மோடிஜியிடமிருந்து அழைப்பு – பாரிசில் மல்லிகா ஷெராவத் …..!!!

mallika sherawat-2

mallika sherawat-

எழுத வேண்டாமென்று பார்த்தாலும், சில பாஜக நண்பர்கள்
கட்டாயப்படுத்தி என்னை எழுத வைக்கிறார்கள். அடுத்த
தலைப்பிற்கு போகலாமென்று எழுத ஆரம்பித்த என்னை,
நண்பர் எல்விஸ் போன்றவர்களின் பின்னூட்டங்கள்
திரும்பவும் மோடிஜி வளையத்துக்குள்ளேயே இழுக்கின்றன.

ஆனால் – இந்த இடுகையை நான் சீரியசாக எழுதவில்லை.
கிண்டலாக – in a satirical way – தான் எழுதுகிறேன். எனவே,
படிப்பவர்களும், பின்னூட்டம் எழுதுபவர்களும் –
அதே கண்ணோட்டத்துடன் அணுகும்படி கேட்டுக் கொள்கிறேன்.

பல நாடுகளுக்கும் போகும்போது -வெளியுறவுத்துறை அமைச்சரை
மோடிஜி அழைத்துப் போவதில்லை ; ஏனென்றால்,
ஒரு கால கட்டத்தில், தற்போதைய வெ.உ.துறை அமைச்சர்
இவருக்கு எதிரணியில் இருந்தவர். எதிர்காலத்திலும் போட்டியாக
அமையக்கூடியவர்…. எனவே அவர் எந்த விதத்திலும் விளம்பரம்
பெற இவர் வழி வகுக்க மாட்டார்.

ஒரு தமாஷ் என்னவென்றால் – இதன் பலன் போனது
பிரபல பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவட் அவர்களுக்கு.
மல்லிகா எதனால், எவ்வளவு பிரபலம் – என்பது எனக்கு சரியாகத்
தெரியாது. ஆனால், மோடிஜி அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது.
எனவே, இந்தியாவில் வேறு யாருக்கும் கிட்டாத அதிருஷ்டமாக –

பாரிசில் – மோடிஜி கலந்து கொண்ட – unesco நிறுவனத்தின்
நிகழ்ச்சிக்கு விசேஷ பார்வையாளராக – இந்தியாவிலிருந்து வந்து
கலந்து கொள்ளும்படி அழைக்கப்பட்டிருக்கிறார். அவரும்
சென்று கலந்து கொண்டிருக்கிறார்….!!!

mallika news-2

இந்தியாவிலிருந்து இந்த விழாவிற்காக அதிகாரபூர்வமாக
அழைக்கப்பட்ட ஒரே நபர் இவர் தான். இப்போது நீங்களே
சொல்லுங்கள் – வெ.உ.து.அமைச்சரை அழைத்துச் சென்று –
நஷ்டப்படுவதா அல்லது இவரை அழைத்துச் சென்று –
மேலும் கூட்டம் சேர்த்துக்கொள்வதா ? எது புத்திசாலித்தனம் ..?

இந்திய அரசும், யுனெஸ்கோ நிறுவனமும் சேர்ந்து
மல்லிகா ஷெராவட் அவர்களுக்கு அனுப்பிய அழைப்பிதழின்
நகல் கீழே –

போக வர விமான டிக்கெட்டும் இந்திய அரசு செலவில்
வாங்கி கொடுக்கப்பட்டதா – என்கிற விவரம் எனக்கு தெரியாது.
பிற்காலத்தில் யாராவது RTI விண்ணப்பம் போடும்போது
தெரிய வரலாம்….!!!

mallika invitation

Advertisements
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

36 Responses to மோடிஜியிடமிருந்து அழைப்பு – பாரிசில் மல்லிகா ஷெராவத் …..!!!

 1. Killergee சொல்கிறார்:

  வெட்கக்கேடு வேறன்ன ? சொல்வது அனுபவி ராசா அனுபவி.

 2. சக்தி சொல்கிறார்:

  ஒருவேளை ஒரு கல்லில் இரண்டு மாங்காயாக இருக்கலாமா?
  Dirty Politics படத்திற்கு விளம்பரம். அதன் மூலம் மல்லிகாவை தன்னுடன் வைத்திருக்க – தப்பாக எண்ண வேண்டாம்,அரசியலில் தன்னுடன் இறுக்கமாக வைத்திருக்க ஒரு தூண்டிலாக.
  பல நடிகர்களுக்கு பலமுறை தூண்டில் போடப்பட்டது. சுறாக்கள் சிக்கவில்லை ஆனாலும் சில மீன்கள் சிக்கின.

