துக்ளக் ஆசிரியர் ” சோ ” வையே ” படுத்தி ” விட்ட மோடிஜி …..!!!

.

தமிழ்நாட்டில் திருவாளர் நரேந்திர தாமோதர்தாஸ் மோடியை
முதல் முதலாக பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்து, தீவிரமாக ஆதரித்து,
பிரபலப்படுத்திய பெருமை துக்ளக் ஆசிரியர் “சோ” அவர்களையே சாரும்.

பாரதீய ஜனதா கட்சியிலும் கூட – மோடிஜி பிரதமர் வேட்பாளராக
அறிவிக்கப்பட வேண்டும் என்பதற்காக தன் செல்வாக்கு அனைத்தையும்
பயன்படுத்தினார் சோ.

எல்.கே.அத்வானியை மிகவும் பிடிக்கும் என்றாலும் கூட, மோடிஜி
பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால், பாஜக ஆட்சியைப் பிடிக்க
வாய்ப்புகள் அதிகம் என்று சோ நம்பினார். ஆட்சியில் மிகப்பெரிய
மாற்றத்தைக் கொண்டு வந்து, இந்தியாவின் வளர்ச்சி வேகம் பிடிக்க
மோடிஜி செயல்படுவார் என்று சோ மனப்பூர்வமாக நம்பினார்.

ஆனால் நடந்தது ….? மோடிஜி தலைமையிலான பாஜக அரசு மத்தியில்
அதிகாரத்தைப் பிடித்தது என்னவோ உண்மை. ஆனால் – மற்ற எதுவுமே
எதிர்பார்த்தபடி நடக்கவில்லை… மூத்த தலைவர்கள் – முக்கியமாக
அத்வானிஜி தொடர்ந்து அவமதிக்கப்படுவது குறித்து சோ வருந்துகிறார்.
மோடிஜியின் ஏடாகூடமான போக்கு – அகந்தை கூடிய உளறல் பேச்சு…
எதுவுமே சகித்துக் கொள்ளக்கூடியதாக இல்லை….

“சோ” பாவம் என்ன செய்வார்…?
அவர் எதிர்பார்த்தது போல் மோடிஜி இல்லை…
நாம் ஏமாந்தது போலவே தான் அவரும் ஏமாந்திருக்கிறார்.
நாம் உடனே வெளிப்படையாக விமரிசிக்கத் துவங்கி விட்டோம்….
ஆனால் – அவரால் அப்படிச் செய்ய முடியுமா …?

இரண்டு நாட்களுக்கு முன்னர் இதே விமரிசனம் தளத்தில்

“………வெளிநாட்டில் போய்
உளறுவதில் யார் மானம் போகிறது …?” – என்கிற தலைப்பில்
ஒரு இடுகை வெளிவந்தது. அதில் ஒரு சிறிய பகுதி –

—————————————————–
சில தலைவர்களுக்கு – தான் வெளிநாட்டிற்கு சென்றாலோ,
அல்லது வெளி நாட்டுத் தலைவர்கள் இந்தியாவிற்கு வந்தாலோ,
பித்தம் தலைக்கேறி விடுகிறது. என்ன பேசுகிறோம், என்ன செய்கிறோம்
என்றே அறியாமல் உளறிக்கொட்டுகிறார்கள்,
என்னென்னவோ செய்கிறார்கள்….

கனடாவிற்குச் சென்றபோது மோடிஜி வெளிநாடு வாழ் இந்தியர் கூட்டத்தில்
பேசினார். கிட்டத்தட்ட முழு பேச்சும் சுயதம்பட்டம். இந்தியா அப்படி
இருந்தது – இப்படி இருந்தது. நான் வந்து தான் அத்தனையையும்
சுத்தப்படுத்தி இருக்கிறேன் – என்கிற வகையில் – இந்தியாவில்
தேர்தல் கூட்டங்களில் பேசியதை எல்லாம் இப்போது அந்நிய நாட்டு
ஆடியன்சிடம் போய் பேசுகிறார்.

——————————————————–

ஏற்கெனவே உடல்நலம் குன்றியிருக்கும் ஆசிரியரை –
மோடிஜி இன்னும் “படுத்தி” விட்டார்…

பொறுக்க முடியாமல், முதல் முறையாக,
லேசாக மோடிஜியை கிண்டல் செய்து –
ஆனால் நாம் மேலே கூறியுள்ள அதே கருத்துக்களை பிரதிபலித்து –
ஆசிரியர் சோ அவர்கள் இன்று வெளியாகியுள்ள துக்ளக் இதழில்
அட்டைப்பட கார்ட்டூன் வெளியிட்டிருக்கிறார்….

