திருவாளர் வைரமுத்து என்னும் மிக மிக மிக மிக பெரிய்ய்ய்ய்ய்ய்ய ஆல்ரவுண்டர் ….

.

நாலு சினிமா பாட்டு எழுதியவுடனேயே “கவிஞர்” என்றாகி விட்டது.
ஆனால், கண்ணதாசன் பெயருக்கு முன்னால் “கவியரசு” என்று பட்டம்
போடுகிறார்களே – நாம் அவரை விடச்சிறந்தவர் என்று காட்டிக் கொள்ள
வேண்டாமா என்று நினைத்ததன் விளைவு – “கவிப்பேரரசு” ஆனார்.

பின்னர் என்னென்னவோ பட்டங்கள் – சில தானாக வந்தன…
தான் விரும்பிய சிலதை இவராகவும் சேர்த்துக் கொண்டார்.

தமிழில் நன்றாக பாடல் எழுத வந்தது உண்மை தான்.
ஆனால், அவர் வார்த்தைகள் வெளியில் புரியும் வண்ணம் அழகாக
மெட்டு போட்டு இசையமைக்க ஒரு இளையராஜா கிடைத்தாரோ –
அவரது “கவித்துவம்” வெளியே தெரிந்தது.

வியாபார நுணுக்கம் தெரிந்தவர்…
தமிழகத்தின் முன்னணி நட்சத்திரங்கள் ரஜினி, கமல் இருவருக்கும்
தான் மிக நெருங்கியவர் என்பதை விளம்பரப்படுத்திக் கொண்டே
இருந்தார். நிறைய வாய்ப்புகள் கிடைத்தன.

நன்றாக பேசவும் வருகிறது. கலைஞருடன் நட்பை “உருவாக்கி”
“வளர்த்துக்” கொண்டார்.
அவர் ஆட்சி அதிகாரத்திற்கு வரும்போதெல்லாம்,
இவர் நெருக்கமாக இருப்பார்; அதிகாலை 5 மணிக்கு நாள் தவறாமல்
“தொலை” பேசுவார். முதலமைச்சருடன் தனக்கு இருக்கும் “நெருக்கத்தை”
அவ்வப்போது பறைசாற்றி – அதன் விளைவாக, தன் “வளங்களை”
பெருக்கிக் கொள்வார்.

கலைஞர் அதிகாரத்தில் இல்லையென்றால் – இவர் கொஞ்சம் தள்ளியே
இருப்பார். “தள்ளி” என்றால் சென்னைக்கும் – கோவைக்கும் இடையே
உள்ள அளவு தூரம்…! சென்னையில் விழா நடத்தினால், கலைஞரைக்
கூப்பிட வேண்டியிருக்குமே என்று மெனக்கெட்டு கோவையில் போய்
தனக்குத்தானே “மணிவிழா” நடத்திக் கொண்ட பெருந்தகை.

இவர் தகுதிக்கும், திறமைக்கும் கிடைக்க வேண்டியதை விட
அதிகமாகவே -தமிழ் மக்கள் இவருக்கு பணத்தையும், பட்டங்களையும்
வழங்கி இருக்கிறார்கள்…..
அதில் தான் தமிழர்கள்
மிகவும் தாராளமானவர்கள் ஆயிற்றே.

இருந்தாலும் ஆசை விடவில்லை – மேலும், மேலும்
தான் சகலகலாவல்லவன் என்பதை நிரூபித்து,
சகலருக்கும் நினைவுபடுத்திக் கொண்டே இருக்க வேண்டும்
என்கிற பொல்லாத ஆசை….

