உயர்ந்த மனிதர், மிக உயர்ந்த மனிதர் ஓ.பன்னீர்செல்வம் ….!!!

.

இந்த காலத்தில் மட்டுமல்ல … வேறு எந்தக் காலத்திலும்
இத்தகைய ஒரு மனிதரை நாம் காண முடியாது.
இதற்கு முன்னாலும் இருந்தது இல்லை…
இப்போதும் இல்லை…
இதற்குப் பின்னாலும் யாரும் இருக்க மாட்டார்கள்…!

ops

ராமாயண காலத்து பரதனுக்கு இணையாக
இவரைச் சொல்லலாம் என்றால் —

நிராயுதபாணியாக, நிற்கிறார் என்று தெரிந்தும் –

“பொம்மை”
“பினாமி”
“சூடு, சொரணையற்றவர்”
“பேசா மடந்தை”
“ஒன்றும் தெரியாத டம்மி”

என்றெல்லாம் வாய்க்கு வாய் ஏசி,
வார்த்தை அம்புகளால் துளைத்த எதிரிகள் யாரும்
பரதனுக்கு வாய்க்கவில்லை.

எனவே, ராமாயணத்து பரதனை விடவும்
இவர் உயர்ந்தவர் என்றே சொல்ல வேண்டும்.

அகராதியில் “விசுவாசம்” என்கிற வார்த்தைக்கு பதிலாக
ஓ.பன்னீர்செல்வம் என்கிற சொல்லை சேர்த்து விடலாம்….

போர்க்குணம் உடைய சமூகத்தில் பிறந்தும்,
இவ்வளவு நாட்களாக அமைதியும், பொறுமையும் காத்த
திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு நமது மனமார்ந்த
பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்….

இவருக்கு விடுதலை கொடுத்த நீதிபதி குமாரசுவாமி
அவர்களுக்கு நமது நன்றிகள் பலப்பல…!!!

2014, அக்டோபர் 18ந்தேதி, வீட்டுக்குள் சென்றவர் –
இன்று -( 2015 மே 11,) வரை வீட்டை விட்டு வெளியே வரவில்லை….
தன் மீது சுமத்தப்பட்ட பழியும், களங்கமும் நீங்காமல்
வீட்டை விட்டு வெளியே வருவதில்லை – என்று
வைராக்கியத்துடன் காத்திருந்த
ஜெ.ஜெயலலிதா அவர்களின் மன உறுதி என்னை
பிரமிக்க வைக்கிறது.

j.j.

மீண்டும் தமிழகத்தின் முதலைமைச்சர் பொறுப்பை ஏற்கவிருக்கும்
அவருக்கு நமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

69 Responses to உயர்ந்த மனிதர், மிக உயர்ந்த மனிதர் ஓ.பன்னீர்செல்வம் ….!!!

 1. today.and.me சொல்கிறார்:

  உண்மைதான் கா.மைஜி.

  நன்றிகள் பல நீதியரசர் குமாரசாமி அவர்களுக்கு.

  விசுவாசம் = ஓபிஎஸ் எப்படியோ அப்படியே மனஉறுதி= ஜெஜெ.
  பலர் இதை பொம்மை என்றும் அரகண்சி என்றும் தவறாகப் புரிந்துகொண்டுள்ளார்கள்.

  தீர்ப்பில் நீதியரசர் குமாரசாமி அவர்கள் கீழமை நீதிபதி குன்ஹா, வழக்கறிஞர் ஆசார்யா ஆகியோரையும் தவறான கணக்கிடலுக்காகக் கண்டித்துள்ளார்.

  உண்மையில் தமிழக மக்கள் நன்றிசொல்ல கடமைப்பட்டவர்கள் -இவருக்குத்தான்.

  தமிழக ஆளுநர் மாண்புமிகு ரோசையா அவர்கள்.

  பல உதிரிக்கட்சிகள் பலமுறை தமிழகஅரசைக் கலைக்கச் சொல்லி கொடுத்த தொந்தரவுகளையும், மத்திய ஆளும் கட்சி கொடுத்த குடைச்சல்களையும் பொறுமையாகத் தாங்கியமைக்கு.

 2. today.and.me சொல்கிறார்:

  தீர்ப்பின் சாராம்சமும், தீர்ப்பின் நகலும் பெற

  http://www.seythigal.com/?p=6311

 3. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  இனி யாரும் 45% கேட்கிறார்கள் என்று புகார் சொல்லமுடியுமா?
  போஸ்டர் தான் அடிக்க முடியுமா?
  இனிமேல் எல்லாமே 75% தான்!!!
  யாராவது வாயை திறப்பாங்களா?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் அஜீஸ்,

   40 % வரை கொடுத்துக் கொண்டே இருந்தவர்கள் தானே –
   இப்போது இன்னும் 5 % உயர்த்தியதும் போர்க்கொடி தூக்குகிறார்கள்….?

   அப்படியானால், தண்டிக்கப்பட வேண்டியவர்கள்
   வாங்கியவர்களுடன் சேர்த்து -இத்தனை
   நாட்களாக கொடுத்துக் கொண்டே இருந்ததற்காகவும்,
   மக்களை ஏமாற்றியதற்காகவும் –
   இப்போது புகார் சொல்பவர்களையும் சேர்த்து தானே…?

   ஆமாம் – டாப் 10, அடுத்த 10 – ரிலீஸ் பண்ணி விடுவோம்
   என்று திரும்ப திரும்ப பயமுறுத்திக் கொண்டே இருக்கிறார்களே தவிர
   ரிலீஸ் செய்ய மாட்டேனென்கிறார்களே ஏன் ?

   கூட்டுக்களவாணிகள் என்பதால் தானே …

   இதன் பின்னால் இருக்கும் காரணமென்ன – அரசியல் என்ன என்று
   கொஞ்சம் யோசித்துப் பாருங்களேன்…

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • சைதை அஜீஸ் சொல்கிறார்:

    முட்டை முதலிலா அல்லது கோழி முதலிலா என்பது எனக்கும் புரிகிறது ஐயா!
    ஆனால் பூனைக்கு மணி கட்டுவது யாரு என்றால் அதற்கான நபரைத்தான் காணக்கிடைக்கமாட்டேங்குது!!

 4. கில்லர்ஜி சொல்கிறார்:

  காலக்கெரகமடா கந்தசாமி வேறென்ன சொல்ல….

 5. Sharron சொல்கிறார்:

  Very good judgement from the judge.Really we have to appreciate him.Again Tamil Nadu will come up.So far the other parties made a big mess over here.She has to come and do some cleaning.

 6. Surya சொல்கிறார்:

  CM who has been involved in DA and getting released stating everything is clean is something very much concerning as an Indian Citizen for me!

  • today.and.me சொல்கிறார்:

   //involved in DA //
   upto 20% DA is allowed by the law itself. in this case 8.12% is not an offence, said Judge. For details, go thru the judgement.

   • Surya சொல்கிறார்:

    There is more to this than the judgement. So, I don’t see any need for going through just the judgement papers. When Salman khan went unpunished, we all shouted. But when a TN CM goes unpunished, we seem to say all is okay (quoting this is good for TN’s future). Don’t see a logic!

