மோடிஜியின் – ” விவசாய நிலத்தை பிடுங்கும் ” திட்டம் …….

agriculture-3

மக்களிடையே தோன்றியிருக்கும் கடும் எதிர்ப்பு காரணமாக மோடிஜியின்
“விவசாய நிலங்களைப் பிடுங்கும் ” திட்டத்தைப் பற்றி தமிழக பாஜக
தலைவர்கள் பேச பயந்து கொண்டிருந்தார்கள்.

agriculture 1

மத்திய அரசின் திட்டங்களைப் பற்றி – தமிழக மக்களிடம் விவரமாக
எடுத்துச் செல்லாததற்காக – சென்ற வாரம் மோடிஜி, தமிழக பாஜக
தலைவரை டில்லிக்கு அழைத்து “டோஸ்” விட்டிருக்கிறார்.

உடனே தமிழகம் வந்த பாஜக தலைமை –
“நிலங்களைப் பிடுங்கும்” திட்டத்திற்கு வக்காலத்து வாங்கி பலமாக
அறிக்கைகள் விடத்துவங்கியாகி விட்டது. இனி மற்ற மத்திய திட்டங்கள்
குறித்தும், பலமான “சவுண்டு” கேட்கும்.

எல்லா தநாபாஜக தலைகளும் இனி இது குறித்து பேசும்.
வாரக் கடைசியில் மத்தியிலிருந்து வேறு நிறைய “மாண்புமிகு” க்கள்
” சவுண்டு ” கொடுக்க தமிழகத்தில் வலம் வரப்போகிறார்கள்.

தநாபாஜக தலைமை விட்டிருக்கும் நீண்ட அறிக்கையிலேயே,
இந்த திட்டத்தின் மூலம் நிகழக்கூடிய பல பாதகங்களைப் பற்றிய
“சுய ஒப்புதல்கள்” இருப்பதைக் காணலாம்……

————–
அறிக்கையிலிருந்து –

// நாட்டின் வளர்ச்சிக்கு நிலம் தேவை. அனைவருக்கும் வீடு,
அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் வேலை, அனைவருக்கும்
கழிப்பறை – இவையெல்லாம் நிறைவேற்றபட வேண்டும் என்றால்,
நிலம் தேவை. சிறு, பெரு நகரங்களில், கிராமங்களில் உள் கட்டமைப்பு
வசதிகளை மேம்படுத்த நிலம் தேவை. நீர்பாசனத் திட்டங்கள்,
நெடுஞ்சாலைகள், இருப்புப் பாதைகள், தொழிற்சாலைகள்
அமைக்க நிலம் தேவை.//

……..

– உங்களுக்கு நிலம் தானே தேவை ….?
இந்த நாட்டில் நிலத்திற்கென்ன பஞ்சம்.
எக்கச்சக்கமாக இருக்கின்றன – தரிசு நிலங்கள் ….
எந்தவிதத் தடங்கலும் இல்லை – எவ்வளவு
வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்களேன்…

விளை நிலங்களை ஏன் பிடுங்குகிறீர்கள்….. ?
வீடு கட்டவும், கழிப்பறை கட்டவும், உள்கட்டமைப்பு வசதிகளைச்
செய்யவும், தொழிற்சாலைகள் கட்டவும் –
விளை நிலங்கள் தான் தேவை என்று கூறுவது யார் ….?
அடானியா …?
அம்பானியா….?
டாட்டாவா …?
இல்லை உங்களுக்கு வேண்டிய “மற்ற” தொழிலதிபர்கள் யாராவதா ..?

நீர்ப்பாசன திட்டங்களுக்காகவோ, மின் திட்டங்களுக்காகவோ,
அரசாங்கத்தின் திட்டங்களுக்காகவோ தேவையான நிலங்களை
எடுத்துக் கொள்வதில் யாருக்கும் ஆட்சேபணையே இல்லை.
அதற்கு ஏற்கெனவே இருக்கின்ற சட்டங்களே போதுமானவை…

விளைநிலங்களைப் பிடுங்கி –
தனியாரிடம்,
தங்களுக்கு வேண்டிய “பெரும்” தொழிலதிபர்களிடம் கொடுப்பதைத்தான்
மக்கள் எதிர்க்கிறார்கள்.

———————————-

அறிக்கை –

// விவசாய நிலங்களைப் பறித்துப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு
கொடுக்கப்போகிறோம் என்கிறார்கள்.
‘தரிசு நிலங்கள் மட்டுமே கையகப்படுத்தப்படும்.
மிக, மிக அவசியம், வேறு வழியே இல்லை என்றால்
மட்டும் 1 முதல் 2% வரை விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படும்’
என்றுதான் நாம் சொல்கிறோம்.//

……..

” மிக மிக அவசியம் ” என்கிற விஷயம் இங்கே எப்படி வரும்…?
புதிதாக குடியிருப்புக்களை, தொழிற்சாலைகளை, வர்த்தக நிறுவனங்களை
கட்ட விரும்பும் “பன்னாட்டு நிறுவனங்கள்” அதை எங்கு தரிசு நிலம்
இருக்கிறதோ, கிடைக்கிறதோ – அங்கே வைத்துக் கொள்ளட்டுமே….?
“பிடுங்காதே” என்று கதறும் விவசாயியிடமிருந்து
ஏன் வலுக்கட்டாயமாக பிடுங்க வேண்டும்…?

