சுப்ரமணியன் சுவாமியின் விஷ வித்துக்கள் …. விதைக்கப்படும் முன்னரே அழிக்கப்பட வேண்டும்…

Swamy -ht

 

‘”செப்பினார் சுப்ரமணியன் சுவாமி” என்று தலைப்பிடப்பட்டிருந்த
கடந்த இடுகைக்கு பின்னூட்டம் எழுதும்போது நண்பர் சக்தி
அவர்கள் சொல்கிறார் –

————————————————-
சக்தி சொல்கிறார்:
5:20 பிப இல் ஏப்ரல் 15, 2015 –

ஐயா தலைப்புடன் நிறுத்திக் கொண்டு விட்டார். வேறு
சிலவற்றையும் சேர்த்திருக்கலாமோ என்று தோன்றுகிறது.

பாரதிய ஜனதாவின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று
அரசியலமைப்புச் சட்டம் 370-ஐ ஒழிப்பது. அதை
நடைமுறைப்படுத்த விரைவில் நடவடிக்கை எடுக்கப்
போவதாக……………..

அடுத்த ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் ராமர் கோயில்
பிரச்னையைக் கையில் எடுக்க உள்ளதாக…………

இந்துத்துவா கொள்கைகளை செயல்படுத்துவதற்காக
விராட் ஹிந்துஸ்தான் சங்கம் என்ற புதிய இந்துமதவாத
அமைப்பை பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமி
தொடங்கியுள்ளார்.
இந்து பாரம்பரியத்தை ஒப்புக்கொள்ளும் முஸ்லிம்களுக்கும்
இந்த அமைப்பில் இடம் உண்டு.(அதாவது மதமாற்றம்)
இது விரைவில் செயல்பட உள்ளதாக…………..
சமீபத்தில் அறிவித்துள்ளார்.
………….
இது தவிர முஸ்லீம்களின் வாக்குரிமையை பறிக்க வேண்டும்
என்ற பங்காளிக் கட்சி சொன்னதற்கு பாஜக தலைமை
கண்டிக்கவில்லை.
முஸ்லீம்-கிறிஸ்தவர்களுக்கு குடும்பக் கட்டுப்பாடும்,
இந்துக்கள் அதிக குழந்தைகளைப் பெற வேண்டும் என்ற
பங்காளிக் கட்சியின் பேச்சை கண்டிக்கவில்லை தலைமை.

– எங்கே இந்தியா செல்கிறது என்று புரியவில்லை.
—————————————–

இதே விஷயங்களைக் குறித்து இரண்டு நாட்களில்
நான் தனியாக ஒரு இடுகை எழுதுவதாக இருந்தேன்.
இப்போது நண்பர் சக்தி பின்னூட்டத்தில் குறிப்பிட்டு விட்டதால் –
அந்த பின்னூட்டத்தையே, முன்னூட்டமாக வைத்து இப்போதே
அந்த இடுகையை எழுதி விடலாமென்று தோன்றியது.

மசூதியை இடிக்க வேண்டுமென்று சொல்வதும்,
DNA குறித்தெல்லாம் விவாதம் கிளப்புவதும்,
‘Hindustan-is-for-Hindus’ என்று பிரச்சாரம் செய்வதும்,
மீண்டும் ராமர் கோயில் பிரச்சினை தீவிரமாக
கையில் எடுப்பதும் –

ஏற்கெனவே, விஸ்வ ஹிந்து பரிஷத், ஆர். எஸ். எஸ்.,
பஜ்ரங் தள் போன்ற பாஜக வின் துணை அமைப்புகள்
இருக்கும்போது – கிட்டத்தட்ட அதே பாணியில்
Virat Hindustan Sangam (VHS) – அமைப்பை
தனக்காக, தனியாக புதிதாகத் துவக்குவதும் –

சு.சுவாமியின் நடவடிக்கைகள் எல்லாமே – ஒரே லட்சியத்தை
நோக்கித்தான் இருக்கின்றன. அவருக்கு பாஜக வில்
நிதி அல்லது உள்துறை அமைச்சர் பதவி வேண்டும்.
எந்த அளவிற்கு நேரடியாகவும், மறைமுகமாகவும்
கேட்க முடியுமோ
அத்தனை விதங்களிலும் கேட்டுப் பார்த்தாகி விட்டது.

கிடைப்பதாக இல்லை. வேலியில் போகிற ஓணானை எடுத்து
வேட்டிக்குள் இட்டுக்கொள்ள மோடிஜியோ, ராஜ்நாத் சிங்கோ,
அருண் ஜெட்லியோ – தயாராக இல்லை.