பாட்டு மட்டும் தான் எழுதுவேன் என்று நினைத்து விடாதீர்கள்…
நான் கதையும் எழுதுவேனாக்கும் என்று
தம்பட்டமடிக்க, பறைசாற்ற ஆசை.
விளைவு – இன்றைய அசிங்கம்…

நேற்று, நண்பர் டுடேஅண்ட்மீ, ஒரு பின்னூட்டத்தில் இந்த அசிங்கத்தைப்
பற்றி வருந்தி எழுதி இருந்தார். இரண்டு நாட்களுக்கு முன்னர் நானும்
இது குறித்து விளக்கி ஒரு பதிவு எழுத நினைத்தேன். ஆனால், அதற்குள்
வலைத்தளத்தில் நிறைய நண்பர்கள் இது குறித்து விவரமாக
எழுதி இருந்தனர். விஷயம் முழுவதும் விவரமாக செய்திகளாக
வந்து விட்டன. எனவே நாம் எழுத வேண்டிய அவசியமில்லை என்று
நினைத்திருந்தபோது, நண்பர் சொன்ன ஒரு வார்த்தை எனக்கு
வேறொன்றை நினைவுறுத்தியது.

விஷயத்தை விளக்கி எழுதுவது அவசியமில்லாமல்
போய் விட்டது -உண்மை.
ஆனால், நாம் நமது கண்டனத்தை பதிவு செய்ய வேண்டியது மிக மிக
அவசியம் அல்லவா ..? ( பெரும்பாலான தமிழ் இதழ்கள் இது குறித்து
மௌனம் சாதிக்கின்றன – ” பத்திரிகா-தர்மம் ” போலும்…..! )

அதன் பொருட்டு தான் இந்த இடுகை. விமரிசனம் வலைத்தளத்தில்
ஏற்கெனவே இந்த பெரிய்ய மனிதரைப் பற்றி கடந்த காலங்களில்
சில இடுகைகள் வெளி வந்திருக்கின்றன – நீங்களும் அறிவீர்கள்.

எனவே, இவரது “நடத்தை”
நமக்கு ஆச்சரியமூட்டவில்லை. ஆனால் –

JK1

(படுத்த படுக்கையாக செயலற்றுக் கிடக்கும் ஒருவரின்
கையில் புத்தகமொன்றைத் திணித்து, அதனை தன்
சான்றிதழுக்காக புகைப்படமும் எடுத்த கொடுமை …)

இலக்கிய உலகில் தன்நிகரற்று விளங்கிய ஜெயகாந்தன் என்னும்
இமயத்தை, அவரது அந்திம காலத்தில், படுத்த படுக்கையாக
செயலற்று இருந்த நேரம் என்று கூடப் பார்க்காமல் – தன்னுடைய புகழைப்
பரப்பிக் கொள்ள இந்த சுயநலமி செய்த செயல் – மிக மிகக் கேடானது,
அசிங்கமானது, அருவருக்கத்தக்கது – கண்டிக்கத்தக்கது.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

24 Responses to திருவாளர் வைரமுத்து என்னும் மிக மிக மிக மிக பெரிய்ய்ய்ய்ய்ய்ய ஆல்ரவுண்டர் ….

 1. today.and.me சொல்கிறார்:

  கண்டனங்கள்: வைரமுத்துவிற்கும், குமுதத்திற்கும்

  பாராட்டுக்கள்: இப்பொழுதாவது முகநூல் மூலம் உண்மையை வெளியேசொன்ன ஜேகேயின் மகள் தீபலட்சுமிக்கும், இதைக்குறித்த எதிர்ப்பையும் கண்டனங்களையும் பதிவுசெய்த அனைத்து பதிவர்கள், இணையஊடக நண்பர்கள் அனைவருக்கும்.

  தெளிவு பெற்ற மதியினாய் வா வா வா
  சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா
  — பாரதி.