மேலும் மிக சகஜமாக 1% அல்லது 2% என்கிறார்…..!
எதில் 1 % அல்லது 2 %…?
நாட்டின் மொத்த நிலப்பரப்பிலா …?
இல்லை தாரை வார்க்கப்போகும் நிலத்தின் மொத்த பரப்பிலா ?

———————————
அறிக்கை –

// நிலம் அளிப்பவர் நீதிமன்றத்துக்குச் செல்ல முடியாது என்கிறது
புதிய சட்டம். ஆமாம். அதில் என்ன தவறு? //

…….
என்ன தவறு என்று கேட்கும் அளவிற்கு அகம்பாவம் ….!!!
நீங்கள் சென்னையில் குடியிருக்கும் வீட்டையும், மருத்துவ மனையையும்
பிடுங்கி அடானியிடமோ, அம்பானியிடமோ கொடுத்து விட்டு,
நீங்கள் அதை எதிர்த்து கோர்ட்டுக்கு போக முடியாது என்று ஒரு
சட்டம் வந்தால் – ஏற்றுக் கொள்வீர்களா …?

————————————————————————————————

நாட்டில் 65 % மக்கள் ஈடுபட்டிருக்கும் விவசாயத் தொழிலுக்கு,
இந்த அரசு ஆட்சிக்கு வந்த ஒரு வருடத்தில் எதாவது நன்மை
செய்திருக்கிறதா …?

தொழில் துறையை வளர்க்க “மேக் இன் இந்தியா” வில்
முனைப்பாக இருக்கும் அரசு,
இந்த நாட்டு மக்கள் அனைவருக்கும் சோறு போடும் மாபெரும்
பொறுப்பை ஏற்று உழைக்கும் விவசாயிகளுக்கு
எந்த விதத்திலாவது துணையாக நிற்கிறதா …?
விவசாய உற்பத்தி பெருக எந்த விதத்திலாவது உதவுகிறதா …?
புதிய நீர்ப்பாசன திட்டங்கள், புதிய அணைக்கட்டுகள்
எதாவது – குறைந்த பட்சம் பேப்பரிலாவது – உண்டா….?

நதிகளை இணைப்பதாகச் சொல்லி ஆட்சியைப் பிடித்த அரசு,
இதுவரை அந்த திக்கில் கடந்த ஒருவருடத்தில் சிறு துரும்பையாவது
கிள்ளிப் போட்டிருக்கிறதா …?

விவசாயிகளுக்கு தரமான, மலிவான உரம், விதைகள் – கிடைக்க
வழி வகை செய்வதைப் பற்றி யோசித்தது உண்டா …?

இப்போது – இருக்கும் நிலத்தையும் பிடுங்கப் பார்க்கிறது…..
விவசாயக் கடனுக்கான வட்டியை 3% லிருந்து 9% ஆக்கி விட்டது.
அனைத்து வசதிகளும், கட்டமைப்பு வசதிகளும் –
நகரங்களையும், துணை நகரங்களையும் குறிவைத்து தான்
செய்யப்படுகின்றன….

விவசாயிகள் புறக்கணிக்கப்படுவதன் காரணம், பின்னணி என்ன …?
“பெரும்” தொழிலதிபர்களுக்கும்,
“பெரும்” வர்த்தகர்களுக்கும் – செய்யப்படும் உதவிகளுக்கு
“பதில் மரியாதை” கிடைக்கும்….
“பிச்சைக்கார” விவசாயிகளிடமிருந்து என்ன கிடைக்கும் என்பது தானே …?

விவசாயத் தொழிலாளர்களை எல்லாம் கிராமங்களிலிருந்து
விரட்டினால் தான் – உருவாகக்கூடிய பெரிய தொழிற்பேட்டைகளில்
கூலித்தொழிலாளிகளாக வேலை செய்ய மலிவாக ஆட்கள் கிடைப்பார்கள்
என்பது தான் காரணமா …?

agriculture-2

விவசாயிகளை ஒழித்து விட்டு, அடிமைத் தொழிலாளிகளையும்,
தொழிற்பேட்டைகளையும் உருவாக்கினால் –
தின்னும் சோற்றுக்கு எங்கே போவது ….?
மக்கள் “போல்ட்-நட்களையும்” – “யந்திர உதிரி” பாகங்களையும்
உண்ண முடியுமா …?

125 கோடி மக்கள் உள்ள இந்த நாட்டில் –
10,000 பெருந்தொழிலதிபர்களும், வர்த்தகர்களும் மட்டும் வளர்ந்தால்
போதும் எனபது தான் புதிய அரசின் எண்ணமா …?

(நொடிக்கு நொடி – நாங்கள் தொழிலதிபர்களுக்கு எந்தவித
சலுகைகளும் கொடுப்பதில்லை என்று சொல்வது
இந்த குற்ற உணர்ச்சியின் விளைவு தானே …?)

பெரும் தொழிலதிபர்களுக்காகவும்,
பெரிய பெரிய வர்த்தகர்களுக்காகவும்,
பன்னாட்டு நிறுவனங்களுக்காகவும் – இந்த அரசு செய்பவற்றில்
நூற்றில் ஒரு பங்கை –

இந்த நாட்டின் விவசாயிகளுக்கு செய்தால் –
இந்த உலகத்திற்கே சோறு போடும் அளவிற்கு நமது உணவு உற்பத்தி
உயருமே – அரசு ஏன் அந்த கோணத்தில் யோசிக்கக் கூடாது …..?

