தீர்ப்பும் அதைத் தொடர்ந்த விவாதங்களும் ….

.

நேற்றைய இடுகையில், இரண்டு விஷயங்களைப் பற்றி எழுதி
இருந்தேன். ஒன்று திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களை அவரது
பொறுமை மற்றும் விசுவாசத்திற்காக பாராட்டி….

மற்றொன்று மீண்டும் முதல்வர் பொறுப்பு ஏற்கவிருக்கும்
ஜெ. அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து…

இரண்டுமே சில நண்பர்களுக்குப் பிடிக்கவில்லை.
அவர்கள் கூறும் காரணங்கள் என்ன என்று திரும்பத் திரும்ப
படித்துப் பார்த்தேன்.

பொதுவாக –

1) திரும்பத் திரும்ப நீதிபதி குமாரசாமி அவர்களின் தீர்ப்பைக்
குறைகூறி எழுதுகின்றனர்.

2) ஊழல் செய்தவர்களை ஆதரிக்கலாமா என்று கேட்கின்றனர்.

3) சிலர் – முன்னதாக ஜெ. அவர்கள் கைது செய்யப்பட்டு
பங்களூரு சிறையில் அடைக்கப்பட்டபோது நான் கர்னாடகா காவிரி
நதி நீர் பிரச்சினைக்காக பழி தீர்த்துக் கொள்கிறது என்று சொன்னது
இப்போது இன்னொரு கர்னாடகா நீதிபதி இந்த வழக்கில் ஆதரவாக தீர்ப்பு
தந்திருக்கும் நிலையில் எப்படிப் பொருந்தும் என்று கேட்கின்றனர்.

4) இதை அப்படியே போடுகிறேன் – “Just one question… Are we saying
18 years of trial for JJ was just politically motivated and no facts on it?

5) இது இன்னொருவர் –
One things is sure the end my KM gives a wring direction. She may be iron lady
nonetheless corrupt and tooooooooo greedy. I dont know what KM the today and me
thinks and how tam supports such calculations. fateful.

– இவை எல்லாவற்றிற்குமே என்னால் சரியான விளக்கங்களை
அளிக்க முடியும்……..அளிக்க விரும்புகிறேன்.

ஆனால் – அதற்கு முன்னதாக, மேற்கண்ட பின்னூட்டங்களின் மூலம்
நான் கவனித்த ஒரு முக்கியமான விஷயத்தை,
இந்த விமரிசனம் தளத்தின் வழக்கமான வாசக நண்பர்களின் பார்வைக்கு
கொன்டு செல்ல விரும்புகிறேன்.

ஏனெனில், கடந்த சில வருடங்களாக தொடர்ந்து
இந்த தளத்தை படித்துக் கொண்டும்,
இதில் பின்னூட்டங்களின் மூலம் தங்கள் கருத்துக்களைப்
பதிவு செய்து கொண்டும்,
இங்கு நடைபெறும் விவாதங்களில் ஆக்கபூர்வமாக
பங்கெடுத்துக் கொண்டும் – இருக்கும் நண்பர்களுக்கு என்னுடைய
பார்வையும் கோணங்களும் நன்றாகவே பரிச்சயமானவை.
அவர்கள் யாருக்கும் நான் இப்போது எழுதுவது எதுவும்
விரோதமாகத் தோன்றாது.

அதே போல், பொதுவாக வழக்கமாக பின்னூட்டங்கள்
எழுதும் நண்பர்களிடமிருந்து எந்தவித எதிர்ப்பும் இல்லை.
(ஒன்றிரண்டு பேரைத்தவிர …அவர்கள் நிலை எனக்கு
ஏற்கெனவே நன்கு தெரியும் …)

அத்தகைய நிலையில், நேற்று நான் என்ன எழுதி விட்டேன் என்று
மீண்டும் ஒரு முறை பார்த்தால் –

—————————–
2014, அக்டோபர் 18ந்தேதி, வீட்டுக்குள் சென்றவர் –
இன்று -( 2015 மே 11,) வரை வீட்டை விட்டு வெளியே வரவில்லை….
தன் மீது சுமத்தப்பட்ட பழியும், களங்கமும் நீங்காமல்
வீட்டை விட்டு வெளியே வருவதில்லை – என்று
வைராக்கியத்துடன் காத்திருந்த
ஜெ.ஜெயலலிதா அவர்களின் மன உறுதி என்னை
பிரமிக்க வைக்கிறது.
மீண்டும் தமிழகத்தின் முதலைமைச்சர் பொறுப்பை ஏற்கவிருக்கும்
அவருக்கு நமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

—————————

இதில் நீதிபதி குமாரசாமி அவர்களின் தீர்ப்பைப்பற்றி நான் எதுவுமே
கூறவில்லை. எனவே ஜெ. அவர்களின் வைராக்கியத்தையும்,
மன உறுதியையும் நான் பாராட்டி எழுதியது தான்
இத்தகைய எதிர்ப்பு பின்னூட்டங்களின் காரணம் என்று தெரிகிறது.

எனது இந்த வார்த்தைகள் யாரை பாதித்திருக்கும்…..?

தள்ளாத வயதுடைய 82 வயது மனைவியை,
தான் தப்புவதற்காக சிபிஐ யிடம் ஒப்படைத்தவரும்,

8 மாதங்கள் ஊழல் வழக்கில் திஹார் சிறையில் இருந்து
ஜாமீனில் வெளிவந்திருக்கும் மகளையும்,
1.76 லட்சம் கோடி 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிக்கி
உலகப்புகழ் பெற்ற கொள்கை பரப்பு செயலாளரையும் ஒரு பக்கத்திலும் –

700 கோடி ரூபாய் லஞ்ச ஊழல் வழக்கில் சிக்கி இருக்கும்
இரண்டு பேரன்களை மற்றொரு பக்கத்திலும், வைத்துக் கொண்டு –

“மனசாட்சியே உலகத்தின் உயர்ந்த நீதிமன்றம்” என்று
கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் கூறும் தமிழகத்தின்
மிக மூத்த அரசியல்வாதியின்
ஆதரவாளர்களை மட்டுமே என் வார்த்தைகள் பாதித்திருக்கும்
என்று என்னால் உணர முடிகிறது….!!!

நீதிபதி குன்ஹா அவர்களின் தீர்ப்பைப்பற்றியும்,
நீதிபதி குமாரசாமி அவர்களின் தீர்ப்பைப்பற்றியும் –
அதில் சம்பந்தப்பட்டவர்களைப் பற்றியும் – எனக்குத் தெரிந்ததை
நான் பின்னொரு சமயம் விவரமாக எழுதுகிறேன்.

இந்த இடுகையை நாளை மீண்டும் தொடர இருக்கிறேன்.
( அதற்குள்ளாக, இதற்கு வரும் பின்னூட்டங்களையும்
கருத்தில் எடுத்துக் கொண்டு…..)