கார்ட்டூன் கீழே உங்கள் பார்வைக்கு –

thuglaq

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

45 Responses to துக்ளக் ஆசிரியர் ” சோ ” வையே ” படுத்தி ” விட்ட மோடிஜி …..!!!

 1. Killergee சொல்கிறார்:

  உண்மைதான் நண்பரே அவரும் ஏமாந்துதான் விட்டார் அதேநேரம் ”சோ” அவர்கள் கிண்டல் செய்யாத தலைவர்களும் இந்தியாவில் இருக்கிறார்களா ? என்ன ? அருமையான கார்ட்டூன்.

 2. ram சொல்கிறார்:

  Nice Recall by Mr.KaveriMainthan

 3. LVISS சொல்கிறார்:

  Mr Cho does not spare any one however close and every one who knows him knows it – Those who read Tughlak will regularly will know this –Nothing new about it —
  Mr.Modi has nothing to do with why Mr Advani’s got sidelined in the party –Moreover unlike in many parties a new generation takes over in BJP when needed —

  • today.and.me சொல்கிறார்:

   // Mr Cho does not spare any one however close. // I think it is correct for a true journalist.

   //Nothing new about it// So you need a new from Tuglaq ‘a cymbol sound for modiji. But Cho smiles on you.

   //Mr.Modi has nothing to do with why Mr Advani’s got sidelined in the party // If it so, do you have any proof.

   //Moreover unlike in many parties a new generation takes over in BJP when needed // pure copycat of AAP

  • Rangarajan Rajagopalan சொல்கிறார்:

   Mr.LVISS,

   // Those who read Tughlak will regularly will know this –Nothing new about it —//

   Only a FOOL will say that cho”s stand criticising Modiji is NOTHING NEW.
   So far Cho has never criticised Modiji and this is the first time.

   //Mr.Modi has nothing to do with why Mr Advani’s got sidelined in the party –//

   If not Modiji – Then who sidelined ADVANIJI ?
   Is there any other powerful person in the Party than Mr.Modi as of now ?

 4. LVISS சொல்கிறார்:

  Read about the experience of Retd Colonel G Pratap Raju with the government

 5. taru சொல்கிறார்:

  While advani brought BJP to mainstream india, Modi brought it to power. Both are adorable leaders United by exalted philosophies.

  Cho sir is a journalist. They have to comment on everything. Personally, cho is very happy about such a leader for India.

  I don’t see anything that matter at all here.

  Taru

  • karan சொல்கிறார்:

   மோடி கனடாவில் பேசுனது இந்தியர்கள் மத்தியில்தான் ,அவர்களும்கூட இந்திய அரசியல் பற்றி தெரிய உரிமை உள்ளவர்கள்தான்,இதில் தப்பு ஒன்றும் இல்லை மற்றும் மோடி ,அத்வானி சண்டை முற்றி பிஜேபி கட்சியில் கலகம் வரும் என்று எதிர்பார்ப்பு உள்ளவர்களுக்கு ஏமாற்ரம்தான் கிடைக்கும்

   • Rangarajan Rajagopalan சொல்கிறார்:

    திரு கரன்,

    அப்படியானால் கார்ட்டூன் போட்ட துக்ளக் ஆசிரியர் முட்டாள் என்று
    சொல்கிறீர்களா ?

  • சைதை அஜீஸ் சொல்கிறார்:

   அப்போ பாரத் ரத்னா வாஜ்பாய்?

  • Rangarajan Rajagopalan சொல்கிறார்:

   Mr.Tarrru

   Cho has not become journalist just yesterday or today.
   He is there for the last 40 years.

   Have you ever seen Cho criticising Mr. Modi …?

   Don’t bluff or blabber in this site.

 6. drkgp சொல்கிறார்:

  Mr Cho is a versatile political satirist and so it not strange for him to
  play on anything which is out of range.

 7. yogeswaran சொல்கிறார்:

  Sir ,

  With all respects to you why cho is potrayed as a great guy.

  for the last two decades he has never taken a proper stand.

  rgs

  yogi

 8. LVISS சொல்கிறார்:

  One has to go through the nightmare of clearing a predecessors left over work –It stalls every thing that has to be taken forward -Clearing the backlog and at the same time trying to move forward simultaneously is no joke-
  I think most of us have conveniently forgotten in what state the country was handed over to the NDA — The PM is right is posting the Indians abroad with what brought about the changes in the country and repeating them in every meeting of the diaspora — Every leader uses the term “my govt ” in speeches and it is not a boast — They are entitled to take credit for bringing about changes in the system —

  • today.and.me சொல்கிறார்:

   முந்தைய அரசு என்ன செய்தது என்பதை மறக்கவில்லை நண்பரே.