    • today.and.me சொல்கிறார்:

     drunk and drive, hit and run, killing = False and laced DA?
     😦
     enna oru logic!
     Good to see your comparing knowledge.

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     நண்பரே,

     நீங்கள் சந்தோஷப்பட வேண்டுமென்பதற்காகவே
     ஒருவர் தண்டிக்கப்பட முடியுமா …?

     தயவு செய்து தீர்ப்பை முழுவதுமாகப் படித்து விட்டு,
     அதில் என்ன தவறு காண்கிறீர்கள் என்கிற வகையில்
     உங்கள் கருத்துக்களை கூறுங்கள்.

     பொத்தாம் பொதுவாக, சல்மான் கான் வழக்கையும்
     இதையும் ஒப்பிடுவது அபத்தமானது.

     -வாழ்த்துக்களுடன்,
     காவிரிமைந்தன்

     • Surya சொல்கிறார்:

      Just one question… Are we saying 18 years of trial for JJ was just politically motivated and no facts on it?

      On a side note, I feel our people are one of the most backward for doing all kind of absurd things on temples for the release of Amma.

    • today.and.me சொல்கிறார்:

     One more point i have forgotten,
     how salman khan has allowed for bail (not even got the judgement copy), and denied to jj
     If you asked liked that, it would be better logic. but…

     • Surya சொல்கிறார்:

      If Salman is out on bail, at the max he will hit another few people on the roads (not that I want it to happen)! If a CM is out, she will still control the state and make decisions, which is not good for the state! You do not want to compare Jaya and Salman as cases are differnet, but want to compare both their bail plea. v funny!

 7. கோபாலன் சொல்கிறார்:

  தமிழகக் கடவுள்களின் மானத்தைக் காத்ததற்காக, தற்கொலைக்காகக் காத்துக்கொண்டிருந்த நூற்றுக்கணக்க்கான உயிர்களைக் காத்தமைக்காக, அந்த ஒவ்வொரு குடும்பத்துக்கும் போக இருந்த 3 லட்சம் ரூபாய்களை கட்சிக்குச் சேமித்துக் கொடுத்ததற்காக, குமாரசாமி அவர்களுக்கு நன்றி.

  பாவம் குன்ஹா, இனி அவர் சம்சாரத்திடமிருந்து தினம் அவருக்குத் திட்டுதான்.

  கோபாலன்

  • today.and.me சொல்கிறார்:

   //பாவம் குன்ஹா, இனி அவர் சம்சாரத்திடமிருந்து தினம் அவருக்குத் திட்டுதான்.//
   Not only by his wife, even Judge Kumaraswamy noted in his judgement, the calculations are calculated wrong. So, the previous judge and adv.aacharya have to study basic mathematics atleast.

   • ns raman சொல்கிறார்:

    Yes they should know how to do scientific scam from JAY know. She is exceeding guru Mk.

    • today.and.me சொல்கிறார்:

     No need to do scientific scam .. The one and only MK deserves for that. I dont want to pick that from him.

     This falsely laced case. Judge Kumarasamy has proved in his judgement. Please go through the 920 pages judgement.

     1. பினாமி குற்றசாட்டு

     Benami Transactions (Prohibition) Act, 1988ன் படி ஒருவரை பினாமி என்று இணைக்க ரத்த சொந்தமாக இருக்கவேண்டும் அல்லது கூறப்பட்ட சொத்துக்களுக்கு வரி செலுத்தும் நபர் முக்கிய குற்றவாளியாக இருக்கவேண்டும்.

     இங்கு பினாமி குற்றசாட்டுக்கு உள்ளாகியுள்ள நால்வரும் ரத்த சொந்தங்கள் இல்லை.சசிகலா மற்றும் ஜெயலலிதா ஆகியோர் மீது உள்ள இந்த குற்றச்சாட்டுகளில் சசிகலா பெயரில் உள்ள சொத்துக்களுக்கு சசிகலாவே வரி செலுத்தி வருகிறார் என்பது அரசு தரப்பு வாதங்களிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.இவ்வாறு குறிப்பிடும்போது Benami Transactions (Prohibition) Act, 1988 படி நான்கு நபர்கள் மீதும் இக்குற்றசாட்டினை வைக்க இயலாது.

     2. ஊழல் தடுப்பு

     Anti Corruption Act 13 (1)ன் படி அரசு ஊழியரை மட்டுமே வழக்கில் இணைக்க முடியும். இச்சட்டம் கூறுவது ‘’ A public servant is said to commit the offence of criminal misconduct’’ என்ற தலைப்பின் கீழ் ‘’ if he or any person on his behalf, is in possession or has, at any time during the period of his office, been in possession for which the public servant cannot satisfactorily account, of pecuniary resources or property disproportionate to his known sources of income. Explanation.—For the purposes of this section, “known sources of income” means income received from any lawful source and such receipt has been intimated in accordance with the provisions of any law, rules or orders for the time being applicable to a public servant.’’ என்று கூறுகிறது.அதாவது ஒரு அரசாங்க ஊழியர் தானோ அல்லது தன் சார்பாக மற்றொரு அரசு ஊழியரையோ தங்களது பதவி காலத்தில் தவறு செய்திருந்தால் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று தெளிவு படுத்துகிறது.

     இந்த வழக்கை பொருத்தவரை வழக்கின் குறிப்பிட்ட காலமான 1991 – 1996 வரை ஜெயலலிதாவை தவிற வேறு யாரும் அரசாங்க ஊழியர் அல்ல.ஆக இதில் மற்ற மூன்று நபர்களை இணைத்துள்ளது சட்டப்படி தவறு.

     3. பங்குகள்

     இந்த வழக்கை பொருத்தவரை ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகிய இருவருமே சேர்ந்து தான் பங்குகள் வைத்துள்ளனர்.பங்குகள் இருவர் பெயரிலும் உள்ளது.ஆனால் அரசு தரப்பு பங்குகளை மொத்தமாக ஜெயலலிதா பெயரில் குறிப்பிட்டுள்ளது. Indian Partnership Act, 1932 படி அவரவர் பங்குகளுக்கு அவர்களே சொந்தம் என்று கூறப்பட்டுள்ளது.அதாவது தற்போது ஜெயலலிதா தான் போட்டுள்ள பங்குகளுக்கு மட்டுமே சொந்தம் கொண்டாட முடியும்.அதேபோல சசிகலா தான் போட்டுள்ள பங்குகளுக்கு மட்டுமே சொந்தம் கொண்டாட முடியும் என்று Indian Partnership Act, 1932 தெளிவாக தெரிவிக்கிறது.அதன் படி பார்த்தோமேயானால் இதில் பங்குகள் தனி தனியாக பிரிகின்றன.இதில் அரசு தரப்பு வாதங்கள் தவிடுபொடியாகிறது.

     4. செயலுரிமை

     Powers-of-attorney act, 1882ன் படி ஒருவர் செயல் உரிமையை மற்றொருவர் பெயருக்கு மாற்றும்போது, அந்த நிறுவனத்தின் மீதோ /வீட்டின் மீதோ வரும் வருமானம் செயல் உரிமை பெற்றவருக்கே சொந்தம்.செயல் உரிமை காலம் முடியும் வரை வரும் காப்பீட்டு தொகை மட்டுமே செயல் உரிமை எழுதி கொடுத்த நபருக்கு சொந்தம் என்று தெளிவாக கூறுகிறது.