எனவே, இந்த இடுகையின் மீது தங்கள் கருத்துக்களைத்
தெரிவிக்க விரும்பும் நண்பர்கள் அதற்குள்ளாக பின்னூட்டங்களின்
மூலம் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இன்னொரு விஷயம் –
நான் ஜெ. அவர்கள் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்ட சமயம்
எழுதிய இடுகையை மீண்டும் ஒரு முறை இப்போது படித்துப் பார்த்தேன்.
( https://vimarisanam.wordpress.com/2014/10/01/ )
அதில் எழுதப்பட்டிருக்கும் ஒரு வார்த்தையைக் கூட மாற்ற வேண்டிய
அவசியம் இல்லை என்பதை இப்போது மீண்டும் உறுதி செய்கிறேன்.
நண்பர்கள் வசதிக்காக – அதை மீண்டும் கீழே பதிப்பித்திருக்கிறேன்.

——————————————-

ஜெயலலிதாவுக்கு நிகழ்வது – அப்பட்டமான பழிவாங்கல்….
( Posted on ஒக்ரோபர் 1, 2014 by vimarisanam – kavirimainthan )

இந்த விமரிசனம் வலைத்தள நண்பர்கள் அனைவருக்கும்
நன்கு தெரியும். நான் எந்த கட்சியின் ஆதரவாளனுமல்ல …
அதே நிலையில் இருந்து கொண்டு தான் இந்த இடுகையை
எழுதுகிறேன் என்பதை இதை படித்து முடிக்கும்போது மீண்டும்
உணர்வீர்கள் என்று நம்புகிறேன்.

செல்வி ஜெயலலிதா அவர்கள் 18 ஆண்டுகளுக்கு முன்
குற்றப்பத்திரிக்கையில் சொல்லப்பட்டிருக்கும் குற்றங்களில்
ஈடுபட்டாரா இல்லையா என்பது பற்றி அல்ல இந்த இடுகை.

அவர் மீது சாட்டப்பட்ட குற்றங்கள் சந்தேகத்திற்கிடமின்றி
நிரூபிக்கப்பட்டு விட்டனவா இல்லையா என்பது பற்றியும் அல்ல
இந்த இடுகை. இந்த விஷயங்களை எல்லாம் தாண்டி –

அவர் மீது தண்டனை விதிக்கப்பட்ட விதமும்,
அதன் பிறகு அவருக்கு நடக்கும் நிகழ்வுகளும் –
பற்றியே இங்கு விவாதம்.

சுப்ரமணிய குன்ஹா என்கிற ஒருமித்த சக்தி ஒன்றைப்பற்றி,
நேற்றைய செய்தி ஒன்றின் மூலம் தெரிய வருகிறது.

ஏதோ ஒரு கோர்ட்டில் பதிவாளராக ( கவனிக்கவும் –
நீதிபதியாக அல்ல பதிவாளராக ) பணி செய்துகொண்டிருந்தவர்
10 மாதங்களுக்கு முன்னர் இந்த வழக்கை ‘எப்படியாவது’ விரைவில்
முடிக்க வேண்டும் என்கிற உத்திரவுடன் (?) அனுப்பப்படுகிறார்.
அதன் பிறகு வழக்கு புதிய வேகத்துடன்,
வித்தியாசமான அணுகுமுறையுடன் முன்னேறுகிறது – முடிகிறது….!!!

பொதுவாக, கிரிமினல் வழக்குகளில் தண்டனை விதிக்கப்படுவது
குறித்து – சுப்ரீம் கோர்ட் சில நடைமுறைகளை அறிவித்திருக்கிறது.

வழக்கு விசாரணகள் முடிந்த பிறகு, ஒரு நாள் குறித்து,
குற்றம் சாட்டப்பட்டவரை நேரடியாக கோர்ட்டுக்கு வரவழைத்து –
அவர் மீது சாட்டப்பட்டுள்ள குற்றங்கள் எவ்வித சந்தேகத்திற்கும்
இடமின்றி நிரூபிக்கப்பட்டு விட்டன என்றும், அந்த கோர்ட்
அவரை “குற்றவாளி” என்று தீர்மானிப்பதாகவும் அறிவித்து விட்டு,

தீர்ப்பு கூற மற்றொரு நாளைக் குறித்து, தனக்கு விதிக்கப்படும்
தண்டனை பற்றி குற்றவாளி ஏதேனும் கூற விரும்பினால், கூறலாம் –
கோர்ட் அதை அனுமதிக்கிறது என்று கூற வேண்டும்.
பின்னர் குற்றவாளி தண்டனை பற்றிய தனது வேண்டுகோளை
முன்வைக்கலாம். அதன் பின்னர் அடுத்த நாளில், அல்லது
குறிப்பிடப்படும்` வேறோரு நாளில் தண்டனையை அறிவிக்க வேண்டும்.
இது தான் சுப்ரீம் கோர்ட் கூறியுள்ள நடைமுறை.

இந்த வழக்கில் இந்த நடைமுறை சுத்தமாக மீறப்பட்டுள்ளது.
காலை 10 மணிக்கு கோர்ட்டுக்கு வரவழைக்கப்பட்டவர் மாலை
5.30 மணி வரை அங்கேயே தங்க வைக்கப்பட்டு, அதன் பின்னர்
அன்றே – தண்டனையை நிறைவேற்றும் சடங்கு முடிகிறது.

அதாவது சனிக்கிழமை முகூர்த்தம் குறித்து,
(மறுநாள் ஞாயிறு – அப்பீலுக்குப் போக முடியாது – அதன் பிறகும்
ஒருவாரம் தொடர்ச்சியாக தசரா விடுமுறை) நேரடியாக
சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.

ஒரு மாநிலத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் –
முதலமைச்சராக கோர்ட்டுக்கு வருபவர்,
தண்டனை விதிக்கப்பட்டு நேரடியாக
சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்படுகிறார் என்றால் –
தனது அரசியல் சட்ட பொறுப்புக்களை பின் ஒப்படைக்க
கால அவகாசம் கொடுக்க வேண்டாமா ? நாள் கணக்கில்
இல்லாவிடிலும் குறைந்த பட்சம் ஒரு 2 மணி நேரமாவது
தன் சகாக்களிடம் மாற்று ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை செய்ய
அனுமதியளிக்க வேண்டாமா …?

தண்டனையை விதித்த பிறகு, நீங்கள் மாற்று ஏற்பாடு செய்து
கொள்ளவும், உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் பெறவும் வசதியாக
உங்களுக்கு ஒரு வார காலம் அவகாசம் கொடுக்கப்படுகிறது –
என்று சொல்லி இருந்தால் – கோர்ட்டின் பாரபட்சமின்மையை
புரிந்து கொள்ள முடியும் …? இந்த அணுகுமுறை இல்லாமல்
போனது ஏன் …? சட்டத்தில் இதற்கு நிச்சயம் இடம் இருக்கிறது –
ஆனால் ஆணை இடுபவர் மனதில் இல்லாமல் போனது ஏன் ….?