 2. ram சொல்கிறார்:

  Your write up is good one against Mr.Vairamuthu recalling old issues

 3. today.and.me சொல்கிறார்:

  //( பெரும்பாலான தமிழ் இதழ்கள் இது குறித்து மௌனம் சாதிக்கின்றன – ” பத்திரிகா-தர்மம் ” போலும்…..! )//

  அச்சு வடிவ ஊடகங்கள் மௌனம் சாதிப்பதற்குக் காரணம்,
  ” அந்தக் கண்டனங்களும் பின்னாளில் ஒரு ஆவணமாகிவிடக்கூடும் என்ற அச்சம்தான். அது வை.மு.வுக்கும் குமுதத்திற்கும் பெரிய தலையிறக்கமாக (இனிமேலா ஆகப்போகிறது) ஆகிவிடக்கூடும். இதேபோன்று நம்மை இன்னொரு அச்சுஊடகம் கண்டனம் எழுதவேண்டிய நிலை வந்துவிட்டால் என்ன செய்வது ”
  என்கிற நிலைதான்.

  மொத்தத்தில் ஒருவரை ஒருவர் கண்டிக்கவும் மாட்டார்கள், காட்டிக்கொடுக்கவும் மாட்டார்கள். கூட்டுத் திருடர்கள். ஒன்றுமே எழுதாவிட்டால் பத்துவருடம் கழித்து படிக்கும் தலைமுறைக்கு என்ன தெரியப்போகிறது? திரும்பவும் வரலாறு-ஆக பத்திரிகையில் ஆவணப்படுத்தியதுதானே நிற்கப்போகிறது. மற்ற பத்திரிகைகளும் இந்த ஆவணப்படுத்தல் என்னும் காரியத்தில் பொய்யான காகிதங்களை ஆவணமாக்குவார்கள். மொத்ததில் தமிழனின் கோவணத்தை உருவி தமிழன் இப்படித்தான் என்று உலக அரங்கில் கேவலப்படுத்துவார்கள்.

 4. Ganpat சொல்கிறார்:

  போலி வைர போலி முத்துவின் வண்டவாளத்தை தண்ட வாளம் ஏற்றியமைக்கு நன்றி.இது குறித்து நான் இணையதளத்தில் படித்த இன்னொரு நல்ல பதிவு இதோ:
  ==========================================================================
  நீங்கள் ஒரு மளிகைகடையில் பொட்டலம் கட்டி தரும் பெரிய பொறுப்பில் உள்ளவர் என கற்பனை செய்து கொள்ளுங்கள். உங்கள் முதலாளி ஒரு மிகப்பெரிய விளம்பர ப்ரியர்.வாரத்திற்கு ஒரு தடவை தனது அதிகாரத்தை பயன்படுத்தி “மளிகைகடைக்காரருக்கு மகுடம் சூட்டு விழா” ,”பொன்னி அரிசி விற்கும் பொன்னியின் செல்வனே” என விழாவை கடைக்கு வருபவர் காசில் ஏற்பாடு செய்பவர்.
  வேண்டா வெறுப்பாக அவரை பாராட்ட பத்து பக்க உரையோடு வருபவர்கள், பக்கத்தில் இளித்தபடி நின்றிருக்கும் உங்களையும் “சூப்பரா பொட்டலம் மடிக்கற தம்பி.அதுவும் நேத்து நீ கட்டி கொடுத்த ரவைல பண்ணின உப்புமா தாறுமாறு” என வீணாப்போனா தண்ணியை நான் குடிச்சா என்ன நாயே நீ குடிச்சா என்ன என போனா போகுது என பாராட்டி செல்கிறார்கள்.
  வாரா வாரம் இது நடப்பதால் உங்களுக்கு பாராட்டு பழகி விடுகிறது. யாராவது வந்து “உங்க கிட்னி சூப்பரா வேலை செய்யுது.டெய்லி பேப்பர் ரோஸ்ட் சாப்பிடுவீங்களா?” என கேட்டால்தான் உங்களுக்கு ஒன் பாத்ரூமே வரும் நிலமைக்கு உங்களை நீங்களே தள்ளிக்கொள்கிறீர்கள்.
  இதைதான் வெள்ளைக்காரன் institutionalized என்பான். திடீரென மளிகைகடைகாரரின் மூத்த பையன் சொத்தை பிரிக்க சொல்ல, இளைய பையன் கல்லாவை விட்டு நகர மறுக்க, மளிகைகாரர் மஞ்சப்பையுடன் அல்லாட , அந்த கேப்பில் பக்கத்து கடைக்காரர் கடையை எடுத்து கொள்ள… 2ஜி கடன்காரர்கள் அவர்களை துரத்த, உங்களை அம்போவென விட்டுவிட்டு டெசோ என்ற பொட்டிகடையில் அவர்கள் குடும்பசகிதமாக ஐக்கியமாகிறார்கள்.
  ஓசியில் பாராட்டை வாங்கியே , “”பளிச் வெள்ளை சுடிதாரில்”” குறுக்கும் நெடுக்குமாய், நிலைகுத்திய கண்களோடு வலம்வந்த உங்களுக்கு இப்போது கை நடுங்குமா நடுங்காதா?
  பாராட்டுக்கு அடிமையான நீங்கள் பக்கத்தில் இருக்கும் குமுதா பிச்சைக்காரியிடம் கிழிந்த அஞ்சு ரூபாயை கொடுத்து பாராட்ட சொல்வீர்களா மாட்டீர்களா?! மாட்டேன் என நெஞ்சை நிமிர்த்தி சொல்பவர்கள் மட்டும் முதல் கல்லை “வைரமுத்து” மீது எறியுங்களேன் பார்ப்போம்.
  அடுத்த வார குமுதத்தில் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் சாவதற்கு முன் வைரமுத்துக்கு அனுப்பிய பேஸ்புக் ரிக்வஸ்ட் ஸ்க்ரீன்ஷாட் வரும்வரைதான் உங்களுக்கு கல்லெறிய நேரம் உள்ளது….
  ======================================================================