மக்கள் எந்த அளவிற்கு இந்த “நில அபகரிப்பு” சட்டத்திற்கு எதிரான
உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருக்கிறார்கள் என்பதை பாஜக
தலைவர்கள் இன்னும் உணரவில்லை…..

மக்களின் இந்த கடும் எதிர்ப்பையும் மீறி சட்டத்தை
கொண்டு வந்தால் – விளைவுகளை அனுபவிப்பார்கள் ….
அவ்வளவு தான் சொல்ல முடியும் …

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

34 Responses to மோடிஜியின் – ” விவசாய நிலத்தை பிடுங்கும் ” திட்டம் …….

 1. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  ஏழை விவசாயிகள், ஏதுமறியாப் பழங்குடிகள், ஏதிலிகள் – இவர்கள் அரசின், அரசியல் கட்சிகளின் பகடைக் காயாக இருக்கிறார்கள். இந்த அரசியல்வியாதிகளை நல்லா அறையணும்போலிருக்கு. முதல் 3 வருடங்களை, விவசாயி மற்றும் விவசாயத்துக்கு மட்டும்னு செய்தால் நம் நாட்டுக்கு நல்லது. கோக், பர்கர், எரிவாயு கம்பனிகளுக்கு உழைத்தால், தலையில் துண்டைப் போட்டுக்கொள்ள வேண்டியதுதான். பா ஜா கா, நம் பாரம்பர்யத்தை உயர்த்தும் என்று எதிர்பார்த்தால், மதத்தைப் பற்றிப் பேசுவது, வாய்ச்சவடாலில் இறங்குவதுமாக இருக்கிறார்கள். காங்கிரஸை வீட்டுக்கு அனுப்பியது, மோடியைத் தேர்ந்தெடுத்தது, வளர்ச்சிக்குத்தான். அதை விட்டு விட்டு, இந்து மதத்தை மட்டுமே தூக்கிப் பிடித்தால், திருப்பி வரவே முடியாதபடியான தீர்ப்பை பா ஜா கா பெறும். மற்ற மதங்கள் மத மாற்றத்தையோ அல்லது மற்ற செயல்களையோ செய்வது பொறுத்துக்கொள்ள இயலாததுதான். ஆனால், முதலில் நம் வாழ்வு, அதை ஒட்டிய வளர்ச்சி முக்கியம். உணவு சாப்பிடும்போதெல்லாம் அதை நம்மிடம் கொண்டு சேர்ப்பதற்குப் பாடுபடும் விவசாயியை நினைக்காவிட்டாலும் பாதகமில்லை. அவனக் குழி தோண்டிப் புதைப்பதற்கான செயல்களில் இறங்கவேண்டாம்.

  • today.and.me சொல்கிறார்:

   நண்பரே, விவசாய நில அபகரிப்புப் பிரச்சினையைப் பொறுத்தவரை இன-மத-சாதி- மாநில-மாகாணப் பிரச்சினைகளை முன்னிறுத்துவது நல்லதல்ல.

   விவசாயி என்னும் ஒரு இனம், விவசாயம் என்னும் ஒரு சேவை, இவை இரண்டையுமே சாப்பிடும் அரசியல்வியாதி என்னும் அமீபாகொலைட்டீஸ். அவ்வளவுதான்.

 2. Siva சொல்கிறார்:

  Agriculture is backbone of human society / human living. Do not harm farmers. Already farmers are suffering from improper rain/water (climate change), middle-men cheating, high prices of agricultural input/labor cooli, poor govt policies on agricultural products etc.. Do not harm them any more. Leave them alone to continue their great service of cultivating foods for all.

  At this time in point, farmers are continuing to cultivate the food products for the sake of good social cause without much profit ( this was rightly quoted by a respected farmer, who participated in Sun TV Kutty chutties program with his grand son on 26/4/12015).

  Already lot of cultivable lands all along the highway roads are simply converted to real estate spits without any housing plan. People with black money or illegal money are engaged in non-functional Real estate business in India. They are never going to be perfect and useful businesses in India.

  Both federal and central governments should think about how to improve life standards of farmers as well other communities without affecting each other life-line.

 3. yarlpavanan சொல்கிறார்:

  சிறந்த திறனாய்வுப் பார்வை
  தொடருங்கள்

 4. MANI சொல்கிறார்:

  Modi could get only one MP from Tamilnadu, that too from a constituency with large number
  Hindu RSS group members that voted for him. So he is not bothered about whether Tamilnadu
  get its due water share from karnataka. All the agricultural lands between Mayuram and
  Thiruvarur have become residential plots with our acreage under kavery delta have
  come down drastically where as Karnataka by building Mekadathu dam brings more cultivable
  lands and the excess cauvery water is used for toilets purposes in the city of Bangalore,
  whereas Tamiliand are losing now even the flood waters. Long live India’s unity in
  diversity.

 5. bandhu சொல்கிறார்:

  இதற்கெல்லாம் ஒரே வழி.. உடனடியாக மிகப்பெரிய உணவுத் தட்டுப் பாடு , குறைந்த காலத்திற்கு, வந்தால் எல்லோரிடமும் ஒரு விழிப்புணர்வு வரும்.. வெறும் காசை வைத்துக் கொண்டு உணவில்லாமல் என்ன தின்பது? நாளையே பெரும்பாலான உணவுப் பொருட்களை இறக்குமதி செய்யவேண்டும் என்று வந்த பின், விலை பல மடங்கு உயராது என்று என்ன நிச்சயம்? ஒரு கிலோ அரிசி ஒரு லட்சம் என்ற நிலை வந்தால் எந்த அளவு காசு சேர்த்திருந்தாலும் உதவாதே!