     இந்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலாவுக்கு செயலுரிமை அளித்து அதில் வரும் வருமானங்கள் மூலம் ஊழல் செய்துள்ளார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.சட்டத்தின் அடிப்படையில் செயல் உரிமை பெற்ற நபருக்கு மட்டும் சொந்தமான வருமானத்தை அவர் மட்டுமே பெற முடியும்.ஆக, இந்த குற்றசாட்டும் உடைக்கப்படுகிறது.

     5. மறுமதிப்பீடு

     இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்து வரும் நீதிபதி குமாரசாமி நிலங்கள், நகைகள் மற்றும் வீடுகளை மறுமதிப்பீடு செய்துள்ளார்.இந்த மறுமதிப்பீடு என்பது இதுவரை நடந்துள்ள அனைத்து வழக்குகளிலும் குற்றவாளிக்கு சாதகமானதாகவே எப்போதும் அமைந்துள்ளது.

     6. கூட்டுச்சதி

     The Indian Evidence Act, 1872ன் படி ‘’ Any party to a suit or other proceeding may show that any judgment, order or decree which is relevant under Section 40,41 or 42 and which has been proved by the adverse party, was delivered by a Court not competent to deliver it, or was obtained by fraud or collusion.’’ என்றே உள்ளது.

     இந்த வழக்கை பொருத்தவரை ஒரே வீட்டில் தங்கியுள்ளதால் கூட்டுச்சதி என்று அரசு தரப்பு தெரிவித்துள்ளது.சட்டப்படி ஒரே வீட்டில் தங்கியிருப்பதால் கூட்டுசதி என்பது ஆகாது.ஆக கூட்டுச்சதி என்பது இந்த வழக்கில் துளி அளவும் இல்லை என்பதை சட்டங்களின் வடிவின் மூலமே தெரிந்துக்கொள்ள முடிகிறது.

     7. வருமான வரி

     The Income-tax Act, 1961ன் படி ஒருவர் வருமான வரி செலுத்தும்போது அந்த வரி செலுத்தப்பட்ட ரசீதுகள், அவரின் வருமானத்தை அந்தந்த காலகட்டங்களில் குறிக்கிறது என்று கூறப்படுகிறது.மேலும் இந்த ரசீதுகள் எந்த வழக்கில் வேண்டுமானாலும், ஒரு ஆதாரமாக பயன்படுத்தவும் முடியும் என்றும் கூறுகிறது.

     இந்த வழக்கில் வருமான வரிகளை முக்கிய குற்றவாளியான ஜெயலலிதா கட்டி வருகிறார்.கடந்த வருடம் கூட எக்மோர் நீதிமன்ற வழக்கும் முடித்துவைக்கப்பட்டுள்ளது.வருமான வரி அதிகாரிகளின் வாக்குமூலம் படி குறிப்ப காலமான 1991 – 1996 வரை வருமான வரி தொகை கட்டப்பட்டுள்ளது.அதன் ஆதாரங்களும் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளன.

     http://news.spicknewstamil.in/#category0

     • ns raman சொல்கிறார்:

      Add to your point
      Even after so many explanations and exempted income still 2.8 cr ie 8 pct more than income. Since less than 10 pct she is acquitted. Page 913 of judgement.

      So it is a estimation of kumaraswamy only 8 pct more tomorrow higher court may come with more no.

     • ns raman சொல்கிறார்:

      🎯🎯 மாட்டாம தப்புப் பண்றது எப்படீன்னு தாத்தா கிட்டயும் மாட்டினாத் தப்பிக்கிறது எப்படின்னு ஆத்தா கிட்டயும் கத்துக்கணும்

   • கோபாலன் சொல்கிறார்:

    Poor Sinha does not know how many O’s are there in a crore, being scolded by his wife only for this.
    கோபாலன்

   • சைதை அஜீஸ் சொல்கிறார்:

    //பாவம் குன்ஹா, இனி அவர் சம்சாரத்திடமிருந்து தினம் அவருக்குத் திட்டுதான்.//
    சம்சாரத்திடம் மட்டுமா, இனி இவர்களின் (பேரப்)பிள்ளைகள் கூட இவர்களிடம் கணக்குப்பாடம் படிக்க வரமாட்டார்கள்.
    இனி க்ளைண்ட்ஸ்கூட நல்லா ஏமாத்துவாங்க இவர்களை!
    ஹய்யோ… ஹய்யோ….

 8. புது வசந்தம் சொல்கிறார்:

  இத்தனை ஆண்டு காலம் நடந்தது என்ன? இதில் மேல்முறையீடு என்ற கேலி கூத்தும் நடக்கும் ?

 9. புது வசந்தம் சொல்கிறார்:

  ஆப் கி பார் “அம்மா” சர்க்கார்

 10. Sampath சொல்கிறார்:

  அம்மாவிற்கு மட்டுமல்ல, வீண் பழி சுமந்து, இவ்வளவு ஆண்டுகளும் அல்லல் பட்ட அந்த மூன்று தியாகிகளுக்கும் கூட வாழ்த்துக்கள்.

 11. sella சொல்கிறார்:

  If Jaya is Tyagi and has done nothing why not the other three. One things is sure the end my KM gives a wring direction. She may be iron lady nonetheless corrupt and tooooooooo greedy. I dont know what KM the today and me thinks and how tam supports such calculations. fateful.

  • today.and.me சொல்கிறார்:

   yeah. It is fateful of Tamils, who do not understand about the laws, proceedings, courts, judges and possibilities of contempt of court, tamils, non-tamils, tamil medias, non-tamil medias, politicians, political dramas, language issues, water issues, governance, government issues, corrupt, etc. They don’t even want to know about these.

   And Tyagi title is given by Mr. Sampath, he has to answer about tyagi..

   • ns raman சொல்கிறார்:

    Yes you are right. Only same blog mixing Kaveri issue with Jaya bail application in Sep and giving political and regional colour to judiciary.

    • today.and.me சொல்கிறார்:

     @ns raman

     ..// Only same blog mixing Kaveri issue with Jaya bail application in Sep and giving political and regional colour to judiciary.//

     காவேரி பிரச்சினை இல்லவே இல்லை என்கிறீர்களா? அப்புறம் ஏன் குன்ஹா தீர்ப்பில் வரிக்கு வரி பேசிக் கால்குலேசனிலேயே தப்பும் தவறுமாக உள்ளது. எதையாவது சொல்லி, பெங்களுரு வந்தவரை உள்ளே வைக்கவேண்டும் என்பதுதானே. உங்கள் வாதத்துக்கு என்ன ஆதாரம்?
     அதையெல்லாம் ஏன் செய்தீர்கள்? அப்படியே வக்கில் தப்புத்தப்பாக கணக்குப்போட்டுச் சொன்னாலும் ஏன் அப்படியே தீர்ப்பில் எடுத்துக்கொள்ளவேண்டும் என்று இப்போது கு.சாமி. ஐயா கேட்டிருக்கிறாரே, உங்களுக்குப் புரியவில்லையா? அல்லது புரியாதமாதிரி நடிக்கிறீர்களா?