 5. divmee சொல்கிறார்:

  சுய விளம்பரமும் சுடும் சிலருக்கு, சில வேளையில். உண்மையை உலகறிய வைத்த தெய்வதிரு J.K. வின் புதல்வி, தான் ஒரு சிங்கத்தின் குட்டி என்பதை நிருபித்துவிட்டார்.

 6. Kauffman சொல்கிறார்:

  Hello all,
  It is useless to discuss this issue. Because both jeyakantan and vairamuthu are literarily exceptional and talented. But both are bad as general human being. Both can do/talk whatever they think best for them to get name and fame! Jeyakantan insulted Tamil language as to get benefit of Indian national awards. But he lived on the mercy of powerful Tamil as his medium of essay writing. Vairamuthu talks too much for Tamil but he does little for Tamil development.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பரே ( Kauffman ),

   ஜெயகாந்தன் எழுதுவதை நிறுத்தி 40 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது.
   அவர் துடிப்புடன் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர்களுக்குத் தான்
   ஜெயகாந்தன் என்கிற ஆளுமையைப் பற்றி புரியும்.
   நான் அவருடன் சமகாலத்தில் வாழ்ந்தவன்.
   அவரது ப்ளஸ், மைனஸ் – இரண்டையும் நன்கு அறிந்தவன்.
   அவற்றை தெரிந்து கொண்டே தான் இங்கு எழுதுகிறேன்
   என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

   சில வலைத்தளங்களில், ஜெயகாந்தன் பற்றி சொல்லப்படும்
   ஒருதலைப்பட்சமான கருத்துக்களைப் படித்து விட்டு
   நீங்களாக ஒரு முடிவிற்கு வந்து எழுதுவது சரியாக இருக்காது
   என்பதை உணருங்கள்.

   ஜெயகாந்தன் மறைவிற்குப் பின்னர் அவரைப் பற்றி,
   சக எழுத்தாளர்கள் – குறிப்பாக ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன்
   போன்றோர் என்ன எழுதி இருக்கிறார்கள் என்பதைப்
   படித்துப் பாருங்கள் – ஓரளவு புரியலாம்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • Kauffman சொல்கிறார்:

    KM,

    I too read jeyakantan books. They are powerful. I respect that.

    Did he never say bad opinion about Tamil comparing with Sanskrit? If he did not say that, and you prove it, I accept your opinion completely.

    If he did say something bad about Tamil language, and if it is recorded, you need to give better explanation for that without angry or frustration.