  அது எப்படி மக்களை கொடுமைப் படுத்துவதில் எல்லா அரசியல் வாதிகளும் ஒரே மாதிரி இருக்கிறார்கள்?

  • today.and.me சொல்கிறார்:

   //உடனடியாக மிகப்பெரிய உணவுத் தட்டுப் பாடு , குறைந்த காலத்திற்கு, வந்தால் எல்லோரிடமும் ஒரு விழிப்புணர்வு வரும்//
   விழிப்புணர்வுக்காக பல கண்டிஷன்களைப் போடுகிறீர்களே, உங்கள் வேண்டுதல் பலிக்கவேண்டுகிறேன்.

   //ஒரு கிலோ அரிசி ஒரு லட்சம் என்ற நிலை வந்தால்// மனிதனை மனிதன் அடித்துச் சாப்பிடுவான். மாட்டுக்கறி தானே சாப்பிடக்கூடாது. :-((

   //அது எப்படி மக்களை கொடுமைப் படுத்துவதில் எல்லா அரசியல் வாதிகளும் ஒரே மாதிரி இருக்கிறார்கள்?//
   காசு, பணம், துட்டு, மணி,
   அதிகாரம், புகழ், விளம்பரம், எல்லாம் கலந்த கலவை.
   அரசியல்வியாதிகள்..

 6. Pingback: மோடிஜியின் – ” விவசாய நிலத்தை பிடுங்கும் ” திட்டம் ……. | Classic Tamil

 7. today.and.me சொல்கிறார்:

  உலக பத்திரிகையாளர் சுதந்திரதினத்தை ஒட்டி வெளியாகி உள்ள #GoHomeIndianMedia நேபாள-இந்திய செய்தியை,

  நேபாள மக்களின் தற்போதைய துயரத்திற்கு சற்றும் குறைந்ததல்ல இந்திய விவசாயிகளின் துயரம் என்பதை மனதில் கொண்டு,

  எப்பேற்பட்ட துயரத்தையும் தங்கள் விளம்பரமாக மாற்றும் பாஜகவின் குயுக்தியை அனைவரும் அறிய கீழே தந்துள்ளேன்.

  http://tamil.thehindu.com/world/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article7169759.ece?homepage=true&ref=tnwn

  //எங்களுக்கு இந்தியா செய்து வரும் உதவிகளுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளோம்.

  ஆனால், சில இந்திய ஊடகங்கள் இந்த துயரை ஏதோ இந்திய அரசாங்கத்தின் சார்பிலான மக்கள் தொடர்பு சேவை போல் செய்து வருவது வேதனையளிக்கிறது. //

  //நேபாளத்தின் மூத்த பத்திரிகையாளர் அஜய் பத்ரா கனால் கூறும்போது, “இந்திய ஊடகங்கள் நேபாள நிலநடுக்க மீட்புப் பணியில் இந்திய அரசின் பங்கை மட்டும் உயர்த்திச் சொல்லிக் கொண்டு இருப்பது நேபாள மக்கள் மத்தியில் இந்திய அரசாங்கத்தின் மீதான பார்வையை பாதித்துள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார். //

  ஆபத்திலேதான் உண்மையான நண்பனை அறியமுடிகிறது.
  இதை இப்போது நேபாள் மக்கள் நன்கு புரிந்துள்ளார்கள்.

  இந்திய மக்கள் எந்த ஆபத்தைச் சந்தித்து இதை உணரப்போகிறார்கள் ?
  விளைநிலமே இல்லாமல்
  விவசாயிகள் கூலித்தொழிலாளிகள் ஆனபின்பு
  பால் எப்படிக் கிடைக்கிறது என்ற கேள்விக்கு பால்பாக்கெட்டிலிருந்து என்று சொல்லுவதைப்போல
  உண்ணும் உணவு எப்படிக் கிடைக்கிறது என்ற கேள்விக்கு
  மக்ரூனியாகவோ நூடுல்ஸாகவோ பாஸ்தாவாகவோ கிடைக்கிறது,
  அரிசியா? ஏதோ மாவிலிருந்து குட்டிக்குட்டியாக உருட்டித் தயாரிக்கப்படுகிறது என்று சொல்லும் நிலை வந்தபின்பா???

  சோற்றாலடித்த பிண்டங்களே, விவசாயி சேற்றில் கால்வைக்காவிட்டால் நீங்கள் எப்படி சோற்றில் கை வைப்பீர்கள்? வந்து பதில்சொல்லி, உங்கள் தலைவருக்கு வக்காலத்து வாங்குங்களேன்?

  ஆனால் தமிழில் சொல்லுங்கள். அப்போதுதான் ஆங்கிலம் தெரியாத கடைமடை விவசாயிகள் வரை உங்கள் கருத்துக்கள் சரியாகப் போய்ச்சேரும். நீங்கள் நேரில் செல்லும்போது அவர்கள் செய்யும் பதில்மரியாதையும் உங்களுக்கு சரியாகக் கிடைக்கும்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   கண்ணதாசன் வனவாசத்தில் சொல்லி இருந்தார் ….

   சாவு வீட்டிற்குப் போனால் கூட, தான் தான் அங்கு நாயகனாக
   இருக்க வேண்டுமென்று நம் ஊர் தலைவர் விரும்புவாரென்று.