சரி – சிறைக்குச் சென்ற பிறகும் ஏன் இத்தனை கெடுபிடிகள்…?
முதலமைச்சர் பொறுப்பில் இருந்தவரை நேரடியாக காராக்கிருகத்துக்கு
கொண்டு வந்து விட்டார்கள் – அவர் பார்த்துக்கொண்டு வந்த
பல பொறுப்புகள் பாதியில் இருக்கும். அதனை முழுமையாகச்
செய்ய ஆலோசனை பெற ஒரு மாநிலத்தின் தலைமைச்செயலாளர்
வந்தால், அவரை பார்க்க அனுமதிக்க மறுத்தது ஏன் …?
ஒரு நாள் முழுவதும், கிட்டத்தட்ட 7 மணி நேரம், ஒரு மாநிலத்தின்
தலைமைச்செயலரையும், ஆலோசகரையும் – சிறை வாசலில்
நிற்கவைத்து திருப்பி அனுப்பி – அவமதித்தது ஏன் …?

சரி – மறுநாள் ஜாமீனுக்கு பெட்டிஷன் கொடுத்தால், அதற்கடுத்த நாள்
விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று சொல்லி விட்டு,
மறுநாள் விசாரணைக்கு வந்தால் – மீண்டும் அடுத்த வாரம் தான்
விசாரணை என்று சொன்னது என்ன காரணத்தால்….?

அரசாங்க வக்கீலுக்கு உரிய நேரத்தில் அனுமதி உத்தரவு கொடுக்காதது
ஏன்…? இது கவனக்குறைவா அல்லது வேண்டுமென்றே செய்யப்பட்டதா….?
தனியாக ஒருவக்கீல் நியமிக்கப்படாத நேரங்களில்,

கோர்ட்டில் வழக்கமாகச் செயல்படும்
state govt.standing counsel தானாகவே இந்த வழக்கிலும் சேர்த்துக்கொள்ளப்
படுவது தான் மரபு. இல்லையென்றால், அட்வகேட் ஜெனரலுக்கு
தகவல் போகும். உரிய நேரத்தில் யாராவது ஒரு அரசு வக்கீல்
அனுப்பப்படுவார்…அது இங்கே நடக்காதது ஏன் …?

மீண்டும பதிவாளரைப் பார்த்து விசேஷ அனுமதி கோரி,
அரசு வக்கீலுக்கும் ஆணை வந்து, கோர்ட் கூடினால் –
வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமலே –
அடுத்த வாரம் ரெகுலர் கோர்ட் விசாரிக்கும் என்று சொல்லிவிட்டு
போய்க்கொண்டே இருக்கிறார்……

முக்கியமான வழக்கு – ரெகுலர் கோர்ட் தான் விசாரிக்க வேண்டும்
என்பது கோர்ட்டுக்கு வரும் முன்பு தெரியாதா ?
அல்லது பதிவாளருக்குத்தான் தெரியாதா ?
முன்னதாகவே தலைமை நீதிபதியிடம் கலந்து ஆலோசனை
செய்திருக்க மாட்டார்களா ..?
ஏன் எல்லாரையும் வரவழைத்து அவமானப்படுத்த வேண்டும் …?
ஏன் டென்ஷனை, பரபரப்பை அதிகரிக்க வேண்டும்….?

எல்லாருக்கும் இன்று வெளியே வந்து விடுவார் என்கிற எதிர்பார்ப்பை
உண்டுபண்ணி விட்டு, பின்னர் மீண்டும் தள்ளிப் போடுவதன்
பின்னணி என்ன ….? வேறு எங்கிருந்தாவது உத்திரவு எதாவது
எதிர்பார்க்கப்படுகிறதா …?

இப்படி மாற்றி, மாற்றி இழுத்தடித்தால் – ஏற்கெனவே
கொதித்துப்போயிருக்கும் கட்சித்தொண்டர்களிடம் இது டென்ஷனை
அதிகரிக்காதா ? அல்லது வன்முறையைத் தூண்ட வேண்டும்
என்பது தான் உத்தேசமா…?

இரண்டு மாநிலங்களுக்கிடையே ஏற்கெனவே ஏகப்பட்ட
பிரச்சினைகள். காவிரி நீர் சம்பந்தமாக தகராறுகள்….
கோர்ட் வழக்குகள். கர்நாடகா அரசுக்கு தமிழ்நாட்டின் மீதும்,
சிறையில் இருக்கும் செல்வி ஜெயலலிதா மீதும் ஏகப்பட்ட
காழ்ப்புணர்ச்சி….
இந்த நிலையில் – உணர்வுகளுடன் விளையாடும் இத்தகைய
செயல்கள் இயல்பானவை தானா ?

கர்னாடகா அரசில் அதிகாரத்தில் இருக்கும்
காங்கிரஸ் கட்சிக்கு வெறுப்பு….
காங்கிரஸ் தலைமைக்கு சொல்லோணா வெறுப்பு …
சு.சு.வின் மறைமுக சித்து வேலைகள் தொடர்கின்றன….
இத்தனையையும் வாய் திறவாமல் வேடிக்கை பார்த்துக்
கொண்டிருக்கிறது பாஜக தலைமை …

காவிரி பிரச்சினை, முல்லைப் பெரியாறு பிரச்சினை,
கச்சத்தீவு பிரச்சினை, தமிழக மீனவர் பிரச்சினை
என்று மாறி மாறி தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கும் –
அம்மா போனால் – திண்ணை நமக்குத்தான் என்று
ஆவலுடன் காத்துக் கிடக்கிறது தமிழக பாஜக.

இவர்கள் அத்தனை பேரும், தனித்தனியாகவும்,
கூட்டாகச் சேர்ந்தும் செய்வது –
‘அப்பட்டமான பழிவாங்கல்’ அல்லாமல் வேறென்ன…..???

———————————————–

பின் குறிப்பு ( இரவு 11 மணிக்கு புதிதாக சேர்க்கப்பட்டது )-

அவசரமாக வெளியே செல்ல நேர்ந்ததால், முன்னதாக
ஒரு முக்கியமான விஷயத்தை எழுதத் தவறி விட்டேன்.
வழியிலேயே நினைத்துக் கொண்டேன் – வந்தவுடன்
எழுத வேண்டுமென்று –
———-

கர்னாடகா அரசு பழி தீர்த்துக்கொள்கிறது என்று நான்
சொல்வதற்கு மிக வலுவான காரணம் ஒன்று இருக்கிறது.

நடுநிலையோடு நடந்து கொள்ள கர்னாடகா அரசு
நினைத்திருந்தால் – அது ஜாமீன் மனுவை எதிர்த்திருக்கக்
கூடாது.
ஜாமீன் பெறுவது என்பது தண்டனை பெற்றவர்களுக்கு
சட்டம் அளிக்கும் ஒரு உரிமை. அதை உரிய முறையில்
கேட்டுப்பெற எல்லா குற்றவாளிகளுக்கும் உரிமை உண்டு.