    Always, the ripened mangoes will face stone attack. So well respected people will also get both prizing and criticizing words. We need to allow it.

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     நண்பர் kaufman.

     ஜெயகாந்தன் புத்தகங்களைப் படிப்பது வேறு –
     ஜெயகாந்தன் என்கிற மனிதரைப் புரிந்து கொள்வது வேறு –
     புத்தகங்களைப் படிப்பதன் மூலம் ஜெயகாந்தனின் எழுத்துக்களைப்
     பற்றி மட்டும் தான் நீங்கள் அறிந்திருக்க முடியும்.

     ஏன் – ஜெயகாந்தன் தமிழைப்பற்றி – உங்களுக்கு மாறான
     கருத்தை கொண்டிருந்தால் ?
     பேசி இருந்தால் – ?
     அதற்காக அவர் மட்டமான ஆசாமி ஆகி விடுவாரா ?
     அதற்காக அவரை எல்லாரும் ஒதுக்கி விட வேண்டுமா ?

     தந்தை பெரியார் கூடத்தான் தமிழுக்கு எதிராக பேசிஇருக்கிறார் –
     அதற்காக பெரியாரை ஒதுக்கி விடுவீர்களோ ?
     பெரியாரை ஒதுக்கி விட்டு, சமுதாய சீர்திருத்தம் பற்றி பேச முடியுமா
     உங்களால்…?

     நிறையும், குறையும் அனைத்து மனிதர்களிடமும் தான் இருக்கிறது.
     பெரிய பெரிய தலைவர்களிடமும் கூடத்தான் குறைகள் இருக்கின்றன.
     அவர்களிடம் உள்ள நிறைகளுக்காக அவர்களை விரும்புகிறோமே
     தவிர, அவர்கள் குறைகளே இல்லாத மனிதர்கள் என்பதற்காக அல்ல.

     முதலில் உங்களுக்கு எல்லாம் தெரியும் என்கிற மமதையுடன்
     எழுதுவதை நிறுத்தி விட்டு, இன்னும் தெரிந்து கொள்ள வேண்டும்
     இன்னும் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிற ஆர்வத்துடன்
     செயலில் ஈடுபடுங்கள்.

     உங்கள் வயது என்ன இருக்கும் என்பது எனக்குத் தெரியாது.
     ஆனால் எப்படி இருந்தாலும், என்னை விட வயதில் சிறியவராகத்தான்
     இருப்பீர்கள் என்கிற எண்ணத்தில் இதையெல்லாம் எழுதுகிறேன்.
     தவறாக இருந்தால், மன்னித்து விடவும்.

     -வாழ்த்துக்களுடன்,
     காவிரிமைந்தன்

     • Kauffman சொல்கிறார்:

      Km ji,
      Why do you bring age factor here? I never says that I know everything? It is not my arrogance also.

      I just ask or write the comment as others. I support the good thing, but criticize the bad thing (what I feel). So there is no mamathai or arrogance with me.

     • Kauffman சொல்கிறார்:

      Km Ji,
      We can stop arguing this issue because it is less important.

      We will continue in other post! Thanks

     • இ.பு.ஞானப்பிரகாசன் சொல்கிறார்:

      //தந்தை பெரியார் கூடத்தான் தமிழுக்கு எதிராக பேசிஇருக்கிறார் –
      அதற்காக பெரியாரை ஒதுக்கி விடுவீர்களோ ? பெரியாரை ஒதுக்கி விட்டு, சமுதாய சீர்திருத்தம் பற்றி பேச முடியுமா உங்களால்…?// – இன்று தமிழ்நாட்டில் மாபெரும் இளைஞர் பட்டாளம் ஒன்று அப்படி ஒரு வழியில்தான் போய்க் கொண்டிருக்கிறது என்பது தாங்கள் அறியாததில்லை! என்னத்தைச் சொல்ல!

