக்கோ, கட்சி சகாக்களுக்கோ –
பங்கு கிடைத்து விடக்கூடாது என்பதில் மிக ஜாக்கிரதையாக இருப்பவர்
தான் நமது தற்போதைய அரசுத் தலைவர்….!!!

கண்ணதாசன் வனவாசத்தில் எழுதியிருந்தது நினைவிற்கு வருகிறது –
சாவு வீட்டிற்குப் போனால் கூட, பிணத்திற்கு பதிலாக தனக்குத்தான்
முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்று எதிர்பார்த்து செயல்படுவாராம் கலைஞர்.

பொதுவாக, பிரதமர் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்
போதெல்லாம், வெளியுறவுத்துறை அமைச்சரும் அவருடன் பயணம்
செய்வது வழக்கம்.

ஆனால் – மோடிஜி பிரதமர் ஆனபிறகு -பொதுவாகவே
வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளும்போதெல்லாம் தன்னுடன்
சீனியர் அமைச்சர்கள் யாரும் வந்துவிடக்கூடாது என்பதில்
மிக ஜாக்கிரதையாக இருக்கிறார். இதில் முக்கியமாக மாட்டிக்
கொண்டவர் வெளியுறவுத்துறை அமைச்சர் திருமதி சுஷ்மா ஸ்வராஜ்.

தற்போதும் திருமதி சுஷ்மாவை தவிர்த்தது அதிசயம் ஏதுமில்லை.
ஆனால், அவருக்கு எந்த விதத்திலும் போட்டியில்லாத
பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கரைக் கூட தவிர்த்தது
கிண்டலுக்கு வழி வகுத்து விட்டது.

கிண்டலுக்கு பெயர் பெற்ற காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங்
இதுபற்றி ஒரு புகைப்படத்துடன் ட்விட்டரில் செய்தி
வெளியிட்டிருக்கிறார் –

“நமது பிரதமர் ஆகாயப்படைக்காக பிரான்சில் போர் விமானங்கள்
வாங்கும்போது – நமது பாதுகாப்பு அமைச்சர் கோவாவில் மீன்
வாங்கிக் கொண்டிருக்கிறார் ! ” – என்ற கிண்டலுடன்…..!!!

dig-twitter-manohar parrikar-final

————————–

இன்னொரு விஷயத்தையும் இத்துடனேயே சேர்க்க விரும்புகிறேன்.

பிரான்சிலிருந்து ரபேல் ரக போர் விமானங்களை வாங்குவது
குறித்து டாக்டர் சுப்ரமணியன் சுவாமி தீவிரமாக எதிர்ப்பு
தெரிவித்திருக்கிறார். தான் ஏற்கெனவே பிரதமர் மோடிஜியிடம்
இந்த விமானங்களை வாங்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதாகவும்,
அதையும் மீறி “வேறு அழுத்தங்கள்” காரணமாக, மோடிஜி இந்த
விமானங்களை வாங்க முடிவு செய்தால், தான் கோர்ட்டை நாடி
தடையுத்தரவு பெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும் நிலை
உருவாகும் என்று பயமுறுத்தி இருக்கிறார்.

கீழே அது குறித்த ட்விட்டரும் செய்தியும் –

su.su.twitter on rafale-final

நாம் திரு சுப்ரமணியன் சுவாமி அவர்களுக்கு ஒரு சவால் விட
விரும்புகிறோம்.

” உண்மையிலேயே உங்களுக்கு “தில்” இருந்தால் –
வெறும் வாய்ச்சவடாலுடன் நிற்காமல்,
இந்த விமான கொள்முதலுக்கு எதிராக கோர்ட்டுக்கு போய்
தடை உத்தரவைப் பெறுங்கள் பார்க்கலாம்.”