சாதாரணமாக எல்லா வழக்குகளிலும் அரசு தரப்பு
ஜாமீன் மனுவை எதிர்ப்பதில்லை –

குற்றவாளிகள் சாட்சியத்தை கலைத்து விடக்கூடிய வாய்ப்பு
இருக்கும்போதும், ஜாமீனில் விட்டால் தப்பியோடி விடுவார்
என்று கருதப்படும்போதும், மிகக்கொடிய (கொலை, சதி போன்ற)
குற்றங்களில் சம்பந்தப்பட்டிருக்கும்போதும் தான் ஜாமீன்
கோரிக்கையை அரசு தரப்பு எதிர்க்கும்.

– இந்த காரணங்கள் எதுவுமே, ஜெயலலிதா அவர்களின் வழக்கில்
பொருந்தாது. 18 ஆண்டுகளில் கலைக்காத சாட்சியங்களையா
அவர் புதிதாகக் கலைக்ககூடும்…? மேலும், ஆவணங்கள் அனைத்தும்
ஏற்கெனவே நீதிமன்றத்தின் கஸ்டடியில் தான் இருக்கின்றன.
மேலும், உயர்நீதி மன்ற அப்பீலில் ஆவணங்களும், வக்கீல்களின்
வாதங்களும் மட்டுமே இடம் பெறும்.

– எனவே கர்னாடகா அரசு மிகுந்த காழ்ப்புணர்ச்சியோடு,
பழி தீர்த்துக் கொள்ளூம் விதத்தில் தான் ஜாமீன்
மனுவை எதிர்த்து பதில் மனு தாக்கல் செய்திருக்கிறது என்பது
வெளிப்படை. வக்கீல் பவானி சிங் செயல்பட்டது
கர்னாடகா அரசின் உத்திரவின்படி தான்.

ஜெயலலிதா அவர்களுக்கும், கர்னாடகா அரசுக்கும் சொந்தப்பகை
எதுவுமில்லை. காவிரிப் பிரச்சினை தான் அவர்களது இடையே
உள்ள பகைக்கு காரணம். காவிரி நீர் வழக்கு தமிழ் நாட்டின் பிரச்சினை.
எனவே, இந்த கோணத்தில் பார்த்தால், தமிழ் நாட்டு மக்களை
தண்டிக்க வாய்ப்பில்லாத சமயத்தில் ஜெயலலிதா அவர்கள்
மாட்டினார் – அவர்கள் பழி தீர்த்துக்கொள்கிறார்கள்….

வழக்கின் நியாயம், தண்டனையின் நியாயம் – எப்படி இருந்தாலும்,
கர்னாடகா செய்தது ஒரு பழிவாங்கும் செயல்தான் என்பதில்
எந்தவித சந்தேகமும் இல்லை. (காங்கிரஸ் தலைமையும்,
காங்கிரஸ் ஆட்சியும் என்பதும் ஒரு காரணம்….)

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

48 Responses to தீர்ப்பும் அதைத் தொடர்ந்த விவாதங்களும் ….

 1. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  இன்னுமொரு விஷயம் – பின் குறிப்பில் எழுத நினைத்திருந்தேன் –
  விட்டுப்போய் விட்டது. அதனால் முதல் பின்னூட்டமாக நானே
  எழுதி விடுகிறேன்……

  சில நண்பர்கள் நீதிபதி குமாரசாமி அவர்களின் தீர்ப்பை சந்தேகப்படுகிறார்கள் –
  விமரிசிக்கிறார்கள். ….
  அவர்களுக்கு இந்த தீர்ப்பை சந்தேகப்படவோ, விமரிசிக்கவோ – உரிமை
  இருக்கிறதென்றால் –
  மற்றவர்களுக்கும் கீழமை நீதிமன்றத்தில் நீதிபதி குன்ஹா அவர்கள்
  கொடுத்த தீர்ப்பை சந்தேகிக்கவும் – விமரிசிக்கவும் உரிமை இருக்கிறது தானே ..?

  இது – தப்பானது என்று சொல்பவர்கள் –
  அது தப்பானது என்று சொல்வதையும் ஏற்கத்தயாராகத்தானே
  இருக்க வேண்டும்….?

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

  • today.and.me சொல்கிறார்:

   //மற்றவர்களுக்கும் கீழமை நீதிமன்றத்தில் நீதிபதி குன்ஹா அவர்கள்
   கொடுத்த தீர்ப்பை சந்தேகிக்கவும் – விமரிசிக்கவும் //

   கீழமை நீதிமன்றத்தில் குற்றத்தை முழுமையாக நிரூபிக்கத் தவறியதற்காக வழக்கறிஞருக்கு குட்டும் கொடுத்து, அந்த வாதத்தை அப்படியே கண்மூடித்தனமாக ஏற்று அளிக்கப்பட்ட நீதிபதியின் தீர்ப்பையும் சந்தேகப்பட்டு, சந்தேகத்தின் பலனை குற்றம்சாட்டப்பட்டவருக்கு அளிக்கும் வகையில் வழக்கை தள்ளுபடி செய்கிறேன்.
   இதை நான் சொல்லவில்லை, ஜட்ஜ் குமாரசாமி ஐயா தான் என்பதை நண்பர்களுக்கு பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

 2. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  நான் நல்லவன் மற்றவறெல்லாம் கெட்டவர்கள்
  நான் கெட்டன் மற்றவறெல்லாம் நல்லவர்கள்
  நான் நல்லவன் மற்றவறெல்லாம் நல்லவர்கள்
  நான் கெட்டவன் மற்றவறெல்லாம் கெட்டவர்கள்

  இப்படி மனித எண்ணங்களை நான்கு விதமாக பிரிக்கலாம்.
  கடைசியாக இருப்பது தமிழக அரசியல்வாதிகளின் எண்ணங்கள்!
  இந்த எண்ணத்தை இப்போது நம் மக்களும் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்துவிட்டனர்.
  ஒருவர் தவறு செய்தால் அதை தவறு என்று ஒப்புக்கொள்ளாமல், உடனடியாக அடுத்தவரை காட்டி, அவர் தவறிழைக்கவில்லையா என்றுதான் பதிலளிக்கின்றனர்.

  காமை அவர்களின் இந்த இடுக்கையும் அதே வகையில்தான் உள்ளது. ஒருவர் தவறிழைத்தார். அவருக்கு தண்டனையோ விடுதலையோ அதைப்பற்றி மட்டும் பேசாமல், அத்தோடு அடுத்தவரின் குற்றம் இதைவிட பெருசு. அதுக்கு ஆப்பும் பெருசு. எனவே இந்த குற்றம் ரொம்ப சிருசு ஆகவே இப்போ கிடைத்த தீர்ப்பு மிகச்சரி என்பது சின்னப்பிள்ளைத்தனமாக உள்ளது.