     ஜெவைப் பற்றிப் பிடிக்காவிட்டால் போகிறது.
     சட்ட அறிவும், அரசியல் அறிவும், நீதித்துறை பற்றிய புரிதலுமே வேண்டாம் என்றால், கண்ணைமூடிக்கொண்டு முயலுக்கு மூணுகால் தான் என்றால், … உங்கள் கொள்கை உங்களுக்கு. அதை ஏன் மற்றவர்கள் மேல் திணிக்கிறீர்கள்.

     • NS RAMAN சொல்கிறார்:

      Please try to answer to the arguments with counter arguments. I don’t need any accreditation from you about my political and legal knowledge. Please maintain decency in your words.

      Like you appreciate HC judgement, other can also question loop holes and mistakes in this judgement which is subject to scrutiny of SC during appeal.

      Judgement should be respected and till the SC gives verdict. But my question to Mr KM so for not answered why he earlier mixed Kaveri issue with judgement/bail application in Sep? Need a honest answer not a hasty reply.

 12. Pingback: உயர்ந்த மனிதர், மிக உயர்ந்த மனிதர் ஓ.பன்னீர்செல்வம் ….!!! | Classic Tamil

 13. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  இந்த இடுகை குறித்து
  வருத்தப்படும் நண்பர்களுக்கு,

  திரு ஜாபர் சேட் அவர்களின் ஒலிநாடா கேட்டீர்கள் அல்லவா …?
  (அல்லது படித்தீர்கள் அல்லவா …? )
  200 கோடி ரூபாய் 2ஜி ஸ்பெக்ட்ரம் பணம் கலைஞர் டிவிக்கு
  வந்த செய்தி அதில் தெளிவானதா இல்லை இன்னும் சந்தேகமா ?

  தந்தை, மகள் – இருவருக்குமே அதில் சம்பந்தம் இருப்பது
  தெரிகிறதா – இல்லையா ? இது குறித்து ஸ்டாலின் அவர்களுக்கு
  ஒன்றுமே தெரியாதா ?

  எழுத, படிக்கவே தெரியாத 80 வயது மனைவியை அதில்
  பணயம் வைத்து விட்டு – அய்யா நழுவியது தெரிகிறதா ..?

  தாயைக் காப்பாற்றும் வழியை பார்க்காமல்
  மகன் “வருங்கால முதல்வர்” நாற்காலிக்காக அலைவது
  தெரிகிறதா …?

  200 கோடி ரூபாய் வழக்கிலும், ஏற்கெனவே 2ஜி வழக்கில்
  திஹார் ஜெயிலில் 8 மாதமும் இருந்து விட்டு வந்த
  சகோதரியையும், உலகப்புகழ் ஆ.ராசாவையும்
  ஒரு பக்கத்திலும் –
  கேடி மாறன் சகோதரர்களை இன்னொரு பக்கத்திலும் –
  உடன்வைத்துக்கொண்டே, ஓபிஎஸ் அவர்களை
  குற்றம் சாட்ட ஸ்டாலின் அவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது…?
  சொல்லுங்கள் பார்ப்போம்…!

  வயது 93 என்பதைக் கூட மறந்து, ஆறாவது தடவை முதல்வர்
  ஆக வேண்டுமென்று துடிக்கும் தந்தையையும்,

  கடைசி நேரத்தில் தந்தையை குப்புறத் தள்ளி விட்டாவது
  நாற்காலியை பறித்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிற
  தனயனையும் காணும்போது –

  ஓபிஎஸ் – என் கண்களுக்கு மிகவும் உயர்ந்த மனிதராகத தான்
  தெரிகிறார்.

  – வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

  • today.and.me சொல்கிறார்:

   Dear KM ji,

   2ஜி வழக்கில் யார் அந்த இரண்டு நபர்கள் ? – அதிர வைக்கும் தகவல்கள்
   இந்த ஐந்து நபர்களும் மீண்டும் சிக்குகிறார்கள்.இதில் திமுக பொருளாலளரான ஸ்டாலினும், திருமதி. செல்வியும் புதிய நபர்களாக சிக்குகிறார்கள் என்பது புதிய தகவலாக வெளிவந்துள்ளது.

   http://news.spicknewstamil.in/#category1

 14. ns raman சொல்கிறார்:

  During Sep Mr KM mentioned Due to Jay stand on Kaveri river issue her bail was delayed. Now the judgement in her favour can we assume kaveri problem solved? I feel judgement should be respected from any court without any political colour.

  • ரிஷி சொல்கிறார்:

   இதைத்தான் நான் சொல்ல வேண்டும் என இருந்தேன். கர்நாடகா காவிரிப் பிரச்சினைதான் ஜெயலலிதா உள்ளே போக காரணமாக இருந்ததுன்னு எவ்வளவு கூப்பாடு!! இன்னிக்கு அதே கர்னாடாகா ஜெவை விடுவித்துள்ளது. ஓ… அன்றைக்கு வந்தது ரத்தம்… இன்றைக்கு வந்திருப்பது ஜஸ்ட் தக்காளிச் சட்னி…

   • M Nithil சொல்கிறார்:

    Wait, according to Justice Chandru, Karnataka Govt. has a right to go for appeal. If they do so, then it is due to the stand taken by JJ in Kaveri Issue…..

    I feel the judgement (both spl, court and high court) on this case again proved that the blood is thicker than water 😦

    • today.and.me சொல்கிறார்:

     @ M Nithil,
     மேல் முறையீட்டிற்குப் போனாலும் முதலமைச்சராகவோ, தேர்தலில் போட்டியிடவோ தடையில்லை – நீதியரசர் குமாரசாமி தீர்ப்பில்.

   • today.and.me சொல்கிறார்:

    @ Rishi
    .//அன்றைக்கு வந்தது ரத்தம்… இன்றைக்கு வந்திருப்பது ஜஸ்ட் தக்காளிச் சட்னி//
    அன்றைக்கு ரத்தம் வந்தது தவறான மதிப்பீட்டினால் கிடைத்த தண்டனையும், சட்டத்தினால் அனுமதிக்கப்பட்ட பெயில் மறுக்கப்பட்டதாலும். அந்த ரத்தம் யாருக்கு வந்திருந்தாலும் விமரிசனம் விமரிசிக்கத்தான் செய்திருக்கும்.

    இன்றைக்கு வந்திருப்பது தக்காளிச் சட்னி இல்லை நண்பரே.
    சரியான மதிப்பீடுகளும், முந்தையவர்களுக்கு கிடைத்த குட்டுக்களும், குற்றம் சாட்டடப்பபட்டவர் முழுவதும் குற்றமற்றவர் என்று சட்டப்படிக் கிடைத்த தீர்ப்புகளும்.

 15. MANI சொல்கிறார்:

  Mr Modi congratulates Jayalaitha on her winning the case but his own party man Subramania
  samy says that he will fight the case in Supreme court. how come?

 16. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  இனி மடமடவென்று பதவியேற்று,
  ரெடியாக நிற்கும் பஸ்களையெல்லாம் ரூட்டில் விட்டு
  மெட்ரோவை திறந்து
  அம்மா உணவகங்களை தமிழகமெங்கும் திறந்து
  விலையில்லா பொருட்களை மீண்டும் அனைவருக்கும் வழங்கி
  லேப்டாப்-களை அனைத்து மாணவ மாணவிகளுக்கும் வழங்கி
  எக்ஸெட்றா… எக்ஸெட்றா…
  அனைத்து “நல” திட்டங்களையும் நிறைவேற்றி
  உடனடியாக ஆட்சியை கலைத்துக்கொண்டு வெகு விரைவில் தேர்தலை நடத்தி…….
  மீண்டும்
  MUMMY RETURNS

 17. selvam சொல்கிறார்:

  I respect your view on JJ corrupt case. But I don’t agree.