அதைச்செய்தால் – உங்களைப் பாராட்டி ஒரு தனி இடுகையே
போட இந்த வலைத்தளம் தயாராக இருக்கிறது….!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

20 Responses to மோடிஜி போர் விமானங்கள் வாங்கும்போது – மிலிடரி மந்திரி மீன் வாங்கிக் கொண்டிருக்கிறார்….!!!

 1. M. செய்யது சொல்கிறார்:

  இப்படி மிரட்டினாலவது மந்திரி பதவி கிடைக்குமா என்று பார்க்கிறார் போல இதற்க்கெல்லாம் வளைந்து கொடுப்பாரா நமது PM. பார்ப்போம் பொறுத்திருந்து!!!

  M. செய்யது
  துபாய்

 2. today.and.me சொல்கிறார்:

  //மனோஜ் பரிக்கரைக்//
  மனோகர் பரிக்கரைக்

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   சரி செய்து விட்டேன். நன்றி நண்பரே.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 3. சக்தி சொல்கிறார்:

  உண்மையிலேயே உங்களுக்கு “தில்” இருந்தால் –வெறும் வாய்ச்சவடாலுடன் நிற்காமல்,இந்த விமான கொள்முதலுக்கு எதிராக கோர்ட்டுக்கு போய்
  தடை உத்தரவைப் பெறுங்கள் பார்க்கலாம்…………….இது விமர்சனம் தளத்தின் தில்.

  பிரான்சிடம் இருந்து ரபேல் விமானங்களை வாங்கும் திட்டத்தை சுப்பிரமணியன் சாமி சீர்குலைக்க கூடாது – காங்கிரஸ் ………..இது காங்கிரஸ் கட்சியின் தில்.

  வாங்கியே தீருவோம்-அதிபர் ஹாலண்டேயிடம் மோடி வாக்குறுதி…………இது மோடியின் தில்.

  ஜெயிக்கப்போவது யார்?

 4. Thiruvengadam (@veluran) சொல்கிறார்:

  I hope either U missed or reserved for other posting on the BLUNDER of Swamy about Cauvery Water matter , in saying , we have to arrange own resource for water.

 5. சக்தி சொல்கிறார்:

  சு.சுவாமியின் நண்பர்கள் யாராவது இருந்தால் இதையும் கொஞ்சம் கேட்டு சொல்ல முடியுமா?
  Objecting to Tamil Nadu’s opposition to the proposed reservoir across the Cauvery at Mekedatu, Bharatiya Janata Party leader Subramanian Swamy said Tamil Nadu should not ask water from Karnataka and should instead opt for seawater desalination.

  பாரதிய சனதா கட்சித் தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியம் சுவாமி, கர்நாடகத்தின் ராய்ச்சூரில் 11.4.2015 அன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, கர்நாடக அரசு மேக்கேதாட்டில் அணை கட்டுவதற்கு தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது என்றும், கர்நாடகம் பிரித்தானியர் ஆட்சியில் வஞ்சிக்கப்பட்டு விட்டது ஆனால் தமிழ்நாடு ஒரு மாகாணமாக இருந்து வெள்ளையர் ஆட்சியில் வளம் பெற்றது என்றும், எனவே காவிரிக்கான போராட்டத்தில் தமிழகம் வெற்றி பெற முடியாது என்றும் கூறியுள்ளார்.

  இதற்கு தமிழிசை அம்மா கூட பதில் தரலாம். இந்தத் தளத்தைப் படிப்பதாக கேள்வி?

 6. today.and.me சொல்கிறார்:

  கா.மை.ஜி,
  நண்ப சக்தி சொல்வதுபோல நான் யோசிக்கவில்லை. அவர் கூறியதும், அரசியல் நடத்துவது அவ்வளவு சுலபம் இல்லைபோல் தோன்றுகிறது. டிவியில் மெகா சீரியலை ஒருவருடம் ஓட்டுவதுபோல அரசியலை ஐந்துவருடம் ஓட்டவேண்டுமே, அதற்காக ஏதாவது செய்துகொண்டே இருக்கத்தான் வேண்டும். சகித்து அனுபவித்துத் தொலைக்கவேண்டியது என்னவோ இந்தியக் குடிமகன்கள்.
  இதிலே தேவையில்லாமல் இந்த பிட் ஞாபகத்துக்கு வந்துவிட்டது. இதற்கும் நீங்கள் குறிப்பிட்ட பதிவுக்கும் ஒரு சம்பந்தமுமில்லை. சும்மா கொஞ்சம் சிரித்துவைப்போமே என்றுதான்.