  Dirty Politics படத்தில் கெஜ்ரிவால் நடிக்க இருந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

 3. avudaiappannav சொல்கிறார்:

  muttal thanamaana seithi….ethayeduthaalum modi modi pulambal sasikkavillai

  • today.and.me சொல்கிறார்:

   //muttal thanamaana seithi//
   என்ன முட்டாள்தனமான செய்தி என்று கொஞ்சம் விளக்கமுடியுமா?

   இந்த பதிவைப் பொறுத்தவரை எனக்கென்னவோ மல்லிகா மட்டும்தான் கண்ணுக்குத் தெரிகிறார்.

  • today.and.me சொல்கிறார்:

   //ethayeduthaalum modi modi pulambal //
   ஊரெல்லாம் நமோ நம என்று பஜன் பாடிக்கொண்டிருக்கும்போது, இங்கே கொஞ்சம் பெயரின் பின்பகுதியை அதாவது மோடிஜி என்று கூறினால் உங்களுக்குப் புலம்பலாகத் தெரிகிறதா?
   //sasikkavillai//
   எங்கள் புலம்பலையே உங்களால் சகிக்கமுடியவில்லை என்கிறீர்கள். உங்கள் கஷ்டம் புரிகிறது.
   உங்கள் அலம்பலை நாங்கள் இன்னும் நாலரை வருடம் சகித்தாகவேண்டிய கட்டாயத்திலிருக்கிறோமே, எங்கள் கஷ்டம் புரிகிறதா?

  • today.and.me சொல்கிறார்:

   அலம்பலும் புலம்பலும் இல்லாமல் ..ஆவுடையப்பன்ஜியாவது சந்தோஷமாக இருக்கட்டும் என்ற அக்கறை கொஞ்சமாவது இருக்கிறதா இந்த பாஜக தலைகளுக்கு. கொஞ்சம் திருந்தித் தொலைத்தால்தான் என்ன ?

 4. drkgpgp சொல்கிறார்:

  General perception is that glamour takes precedence over substance in the modern era.

 5. today.and.me சொல்கிறார்:

  கா.மைஜி

  ஹரியானா மாநிலம், ஜாட் வகுப்பிலிருந்து வந்தவர் ரீமா லம்பா என்கிற மல்லிகா ஷெராவத். டெல்லி பப்ளிக் பள்ளியில் பள்ளிப்படிப்பு, டெல்லி பல்கலைக்கழகத்தில் தத்துவம் பட்டம். முன்னாள் மாடல். அமிதாப்புடன் பிபிஎல், ஷாருக்கான் உடன் சான்ட்ரோ போன்ற கமர்சியல்களில் நடித்தவர். . இந்நாள் நடிகை. க்வாசிஸ், மர்டர் (அன்பெய்த்புல்), ப்யார் கா சைட் எஃபட்க்ஸ் ஆப் கா சுரூர், வெல்கம், டவுல் தாமல், போன்ற படங்களில் மிகப்பெரிய சர்ச்சைகளைக் கிளப்பியவர், செக்ஸ் சிம்பல் என்று வர்ணிக்கப்படுபவர்.

  பாலிவுட் மட்டுமில்லாமல் ஹாலிவுட்டிலும் ஹாலிவுட், ஹிஸ், பாலிட்டிக்ஸ் ஆஃப் லவ் (லவ், பராக்) வில் கலக்கியிருப்பவர்.

  கலிபோர்னியாவில் ரினைசன்ஸ் ஆர்ட்டிஸ்ட் அவார்டை வென்றவர், லாஸ்ஏஞ்சலீஸின் கௌரவ குடிமகன்(ள்) அங்கீகாரத்தை பெற்றவர்

  சீனாவின் ஜாக்கிசானுடன் தி மித்-இல் நடித்தவர்.
  —————-

  ஐட்டம்சாங்ஸ் மூலம் பிரபலமடைந்த இவரை தமிழர்கள் அறிவார்களா? பெருமையெல்லாம் கீழ்க்கண்ட தமிழ்த்திரைப் பிரபலங்களுக்கே!

  மணிரத்னத்தின் குரு’வில் ‘மய்யா மய்யா’
  ‘சிம்புவின் ஒஸ்தி’யில் ‘கலாசலா’
  ‘கமலின் தசாவதார’த்தில் ‘கா கருப்பணுக்கும்’
  பாட்டுக்களில் கொண்டுவந்து தமிழ் குடிமகன்களை பெருமூச்சுவிடவைத்திருக்கிறார்கள்.

