திருவாளர் ஜாபர் சேட் – நினைவிருக்கிறதா ….?

.

கலைஞர் முதல்வராக இருந்தபோது, உச்சத்தில் இருந்த
போலீஸ் அதிகாரி பற்றி அநேகமாக எல்லாரும் மறந்திருப்பார்கள்….

கலைஞருக்கு நெருக்கமாக இருந்து, பல விஷயங்களில் அவருக்கு
தனிப்பட்ட விஷயங்களில் உதவிசெய்து, அதன் பலனாக தனக்கும்
சட்டவிதிகளுக்கு அப்பாற்பட்டு சில பலன்களை அடைந்ததாகச்
சொல்லப்பட்டவர்.

ஆட்சி மாறியதும், அவர் சில முறைகேடுகளுக்காக, தமிழ்நாடு
அரசால் தற்காலிகமாக பணிநீக்கம் ( சஸ்பெண்ட் ) செய்யப்பட்டார்.
அப்போது அவர் மீது சொல்லப்பட்ட
குற்றச்சாட்டுகள் – தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலம்,
பொய்த்தகவல்களைக் கொடுத்து சில ப்ளாட்டுகளைப் பெற்றதும்,
பின்னர் தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்றின் மூலம் வர்த்தக
உபயோகத்திற்காக கட்டிடங்கள் கட்டியதும் ….. என்று இப்படிப்போயிற்று –

அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு – கிரிமினல் சட்டப்படி நடவடிக்கைகள்
எடுக்கப்பட்டன. ஆனால் ஐபிஎஸ் அதிகாரி என்கிற முறையில்,
அவர் மீது நடவடிக்கைகள் எடுக்க, மத்திய அரசின் அனுமதி தேவைப்பட்டது.
கலைஞர் செல்வாக்கின் காரணமாக, முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு –
அனுமதி கொடுக்க மறுத்தது.

இந்த விஷயம் தொடர்ந்து மாநில-மத்திய அரசுகளுக்கிடையே தகவல்
பரிமாற்றங்களில் இருந்து வந்தது.

புதிய பாஜக அரசு மத்தியில் பொறுப்பேற்று 11 மாதங்கள் ஆன போதும்,
இன்னும் இதில் முன்னேற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை. இன்னமும்
மத்திய அரசிலிருந்து அனுமதி கிடைத்ததாகத் தெரியவில்லை…..!!!
(செல்வாக்கு தொடர்கிறது…..)

இப்போது திடீரென்று இதைப்பற்றி ஏன் – என்று கேட்கிறீர்களா ….?

இந்த புண்ணியவானின் அஜாக்கிரதை காரணமாக – மீண்டும்
கலைஞர் குடும்பத்தில் ஒரு பெரிய பிரச்சினை உருவாகி இருக்கிறது.

உங்களில் பலருக்கு நினைவிருக்கலாம் –
2ஜி வழக்கில் – 200 கோடி பெற்றதான விஷயத்தில் கலைஞர் டிவி
சிக்கியபோது, அதைக்காப்பாற்ற பெரும் முயற்சிகள் செய்யப்பட்டன.
இந்தப் பொறுப்பை ஏற்று, முன் நின்று நடத்தியவர் திரு சேட் அவர்கள்.

சென்ற வருடம் – பிப்ரவரி 2014ல், 2ஜி வழக்கில் கலைஞர் டிவி
சம்பந்தப்பட்ட ஆதாரங்களை அழிக்க, முந்தைய திமுக ஆட்சியில் உளவுத்துறை
தலைவராக இருந்த ஜாபர் சேட்,
கலைஞரின் மகளும் திமுக எம்.பி.யுமான திருமதி கனிமொழி, கலைஞர் டிவியின்
மேலாண் இயக்குநர் சரத்குமார்,
மற்றும் கலைஞர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன்
ஆகியோரோடு நடத்திய உரையாடல் விபரங்களை (ஒலி நாடாக்களை)
மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் டெல்லியில் வெளியிட்டார்.

அது சம்பந்தமான வழக்கு ஒன்றையும் சிபிஐ கோர்ட்டில் அவர்
தொடர்ந்தார்.
(இந்த ‘டேப்’ திரு.ஜாபர் சேட், தனது சுயபாதுகாப்பிற்காக, தானே பதிவு
செய்து வைத்திருந்த டேப். இது, அஜாக்கிரதை காரணமாக பிறரிடம்
சிக்கியதன் விளைவு தான் இந்த வழக்கு ….)

