கேளுங்கள் – இங்கே ஜட்ஜுக்கே நியாயம் கிடைக்கவில்லையாம் ….!!!

.

நீதிமன்றங்களுக்கு உள்ளே நிகழ்வதை விமரிசிக்கக் கூடாது.
அந்த தவற்றை நாம் செய்ய மாட்டோம்.

கீழே இருக்கும் விஷயம் – மன்றத்திற்கு வெளியே,
ஒரு பிரிவு உபசாரக் கூட்டத்தில் நிகழ்ந்தது –
செய்தியாக வெளிவந்தது –
ஆகையால் நாம் அது குறித்து பேசலாமென்று நினைக்கிறேன்.
(ஹிந்து கர்நாடகா பதிப்பில் வந்த செய்தி கீழே )
இருந்தாலும் யாருடைய பெயரையும் குறிக்காமலே பேசுவோம்…!

ஒரு நீதிபதி பதவி ஓய்வு பெற்று போகிறார்.
அந்த நீதிமன்றத்தின் தலைமை பொறுப்பில் இருப்பவர் –
பிரிவு உபசாரக் கூட்டத்தில் –
கவலைப்பட்டு, வருத்தப்பட்டு, குறைப்பட்டு பேசுகிறார் –
யாரைப் பற்றி கவலை, வருத்தம், குறைகள் ….?

பதவி ஓய்வு பெற்று போகிறவர் -போவதற்கு முன்னர்,
நியாயமாக தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற்றிருக்க
வேண்டுமாம். உச்சநீதிமன்றத்தில் பொறுப்பில் இருப்பவர்கள் –
அவருக்கு பதவி உயர்வு கொடுக்காமல் –
அநீதி இழைத்து விட்டார்களாம்…

அதற்கான காரணமாகச் சொல்லப்படுவது –
ஓய்வு பெறுபவரின் மீது
சில புகார்கள் கூறப்பட்டிருந்தனவாம்.
அந்த புகாரை விசாரிப்பதில் உச்சநீதிமன்றம் 10 மாதங்கள்
கால தாமதம் செய்து விட்டதாம்.
அதனால், பதவி உயர்வு பெறாமலே
அவர் ஓய்வு பெறுகிறாராம்.

நீதிபதிக்கே நீதி கிடைக்கவில்லையே. இப்படி இருந்தால் நீதிபதி
வேலைக்கு இந்த நாட்டில் யார் வருவார்கள்
என்று வருத்தப்படுகிறார் தலை.

தங்களில் ஒருவருக்கு பதவி உயர்வு கிடைப்பதில் தாமதம்
ஏற்பட்டதற்கு இவ்வளவு வருத்தப்படுபவர்கள் – இந்த நாட்டின்
நீதிமன்றங்களில் குவிந்து கிடக்கும் லட்சக்கணக்கான வழக்குகளை பற்றி
என்றாவது கவலைப்பட்டதுண்டா ? அதற்காக உருப்படியான
நடவடிக்கைகள் எதையாவது எடுத்ததுண்டா …?

தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு – மேல் முறையீட்டில்
உயிர் பிழைப்போமா இல்லை தூக்குக் கயிற்றில் தொங்கப்போகிறோமா
என்றே தெரியாமல் ஒவ்வொரு நாளும் இந்த நாட்டின் சிறைகளில்
செத்துப் பிழைப்பவர்கள் எத்தனை எத்தனை பேர் ….??

வருடக்கணக்கில், பல்வேறு நிலைகளில் காத்திருக்கும்
அவர்களது வழக்குகள் எத்தனை எத்தனை….?

1991-ல் – ஒரு வழக்கில் முதலில் 26 பேருக்கு
கீழமை நீதிமன்றத்தில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது .

ஏறக்குறைய ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு, அதில் 19 பேர்
அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்கிற
காரணத்தால் எந்தவித தண்டனையும் விதிக்கப்படாமல்,
விடுவிக்கப்பட்டார்கள்….