  இங்கேயே பாடல்களை இணைக்கலாம் என்று பார்த்தேன். ம்கூம். மோடிஜியுடன் அவர் அங்கே இருக்கும்போது இங்கே இணைப்பைத் தந்தால் நன்றாக இருக்காது. மேலும் இங்கே வருகிறவர்களின் வயதுக்கும் ரசனைக்கும் பொருந்தாது,

  எனவே இப்பாடல்களைப் பார்க்காதவர்கள், பார்க்கவிரும்புவர்கள், பார்த்து மறந்துபோனவர்கள் (மறக்கமுடியுமாய்யா? என்ற கேள்வி என் காதுக்குக் கேட்கிறது 🙂 ) யுடீயூப்பில் சென்று தேடிப் பார்த்துக்கொள்ள அன்புடன் வேண்டுகிறேன்.

  சோ, 2016 தேர்தலின்போது தபாஜகவினருக்கு இன்டர்நேஷனல் அளவிலான ஒரு நட்சத்திரஅழைப்பாளர் தயார். இவை எல்லாமே இணையத்தில் கிடைப்பவைதாம். தொகுத்தது மட்டும் நான்.

  பாஜக / மோடி பக்தர்கள் / மல்லிகா ரசிகர்கள் யாராவது சண்டைக்கு வந்துவிடாதீர்கள். பி ஹேப்பி, என்ஜாய். இது மல்லிகாவுக்கு ஒரு விளம்பரம். அவ்வளவுதான்.
  ______________

  (மல்லிகா ஷெராவத் என்றவுடனேயே ரொம்பவும் ஜொள்ளிவிட்டேனோ?? பிரதமர் அழைப்பின்பேரில் சென்ற ஒரே ஒருவர் என்றவுடன் அவரது முக்கியத்துவம் அனைவருக்கும் சேரவேண்டும் என்று எண்ணித்தான்…..
  வேறுஒன்றுமில்லை. 😀 😀 )

 6. jksmraja சொல்கிறார்:

  “muttal thanamaana nadavadikkai enpathai ” by oversight -our friend ” muttal thanamaana seithi’ entru eluthiullar.

  • today.and.me சொல்கிறார்:

   நண்ப jksmraja,
   நீங்கள் கூறியுள்ளபடித்தான் என்றால், நான் அப்பீட்டு. ஆனால் அதை அவர் சொல்லவேண்டுமே.
   😀

 7. today.and.me சொல்கிறார்:

  கா.மைஜி,
  //இந்த இடுகையை நான் சீரியசாக எழுதவில்லை.
  கிண்டலாக – in a satirical way – தான் எழுதுகிறேன். எனவே,
  படிப்பவர்களும், பின்னூட்டம் எழுதுபவர்களும் –
  அதே கண்ணோட்டத்துடன் அணுகும்படி கேட்டுக் கொள்கிறேன்.// இது சீரியஸ்தானே. அப்பப்போ ‘இப்படித்தான் பின்னுட்டம் போடவேண்டும்’ன்னு ஒரு பதிவு போடுங்கஜி. தலையெல்லாம் சூடாகும்போது கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கு.
  ———————-
  இந்தாங்க, ஒரு வாட்ஸ்அப் கமெண்ட்

  மோடிக்கும், ராகுலுக்கும் வித்தியாசம் என்ன?
  இவரு சொல்லிட்டு வெளிநாட்டுலேயே இருக்காரு. அவரு சொல்லாமலேயே வெளிநாட்டுலேயே இருக்காரு.
  ————–
  BJP President Amit Shah was also on the initial list but failed to garner enough votes to make it to the top 100.
  அமித்ஜி, வடை போச்சே…
  http://timesofindia.indiatimes.com/india/Modi-Kejriwal-among-100-most-influential-people-Times-poll/articleshow/46916897.cms

 8. Ganpat சொல்கிறார்:

  போன வருடம் ஜெய(ம்) பெற்று வந்தவர், .இந்த வருடம் மன்மதனாக த்தானே இருப்பார்.நாம் விகாரி வரை காத்திருக்க வேண்டியதுதான்.
  காவிரி மைந்தன் ,today.and.me உள்ளிட்ட அனைத்து நண்பர்களுக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  • today.and.me சொல்கிறார்:

   நன்றி கண்பத் ஜி.
   தங்களுக்கும் மற்ற நண்பர்களுக்கும் இனிய மன்மத வருட பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நன்றி கண்பத் -மறந்தே போனேன்……!!!