   முந்தைய அரசு என்ன நிலையில் அரசாங்கத்தை வைத்துவிட்டுச் சென்றது என்பதையும் மறக்கவில்லை. அதைப்பற்றி உங்களுடைய மோடிஅரசாங்கம் ஒரு வெள்ளை அறிக்கை கொடுக்கமுடியுமா?? முந்தைய ஆட்சியில் காங்கிரஸ் அரசாங்கம் செய்ய முன்வந்த திட்டங்களையெல்லாம் இதே பாஜக எதிர்க்கவில்லையா? முடிந்தவரை பாராளுமன்றத்தை முடக்கவில்லையா?

   இப்போது, அவர்கள் தடுத்த எல்லாவற்றையும் மீண்டும் வெறித்தனத்துடன் சட்டப்படி நிறைவேற்ற முயல்கிறார்கள் உங்கள் மோடி அரசாங்கம்? இப்போது செய்வதுதான் சரி என்று உங்கள் கருத்து என்றால் முன்னர் ஏன் தடுத்தார்கள். அப்போது இந்தியா எனது நாடு என்கிற உங்களுடைய தேசபக்தி எங்கே போய் ஒளிந்துகொண்டது. ஆகவே உங்களுடைய பாஜகவுக்கு புகழ்வேண்டும் பணம் வேண்டும் எல்லாம் வேண்டும் என்பதற்காக இந்தியமக்களுக்கு (நன்மை என்கிற தீமைகளைத்) தடுத்தீர்கள் இல்லையா?

   என்ன இருந்தாலும் உங்கள் கருத்துக்களை இங்கே எழுதுவதை விட துக்ளக்கிற்கோ அல்லது சோவிற்கோ எழுதினீர்களானால் நலம்.

 9. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  ஐயா
  நீங்க என்னதான் மோடியை பற்றி எழுதுவதை நிறுத்த முயன்றாலும், விடாது கருப்பு……

 10. புது வசந்தம் சொல்கிறார்:

  ஐயா, அதிகாரமும் அரசியலும் குறித்து மோடி பேசியது குறித்து உங்கள் பார்வையில் எழுதவும்.

 11. LVISS சொல்கிறார்:

  – Let us ask ourselves, has the NDA indulged in any loot so far that we should feel deceived by the NDA–
  Are we to understand that the people of Gujarat allowed Mr Modi to deceive them for three good terms or they allowed themselves to be deceived by the same person and party over and over again -Are they nuts to elect the same person if he had done nothing for them –I think It doesnt make any sense to use this word deceiving in any political context– True there are many promises to be fulfilled But how can we call it deceiving it is only a drawback or failing on promises -Has Congress taken any serious steps to hatao the garibi in these 60 years –Did they also deceive us -Not at all I dont think so -I would stop with saying that they just didnt deliver enough on their promises — it is expected and not a big thing to lose our sleep over it —
  How do we know that Cho is feeling deceived , .for that matter how can we dwell into other’s minds – -I can speak only for myself –I dont even know what my siblings think about the present government —Each to himself unless they open up freely like we do in this blog —

  • today.and.me சொல்கிறார்:

   குஜராத்தில் எனது நண்பர்கள் சிலர் இருக்கிறார்கள். நீங்கள் கூறியுள்ளபடி எதுவுமே கிடையாது. குஜராத் மக்கள் மனதில் மோடியைப் பற்றி பக்தி இல்லை, மரியாதை இல்லை, அன்பும் இல்லை.

   பயம். பயம். பயம் மட்டும்தான் உள்ளது.