பின்னர், நீண்ட காலம் அதைப்பற்றிய செய்திகள் எதுவும் வரவில்லை.
இப்போது திடீரென்று, சிபிஐ கோர்ட் சார்பில்
கடந்த 20ந்தேதி, அதன் வழக்குரைஞர் திரு. கே.கே.வேணுகோபால் –

– 2ஜி வழக்கில் கலைஞர் டிவி தொடர்பான சில ஆவணங்களை
அழித்ததாகவும், போர்ஜரி கையெழுத்துக்களைப் போட்டதாகவும்,
பொய் ஆவணங்களைத் தயாரித்ததாகவும் – சில பேர் மீது
புதிதாக ஒரு வழக்கு தொடர 2ஜி வழக்குகளை மானிடர் செய்து வரும்
சுப்ரீம் கோர்ட் பெஞ்சில் அனுமதி கோரி விண்ணப்பித்திருக்கிறார்.
வழக்கு 30ந்தேதி பரிசீலனைக்கு வருகிறது.

இதில் தற்போது மேற்கொண்டு விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
என்றாலும், உரையாடல் நாடாவின் நம்பகத்தன்மை குறித்து சிபிஐ
அறிவுபூர்வமான ஆய்வுகளை நிகழ்த்தி, அவை உண்மை தான்
என்கிற முடிவிற்கு வந்ததாகவும் அதன் விளைவே இந்த புதிய வழக்கு
என்றும் தெரிய வருகிறது.

சம்பந்தப்பட்டவர் யார் யார் என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை
என்றாலும், உரையாடல் நாடாவில் சிக்கியுள்ளவர்கள் –
திரு.ஜாபர் சேட், திரு சரத்குமார், திருமதி கனிமொழி மற்றும்
கலைஞரின் உதவியாளர் சண்முகநாதன் ஆகியோர் என்பது
குறிப்பிடத்தக்கது.

திருவாளர் ஜாபர் சேட்’டின் அஜாக்கிரதை ……!!!

.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

9 Responses to திருவாளர் ஜாபர் சேட் – நினைவிருக்கிறதா ….?

 1. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  நீங்கள் சொன்னது போலவே எல்லோரும் மறந்துதான் போய்விட்டார்கள் போல இந்த ஆளை.
  தன்னுடைய விரலைக்கொண்டே தன் கண்ணை குத்திக்கொண்டவர்களில் இவரும் ஒருவர்.
  ஆனாலும் எல்லா மட்டங்களிலும், எல்லா கட்சிகளிடமும் இன்றும் செல்வாக்கை பயன்படுத்துகிறார். அதனாலேயே இன்னும் இவர்மீது சட்டம் தன் கடமையை செய்யவில்லை.

 2. Kauffman சொல்கிறார்:

  This post is irrelevant for this post written by KM sir. However, I want to know the truth in the following message that spread on Facebook and what’s app blaming that Tamil Nadu people are wasting water.

  I was telling my friend that we do not get enough water first of all. Then how can we waste the water?

  Some of the Tamil guy sitting in Bangalore is spreading false information!

