அடானி பற்றிய ஹிந்துஸ்தான் டைம்ஸ் ரிப்போர்ட் ….

326007-290607-gautam-adani-1

கௌதம் அடானி பற்றி ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி இதழ்
ஒரு விசேஷ ரிப்போர்ட் வெளியிட்டிருக்கிறது.

ஆங்கிலத்தில் வந்திருக்கும் இந்த ரிப்போர்ட்டை –
சுருக்கமாக தமிழில் கீழே தந்திருக்கிறேன் – அவ்வளவே.
இதில் என் சேர்க்கை எதுவுமே இல்லை.

( http://www.hindustantimes.com/india-news/gautam-adani-pm-
modi-s-constant-companion-on-overseas-trips/article1-1337692.aspx

)

குஜராத்தில் மோடிஜி முதலமைச்சராக இருந்தபோது,
குஜராத் அரசிடமிருந்து பல சலுகைகளைப் பெற்று ஒரு
தனியார் துறைமுகமும், நிலக்கரியைப் பயன்படுத்தும்
ஒரு தனியார் மின் உற்பத்தி நிலையமும் உருவாக்கினார்.
இதற்காக, அவர் ஸ்டேட் பேங்கிடம் பெற்ற கடன் –
வட்டியும், முதலுமாக சேர்ந்து 72,000 கோடி ரூபாய் இப்போதும்
நிலுவையில் நிற்கிறது.

இருந்தும், மோடிஜி அரசு பதவியேற்ற நாள் முதல், புதிது புதிதாக
பல தொழில் நிறுவனங்களை வாங்கிக் குவிப்பதில் அடானி
மிகத்தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்…..

மோடிஜி வெளிநாடு சுற்றுப்பயணம் செல்லும் ஒவ்வொரு
தடவையும், அடானியும் பின்னாலேயே செல்கிறார்…..

மோடிஜி அமெரிக்கா சென்றபோதும்,
பிரேசில் சென்றபோதும்,
ஆஸ்திரேலியா சென்றபோதும், ஜப்பான் சென்றபோது
அடானியும் கூடவே சென்றார். ஆஸ்திரேலியாவில் ஜி-20
மாநாடு நடந்தபோது, அவரும் மோடிஜியுடனேயே இருந்தது
பளிச்சென்று அனைவருக்குமே தெரிந்தது.

ஆஸ்திரேலியாவில் ஒரு நிலக்கரி சுரங்கம் வாங்குவதில் –
அடானி, மோடிஜியின் கணிசமான ஆதரவைப் பெற்றது தெரிந்ததே….

கடந்த வாரம் – பிரான்சில், யுனெஸ்கோ கூட்டத்தில் மோடிஜி
20 நிமிடங்களுக்கே உரையாற்றியபோது – அங்கும் அடானியை
பார்க்க முடிந்தது. ஜனாதிபதி Nicolas Sarkozy அளித்த விருந்தில்
கூட அடானி கலந்து கொண்டார்.

இந்திய தரப்பில் கொடுக்கப்பட்ட விருந்தினர் பட்டியலில் அடானியின் பெயர் இல்லை ( அரசு அடக்கி வாசித்திருப்பது தெரிகிறது). ஆனால்,
பிரெஞ்சு அரசு வெளியிட்ட பட்டியலில் அடானியின் பெயர்
இருந்திருக்கிறது.

கடைசியாக – மோடிஜி கனடாவிற்கு அணுசக்தி உற்பத்தி
சம்பந்தமாக பேச்சு வார்த்தை நடத்தியபோது, அடானியையும்
அங்கே காண முடிந்தது. அடானி மின் உற்பத்தியில் தன்
வணிகத்தை விஸ்தரிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்.
72,000 கோடி கடன் அவரது வியாபார விஸ்தரிப்பிற்கு எந்த
விதத்திலும் தடையாக இல்லை.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

22 Responses to அடானி பற்றிய ஹிந்துஸ்தான் டைம்ஸ் ரிப்போர்ட் ….

 1. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  பாவம் எழுபத்திரெண்டாயிரம் கோடி கடன் உள்ளவரை இப்படி வாட்டி எடுக்கலாமா?
  அந்த கடனை அடைக்க அவர் படும் பாட்டை நாம எல்லோரும் தப்பாக புரிஞ்சுக்கொண்டிருக்கிறோம்!
  சின்ன மீனை போட்டுத்தானே பெரிய மீனை பிடிக்க முடியும்.
  எல்லோருக்கும் வயித்தெரிச்சல்.
  ஒருத்தன் முன்னுக்கு வந்துடக்கூடாதே!
  —- இப்படிக்கு “தரு”தலை

 2. today.and.me சொல்கிறார்:

  //Modi has come to this post with a mission and he will accomplish that like a “Karma yogi”.//என்ன மிஷன்? என்ன கர்ம? அடானியையும் அம்பானியையும் முன்னேத்துறதா?

