வெளிச்சத்திற்கு வராத உண்மைகள் ….வெளிநாட்டில் போய் உளறுவதில் யார் மானம் போகிறது …?

.

சில தலைவர்களுக்கு – தான் வெளிநாட்டிற்கு சென்றாலோ, அல்லது
வெளி நாட்டுத் தலைவர்கள் இந்தியாவிற்கு வந்தாலோ, பித்தம் தலைக்கேறி
விடுகிறது. என்ன பேசுகிறோம், என்ன செய்கிறோம் என்றே அறியாமல்
உளறிக்கொட்டுகிறார்கள், என்னென்னவோ செய்கிறார்கள்….

சுய தம்பட்டம் அடித்துக் கொள்வதற்கு ஒரு எல்லை இல்லையா ?
கண்டதைப் பேசுவானேன். அசிங்கப்பட்டுப் போவானேன் …?
ஜெர்மனி சென்றபோது – இவருக்கு முன் ஆட்சியில் இருந்தவர்கள் நிலக்கரி
சுரங்கங்களையெல்லாம் கைக்குட்டை பரிசளிப்பது போல் இலவசமாக
அள்ளிக் கொடுத்து விட்டார்கள் என்றார்.
அப்படி அள்ளிக் கொடுத்தவர்களில் – தன்னுடைய கட்சிக்காரர்களும் –
பாஜக வைச் சேர்ந்த மத்திய பிரதேச முதல்வர் சௌஹானும்,
சத்திஸ்கர் முதலமைச்சர் ராமன் சிங்கும் அடங்குவர் என்பதை கூட
யோசித்துப் பார்க்காமல்….

நிலக்கரி சுரங்க விவகாரம் – இன்று நேர்பட்டதற்கு
காரணம் இவர் அல்ல – முந்தைய CAG வினோத் ராய் அவர்களும்,
சுப்ரீம் கோர்ட்டும் தான் முதலும், கடைசியுமான காரணகர்த்தர்கள்.

இவர்கள் – சுப்ரீம் கோர்ட் சொன்னதைச் செய்தார்கள் – அவ்வளவு தான்.
கோர்ட் சொன்னபிறகு செய்து தானே ஆக வேண்டும் …?
அது இவர்களின் சாதனை அல்ல…. சாதித்தது போல் சாதிக்கிறார்கள்…!

அது வெறும் மாயை…!!!

கனடாவிற்குச் சென்றபோது மோடிஜி வெளிநாடு வாழ் இந்தியர் கூட்டத்தில்
பேசினார். கிட்டத்தட்ட முழு பேச்சும் சுயதம்பட்டம். இந்தியா அப்படி
இருந்தது – இப்படி இருந்தது. நான் வந்து தான் அத்தனையையும்
சுத்தப்படுத்தி இருக்கிறேன் – என்கிற வகையில் – இந்தியாவில்
தேர்தல் கூட்டங்களில் பேசிவதை எல்லாம் இப்போது அந்நிய நாட்டு
ஆடியன்சிடம் போய் பேசுகிறார்.

இந்தியாவிலிருந்து 20 மணி நேரப் பயணத்தில் வந்து விடக்கூடிய
கனடாவிற்கு வர எந்த இந்திய பிரதமருக்கும் தோன்றவில்லை.
கடந்த 42 ஆண்டுகளில் கனடாவிற்கு விஜயம் செய்யும் முதல்
இந்தியப் பிரதமர் நான் தான் என்று இவர் உரத்த குரலில் சொல்லவும்,
– கூட்டத்தில் இருந்த கனடிய-இந்தியர், அநேகமாக அத்தனை பேரும் இந்தி
பேசுபவர்கள் – “மோடி” -“மோடி” என்று கத்தினர். இவர் முகத்தில்….
பயங்கர சந்தோஷமும், பெருமையும் …!

அடுத்த நாளே காங்கிரஸ் தலைவர் ஆனந்த் சர்மா கூறிய செய்தி
இவர் கூற்றை பொய்யாக்கி விட்டது. 2010, ஜூன் மாதத்தில், அப்போதைய
கனடா பிரதமர் Stephen Harper அவர்களின் அழைப்பின் பேரில்,
இந்திய பிரதமர் மன்மோகன் சிங் கனடா சென்றதையும்,
June 27, 2010, அன்று இரண்டு பிரதமர்களும் சேர்ந்து வெளியிட்ட
கூட்டறிக்கையையும் ( joint statement ) ஆனந்த் சர்மா நினைவுறுத்தி,
மோடிஜியை கடுமையாகச் சாடி இருக்கிறார்.