 7. drkgp சொல்கிறார்:

  It is a terrible disease which affects Vairamuthu, many leaders of
  the political class and even many average humans. It is really
  nauseating to read such venal so acts of the so called lion hearted man.

 8. Kauffman சொல்கிறார்:

  I have a big doubt.

  Is it Kaviri or Kaveri? How to exactly write about the Tamil Nadu lifeline river? Which word is correct one? If any one gives explanation with correct meaning of kaviri or kaveri, I will greatly appreciate it.

  • சக்தி சொல்கிறார்:

   சங்க இலக்கியங்களில் காவிரி என்றே அழைக்கப்பட்டு வந்தது. சிலப்பதிகாரம் மட்டுமே முதலில் காவிரி,காவேரி என்ற இரண்டு பதத்தையும் பயன்படுத்தியது. இயற்றமிழ் பகுதியில் காவிரி என்றும் இசைத்தமிழ் பகுதியில் காவேரி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. பேச்சுத் தமிழில் காவேரி என்று சில இடங்களில் வழங்கப்படுகிறது.இலக்கிய வழக்கில் காவிரி என்றே அழைக்கப்படுகிறது.
   அகத்தியர்,இந்திரன் என பல கதைகள் காவிரி உருவான காரணத்திற்கு சொல்லப்பட்டு வருகிறது.
   இதைவிட கவிஞர் காவிரிமைந்தன் என்ற ஒரு கவிஞரும் இருக்கிறார். இருவரும் ஒருவரா இருவரா தெரியாது.

   • Kauffman சொல்கிறார்:

    Sakthi, thanks for your explanation.
    I think that KAVIRI will be correct. It can be explained in 2 words (Ka+Viri). Ka represents kaalvai (the duct transport water). Viri represents virintha (wider). I guess kaviri will be the wider and longer river in Tamil Nadu. So it got this name.

    Otherwise, I do not believe the stupid story of agathiar or munivar created this huge river. It’s naturally made river.

    If any one provide better explanation than what we are talking here, will be highly appreciable.

 9. chandraa சொல்கிறார்:

  well everybody agrees and concurs the criticisisms against vairamuthu and kumudam in this issue. at the same time the unbiased reader would also agree that vairamuthus short stories in kumudam are really high standard….vairamuthu had amply proved that he has more in his bag as far as tamil short stories are concerned

 10. எழில் சொல்கிறார்:

  கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் இவர் ஒரு பாட்டை எழுதி அதை வைத்து பரந்து பட்டு வாழும் ஈழ தமிழர்களின் அழைப்பு, விழா, அனுதாபத்தின் மூலம் இவர் தன்னை நிலை நிறத்த பெரு முயற்சி செய்த்தார். இருபது இருபத்தைந்து வருடங்களுக்கு முன் போரின் போது நாட்டை விட்டோடி கனடா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், சுவீஸ், நோர்வே என பல நாடுகளில் கடுமையாக உழைத்து முன்னேறி இன்று நல்ல நிலையில் இருக்கும் பலர் இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் பொழுது போக்கிற்கு கவிதை எழுதி, தொகுப்பு வெளியிட்டு, தம்மை நிலை நிறுத்த முயன்றோர் சிலர் இவரை அழைத்து விழா எடுத்து அதில் குளிரும் காய்ந்தார்கள். அப்போதெல்லாம் நாடி நரம்பு புடைக்க ஈழ தமிழர் பற்றி உருக்கமாகவும், நான் உங்களில் ஒருவன் ஏறும் பேசிய இவர், ‘தலைவர்’ மூன்று மணி நேர உண்ணாவித பித்தலாட்டம் நடந்த போதும் அதன் பின்னும் தன் நிலையை என்றுமே மேடை போட்டு சொன்னதில்லை.

  இதையும் இவர் பற்றிய முன்னோட்டத்தில் மேலே சேர்த்திருக்கலாம் கா மை ஐயா!