  ஆக மொத்தத்தில் “உப்பு தின்னவன் தண்ணி குடிக்கவேண்டும்” என்ற பழமொழி நேற்று(11-05-2015) முதல் காலாவதியாகிவிட்டது.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   இதற்கான விளக்கத்திற்கு தயவுசெய்து நாளை வரை
   பொறுத்திருக்க வேண்டுகிறேன்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • நக்கீரன் சொல்கிறார்:

    ஏன் நாளை வரை காத்திருக்க வேண்டும் ?

    இப்போதே சொல்கிறேனே;
    சீனியாரிடிபடி தானே எல்லாம் நடக்க வேண்டும் ?
    1975-லேயே சர்க்காரியா கமிஷனால் விஞ்ஞஅன முறையில்
    ஊழல் செய்தவர் என்று தீர்ப்புகூறப்பட்ட கருணாநிதி தானே
    முதலில் தண்டிக்கப்பட வேண்டும்.
    100 ரூபாய் வாங்கிய கிளார்க்கா, லட்சம் ரூபாய் வாங்கிய
    மேனேஜரா யார் முதலில் தண்டிக்கப்பட வேண்டும் ?
    திருவாளர்கள் கருணாநிதி, அவர் மகள், மகன், ஆ.ராசா,
    மாறன் பிரதர்ஸ், பொன்முடி, துரைமுருகன், ஜெகட்ரச்சகன்,
    இவர்களைத்தான் முதலில் கவனிக்க வேண்டும்.
    முதலில் திமுக அப்புறம் அதிமுக அது தான் நியாயம்.

    • today.and.me சொல்கிறார்:

     முந்திரிக்கொட்டைதனமாக கருத்துக்கூறாமல் நாளைவரை பொறுக்கலாமே?
     நக்கீரன் பேரு வச்சிக்கிட்டாலே அப்படித்தானா?

   • Lala சொல்கிறார்:

    அதுக்கான விளக்கத்தைத்தான் ( ?? ) தீர்ப்பு வந்த நாளிலிருந்தே தந்து கொண்டே இருக்கிறீர்களே ? இன்னும் முடியலையா ?
    இதுக்கு மேலையும் சப்பை கட்டு கட்டலாம்னா நினைக்கிறீங்க ?

   • soul சொல்கிறார்:

    Mr. KM, I said back when you published the first article – if you cannot prove your side of justifications in 18 years, then better prepared to accept the judgement on Saturday. Do you really think JJ is innocent for last 18 years?

 3. Uttamavillan சொல்கிறார்:

  Hi, you dont have to justfy as your admk kudimi is already visible, to say this i dont have to be BJP or DMK, can you atleast answer to question raised here http://www.savukkuonline.com/11643/
  will you able to at least point out one good thing done in last 4 years. Dont just show as neutral as writing only against BJP, DMK…

  • today.and.me சொல்கிறார்:

   ஆரம்பத்தில் அவர்கள் குறிப்பிட்டுள்ள ஆதாரம் இறுதியில் இல்லை உத்தமவில்லன் அவர்களே. இங்கே அதிமுக குடுமி தெரிகிறது என்று சொல்வதற்கு நீங்கள் பிஜேபி அல்லது திமுக குடுமியாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை. தேமுதிக குடிமகனாகவோ மதிமுக வாகவோ ஆப்பு சர்வாதிகாரியாகவோ கூட இருக்கலாம்.

   சவுக்கை உதாரணம் காட்டும்போதே திமுக கொண்டைதான் நான் இங்கே இருக்கிறேன் என்று காட்டிக்கொடுத்துவிடுகிறதே. போகட்டும். நீங்கள் உத்தம வில்லனாகவே இருந்துவிட்டுப்போங்கள்.

   ‘சவுக்கு’ தீர்ப்பின் நகலை முழுமையாகப் படிக்காமல் அல்லது மற்றவர்களைப் படிக்கவிடாமல் மறைக்கிறது, மெத்தப் படித்த மேதாவிகளையும் திசைதிருப்புகிறது. ஏனென்றால் அவர்கள் நோக்கமே அதுதான். சவுக்கை சுழற்ற ஆள்கிடைக்காமல், அப்பாவி மக்கள்மீதே திருப்புகிறது. கணக்கீடுகளில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை,.

   சவுக்கைப் படிக்காமல் வெறுமனே தீர்ப்பின் நகலை மட்டும் படித்தாலே இந்த உண்மை எளிதாக விளங்கும்.

   உங்களுக்கு எழுதப்படிக்க அடிப்படைக் கணக்கு தெரியும்தானே. 920 பக்கத்தையும் படித்துவிட்டு கருத்துச் சொல்லவும். இங்கே தேவையில்லாமல் சவுக்கைச் சுழற்றுகிற வேலை வேண்டாம்.

   • Uttamavillan சொல்கிறார்:

    சவுக்கை உதாரணம் காட்டும்போதே திமுக கொண்டைதான் நான் இங்கே இருக்கிறேன் என்று காட்டிக்கொடுத்துவிடுகிறதே.

    Savukku is instrumental in releasing 2G tab and many article against DMK too.

  • நக்கீரன் சொல்கிறார்:

   அகோ வாரும் பிள்ளாய் உத்தமரே,
   உம் குடுமியழகைத்தான் பார்த்தோமே காலியரங்கில்;
   திரையில் அறுத்தது போதாது என்று இங்கும்
   வந்து விட்டீரோ ?
   இத்தனை நாள் இல்லாமல் தொப்பென
   இங்கு வந்தே குதித்ததும் தெரியலையோ நீர் யாரென்று ?
   போய் அய்யனுக்கு சாமரம் வீசும்.
   சவுக்கு தானே நும் தலைவனுக்கு இப்போது சாமரம்.

 4. Pingback: தீர்ப்பும் அதைத் தொடர்ந்த விவாதங்களும் …. | Classic Tamil

 5. yogeswaran சொல்கிறார்:

  i pity the tamils

  waste of time

  god bless

 6. drkgp சொல்கிறார்:

  Dear KMji,
  Have you noticed how prominently The Hindu is displaying the adverse views
  on the verdict and their wishful longings in the editorial page? I can understand
  the nervousness and fear psychosis of the opposition parties but not the same
  from the national daily. It definitely smacks neutrality .

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   டாக்டர் KGP,

   ஹிந்து வின் தனி விரோதம் ஏற்கெனவே தெரிந்ததே…
   ஆனால், இவ்வளவு வெளிப்படையாக வெளிவருவது
   இது தான் முதல் தடவை…

   ஒரு national daily என்கிற மதிப்பெல்லாம்
   ஹிந்து இழந்து நீண்ட நாட்களாகி விட்டது – இல்லையா ?

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 7. ஆரூர் சலீம் சொல்கிறார்:

  என்ன காவிரி மைந்தன் சார், நீங்கள் இந்த தீர்ப்பை இப்படியான கோணத்தில் பார்ப்பீர்கள் என்று நான் நினைக்கவில்லை. சுப்ரமணிய சாமியை பற்றி அறிந்த நீங்களா, இந்த தீர்ப்பில் அவரின் பங்களிப்பின் புறக்கணித்தீர்கள்?