இந்த செய்தி வெளியான பிறகு கூட, இது வரை மோடிஜி தரப்பிலோ,
பாஜக தரப்பிலோ – இதற்கு எந்தவித ரீ-ஆக்ஷனும் இல்லை.
யாரும் தவற்றிற்கு மன்னிப்பு கூட கோரவில்லை. மிஞ்சி மிஞ்சிப் போனால்,
pmo-வில் தவறுதலாகத் தகவல் தந்து விட்டார்கள் என்று கூறுவார்கள்.

தானே தேர்ந்தெடுத்து, “பொறுக்கிய” அதிகாரிகளால் தானே pmo-வை நிரப்பி
இருக்கிறார்கள்……! இவரது pmo அப்படித்தானே செயல்படும்…!
இதை பேசுவதற்கு முன்னர் கொஞ்சம் யோசித்திருக்க வேண்டாமா …?

மோடிஜி அரசு பல சாதனைகளைச் செய்திருக்கும்போது, நீங்கள் மட்டும்
குறை கூறிக்கொண்டே இருக்கிறீர்களே என்று சில பாஜக பக்தர்கள்
கேட்கிறார்கள். இதில் இரண்டு விஷயங்களைக் கூற விரும்புகிறேன்.

ஒன்று – மோடிஜி ஒன்றுமே செய்யவில்லை என்று நாம் கூறவில்லை.
சில நல்ல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் அவை
செயல்படுத்தும் விதம் நம்பிக்கையூட்டுவதாக இல்லை. இதுவரை,
இப்போதைக்கு அத்தனையும் வெறும் பேச்சோடும், விளம்பரத்தோடும்
நிற்கிறது. அவை பலனளிக்கும் பட்சத்தில், நாமும் நிச்சயம் பாராட்டுவோம்.

இரண்டு – செய்தது, செய்யாதது எல்லாவற்றையும் சொல்லி பெருமை
பட்டுக்கொள்ள, பெரும்பாலான மீடியாக்களை “கவர்” செய்தாகி விட்டது.
தொடர்ந்து அவர் புகழைப்பாட பாஜக, ஆர்.எஸ்.எஸ்., வி.ஹெச்.பி,
பஜ்ரங் தள் தளங்களைச் சேர்ந்த தொண்டர்கள் அனைத்து மட்டங்களிலும்,
மீடியாக்களிலும் ஊடுருவி இருக்கிறார்கள். அவர்கள் திட்டம் போட்டு
வேலை செய்கிறார்கள். மோடிஜி அரசைக் குறை கூறி யார் எழுதினாலும்,
தொடர்ந்து தாக்குகிறார்கள். ஆதாரமே இல்லாமல், அடிப்படையே
இல்லாமல், வெறுமனே தாக்கி எழுதுகிறார்கள்…..

இங்கு ஜனநாயகம் நிலைத்திருக்க வேண்டுமேயானால், அரசு செய்யும்
நல்லதும், கெட்டதும் – மக்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். கெட்ட
விஷயங்கள் அனைத்துமே மூடி மறைக்கப் படுகின்றன.
மோடிஜி பஜனை பாட இத்தனை பேர் இருக்கும்போது, நடக்கும்
குறைபாடுகளை யார் தான் எடுத்துச் சொல்வது..? அந்த வேலையைத்தான் நாம்
செய்கிறோம்.

பல திட்டங்கள் இப்போதே பல்லைக் காட்டுகின்றனவே….
வெளிநாட்டில் சொல்லி பெருமைப்பட்டுக் கொண்டதில் ஒன்று –
14.7 கோடி மக்களை “ஜன்-தன்” திட்டத்தில் சேர்த்து, வங்கிக்கணக்கு
துவங்க வைத்திருப்பது. அந்த திட்டம் இப்போதே – 32 அல்ல 64 பற்களை
காட்டி அசிங்கமாக பயமுறுத்துகிறது.