  • Surya சொல்கிறார்:

   I share the same view as selvam…

   பன்னீர் செல்வம் பற்றி சொல்வது முழுவதும் சரியே. அம்மா-உக்கு வாழ்த்து சொல்வது தான் விளங்க வில்லை (தப்பு செய்த பிறகும்). என்னை பொருத்ததவரை குன்ஹா தப்பு மட்டும் கண்டு பிடித்த்ார். குமாரசாமி நல்லதை மட்டும் கண்டு பிடித்த்ார். Are Judiciary not supposed to look at from neutral angle?

   • today.and.me சொல்கிறார்:

    @surya

    //குன்ஹா தப்பு மட்டும் கண்டு பிடித்த்ார். //
    தப்புத்தப்பாக மட்டுமே சொன்னார், அதையும் குற்றம்சாட்டப்பட்டவர் ஒப்புக்கொண்டு பெயில் மறுக்கப்பட்டநிலையிலும் தண்டனை அனுபவித்தார்.

    /குமாரசாமி நல்லதை மட்டும் கண்டு பிடித்த்ார்.//
    குமாரசாமி முந்தைய அரசுவக்கில் மற்றும் நீதிபதி செய்த தவறுகளை சுட்டிக்காட்டியிருக்கிறார். சட்டப்படி குற்றவாளி இல்லை என தீர்ப்பளித்தார்.

    ஓ.. உங்களைப் பொறுத்தவரை மட்டுமா… அப்போச்சரி.

    • Surya சொல்கிறார்:

     🙂

     சத்தியமா என்னை பொறுத்தவரை தான். எனக்கு அடுத்த்வர்களின் சிந்தனை பார்த்து காப்பி அடிக்கும் பழக்கம் இல்லை. ஸ்சூல்‌/காலேஜ்-ல ஓரளவு இருந்தது உண்மைதான்!

 18. today.and.me சொல்கிறார்:

  நண்ப சூர்யா மற்றும் என்எஸ் ராமன் அவர்களின் பின்னூட்டங்களுக்குக் கீ்ழே மறுமொழி பொத்தானைக் காணோம். எனவே தனியாக,

  @ Surya
  //On a side note, I feel our people are one of the most backward for doing all kind of absurd things on temples for the release of Amma.//
  நீங்கள் நாத்திகராக இருந்துவிட்டுப்போங்கள். அது உங்கள் உரிமை. மற்றவர்களை ஆத்திகராக இருக்கவேண்டாம் என்று சொல்லவோ, அவர்கள் நம்பிக்கையைக் அப்சர்ட் திங்ஸ் என்று கேலிபேசவோ உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது. அவர்களுக்கு அன்பானவர்களுக்கு வந்த பிரச்சினைக்கு அவர்களால் முடிந்தமாதிரி தீர்வு தேடுகிறார்கள். அவ்வளவுதான்.

  @ n s raman
  -///மாட்டாம தப்புப் பண்றது எப்படீன்னு தாத்தா கிட்டயும்//
  கவலையே படாதீங்க ராமன், அடுத்து அவரும் அவர் பிள்ளையும் பொண்ணும்தான் தான் மாட்டுறாங்கோ.
  ஹெவியா இருக்கு ஆப்பு.

  //மாட்டினாத் தப்பிக்கிறது எப்படின்னு ஆத்தா கிட்டயும் கத்துக்கணும்//
  ஆமாம். மற்றவர்கள் வேண்டுமென்றே மாட்டிவிடும்போதும் அதற்கேற்ப கூட்டல்கழித்தல்பெருக்கலில்கூட தப்புப்பண்ணி தண்டனைகொடுக்கும்போது அதை நீதியின் தீர்ப்பு என ஒப்புக்கொண்டு நீதிபதிக்குத் தலைவணங்கி தண்டனையை ஏற்றுக்கொள்வதும், சட்டத்தின்படியே உண்மையை நிரூபிக்க முயல்வதும், தண்டனையில் இருந்து தப்பிப்பது என்று இல்லை, கேஸில் இருந்தே வெளியே வருவதும் ஒரு கலைதான். ஐயோ அம்மா கொல்றாங்களே என்று புலம்பிக் கத்தி மருத்துவமனையில் போய்ப் படுத்துக்கொள்வதில்லை.

  • Surya சொல்கிறார்:

   நாத்திகம் / ஆத்திகம் பற்றி இங்க யாரும் பேசவில்லை. கோவில் அரசியல்கு யூஸ் பண்ணாம இருந்திருக்கலாம். நான் ஆத்த்ிகவாதி!

   இப்பவும் சோல்றேன். நான் பல KM-moda இடுகை-க்கு விசிறி. இந்த இடுகை கொஞ்சம் ஒருதலை பச்சம்-மா இருக்கு.

   இந்த தீருப்பு தமிழ் நாட்டுக்கு நல்ல விஷயம். அந்த கருத்தை யாரும் குறை சொல்லவில்லை. ஆனால் அம்மா தப்பு பண்ண வில்லை என்று சொல்வது நம்ப முடிய வில்லை.

   • today.and.me சொல்கிறார்:

    நம்ப முடியாத நிலையிலேயே freeze ஆஹி யிருக்கீங்க. கொஞம் முழிச்சிப் பாத்து யோசியுங்க.

 19. nithya சொல்கிறார்:

  Dear today.and.me — ungalin melum kM aiyaa melum miga mariyaathi vaithu irunthen aanal inndru intha theerppu vantha pinpu neengal ezuthuvathai paarkkum pothu miga varuththamaaga irukkirathu.. Whether JJ or MK who did corruption should be punished ..you know the case very well for 18 years who did this 18 years long.. Kumarasamy theerppula evvalluv ottainu neengaley sollunga …http://www.savukkuonline.com/11643/

  • today.and.me சொல்கிறார்:

   நண்ப நித்யா,

   ஆமாம். நேற்றைய தீர்ப்பிற்குப் பின்னர் பலமணிநேரங்கள் நீ்ங்கள் குறிப்பிட்டுள்ள அந்தக்கடையும் நக்கீரன் கடையும் மூடியிருந்தது. மீண்டும் திறந்திருக்கிறார்கள். அவர்கள் என்ன ஓட்டை சொல்கிறார்கள் என்று ஆராய்ந்துவிட்டு மீண்டும் வருகிறேன்.

   நீங்கள் என்மேல் வைத்திருந்த மரியாதைக்கு நன்றி. இப்போதும் நான் சொல்வது நீதியரசரால் கொடுக்கப்பட்ட தீர்ப்புக்கு / நீதித்துறைக்கு தலைவணங்குங்கள், கட்டுப்படுங்கள் என்பதுதான்.

