மீண்டும் மீண்டும் ‘துக்ளக்’ கார்ட்டூன்கள் ……..

.

அதென்ன திரும்ப திரும்ப ‘துக்ளக்’ ஆசிரியர் சோ வுக்கு முக்கியத்துவம்
கொடுக்கிறீர்கள் என்று மீண்டும் சில நண்பர்கள் கேட்கும் முன்னர்
நானாகவே சொல்லி விடுகிறேன்.

பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், திரு.நரேந்திர மோடி – மிகச்சிறப்பாக
செயலாற்றுவார் என்று ஆசிரியர் சோ மிகவும் நம்பினார். தமிழகத்தில்
மோடிஜியை அறிமுகப்படுத்தியதிலும் சரி, பாஜகவில் அவரை
முன்னிலைப்படுத்தியதிலும் சரி – சோ வகித்த பங்கு முக்கியமானது.

மோடிஜியின் செயலாற்றல் – எதிர்பார்க்கப்பட்ட அளவு இல்லை
என்பதை நம்மைப் போலவே உணரும் ஆற்றல் சோவுக்கும் உண்டு.

இருந்தாலும், ஒரு தாட்சண்யம் காரணமாக, இவ்வளவு நாட்கள் பொறுமை
காத்தார். இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மோடிஜி அரசைப்பற்றிய
விமரிசனங்கள் துக்ளக்கில் வரத்துவங்கி விட்டன.

நாம் குறைகூறும்போதெல்லாம், சில பாஜக / மோடிஜி ஆதரவாளர்கள்
பொங்கி எழுகிறார்கள். எனவே, பாஜக ஆதரவாளரான ஆசிரியர் சோ’வே
வெளியிடும் இந்த கார்ட்டூன்களைப் பார்த்தால் – ஒரு வேளை
நாம் சொல்வதில் உள்ள நியாயம் அவர்களுக்குப் புரியலாம் என்கிற
ஒரு அல்ப ஆசை தான் எனது இந்த செயல்களுக்கு
பின்னாலுள்ள காரணம்….!!!

இனி – கீழே – நேற்று வெளியான சில ‘துக்ளக்’ கார்ட்டூன்கள் –

” வெளிநாட்டு கருப்புப் பணம் – கொண்டு வருவது குறித்து ” –

t1

” ஆர். எஸ். எஸ்., ஹிந்துத்வா அமைப்புகளின் தலையிடல் குறித்து ” –

t3

” தமிழ் நாட்டில் பாஜக கூட்டணி நிலை குறித்து ” –

t2

” வெளிநாட்டில் தலைவர் உளறிக் கொட்டியது குறித்து ” –

t4

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

17 Responses to மீண்டும் மீண்டும் ‘துக்ளக்’ கார்ட்டூன்கள் ……..

 1. K.Ganapathi Subramanian சொல்கிறார்:

  Dear KM Sir,
  You conveniently chose not to read the editorial of this Thuglak issue.
  Oh!. It is not in your priority !!!!!!!!!!!!

  Best regards

  Ganapathi Subramanian

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் கணபதி சுப்ரமணியன்,

   துக்ளக் வாங்குபவன் தலையங்கத்தை படிக்காமல் விடுவேனா…?

   சோ அவர்கள் மோடிஜியை ஆதரித்து எழுதுவது இயற்கை.
   அதனால் தான் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

   மோடிஜியை விமரிசித்து சோ அவர்கள் ஒரே ஒரு கார்ட்டூனை
   வெளியிட்டாலும் கூட – அது தான் செய்தி.

   (உங்களுக்குத் தெரியாதா – நாய் மனிதனைக் கடிப்பதா அல்லது
   மனிதன் நாயைக் கடிப்பதா – இரண்டில் எது அதிசயம் ….? )

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 2. drkgp சொல்கிறார்:

  Even after so many blips by this govt, if he remains dormant,
  people would stop reading his magazine. Hence an element of
  bussiness sense will also play a roll in his criticism.