  “ஒரு முக்கியமான கன்னட(கர்நாடக) அரசியல்
  தலைவருடன் தனியாக உரையாடும்
  சமயத்தில் அவருக்கு பதில் சொல்ல
  முடியாத நிமிடங்கள்
  மேக்கேதாட்டுவில் அணை கட்டுவது
  மூன்று காரணம். ஒன்று மின்சார
  தேவைக்கு இரண்டு கோலார்
  சிக்கபள்ளாபூர் மாவட்ட குடிநீர் தேவை.
  மூன்றாவது வருடாவருடம் உபரியாக
  சென்று கொள்ளிடம் அருகே கடலில்
  கலக்கும் 356 டி.எம்.சி நீர். உங்களால்
  சேமிக்க வக்கில்லை நாங்களே
  பயன்படுத்துவதில் என்ன தவறு. உங்களுக்கு
  நீரை கேட்டு சண்டை போட மட்டுமே
  தெரியும். வரும் நீரை சேமிக்கவோ
  முறையாக பயன் படுத்தவோ தெரியாது.
  உங்கள் அரசியலால் நாங்கள் ஏன் நீரை வீணாக்க
  வேண்டும்.
  உங்கள் காவிரி பாசனத்தின் கடைமடை வரை
  நீரை கொண்டு செல்லும் வாய்க்கால்களை
  பராமரிக்க உங்களுக்கு நேரமில்லை.
  பாசனத்திற்கு செல்லும் நீரில் பாதி
  வெளியே செல்கிறது முறையான
  பராமரிப்பு இன்றி. அதை மேம்படுத்த
  வழியில்லாமல் எங்களிடம் சண்டை
  போடுகிறீர்கள்.
  இங்கு அணைகளை நிரப்பும் முன்
  வாய்க்கால்கள் வழியாக தேவையான அளவு
  ஏரி குளங்களில் நிரப்பிக்கொண்டு
  விவசாயத்திற்கு அனுப்பிவிட்டு அணை
  நிரப்புகிறோம், விவசாய பாசன பரப்பு
  பலமடங்கு அதிகமாகி உள்ளது. அதாவது
  தேக்கும் நீரைபோல ஒன்றரை மடங்கு நீரை
  பயன்படுத்துகிறோம். நீங்கள் கிடைக்கும்
  நீரை பயன்படுத்த நீர் மேலாண்மையில்
  மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளீர்கள்.
  நாங்கள் ஆறு உற்பத்தி ஆகுமிடத்திலிருந
  ்து (தலைக்காவிரி முதல்) எல்லை
  பிலிகுண்டுலு வரை
  பராமரிக்கிறோம். உங்களால் மேட்டூரை
  தாண்டி காவிரியை கவனிக்க
  நேரமில்லை. மேட்டூர் வரையான
  காவிரி கூட நீர் வருவதாலும்
  பெரும்பாலும் காட்டுபகுதி
  என்பதாலும் ஆறு உயிரோடு உள்ளது.
  இருக்குற கிளைநதிகளை காணாம போக
  வச்சிட்டீங்க
  ஒற்றுமை இல்லாத நீங்களே அனைத்து
  எம்.பிகளுடன் மனு கொடுக்கும் போது
  சட்டசபைக்கு வெளியே கட்சி
  பேதமில்லாமல் பழகும் நாங்கள் எவ்வளவு
  நெருக்கடி குடுப்போம். அதுவும் எங்கள்
  ஊர்க்காரங்க முக்கிய மத்திய அமைச்சர்கள்.
  இன்னொரு காரணம் முதல்வர் தெளிவாக
  சொல்லியிருக்கிறார் எதிர்கட்சிகளின்
  ஆலோசனை இன்றி எந்தவித முடிவுக்கும்
  வரமாட்டோமென. உங்கள் ஊர்ல நடக்காத விசயம்.
  முக்கியமாக காவிரியின் எந்த
  இடத்திலும் மணல் எடுக்கும் தைரியம்
  எவனுக்கும் இல்லை. காவிரி தவிர்த்து
  வேறு நதிகளின் நீரைவைத்து என்ன
  செய்றீங்க.காவிரி பாசன பகுதி
  தவிர்த்து மற்ற பகுதிகளில் விவசாயம்
  செழித்து இருக்கா?. எல்லாமே
  வீணாக்கறீங்க, காவிரில கூட
  அரசியலுக்காக மட்டுமே சண்டை
  போடுறீங்க. சரியான அழுத்தம்
  கொடுத்திருந்தால் இந்நேரம் காவிரி
  மேலாண்மை வாரியம் வந்திருக்கும்.
  உங்களுக்கு அது முக்கியம் இல்லை. அது
  வரதுக்குள்ள நாங்க அணை கட்டிடுவோம்னு
  சொல்றாரு. பதில் சொல்ல
  தைரியமின்றி தலைகுனிந்த தருணம்
  தமிழகத்தில் உள்ள நமக்கே தெரியாத பல
  உண்மைகள். போராடும் தகுதி நமக்கு
  குறைவே.
  தமிழகத்தை பாலைவனமாக்குவதில்
  கர்நாடகத்துக்கு இரண்டாமிடமே. இது என்
  கருத்து அல்ல

  ஆனால் இது கவனிக்கப்பட வேண்டிய கருத்து”

  • சக்தி சொல்கிறார்:

   தமிழகத்தை பாலைவனமாக்குவதில் தமிழகம் முதலிடம் என்பதும், மேலே உள்ள பல உண்மை என்ற போதிலும்,அணை கட்டி தடுப்பது சரி என்றாகி விடாது. இன்று காவிரியை தாரை வாற்றுக் கொடுத்து விட்டதால் கர்னாடகாவிற்கு சொந்தமாகி விடாது.
   போராடும் குணம் தமிழனிடம் மறைந்து 2000 ஆண்டுகளாகி விட்டது. இந்து மதத்திற்காக சமணரைக் கழுவேற்றியதில் இருந்து அடிமை வாழ்வு தொடங்கி விட்டது. அடிமையாக வாழ்வதில் தமிழன் மகிழ்ச்சி காண்கிறான் அவ்வளவுதான்.

