தீர்ப்பில் குழப்பம் – இன்னும் ஏன் தொடர வேண்டும் …..?

Supreme-Court1

துவக்கத்திலேயே சொல்லி விடுவது நல்லது…..!!!
இந்த இடுகையில் – தீர்ப்பைப் பற்றியோ,
தீர்ப்பு சொன்ன நீதிபதியைப் பற்றியோ எந்தவித
குறைசொல்லலும் இல்லை….!

பின் வேறு என்ன ….?
தீர்ப்பில் கூறப்பட்டுள்ள சில கருத்துக்களினால் ஏற்படக்கூடிய
சாதக, பாதங்களைப் பற்றிய ஒரு அவசிய அலசல்…!

கணக்கு கூட்டலில் தவறு இருப்பது பற்றி –
கலைஞரைக் கூட ஒரு காலத்தில் கடுமையாக விமரிசித்த –
மிகவும் பரபரப்பான – ஒரு வலைத்தளத்தில் வந்த
முதல் தகவல் தான் கலைஞர் கையில் ஆயுதமாக மாறியது.

அவர் கொடுத்த “கணக்குல தப்பு – தீர்ப்பே செல்லாது ” குரலோசையை –
கனவு கலைந்து போன டாக்டர் ராமதாஸ், விஜய்காந்த், ஈவிகேஎஸ்
என்று அனைவரும் வரிசையாக ஆளாளுக்கு திரும்ப திரும்ப குரல்
கொடுக்கத் துவங்கவே தமிழுலகமே விழித்துக் கொண்டது….!!!

பரபரப்பான இந்த செய்தி தமிழர்கள் அனைவரையுமே யோசிக்கச்
செய்து விட்டது. தீர்ப்பு மாறிப்போனால் – தமிழகத்தின் அரசியலையே
அது தலைகீழாகப் புரட்டிப் போட்டு விடுமென்பதால்,
வலைத்தள அனுபவம் உடைய ஆயிரக்கணக்கான தமிழர்கள்
தீர்ப்பை தரவிறக்கம் செய்து, விவரமாகப் படிக்கத் துவங்கினர்.

விளைவு – ஏகப்பட்ட கோணங்களில் இந்த தீர்ப்பு அலசப்பட்டிருக்கிறது.
வலைத்தளம் முழுவதும், பல நண்பர்கள் இதை விவரமாக
விவாதம் செய்திருக்கிறார்கள்.

முதலில் ஒரு விஷயத்தை நான் அழுத்தமாகச் சொல்ல விரும்புகிறேன்.
கணக்கில் தவறு ஏற்பட்டிருப்பது உண்மை – அதை எல்லாருமே
உணர முடிகிறது. ஆனால், இந்த தவற்றால், தீர்ப்பின் முடிவு
மாற வாய்ப்பிருக்கிறதா …? இல்லையா …?

இதைச் சொல்ல முழு அருகதையும் உடையவர் தீர்ப்பை எழுதிய
நீதிபதி தான். அவர் இது குறித்து விளக்கம் தெரிவிக்க முயன்றதாகவும்
கர்நாடகா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி – அவரை அனுமதிக்கவில்லை
என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இந்த நிலையில், இது ஒரு “அப்பீல்” என்கிற முறையில்,
உச்சநீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, வழக்கமான நடைமுறைகள்,
வாதப்பிரதிவாதங்கள் எல்லாம் முடிவுற்றபின் இறுதித் தீர்ப்பு
வந்தால் தான் இந்த வழக்கு ஒரு முடிவுக்கு வரும்… அதற்கு
இன்னும் எத்தனை மாதங்களோ … அல்லது வருடங்களோ …?
யார் அறிவார்…?

அது வரையில் – இத்தனை குழப்பங்களும் தொடர வேண்டுமா ….?
எதிர்க்கட்சிகளைப் பொருத்த வரையில் – இந்த தீர்ப்பினால் விளையும்
சந்தேகங்களை அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளவே
முயல்வார்கள். எனவே, ஒருவேளை நியாயமான முறையில்
தீர்ப்பு கிடைத்து, அந்த தகுதியில் முதலமைச்சர் பொறுப்பை
ஜெ. அவர்கள் ஏற்றாலும் கூட, எதிர்க்கட்சித் தலைவர்கள் தொடர்ந்து
அவர் தகுதியைப்பற்றிய கேள்வியை எழுப்பிக் கொண்டே இருப்பார்கள்.

நிறைய பேர் தீர்ப்பை விவரமாகப் படித்து அலசி ஆராய்ந்து
இருக்கிறார்கள். ( நானும் 3 தடவை படித்துப் பார்த்து விட்டேன்..)

