இந்த தகவல் உங்களுக்கே வியப்பாக இருக்கும் …..!!!

.

ஒரு வித்தியாசமான தகவலை இங்கே தருகிறேன் –

திருச்சி மாவட்டம் – முடிகண்டம் ஊராட்சி –
திருப்பூர் மாவட்டம் கொசம்பாளையம் ஊராட்சி,
கோவை மாவட்டம் குருடம்பாளையம் ஊராட்சி,
நீலகிரி மாவட்டம் பர்லியார் ஊராட்சி,
தூத்துக்குடி மாவட்டம் மேலபுதுக்குடி ஊராட்சி,
விருதுநகர் மாவட்டம் அத்திப்பட்டி ஊராட்சி

ஆகிய கிராம ஊராட்சிகள் – ஒவ்வொன்றுக்கும் –
ரூபாய் 30 லட்சம் –

கரூர் மாவட்டம் கடவூர் ஊராட்சி ஒன்றியம்,
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியம்
மற்றும் திருநெல்வேலி மாவட்ட ஊராட்சி ஒன்றியம்

ஆகிய ஊராட்சி ஒன்றியங்கள் ஒவ்வொன்றுக்கும் –
ரூபாய் 20 இலட்சம் –

-அந்தந்த ஊரக உள்ளாட்சி வளர்ச்சிப் பணிகளுக்கு அவர்கள் விரும்பும்
வகையில் பயன்படுத்திக் கொள்ள –
பரிசுத்தொகையாக வழங்கப்பட்டிருக்கிறது.

தேர்ந்தெடுக்கப்பட்ட மேற்கண்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள்
மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ், அமைச்சரிடமிருந்து
24/04/2015 அன்று டெல்லியில் நடைபெற்ற தேசிய பஞ்சாயத்து ராஜ் தின
மாநாட்டில் அவற்றிற்கான விருதினையும் ரொக்கப்பரிசையும்
பெற்றிருக்கிறார்கள்.

இந்த விருதுகள் / பணப்பரிசு எதற்காக வழங்கப்பட்டிருக்கிறது….?

மத்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் ஊரக உள்ளாட்சி
அமைப்புகளின் சிறப்பான நிர்வாகத்திற்காக உருவாக்கிய –

ஊராட்சி கணக்குகளை கண்காணிப்பதற்காகவும்,
உள்ளாட்சி அமைப்புகள் விவர தொகுப்பு,
ஊராட்சிகளுக்கான தேசிய வலைத்தளம்,
தேசிய அளவிலான ஊராட்சி சொத்துக்கள் விவர தொகுப்பு மற்றும்
ஊராட்சி அளவில் திட்டமிடலுக்கான பிளான் பிளஸ் –

ஆகிய மின்னணு ஆளுகை மென்பொருட்களை மேற்கண்ட
ஊராட்சிகளில் செவ்வனே செயல்படுத்தியமைக்காக –
மத்திய அரசின் பஞ்சாயத் ராஜ் அமைச்சகத்தால் 2014-15 ஆண்டிற்கான
ஈ-புரஸ்கார் ( e-puraskar award ) பரிசுக்கான மேற்கண்ட தொகைகளை
பெறுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன.

இதேபோல் கிராம சபையை சிறப்பாக நடத்தும் கிராம ஊராட்சிகளை
ஊக்குவிக்கும் பொருட்டு மத்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின்
“ராஷ்ட்ரிய கௌரவ் கிராம சபா விருது” 2014-15-ம் ஆண்டிற்காக,

நீலகிரி மாவட்டம் குன்னூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த
பெரஹட்டி கிராம ஊராட்சி தேர்ந்தெடுக்கப்பட்டு
இதற்கான பரிசுத்தொகையான ரூபாய் 10 லட்சத்தை
பெரஹட்டி கிராம பஞ்சாயத்தின் தலைவர்
திருமதி மு.ராஜேஸ்வரி தேவதாஸ் பெற்றுக் கொண்டிருக்கிறார்.

இதற்கான கணிப்பொறிகள், மின்னாக்கி, பிரிண்டர் மற்றும்
அகண்ட வரிசை இணையதள அமைப்பு ஆகியவற்றை
ரூபாய் 79.50 கோடி செலவில் தமிழக அரசு உருவாக்கித் தந்ததன்
மூலம் இந்த திட்டம் நன்கு செயல்பட உதவி இருக்கிறது.
எனவே,

2014-15-ம் ஆண்டில் மின்னணு ஆளுகை திட்டங்களை சிறப்பாக
செயல்படுத்தியமைக்காக இ-பஞ்சாயத்து புரஸ்கார் விருது
மற்றும் ரூபாய் 20 லட்சத்திற்கான ரொக்கப் பரிசினை பெறுவதற்கு
அகில இந்திய அளவில் தமிழ்நாடு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.