  நன்றி.

 7. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  ஸெம்ம க்ளிப் “இன்று மற்றும் நான்”-ஜி

 8. LVISS சொல்கிறார்:

  MOS for Commerce is accompanying the PM – The Foreign Secretary Mr Jaishankar is accompanying the PM – MOS Commerce was there in Germany with the PM to inaugurate the trade fair -The EAM Sushma Swaraj is meeting with North Korean delegation –Unless we know the protocol for such visits we cannot say why someone went and why someone didnt —
  One can expect the PM to convince Mr Swamy why it became necessary to push through this purchase–

 9. today.and.me சொல்கிறார்:

  Dear LVISS
  //Unless we know the protocol for such visits we cannot say why someone went and why someone didnt —//

  உங்களுக்கு ப்ரொட்டாகால் நன்றாகத் தெரியும்பட்சத்தில் அதை இங்கே சொல்லலாமே?

  ஏன் ஏன் என்று கேள்வி கேட்பதை விடுத்து….. அவ்வளவுதானே விசயம். எளிமையும் கூட.

  எப்பொழுதெல்லாம் மோடிஜியைப்பற்றி யாராவது கருத்துச்சொன்னாலே, பாஜக அல்லது மோடிஜ ஆதரவாளர்கள் விசயத்தை விளக்குவதை விட்டுவிட்டு ஏன் இப்படிக் கேட்கலாம், எப்படி இப்படிக் கேட்கலாம், எவ்வாறு இப்படிக் கேட்கலாம், என்றெல்லாம் பதட்டமாக கேள்விகளை அடுக்குகிறார்கள்.

  அவர் என்ன கேள்வி கேட்கக் கூடாத கடவுளா? ராஜாவா? மக்களாட்சி தானே இந்தியாவில்?

  ஆதரவாளர்களாவது, பதில் சொல்லக் கடமைப்பட்டவர்களே அன்றி,
  நீ ஏன் கேள்வி கேட்கிறாய் என்று பதில்கேள்வி கேட்க அல்ல…..

 10. today.and.me சொல்கிறார்:

  36 ரஃபேல் போர் விமானக்கொள்முதலின் பின்னணியில், இந்தியாவில் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்கிறது ரபேல் நிறுவனம்.
  2012-ல் சோனியாஜி ஆட்சியின் போது 126 ரஃபேல் ரக விமானங்கள் வாங்குவதாகத் திட்டமிட்டமிருந்தபோதே தயாரான இந்த ஒப்பந்தம், என்ன காரணத்தினாலோ நடக்காமல்போய் விட்டது. அதன் பிறகு 2013-ல் போயிங் நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டது ரிலையன்ஸ். மீண்டும் என்ன காரணத்தினாலோ இது நடக்கவில்லை.

  இது எல்லாம் நடக்கவேண்டும் என்றே மோடி ப்ராண்டிங் பண்ணினார்களோ என்னவோ? இப்போது மோடிஜி வந்தவுடன், எல்லாம் சக்ஸஸ். இடையில் சுவாமி புகுந்து குட்டையைக் குழப்பாமல் இருந்தால்.

  கா.மைஜி, போனபதிவில் நீங்கள் குறிப்பிட்டிருந்த தலைப்பை மீண்டும் நினைவுக்குக் கொண்டுவருகிறேன்.

  “மோடிஜி ஜோக்” …..!!! “அம்பானிக்கும் பாமரனுக்கும் ஒரே ட்ரீட்மெண்ட் தான்” ….!

  வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொள்பவர் சம்பந்தமேயில்லாமல் அம்பானியை ஏன் இழுத்தார் என்று குழம்பிக்கிடந்தேன். அவர் மறைமுகமாக ‘உன்னை மனதில்வைத்திருக்கிறேன், நீ எனக்கு தேர்தலின்போது செய்ததற்கெல்லாம் பதிலுக்கு வெற்றியோடு வருகிறேன். தைரியமாக இரு. இந்த (இந்தியப்) பாமரன்களுக்கு ஒன்றும் புரியப்போவதில்லை’ என்று சிக்னல் கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார் என்பது இப்போதுதான் புரிகிறது.