   —————————————–
   நண்பர்கள் அனைவருக்கும்
   இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்…..

   காவிரிமைந்தன்
   14/04/2015

 9. LVISS சொல்கிறார்:

  Mallika Sherawat reaches Paris on special invitation by UNESCO to attend PM Modi’s address
  Out of curiosity to know why the actress was in Paris I googled to find out and this is the headlines I saw in one of the well known website -So the invitation , was by UNESCO and not by the govt alone –Since our PM is addressing the meeting the name of our delegate to UNESCO is also there – Many Hollywood and Bollywood actors are appointed as brand ambassadors for UN bodies (Angelina Julie for example) I am not sure whether the actress in question is one of them–
  Before the election the PM was asked about denial of visa by the US govt He merely said “Personal issues should not come in the way of national interest ” (Words are not verbatim, but quoting from memory, but that should give us an idea about the PM )
  The EAM was there with with the PM during his tour of US and later was also there during SAARC meeting =-So it is not correct to say that EAM doesnt go abroad with the PM at all -Where the PM is present only he addresses the gathering — Uma Bharati and Smriti Irani also criticised the PM before he became the PM Now they are very much part of the cabinet holding important portfolios –As a matter of fact he campaigned for the latter in Raghuk Gandhi’s constituency–Obviously the camps exist in the minds of the people only , –

 10. ramachandran.R சொல்கிறார்:

  அடேங்கப்பா மோடிஜியைக் காப்பாத்த LVISS சார் தான்
  எந்த அளவுக்கு சப்பைக்கட்டு கட்டறாரு. அதுக்காக
  மல்லிகா அம்மணி அந்தஸ்தையே எக்கச்சக்கமா
  யு.என். அம்பசிடர் அளவுக்கு ஒசத்திட்டாரு.

  கே.எம். சார்,

  நீங்க 100 ஆதாரத்தோட கட்டுரை எழுதினாலும் மோடிஜி
  பக்தர்கள் யாரும் கொஞ்சம் கூட அசரவே மாட்டாங்க.
  எல்லாத்துக்கும் புதுப்புது அர்த்தங்கள் கண்டு பிடிப்பாங்க.
  உங்க கடின முயற்சிகளுக்கும், உழைப்புக்கும் எங்கள்
  ஆதரவு என்றும் உண்டு. தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
  சார். நன்றி.

 11. srinivasanmurugesan சொல்கிறார்:

  அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பரே,

   உங்கள் புகைப்படம் இப்படி தலைகீழாக இருக்கிறதே –
   எதாவது பின்னணி உண்டா ?

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 12. சக்தி சொல்கிறார்:

  //The reason why Mallika got invited for the occasion is not clear or whether she herself volunteered to attend the event. Perhaps her stint at the international stage with films like Myth and Politics of Love along with a Bruno Mars music video and numerous international awards could have been the reason perhaps. Nevertheless, it is good to have some known Indian faces at such international awards. //

  இப்படி ஒரு சந்தேகத்தை ஊடகம் ஒன்று எழுப்பிய நிலையில், மோடியின் விசேட அழைப்பின் பேரில் அவரின் பேச்சைக் கேட்க சென்றதாக மல்லிகாவே சொல்லி விட்டதால்,வாதத்தை தொடரவில்லை.

  ஆனாலும் இந்தியாவிலானாலும் சரி எந்த நாட்டிலும் சரி ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டுமாயின் அந்த நிகழ்ச்சியை நடத்தும் நிறுவனத்திடம் இருந்து அழைப்பைப் பெற வேண்டும். அப்படிப் பெற்றால் மட்டுமே நிகழ்ச்சி நடக்கும் மண்டபத்திற்குள் உள்நுழைய முடியும். இல்லையேல் அந்த நாட்டின் தலைவரானாலும் அனுமதிக்க மாட்டார்கள். இது மரபு.

  மூன்று மாதத்திற்கு முன்னர் முடிந்து விட்ட தமிழ் புத்தாண்டிற்கு இப்போது ஏன் வாழ்த்துகள் புரியவில்லை. தமிழறிஞர் மறைமலை அடிகளை நாம் மறந்து விட்டோமே!