   ஏன் நம்மை நாமே கேட்கவேண்டும்.. மோடிஜி-பாஜக-குஜராத்-அடானி-அம்பானி-இன்ன பிற ஆனிகளைப் பற்றி இங்கே உள்ள கட்டுரைகளைப் படித்துப்பார்த்துவிட்டு, கொஞ்சம் உங்களை நீங்களே கேட்டுப்பாருங்களேன். நான் எழுதுவது எனக்கு சரியாகப் படுகிறதா என்று.
   இந்தியாவைப்பற்றியும் தமிழ்நாட்டைப் பற்றியும் உங்களுக்கு என்ன கவலை. எந்தவித ஆதாரங்களும் இல்லாமல் முகஸ்துதி செய்யும் உங்களைப் போன்றவர்கள்தாம் அவர்களுக்குத் தேவை. அவர்கள் ட்விட்டரில் லைக் போடுங்கள் அல்லது ஷேர் பண்ணுங்கள். அடுத்தமுறை உங்களுக்கு ஏதாவது வார்டு மெம்பர் போஸ்ட்டுக்காவது கேண்டிடேட் ஆக அனுமதிப்பார்கள்.

   இங்கே இருக்கும் யோசிக்கத்தெரிந்த ரீடர்கள் மனதில் கொஞ்சம் கொஞ்சமாக விஷத்தைக் கலக்கும் முயற்சியில் ஈடுபடாதீர்கள்.

   மற்ற நண்பர்களுக்கு,
   யாராவது, முடிந்தால், இந்த பாராபாராவாக ஆங்கிலத்தில் தப்பும் கமெண்ட்களை தன்னார்வமாகத் தமிழ்ப்படுத்த வேண்டுகிறேன்.

  • Rangarajan Rajagopalan சொல்கிறார்:

   Mr.LVISS,

   // Are we to understand that the people of Gujarat allowed Mr Modi to deceive them for three good terms or they allowed themselves to be deceived by the same person and party over and over again Are they nuts to elect the same person //

   You cannot claim sole Proprietorship to be “NUTS”
   There are many NUTS – not only in Gujarat – here also.

 12. today.and.me சொல்கிறார்:

  அன்பின் காமை
  LVISS,Taru போன்றோருக்காக தாங்கள் தயைகூர்ந்து ஒரு தனிப்பக்கம்

  ‘ALL HAIL INDIVIDUAL POLITICIANS’*
  *Specially for those who have brain, unable to use

  ஆரம்பித்துவிடுங்களேன்.

 13. today.and.me சொல்கிறார்:

  கார்ட்டூனைப் பற்றி ஒன்று சொல்லவேண்டும். ஒரே ஒரு எழுத்துப்பிழை.
  ‘தாமரைச் சின்னத்தில்’
  அவ்வளவுதான்.
  🙂

 14. chollukireen சொல்கிறார்:

  பாடாய்ப் படுத்திவிட்டதாலே கார்ட்டூனாக மரியாதை செய்திருக்கிரார். அர்த்தமுள்ள கார்ட்டூன்

 15. Kauffman சொல்கிறார்:

  Cho ramasamy is a great comedian with some political knowledge. His political view is anti-Tamil. I do not know what his view in others. I do not know why KAvirimainthan writes often about cho. He has not accomplished any major things except political prostitution in Tamil Nadu. Thus, it will be good to spend our valuable time in constructive discussion of important for our people.

  • yogeswaran சொல்கிறார்:

   good comments sir

  • karan சொல்கிறார்:

   சோ என்றும் ,இன்றும் அம்மா ஆதரயூ நிலையில் உள்ளவர் ,அவரின் எண்ணம் 2014 தேர்தலில் பிஜேபி க்கு பெருபான்மை கிடைக்காது ,அந்த சமையத்தில் அம்மாவை டெல்லி அமர்த்தி அழகு பார்க்கலாம் என இருந்தது ,ஏமாற்றம்தான் கிடைத்தது ,லேடியா ,மோடியா என்று வசனம் பொய்த்துபோய்விட்தை இனியும் மறக்கமுடியவில்லை

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் kauffman,

   பத்து ஆண்டுகளுக்கு முன் வரை ஆசிரியர் சோ,
   தமிழக மற்றும் இந்திய அரசியலில்
   ஆற்றிய பணி பற்றி உங்களுக்கு தெரியவில்லையென்றால்,
   உங்களுக்கு வயது போதவில்லை என்று அர்த்தம்.
   உங்களுக்கு தெரியாத அல்லது புரியாத விஷயங்களைப் பற்றி
   மற்றவர்களுக்கு அறிவுரை கூறுவதை தயவுசெய்து நிறுத்திக் கொள்ளவும்.

   மேலும், இந்த தளத்தில் ஜெயகாந்தன் பற்றியோ, சோ பற்றியோ
   எழுதக்கூடாது என்று சொல்ல உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை.
   இங்கு எதைப்பற்றி எழுத வேண்டும் என்று தீர்மானிக்க வேண்டியது நான் தான் –
   நீங்கள் அல்ல.