  காங்கிரஸ் பினாமியை கொண்டு போட்டுக்கொண்ட ராஜபாட்டையில் வீறுநடைபோடும் பாஜக.

  உண்மையிலேயே அப்படித்தானா நண்பர்களே.

  ஆமாம், ஆஸ்திரேலியாவில் அதானி, ப்ரான்ஸில் அம்பானி, ஜெர்மனியில் யார்? கனடாவில் யார்??

  • today.and.me சொல்கிறார்:

   யாருமே கேட்கவில்லை. என்றாலும் ஆதாரம் கொடுத்துவிடவேண்டுமே. விட்டேன்.
   http://www.thecitizen.in/NewsDetail.aspx?Id=3222&RAFALE/JET/FIGHTERS/DEAL/OPENS/PANDORA%E2%80%99S/BOX,/AMBANIS/EMERGEAS/POSSIBLE/BENEFICIARIES

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    நண்பர் டுடேஅண்ட்மீ,

    தலைப்பில் போட வேண்டிய அளவிற்கு முக்கியமான செய்தி…..

    உம்…. நாம் என்ன தான் சொன்னாலும் யார் கேட்கப்போகிறார்கள் ..?
    இருந்தாலும் இந்த செய்தியை நாம் நண்பர் LVISS அவர்களுக்கு சமர்ப்பிக்கலாம்.

    அவர் இதற்கும் எதாவது வியாக்கியானம் – மன்னிக்கவும் – விளக்கம் கொடுக்கக்கூடும்.

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

 11. LVISS சொல்கிறார்:

  It is not correct to say that PM attends all events abroad alone,some times he doesnt go — To give just one example , Mr Prakash Javdekar minister of Enviroment attended a meeting on climate change in Lima Peru –The PMs visits get more attention because of the position he holds now and the coverage it gets –It was true of previous PMs visits —
  The trips the PM has undertaken so far is aimed at pushing ahead the NDA agenda of attracting investments from abroad and make a success of Make In India –How many years since we saw a product with the stamp Made in India in it — Long ago –The economy around the world is not the same in all countries Many of them are on the verge of collapse –Compared to other countries our economy has stabilised after the NDA took over THis is acknowledged by many countries —

 12. ரிஷி சொல்கிறார்:

  I may have to – என்றால் போனாலும் போகலாம் என்றுதானே அர்த்தம். I will go to – போவேன் என்று சொல்லவில்லையே! – சுவாமிஜி மைன்ட் வாய்ஸ் 🙂

 13. drkgpgp சொல்கிறார்:

  Mr LVISS, there is no harm being a staunch supporter of BJP /Modi.
  Usually the concerned ministers accompany the PM on all overseas
  visits. If there is no place for them while signing such important deals,
  then what for they were inducted in the cabinet ?

  • LVISS சொல்கிறார்:

   In this meeting the Minister of Commerce is the concerned minister and not the EAM or FM That is why perhaps MOS Commerce was attending instead of the EAM or FM— Moreover the EAM has a meeting with the Foreign Minister of North Korea in Delhi –
   I am trying to be as objective as possible in my comments —

 14. LuckLook சொல்கிறார்:

  One of the useful things upa did was to bring in a right guy for reserve bank. Raguram Rajan made several changes to the system that we are seeing benefits now.
  In fact it is NDA government that is arm twisting recital to push through their agenda, like bank loans to coporates, rate cut, etc. Raguram is sticking to his policies without giving in to many of modi momism.
  He was also bold in saying that ” Strong government doesn’t mean improved economy. Hitler also had strong government.”
  Modi and company is trying to get him into some trap and position some rubber stamp guy.
  Also Modi company is also aware of great skill set rajan brings to the table, and heavy backing by the evonkmuc intellectual, and hence afraid to touch him.
  But usually Modi will topple everybody Like amaidi padai satyaraj. We saw the fate of many including advani. Rajan has to be carefull

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.