மேற்கண்ட விருதை –
பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களிடமிருந்து
தமிழ்நாட்டின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை செயலர் திரு.
ககன்தீப் சிங் பேடி –
புதுடெல்லி விக்யான் பவன் மண்டபத்தில்
24/04/2015 அன்று நடைபெற்ற தேசிய பஞ்சாயத்து ராஜ் தின
மாநாட்டில் பெற்றிருக்கிறார்.

epuraskar award

இந்த செய்தியை ஏதோ ஒரு செய்தித்தாளில், ஏதோ ஒரு மூலையில்,
முக்கியத்துவமின்றி சிறிய அளவில் பார்த்ததும் நானே
வியந்து போனேன். தமிழ்நாட்டில் ஊராட்சி அமைப்புகள் இந்த அளவிற்கு
கணிணி பயன்பாட்டில் முன்னேறி உள்ளனவா …?
நீலகிரி மாவட்டத்தில் பர்லியார், பெரஹட்டி கிராமங்கள்,
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலபுதுக்குடி கிராமம் – என்று எங்கெங்கோ
தொலைதூர கிராமங்களில் இந்த அளவு கணிணி பயன்பாடா ?
என்னால் நம்பவே முடியவில்லை….!

இந்த சாதனைக்காக தமிழக அரசை பாராட்டுவதும்,
கண்டு கொள்ளாமல் இருப்பதும் –
அரசியல் விருப்பு வெறுப்புகளைப் பொருத்த விஷயம். எனவே,
நான் அதைப்பற்றி ஒன்றும் கூற விரும்பவில்லை.

ஆனால் – இந்த கிராம பஞ்சாயத்துகள் ஒவ்வொன்றும்
அற்புதமான சாதனைகளை நிகழ்த்தியதால் தான்
தேசிய அளவில் இந்த பரிசுகளை எல்லாம் பெற்றுள்ளன.
தமிழ் நாட்டில் எங்கோ ஒரு மூலையில் இருக்கும்
கிராம பஞ்சாயத்துக்கள் இந்த அளவிற்கு சிறப்பாக செயல்படுகின்றன
என்பது நமக்கெல்லாம் பெருமை தரும் விஷயம் அல்லவா…!!!

இதில் குன்னூர் ஊராட்சி, பெரஹட்டி கிராம பஞ்சாயத்தின் தலைவர்
திருமதி மு.ராஜேஸ்வரி தேவதாஸ் பெயர் மட்டுமே
செய்திகளில் வெளியாகி இருக்கிறது.

மற்ற அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும், இத்தகைய சாதனைகளுக்கு
பொறுப்பான நபர்கள் யார் யார் என்பது அறிவிக்கப்பட்டு,
அவர்களுக்கு உரிய கௌரவத்தை – மீடியாக்கள் கொடுக்க வேண்டாமா ?

சம்பந்தப்பட்டவர்களை எல்லாம், தொலைக்காட்சிகளில் அழைத்து,
பேட்டி எடுத்து – அவர்களை பிரபலப்படுத்த வேண்டாமா ?

இத்தகைய நிகழ்ச்சிகள், பரந்த அளவில் விளம்பரம் பெற்றால் தானே –
மற்ற ஊராட்சி அமைப்புகளுக்கும் இதில் ஆர்வம் வரும்…?

இந்த ஊராட்சிகளைக் கொண்டாட வேண்டிய மீடியா’க்கள்
இப்படி கண்டு கொள்ளாமல் இருப்பது சரியா ….?

மாணவனை இழுத்துக் கொண்டு ஓடிப்போன ஆசிரியை,
கள்ளக்காதலால் நிகழ்ந்த இரட்டைக் கொலை –
போன்ற செய்திகளை பரபரப்பாக வெளியிடுவதோடு நிற்காமல் –

பத்திரிகை, தொலைக்காட்சி மீடியாக்கள் –
இத்தகைய சமூக நலன், வளர்ச்சி தொடர்புடைய விஷயங்களுக்கும்
கொஞ்சம் நேரம் ஒதுக்குமா …?