என் கருத்து – தீர்ப்பின் வாசகம் என்பது, அதன் கடைசி பக்கம்
மட்டுமல்ல. குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுகள்
ஒவ்வொன்றையும் எடுத்து, அலசி ஆராய்ந்து, அவற்றின் மீது
நீதிபதி தன் கருத்தை தெரிவிக்கும் ஒவ்வொரு வார்த்தையுமே –
தீர்ப்பின் ஒரு பகுதி தான்.

சாட்டப்பெற்ற குற்றச்சாட்டுகளில் சில –

லஞ்ச ஊழல் தடுப்புச் சட்டத்தின் விதிகளை மீறியது –
வரவுக்கு மிஞ்சிய அளவில் சொத்துக்கள் வைத்திருப்பது –
பினாமி பெயரில் சொத்துக்கள் வாங்கியது –
கூட்டுச் சதி –

இந்த குற்றச்சாட்டுக்கள் ஒவ்வொன்றையும் தனித்தனியே
எடுத்துக் கொண்டு, நீதிபதி – விவரமாக அலசி, விவாதித்து,
இறுதியில் ஒவ்வொரு குற்றச்சாட்டும் தவறானது –
நிரூபிக்கப்படவில்லை என்கிற முடிவிற்கு வந்து,
அதை எழுத்து பூர்வமாக பதிவும்
பண்ணி இருக்கிறார்.

அதையடுத்து, இந்த வழக்கு அரசியல் விரோதம் காரணமாக
போடப்பட்டிருக்கிறது என்றும் இத்தகைய வழக்குகளை
ஊக்குவிக்கக் கூடாது என்றும் கூறி இருக்கிறார்.

பின்னர் – லஞ்ச ஊழல் ஒழிப்பு துறையின் சார்பாக, சொத்துக்களை
மதிப்பீடு செய்ததில் நிகழ்ந்த தவறுகளை எல்லாம் விவரமாக
அலசி ஆராய்ந்து, பட்டியலிட்டு, அந்த மதிப்பீடுகள் எல்லாம்
ஏற்கத்தக்கவை அல்ல என்றும் கூறி இருக்கிறார்.

பின்னர் – குற்றம் சாட்டப்பட்டவர்கள் – வழக்கிலுள்ள
கால கட்டத்தில் ஈட்டிய வருமானத்தின் அளவுகளை
லஞ்ச ஒழிப்புத்துறை வேண்டுமென்றே குறைத்துக் காட்டி இருக்கிறது
என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

பல தலைப்புகளில் உள்ள வருமானங்களை கணக்கில் எடுத்துக்
கொள்ளாமலும்,
சிலவற்றில் குறைத்துக் காட்டியும், குற்றம்
சாட்டப்பட்டவர்களின் மொத்த வருமானத்தை வேண்டுமென்றே
குறைத்துக் காட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன
என்றும் கூறுகிறார்.

திருமணச் செலவில், பெண் வீட்டுக்காரர்கள், ஆதாரபூர்வமாக,
வங்கி செக் மூலம் செய்த செலவுகள் கூட,
குற்றம் சாட்டப்பட்டவர்கள் பேரில் சுமத்தப்பட்டிருக்கிறது –
இது வேண்டுமென்றே செய்யப்பட்ட தவறு என்றும் கூறுகிறார்.

மிக முக்கியமாக, நமது எம்ஜிஆர் சந்தா தொகை முன்பணமாக
பெறப்பட்டு, வருமான வரி இலாகாவாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட
சுமார் 14 கோடி ரூபாயை குற்றம் சாட்டப்ட்டவர்களின் வருமான
கணக்கில் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று கூறுகிறார்.

அதே போல், கொடநாடு டீ எஸ்டேட்டில் குறிப்பிட்ட காலகட்டத்தில்
கிடைக்கப்பெற்ற விவசாய வருமானம் சுமார் 7 கோடியையும்,
தங்களது வருமானக் கணக்கில் சேர்த்துக்கொள்ள குற்றம்
சாட்டப்பட்டவர்களுக்கு உரிமை உண்டு என்று கூறுகிறார்.

இவையெல்லாம் தவிர, கடைசியில், பொதுத்துறை வங்கிகளிடமிருந்து
பெற்ற கடன் தொகையை கூட்டும்போது, அதன் முன் பக்கத்தில்
சொல்லப்பட்டுள்ள சில தொகைகள் விடுபட்டுப் போயிருக்கின்றன.

நான் துவக்கத்தில் சொன்னது போல், தீர்ப்பின் கடைசி பக்கம் மட்டுமே
தீர்ப்பாகி விடாது. உச்சநீதி மன்றத்தில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு
வரும்போது, மேலே கூறியுள்ள அனைத்துமே கவனத்தில்
கொள்ளப்படும்.
எனவே – கணக்கு கூட்டலில் ஏற்பட்ட தவறு
காரணமாக தீர்ப்பின் முடிவு மாறி விடும் என்பது சரியான கருத்து அல்ல.