 3. Pingback: மீண்டும் மீண்டும் ‘துக்ளக்’ கார்ட்டூன்கள் …….. | Classic Tamil

 4. LVISS சொல்கிறார்:

  Cho criticising the PM is not a surprise –We will get to see more of such cartoons in future issues – Like every one Cho has his opinions —
  Two examples of how the present govt functions is there for all to see –We are all aware how people were evacuated from Yemen in a systematic way , 4000 0f them from India and foreign countries —The PM acted swiftly before the situation got out of hand, ,spoke to Saudi King (if I am not wrong) and put General VK SIngh in charge of the operation –The world praised India for the way India evacuated Indians and foreign nationals from the war zone –A beautiful documentary about the operation was aired in a channel –The PM was full of praise for Gen VK Singh and Sushma Swaraj who was monitoring the situation from here regularly —
  People returning from earthquake with Nepal currency were being fleeced by touts They were being paid less than the actual amount – The matter was taken up with the PMO by the union minister Mr Pradhan ,who was deputed by the PM to go and coordinate the work , and within two hours SBI opened a counter to facilitate the exchange of Nepalese currency–
  The Spanish ambassador requested the PM to help in bringing Spanish citizens fro Nepal –74 were brought back — As far as earthquake affected places in India were concerned ministers were deputed to go to affected states immediately to oversee the rescue and rehabilitation work – Dr . Swaminathan has suggested that Kutch model should be followed for building houses in Nepal after the earthquake — -Kutch in Gujarat was devastated by earthquake in 2001 —
  There is a ocean of difference between saying that some body said something “inappropriate ” or that he “blabbered ” The latter word is associated normally with loose incoherent talk indulged by those inebriated –The PM was well within his rights to post the Indian diaspora with what transpired before he took over —They have a right to know why such a drastic change in govt took place —
  Coming to the cartoon the magazine says the PM should avoid talking like this in future ( ippadi pesuvathai ini thavirka vendum”) –It did not say he should stop “blabbering” —

  • K.Raamanathan சொல்கிறார்:

   For the information of Mr.LVISS and others:\

   8 core sectors production drops 0.1% in March; worst performance in 15 months
   ( Thursday, 30 April 2015 – 8:30pm IST | Place: New Delhi | Agency: PTI )

   Eight core industries registered a negative growth of 0.1% in March, the lowest performance in 15
   months, due to a steep decline in production of steel, cement and refinery products.

   The output had expanded by 4% in March 2014. The previous low logged by the core industries was

   in October 2013 at (-) 0.6%. The growth of eight core industries — coal, crude oil, natural gas, refinery

   products, fertiliser, electricity, steel and cement — was 1.4% in February 2015.

   For the full 2014-15 fiscal, the production growth of eight sectors also slowed down to 3.5%, from 4.2%

   in previous financial year ended in March, 2014. The eight sectors contribute 38% to the overall

   industrial production, a parameter that the Reserve Bank takes into account while framing its monetary

   policy.

   In March 2015, production of steel declined by 4.4% and of cement by 4.2%. Refinery products’ output

   contracted 1.3% while natural gas by 1.5%, according to the data released by the Commerce and

   Industry Ministry.

 5. K.Ganapathi Subramanian சொல்கிறார்:

  KM Sir,
  You really read this week’s editorial!!. It was not appreciative of Modi, but criticizing TN Government and a piece of soft advise to JJ.
  Cho has already several times pointed out some of shortcomings of Modi ( cartoons, Q&A and articles etc) but this is the first time, in the last 4 years , there is an editorial criticizing AIADMK government.

  yes, dog biting man is news So, Cho criticizing , even softly the T N Government is news , not his writing about Modi.

  Well, I understand that even if Cho criticize the present TN Government and their commissions and omissions are there for the whole world to see, KM ‘s priority will not change.

  Ofcourse, this is your blog and you have all the right to write whatever you like.

  Thanks once again

  Ganapathi Subramanian

 6. K.Ganapathi Subramanian சொல்கிறார்:

  Sorry, there is a correction.

  Man biting dog is news . So, Cho criticizing , even softly, the TN Government is news, but not his writing about Modi.

 7. Ramachandran. R. சொல்கிறார்:

  அய்யா திரு. கே.ஜி.சுப்ரமணியன்,

  எனக்கு எங்கள் பக்கத்தில் புழக்கத்தில் இருக்கும் சொல் ஒன்று நினைவிற்கு
  வருகிறது.
  ” எனக்கு ரெண்டு கண்ணும் போனாலும் பரவால்லை –
  எதிராளிக்கு ஒரு கண்ணாவது போகணும்”
  ஆக, மோடிஜியை குறை சொன்னாலும் பரவாயில்லை –
  அதிமுக ஆட்சியை குறை சொல்லி விட்டாரே அதுவே போதும்
  என்று சொல்கிறீர்கள்.
  உங்கள் மகிழ்ச்சி எமக்கும் மகிழ்ச்சியே.