   பொதுவாக நண்பர்களுக்கு,

   தனிப்பட – பின்னூட்டம் இடுபவர்களைத் தாக்கும் சொற்களை பயன்படுத்தாமல்,
   சொல்ல வரும் கருத்துக்களை மட்டும் சொல்ல வேண்டிகிறேன்.

   உ-ம் – முட்டாள் என்று சொல்வதற்கும் முட்டாள்தனமாக என்று சொல்வதற்குமே
   நிறைய வேறுபாடு இருப்பதை யோசியுங்கள்.

   வரம்பு மீறும் சில பின்னூட்டங்களை நீக்கி விடுகிறேன்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • Kauffman சொல்கிறார்:

    KM,

    Can you please give some example for Cho Ramasamy contribution that has changed something in social life in TN or India?

    Do not say that he has authored so many opinions on his tuglak weekly?

    I have not directly indicated anything to stop writing about cho or others. I just recorded my opinion that some time you waste your time and our time by writing cho and other comedy pieces. Their shows are shutting down the door.

    As you might admire cho and others, but we do not need to follow it. Am I right?

    You have ur own right to write any one. But it is a cardial wish ( as a beloved reader of vimarisanam) that we can all focus more on useful discussion.

    • சக்தி சொல்கிறார்:

     சோ சிறந்த எழுத்தாளர்,அரசியல் விமர்சகர்,சட்டம் தெரிந்தவர் எல்லாமே உண்மைதான். திறமைசாலிகள் எல்லாரும் நல்லவர்களாக, நடு நிலையாளராக இருப்பார்கள் என எப்போதும் சொல்ல முடியாது.சோவும் அப்படியே. அவர் நடு நிலையாளராக என்றும் இருந்தது இல்லை. அவரை சுசாமியின் மற்றொரு உருவமாகக் கொள்ளலாம்.
     கோமாளியாக நாடகங்களில் தோன்றியவர் இன்றும் அதே கோமாளியாக நடு நிலை தவறி எழுதும் அரசியல் விமர்சகராக இருந்து வருவது கவலைக்குரியது தான்.

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     நண்பர் kaufman.

     திருமதி இந்திரா காந்தி எமெர்ஜென்சியை கொண்டுவந்தபோது
     அதை எதிர்த்து நின்றதிலும், அதை முடிவிற்கு கொண்டு வந்ததிலும்
     சோவின் பங்கு பணி என்ன என்பது பற்றி கூட உங்களுக்கு தெரியவில்லை.
     சோ என்றால் இன்றைய துக்ளக் இதழ் பற்றி மட்டும் தான் என்று
     நீங்கள் நினைத்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது.

     உங்களிடம் “சோ”வுக்காகவோ அல்லது வேறு யாருக்காகவும்
     வக்காலத்து வாங்க வேண்டிய அவசியம் எனக்கில்லை.

     மறுத்துச் சொல்வதற்கு கூட ஒரு முறை இருக்கிறது.
     முதலில் பண்பாக எழுதக் கற்றுக் கொள்ளுங்கள்.
     – naara vaayai konjam kaluvu – என்பது பண்பான வார்த்தையா ?
     நீங்கள் எல்லாரையும் தூக்கிஎரியும் வழக்கத்தில் இருப்பதைப் பார்த்து
     தான் நான் பதில் எழுத வேண்டிய அவசியம் வந்தது.

     நான் பயனுள்ள விதத்தில் நேரத்தை செலவழிக்கிறேனா இல்லையா
     என்பது என் கவலை. அதைப்பற்றி நீங்கள் எழுத வேண்டிய
     அவசியமில்லை.

     நான் எழுதுவதை “பயனுள்ளது” என்று
     எண்ணி தான் நான் எழுதுகிறேன். “உபயோகமற்ற குப்பை” – “நேரத்தை
     வீணடிக்கும் வேலை” என்று நீங்கள் கருதுவீர்களானால் –
     நீங்கள் அதைத் தவிர்த்து விட்டு போய்க்கொண்டே இருக்கலாம்.
     இங்கே நான் எழுதும் “குப்பைகளை” படித்து உங்கள் “பொன்னான நேரத்தை”
     வீணடிக்க வேண்டாம்.

     உங்கள் எதிர்காலத்தை பயனுள்ள விதத்தில் செலவழிக்க
     என் வாழ்த்துக்கள்.

     – காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.