  ஜெயலலிதா அவர்கள், தமிழகத்தின் நலனுக்கேற்ற தலைவர், முதல்வர் என்பதை நான் மறுக்கவில்லை. நான், அவரது தீவிர ஆதரவாளர் தான். ஆனால், இன்றைய தினமலர் செய்தியை பார்த்தீர்களா? பார்லிமென்டில் வைத்து அ.தி.மு.க.வின் நவநீதக்கிருஷ்ணனும், சுப்ரமணிய சுவாமியும் கைகுலுக்கிக்கொண்டுள்ளார்கள். இதைப்பார்த்த மற்ற அ.தி.மு.க. எம்.பி.க்கள், ஓடோடி வந்து நவநீதக்கிருஷ்ணனை, என்னையா காட்டிக்கொடுத்து விடுவாய் போலிருக்கிறதே என்கிற ரீதியில் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றிருக்கின்றனர். இதைப்பார்க்கும்போது என்ன தோன்றுகிறது? அம்மாவே நீங்கள் பொம்மை முதல்வராக இருக்கிறது என்றால் சொல்லுங்கள், நாங்கள் உங்களுக்கு விடுதலையை தருகிறோம் என்று பேரம் பேசித்தான் சு.சுவாமி இந்த தீர்ப்பை வழங்கியிருக்கிறாரோ என்று தோன்றுகிறது. அதைவிட, முந்தாநாள் தி இந்துவில், சுப்ரமணிய சுவாமிக்கு முன்கூட்டியே தீர்ப்பு தேதி தெரிந்தது எப்படி என்று தலைப்பில் ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது. அதிகாரப்பூர்வமாக நீதிமன்றம் வாயிலாக தீர்ப்பு தேதி வருவதற்கு முன்னதாகவே, மே 11 இல் தீர்ப்பு வெளியாகும் என்று சு.சுவாமி தனது டிவீட்டில் டிவிட்டியிருந்து. இது எப்படி? ஆக, கூட்டி கழித்து பார்த்தால், இப்போதைய அம்மா சும்மா என்றே தோன்றுகிறது. அம்மாவின் மவுனமே இதற்கு சாட்சி.

 8. NS RAMAN சொல்கிறார்:

  You own statmenet in Sep

  “ஜெயலலிதா அவர்களுக்கும், கர்னாடகா அரசுக்கும் சொந்தப்பகை
  எதுவுமில்லை. காவிரிப் பிரச்சினை தான் அவர்களது இடையே
  உள்ள பகைக்கு காரணம். காவிரி நீர் வழக்கு தமிழ் நாட்டின் பிரச்சினை.
  எனவே, இந்த கோணத்தில் பார்த்தால், தமிழ் நாட்டு மக்களை
  தண்டிக்க வாய்ப்பில்லாத சமயத்தில் ஜெயலலிதா அவர்கள்
  மாட்டினார் – அவர்கள் பழி தீர்த்துக்கொள்கிறார்கள்….”

  Is Kaveri issue is fully resolved.!!! or Kaveri issue compramised for the judgement according to your earlier view. Pl. clarify.

 9. Surya சொல்கிறார்:

  “””செல்வி ஜெயலலிதா அவர்கள் 18 ஆண்டுகளுக்கு முன்
  குற்றப்பத்திரிக்கையில் சொல்லப்பட்டிருக்கும் குற்றங்களில்
  ஈடுபட்டாரா இல்லையா என்பது பற்றி அல்ல இந்த இடுகை.

  அவர் மீது சாட்டப்பட்ட குற்றங்கள் சந்தேகத்திற்கிடமின்றி
  நிரூபிக்கப்பட்டு விட்டனவா இல்லையா என்பது பற்றியும் அல்ல
  இந்த இடுகை.””””

  ஒன்று புரியவில்லை. அம்மா குற்றங்களில் ஈடுபட்டாரா இல்லையா என்று இடுகை பேசி இருக்கலாமே. ஏன் அதை இந்த இடுகை பேச விரும்பவில்லை?

  Lala குறிப்பட்டது போல், ஏன் திமுக அநியாயம் பற்றி இங்கே தொடர்ந்து பேச வேண்டும்.

  குமாரசாமி கணுக்கு ரொம்ப சிம்பிள் – கூட்டி கழித்து போட்டு 10 சதவிகிதம் உள்ளே வித்தியாசம் வர வேண்டும். பொதுவாக தமிழன் கணக்கில் புலி. இங்கே தமிழனுக்கே தப்பு கணுக்கு போட்டு ஏமாற்றுகிறார்கள்!

  • today.and.me சொல்கிறார்:

   //ஒன்று புரியவில்லை// அந்த இடுகை எழுதப்பட்ட நாளைக் கவனி்த்திருந்தீர்களானால் புரிந்திருக்கும்.
   🙂
   எங்கே? நம் கவனமெல்லாம் நிரந்தரமாக ஜெவை எப்படி உள்ளே தள்ளுவது என்பதிலேயே இருக்கிறதே.

   //தமிழனுக்கே தப்பு கணுக்கு போட்டு ஏமாற்றுகிறார்கள்!//
   கணக்கில் தவறு இல்லை. முடிந்தால் தீர்ப்பின் நகலைப் படிக்கவும்.

   • Surya சொல்கிறார்:

    இந்த இடுகை 12-மே எழுதியது (பழையதை refer பண்நீருந்தலும்) . ம்… 10-மே தானே அம்மா தினம் 😉

    புதிதாய் ஒன்று எழுதலமே !!

    • today.and.me சொல்கிறார்:

     திரும்பவும் முதல்ல இருந்தா?
     அந்த இடுகை
     ( Posted on ஒக்ரோபர் 1, 2014 by vimarisanam – kavirimainthan ) அன்று பதிவிடப்பட்டது. அன்றைய தினத்தில் நிகழ்ந்த அரசியல் நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது. அதை் அப்படியே கா.மை. எடுத்துக்காட்டியுள்ளார்.

     புதிதாய்…. எழுதியிருக்கிறார் போல. வந்துவிட்டது. பாகம் 2.

 10. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  காவிரி ஐயா.. தமிழர்கள் பெரும்பாலும், நடுனிலை எண்ணம் கொண்டவர்கள் அல்ல. எந்தத் தீர்ப்பையும், கட்சி, மதம், ஜாதி போன்ற கண்ணோட்டத்திலேயே எல்லோரும் (பெரும்பாலானவர்கள்) அணுகுகிறார்கள். 60 சதவிகிதம் கொண்டவர் ஜெயில் செல்லாமல் தப்பிப்பதும், 20 சதம் கொண்டவர்கள் திகாருக்குச் செல்வதும் எப்படி நடந்தது? இதுவரை அதிகாரத்தில் அமர்ந்த அரசியல்வாதி யார்தான் கொள்ளை அடிக்கவில்லை? ஜெ. நிச்சயம் 96க்கு அப்புறம் திருந்தியிருக்கிறார். அதில் எந்த சந்தேகமும் தோன்றவில்லை.

