காவல் துறையில் ஒரு நல்ல நிகழ்வு …….

.

rockfort temple

திருச்சி வந்திருக்கிறேன். ஒரு நல்ல தகவல் கிடைத்தது.

தகவல் தொழில்நுட்பத்துறையில் ஏற்படும் வளர்ச்சிகளை பொதுமக்கள்
நலன் சார்ந்த அரசுத்துறைகளில் சரியாகப் பயன்படுத்தினால்,
எந்த அளவிற்கு அது மக்களுக்கு உபயோகமாக இருக்கிறது
என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு – ” ஹல்லோ திருச்சி போலீஸ் ” திட்டம்.

hello tiruchi police details

திருச்சி காவல் துறை – “ஹல்லோ திருச்சி போலீஸ்” என்கிற பெயரில்
ஒரு திட்டத்தை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறது.
94441 31100 என்கிற எண் 24 மணி நேரமும் தொடர்பில் இருக்கும்.
பொதுமக்கள், காவல்துறைக்கு தெரிவிக்க விரும்பும் எந்த செய்தி /
தகவலையும், இந்த எண்ணிற்கு தொலைபேசி மூலமோ,
“வாட்ஸப்” மூலமாகவோ தெரிவிக்கலாம்.

சாலை விபத்துக்கள், ஈவ்டீசிங், குடிபோதையில் கலாட்டா,
ரவுடிகள் தொல்லை, மணல் கடத்தல், முறைகேடான செயல்கள்,
பெண்களுக்கு ஏற்படக்கூடிய குடும்ப வன்முறைகள்,
குழந்தைகள் காணாமல் போதல், கடத்தல், சாலை போக்குவரத்து
பிரச்சினை/தடங்கல் – போன்ற
எத்தகைய விஷயங்களானாலும் சரி, இந்த எண்ணுடன் தொடர்பு கொண்டு
பொது மக்கள் யார் வேண்டுமானாலும் தகவல் அளிக்கலாம்.
தவறு செய்பவர் காவல் துறை சம்பந்தப்பட்டவராக இருந்தாலும் சரி –
எந்த புகாரானாலும் தைரியமாகக் கொடுக்கலாம். தகவல் கொடுப்பவர்கள்
பற்றிய அடையாளம் ரகசியமாக வைக்கப்படும்.

சரி இந்த தகவல் கிடைத்தவுடன் போலீஸ் எப்படி செயல்படுகிறது…?

இதற்காக கண்ட்ரோல் ரூமில் தனிப்பகுதி அமைக்கப்பட்டு,
24 மணி நேரமும் தொலைபேசி கவனிக்கப்படுகிறது.
“ஆல்பா டீம்” என்கிற பெயரில், ஒவ்வொரு டீமிலும் 2 காவல்துறை
அதிகாரிகள் வீதம் 16 டீம்கள் அமைக்கப்பட்டு, அவை ஷிப்ட் முறையில்
24 மணி நேரமும் செயல்படுகின்றன. ஒவ்வொரு டீமுக்கும் ஒரு
மோட்டார் சைக்கிள் ஒதுக்கப்பட்டுள்ளது.

தகவல் கிடைத்ததும், உடனடியாக அது சம்பவம் நிகழும் இடத்திற்கு
அருகில் இருக்கும் ஆல்பா டீமுக்கு தெரிவிக்கப்பட்டு, அவர்கள்
உடனடியாக விரைகின்றனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு எத்தகைய
நிவாரணம் தேவையோ, அதற்குத் தகுந்தாற்போல் உதவி கிடைக்கிறது.
அனேகமாக தகவல் கொடுத்த பத்து நிமிடத்திற்குள் பாதிக்கப்பட்டவருக்கு
உதவி கிடைக்கும் வண்ணம் இந்த திட்டம் செயல்படுகிறது.

ஒவ்வொரு புகாரும் பதிவு செய்யப்பட்டு, எடுக்கப்பட்ட
மேல் நடவடிக்கைகள் குறித்த விவரங்கள் அவ்வபோது மாவட்ட
காவல்துறை கண்காணிப்பாளரின் நேரடி பார்வைக்கு அனுப்பப்படுகின்றன.
எனவே, இதில் உடனடி கவனிப்பு உறுதிப்படுத்தப்படுகிறது.