வெறும் கூட்டல் தவறு காரணமாக இந்த வழக்கின் தன்மை
பாதிக்கப்படவில்லை. பாதிக்கப்படாது….

மேல்முறையீட்டில், உச்சநீதிமன்றம்
நீதிபதி குமாரசாமி அவர்களின் கருத்துக்களை
ஏற்றுக் கொள்ளவில்லையென்றால் ஒழிய
இந்த தீர்ப்பு மாறப்போவதில்லை….!!!

இருந்தாலும் – சாதாரண பொது மக்களுக்கு இவற்றைப்பற்றி
எல்லாம் விரிவாகத் தெரிந்து கொள்ள வாய்ப்பு இல்லை.
எனவே, மீண்டும் உச்சநீதிமன்ற தீர்ப்பு வரும் வரை – ஒரு நிச்சயமற்ற
தன்மை நிலவிக்கொண்டே இருக்கும்.

அநாவசியமாக இந்த “டென்ஷன” நீடிப்பதில் யாருக்கு என்ன பயன் …?
(நிச்சயமற்ற நிலை நீடிக்க வேண்டுமென்று
விரும்புபவர்களும் உண்டு தான்…..!!! )

இந்த நிச்சயமற்ற தன்மையை முற்றிலுமாக போக்க முடியாவிட்டாலும்
வெகுவாகக் குறைக்க முடியும்….எப்படி ….?

இந்த விளக்கங்களை எல்லாம் நான் கூறுவதன் மூலம்
என்ன பயனும் விளையப்போவதில்லை.

ஒரு நல்ல சட்ட நிபுணரின் மூலம் மேற்கண்ட கருத்துக்கள் எல்லாம்,
சாதாரண மக்களுக்கு புரியும் வகையில் விவரமாக –
விளக்கமாக – ஆதாரங்களுடன் எடுத்து சொல்லப்பட்டால் –
குழப்பங்கள் குறைய வாய்ப்பு உண்டு.

செய்வார்களா …?

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

25 Responses to தீர்ப்பில் குழப்பம் – இன்னும் ஏன் தொடர வேண்டும் …..?

 1. dfmsolutionsbyredesign சொல்கிறார்:

  My opinion is JJ should not take up CM post now .JJ can continue to enjoy power without responsibility -similar to Sonia who enjoyed power without responsibility for 10 years .Campaign for 2016 elections without difficulty and probably win the elections and come back to power as CM of TN .In my opinion JJ will be doing only this pragmatically .

 2. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  //ஒரு நல்ல சட்ட நிபுணரின் மூலம் மேற்கண்ட கருத்துக்கள் எல்லாம்,
  சாதாரண மக்களுக்கு புரியும் வகையில் விவரமாக –
  விளக்கமாக – ஆதாரங்களுடன் எடுத்து சொல்லப்பட்டால் –
  குழப்பங்கள் குறைய வாய்ப்பு உண்டு.//

  சட்ட நிபுணர் என்றால் சுனா சானா போதுமா இல்லை அம்மா வீட்டுக்கு வந்து டீ சாப்பிட்டுச் சென்ற அருண் ஜெட்லீ தான் வேண்டுமா?
  அப்படியே இவர்களில் யார் சொன்னாலும் புதிய தீர்ப்புபடி (விளம்பரத்தில் பிரதமர், ஜனாதிபதி, நீதியரசர் படங்கள் மட்டும் வெளியிடுவது) மோடியும் குமாரசாமியும் சேர்ந்து எடுத்த செல்ஃபியைதான் போட்டாகவேண்டும்.
  “அம்மா சிங்கம்லே”ன்னு எல்லாம் போடமுடியாது.
  “அ………..சிங்கம்லே”ன்னு ஆகிவிடும்.

  என்னதான் சொல்லுங்க….
  “நாலு” பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்லை என்ற சினிமா வசனத்துக்கு எனக்கு இப்போதான் அர்த்தம் புரிந்தது!