  இன்றைக்கு ஜெ விடுவிக்கப்பட்டதனால், நிறைய பேரின் கனவு கலைந்திருக்கிறது. அம்மா டம்மி என்று பேசுவதிலும், பிஜெபியுடன் இணைந்துவிட்டார் என்று பேசுவதிலும் சிலருக்குத் திருப்தி. எனக்கு அவ்வாறு எண்ணத் தோன்றவில்லை. இனி மறுபடியும் அப்பீலுக்குச் சென்றாலும், இது பல வருடம் இழுக்கும்.

  ஜெ இப்போது ஆறு மாதத்தில் மக்களைக் கவரும் செயல்களில் ஈடுபட்டுப் பின்பு தேர்தலைச் சந்திப்பார். எந்தக் காரணம் கொண்டும், பி.ஜெ.பியுடன் இணைந்து தேர்தலைச் சந்திக்க மாட்டார். இப்போது கருத்துத் தெரிவிக்கும் ஒவ்வொரு அரசியல்வாதிக்கும் அதற்கான காரணம் இருக்கிறது.

 11. கிரி அனகை. சென்னை. சொல்கிறார்:

  ஜாதி, மதம், கட்சிகளுக்கு அப்பாற்பட்டு பேசுவோம் ..
  கொலை குற்றவாளி சல்மான் கான் 5ஆண்டு சிறை தண்டனை, ஆனாலும் உள்ளே போகாமலேயே ஜாமீன்!..
  சத்யம் ராமலிங்க ராஜூமேல் முறையீட்டை விசாரித்த செஷன்ஸ் நீதிமன்ற பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு நீதிபதி எம், லட்சுமண் நேற்று ராமலிங்கராஜூவுக்கு, ஜாமீன் வழங்கியும், விதித்த 7 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்தும் உத்தரவிட்டார் ..
  ஜெயலலிதா உட்பட நால்வருக்கும் சிறப்பு நீதிமன்ற தீர்ப்பையே ரத்து செய்து கர்நாடக உயர்நீதி மன்ற தனி நீதிபதி குமாரசாமி உத்தரவு . இப்படி பட்ட தீர்ப்புகள்தான் நீண்டு கொண்டே போகிறது .
  மக்கள் அரசியல்வாதிகளை நம்புவதில்லை, நீதியின் மீதிருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் போய் விட்டது.. இனி என்ன நடக்கும்சொல்லுங்கள்.. .

  • கோபாலன் சொல்கிறார்:

   கோடிக்கணக்கான மக்களின் பிரார்த்தனைக்கு கடவுள் செவி சாய்த்துவிட்டார் என்று கூறுகிறார்கள். இனி தமிழகமெங்கும் ஒரு ரூபாய்க்கு இட்லி கிடைக்கும்.

   கோபாலன்

  • today.and.me சொல்கிறார்:

   நண்ப கிரி,
   திறமையாக குன்ஹா தீர்ப்பினால் அனுபவித்த சிறைவாசத்தை மறைத்துவிட்டீர்களே
   🙂
   எதை எப்படி மறைக்கவேண்டும் என்ற வித்தை தெரிந்தவர்கள் தானே .

   • Lala சொல்கிறார்:

    Yes, 4 days is very looooong term imprisonment. Giri shouldn’t have hidden it.

    • today.and.me சொல்கிறார்:

     செப்டம்பர் 27ல் இருந்து அக்டோபர் 17 வரை 4நாள்கள் தானாக்கும்.
     உங்கள் அடிப்படைக் கணக்கு அறிவு புல்லரிக்கவைக்கிறது.

     கிரி அவர்களின் கருத்தில் ‘சல்மான் கான் உள்ளே போகாமலேயே ‘ கோட்ட் அவருக்கு ஜாமீன் அனுமதித்தை எழுதியிருக்கிறாரே. அதைக்குறித்து ஏதாவது கருத்து இருக்கிறதா கந்தசாமி அவர்களே…..

     🙂

     • today.and.me சொல்கிறார்:

      நண்பர் லாலா,
      ஒரே ஒரு நாள் என்றாலும் அதை மறைக்கவேண்டிய அவசியம் என்ன என்பதுதான் என் கேள்வி. அப்புறம்? சல்மான்கேஸில் எத்தனை நிமிடங்கள் உள்ளே இருந்தார். அதைப்பற்றி ஏதாவது பதில்??? கிரி அவர்களிடம் இல்லை என்று தெரிகிறது. உங்களிடம் ஏதாவது?

 12. Sathish சொல்கிறார்:

  Hello Sir,
  This is my first comment, please forgive me if my understanding is wrong.
  Regarding the page 852 issue (Maths error), would like to bring my view.

  That mistake is probably a typo or information hidden somewhere.
  If you look at 1st figure 1,50,00,000 borrowed from Indian Bank – in this just add one 0 extra – the maths will be correct (if it is typo)
  That 13,50,00,000 difference is might be instead of 15 crores, they might have put 1.5 crores.

  Karnataka court will give explanation soon as everyone talking about this. (They may give different reasons).

  Thanks,
  Sathish

  • today.and.me சொல்கிறார்:

   தொல்லைக்காட்சிகளிலும், விவாதமேடைகளிலும் 851ம் பக்கத்தை விட்டுவிட்டு வந்து விதண்டாவாதம் செய்கிறார்கள். முதல்பக்கத்தில் இருக்கிறது முடிச்சு. குமாரசாமி செய்யாமல் விட்டுவிட்டது, Brought forward என்ற வரியைப் போடாததுதான். ஆனால் அதற்குப் பதிலாக Besides போட்டிருக்கிறார்.

   மற்ற நண்பர்களுக்கு,

   தமிழனுக்குத்தான் ஆங்கிலமும் தெரியாது, இந்தியும் தெரியாது. சட்டஅறிவும் கிடையாது. அரசியல் அறிவும் கிடையாது. ஒன்லி தனிமனித துதி. அதனால்தான் ஜெவைப் பற்றி வசவுகளும், முக – ஸ்டாலின்-மருத்துவர்-வி.கா.-துதிகளும்.

   ஆமாம். ஜெ பதவியில் ஏறிவிடக்கூடாது என்பதுமட்டுமல்ல,நிரந்தரமாக சிறைவாசம் அனுபவித்தால் ஒழிய மற்றயாரும் அரியணை ஏறமுடியாது என்பது மற்ற அனைத்து உதிரிகட்சி தலைவர்களுக்குத் தெரியும். அதனால்தான் இந்தமாதிரி தப்புத்தப்பாகக் கணக்குப்போட்டு பரப்புகிறா்ர்கள்.