 11. Pingback: திருவாளர் வைரமுத்து என்னும் மிக மிக மிக மிக பெரிய்ய்ய்ய்ய்ய்ய ஆல்ரவுண்டர் …. | Classic Tamil

 12. today.and.me சொல்கிறார்:

  அன்பின் கா.மை,

  தனது ‘இருத்தலை இருக்கவைத்தல்’ என்கிற போதைக்கு அடிமையாகிக்கொண்டிருக்கும் இன்னொரு பரபரப்பைப் பாருங்கள்.

  தனது பெயர் தினமும் பேப்பரில் கண்ணில் பட்டுக்கொண்டே இருக்கவேண்டும் என்பதற்காக இந்த அளவிற்கு ஒருவர் இறங்கவேண்டுமா?

  கவிப்பேரரசுவில் இருந்து கவிஞர் அடைமொழிக்கு இறங்கியுள்ள தமிழைவைத்து வியாபாரம்செய்து பிழைக்கும் வைமு, மனிதன் என்கிற அடைமொழிக்காவது தன்னை தகுதியாக வைத்துக்கொள்வாரா? வைத்துக்கொள்ளவேண்டும் என்கிற நமது விருப்பம் அவர் காதில் போய்ச் சேரவேண்டும்.

  http://valarumkavithai.blogspot.com/2015/04/blog-post_46.html

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் டுடேஅண்ட்மீ,

   இந்த ஆளை நினைத்தாலே எரிச்சலாகவும், கேவலமாகவும் இருக்கிறது.
   எங்கேயாவது நேரில் பார்க்க நேரிட்டால், காரி உமிழ வேண்டுமென்று கூட
   தோன்றுகிறது.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 13. இ.பு.ஞானப்பிரகாசன் சொல்கிறார்:

  என் அன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய காவிரிமைந்தன் ஐயா!
  தங்களை முதன்முறையாக மறுத்துப் பேச வேண்டியிருக்கிறமைக்காக வருந்துகிறேன்!

  வைரமுத்து அவர்கள் மீது எனக்கும் நிறைய… நிறைய… நிறைய… விமரிசனங்கள் உண்டு. குறிப்பாக ஈழப் பிரச்சினையில், இனமே படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருந்த அந்த வேளையில், அதைப் பற்றிக் கவலைப்படாமல், தன் ஆருயிர் நண்பரான கருணாநிதியை அது பற்றிக் கண்டித்து ஒரு வார்த்தை கூடப் பேசாமல் அவர் அமைதி காத்தது எனக்கு அவர் மீதுள்ள பெரும் சீற்றம்! தனிப்பட்ட முறையில் அவர் பற்றி எனக்குத் தெரிய வந்த சில தகவல்களை வைத்து நானும் இப்படிச் சில செய்திகளைப் பகிர முடியும். ஆனாலும், என்னால் என்னவோ இதை நம்ப முடியவில்லை. படைப்பாளிகளுக்கு எப்பொழுதுமே புகழ் மீதான அடங்கா மோகம் உண்டு. உண்மையைச் சொன்னால், அவர்களின் படைப்பூக்கத்துக்கான உந்து ஆற்றலே அதுதான். ஆனால், புகழ் மலையின் முகட்டில் வீற்றிருக்கும் ஒருவர் இந்த அளவுக்கு இழிவான ஒரு வழியில் விளம்பரம் தேடிக் கொள்ள வேண்டிய தேவை என்ன?

  மேலும், வைரமுத்தின் தனிப்பட்ட அரசியல், சமூக நிலைப்பாடுகள் எப்படி இருந்தாலும் அவருடைய எழுத்தாளுமையின் மீது யாருக்கும் ஐயம் இருக்க முடியாது என்றே கருதுகிறேன். சொல்லழகும், சந்த நயமும்தாம் கவிதை, பாடல் எல்லாம் என்கிற நிலையை மாற்றி சொற்களின் பொருளில் கவித்துவத்தைக் கொண்டு வந்து தமிழ்க் கவிதை உலகைப் புதிய திசையில் பயணிக்கச் செய்தது வைரமுத்தின் எழுதுகோல்தான் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது!