எந்தவித குற்றமும் செய்யாமலே,
தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட அந்த அப்பாவிகள் 19 பேர்களும்
ஒவ்வொரு நாளும் இன்று சாவோமா, நாளை சாவோமா என்று
பதை பதைத்து, துக்கத்திலும், ஏக்கத்திலும் –
தங்களின் வாழ்க்கையின் மிக இனிமையான இளமைக்காலத்தை –
அந்த ஒன்பது வருடங்களை – தனிமைச்சிறையில் கழிக்க நேர்ந்ததே –
அதற்கு யார் பொறுப்பு ….?
எந்த சிஸ்டம் பொறுப்பு ….?
இவர்களில் யாராவது அதற்காக வருத்தப்பட்டதுண்டா …?

தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு – அப்பீலுக்கு மேல் அப்பீலும்,
அதன் பின்னர் கருணை மனுவுக்கு மேல் கருணை மனுவுமாக
போட்டுவிட்டு, எந்த முடிவும் கிடைக்காமல் காத்திருந்தவர்கள் –
காத்திருப்பவர்கள் எத்தனை பேர் …?

அவர்கள் விஷயத்தில் முடிவு வர மிகவும் தாமதமாகிறதே
என்று கேட்டால் –

கருணை மனுவின் மீது இத்தனை மாதங்களுக்குள்
– மன்னிக்கவும் –
இத்தனை ஆண்டுக் காலத்திற்குள் –

முடிவெடுத்தாக வேண்டுமென்று எந்த சட்ட விதிகளும் கிடையாது –
எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் ஆகலாம் –
என்று சொன்னது யார் …? எந்த சிஸ்டம் …?

அவர்களில் சிலர் 25 ஆண்டுக்காலத்திற்கும் மேலாக இன்னமும்
வெஞ்சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார்களே – அவர்கள்
விஷயத்தை துரிதுபடுத்தி முடிவு செய்வோம் என்று
இந்த சிஸ்டத்தில் யாராவது கவலைப்படுகிறார்களா ..?

இந்த மற்றவர்களுக்கு நேராத அதிசய அநீதி இவர்களுக்கு
மட்டும் நிகழ்ந்து விட்டதா என்ன …?

தாங்கள் சார்ந்த அமைப்பில் நிகழும் இத்தனை தாமதங்களுக்கும்
தாங்களும் தான் பொறுப்பு என்பதை உணராமல் அல்லது
காட்டிக் கொள்ள விரும்பாமல்,

குறைகள் இவர்களது சிஸ்டத்திலேயே நிரந்தரமாக இருக்கிறது
( inborn defeciencies ). தங்களுக்கே அதன் விளைவு நிகழும்போது
தான் இவர்கள் அதை உணருகிறார்கள் –
தங்களுக்கு வேறு யாரோ – எங்கிருந்தோ வந்து அநீதி இழைத்து விட்டது

போல் பேசுகிறார்கள்.

இவர்களைப் பார்த்தால் நமக்கு வருவது இரக்கம் அல்ல –
எரிச்சலும், கடுப்பும் தான் ….!

——————————————————————————————————————————————————–

( http://www.thehindu.com/news/national/cj-who-will-join-judiciary-if-judges-dont-get-justice/article7123106.ece)

BENGALURU, April 20, 2015
Updated: April 21, 2015 01:22 IST

Chief Justice D.H. Waghela of the Karnataka High Court on Monday gave vent
to his sadness over Justice K.L. Manjunath not being elevated as Chief Justice
of a High Court, wondering who would join the judiciary if judges themselves
did not get justice.

A function organised to bid farewell to Mr. Justice Manjunath on his retirement
saw the judge himself, as well as the Chief Justice, raise questions about the
former not being elevated, after some allegations surfaced against him.

Mr. Justice Manjunath’s name was initially considered for the post of Chief Justice
of the Punjab and Haryana High Court. Addressing judges and members of the Bar,
he questioned the manner in which the Supreme Court’s collegium had dealt with
the allegations against him at different stages.

Wondering whether a judge could be punished without the nature of the allegations
being disclosed to him, he asked how the Supreme Court could keep the file pending
for more than 10 months without taking any decision.

He said the collegium should follow the principles of natural justice. “Ultimately,
the moral of my story is there is no place for integrity and honesty and there is
no justice to a judge in this country,” he said.

Chief Justice Waghela posed the question about judges themselves not getting justice
and said, “It is an issue to ponder for all. We need to do introspection.”