   முந்தி ஏன் விமரிசித்தீர்கள் என்று கேட்காதீர்கள். சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட பெயிலை காரணமேயில்லாமல் மறுத்தபோது விமரிசித்தோம். இதில் ஜேஜே என்று இல்லை, முக என்று இல்லை, நாளைக்கு ஸ்டாலினுக்கே அல்லது விஜயகாந்துக்கே இப்படி ஒரு நிலை ஏற்பட்டால், சட்டத்தால் அனுமதிக்கப்பட்டது மறுக்கப்படும்போது விமரிசனம் தளத்தில் காமை எழுதத்தான் செய்வார், நான் அதை ஆமோதிக்கத்தான் செய்வேன்.

   • today.and.me சொல்கிறார்:

    இன்னுமொரு கேள்வி, இப்பொழுது செய்வதை, முன்னர் குன்ஹா தீர்ப்பு வந்தபோது அதிலிருந்த மிஸ்டேக்குகளையெல்லாம் நீங்கள் குறி்ப்பிட்டுள்ள அந்தக் கடை ஏன் டீடெய்லாக கடைவிரிக்கவில்லை, தீர்ப்புக்குப் பின்னர் பெயில் சட்டவிதிமீறலாக மறுக்கப்பட்டபோது அவர்கள் நிலை என்ன? அப்போது அவர்கள் யார்பக்கம் இருந்தார்கள்? இப்போது யார் பக்கம் நிற்கிறார்கள், அல்லது எப்போதுமே நடுநிலையுடன்தான் இருக்கிறார்களா? அவர்களைப் பற்றி அவர்கள் வகிக்கும் நிலையைப் கொஞ்சம் யோசித்துப் பாருங்களேன்…

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     நான் தனியே ஒரு விவரமான இடுகையுடன்
     விரைவில் வருகிறேன்.

     -வாழ்த்துக்களுடன்,
     காவிரிமைந்தன்

    • nithya சொல்கிறார்:

     marumozhikku nantree sagothara. Aaanaal orey oru visayam thaan.. oolal vaathigal thandikka pada venduma illaya.. Kunhavin theerpil kuraikal irunthalum Oolalvathi thandikkapadavendum enkira akkarai irunthathu.. Anaanl ingey kootalileye thappey..Ivvalvvu chatta poratathukkum piragu oru oolalvathi thappiththaal naam enna nam kulanthaikku sollikodukka porom?

     • today.and.me சொல்கிறார்:

      //oru oolalvathi // We the people / other politicians can simply say that . But on entering into court as a case, the appellate is in the position to prove the complaint, at the same time court has to accept and announce as oolalvathi.

      Otherwise, if we say against the judgement or judge its contempt of court.

      We are in democratic country, i believe.

 20. Mohan சொல்கிறார்:

  துக்ளக் வாரப்பத்திரிகையின் ஆண்டு விழாவில்(14-1-15) ஆசிரியர் சோ, ஜெயலலிதா மீதான வழக்கை பற்றி பேசியது
  ***************************************************************************
  ……… ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் என்ன (முடிவு) ஆகப் போகிறது என்பது இப்போது நமக்குத் தெரியாது. அப்பீல் மனு மீது தற்போது ஹைகோர்ட்டில் விசாரணை நடைபெறுகிறது. அதன் பிறகு சுப்ரீம் கோர்ட்டுக்குப் போகும் வாய்ப்பு இருக்குமா, இருக்காதா என்பது நமக்குத் தெரியாது. அதனுடைய முடிவு என்னவாக இருக்கும் என்று நமக்குத் தெரியாது. ஆனால் (கீழ் நீதிமன்றத்தால்) அசைக்க முடியாத ஒரு தீர்ப்பு அளிக்கப்பட்டு விட்டதாக நான் நினைக்கவில்லை.

  பெங்களூரு தனி நீதிமன்றத்தில் சொத்து வழக்கில் ஜெயலலிதாவுக்குத் தண்டனை விதித்து அளிக்கப்பட்ட தீர்ப்பு, அசைக்க முடியாத தீர்ப்பு என்று நான் கருதவில்லை. அந்தத் தீர்ப்பைப் படித்துப் பார்த்தால், பல அம்சங்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குச் சாதகமாகவே இருக்கின்றன (கைதட்டல்). இதை நானாகக் கண்டுபிடித்துக் கூறவில்லை. விவரம் அறிந்த சிலர் இதைச் சுட்டிக்காட்டியுள்ளனர். ஜெயலலிதாவினுடைய வீடு, அதற்குப் பக்கத்தில் உள்ள இடம் மற்றும் அவருடைய ஹைதராபாத் தோட்டம் ஆகிய இடங்களில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்ட வகையில் 28 கோடி ரூபாய் செலவாகியுள்ளது என்று கணக்கிட்டுள்ளனர்.

  28 கோடி செலவாகியுள்ளது என்பதை எப்படி வரையறை செய்தார்கள் என்று பார்த்தால், அப்போது இருந்த பொதுப்பணித் துறைப் பொறியாளர்கள், இதற்கு 28 கோடி ரூபாய் செலவாகி இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளனர். இந்தக் கணக்கை வருமான வரித்துறை ஏற்கவில்லை. அதற்கு மாறாக, இந்தக் கட்டிடங்கள் தொடர்பாக ஜெயலலிதா தரப்பு தாக்கல் செய்துள்ள கணக்குகளை வருமான வரித்துறை ஏற்றுள்ளது.

  ஆனால், தனி நீதிமன்ற நீதிபதி என்ன செய்தார் என்றால், ‘28 கோடி ரூபாய் செலவானது என்பதை ப்ராஸிக்யூஷன் தரப்பு நிரூபிக்கவில்லை; இந்தக் கணக்கை ஏற்க முடியாது’ என்றார். ஏற்க முடியாத கணக்கு என்றால், அத்தோடு நிறுத்தினாரா என்றால் இல்லை. ‘28 கோடி ரூபாய் என்பது அதிமாக உள்ளது; அதை ஏற்க முடியாது; அதனால் 20 சதவிகிதத்தை அதில் கழிப்போம்; 22 கோடி ரூபாயாக வைத்துக் கொள்வோம்’ என்று புதுக்கணக்கை அவர் கொடுத்து விட்டார் (சிரிப்பு).

  அதேபோல, விவசாய வருமானமாக 5 வருடங்களில் 50 லட்சம் ரூபாய் வந்துள்ளது என்பது ஜெயலலிதா தரப்புக் கணக்கு. ஆனால், ப்ராஸிக்யூஷன் தரப்பு இதை ஏற்காமல், 50 லட்சம் கிடைக்க வாய்ப்பு இல்லை; 5 லட்சம்தான் வருவாய் வந்திருக்கும் என்று கூறியது. நீதிபதி பார்த்தார்; ‘5 லட்சம் ரூபாய் என்று சொல்வது ரொம்பக் குறைவாக உள்ளது (சிரிப்பு); அதனால் இதை 10 லட்ச ரூபாயாக வைத்துக் கொள்வோம்’ என்று முடிவு செய்தார் (சிரிப்பு). தோராயமாக ஒரு கணக்குக்கு அவர் வருகிறார். ‘இவர் ஒன்று சொல்கிறார்; அவர் ஒன்று சொல்கிறார்; நடுவாந்திரமாக நான் ஒன்று சொல்கிறேன்’ என்று நீதிபதி போயிருக்கிறார் (சிரிப்பு, கைதட்டல்). இவருடைய கேஸ் மூன்றாவது கேஸ் (சிரிப்பு). ப்ராஸிக்யூஷன் தரப்பு வாதம் ஒன்று, குற்றம் சாட்டப் பட்டவர்கள் வாதம் ஒன்று, மூன்றாவது ஜட்ஜ் தரப்பு (சிரிப்பு, கைதட்டல்).