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் சக்தி,

   வாழ்த்துக்கள் குறித்து – நீங்கள் “புரியாமல்” கேட்கவில்லை என்பது
   எனக்கு “புரிகிறது”…..!!!
   என்னைப் பொருத்த வரையில் ….
   நான் மறைமலை அடிகளார் காலத்துக்கும் முன்னவன்….!!!
   அதனால் தான் இப்போது வாழ்த்து சொன்னேன்.

   அந்த “சுதந்திரம்” எனக்கு உண்டென்று ஏற்பீர்கள் என்று நம்புகிறேன்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

  • LVISS சொல்கிறார்:

   Being invited to attend speech by Modi does not mean Mr Modi is inviting Many such invitations would have been sent by UNESCO to Indians based in that country — A lot of Indian invitees were there –It is not a big deal –

   • Ramachandran.R. சொல்கிறார்:

    Mr.LVISS,

    She is the only invitee from INDIA.
    That too invited specially by Mr.Modiji…!

    I appreciate – SO MUCH OF EFFORTS
    from you to protect the odd incident …!!!

 13. சக்தி சொல்கிறார்:

  உங்கள் சுதந்திரம்.அவரவர் விருப்பம். வாதிடவும் வரவில்லை.
  மறைமலை அடிகளார்,தெபொமீ போன்ற 50 ற்கு மேற்பட்ட தமிழறிஞர்கள் விவாதித்து முடிவெடுத்ததை நாம் ஆராயாது தூக்கிப் போட்டு விட்டோமே என்ற கவலைதான். வேறொன்றுமில்லை.
  இன்று தாலியும் தூக்கிப் போட்டாயிற்று.தூக்கிப் போட வேண்டிய எதனையும் நாம் தூக்கிப் போடவில்லையே!

 14. johan paris சொல்கிறார்:

  அப்போ! ஜாக்கிசான் முடிச்சுதா?

 15. LVISS சொல்கிறார்:

  A news item today says that the Defence MInister Mr Manohar Parikkar is going to South Korea with a top level delegation to bolster defence cooperation and military exchanges — The PM will be going later to firm up the deals if any — As I could observe this is how this govt has been functioning —

 16. Ramachandran.R. சொல்கிறார்:

  So one can expect – M/s Deepika Padukone to be invited
  for a South Korea trip ?

 17. Kauffman சொல்கிறார்:

  What is the heck going on in India? PM is going to wast countries to beg for Army helicopters! Defense minister is going to east countries to beg for military equipment? Is it not shame on us? Who are we? Are we not children of great people who ran the aeroplane and supersonic jets in 4999 years back?

  Our forefathers did fly from planet to planet using pushback (bhushbak) vimanam? Our grand fathers did invent modern aeroplane and helicopters. Why do we go to other countries?

  What happened to our technology? Did congress leaders give up these technologies to west countries?

  • Kauffman சொல்கிறார்:

   Taru, where are you?
   I need your strong support for my above comment to defend from Tamil racists, who are ready to attack me with thier comments

   • Taru சொல்கிறார்:

    Kauffman,

    I am getting serious threats from readers of this blog. But I will not be afraid. Thanks for your support.

    Taru

    • today.and.me சொல்கிறார்:

     நண்ப தரு,

     எப்படி? உங்களுடைய இமெயில் ஐடி அல்லது போன் அல்லது வேறுஏதாவது தொடர்பு முகவரிகளை உங்களை மிரட்டுவதாக நீங்கள் குறிப்பிடும் விமரிசனம் வாசகர்கள் பெறமுடிந்தது எவ்வாறு?

     ஆம். இப்போது புரிகிறது. இங்கே விமரிசனத்தில் பின்னூட்டம் எழுதாமல் இருப்பதற்காக ஒரு காரணத்தைக் கண்டறிந்திருக்கிறீர்கள்.அதுவும் மற்றவர்களைக் குறைகூறியே. விமரிசனம் வாசகர்களைக் குறைகூறும் நீங்கள் அதற்கான ஆதாரங்களைத் தந்திருந்தால் கொஞ்சமாவது நம்வும்படியான பொய்யாக இருந்திருக்கும். நீங்கள் திருந்தவே போவதில்லை.

     பரவாயில்லை. வாருங்கள். வந்து விமரிசனத்தைப் படித்துவிட்டுப் போங்கள், கொஞ்சநாளைக்கு எழுதாமல் இருங்கள். பரவாயில்லை.

     எப்படிப்பட்ட பின்னூட்டங்களையும் எதிர்கொள்ளும் அறிவு உங்களுக்கு இருக்கிறது. ஆனால் அதை நாட்டுக்கும் மக்களுக்கும் பயன்படும் நல்லவழிகளில் நீங்கள் அபிவிருத்தி செய்ய நான் எல்லாம்வல்ல இறையை பிரார்த்திக்கிறேன்.