He was responding to Karnataka State Bar Council Chairman P.P. Hegde’s remark
that the Bar did not get an opportunity to accord a farewell to
Justice Manjunath on his elevation.

“It was the darkest day and the most embarrassing moment for me
when a glossy magazine was circulated…its contents were not only below contempt
but sheer disinformation, [containing] character assassination of a judge,
and the credibility of an institution suffered…” said Mr. Justice Waghela.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

18 Responses to கேளுங்கள் – இங்கே ஜட்ஜுக்கே நியாயம் கிடைக்கவில்லையாம் ….!!!

 1. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  தங்களுக்கு வந்தா ரத்தம்
  மற்றவர்க்கு வந்தா தக்காளி சட்னி!

 2. NS RAMAN சொல்கிறார்:

  Dear Sir
  I agree with you lot of time delay in trails and common public affected due to this delayed justice.
  But in the same line how you can include convicted criminals of Rajiv case (though you try to not mention their names). They are not like any other petty criminals, part of terrorist activities, killed not only Rajiv other 20 lives (most Tamil) including 10 year old girl.
  SC of India thrice confirmed judgement about their part in assassination and only their death sentence converted to life sentence. Also other 19 people not acquainted from case only their death sentence reduced to imprisonment.
  Sympathy should be for common man not for criminals. Your earlier stand on Nirbaya case same applies to this people also.

  • இளங்கோ சொல்கிறார்:

   NS RAMAN ,

   விஷயம் தெரியாமல் உளறக்கூடாது;கண்டதை எழுதாதீர்கள்.
   அந்த மீதி 19 பேர் மீது எந்தவித குற்றமும் நிரூபிக்கவில்லை
   என்று சொல்லித்தான் 9 வருடங்களுகுப் பிறகு விடுதலை
   செய்யப்பட்டார்கள். சு.சு.வுக்கு ஜால்ரா கொட்டுபவர்கள்
   தான் இப்படி எழுதுவார்கள். நீங்களும் அப்படித்தானோ ?
   காமிராவுக்கு பேட்டரி செல் வாங்கிக்கொடுத்த
   சிறு பையனெல்லாம் டெர்ரரிஸ்டா ? அறிவுள்ளவர்கள்
   சொல்ல மாட்டார்கள். உங்களைத்தூக்கி 25 வருடம்
   விசாரணை இல்லாமல் ஜெயிலில் போட்டால் பிறகு தெரியும்.
   முதலில் அந்த இரவு சு.சு. எங்கிருந்தார் சொல்லுங்கள்
   பார்க்கலாம். அந்த ஆள் ஏன் ஜெயின் கமிஷனில்
   பதில் சொல்ல பயந்து ஓடினார் ?

   இந்த வழக்கைத்தவிர வேறு எந்த வழக்குமே தாமதமாகவில்லையா ?
   அதற்கு என்ன விளக்கம் சொல்லப் போகிறீர்கள் ?
   வந்து விட்டார் வக்காலத்து வாங்க; போய்யா போ போ…

   • சக்தி சொல்கிறார்:

    ராஜிவ் கொலைவழக்கில் பல கேள்விகளுக்கு விடையில்லை. விசாரிக்கப்பட வேண்டியவர்கள் விசாரிக்கப்படவில்லை.விசாரணை செய்தவர்கள் தங்கள் தவறை ஒப்புக் கொண்டுள்ளனர். தவறாக வழி நடத்திச் சென்றதை ஏற்றுக் கொண்டுள்ளனர். அப்பாவிகள் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்.
    நீதி ஒரு பக்கம் சாய்ந்த நிலையில் ,குற்றம் சரியாக நிரூபிக்கப்படாத நிலையில் ,விசாரணைகள் பக்கச் சார்பாக நடத்தப்பட்ட நிலையில், விசாரிக்க வேண்டியவர்கள் விசாரிக்கப்படாத நிலையில் அவர்களை குற்றவாளிகளாக காட்டுவது தவறாகும்.

   • NS RAMAN சொல்கிறார்:

    Please refer the judgement CRIMINAL APPEAL NO.321 OF 1998

    all are accused under various IPC sections only SC cleared them from death sentence given by Special court. It doesn’t mean they are innocents.