  • எழில் சொல்கிறார்:

   Mr. Kauffman, The argument put forth in the message lacks the understanding of baisic requirement to build a dam. Furthmore it appears the person who wrote this has ultierior motives and wanted to divert the issue as his/her party has vested interest in Karnataka and at the same time didn’t want to loose the grip in Tamil Nadu.

   அணை என்பது இரு மேட்டு நிலங்களுக்கு ஊடாக நதியானது வரும் போது ஒரு தோதான இடத்தில் தடுத்து நிறுத்தி நீரை சேமிக்க கட்டப் படுவது. இதற்கு மிக முக்கியமாக நதியின் இரு புறமும் இறுக்கமான, பலமான மண் அரிப்புக்கு உள்ளாகாத மேட்டு நிலங்கள் அல்லது மலை தொடர்கள் இருக்க வேண்டும். அப்போது தான் அணை மூலம் தடுக்கப்பட்ட நீரின் மட்டம் உயரும் போது பாதுகாப்பாக நீர் சேமிக்கப்படும். தமிழ்நாட்டில் காவிரி வரும் பகுதிகள் பெரும்பாலும் சமதள நிலப்பரப்பை உடையன. அப்படி இருபுறமும் மேட்டு நிலங்கள் இருந்தாலும் ஒன்று அவை அணை கட்ட உறுதியற்றவையாக இருக்கலாம் அல்லது கட்டினாலும் சேமித்து வைக்க கூடிய நீர் மிக சொற்பமாகவே இருக்கலாம்.

   நீங்கள் எடுத்துக்காட்டியது போல் பல செய்திகள் சமூக தளங்களில் அடித்து விடப்படுகின்றன. பலர் அதை அப்படியே நம்ப கூடிய வகையில் கவனமாக வடிவமைக்க படுகின்றன.

   There is absolute information overload in the social media and it is upto every lataral thinking person to disect and seprate the truth in it.

   அய்யன் அன்றே சொன்னார், “…மெய்பொருள் காண்பது அறிவு!”.

   • Kauffman சொல்கிறார்:

    Dear Ezhil,
    You are 1000% correct. I agree with you. I had fight with my friend who sent this message to me. It is well planned false propaganda. I have seen the roaring water flow touching both sides of banks in Kaviri 20-25 years back at Musiri. But I do not know how much water flow in these years. I think that it never touch the sides. Two years back, I felt very bad to see the Kaviri that had stagnant dirty water at near erode. Where is the water?

    I agree that man-made environmental changes have huge impact on weather and monsoon. The climate change is affecting the entire earth. But we cannot blame the people who receive water at lower level of the river only for not getting water flow.

  • srinivasanmurugesan சொல்கிறார்:

   உண்மை தான்

 3. Kamal சொல்கிறார்:

  I believe, you did not purposefully hide the contribution of “savukku” in releasing those audio tapes..

 4. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  நண்பர் கமல்,

  இந்த விஷயத்தில் “சவுக்கு” தளத்தின் தீவிர பணியை எப்படி மறக்க முடியும் ?
  அவர்கள் தானே அந்த ஆடியோ டேப்பை வெளியிட்டார்கள் …
  “சவுக்கு”தளம் மிகத்துணிச்சலுடன் அற்புதமான புலனாய்வுகளை
  மேற்கொண்டிருக்கிறது.

  தற்போதைய நீதிமன்ற செயல்பாடுகளைக் குறித்த செய்தியை நேற்று நான்
  செய்தித் தாளில் பார்த்தேன். அதன் தொடர்ச்சி தான் இந்த இடுகை.

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

 5. வானரம். சொல்கிறார்:

  “திரு.ஜாபர் சேட், திரு சரத்குமார், திருமதி கனிமொழி”

  திருவாளர் இல்ல திருடா …திருடி …

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.