14.7 கோடி கணக்குகளில், 8.5 கோடி கணக்குகள் “ஜீரோ” பேலன்ஸ்
கணக்குகளாம். வங்கிகளின் கூட்டமைப்பு வெளியிட்டிருக்கும் தகவல்-
ஒவ்வொரு வங்கிக்கணக்கையும் பராமரிக்க ( to maintain each a/c )
வங்கிகளுக்கு ஆண்டுக்கு 125 ரூபாய் செலவாகிறதாம். ஒவ்வொரு
கணக்காளருக்கும் “ரூபே” கார்டு தயாரித்து கொடுக்க 100 ரூபாய்
செலவாகிறதாம். இத்தனை செலவையும் (125+100 x 14.7 கோடி ரூபாய்…! )
வங்கிக்காரர்கள் சுமக்க அவர்கள் என்ன நம்மைப்போல்
ஓட்டு போட்ட முட்டாள்களா என்ன ?

அடுத்த ஆண்டு இத்தனை செலவையும், ரெகுலர் கணக்கு வைத்திருப்பவர்
தலையில் தான் வங்கிகள் கட்டும். எனவே, நம் ஒவ்வொருவர்
annual maintenance charge-உம் அடுத்த ஆண்டு 200 அல்லது 250 ஆகக்கூடும்..
நம்பி ஓட்டுப் போட்டவர்கள், நம்பாமல் ஓட்டுப்போடாதவர்கள்
என்றெல்லாம் பிரித்துப் பார்க்காமல் – அனைவரின் பராமரிப்பு கட்டணமும்
ஏறப்போகிறது.

இதைச் சாதித்ததற்கு தான் பெருமை பேசுகிறார் தலைவர்….!

மோடிஜி விசிட்டின் போது நடைபெற்ற பல அசாதாரண விஷயங்கள்
பொதுமக்களின் பார்வையிலிருந்து மறைக்கப்பட்டு விட்டன.
தடுக்கி விழுந்ததற்கெல்லாம் “டிபேட்” போடும் மீடியாக்களும்
இதற்கு உடந்தை….. பல அசிங்கங்களை கண்டுகொள்ளாமலே விட்டு விட்டன…

மோடிஜி பக்தர்களுக்கு பயந்து,
இதை நாமும் எப்படி சொல்லாமல் விடுவது …?
இந்தியாவின் ஸ்டார் ஓட்டல்களிலிருந்து – 40 ” top chefs ”
( சமையல் துறை விற்பன்னர்கள் ) மோடிஜியின் பயணத்தின்போது,
உடன் அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள்.
ஜெர்மனியில் நடந்த
தொழில் கண்காட்சியில், சிறப்பான உணவுகளை இவர்கள் தயாரித்து
விசேஷ விருந்தினர்களுக்கு பரிமாறினார்களாம். இவர்களுடன் இன்னும்
என்னென்ன உபகரணங்கள், சாமான்கள், துணை/இணை உதவிகள்
சென்றனவோ -தெரியவில்லை…. ஒரு விஷயமும் வெளியில் வராமல்
பத்திரமாக அடைகாக்கப்பட்டிருக்கிறது.

ஒரு தொழிலதிபர் கூட்டமும் கூடவே சென்றிருக்கிறது. அதில் யார் யார்
இருந்தார்கள் என்கிற செய்தி அதிகாரபூர்வமாக வெளியிடப்படவே இல்லை.
போன இடங்களுக்கெல்லாம் “அடானி” போனது “பளிச்”சென்று தெரிந்தது.
அம்பானியும் ஓரளவு தெரிந்தார்…..

பிரென்சு அதிபர், இந்திய பிரதமருக்கு அளித்த இரவு விருந்தில்,
குஜராத் அடானிக்கு என்ன வேலை என்பது தான் தெரியவில்லை.
அந்த விருந்திலும் –
அடானி கலந்து கொண்டிருக்கிறார்.
எதிர்காலத்தில் – இந்த விவகாரங்கள் எல்லாம் தோண்டி, விவரமாக
அலசப்படும்போது – யாராவது நிச்சயம் அதைச்செய்வார்கள் –
ஏகப்பட்ட வியப்பான விஷயங்கள் எல்லாம் வெளியாகலாம்.

இதை எழுதி முடிக்கும்போது – ஒரு மிகப்பெரிய “ஜோக்” வெளியாகி
இருக்கிறது. மத்திய அரசு நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

– All IAS and IPS officers will now need to take prior permission from the
Union government before accepting gifts, including free transportation, boarding and lodging,
worth more than Rs 5,000.