    “We confirm the conviction passed by the trial court for the offences under Secs.212 & 216 of the IPC, Sec.14 of the Foreigners Act, 1946, Sec.25(1-B) of the Arms Act, Sec.5 of the Explosive Substance Act, Sec.12 of the Passports Act, and Sec.6(1-A) of the Wireless and Telegraph Act, 1933, in respect of those accused who were found guilty of those offences”

    SC already clearly spelled out Arivu involvement in the case. How many days you are going to tell the same battery buying story. He also bought a motor cycle and arranged a safe house of Sivarasan & Co. If it so simple offence why Mr Jetmalani can’t get him out of charges?

    Please remember the same SC reduced the death sentence to life on legal grounds. So judiciary is working even though a delay. Supporting convicted criminals is your choice, but you can’t justify their crime already proved before court of law.

    Also you have all the liberty to file a case against Swamy.

    “அறிவுள்ளவர்கள் சொல்ல மாட்டார்கள்.” Please think twice, before you approach this matter as a emotional”. We are here only for arguements not for personal level attack.

    • சக்தி சொல்கிறார்:

     பதிவுக்கு தொடர்பில்லாத கருத்தை வைப்பதையிட்டு காமை ஐயா மன்னிக்கவும். . இத்துடன் முடித்துக் கொண்டு தொடர் வாதம் -கருத்திட மாட்டேன் என்ற உறுதியுடன்…………….
     ராமன் அவர்களே!
     விசாரித்த நீதிபதி ஒருவரே தவறை ஏற்றுக் கொண்ட போது உங்களால் ஏன் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்பது புரியவில்லை. முக்கிய நடுநிலைக் காரணத்தை காமை அவர்கள் விளக்கமாக கூறி விட்டார்.
     எனினும்……….

     தற்கொலைத் தாக்குதலை ஏற்றுக் கொள்ளாத போதிலும் , அதில் உயிரிழந்தவர்களுக்காக மனவேதனைப்பட்ட நிலையிலும், ராஜிவ் கொலை செய்யப்பட வேண்டியவரே. ஈழத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான பல ஆயிரம் அப்பாவிகள், சித்திரவதைக்குள்ளாகி கொலை செய்யப்பட்ட அப்பாவித் தமிழர்கள் நிலையை எண்ணிப் பார்க்கும் போது ,ராஜிவ்காந்தி கொலை செய்யப்பட்டது நியாயமானது,நீதியானது.பாதிப்புக்கு உள்ளான எவரும் புலிகள் அல்ல.

     நம்மவர்கள் உயிரிழந்த போது அனுதாப்படும் நாம் அங்கே ராஜிவால் சித்திரவதைக்குட்பட்டவர்கள்,பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானவர்கள் உயிரிழந்தவர்களையும் மனித நேயத்துடன் எண்ணிப் பார்க்க வேண்டும்.

     ராஜிவ் கொலைக்கு யார் காரணமாக இருந்தாலும் இந்தியா மரண தண்டனை விதிக்க வேண்டிய ராஜிவுக்கு ,நீதிதேவதை மரண தண்டனை கொடுத்து விட்டதாக ஏற்றுக் கொள்வதே நடுநிலையாகும்.

     ராஜிவுக்கும் ராஜபக்சேக்கும் எந்த வேறுபாடும் கிடையாது. இருவரும் கொலைகாரர்களே!

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் ராமன்,

   மன்னிக்கவும். நான் உங்கள் கருத்தை ஏற்கவில்லை.

   நண்பர் “சக்தி” யின் பின்னூட்டத்தைப் பாருங்கள் – நியாயம் புரியும்.

   நான் மூத்த வழக்குரைஞர் ராம் ஜெத்மலானியின் வாதத்திலிருந்து
   ஒரு பகுதியை உங்களுக்காக கீழே தருகிறேன் –
   படித்துப் பாருங்கள் … உங்கள் மனநிலை மாறலாம்….