விளைவு – பாஜக மற்றும் அதன் துணை அமைப்புகளில் உள்ள
தீவிரவாத கும்பல்கள் அனைத்தையும் தன் பக்கம் ஈர்த்துக்கொண்டு
ஒரு தனி அமைப்பை உருவாக்கி, தன் நோக்கத்தை நிறைவேற்றிக்
கொள்ள “அழுத்தம்” கொடுக்க பார்க்கிறார்.

நூற்றுக்கு நூறு – சுயநலம் தான் இதன் அடிப்படை.
இங்கே மத உணர்ச்சியை கிளறி விட்டு, லாபம் பார்ப்பது
மிகவும் எளிதான விஷயம். அது ஒவாசியாக
இருந்தாலென்ன சு.சுவாமியாக இருந்தாலென்ன – தீவிரவாதம்
தீவிரவாதம் தான்.

சு.சுவாமி – முற்றிலும் சுயநலநோக்கத்துக்காக –
தீவிர மதவாதம் என்கிற “விஷ வித்து”க்களை ஊன்ற
முயற்சிக்கிறார். அவர் குறி வைப்பது, இந்து மத அபிமானிகளை,
படித்த – நடுத்தர இளைஞர்களை ….

அவரது முயற்சிகள் முளையிலேயே கிள்ளப்பட வேண்டும்.
விஷ வித்துக்கள், ஊன்றும் முன்னரே அழிக்கப்பட வேண்டும்.
மத்திய பாஜக அரசு, தனக்கு பிரச்சினை இல்லாத வரையில் –
இதை தடுக்க ஒரு முயற்சியும் எடுக்காது.

இந்தியா இந்தியர்கள் அனைவருக்கும் சொந்தமானது.
இங்கு அனைத்து மதத்தினரும்,
அனைத்து மொழியினரும்,
-சுதந்திரமாகவும், சம உரிமைகளுடனும் வாழ உரிமை உண்டு.
மதம், மொழி – இரண்டுமே எளிதில் உணர்ச்சியைத் தூண்டி
விடக்கூடியவை. யாரும், யார் மீதும் – எதையும் திணிக்க
முயற்சிக்காமல் –
இந்த நாடு முன்னேறவும், நாட்டின் அடித்தட்டு மக்கள்
நலம் பெறவும் – முன்னுரிமை கொடுத்து செயல்பட வேண்டியது
தான் இங்கு முக்கியத்துவம் கொடுக்கபட வேண்டும்.

மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.
உணர்ச்சித் தூண்டுதல்களுக்கு பலியாகி விடாமல்
இருக்க வேண்டும். சு.சுவாமியின் சுயநல முயற்சிகளை
வேடிக்கை பார்ப்பது விபரீத விளைவுகளை உண்டாக்கும்
என்பதை மத்திய அரசு உணர்ந்து – அவரை கட்டுப்படுத்தும்
முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

10 Responses to சுப்ரமணியன் சுவாமியின் விஷ வித்துக்கள் …. விதைக்கப்படும் முன்னரே அழிக்கப்பட வேண்டும்…

 1. Lalu சொல்கிறார்:

  This man was in the monthly pay list of former Sri Lanka President. Check his bank accounts and foreign bank accounts.

 2. சக்தி சொல்கிறார்:

  யார் சொன்னாலும் கேட்க வேண்டும். கேட்ட பின் சுய சிந்தனையுடன் முடிவெடுக்க வேண்டும். அரசியல்வாதியின் தொண்டனாக,சாமியார்களின் சீடனாக, நடிகனின் விசிறியாக இருந்து அப்படியே அவர்கள் சொல்வதை பலரும் பின்பற்றுவதால் தான் சுவாமி போன்றவர்களும் மக்களை திசை திருப்ப எதையெதையோ சொல்லி ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்.மக்கள் சிந்தித்து செயல்பட வேண்டும்.
  ……………..
  ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்கில் சுவாமி ஒரு முக்கிய சர்ச்சையை கிளப்பி உள்ளார். அதை ஏற்றுக் கொண்டு அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது நீதிமன்றம்.
  //IPC provisions put unreasonable restrictions on people’s right to free speech and expression guaranteed under Article 19 (1) (a) of the Constitution.
  After brief hearing, the bench today asked Law Ministry, Tamil Nadu government and others to respond to the plea of Swamy within four weeks and listed it for hearing on July 7.
  Referring to rival contentions, it said, “it has been contended that Article 19 (2) of Constitution itself imposes reasonable restrictions (on freedom of speech and expression) and therefore, submission by Swamy that sections 499 and 500 of the IPC are beyond Article 19 (2) is unsustainable…//