   மோடிஜியும், பாஜக ஜால்ராக்களும்
   அதையும் மிஞ்சி விட்டனர் நேபாளத்தில்.
   எல்லாரும் வெளியே போய்த்தொலையுங்கள் என்று
   கழுத்தைப்பிடித்து தள்ளாத குறையாக
   வெளியேற்றுகிறார்கள் –
   சாவு வீட்டில் கூட சுயபிரதாபமா …?
   சே…..

 8. today.and.me சொல்கிறார்:

  அன்பின் காமை,
  எதற்காக வள்ளுவர் இந்தக் குறள்களை எழுதினாரோ, விவசாயிகளுக்கு இதெல்லாம் தெரியுமோ இல்லையோ, தபாஜகவினருக்குத் தமிழ்தெரிவதால் இவையும் தெரிந்திருக்கும். அதனால் அவர்கள் தங்கள் தலையிடம் கொஞ்சம் எடுத்துச்சொன்னால் தேவலை. அடுத்ததலைமுறை இந்தியர்களின் நிலையை சற்று யோசித்துப்பார்த்தாலே கண்களில் கண்ணீர் கோர்க்கிறது. விவசாய நாட்டைப் பற்றி, விவசாயிகளைப் பற்றி தமிழிசையைவிட பாஜகவினரைவிட இவ்வளவு கேவலமாக யாரும் மதிப்பிடமுடியாது. அதேநேரம் அவர்கள் ஒவ்வொருவேளையும் இந்தியாவின் எந்தமூலையில் விளையும் தானியத்தால் செய்த உணவைச் சாப்பிடுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

  சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
  உழந்தும் உழவே தலை.

  உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும் ஏர்த் தொழிலின் பின் நிற்கின்றது, அதனால் எவ்வளவு துன்புற்றாலும் உழவுத் தொழிலே சிறந்தது.

  உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
  எழுவாரை எல்லாம் பொறுத்து.

  உழவு செய்ய முடியாமல் உயிர் வாழ்கின்றவர், எல்லாரையும் தாங்குவதால், உழவு செய்கின்றவர் உலகத்தாற்கு அச்சாணி போன்றவர்.

  உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
  தொழுதுண்டு பின்செல் பவர்.

  உழவு செய்து அதனால் கிடைத்ததைக் கொண்டு வாழ்கின்றவரே உரிமையோடு வாழ்கின்றவர், மற்றவர் எல்லோரும் பிறரைத் தொழுது உண்டு பின் செல்கின்றவரே.

  பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்
  அலகுடை நீழ லவர்.

  நெல் வளம் உடைய தண்ணளி பொருந்திய உழவர், பல அரசரின் குடை நிழல்களையும் தம் குடையின் கீழ் காணவல்லவர் ஆவர்.

  இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது
  கைசெய்தூண் மாலை யவர்.

  கையால் தொழில் செய்து உணவு தேடி உண்ணும் இயல்புடைய தொழிலாளர், பிறரிடம் சென்று இரக்கமாட்டார், தம்மிடம் இரந்தவர்க்கு ஒளிக்காமல் ஒரு பொருள் ஈவார்.

  விவசாயிகளே, நிலத்தைக் கேட்டார்கள் என்று கொடுத்துவிடாதீர்கள். பின்பு நாங்கள் சாப்பிடமுடியாது. ஒருவகையில் நாங்களும் உங்களிடம் நிலத்தைக் கொடுங்கள் என்று கேட்பவர்களும் உண்ணவேண்டுமே என்று சுயநலத்தினாலும்தான் சொல்லுகிறோம். எங்களைப் பட்டினிபோட்டுவிடாதீர்கள்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர்களே,

   நான் எழுதும் இடுகைகளால் என்ன பலன்
   கிடைக்கப் போகிறது என்று எண்ணும் சில நண்பர்களுக்கு –

   அருமையான தமிழில் எவ்வளவு அழகழகான
   கருத்தூட்டங்கள் கிடைக்கிறது பாருங்கள் என்று சொல்லுவேன்.
   நன்றி.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 9. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  அரசியல்வாதியிடம் அரிசியல் பற்றி பேசினால் எப்படி புரியும் காமைஜி?

  • Ramachandran. R. சொல்கிறார்:

   அவர்களிடம் பேச வேண்டிய விதத்தில் பேசினால்
   புரிய வைக்கலாம் சார்.

  • today.and.me சொல்கிறார்:

   ‘அரிசியல்’
   அறிமுகத்திற்கு நன்றி அஜீஸ்ஜி.

 10. LVISS சொல்கிறார்:

  The Nepalese did not find fault with the govt but with a section of the Indian media which covered the earthquake- –They were unhappy that media were interviewing the affected people by asking them to talk -Not only India 33 other countries also have been asked to leave the country and they have given a reason for it also –Now comes the clarification that the rescue operation is over and rehabilitation work will go on –Which means our team team will stay on and help in this –The news was based on twitterati messages by the people “#Go Home Indian MEDIA ” (not our rescue team -) The Nepal govt has asked the countries to remove their “first response teams ” -How we twist news to suit our prejudices is really amazing —
  There was reference to the tweets by our PM Here is a link which might clear the air on this —
  http://zeenews.india.com/news/india/nepal-pm-came-to-know-about-earthquake-from-narendra-modis-tweets_1586733.html

  • today.and.me சொல்கிறார்:

   நாம் இதை ட்விஸ்ட் செய்யவில்லை.
   பாதிக்கப்பட்டவர்களின் கூக்குரல் இது.

