குஜராத்தின் “சீப் ” மினிஸ்டர் – மறைக்கப்பட்ட உண்மைகள் – CAG அறிக்கை வெளிப்படுத்துகிறது …..!!!

gujarat -india final map

“திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது ” – இவை
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் இறவா – மறவா வரிகள்….

அதை சற்றே மாற்றி ” திட்டம் போட்டு மறைக்கிற கூட்டம் மறைத்துக்
கொண்டே இருக்குது ”
என்று போட்டால் இந்த இடுகைக்கு பொருத்தமாக
இருக்கும்.

“கெட்டிக்காரன் பொய்யும் புளுகும் …….. நாளைக்கு “ கூட இதற்கு
பொருந்தும்.

கடந்த மாதம், குஜராத் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தின்
கடைசி நாளன்று, Controller and Auditor General அறிக்கையை சட்டமன்றத்தின்
முன் வைத்து விட்டு, (tabled before the house )
விவாதம் செய்ய வாய்ப்பில்லாமல், கடையை மூடி விட்டார்கள்.

இனி மீண்டும் அடுத்த கூட்டத்தொடர் வரும்போது விவாதிக்க வாய்ப்பு
கிடைக்கலாம்.

இந்த CAG அறிக்கையில், குஜராத் அரசின் 2013-14 ஆண்டிற்கான,
அதாவது மார்ச் 2014 வரையிலான காலத்திற்கு, நிர்வாகம் எந்த
அளவில் செயல்பட்டிருக்கிறது என்பதற்கான விவரங்கள் தரப்பட்டிருக்கின்றன.
இந்த கால கட்டத்தில் குஜராத் திருவாளர் நரேந்திர மோடிஜியை
“சீப்” மினிஸ்டராக கொண்டு செயல்பட்டது
என்பது நினைவில் கொள்ளப்பட வேண்டிய விஷயம்…..!!!

வேடிக்கை ( வேதனை …! ) என்னவென்றால், இவ்வளவு முக்கியமான
ஒரு செய்திக்கு மீடியாக்கள் எதுவும் முக்கியத்துவம் கொடுக்கவே இல்லை.
கொடுக்கப்படாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்…..!!!

காரணம் …..? பல துறைகளில் குஜராத் அரசின் செயல்பாடுகளை
கண்டித்து, குறைகூறி இந்த அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கும்
விவரங்கள் தான்….!!!

அப்படி என்ன கூறுகிறது இந்த CAG- யின் அறிக்கை…..?

விவசாய உற்பத்தியில் வீழ்ச்சி, பற்றாக்குறை பட்ஜெட்டின் உச்சம்,
ஆண்-பெண் விகிதாச்சாரத்தில் மோசமான வீழ்ச்சி, சாலைப் போக்குவரத்தில்
மோசமான செயல்பாடு, கல்விக்கு உரிமை சட்ட விதிகளை பின்பற்றுவதில்
மோசமான குறைபாடுகள், மதிய உணவுத் திட்டத்திலும், குடிநீர்
மேம்பாட்டுத் திட்டங்களிலும் – மிக மோசமான செயல்பாடுகள்…..
இப்படி போய்க்கொண்டே இருக்கிறது அறிக்கை …..

உணவு உற்பத்தி விகிதத்தில் குஜராத் – 2013 ஆம் ஆண்டில் அகில இந்திய
சராசரியை விடவும், கீழான நிலையில், அதாவது -6.96 % என்கிற
அளவிலேயே இருந்திருக்கிறது.

அரசு நிதி நிலையை கையாள்வதிலும், செலவினங்களிலும் -காணப்பட்ட
கட்டுப்பாடின்மைக்காக, குஜராத் அரசு நிர்வாகத்தை கடுமையாக
சாடியுள்ள CAG அறிக்கை –

2009-10-ல் ரூபாய் 155 மில்லியனாக ( 15,153 கோடி ) இருந்த
நிதி பற்றாக்குறை
– 2013-14-ஆம் நிதியாண்டில் 184 மில்லியனாக
(18,422 கோடி ) உயர்ந்து விட்டதை கண்டித்திருக்கிறது.
ரூபாய் 3 மில்லியன் அளவிற்கான வாட் வரி
(value added tax ) பல வர்த்தக நிறுவனங்களிலிருந்து வசூல் செய்யப்படவே
இல்லை என்றும் சுட்டிக்காட்டி இருக்கிறது.

செலவின் ஒரு பகுதி பட்ஜெட்டில் தவறாக காட்டப்பட்டிருப்பதையும்
அறிக்கை சுட்டிக் காட்டுகிறது –
செலவினங்களில் குறைத்தும், வரவினங்களில் அதிகரித்தும்
காட்டி, செயற்கையாக 1633.5 கோடி ரூபாய் உபரியாக ( surplus budget )
பட்ஜெட்டில் காட்டப்பட்டிருக்கிறது.

குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விஷயத்திலும், குஜராத்
நிர்வாகத்தை சாடியுள்ளது ரிப்போர்ட் – 2011 சென்சஸ் புள்ளி
விவரங்களின்படி ஆண்-பெண் குழந்தைகளின் அகில இந்திய
விகிதாச்சாரம் (ratio) ( 1000 க்கு ) 933 என்கிற நிலையிலிருந்து
943 என்கிற அளவிற்கு உயர்ந்திருக்கிறது.

ஆனால், குஜராத்தில் இது 922 லிருந்து
919 ஆக குறைந்திருக்கிறது.

கைவிடப்பட்ட குழந்தைகள் விஷயத்தில் 2009-14-க்கான காலகட்டத்தில்
681 வழக்குகள் பதிவிடப்பட்ட நிலையில், 216 பெண் குழந்தைகள்
இறந்த நிலையிலேயே கண்டுபிடிக்கப்பட்டன.

கடந்த செப்டம்பர் மாதம் வரையில், குஜராத் அரசு, கைவிடப்படும்
குழந்தைகளுக்காக “கைவிடப்பட்ட குழந்தைகளின் பராமரிப்பு”-க்கான
எந்தவித ஏற்பாட்டையும் செய்யவில்லை.

( தமிழ் நாட்டில் நீண்ட காலத்திற்கு முன்பே செயல்படத் துவங்கிவிட்ட
“தொட்டில் குழந்தைகள் பராமரிப்பு ” திட்டம் போன்றவை இன்னமும்
குஜராத்தில் இன்னமும் அறிமுகம் செய்யப்படவே இல்லை …!)

ஆதிவாசி – பழங்குடியின மக்களுக்காக மத்திய அரசு ஒதுக்கிய
நிதி – வேறு பயன்பாடுகளுக்கு திருப்பி விடப்பட்டிருக்கிறது.

இரண்டு மாவட்டங்களில் –
“சர்வ சிக்ஷா அபியன்” திட்டத்தின் கீழ் மத்திய அரசு
குழந்தைகளின் கட்டாய இலவசக் கல்வி திட்டத்திற்காக ஒதுக்கிய
நிதி வேறு விதத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

தணிக்கைக்கு உட்படுத்தப்பட்ட 5 மாவட்டங்களில் மட்டுமே –
ஆசிரியர்-மாணவர் விகிதாச்சாரம் மிக மோசமாக இருப்பது
தெரிய வந்திருக்கிறது. குறைந்த பட்ச வசதிகள் கூட பல பள்ளிகளில்
செய்யப்படவில்லை. 1368 பள்ளிகளில் கணிணிகள் இருந்தன –
ஆனால் அவற்றை பயன்படுத்த, சொல்லிக் கொடுக்க – ஆசிரியர்கள்
யாரும் இல்லை….!!

குஜராத்திலுள்ள மொத்தம் 43,176 பள்ளிகளில் –
64 பள்ளிகளில் ஆசிரியர்களே இல்லை …..
(இந்த பள்ளிகளில் இருக்கும் மாணவர்களின் எண்ணிக்கை .. 5,698 ..!!! )

874 பள்ளிகளில் ஒரு ஆசிரியர் மட்டுமே இருக்கிறார்.
(இவை எல்லாம் மார்ச் 2014 விவரங்களின்படியான தகவல்கள் …!!! )

மகப்பேறு திட்டங்களின் கீழ், கர்பிணிப் பெண்களை பாதுகாப்பதிலும்
( in implementing the Pre-Conception and Pre-Natal Diagnostic Techniques Act, )
அக்கரையின்றி செயல்பட்டிருக்கிறது. தவறு இழைத்தவர்களில்
181 பேரில் ஆறு பேருக்கு மட்டுமே தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.

பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுவதும்
அதிகரித்திருப்பது குறித்து கவலை தெரிவித்திருக்கிறது இந்த அறிக்கை.
பாதிக்கப்பட்ட சிறுமிகளின் எண்ணிக்கை 2009-ல் 92 ஆக இருந்தது,
2013-ல் 265 ஆக உயர்ந்திருக்கிறது.

பொதுவாகவே கற்பழிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது
கவலையளிக்கத்தக்கது என்றாலும் – மொத்த வழக்குகளில்
சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகும் சதவீதம்
21.25 – லிருந்து 36.15 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.

இளம்பெண்கள் கடத்திச் செல்லப்படுவதும் அதிகரித்திருக்கிறது.
2012-13 ஆண்டுக்காலத்தில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட
1205 பெண்களில் –
நடைமுறை அரசு நிர்வாகக் கோளாறு, தாமதம் ஆகியவை காரணமாக,
298 பேருக்கு மட்டுமே நிதியுதவி போய்ச் சேர்ந்திருக்கிறது.