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

13 Responses to இந்த தகவல் உங்களுக்கே வியப்பாக இருக்கும் …..!!!

 1. Sridhar சொல்கிறார்:

  Kudos to the field level workers who have made this happen.
  Surely this would have found a slot in the media which is beyond politics and has a social responsibility attitude. 😦

 2. today.and.me சொல்கிறார்:

  Correction:
  Thiru.Gagandeep Singh Bedi, IAS

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நன்றி நண்பர் டுடேஅண்ட்மீ.
   சரி செய்து விட்டேன்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 3. today.and.me சொல்கிறார்:

  PMji,
  Camara is here. Smile please, this for TN though.
  🙂

  • Ramachandran. R. சொல்கிறார்:

   பரிசு பெறுவது அவருக்குப் பிடிக்காத தமிழ்நாடு ஆயிற்றே..
   அதான் sir சிரிக்க மறுக்கிறார்.

 4. today.and.me சொல்கிறார்:

  Attention: BJP(TN) heads

  Warning: This much of laziness never bring you 2016.

  Action: Camp and make propaganda in these villages immediately.

  “These awards are given to you by the grace of Modiji and BJP govt.”

 5. today.and.me சொல்கிறார்:

  Anyhow,
  HEARTY CONGRATS TO
  THE ADMINISTRATOR,
  ALL LEVEL STAFF AND
  VOLUNTEERS
  IN THE SELECTED VILLAGES.

 6. drkgp சொல்கிறார்:

  Sorry, the media and TV can not allot any time slot for these trivial matters.
  They are busy covering Mr Vijayakanth at Delhi, who at present is
  trying to bang a reporter with his mike.

 7. சக்தி சொல்கிறார்:

  மாவட்ட ஊராட்சிக்கான விருதை நெல்லை மாவட்ட ஊராட்சித் தலைவர் பி. நாராயண பெருமாள், ஊராட்சி ஒன்றியத்துக்கான விருதை கரூர் மாவட்டம், கடவூர் ஊராட்சி ஒன்றியத் தலைவர் தேன்மொழி, தொண்டாமுத்துார் ஊராட்சி ஒன்றியத் தலைவர் மதுமதி விஜயகுமார், கிராம ஊராட்சிகளுக்கான விருதை திருச்சி முடிகண்டம் ஊராட்சித் தலைவர் வேலுசாமி, திருப்பூர் கொசவம்பாளையம் ஊராட்சித் தலைவர் எம். கண்ணன், கோவை குருடம்பாளையம் ஊராட்சித் தலைவர் டி.ரவி, நீலகிரி பர்லி யார் ஊராட்சித் தலைவர் எஸ். கலைச்செல்வன், தூத்துக்குடி மேலபுதுக்குடி ஊராட்சித் தலைவர் கே. இவான்ஸ் பிரைட், விருதுநகர் அத்திப்பட்டி ஊராட்சித் தலைவர் ஜி.வி. கோவிந்தராஜன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

  சில தினங்களுக்கு முன்னர் இந்த செய்தியை ஊடகங்களில் படித்தேன். விருது பெற்ற அனைவரின் பெயர்களுடன் செய்தி வந்தது. ராஜேஸ்வரி தேவதாஸ் பெயர் தனியாக வந்ததன் காரணம் அவருக்கு கிடைத்தது ராஷ்ட்ரிய கவுரவ் கிராம சபா விருது ஆகும். இதனால் அவரின் பெயர் தனியாகப் போடப்பட்டிருக்கலாம். மற்றவர்களுக்கு கிடைத்தது இ-பஞ்சாயத்து புரஸ்கார் விருது.

 8. Siva சொல்கிறார்:

  ஐயா,
  நீங்கள் சொல்வது சரியானது. பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் இந்த செய்திகளை முக்கியம் கொடுத்து மக்களிடம் சேர்க்க வேண்டும்!

 9. LVISS சொல்கிறார்:

  News like these get shunted to a corner or dont fid a place at all –After all thee are more important things like pinstripe coat ,shawls , who accompanied PM and how many cooks were there in PMs plane are earth shattering news for us – if we read many news websites we may find these news –But who cares ? Many things that happen in govt appear regularly in various websites —
  Tamil Nadu scores in use of technology —
  Here is a news away from the subject -Sachin Tendukar adopted a village in Nelore dist named Puttamraju Kandrika –He has completely altered the very look of the village to an unbelievable extent —

  http://www.thehindubusinessline.com/news/how-sachin-transformed-an-andhra-pradesh-village/article7054466.ece

 10. LVISS சொல்கிறார்:

  The roads in the village I worked are far better than many of the roads in the state –
  There is a disturbing news on the way Net neutrality may go for a toss and we will have a lot to write about it —

 11. இ.பு.ஞானப்பிரகாசன் சொல்கிறார்:

  வியப்பான, மிகவும் மகிழ்ச்சிக்குரிய செய்தி! பதிவின் இறுதியில் கேட்கப்பட்டிருப்பது மிகவும் நியாயமான கேள்வி!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.