   “ஒரு குற்றத்துக்கு ஒரு தண்டனை தானே வழங்க முடியும் ?
   அவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
   ஆனால், தண்டனை நிறைவேற்றத்தை தள்ளிப்போடுவதன்
   மூலம் அதற்குள்ளாகவே அவர்கள் 5 ஆயுள் தண்டனையை
   அனுபவிக்க நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சிறையில்
   கழித்த ஒவ்வொரு நாளும் 5 நாட்களுக்கு சமம். மொத்தம்
   23 ஆண்டுகள் அவர்கள் சிறையில் மரண அவஸ்தையுடன்
   ஒவ்வொரு நொடியையும் கடந்திருக்கிறார்கள்.
   ஆறுக்கு ஆறு அளவுள்ள தனிமைச்சிறையில் ஒரு மனிதன்
   23 ஆண்டுகளைக் கழிப்பது எத்தனை கொடூரமான
   தண்டனை”.

   மேலும் இங்கு யார் வழக்கு – அதில் நியாயம் இருக்கிறதா –
   இல்லையா என்பதெல்லாம் தனியே விவாதிக்கப்பட வேண்டிய
   விஷயம்.

   இடுகையின் மையக்கருத்து தான் விவாதத்திற்குரியது.
   “தாமதங்களுக்கு – நீதிபதிகளும், நீதித்துறையின்
   நடைமுறை – செயல்பாடுகளும் – ஒரு முக்கிய காரணம்
   என்பது தான் மையக்கருத்து.
   உங்கள் வாதம் அதையொட்டித்தானே இருந்திருக்க வேண்டும் …?

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • ns raman சொல்கிறார்:

    I agreed with you main point on my first line. I do share your concern for common man.

    But difference in your view of supporting convicted criminals and terrorist attacks on innocents by taking law in their hand.

    For everey criminal and crime some ten guys will justify his action. Is it safe for a society?

    My final view is Judicial system can be questioned not views of judges.

 3. Pingback: கேளுங்கள் – இங்கே ஜட்ஜுக்கே நியாயம் கிடைக்கவில்லையாம் ….!!! | Classic Tamil

 4. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  அய்யா..எந்தக் குற்றத்தையும் நிரூபிப்பது கடினம். ஒருவரைக் குற்றவாளி என்று தீர்மானித்தால், அவர் குற்றவாளி இல்லை என்பதற்கும் ஆட்கள் உண்டு. அப்படி இருக்கும்போது, குற்றம் சாட்டப்பட்டவரின் குற்றத்தை நிரூபிப்பது காவல்துறையின் கடமை. வாய்தா, அது இது என்று காலம் ஓடிப்போகிறது. முதலில் இருந்த ஆர்வம் காவலருக்கு பின்பு இல்லாமல் போகிறது. ‘நாம் காவல்துறையை (பெரும்பாலானவர்கள் நேர்மையானவர்கள் என்று நான் நினைக்கிறேன்) மதிப்பதில்லை. அதனால் அவர்களும் கடைசி வரை அவர்களது கடமையைச் செய்ய இயலாது போகிறது. இதற்கிடையில், அரசியல்வியாதிகள் உள்ளே புகும்போது, காவலர் அவர்களது கடமையை அறவே செய்ய இயலுவதில்லை. உங்களுக்கும் எனக்கும் லஞ்சம் கொடுப்பது அட்டூழியம் என்று தெரிகிறது. 10 ரூபாய் லஞ்சம் கொடுத்தால் டிக்கட் கிடைக்கும் என்றால் உடனே தரத்தான் செய்கிறோம். (இது, நிலப் பட்டா மற்றும் எல்லாவற்றிற்கும் பொருந்தும்)

  இதே சிஸ்டத்தில்தான் நீதிபதிகளும் இருக்கிறார்கள். அவர்களாகத் தனி முயற்சியோடு எந்த வழக்கையும் எடுக்க முடிவதில்லை. அப்படி எடுத்தால், அதனால் affect ஆகும் அரசியல் கட்சி, அவருக்குச் சாயம் பூசி அவரின் முன்னேற்றத்தைக் கெடுத்துவிடும்.

  நிறையபேர் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி ஜெயிலில் இருக்கிறார்கள். பல வருடங்கள் கழித்து அவர்களின் குற்றம் நிரூபிக்கப்படாமல் வெளியே வருகிறார்கள். இதனை, unfortunate (or fortunate) என்றுதான் நாம் கடந்துசெல்ல வேண்டியுள்ளது.