 8. LVISS சொல்கிறார்:

  I do not know whether I am right in translating “thalayeedu ” as interference and “Kurukkeedu” as putting blocks on the way —
  Giving some time for the people to declare their black money was already there as voluntary disclosure scheme– Six months time will be given to voluntarily pay the taxes after which the provisions of the act will kick in — The new act may see some changes before it is finally passed \-we have to wait and see —

 9. Ganpat சொல்கிறார்:

  மீண்டும் சொல்கிறேன் மோடி ஒரு மர்ம மனிதர்.அவர் நோக்கு இப்பொழுது முழுவதும் வெளிநாடுகளை தன்னை மதிக்க வைப்பதில்தான் உள்ளது.ஓரிரு ஆண்டுகளுக்குப்பிறகு அவர் ஒரு வேளை உள்நாட்டு பிரச்சினைகளையும் பார்க்கலாம்.(என்று நம்புவோம்)

 10. புது வசந்தம் சொல்கிறார்:

  தொழிலாளர் தின நல்வாழ்த்துகள். இனி வெறும் வாழ்த்துகள் மட்டும் தான் மிஞ்சும் போல.
  நேற்றைய போராட்டம் குறித்த செய்தி அப்படித்தான் சொல்கிறது.

  “ஆப் கி பார் ….”, ஆமாம்… ஆப்பூ வைக்கிற ….

  மோட்டார் சட்ட மசோதா வந்தால் தெருவோரமாக உள்ள மெக்கானிக் கடை இல்லாமல் போகும், சின்ன வேலையானாலும் கம்பனிக்கு தான் போகணுமாம். பஞ்சர் ஆனா எங்க போறது ?. வெளியூர் போகும் போது வண்டி நடு வழயில் நின்றால் அருகில் இருக்கும் மெக்கானிக் உதவி பெற முடியாதாம், அதற்கும் கம்பெனி தான் வரணும். ரொம்ப நல்லாருக்கு….

  அப்போ நம்ம தெருவோர மெக்கானிக்கின் வாழ்வாதாரம் என்னாகும் ?. அதெல்லாம் நமக்கெதுக்கு.

  அப்புறம் இன்னொரு கூத்து, ஏற்கனவே நாம் வைத்திருக்கும் ஓட்டுனர் உரிமம் செல்லாதாம், ஏன்னா அது அரசு கொடுத்தாம். இனி அதற்கு பதிலாக, புதிய உரிமம் தனியார் கொடுக்க போறாங்களாம். பல்லு போன காலத்துலே புதுசா பரீட்சை எழுத பெரியவர்கள் தங்கள் பேரன்களுடன் பாடம் படிக்க தயாராகிறார்கள்.

  இந்தியாவில் கழிவறை பற்றாக்குறை பற்றித்தான். கழிவறை கட்ட கார்போரேட்களுக்கு அனுமதி வழங்கிவிட்டு, கட்டணம் ரூ 5/-க்கு பதிலாக ரூ50/- என்றால் என்னவாகும் நம் கதி. அடி வயிறு கலங்குகிறது.

  இன்று சன் தொலைகாட்சியில் தெனாலிராமன் படம், படத்தின் இரண்டாம் பகுதியை சற்று கவனமாக பாருங்கள். தெனாலி மன்னனிடம் மக்களைப் பற்றியும், மன்னர் பற்றியும் எடுத்துரைப்பது, அதன் பின் வரும் காட்சிகள் என…

 11. drkgp சொல்கிறார்:

  Mr LVISS,
  காதில் பூ சுத்த வேண்டாம்.
  BJP govt will never take any concrete step to bring the black money
  back . It will act in the same way as the previous govt for obvious
  reasons. ‘Hoarders of black money will have nowhere to hide ‘ – this
  is our FM’s roar. They are not hiding at all. They are out in the open.

 12. இ.பு.ஞானப்பிரகாசன் சொல்கிறார்:

  //நாம் குறைகூறும்போதெல்லாம், சில பாஜக / மோடிஜி ஆதரவாளர்கள்
  பொங்கி எழுகிறார்கள். எனவே, பாஜக ஆதரவாளரான ஆசிரியர் சோ’வே
  வெளியிடும் இந்த கார்ட்டூன்களைப் பார்த்தால் – ஒரு வேளை
  நாம் சொல்வதில் உள்ள நியாயம் அவர்களுக்குப் புரியலாம்// – போட்டீர்களே ஒரு போடு!

 13. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  மோடி பதவி ஏற்றதும், மந்திரிகளுக்கு “ப்ராக்ரஸ் ரிபோர்ட் கார்ட்” கொடுத்து அவர்களின் வேலைகளை கண்காணிக்கப்படும் என்று சொன்னது என்னாச்சு?
  (எனக்கு பழசெல்லாம் ஞாபகம் வருது ஏன்னு தெரியவில்லை)

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.