  //Only time will tell his contributions and contradicting views will always exist.// உண்மைதான். காலம்கடந்தும் அவருக்குத் தீராத அவப்பெயர் வந்துவிடக்கூடாது என்றுதான் நாங்களும் விரும்புகிறோம்.

  //HE IS ONE OF THE BEST PM THAT INDEPENDENT INDIA HAS GOT TILL NOW AND A GREAT NATIONALIST LEADER THAT BHARAT HAS GOT AFTER MORE THAN 800 YEARS. // எண்ணூறுவருடத்திற்கு முன்பு பிஎம் போஸ்ட் இருந்ததா? தேசியம் இருந்ததா? இன்னும் கொஞ்சம் முன்னாலேபோய் கற்காலத்துக்குப் போய்விடுங்களேன். இவரை பெஸ்ட் பிஎம் என்று சொல்லமுடியுமானால் இவரை க்ரேட் நேஷனல் லீடர் என்று சொல்லமுடியுமானால் மோடிஜியின் மீதான் உங்கள் அன்பை எண்ணி வியக்காமல் இருக்கமுடியவில்லை. இந்தக் கண்மூடித்தனமான பக்திக்கு படிப்பெதற்கு, அறிவெதற்கு, சிந்திக்கும் திறனும்தான் எதற்கு? கூடவே ஊருக்காக உழைக்கும் ஆற்றலும். (ஊருக்காக என்று நான் …ஆணிகளைப் பற்றிச் சொல்கிறேன். பாழாய்போன இந்திய மக்களைப் பற்றி அல்ல)

  ஆமாம். அதெல்லாம் இருந்திருந்தால் அந்த கிரேட் நேஷனல் லீடர் ஆக நீங்களும் நானும் கூட இருந்திருப்போமே.

  //There is no other leader in india at present who can manage this such a large country with so many issues. he is trying his best. // ஆமாம். அதனால்தான் இந்த லார்ஜ் கண்ட்ரியை நாலுதுண்டாக்கி நாலு நாட்டுக்கு விற்பதற்கு பினாமி காங்கிரசை வைத்து பௌண்டேஷன் போட்டார். இப்போது இந்திய அடிமைகளை விற்றுக்கொண்டிருக்கிறார்.

  //Those who support him, only needs to pray to GOD for his good health and long living.//
  அடானி, அம்பானி.. இன்னபிற கார்ப்பரேட்களே, மோடி நீடுழிவாழ விளக்கு ஏத்தி வைங்கப்பா. இல்லையென்றால் நீங்களெல்லாம் நஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு நடுரோட்டுக்கு வந்திடுவீங்க.

  //Those who oppose or having contradicting views can continue doing that, and over a period of time, their shortsightedness will change for sure.// என்னுடைய பிள்ளைகளையே அன்னியனுக்கு அடிமைச்சாசனம் எழுதிக்கொடுப்பதுதான் பரந்தநோக்கம் என்றும், இந்தியன் எப்பொழுதும் இப்படியே இருக்கட்டும் என்றும் இவன் இப்படியே இருந்தால்தான் ஆடுமாடுகளைப்போல விற்கமுடியும் என்றும் இதுதான் பரந்தகண்ணோட்டம், இதை மறுப்பதற்குப்பெயர் தான் குறுகிய கண்ணோட்டம் என்றும் நீங்கள் நம்புவீர்களானால் இந்தக் குறுகிய கண்ணோட்டம் இன்றும் என்றும் எப்போதும் வளரவே ஆசைப்படுகிறேன்.

  -நன்றி நண்ப ஸ்ரீநி. உங்கள் கமெண்ட்கள் ‘மோடிஜியிடமிருந்து அழைப்பு…’ அனைத்தும் இங்கும் மிகச்சரியாகவே பொருந்துகின்றன. அதனால் அப்படியே எடுத்துப் பயன்படுத்திக்கொண்டேன்.

  ஆனால் முரண்நகை. 🙂
  In such a sarcastic way…..

 3. seshan சொல்கிறார்:

  it looks reliance will get good name…

 4. புது வசந்தம் சொல்கிறார்:

  நண்பர்களே! ஒரு சின்ன சந்தேகம். ஒரு கொலை குற்றத்திற்கு உடந்தை என்று முடிவு செய்து 4 பேரை தூக்கில் போடுவோம் என்கிறார்கள். இதற்கும் அதற்கும் என்ன வித்தியாசம் ?