     ……………
     தருவின் பின்னூட்டம் அனைத்து விமரிசனம் வாசகர்களையும் குறிப்பதால் ஆங்கிலத்திலும் தமிழிலும் எனது பின்னூட்டம். அவ்வளவே.

     Dear Taru,
     How? How do they get you email id or phone or any contact? Don’t lie.
     Yes. Now you find an execuse to stay away from writting feedbacks here.
     Cool. Only read and go Vimarisanam for some time.
     I pray for your knowledge development in a better way.

 18. Srini சொல்கிறார்:

  ” Potruvaar potratum, thootruvaar thootratum” , he has come to this post with a mission and he will accomplish that like a “Karma yogi”. Only time will tell his contributions and contradicting views will always exist. HE IS ONE OF THE BEST PM THAT INDEPENDENT INDIA HAS GOT TILL NOW AND A GREAT NATIONALIST LEADER THAT BHARAT HAS GOT AFTER MORE THAN 800 YEARS. There is no other leader in india at present who can manage this such a large country with so many issues. he is trying his best. Those who support him, only needs to pray to GOD for his good health and long living. Those who oppose or having contradicting views can continue doing that, and over a period of time, their shortsightedness will change for sure.

 19. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  ஸ்ரீநி,

  மோடிஜியின் மீது வேண்டுமென்றே குறை கூற வேண்டும்
  என்று நினைத்து இவற்றை எல்லாம் எழுதவில்லை.
  கண்ணில் படும் குறைகளைத்தான் எழுதுகிறோம்.
  மோடிஜியின் அபிமானிகளுக்கு, அவர் மீது இருக்கும்
  அளவுகடந்த பிரியத்தால் – இந்த குறைகள் கண்ணில்
  படாமல் போகலாம். பட்டாலும், ஏற்க மனமில்லாமல்
  போகலாம்.

  இந்த குறைகள் எதுவும் பொய்யல்ல. வேண்டுமென்று
  சொல்லப்படுபவையும் அல்ல.

  மோடிஜி நல்ல செயல்கள், திட்டங்கள் பலவற்றில்
  ஈடுபட்டிருக்கிறார் என்பதும் உண்மையே.
  அதை நான் மறுக்கவில்லை. அதற்காக, இந்த தவறுகள்
  இல்லையென்று ஆகி விட முடியாது.

  இவற்றையும் மீறி – மோடிஜியின் மூலம்
  இந்த நாட்டுக்கு நல்லது நடந்தால், அதில் என்னை விட
  மகிழ்ச்சி அடைபவர்கள் யாருமிருக்க முடியாது. அப்போது,
  அவற்றையும் நிச்சயம் பாராட்டி எழுதுவேன் –
  எனக்கு எந்தவித தயக்கமும் இல்லை.

  உங்கள் விருப்பம் நிறைவேற நான் மனமாற விரும்புகிறேன்.
  வேண்டுகிறேன்.

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

 20. Taru சொல்கிறார்:

  You may criticize him whatever way you want. Look at this to see how the international community has recognized such a great leader: http://m.dinamalar.com/detail.php?id=1232471

  Couple of things are for sure
  1. He is your PM and you can’t change that
  2. Tamilians will be continuosly fooled in the name of Tamil, Race, etc, and they will be left out of national progress like north eastern people. They will regret this

  Taru

  • today.and.me சொல்கிறார்:

   //1. He is your PM and you can’t change that//
   ஆமாம். அதனாலேயே,அவரை அட்லீஸ்ட் ஐந்துவருடத்துக்கு மாற்றமுடியாது என்பதாலேயே, தேசியவாதி, நாட்டுப்பற்றாளர் என்று பொய்யாய் நடித்து ஓட்டுவாங்கி தேர்தலில் ஜெயித்ததினாலேயே அவர்திருந்தவேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால் அடுத்த தேர்தல் என்ற ஒன்று இருப்பதை நீங்கள் மறந்துவிட்டீர்கள்.

   //2. Tamilians will be continuosly fooled in the name of Tamil, Race, etc, and they will be left out of national progress like north eastern people. They will regret this//
   இந்த பத்துமாதத்திலேயே போதும்போதும் என்கிற அளவு ரிக்ரெட் பண்ணவைத்துவிட்டார் உங்கள் தலை. இன்னமுமா.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.