  ஒரு திருமணம் (வளர்ப்பு மகன்) நடந்தது. அதை நான் கூட விமர்சித்திருக்கிறேன். இவ்வளவு ஆடம்பரம் தேவையா என்று எழுதியிருக்கிறோம். அதற்குப் பந்தல் செலவு மட்டும் 5 கோடியே 10 லட்சம் ரூபாய் என்று வழக்கில் கூறப்பட்டுள்ளது. பந்தலுக்கு இவ்வளவு செலவானது என்று எப்போது இந்தக் கணக்குக்கு வந்தார்கள் என்றால், அந்தக் கல்யாணம் முடிந்து, பந்தலை எல்லாம் பிரித்த பிறகு (சிரிப்பு), இரண்டரை வருடம் கழித்து, அந்தக் கல்யாணம் நடந்த இடத்தைப் போய்ப் பார்த்தார்கள் (சிரிப்பு, கைதட்டல்). ‘ஓ இந்த க்ரவுண்ட் தானா’ (சிரிப்பு). சரி, 5 கோடி போட்டுக்கோ’ (சிரிப்பு, கைதட்டல்) என்று நிர்ணயித்து விட்டார்கள்.

  நீதிபதி இதைப் பார்த்தார். அவர் தீர்ப்பில், ‘இப்படி எல்லாம் சொல்வதை ஒப்புக் கொள்ள முடயாது; குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் கூறுவது போல, இரண்டரை வருடம் கழித்துப் போய் பார்த்து, 5 கோடி செலவானதாக எப்படிக் கூறலாம்? மூணு கோடி என்று வேண்டுமானால் வைத்துக் கொள்வோம்’ (பலத்த சிரிப்பு, கைதட்டல்). இந்தத் தீர்ப்பைப் படித்துவிட்டு விவரம் தெரிந்தவர்கள், ‘இந்த ஜட்ஜ் சொல்லி இருப்பது, மூணாவது கேஸாக இருக்கிறது’ என்கிறார்கள்.

  இந்தத் தீர்ப்பை ஏற்க முடியாது என்று கூறுவதற்கு அவர்கள் சொல்லும் காரணம், வருமான வரித்துறையிடம் இதுபற்றி ஜெயலலிதா தரப்பில் தாக்கல் செய்துள்ள கணக்குகள் ஏற்கப்பட்டு, சிலவற்றில் மேல்முறையீட்டிலும் ஏற்கப்பட்டு, ட்ரிப்யூனலும் ஏற்றுக்கொண்டு வருமான வரித்துறை சாதகமான உத்தரவுகளையும் அளித்துள்ளது. அதெல்லாம் இந்தப் பெங்களூரு வழக்கிற்கு முன்பாகவே அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், தனி நீதிமன்ற நீதிபதியோ, ‘வருமான வரித்துறை கூறுவதை நான் ஏற்க வேண்டியதில்லை’ என்கிறார்.

  ‘வருமான வரித்துறை ஏற்ற கணக்கை ஒப்புக் கொள்ள வேண்டியதில்லை’ என்று பாட்னா ஹைகோர்ட் அப்படிக் கூறியிருப்பதாகச் சொல்கிறார். ஆனால், பாட்னா ஹைகோர்ட்டின் அந்தத் தீர்ப்பு 2010ல் சுப்ரீம் கோர்ட்டால் ரத்து செய்யப்பட்டுள்ளது (கைதட்டல்). மேல் நீதிமன்றத்தால் ரத்தான ஒரு தீர்ப்பை, இந்த நீதிபதி பிடித்துக் கொண்டுள்ளார். செத்துப் போன ஃபிலாஸபியான கம்யூனிஸத்தை டி.ராஜா பிடிச்சுக்கற மாதிரி, இந்த நீதிபதி அந்த ரத்தான தீர்ப்பைப் பிடிச்சுக்கக் கூடாதா? (சிரிப்பு, பலத்த கைதட்டல்). அதுபோல உயிர் இல்லாத தீர்ப்பைப் பிடித்துக் கொண்டு, அதன் அடிப்படையில் இவர் ஒரு தீர்ப்பைக் கொடுத்துள்ளார்.

  ஆனால் விவரமறிந்தவர்கள் மூலம் நான் கேள்விப்பட்டது, வருமான வரித்துறையால் ஏற்றுக் கொள்ளப்பட்ட கணக்குகளுக்கு மதிப்பு உண்டு என்பது தவிர, அது கட்டுப்படுத்தக் கூடியதும் ஆகும் என்பதுதான். அந்தத் துறை, தீவிரமாக ஆராய்ந்துதான் கணக்குகளை ஏற்கிறது. தவிர அந்த வருமான வரித்துறை, அப்போது ஜெயலலிதாவுக்கு வேண்டிய அரசு நடந்தபோது இந்த முடிவுகளுக்கு வரவில்லை (கைதட்டல்). அதையும் நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட பல அம்சங்களும் அந்த சொத்து வழக்கில் உள்ளன. அப்பீல் அவருக்குச் சாதகமாக இருக்குமா, எதிராக இருக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

  இந்த வழக்கில் ஒன்றுமே கிடையாது என்று நான் தீர்மானமாகச் சொல்ல முன் வரவில்லை. அது எனக்குத் தெரியாது. ஆனால், அவரது தரப்பில் சொல்லக் கூடிய இப்படிப்பட்ட வாதங்களும் இருக்கின்றன. இவை எல்லாம் பெங்களூரு அப்பீல் விசாரணையிலோ அல்லது சுப்ரீம் கோர்ட்டிலோ என்ன ஆகப் போகிறது என்பதைப் பார்க்க வேண்டும். வழக்கின் தீர்ப்பைப் பொறுத்து இங்கு அரசியல் நிலைமைகள் உருவாகலாம்.

  ஜெயலலிதா விடுதலை என்று வந்துவிட்டால், இங்கு மீண்டும் அ.தி.மு.க.தான் வெற்றி பெறும் என்று நான் நிச்சயமாக நினைக்கிறேன் (கைதட்டல்). ஏனென்றால், இதற்கு மாற்று இல்லை. பா.ஜ.க. உருவானால்தான் உண்டு. தி.மு.க.வை மாற்றாக யாரும் கருதவில்லை……

 21. R.Palanikumar சொல்கிறார்:

  ஜெ. விடுதலையானது மகிழ்ச்சிதான். ஆனால் அதற்கு தமிழ் நாட்டு நலன்கள் என்னென்ன விலையாக பேசப் பட்டுள்ளதோ..?அதை நினைக்கும் போது தான் பயமாக உள்ளது.
  (அதெல்லாம் சரி ,அதென்ன போர்க்குணம் உடைய சமூகம்? தமிழர்கள் அனைவருமே போர்க் குணம் உடையவர்கள் தான்..போர்க் குணம் அற்ற தமிழ் சமூகம் எதுவும் உண்டா?உங்களின் இடுகைளில் இத்தகைய தேவையற்ற கருத்துக்களை எப்போதும் தவிருங்கள்.)