பொதுவாகவே, காவல் துறையினரிடம் போவதில் பொது மக்களுக்கு
ஒருவித அச்சம், தயக்கம் இருக்கிறது. எனவே, பல சமயங்களில்
அதனைத் தவிர்க்கிறார்கள். இந்த திட்டத்தின் மூலம் நேரடியாக
காவல் நிலையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லாமலே
பல பிரச்சினைகள் தீர்க்கப்படுகின்றன. பல சமயங்களில்,
சரியான நேரத்தில், காவல்துறையினர் சம்பவ இடத்தில் இருந்தாலே,
பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்து விடுகிறது.

நல்ல திட்டமாக இருக்கிறதே – இதை காவல் துறை மற்ற
நகரங்களுக்கும் விரிவுபடுத்தினால் பயனுள்ளதாக இருக்குமே என்று
நினைத்து விசாரித்தேன். பார்த்தால், இந்த திட்டம் ஏற்கெனவே
ராமநாதபுரத்திலும், மதுரையிலும் இயங்கத்துவங்கி விட்டது என்று
தெரிந்தது. அங்கெல்லாம் அமர்க்களமான வரவேற்புடன்
நன்கு செயல்படுகிறது என்றும் தெரிய வருகிறது.

விரைவில் தமிழக காவல் துறை இந்த திட்டத்தை
அனைத்து நகரங்களுக்கும் கொண்டு செல்லுமென்று நம்புகிறேன்.

இரண்டு விஷயங்கள் குறித்து சொல்ல விரும்புகிறேன்.

ஒன்று – தொடர்பு எண் எளிதாக நினைவில் இருக்கும்படியாக
இருந்தால் நல்லது. பொது மக்கள் தொடர்பு எண்ணை தங்கள்
தொலை பேசிகளில் save செய்து கொள்வது சமயத்தில்
கைகொடுக்கும். ( எப்போது அவசியம் வரும் என்பது நமக்கே
தெரியாதே …! )

இரண்டு – பொது மக்களிடம் இத்தகைய வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருப்பது
குறித்து விரிவான அளவில் செய்திகள் போய்ச்சேர வேண்டும்.
விசாரித்துப் பார்த்தேன் – பலருக்கு இது குறித்து ஒன்றும் தெரியவில்லை.

சத்தே இல்லாத விஷயங்களை எல்லாம் விவாதித்துக் கொண்டிருக்கும்
தொலைகாட்சி விவாத மேடைகளில் – இந்த புதிய வசதிகளைப் பற்றி
விளக்கமாக எடுத்துக்கூறி, அது செயல்படும் விதம், மற்றும்
அதன் பலன்களைப்பற்றி எல்லாம் விவாதிக்கலாமே.

இந்த வசதிகள் உருவாக்கப்பட்டதன் முக்கியத்துவமும் பலனும்,
இது எந்த அளவிற்கு பொதுமக்களிடம் போய்ச்சேருகிறது என்பதைப்
பொருத்து தானே இருக்கிறது …!

இவ்வளவு செய்த காவல் துறையினர்
இதைச் செய்ய மாட்டார்களா என்ன ?
அவசியம் செய்வார்கள் என்றே நம்புவோம்.

வாழ்த்துக்கள் – இந்த திட்டம் உருவாக காரணமாக இருந்த
காவல் துறை அதிகாரி யாராக இருந்தாலும் – அவருக்கு…
அவருடைய டீமுக்கு….!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to காவல் துறையில் ஒரு நல்ல நிகழ்வு …….

 1. Siva சொல்கிறார்:

  Good initiative! As you suggested, they can have short phone number. Also, they need to record all calls so that it can serve as evidence later. I think they will do this.

  It gives me an impression that it is going to be a good program for safe and peaceful living in cities.

  In USA, each town/city police serve people in most emergency and urgent situations. It’s a first line of service for any urgent situations. This can be well adopted in our cities too.

  As we adopt many cell phone or other technologies from western model, we can also try to adopt some good plans.

 2. Pingback: காவல் துறையில் ஒரு நல்ல நிகழ்வு ……. | Classic Tamil

 3. LVISS சொல்கிறார்:

  Quite a lot of good things happen in our country around us -We can see them only if we want to see them –The choice is ours — But by nature we are extremely pessimistic and dont believe in our own strength and this is our weakness—
  In US they have one Universal Emergency Number 911 for all purposes –This also covers Canada if I am not wrong – -It will take some real hard work to make some thing like this in India because we dont speak the same language in all states –Each state can have one emergency number —

 4. today.and.me சொல்கிறார்:

  KMJi,check my mail in your gmail ac please.

 5. yarlpavanan சொல்கிறார்:

  சிறந்த கருத்துப் பகிர்வு
  தொடருங்கள்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.