   நான் சொல்லித்தான் நேபாள் பிரதமருக்கே நேபாள நாட்டுக்கு பூபகம்பம் வந்தது தெரியும் என்கிற மாதிரியான ஒரு அறைகூவலுக்கு எதிரான கூக்குரல் இது.

   அது உண்மையாகவே கூட இருந்திருக்கலாம். ஆனால் நான் …. நான் … என்கிற அகம்பாவம். அது தன்னையே அழித்துவிடும் என்பது உங்களுக்குத் தெரியவில்லை. தெரியும்நாளும் வெகுதூரத்தில் இல்லை நண்பரே.

  • Ramachandran.R. சொல்கிறார்:

   For the information of Mr.LVISS:

   This is from CNN/IBN news article :-
   ———
   An article in Telegraph Nepal says, “More than one thousand relief workers and helicopters filled with emergency relief materials have arrived Nepal. Referring to a Nepal Army Source writes Adhikari for Kantipur, the search and rescue operation (considering the size of their team) has not been satisfactory. The Nepali side is not happy with their performance as there has been much hype to their support than substance.”

   It added that, “The Nepali side is of the view that since the Indian rescue team is only focused on providing relief to their own people their performance has not been satisfactory.”


   However, given the self congratulatory tone and back patting that Indian media and social media indulged in after the tragedy, one cannot also blame the Nepalis for pointing out that not everything was as wonderful as India claimed it to be.

   The lesson out of all this is a complex one. India needs to keep helping and extending aid. But it needs to lose the self congratulatory jingoism that comes with it.

 11. LVISS சொல்கிறார்:

  As one who worked in a village for about 3 years I tend to concur with the view that agriculture is no more a lucrative occupation–One crop failure is enough to shatter the whole pattern of cropping – The farmers begin to fear about their loans not getting repaid -This I think is where the govt and banks can help alleviate the fear of the farmers –As soon as the crop fails in a particular area a loan waiver scheme should be announced so that the farmers wont feel guilty of not repaying the loans – This will also prevent suicides – The older generation do the work on the field The younger generation prefer to go to the nearby bigger towns and semi urban towns in search of jobs or better still go abroad to to any work — If jobs could be provided near the rural villages why would they migrate to cities —
  The dams and other infrastructure were built in early years were built on lands –They were not built in the air- Does any one know the compensation paid to the land owners in cases where the lands were acquired —
  Today there is a news in Times of India that the Gujarat Govt has proposed a joint ventures with farmers under the new industrial policy – “Farmers will be made equity and profit partners in proportion to their land holding”

 12. vignaani சொல்கிறார்:

  நிலங்களைக் கையகப்படுத்தும் சட்டமும் ஈழப் பிரச்னையில் ஓலமிட்டது போல் ஒரு பக்கக் கூச்சல் ஆகி விட்டது.

  அந்தப் பக்கத்தின் நியாயங்களைப் பேசினால்,–இல்லை– பேசத் துவங்கினால், மோடி பக்தர்கள் என்று வசவு/கேலி.
  :
  ஒன்றே ஒன்று சொல்ல முயல்கிறேன்: : இயந்திரமயம் அதிகரித்ததனாலும், நீர் ஆதாரம் சுருங்கி வருவதாலும், உலக மயம் போன்ற அணுகுமுறைகளாலும், விவசாயத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் எண்ணிக்கை குறைய வேண்டும்; அல்லது இன்னும் அதிகம் ஆகாது இருக்க வேண்டும். வளர்ந்து வரும் கிராம மக்கள் தொகை நகரம் நோக்கி நகர வேண்டிய கட்டாயம்.

  அவர்களுக்கு வேலை வாய்ப்புக்கள் தொழிற்சாலைகளிலும், சேவைத் துறையிலும் தான் பெருக வாய்ப்பு அதிகம்; ஆகவே தொழில் பெருக வேண்டும்; புதிய தொழிற் கூடங்கள் வர வேண்டும் — GDP யில் விவசாயத்தின் பங்கு தொடர்ந்து குறைந்து வருவது நாம் அறிந்ததே.

  விவசாயத்தைச் சார்ந்த தொழில்கள் வரலாம் தான் (பழங்களைப் பதப் படுத்துதல், காய் கறிகள் சேமித்து வைக்க குளிர் சாதனங்களுடன் பண்டாரங்கள், விவசாயப் பண்டங்களை ஆதாரமாக வைத்த ஏற்றுமதிகள் முன்னுரிமை பெற வேண்டும்.) நீர் வசதி இல்லாத தரிசு நிலங்களில் என்ன தொழில் துவங்க முடியும்? அப்படித் துவங்க முடியுமானால் புது தொழில்களில் பாதி ராஜஸ்தானிலும், மீதியில் பாதி தெலங்கனா/மரட்வாடா/தமிழகத்தில் நிச்சயம் வரும்.

  என்னென்ன தொழில்களை வளர்க்கலாம் முன் உரிமை அளிக்கலாம் என்று அணுகுமுறை நல்லது தான்; அது தான் 1991 வரை லைசென்ஸ்-பெர்மிட் ராஜ் என்று இருந்தது. அரசு அலுவலர்களின் லஞ்சக் கலாச்சாரத்தால் அது எதிர் பார்த்த நன்மைகளை அளிக்கவில்லை. தாரள மயம் அதன் விளைவே.