-அரசு அதிகாரிகள் யாராக இருந்தாலும் 5000 ரூபாய்க்கு மேல்
பரிசுப் பொருள்களைப் பெற்றால், உடனடியாக அரசுக்கு தெரிவிக்க வேண்டும்,
அரசின் முன் அனுமதியையும் பெற வேண்டும்.

-நமக்கு 13.5 லட்ச ரூபாய் கோட்டு பரிசு கிடைத்த விதமும், அது மீடியாக்களின்
விமரிசனத்தை சந்தித்த பிறகு, 4.5 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டதும்
நினைவிற்கு வருகிறது….!!!

பின் குறிப்பு –
நாளை முதல் வேறு தலைப்புகளுக்கு
போகலாமா நண்பர்களே …?

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

15 Responses to வெளிச்சத்திற்கு வராத உண்மைகள் ….வெளிநாட்டில் போய் உளறுவதில் யார் மானம் போகிறது …?

 1. Killergee சொல்கிறார்:

  என்னமோ நடக்குது போங்க என்னைக்குத்தான் இந்த ஜனங்கள் சுயசிந்தனைக்கு வரப்போறாங்களோ…..

 2. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  //நாளை முதல் வேறு தலைப்புகளுக்கு
  போகலாமா நண்பர்களே …?//

  ஏன்… உங்களுடைய இந்த பதிவை பார்த்துட்டு எல்லோரும் திருந்திட்டாங்களா ஐயா?

 3. LVISS சொல்கிறார்:

  Hansraj Ahir BJP MP from Maharashtra is the one credited with setting the ball rolling in coal case He was helped by Prakash Javdekar In the end the Supreme court cancelled the allocations and what happened after that is known to all- So BJP can take credit for this –It goes to the credit of BJP that they did not stop just because MP and Chatisgarh also had coal blocks —
  http://indiatoday.intoday.in/story/coal-scam—how-hansraj-ahir-brought-upa-to-its-knees/1/392647.html
  The PMs visit was the first stand alone visit by a PM after 1973 Manmohan Singh did visit in between but that was for G 20 summit – This was amply clarified –So the PM is correct in a way —
  cooks accompanying our dignitaries on foreign tours–They have to because of the difference in the way the food is prepared abroad -Since it is connected with the PM this news finds its way – –Otherwise it is mundane news that every body knows —Umpteen people travel with PM and they have to be given Indian food —

 4. drkgp சொல்கிறார்:

  Mr LVISS,
  Your’s is a convincing reply to the questions raised by KMji, though a battery
  of 40 super chefs accompanying on every trip the PM takes is definitely a drain
  on the resources of the nation. The previous PM’s G20 visit should have had a mention
  in Modiji’s speech. The trips abroad by our leaders follow the same tradition all
  these years but for the well publicized oratorical skills of our present PM.

  • LVISS சொல்கிறார்:

   Sir This is the first time they are mentioning about cheffs though they are a part of every foreign trips- The PMs food preferences are frugal -He doesnt need all of them He has one personal cook Badri Meena who looks after his needs – In this context it is pertinent to add that during his trip to US the PM did not drink even water for 9 days since he was on fast -Why does he need so many cooks -They are for others- –

 5. LVISS சொல்கிறார்:

  All the things that are mentioned herein are available in news websites —

 6. சக்தி சொல்கிறார்:

  முன்னர் கோவை ஈசா போலிச் சாமியார் வாசுதேவின் முறைகேடுகள் பற்றி வந்தது போல், கொஞ்சம் சமுதாய சீர்கேடுகள் பக்கமும் திருப்பலாமே என்று தோன்றுகிறது.
  இடையிடையேயாவது……….

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செய்யலாம் நண்பர் சக்தி.

   நாம் நிச்சயம செய்ய வேண்டும்.
   இதை நேரிடையாகச் சொல்வதை விட,
   கசப்பு மருந்தை தேனுடன் கலந்து கொடுப்பது போல்
   உபதேசமாகத் தோன்றாதபடி – சொல்ல முயற்சிக்க வேண்டும்.

   இந்த காலத்து நண்பர்கள் – நேரிடையாக – உபதேசமாக இறங்கினால் –
   படிக்காமலே – அடுத்த தலைப்பிற்கு போய் விடுவார்கள்…..!!!