   ஒருவேளை, ஒருவேளை அனைத்து உதிரிகளும் ஒன்றாய்க்கூடி மேல்முறையீடு செய்தால், அதை உயர்நீதிமன்றம் எடுத்துக்கொண்டால், அந்த ஐட்ஜ் தீர்ப்புச் சொல்லமாட்டார், கணக்குப் பாடம் நடத்துவார். முதலில் 1ம்வாய்ப்பாடு, 2ம் வாய்ப்பாடு எல்லாம்வரிசையாகப் படித்துவிட்டு கடைசியில் 852ம் வாய்ப்பாடு படிங்கப்பா தமிழர்களே என்று.

   கேவலம்.

   • today.and.me சொல்கிறார்:

    ஒரு அப்டேட்.
    ஒருவேளை ஒருவேளை என்று சொன்னேன் அல்லவா?
    அதை திமுக தரப்பு வக்கீலே வேறுமாதிரி உறுதிப்படுத்தியிருக்கிறார்.

    http://tamil.oneindia.com/news/india/jaya-case-court-can-correct-but-not-change-verdict-says-senior-counsel-cv-nagesh-226692.html

    தீர்ப்ப மாத்தமுடியாதாம்.

    இப்பொழுதே தன்பிள்ளையை 2016ல் முதல்வராக்கிறனும்னு ஒரு டாக்டர் கர்நாடகாவில் போய் உட்கார்ந்து மேல்முறையீடு பண்ணுங்கன்னு கெஞ்சிக்கிட்டு இருக்கார்.
    🙂 🙂
    பெரிய பல்பாத்தான் வாங்கப்போறார்.

 13. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  நண்பர் டுடேஅண்ட்மீ,

  அற்புதமாகவும், விருவிருப்பாகவும் பின்னூட்டங்களை
  எடுத்துச் செல்கிறீர்கள். இந்த வலைத்தளத்திற்கு
  நீங்கள் ஒரு மிகப்பெரிய சொத்து…….
  (தகுதிக்கு மீறி சொத்து சேர்த்ததாக என் மீது வழக்கு வந்து
  விடப்போகிறது…..! )

  உங்கள் ஈடுபாட்டிற்கு மிக்க நன்றி நண்பரே…

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

  • today.and.me சொல்கிறார்:

   காமைஜி
   //தகுதிக்கு மீறி சொத்து சேர்த்ததாக என் மீது வழக்கு வந்து
   விடப்போகிறது…..! //
   வரவுக்கு மீறி என்று எழுதியிருக்வேண்டும். அப்படிப்பார்த்தால் இங்கே வருகை தருகிற வரவுகளின் எண்ணிக்கை மிக அதிகம். அப்படியெல்லாம் வழக்கு வராது. கவலையேபடாதீர்கள்.
   🙂

  • Kamal சொல்கிறார்:

   So, do you agree with today and me’s comments regarding savukku that savukku is a DMK supporter?

 14. ரிஷி சொல்கிறார்:

  சவுக்கின் சமீப பதிவுகளை நான் படிக்கவில்லை. அவரது தளம் முடக்கப்பட்டபின் அதிகம் அவரது பதிவுகளை தேடிப் படிக்க முடியாமல் போய்விட்டது. ஆனால் சவுக்கு ஆரம்பிக்கப்பட்டதே திமுக ஆட்சிக்காலத்தில் சவுக்கு சங்கருக்கு தனிப்பட்ட வகையில் நிகழ்ந்த கொடுமைகள்தானே? அதனால்தானே அரசு அலுவலகங்களில் தன் நெட்வொர்க்கை பயன்படுத்திக்கொண்டு பல விஷயங்களை வெளிச்சம் போட்டுக் காட்டி திமுக அரசினையும், திமுக சார்பு அதிகார வர்க்க ஆளுங்களையும் பகைத்துக்கொண்டார்? அவர் எப்போதிருந்து திமுக ஆதரவாளர் ஆனார்? நண்பர் டுடே அன்ட் மீ விளக்குங்கள்.

  • today.and.me சொல்கிறார்:

   சும்மா குருட்டாம் போக்கு கணக்கு ஒன்று, திமுக தலைமையால் விலைக்கு வாங்கமுடியாத ஒரே ஆள் ஜெ மட்டும்தான்.

   • Kamal சொல்கிறார்:

    Are you trying to say that Savukku put all his efforts in releasing 2G scandal tapes for DMK leadership? Or they bought him after that release?

   • Lala சொல்கிறார்:

    கருணாவாவது தனக்கு வேண்டாதவர்களை தன் பக்கம் வளைப்பதற்கு பல தந்திரங்களை கையாண்டு தன்பக்கத்துக்கு எடுத்து விடுவார்.

    ஆனால் ஜெயாவோ தன்னை எதிர்ப்பவர்கள் மீது பொய் கஞஞா வழக்கு போட்டு பெயிலில் கூட வெளிவர முடியாபடி உள்ளெ வைத்து விடுவார்.

    இந்த பாஸிச வாதிக்கு அந்த பிஸனஸ் அரசியல்வாதி எவ்வளவோ மேல்

 15. yarlpavanan சொல்கிறார்:

  சிறந்த திறனாய்வுப் பார்வை
  தொடருங்கள்

 16. victor சொல்கிறார்:

  இரண்டு ரயில் தண்டவாளம் அருகருகே இருக்கு..

  ஒன்றில் எப்பவுமேரயில் வராது….மற்றொன்றில் ரயில் அடிக்கடி வரும்…

  ரயில் வராத தண்டவாளத்தில் ஒரு குழந்தை விளையாடிக் கொண்டிருக்கிறது.

  ரயில் வரும் தண்டவாளத்தில் பத்து குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கிறது.

  அத்தருணத்தில் ரயில் வருகிறது….தூரத்தில் இதனை நீங்கள் பார்க்கிறீர்கள்..உங்களுக்கு அருகே ட்ராக் மாற்றும் கருவி இருக்கிறது….நீங்கள் யாரை காப்பாற்றுவீர்கள்….??

  இப்படி ஒரு கேள்வியை நேற்று ஒரு விழாவில் ஒருவர் கேட்டார்…ப்ரக்டிகலாக பதில் சொல்லனும் நாம் யாரும் சூப்பர் மேன் இல்லையென்றும் சொன்னார்…..

  உண்மையாக நாம் என்ன செய்வோம்…?? ஒரு குழந்தை விளையாடு்ம் இடத்திற்கு தானே ட்ராக்கை மாற்றிவிடுவோம்..

  ஏனெனில் 10 குழந்தைகள் காப்பாற்றப் படுமே என்றார்….

  .உண்மை தான் என்றோம்

  இன்றைய சமூகமும் இப்படித்தான் உள்ளது.
  ரயில் வரும் என்று தெரிந்து தப்பு செய்யும் குழந்தைகள் காப்பற்றபடுகிறது…

  ரயில் வராத இடத்தில் யாருக்கும் தொந்தரவு தராமல் தப்பே செய்யாத குழந்தை தண்டனை பெறுகிறது….

  இன்றைய சூழலில் நம் வாழ்கையும், நம் நாடும் இப்படிதான் இருக்கிறது என்று அழகாக சொல்லி முடித்தார்…

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.