 5. புது வசந்தம் சொல்கிறார்:

  https://pudhuvasandham.wordpress.com/2015/04/17/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%BE/
  — கடந்த தேர்தலுக்கு முன்னர் எழுதியது, ஒரு தாக்கும் காரணமாக பதிவிடவில்லை. நடுநிலையாக எழுத வேண்டுமே என்ற அச்சமும் உண்டு. நண்பர்கள், கருத்துகளை தெரிவிக்கவும்.

  • சக்தி சொல்கிறார்:

   படித்தேன்.நன்றாக இருந்தது. நான் விளங்கிக் கொண்டது சரியானால்,ஒரு திருத்தம். அமெரிக்காவில் வேட்பாளர்களின் சேட்டைகளை? நகைச்சுவைகளை இரசிக்கிறார்கள் உண்மை.ஆனால் வாக்களிக்கும் போது சிந்தித்து வாக்களிக்கிறார்கள்.
   கிற்லரின் ப்ரொபகண்டா போல்,மோடியின் பேச்சை ,குஜராத் அலையை? நம்பி மோசம் போனது போல் கண்ணை மூடிக் கொண்டு வாக்களிப்பதில்லை.

 6. புது வசந்தம் சொல்கிறார்:

  /*ஒரு தாக்கும்*/ – ஒரு தயக்கம்

 7. today.and.me சொல்கிறார்:

  நண்பர்களுக்கு,

  நமது சூப்பர் பி.எம்.
  http://www.newscrunch.in/2015/04/ifs-officer-vivek-kumar-snubs.html

 8. சக்தி சொல்கிறார்:

  அமெரிக்காவை அடுத்து இந்தியாவில் வர இருக்கிறதாமே Net neutrality. ஏன் யாரும் கண்டு கொள்லவில்லை. இந்தியாவில் எல்லாரும் அடானி அம்பானிகளா?

 9. LVISS சொல்கிறார்:

  The AAP and its leader who were draining themselves out about Ambani Adanl crrony capitalism 24/7 have cooled down on this -What is the reason ?

 10. LVISS சொல்கிறார்:

  Net neutrality means that the govt and ISP should treat all data on internet equaully -It is already here –It is being reemphasised because of the fear that some ISPs are trying to change it –It has nothing to do with U S – Net neutrality is a must if the net is to survive and be useful – –Net is an ocean of knowledge for those who know how to use it purposefully- As of now status quo ante will be maintained —

 11. mathu சொல்கிறார்:

  நல்ல பதிவு, தொடர்க..

 12. LVISS சொல்கிறார்:

  Minister Mr Venkaiah Naidu made an interesting observation about Ambani and Adani that they did not become millionaires during BJP rule and that they were already rich —

  LIke many others until I read ministers statement I was also misled into thinking that Adani Group began to thrive under BJP and that too under Mr Modi from Gujarat – Adani Group was established in 1968 and Modis govt came about 34 years later –I knew that Reliance Group was established years back —

 13. murugan சொல்கிறார்:

  /////I knew that Reliance Group was established years back….////////////////
  True.. media knows how to distort facts… to be frank.. Reliance went from strength to strength under Congress Govt’s. just read articles from express in 80’s and 90’s

  infact during 80’s – 90’s budgets some proposals were modified specially for ambanis..
  their fights with wadia/tata group and L&T was legendary.remember express gurumurthy&shourie&goenka tug of war against ambani .there is a huge lobby in delhi which can get all info from exim reports , budget papers to such business…

 14. LVISS சொல்கிறார்:

  These visits to the three countries are mainly to get some business and garner investments – India is seen as an investment destination amidst falling economies-Countries are willing to do business with us now – We want to make hay while the sun shines –Period- The PM knows most of these leaders personally thanks to Vibrant Gujarat and he is using this friendship to see whether he can get countries to invest in India – There is a saying in Tamil “Adipattam thedi vidhai” This is what the PM doing –“Thedi vithaikirar” –Some EU countries are regretting now for not accommodating PM during this visit -They think that they have missed the bus —
  Look at the outcome of the visits –Rafael deal which was hanging fire for years was done cutting red tape at one go -Canada visit fetched 1.6 billion Can Dollars worth of business( One billion is hundred crores and one Can Dollar is about Rs 51/-) In between a trade fair co sponspored by India was inaugurated in Hannover -150 industrialists from India were there to explore the possibility of getting business —
  Look at the trivia dished out – That PM was wearing a Louis Vuitton shawl( Louis Vuitton is a French Fashion store) The LV denied making any such shawls -The shawls are available for purchase through website that sells goods in India –This much for our priority –
  The PM President and Vice President are flown in a special aircraft named Air India One ,(like Air Force One used for U S Presidents,) commandered by IAF pilots—They dont allow just any body to fly WITH THE PM — The entourage is carefully chosen and given special idendity cards —
  Then there is the 40 cooks news –

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.