   நாம் இவற்றை பின்னூட்டங்களிலேயே கொஞ்சம் கொஞ்சமாகத் துவங்கலாம்…

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 7. drkgp சொல்கிறார்:

  Mr Sakthi,
  What can we do by bringing out the social evils? The bogus guru you
  mentioned is doing a roaring business than ever before with more
  support from police and political leaders. In our nation, people like
  us are in the minority. It is highly unlikely that we topple the majority in
  the foreseeable future.

 8. Pingback: வெளிச்சத்திற்கு வராத உண்மைகள் – வெளிநாட்டில் போய் உளறுவதில் யார் மானம் போகிறது? | மண்ணடிகாகா.

 9. today.and.me சொல்கிறார்:

  கா.மைஜி,
  //இங்கு ஜனநாயகம் நிலைத்திருக்க வேண்டுமேயானால், அரசு செய்யும்
  நல்லதும், கெட்டதும் – மக்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். கெட்ட
  விஷயங்கள் அனைத்துமே மூடி மறைக்கப் படுகின்றன.
  மோடிஜி பஜனை பாட இத்தனை பேர் இருக்கும்போது, நடக்கும்
  குறைபாடுகளை யார் தான் எடுத்துச் சொல்வது..? அந்த வேலையைத்தான் நாம்
  செய்கிறோம். //
  செய்யவேண்டும். மோடிஜியை எப்படியாவது ஐந்துவருடத்திற்குள், இந்தவிமரிசனத்திற்குள் இழுத்துக்கொண்டுவந்து திருத்தியேஆகவேண்டுமென்று கங்கணம்கட்டிக்கொண்டிருக்கும்போது ஏன் வேறு தலைப்புகளுக்குப் போகவேண்டும்.

  //இந்தியாவிலிருந்து 20 மணி நேரப் பயணத்தில் வந்து விடக்கூடிய
  கனடாவிற்கு வர எந்த இந்திய பிரதமருக்கும் தோன்றவில்லை.
  கடந்த 42 ஆண்டுகளில் கனடாவிற்கு விஜயம் செய்யும் முதல்
  இந்தியப் பிரதமர் நான் தான் என்று இவர் உரத்த குரலில் சொல்லவும்,
  – கூட்டத்தில் இருந்த கனடிய-இந்தியர், அநேகமாக அத்தனை பேரும் இந்தி
  பேசுபவர்கள் – “மோடி” -“மோடி” என்று கத்தினர்.//

  படித்த முட்டாள்கள்.
  உலக அரங்கில் இந்தியாவைத் தலைகுனியவைக்கும் இந்தியர்கள். கேவலம்.
  படித்த படிப்பும் கிடைத்த அனுபவமும் கொடுக்காத புகழை மோடியின் கூட்டங்களுக்குச் சென்று கத்துவதிலும் செல்பி எடுத்துக்கொள்வதிலும் காட்டிப் புகழைடையவிரும்பும் ஆட்டுமந்தைகள். ஒருநாள் பலிகொடுப்பார் பூசாரி. அப்போதுதெரியும் இவர் யார் என்று.

  //இவர் முகத்தில்…. பயங்கர சந்தோஷமும், பெருமையும் …!//
  வெளிநாடுவாழ் இந்தியர்களின் முட்டாள்தனத்தில் அறிவின்மையில், இந்தியர்களின் தலைவரின் முகத்தில் சந்தோஷமும், பெருமையும் …! மகா கேவலம்.

  //நாளை முதல் வேறு தலைப்புகளுக்கு போகலாமா நண்பர்களே …?//
  நண்பர் lviss போன்றோர் விடவேமாட்டார்கள். விடாது கறுப்புபோல.
  தொடரும்… போட்டுவிடுங்கள்.

  • சக்தி சொல்கிறார்:

   மோடியின் ஒரு பக்கத்தை வைத்து இந்தத் தளத்தில் கருத்திடுபவர்கள் போல்,நீங்களும் எழுதி விட்டீர்களோ என்று ஒரு சந்தேகம். இந்த உலகில் ஊடகங்களில் மறைக்கப்படும் செய்திகள் பல. அவற்றில் மோடிக்கு கொடுத்த வரவேற்பும் ஒன்றாகும்.

   கனடாவில் இந்தியர்கள் பலர் எப்படி மோடிக்கு வரவேற்புக் கொடுத்தார்களோ அது போல் அதே அளவு பலரும் எதிர்ப்பையும் தெரிவித்திருந்தார்கள்.