  Certainly what is required is a balance: land that should be left to continue agriculture and allied sector and for non-agricultural use.

  முடிக்கும் முன் ஒரு விண்ணப்பம்; இது மதிப்புக்குரிய பதிவருக்கும் சேர்த்து; நிலங்களை “தாரை” வார்ப்பது என்று எழுத வேண்டாம்.

  நான் Ayn Rand பக்தன் அல்லன்: எனினும், அவர் நூல்களில் ஒன்றில் விவரிக்கும் “தொழில் முனைவோர்கள் வேலை நிறுத்தம்” செய்தால் நாட்டின் நிலை என்ன என்று ஒரு கணம் சிந்திப்போம்.

  • Siva சொல்கிறார்:

   If industrialist go for strikes, he will loose hefty amount than labors. Are you not aware of it?

   What kind of industries are you planning to build in India? I do not know how many big industries are built by current businessmen of India? How many jobs they created so far in industries alone? (Do not count for office rooms and computer related works). I need the real picture on big insults tries that offer employment for how many Indians? If any one give justifiable data, I can support for land acquisition for industries.

   • LVISS சொல்கிறார்:

    If there is a strike in industries a negotiation with workers is to resolve the problem is possible–If nature fails or acts indifferently with whom will we negotiate —

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     நண்பர் எல்விஸ்,

     எந்த இண்டஸ்ட்ரீ வேலை நிறுத்தம் செய்தாலும் –
     எவ்வளவு நாட்கள் வேலையை நிறுத்தினாலும் –

     மனிதருக்கு மிகவும் அவசியமான –
     காற்று, நீர், உணவு ஆகியவை இருந்தால் போதும் –
     எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் தாக்குப் பிடிக்கலாம்.

     நீரும், காற்றும் – இயற்கை வஞ்சமின்றி கொடுப்பது.
     உணவு – விவசாயி பூமித்தாயின் கருணையால் விளைவிப்பது.

     இந்த உணவு இல்லாமல் உங்களால் எவ்வளவு நாட்கள்
     உயிருடன் இருக்க முடியும்…?

     எனவே, எதை வேண்டுமானாலும் நிறுத்தலாம் –
     ஆனால், உணவு பயிரிடுவதை மட்டும்
     நிறுத்தினால் – மனிதர் உயிர் வாழவே முடியாது.

     எனவே, விவசாயத்திற்கு முன்னுரிமை கொடுத்து,
     அந்த விவசாயிக்கு நம்பிக்கையை ஊட்டி,
     அதற்கு வேண்டிய நீர்ப்பாசன வசதிகளை செய்து கொடுத்து,
     நல்ல வீரியமுள்ள விதைகளை பாதுகாத்து கொடுத்து,
     மலிவான விலையில் உரங்கள் கிடைக்க வசதி செய்து,
     உணவுப் பொருட்களின் உற்பத்தியை பன்மடங்கு
     பெருக்குவதில் தான் அரசாங்கம் முதலில் கவனத்தை
     செலுத்த வேண்டும்.

     “மேக் இன் இந்தியா” வும் “புல்லட் ட்ரெயினும்”
     உங்கள் உயிரைக் காப்பாற்றாது.

     மோடிஜியின் மீதுள்ள மோகத்தினால்,
     நீங்கள் மீண்டும் மீண்டும்
     தவறான வாதங்களையே முன்வைக்கிறீர்கள்.

     நீங்கள் இந்த மாதிரி விடாப்பிடியாக
     பொருத்தமில்லாத உதாரணங்களை எல்லாம்
     காட்டிக் கொண்டிருப்பது உங்கள் பின்னூட்டத்தை
     மதிப்பிழக்கச் செய்கிறது.

     -வாழ்த்துக்களுடன்,
     காவிரிமைந்தன்

     • today.and.me சொல்கிறார்:

      KM ji,
      //மலிவான விலையில் உரங்கள் கிடைக்க வசதி செய்து,
      உணவுப் பொருட்களின் உற்பத்தியை பன்மடங்கு
      பெருக்குவதில் தான் அரசாங்கம் முதலில் கவனத்தை
      செலுத்த வேண்டும்.//

      இதற்கு என்ன செய்யவேண்டும் என்று மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்காரி கூறுகிறார்.

      இந்தி தெரிந்தவர்கள் என் ஜாய் பண்ணலாம்.
      தெரியாதவர்களுக்கு க்ளூ கொடுக்கலாம்

  • LVISS சொல்கிறார்:

   You are absolutely right sir -We approach every issue emotionally and with deep suspicion about the motive of the government , whichever government that is in power —

   • ராஜேந்திரன் சொல்கிறார்:

    Mr. LVISS,

    உங்களுக்கு மோடி புகழ் பாடுவதை தவிர வேறு எதுவுமே
    தெரியவில்லை . எவ்வளவு தவறுகள் நேர்ந்தாலும் கண்ணை மூடிக்
    கொள்கிறீர்கள். எங்கெங்கே மோடியை புகழ்ந்து அல்லது ஆதரவாக எழுதி இருக்கிறார்கள் என்று தேடித்தேடி படிப்பீர்கள் போலிருக்கிறது.
    திரும்ப திரும்ப இப்படி எழுதுவது உங்களுக்கே கேவலமாக இல்லை ?
    பாஜக வில் தீவிர உறுப்பினராக இருக்கிறீர்களா ?
    காவிரிமைந்தன் உங்களுக்கு இங்கு இனாமாக ஏன் விளம்பரம்
    கொடுக்கிறார் என்று தெரியவில்லை. சொல்லப்படும் கருத்துக்களை
    மறுதளிக்காமல், புதிய பஜனையை பாடிக்கொண்டே போகிறீர்களே.
    முதலில் தமிழில் எழுதப் பழகுங்கள் சார். அந்த முயற்சியை கூட
    செய்யாமல் என்ன மோடி பஜனை ?