  கருணை மனு, அரசியல் சம்பந்தப்பட்ட குற்றங்களுக்கு அனுப்பப்படும்போது, முடிவு, அரசியல் முடிவாகிறது. அதனால்தான் யாரும் முடிவெடுக்கப் பிரியப்படுவதில்லை. முடிவெடுத்தால், தன் முன்னேற்றத்தைக் காவு கொடுக்க வேண்டியிருக்கும்.

  தமிழ், தமிழினம் என்று கூவும் அரசியல்வாதிகள், ஏன், இதனை ஒரு demand ஆக வைத்துத் தன் ஆதரவைத் தருவதில்லை? 3 பேரை விடுதலை செய்தால்தான் அல்லது அந்தக் கருணைமனுவின் மீது உடன் முடிவெடுத்தால்தான் ஆதரவு என்று ஏன் சொல்வதில்லை?

  இதைச் சரிசெய்வது, அரசியல்வாதிகளின் கையில்தான் உள்ளது. நாட்டைப் பற்றிக் கவலைப்படும் அரசியல்வாதிகள் எல்லோரும் ஏற்கனவே இறந்துவிட்டார்கள் அல்லது இன்னும் பிறக்கவில்லை. அப்புறம் எப்படித் தீர்வு ஏற்படும்?

  • சக்தி சொல்கிறார்:

   கோபம் என்னவோ? சிரசாசனத்தில் இருந்து வெளிவரலாமே!
   கிரவேற்றர் படம் தலைகீழாக இருக்கிறதே!

   • srinivasanmurugesan சொல்கிறார்:

    ஹ்ஹஹா… அய்யா புகைப்படத்தை எப்படி நேராக்குவது என்று தெரியவில்லை.

    • today.and.me சொல்கிறார்:

     முதல்முறை காமைஜி கேட்டபோது பதில்வராததால், வவ்வாலை சிம்பாலிக்கா சொல்றீங்களோன்னு ….. தப்பா நினைச்சிட்டேன். 🙂

     • சக்தி சொல்கிறார்:

      சுலபமான வழி, கணினியில் உள்ள MS Paint இல் சென்று படத்தை 180 பாகை
      அளவிற்கு திருப்புங்கள். பின்னர் Login இல் சென்று புதிய படத்தை மாற்றி இணைத்துக் கொள்ளலாம்.
      இல்லையேல் login சென்று அங்கேயே வைத்து மாற்ற வேண்டும். சிறிது சிரமம்.

 5. D. Chandramouli சொல்கிறார்:

  On top of these, the courts and judges have long vacation time during some months of the year, when lakhs of case files are pending disposal. Then, there is a real tragedy of under-trial prisoners (including teenage children) languishing in jails across the country.

 6. vignaani சொல்கிறார்:

  லட்சக் கணக்கான வழக்குகள் தேங்கி இருப்பது நீதி மன்ற அமைப்புக்கு ஒரு இழுக்கு தான். அவற்றை குறைக்க வேண்டும் என்று நாள் தோறும் ஒரு நீதிபதியோ, அமைச்சரோ எங்கோ சொல்லிக் கொண்டே இருக்கின்றனர்; செய்தித் தாளில் பதிவு ஆகிறது. வேறு ஒரு உருப்படியான செயல் இல்லை.