  உயர் நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் கிரிமினல் வழக்கில் இருந்து சிவில் வழக்காக மாறக் கூடும். இது அவருக்கு மட்டுமல்லாது,அவருக்கு எதிராக கருத்து தெரிவிக்கும் போதும் பொருந்தும்.
  ……………
  ஒரு வேண்டுகோள்……….
  முதன்மைப் பதிவு தமிழில் எழுதப்படுகிறது. பயணிகள் அதைப் படித்து கருத்திடுகின்றனர். அப்படி இருக்கும் போது ஏன் காமை அவர்கள் கருத்துகளுக்கு ஆங்கிலத்தில் பதில் கொடுக்க வேண்டும்?

  அமெரிக்காவில் படித்து அமெரிக்காவில் வேலை பார்க்கும் என்னால் தமிழில் எழுத முடியும் என்றால்……………..கொஞ்சம் எண்ணிப் பார்க்க வேண்டுகிறேன்.

  தமிழில் எழுதுவோம் அன்னை தமிழை வாழ வைப்போம்.

 3. புது வசந்தம் சொல்கிறார்:

  இந்த தேசம் எதை நோக்கி செல்கிறது ? ஒரு அச்சம் ஏற்படுகிறது. சக மனிதன் மேல் வெறுப்பை கக்குவதும், சந்தேகமாக பார்பதுமாக இருந்தால் என்னவாகும் ? வருங்கால இளைய தலைமுறைக்கு எதை விட்டு செல்ல போகிறோம்.?

  http://tamil.thehindu.com/opinion/editorial/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/article7107889.ece?homepage=true&theme=true
  பிரதமர், இங்கு ஏதும் பேசாமல் ஜெர்மனி போய் பேசுகிறார்.

  NDTV.COM
  /*’India is a Changed Country Now,’ Says PM Narendra Modi to Germany*/
  இதன் அர்த்தம் என்ன ? இப்போது தெருவுக்கு தெரு நாட்டமை..
  /*45 celebrity chefs from India served mango lassi to Ms Merkel and prepared Gujarati treats like khandvis, dhoklas and khakras for Mr Modi on Monday morning. The two leaders also shared a cup of tea. “Indian tea. What better than a cup of tea from @teaboardofindia to end visit to Indian Pavilion at @hannover_messe,” tweeted external affairs ministry spokesperson Syed Akbaruddin. (Read)/* இதற்கு என்ன சொல்ல ?

 4. today.and.me சொல்கிறார்:

  ஆண்ட்ராய்டு ஃபோனில் தொட்டச்சு : கூகுளின் அடுத்த சாதனை

  http://www.seythigal.com/?p=6049

  ஆண்ட்ராய்டில் விமரிசனம் படிக்கிறவர்களா? தமிழில் கருத்துச் சொல்லுங்கள்

 5. Kauffman சொல்கிறார்:

  Susa words are powerful in north India. Many followers of Susa in north India beleive him 100000%. They even think that he is the real patriot. This is dangerous for secular India. These fans indeed call it as sickular india.

 6. Ganpat சொல்கிறார்:

  மிகவும் பொறுப்புணர்வுடன் எழுதப்பட்ட பதிவு.முழுமையாக ஆதரிக்கிறேன்.

 7. 'நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  நியாயமான கட்டுரை. இத்தனைகாலம் சும்மா இருந்துவிட்டு, இப்போதுதான் இந்துத்துவா கொள்கைகளைப் பற்றிப் பேசுகிறார். ஆதாயம் இல்லாமல் ….டி ஆத்தில் இறங்கமாட்டார். இவரை மோடி கூடவே வைத்திருப்பதன் காரணம், திருடனைக் கண்பார்வையிலேயே வை என்பதாக இருக்கலாம். ஜெவுடன் கூட இருந்துவிட்டு, தன் அரசியல் ஆதாயத்துக்கு உதவி செய்யவில்லை என்பதால், எந்த அளவுக்கும் கீழிறங்கி வேலைபார்க்கிறார். ரொம்ப ஆபத்தானவராகத் தோன்றுகிறது

 8. vignaani சொல்கிறார்:

  //இவரை மோடி கூடவே வைத்திருப்பதன் காரணம், திருடனைக் கண்பார்வையிலேயே வை என்பதாக இருக்கலாம்//
  Quoting Sanjay Baru (from memory): Better to keep him in the tent so that he will piss outside, rather than having him outside and his pissing into the tent (in respect of Arjun Singh said by PVNarasimha Rao)

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.