  • ரிஷி சொல்கிறார்:

   தேவர் சாதியினர் ‘ஆண்ட பரம்பரை’ என்று தங்களைக் குறிப்பிடுவதால், கா.மை. அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டிருக்கலாம். சசிகலா, இளவரசி ஆகியோரும் ‘போர்க்குணம்’ உடையோர்தான். ஆனபோதிலும் பதினெட்டு ஆண்டு காலம் பொறுமையாக காத்திருந்து நீதியை நிலைநாட்டியிருப்பது சிறப்புதானே. 🙂

   • R.Palanikumar சொல்கிறார்:

    ஓ..அவர்கள் தான் ஆண்ட பரம்பரை என்று அவர்களே தங்களை குறிப்பிட்டுக் கொள்கிறார்களா..? அப்புறம் என்ன ,அவர்களே தொடர்ந்து ஆளட்டும் என்று விட்டு விட வேண்டியதுதானே? ஜெ . ஏன் மீண்டும் முதல்வராக வேண்டும்? (நண்பர் ரிஷி என்ன கா.மை.யின் ஊது குழலா..?)

    • today.and.me சொல்கிறார்:

     .// (நண்பர் ரிஷி என்ன கா.மை.யின் ஊது குழலா..?)//
     இல்லை நண்பரே. உங்கள் பதிலில் இருந்து
     நீங்கள்தான் ஆண்ட பரம்பரைக்கும், ஜெவுக்கும் சிண்டுமுடிய நினைக்கும் எதிரி/உதிரிக் கட்சிகளின் ஊதுகுழல் போலத் தெரிகிறது.

     ரிஷியின் பதில்களை பலகாலம் தொடர்ந்து படித்திருந்தீர்களானால் அவர் அப்படி இருக்க வாய்ப்பே இல்லை என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும்.

    • ரிஷி சொல்கிறார்:

     பழனிக்குமார்,
     இந்தப் பதிவைப் பொறுத்தவரை, இது சார்ந்த விஷயங்களைப் பொறுத்தவரை கா.மை அவர்களுடன் முரண்படுகிறேன். அவரது வார்த்தைகளைக் கொண்டே நடந்திருக்கும் நிகழ்வை satire பாணியில் எள்ளல் செய்ய முற்பட்டேன். இதில் புன்னகைக்க விஷயமிருப்பதாகக் கருதினால் புன்னகைத்து விட்டு நகர்ந்துவிடுங்கள். அது சீரியஸ் பின்னூட்டமில்லை 🙂

 22. ரிஷி சொல்கிறார்:

  //But on entering into court as a case, the appellate is in the position to prove the complaint, at the same time court has to accept and announce as oolalvathi.
  Otherwise, if we say against the judgement or judge its contempt of court.//

  என்றால் கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பினை நாம் விமரிசித்தது சரியில்லை என்றாகிறதல்லவா??

  • today.and.me சொல்கிறார்:

   நண்ப ரிஷி
   கீழமை நீதிமன்றத் தீர்ப்பை விமரிசித்தது என்றுசொல்லுவதைவிட பெயிலில் அனுமதிப்பதற்காக சட்டவிதி மீறப்பட்டது, சட்டம் அனுமதித்ததை நீதிமன்றம் அனுமதி மறுத்தது என்பதுதான் சரியாக இருக்கும். மேலும் கீழமை நீதிமன்றத் தீர்ப்பிற்குப்பின் ‘Show me some leaniency’ என்று, குற்றம் சாட்டப்பட்டு கீழமை நீதிமன்றினால் தீர்ப்பளிக்கப்பட்டவர் கேட்டபின்பும் அதை மறுப்பதற்கு தகுதியான காரணம் இன்றியும் கீழமை நீதிமன்றம் சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட ஜாமீனை மறுத்திருக்கிறது. அதைத்தான் சென்ற அக்டோபரில் காமை எழுதினார் என்பதை நினைவூட்டுகிறேன்.

 23. today.and.me சொல்கிறார்:

  @ surya
  //You do not want to compare Jaya and Salman as cases are differnet, but want to compare both their bail plea. v funny!//
  ஆமாம் நண்பரே. இருவேறுபட்ட வழக்குகளை ஒப்பிடுவது தவறுதான்.

  ஆனால் தாங்கள் ஒப்பிட்டே ஆகவேண்டும் என்று நினைத்தீர்களானால் சட்டத்திற்குட்பட்டு,நீதிமன்றத்திற்குள் என்னவிதமான சட்டவிதி முந்தைய வழக்கிற்கு மீறப்பட்டது என்றும், அதே சட்டவிதி பிந்தைய வழக்கிற்கு அனுமதிக்கப்ட்டது என்றும் ஒப்பிடுவதுதானே லாஜிக் ஆக இருக்கமுடியும். அதைத்தான் கூறினேன்.

  மற்றபடி நீங்கள் குறிப்பிட்டுள்ள இருவழக்குகளும் ஒப்பிடத்தகுந்தவை அல்ல.

 24. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  இது அரசியல் பழிவாங்கும் குற்றச்சாட்டுதான். காரணம், குற்றம் சாட்டுபவர்கள் இதைப் போலப் பல மடங்கு கொள்ளை அடித்துள்ளனர். அரசியல்வாதிக்கு வெட்கம், மானம், சூடு, சுரணை எதுவும் கிடையாது என்பதைக் கருணானிதியின், ‘மனசாட்சி’ பேச்சு சொல்லும். ஆனாலும், ஜெ 91-96ல் செய்தது தவறுதான். அதற்கு மக்களிடம் அவர் தண்டனை பெற்றுவிட்டார். அதனை அவர் realize பண்ணிவிட்டார் என்றே நான் நினைக்கிறேன். அவர் ‘இலவச’.. வழங்குவதைக் குறை கூறுபவர்கள், அவரைக் குறைகூறுவதை விடத், தங்களை, தங்கள் உறவினர்களை, சமூகத்தைத், தமிழினத்தைக் குறை கூறவேண்டும். இந்த விமரிசகர்கள், ப.சி. முந்திய தடவை சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றதற்கு, கருணானிதியில் இலவச டி.வி போன்ற அறிவுப்புகளே காரணம் என்று சொன்னபோது எங்கே போயிருந்தார்கள்?

  உங்கள் கட்டுரை தரமான விமரிசனம். ஓ.பி.எஸ் (அரசியல்வாதிக்குரிய காசு ஒதுக்குவது போன்ற குற்றச்சாட்டுக்கு ஆளானாலும்) அம்மாவின் தொண்டர் என்பதை நிரூபித்துள்ளார். வேறு எந்தக் கட்சியிலும் இது சாத்தியமில்லை. ஓபிஎஸ் பாராட்டுக்குரியவர். அத்தகைய தொண்டர்களைப் பெற்ற ஜெவும் பாராட்டுக்குரியவர். நீங்கள் (போர்க்குணம் உள்ள) குறிப்பிட்ட அடைமொழியிலும் எந்தத் தவறும் இல்லை. இதனைச் சரிவரப் புரியாதவர்கள்தான் விமரிசனம் செய்வார்கள்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.