  • today.and.me சொல்கிறார்:

   //விவசாயத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் எண்ணிக்கை குறைய வேண்டும்; அல்லது இன்னும் அதிகம் ஆகாது இருக்க வேண்டும்//
   தின்னும் சோற்றுக்கு எங்கே போவது ….?
   மக்கள் “போல்ட்-நட்களையும்” – “யந்திர உதிரி” பாகங்களையும்
   உண்ண முடியுமா …?
   அல்லது கேஎப்சியைப் போல வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து அதை நம்நாட்டு விளைநிலங்களில் உருவாக்கிய குளிரூட்டப்பட்ட பண்டாரங்களில் சேமித்துவைத்து கடனட்டை வைத்திருப்பவர்களுக்கு வட்டியில் கொடுத்து சாப்பிடச்சொல்லலாமா?

   //நீர் வசதி இல்லாத தரிசு நிலங்களில் என்ன தொழில் துவங்க முடியும்? //
   தரிசு நிலங்களில்தான் மற்ற தொழிகள்கள் செய்யவேண்டும்.
   நீர் ஆதாரம் இருக்கும் இடங்களில் உழவே தலை.
   இ்தை எப்போதுதான் உணர்வீர்கள். ஆமாம், தெரியாமல்தான் கேட்கிறேன், இப்போது எதைச் சாப்பிட்டு உயிர்வாழ்கிறீர்கள்?

   //தொழில் முனைவோர்கள் வேலை நிறுத்தம்” செய்தால் நாட்டின் நிலை என்ன என்று ஒரு கணம் சிந்திப்போம்.//
   நீங்கள் தொழில் முனைவோர் என்றால் மிகப்பெரிய நஷ்டம் வரும், கூலி வேலைக்கு வரும் (விவசாயக்)கூலிகளை வராதே என்பீர்கள். அவர்கள் வயிற்றில் அடிப்பீர்கள். கும்பிகாய்ந்தால் நாலுகழித்து தானாகவே வந்து உங்கள் காலில் விழுவான். அவ்வளவுதானே. அதுவரை நீங்கள் இறக்குமதியில் வந்த பீட்ஸாவையும் பர்கரையும் கெல்லாக்ஸ்யும் சாப்பிட்டு புளிஏப்பம் விட்டுக்கொண்டிருப்பீர்கள்.

   நிலப்பரப்பு மிகவும் குறைவாக உள்ள, விளையும் தரம் கெட்டுப்போன, அணுகுண்டுவீச்சுக்குப் பின் பாழ்ப்பட்டுப் போன ஜப்பானே, தன் நாடு நிறைவடையவேண்டுமானால் முதலில் உணவுத் தட்டுப்பாடு நீங்க என்ன செய்யவேண்டும்என யோசித்து, கடல் பரப்புகளில் கெட்டுப்போன கப்பல்களை நிறுத்தி மண்ணை நிறைத்து விவசாயத்தினால் செழித்த நாடு.

   கற்றுக்கொள்ளவேண்டியது நிறைய இருக்கும்போது, அதிகாரததினால் வந்த செருக்குக்கு மக்கள் திருப்பிக்கொடுப்பார்கள். அனுபவிக்கத் தயாராகுங்கள்.

 13. D. Chandramouli சொல்கிறார்:

  What is really disturbing is that the affected parties cannot even go to courts. Can the government take away the people’s right to resort to legal means? Btw, in my younger days, I lived near Tiruvarur and for vacations, I used to visit my uncle in Sriramasamudram village (where I was born) near Trichy. After decades when I visited both the places recently, my heart sank at the sight of barren village tanks, Siva temple built by Cholas flattened with not even a brick left, the full flowing ‘akanda kaveri’ in my birth place now looking like only a canal, and the villagers walking like robots! Of course, good roads have been laid, buses ply with some connectivity, tv/mobile phones in many houses – but the soul of the villages seems terribly missing. Don’t know where are we heading!

 14. புது வசந்தம் சொல்கிறார்:

  இங்கு திருக்குறளை அறிந்தும் அறியாதவர்கள் போல கட்சி போர்வைக்குள் மறைந்து கொள்கிறார்கள்.

 15. கிரி அனகை. சென்னை. சொல்கிறார்:

  ”அதுதான் குறைந்த விவசாயிகளே உள்ள டில்லியில் புரியவைத்து விட்டார்களே” .இனி டில்லி முடிவே மற்ற இடங்களிலும் தொடரும் ..

 16. புது வசந்தம் சொல்கிறார்:

  இன்றைய ஆனந்த விகடனில்,
  http://www.vikatan.com/news/article.php?aid=46097
  http://www.vikatan.com/news/article.php?aid=46093
  மேலும், வரும் மே 14 முதல் மறுபடியும் வெளிநாடு சுற்று பயணம்….

 17. LVISS சொல்கிறார்:

  I wont be making any comment hereafter or visiting the blog —

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.