கடைசியாக ஒரு தகவல் –
குஜராத்தில் சுற்றுலா துறையின் வளர்ச்சி –
மஹாராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேசத்தின் வளர்ச்சியில் –
பாதியளவே இருந்திருக்கிறது.

( ஆதாரம் – http://www.khaleejtimes.com/mobile/inside.asp?
xfile=/data/international/2015/April/international_April61.xml&section=international
மற்றும் http://www.thehindu.com/news/national/other-states/cag-reports-pick-holes-in-gujarat-
model/article7062846.ece )

– இத்தனையையும் மறைத்து, ஏதோ குஜராத்தில் பாலாறும்
தேனாறும் ஓடுவதாக – ஒரு மாயா லோகத்தை, மீடியாக்களின் மூலம்
செயற்கையாக உருவாக்கி, அதற்கு பயங்கரமாக விளம்பரம் கொடுத்து,
ஒரு திறமையான வியாபாரியை,
ஒரு புத்திசாலி மார்கெட்டிங் மானேஜரை –
இந்தியாவின் அதி உயர்ந்த பதவிக்கு உயர்த்தி விட்டார்கள்….

சுமார் ஆறு கோடி மக்கள்தொகை உள்ள ஒரு மாநிலத்தில்,
11 ஆண்டுகள் தொடர்ச்சியாக உச்சபட்ச அதிகாரத்தில் இருந்த ஒருவரின்
சாதனை ரிப்போர்ட் இது.

இவர் தான் – வாராது வந்த மாமணி போல் –
குஜராத்திலிருந்து வந்து
125 கோடி மக்களைக் கொண்ட இந்திய நாட்டை
உய்விக்க வந்திருக்கும் மாமனிதர் –

என்று மக்களிடம் இவர் அறிமுகப்படுத்தப்பட்டு –
இந்த பதவிக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறார்….!!!

மாயா – மாயா …. ” எல்லாம் மாயா ” ….!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to குஜராத்தின் “சீப் ” மினிஸ்டர் – மறைக்கப்பட்ட உண்மைகள் – CAG அறிக்கை வெளிப்படுத்துகிறது …..!!!

 1. புது வசந்தம் சொல்கிறார்:

  உண்மையான பதிவு. இந்தியாவின் தலைமை பொறுப்பை அடைய ஒரு திட்டமிட்ட செயல்பாடு, பரப்புரை இப்படி பல விஷயங்களை கருத்தில் கொண்டு 11 ஆண்டு கால ஆட்சி செயல்படுத்தப்பட்டது. ஊடகங்களால் உண்மை மறைக்கப்பட்டது.

  நீங்கள் ஒரு முறை எழுதிய பதிவில் “2002 க்கு பிறகு கலவரமே இல்லை” என எழுதி இருந்தீர்கள். ஒரு சிறிய கணக்கு தான், ஒரு கலவரத்துக்கே 2200 இந்திய உயிர்கள் பலி ஆனதே. இதுவும் ஒரு கணக்கு தான். கூட்டி கழித்து பாருங்கள் கணக்கு சரியாக வரும்.

  ஒரு சக இந்தியனின் பதிவு.

  “Chaos Theory” என்ற சொல் நினைவில் வருகிறது….

 2. R.Palanikumar சொல்கிறார்:

  .. ம்ம்..என்ன சொல்றது..?அந்த மாநில மக்கள் மூன்றாம் முறையாக அவரையே தேர்ந்தெடுத்ததில்தான் நான் ஏமாந்து போய் விட்டேன்..

 3. Pingback: குஜராத்தின் “சீப் ” மினிஸ்டர் – மறைக்கப்பட்ட உண்மைகள் – CAG அறிக்கை வெளிப்படுத்துகிறது …..!!! | Classic Tam

 4. Pingback: குஜராத்தின் “சீப் ” மினிஸ்டர் – மறைக்கப்பட்ட உண்மைகள் – CAG அறிக்கை வெளிப்படுத்துகிறது …..!!! | Classic Tam

 5. today.and.me சொல்கிறார்:

  இந்தப் பதிவுக்கு யாராவது பாஜக பக்தர்கள், மோடி ஜி தொண்டரடிப்பொடியார்கள் வந்து இப்பதிவை மறுத்து எழுதுவாரகள் என்று எதிர்பார்த்தேன். ஏமாற்றிவிட்டார்கள்.

  ஆமாம், கா.மைஜி, இந்தவிரிவான பதிவை தேர்தலுக்கு முன் நீஙகளோ அந்த குஜராத் சிஏஜியோ வெளியிட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும்….

  மிஞ்சிப்போனால் ஒரு ஐம்பது ஓட்டு குறைந்திருக்கலாம்.மற்றபடி இந்தியாவின் தலையெழுத்து, தமிழகத்தின் விதி … யாரைவிட்டது?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.