  மேலும், வைரமுத்தின் கவித்துவத்தை வெளிகொண்டு வந்தது இளையராஜாவின் இசைதான் என்று கூறியிருந்தீர்கள். எனக்கு அது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது! கவித்துவம் என்பது இசைக்கு அப்பாற்பட்டது. இரண்டும் வெவ்வேறு. கவித்துவம் என்பது முன்பே நான் குறிப்பிட்டது போல, சொற்களைப் பயன்படுத்தும் விதத்தில், அந்தக் கற்பனைத் திறமையில் அடங்கியிருப்பது. இசை அதற்கு ஒரு மேல்பூச்சாக, அலங்கார ஒப்பனையாக வேண்டுமானால் இருக்கலாமே ஒழிய, ஒரு பாடலின் கவித்துவத்தை அது ஒரு துளியும் கூட்டவோ குறைக்கவோ முடியாது. இவையெல்லாம் நான் சொல்லித் தாங்கள் அறிய வேண்டியதில்லை.

  தவிர, திரையுலகுக்கு வந்த அந்தக் குறுகிய காலக்கட்டத்திலேயே நல்ல புகழ் பெற்று, அடுத்த தலைமுறையின் பாணியைத் தீர்மானிப்பவராக மாறிவிட்ட வைரமுத்தைத் தன் செல்வாக்கால் தமிழ்த் திரையுலகை விட்டே இளையராஜா விரட்டியடித்ததும், அந்த இசையுலக அரசியலும் அப்பொழுது தவழும் குழந்தையாக இருந்த என்னை விடத் தாங்கள் நன்கறிந்திருக்கக்கூடியதே! இதை, நான் கூறவில்லை; விஜய் தொலைக்காட்சி இளையராஜாவுக்கு நடத்திய பாராட்டு விழாவில், இயக்குநர் சிகரம் பாரதிராஜா மேடையிலேயே சூசகமாகத் தெரிவித்தார். நேரடியாகவே இளையராஜாவைக் கண்டித்தார். இளையராஜா, வைரமுத்து இருவருக்குமே மிக நெருங்கிய நண்பரான அவர் இதுவரை வைரமுத்தின் எந்தப் பாராட்டு விழா மேடையிலும் இது குறித்து அவரைக் கண்டிக்காமல் இளையராஜாவை மட்டும் கண்டிப்பதிலிருந்தே இருவரில் தவறு யார் மீது என்பது நமக்குத் தெள்ளெனப் புரியும்.

  கடைசியாக ஒன்று…
  மேலே, காப்மேனுக்கு அளித்த பதிலில் தாங்கள் ஜெயகாந்தன் பற்றிக் குறிப்பிடும்பொழுது “நிறையும், குறையும் அனைத்து மனிதர்களிடமும்தான் இருக்கிறது. பெரிய பெரிய தலைவர்களிடமும் கூடத்தான் குறைகள் இருக்கின்றன. அவர்களிடம் உள்ள நிறைகளுக்காக அவர்களை விரும்புகிறோமே தவிர, அவர்கள் குறைகளே இல்லாத மனிதர்கள் என்பதற்காக அல்ல” என்று கூறியிருந்தீர்கள். அது வைரமுத்துக்கும் பொருந்தும் என்பது சிறியேனின் கருத்து. ஆனால், ஈழத்தில் தமிழர்கள் மீது இந்திய அமைதிப்படை நடத்திய தாக்குதல்களையும், பாலியல் வல்லுறவு முதலான இழிகொடுமைகளையும் நியாயப்படுத்திய ஜெயகாந்தன் அவர்களுக்கு அந்த வரிகள் பொருந்துமா (பார்க்க: http://www.akaramuthala.in/modernliterature/katturai/படைப்பாளர்களுக்குப்-பாட/) என்பதைத் தங்கள் தீர்ப்புக்கே விட்டுவிடுகிறேன்! நான் ஏதும் தவறாகக் கூறியிருந்தால் மன்னியுங்கள்!

  நன்றி! வணக்கம்!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.