மோடிஜி ஆட்சியில் ஒரு நல்ல திட்டம் …… ஆனால் ….?

National_Waterways_of_India

அண்மையில் மத்திய தரை மற்றும் நீர்வழி போக்குவரத்து அமைச்சர்
திரு நிதின் கட்காரி அண்மையில் ஒரு செய்தியாளர் சந்திப்பில்
சில விவரங்களை வெளியிட்டுள்ளார்.

இந்தியாவில் நீர்வழி போக்குவரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து,
பல புதிய நீர்வழித்தடங்களை உருவாக்குவதில் மத்திய அரசு
முனைந்துள்ளது.

ஏற்கெனவே 5 நீர்வழித்தடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, அவற்றிற்கான
வேலைகள் துவங்கி விட்டன. ( இதில் -கங்கை, பிரம்மபுத்ரா, மகாநதி,
ஒரு கேரள வழித்தடம் ஆகியவற்றுடன், தமிழ்நாட்டில் ஓடும்
பங்கிங்காம் கால்வாயும் உண்டு )

மேலும் 101 நீர்வழித்தடங்கள் அடையாளம் காணப்பட்டு, அவற்றை
போக்குவரத்துக்காக முறைப்படுத்தப்படுவதற்கான
சட்டம் விரைவில் பாராளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறவிருக்கிறது.
(அடுத்த வாரம் மசோதா விவாதத்திற்கு வரவிருக்கிறது ….)

இந்தியாவில் உள்நாட்டு போக்குவரத்தில், நீர்வழித்தடங்கள் இதுவரை
முனைப்புடன் செயல்படுத்தப்படவில்லை. சீனாவில் கிட்டத்தட்ட
47 % உள்நாட்டு சரக்கு போக்குவரத்து நீர்வழித்தடங்களின் மூலமே
நிகழ்த்தப்பட்டு வருகிறது – இது உலக அளவில் ஒரு சாதனை.
இந்தியாவில் தற்போது அது 3.3 % என்கிற அளவில் மட்டுமே
செயல்பட்டு வருகிறது.

நீர்வழி போக்குவரத்தில் என்ன வசதி – லாபம் என்றால் –

– தரைவழி போக்கு வரத்தில் ஒரு கி.மீட்டருக்கு ஒன்றரை ரூபாயும்,
ரெயில் போக்குவரத்தில் ஒரு கி.மீட்டருக்கு ஒரு ரூபாயும் செலவாகும்போது
நீரவழி போக்குவரத்தில் ஒரு கி.மீட்டருக்கு வெறும் 50 பைசா மட்டுமே
செலவாகும்.

– ஆயிரக்கணக்கான புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும்.

– சரக்குகளை ஏற்றி, இறக்க – புதிய கட்டுமான வசதிகள் உருவாகும்.

– சரக்கு போக்குவரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நோக்கோடு
உருவாக்கப்படும் புதிய வசதிகள், பயணிகளின் மலிவான பயண
வசதிகளுக்கும் உதவும். புதிதாக நீர் வழி சுற்றுலா திட்டங்களையும்
அறிமுகப்படுத்த முடியும்.

எனவே, எந்தவிதத்தில் பார்த்தாலும், இது மிகவும் நல்ல.
வரவேற்கத்தக்க ஒரு திட்டம் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

– அமைச்சர் சொல்லும்போது, அடுத்த 10 ஆண்டுகளில்,
சுமார் 5 லட்சம் கோடிகள் இந்தியாவின் நீர்வழி போக்குவரத்து துறையில்
முதலீடு செய்யப்படும் என்று கூறி இருக்கிறார்.

– அடுத்து அவர் சொன்ன விஷயம் தான்
கொஞ்சம் பயத்தை ஏற்படுத்தும் விஷயம் –

“நான் மற்றவர்களைப் போல் அல்ல. நினைத்ததை முடிப்பவன் –
சொல்வதைச் செய்து காட்டுபவன்….!
மஹாராஷ்டிராவில் நான் அமைச்சராகப் பணிபுரிந்த போது,
அரசாங்கத்திடமிருந்து வெறும் 10 கோடியை மட்டுமே பெற்றுக் கொண்டு,
என் சொந்த முயற்சியில் 4000 கோடிப் பணத்தை திரட்டி,
மொத்தம் 8,500 கோடி ரூபாய் பெறுமானமுள்ள வேலைகளை
இரண்டரை வருடங்களில் முடித்துக் காட்டினேன்.”

மஹாராஷ்டிராவில், பாஜக-சிவசேனா கூட்டணி ஆட்சி இருந்தபோது,
இவர் மாநில போக்குவரத்து மற்றும் பொதுப்பணித்துறை (PWD)
அமைச்சராக இருந்தார். மஹாராஷ்டிரா மாநிலத்தில் புதிய express way க்களை
உருவாக்கிய பெருமை இவருக்கு உண்டு.