  (2) Plea Bargaining : வழக்குகளின் விசாரணை குறைய இந்த முறை மிக உசிதமானது. உதாரணத்திற்கு, ராமன் கந்தனை முன் விரோதம் காரணமாக அடித்தான் என்ற வழக்கு; (1) ராமன், கந்தன் இருவரும் ஒருவரை ஒருவர் அறிந்தவர்; (2)இருவருக்கும் இடையில் கொடுக்கல் வாங்கல் இருந்தது; (3) ஒரு முறை ராமன் கொடுத்த பணத்தை கந்தன் திருப்பிக் கொடுக்கவில்லை; (4)அவர் நோடீசுகள் அனுப்பினார்; (5)நேரில் சந்தித்து திருப்பிக் கொடுக்க கேடு வைத்தார்; (6)மீண்டும் சந்தித்த போது சண்டை வந்தது;(7) கந்தனை ராமன் அடித்தார்; (8)கந்தனுக்கு காயம் ஏற்பட்டது; என்று ஒவ்வொரு விஷயத்தையும் ஆதார பூர்வமாக நேரில் கண்ட சாட்சி, ஆவணங்கள் துணையுடன் நிரூபிக்க வேண்டும். இதில் ஒரு சங்கிலி பிணைப்பு சரி இல்லை என்றாலும் அடித்தவர் தண்டனை இன்றித் தப்புவார். Plea Bargaining முறையிலே ராமன் வழக்கு நீதி மன்றத்துக்கு வந்தவுடன், தாம் குற்றத்தை ஒப்புக்கொண்டால் என்ன தண்டனை கிடைக்கும், அதைக் குறைக்க வேண்டி தம் காரணங்களை முன் வைக்க முடியும். அதாவது தண்டனை பற்றும் மட்டுமே விவாதம் நடக்கும்; சம்மதம் ஏற்பட்டால் தண்டனை வழங்கப்பட்டு வழக்கு முடிந்து விடும்.
  இந்த முறை இந்தியாவிலும் அங்கீகரிப்பட்டு விட்டது.
  Plea bargaining was introduced in India by The Criminal Law (Amendment) Act, 2005, which amended the Code of Criminal Procedure and introduced a new chapter XXI(A) in the code, enforceable from July 5, 2006.[28] It allows plea bargaining for cases in which the maximum punishment is imprisonment for 7 years; however, offenses affecting the socio-economic condition of the country and offenses committed against a woman or a child below 14 are excluded.[28]

  In 2007, Sakharam Bandekar case became the first such case in India where the accused Sakharam Bandekar requested lesser punishment in return for confessing to his crime (using plea bargaining). However, the court rejected his plea and accepted CBI’s argument that the accused was facing serious charges of corruption.[29] Finally, the court convicted Bandekar and sentenced him to 3 years imprisonment

  பத்து ஆண்டுகள் ஆன பின்னும் இது பாபுலர் ஆக வில்லை.

  (2) அரசு துறைகள் /அரசு நிறுவனங்கள் ஒன்றை ஒன்று வழக்கு போட்டு நீதி மன்ற நேரத்தை வீண் அடிக்கின்றன. உதாரணம்: அரசு வங்கிகள் செலுத்தும் வருமான வரி பற்றிய வழக்குகள் பல உயர்நீதி மன்றங்களில் பல ஆண்டுகளாகத் தொடருவது நான் கண்டிருக்கிறேன். ஒரு சின்ன க்ஷரத்தின் interpretation ஆண்டுக்கணக்கில் இழுக்கும். அரசு இது போன்ற வழக்குகள் எழா வண்ணம் வைத்திருந்த கமிட்டி இப்போது இல்லை.

  (3) தமிழ் நாட்டுக்கே பொருந்தும் காரணம் ஒன்று; வக்கீல்களின் வேலை நிறுத்தங்கள்!

  பூனைக்கு யார் மணி கட்டுவார் என்று தெரியவில்லை.

 7. இ.பு.ஞானப்பிரகாசன் சொல்கிறார்:

  இப்படித் தாங்களே பாதிக்கப்படுகிறோமே என உணர்ந்தாவது, இதன் பிறகாவது நீதித்துறையிலுள்ள ஓட்டைகளை அடைக்க இவர்கள் சட்டக் கலவையைக் கையில் தூக்கினால் வரவேற்கலாம். ஆனால், கண்ணுக்கெட்டிய தொலைவு வரை அப்படி ஏதும் தென்படவில்லையே! ஊரே பற்றியெரிந்தாலும் தன் சட்டைப் பையில் தீப்பிடிக்காத வரை எந்தக் கவலையும் படாமல் இருப்பது ஒரு வகை என்றால், தன் உடம்பிலேயே பற்றி எரிந்தாலும் அதற்காகத் தன்னால் என்ன செய்ய முடியும், எல்லாம் தலையெழுத்து எனக் கிடப்பது இன்னொரு வகை. படித்தவர்களும், அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் மேதாவிகளும் கூட இதற்கு விலக்கில்லை என்பதைத்தானே இந்த நிலைமை காட்டுகிறது?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.