   Modi you are not welcome, Do not trade Human Rights,Modi is a war criminal போன்ற வாசகங்களுடன் இந்தியர்கள் வழி நெடுக காத்திருந்து எதிர்ப்பை தெரிவித்திருந்தனர். முக்கியமாக இந்துக் கோயிலின் முன் திரளாக தங்கள் எதிர்ப்பைக் காட்ட காத்திருந்தனர்.

   இதுபோலவே அமெரிக்காவில் காட்டப்பட்ட எதிர்ப்பை ஊடகங்கள் மறைத்து விட்டன. அமெரிக்காவில் ஆதரவு எவ்வளவு இருந்ததோ அவ்வளவுக்கு எதிர்ப்பும் காட்டப்பட்டது.ஆனால் எல்லாம் தேர்தலில் மறைக்கப்பட்டது போல் மறைக்கப்பட்டு விட்டன.இதற்குப் பெயர் தான் ஊடக தர்மம் நடுநிலைமை.

   http://www.theglobeandmail.com/news/news-video/video-toronto-protesters-call-for-prosecution-of-indian-pm/article23982175/?videoembed=true

   • today.and.me சொல்கிறார்:

    நண்ப சக்தி,
    இல்லை. முன்னர் அமெரிக்காவில் ஆதரவு என்று ஊடகங்கள் பலவும் கூறியபோது எதிர்ப்பு இருந்ததை நானே பதிவுசெய்திருக்கிறேன். தற்போது கனடாவிலும் அப்படியே.

    ஒரு அப்பட்டமான பொய்யை, படித்தவர்கள், நாடுகடந்து வாழ்பவர்கள், இந்தியர்கள் மத்தியிலேயே இந்தியாவின் தலைவர் கூறும்போது அதைப்பற்றி வெறிகொண்டு மோடிமோடி என்று கத்தியவர்களையே முட்டாள்கள் என்று கூறியுள்ளேன். ஆன் த டைம் அவர்கள் அதை அறியாமல் இருந்தாலும் பிஎம் அறியாமலா அதைச் சொன்னார். ஆமாம் அப்படித்தான். எனக்கு பிஎம்ஓ கொடுத்ததை வாசித்தேன் என்று மோடிஜி சொல்வாரானால், அவர் எப்படி கடந்த காங்கிரஸ்ஆட்சியில் அப்போதைய பிரதமர் ம.மோ.சிங் போனதைக்கூட அறியாமல் குஜராத்தின் முதல்வராக இருந்தார்? அப்படியும் ஞாபகசக்தி இல்லை என்றுகூறுவாரானால் அடுத்தநாள் காங்கிரஸ் தலைவர் சுட்டிக்காட்டியபோது முதல்ஆளாய் மன்னிப்புக்கேட்டிருக்கவேண்டியவர் பிஎம் அல்லது அவரது செய்தித்தொடர்பாளர். அதைப்பற்றிய எந்தவிதமான அறிவிப்பும் இல்லாதது அவர்களது அகந்தையையே காட்டுகிறது.

    மீடியா என்ற குரைக்கவேண்டிய நாய்களுக்கு செம்மையான தீனி போட்டாகிவிட்டது. அவை யாரைப்பார்த்து வாலைக் காட்டிக் குழைக்கவேண்டும், யாரைப்பார்த்து பற்களைக் காட்டி குலைக்க வேண்டும் என்று சொல்லிக்கொடுத்தாகிவிட்டது. இனிமேல் ரிங்மாஸ்டர் சொல்படித்தான் அவை கேட்கும்.

    //இதற்குப் பெயர் தான் ஊடக தர்மம் நடுநிலைமை.//??
    இப்படி இல்லாமல் இரண்டையும் வெளிப்படுத்துவது என்றுதானே சொல்லவருகிறீர்கள்?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் டுடேஅண்ட்மீ,

   நாளைய பதிவில் மோடிஜி பற்றிய விமரிசனத்தில் நம்முடன்
   நீங்கள் சற்றும் எதிர்பார்க்காத ஒரு மோடிஜியின் தீவிர ஆதரவாளர் சேருகிறார்….!!!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 10. சக்தி சொல்கிறார்:

  சீக்கியர்கள் மட்டுமல்ல அனைத்து இந்தியர்களும் கலந்து கொண்டனர்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.