ஆனால் – காண்ட்ராக்டுகளில் எக்கச்சக்கமாக ஊழல் புகார்கள் எழுந்தன.
எனவே, – “அதிலும்” – இவர் ஏற்கெனவே மாநில அளவில் “எக்கச்சக்கமாக”
புகழ் பெற்றவர். பல தொழிலதிபர்களுடனும், காண்டிராக்டர்களுடனும் “நல்ல”
நட்புறவுடன் இருப்பவர்.

எனவே, திட்டம் அருமையான திட்டம் என்பதில் எந்தவித
சந்தேகமும் இல்லை என்றாலும் –
எக்கச்சக்கமாக பணம் புழங்கப்போகும் ஒரு திட்டம் என்பதால் –
“எப்படி” நிறைவேற்றப் போகிறார் அமைச்சர் என்பதைக் குறித்து தான்
அச்சம் எழுகிறது.
மோடிஜி இந்த விஷயத்தில் தனிக்கவனம் செலுத்தி,
எந்தவித தவறுதல்களுக்கும் இடமின்றி “வெளிப்படையான” முறையில்
நடைமுறைகள் அமைவதை உறுதி செய்ய வேண்டும்.
ஒரு வலுவான மேற்பார்வை / தணிக்கைக் குழுவை அமைத்து
செயல்பாடுகளை எல்லா மட்டங்களிலும் தொடர்ந்து கண்காணித்துக்
கொண்டே இருக்க வேண்டும்.

நல்ல முறையில் செயல்படுத்தப்பட்டால் –
இது மிகவும் நல்ல, வரவேற்கத்தகுந்த திட்டம் …!

Gallery | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

மோடிஜி ஆட்சியில் ஒரு நல்ல திட்டம் …… ஆனால் ….? க்கு 5 பதில்கள்

  1. Pingback: மோடிஜி ஆட்சியில் ஒரு நல்ல திட்டம் …… ஆனால் ….? | Classic Tamil

  2. LVISS சொல்கிறார்:

    The Minister did speak about this project in a recent interview — There is one catch in this ie , getting Parliament approval- The bill will be tabled on May 5th I think It may have a clean passage in Lok Sabha But in Rajya Sabha one cant be sure –This may be dubbed as another project to help corporates —
    Among the waterways Buckingham Canal is included If we can see some progress in this we can gauge the success of this project-So many attempts have been made to clean this Buckingham canal but to no avail – Even in Ganga there is lot of improvement in Asisi Ghat in Varanasi – Some of these photos appeared in websites – So it gives some hope that even Buckingham Canal ( is it not called Cooum) too can be made navigable —
    Mr Gadkari experience as minister in Maharashtra was taken into consideration appointing him as minister for transport –There is some controversy even now about him — The PM has given instructions to beauracrats not to act on oral orders from ministers nor should ministers give any oral instructions —Let us hope all goes off well for the sake of the country —
    For the sake of the good of the nation let us hope the bill gets cleared – Main reason why we should welcome is the capacity of the project to generate jobs in various states -Satellite ports also have been planned

    http://www.deccanherald.com/content/475023/govt-table-inland-waterways-bill.html

    http://timesofindia.indiatimes.com/india/Swachh-Bharat-Modis-promise-of-cleaning-Varanasi-doesnt-appear-to-be-an-empty-one/articleshow/46811357.cms?intenttarget

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்பர் டுடேஅண்ட்மீ,

      பாஜக தமிழகத்தலைவர் பேசி இருப்பது சுத்த அபத்தம்.
      அவருக்கு தன்னம்பிக்கை இருந்தால், தஞ்சை மாவட்டத்தில்,
      அதை ஒரு பொதுக்கூட்டம் கூட்டி பேசிப் பார்க்கட்டும்…….

      பாஜக விஷயம் சாண் ஏறினால் முழம் சறுக்குகிறது.
      ஒரு திட்டம் நன்றாக இருக்கிறதே என்று யோசித்தால் –
      அதைச் சொல்லியே – இவர்கள் ஏகப்பட்ட கதைகள் விட
      ஆரம்பித்து விடுகிறார்கள்.

      நாளைக்கு – நிலம் கையகப்படுத்தும் விஷயம் குறித்து
      விரிவாக ஒரு இடுகையே போட்டு தனியே விவாதிக்கலாம் நண்பரே.

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

  3. srinivasanmurugesan சொல்கிறார்:

    இது நல்ல திட்டம்.இதனை தமிழ்நாட்டில் முழமையாக அதிரடி வேகத்தில் செயல்படுத்திட தமிழகத்தின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து செயல்பட வேண்டும். நிறைவேற்றப்பட்டால் நமது தண்ணீர் தாவாக்களும் தீரும். நடக்குமா?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.