  • prakash சொல்கிறார்:

   .Mr. Saidai aziz,

   A very fair and reasonable analysis has been made by Mr. Kavirimainthan
   in his above Blog article.
   If anyone wants to contradict the contents,
   they should do so only by showing reasonable and valuable arguments in turn.
   Instead, you have chosen some filty abuses to show your anger.
   This is no good.
   Be reasonable and if you have any valid points put them here
   in your reply to convince the other readers of tbe Blog.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   pinnoottam of su.su.nesan has been removed as the same is not in good taste

   -kavirimainthan

 3. Pingback: தீர்ப்பில் குழப்பம் – இன்னும் ஏன் தொடர வேண்டும் …..? | Classic Tamil

 4. Ramachandran. R. சொல்கிறார்:

  கே.எம்.சார்,

  இதை கொஞ்சம் பாருங்கள்
  http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=143385
  கருணாநிதி அவர்கள் பேசியது –

  // ஜெயலலிதாவுக்கு சட்டத்தின் மரபுகளுக்கு முரணாகச்
  செயல்பட்டு, தலைமை நீதிபதி தத்து, ஜாமீன் வழங்கியிருக்கிறார்.
  கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்வதற்கான காரணம்
  எதையுமே கூறாமல், நான்கே வரிகளில் தலைமை நீதிபதி தத்து
  ஜாமீன் உத்தரவை வழங்கியுள்ளார்.

  ஜெயலலிதாவுக்கு தலைமை நீதிபதி தத்து வழங்கியிருக்கும்
  இந்த “சூப்பர்” சிறப்புச் சலுகை முறைகேடானது.//

  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வரை இவர் குறை சொல்வது
  ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து மனிதரையும் கடிக்கும்
  …..யின் செயல் போல இல்லை ?

  • Lala சொல்கிறார்:

   வீடியோவைப்பார்த்தேன் . காழ்ப்புணர்ச்சி , வயித்தெரிச்சலை கருணாநிதி ஒரளவுதான் வெளிப்படுத்தியிருந்தார்.

   முழுமையாக , 100 %, எப்படி காழ்ப்புணர்ச்சியை , வயித்தெரிச்ச்சலை வெளிப்படுத்துவதென்பதை பார்க்க வேண்டுமா ?

   2006 மே இல் தேர்தல் முடிவுகள் வெளிவந்து திமுக அரசு அமைப்பது உறுதியாகிய அன்று மாலை போயஸ் தோட்டத்தின் முன் குவிந்த அதிமுக தொண்டர்கள் மத்தியில் அம்மையார் உரையாற்றிய உரையின் வீடியோ கிடைத்தால் பாருங்கள் புரியும்

 5. Ramachandran. R. சொல்கிறார்:

  இங்கு நடிகர் வடிவேலுவாகவே மாறிப் புலம்புகிறார் பாருங்கள்.
  92 வயதில் இந்த மனிதருக்கு எத்தனை வயிற்றேரிச்சல்-காய்ச்சல் ?

  இதுவும் http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=143385-லிருந்து தான்.

  //தீர்ப்பு வெளிவந்ததும், தமிழகம் முழுவதுமுள்ள அ.தி.மு.க.
  தொண்டர்கள் கொண்டாடினார்கள். அவர்களுடைய கட்சி நாளேட்டில்
  நூற்றுக்கு மேற்பட்ட பக்கங்களில் ஜெயலலிதாவைப் பாராட்டி
  விளம்பரங்கள் வெளிவந்தன. இது பற்றியெல்லாம் நமக்கு எந்த விதமான காழ்ப்புணர்ச்சியும் கிடையாது !
  (இவருக்கு காழ்ப்புணர்ச்சியே கிடையாதாம் !)

  உண்மையில் சொல்லப்போனால், ஜெயலலிதாவை சிறைக்கு
  அனுப்ப வேண்டும் என்பதோ, அவர் தண்டனை அனுபவித்திட
  வேண்டும் என்பதோ நம்முடைய விருப்பமே அல்ல !
  (ஜெயலலிதா ஜெயிலுக்கு போகக்கூடாது என்பதே இவரது விருப்பமாம் !)

  ஆனால் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதும், சட்டத்தின்
  ஆட்சியும் நீதியின் தனிச் சிறப்பான மாண்பும் நிலை நாட்டப்பட
  வேண்டும் என்பதே அனைவருடைய எதிர்பார்ப்பும் ஆகும் !

  (சட்டத்தின் ஆட்சியும், நீதியின் மாண்பும் தான் முக்கியமாம் –
  இந்த நேரத்தில் இவரது மகள் கனிமொழியும், பேரன்கள் மாறன்கள்,
  ஆஆ.ராசா ஆகியோர் இவர் நினைவிற்கு வரவில்லை பாருங்கள் !)

  நீதிபதி குன்ஹா அவர்கள் இந்த வழக்கினை எத்தனை மாதங்கள்
  நடத்தி, எவ்வளவுசிரமப்பட்டு ஆவணங்களையும், சாட்சியங்களையும்,
  வாதங்களையும் மிகக் கவனமாக ஆய்வு செய்துஒரு தீர்ப்பினை எழுதி, ஜெயலலிதாவுக்குத் தண்டனை விதித்திருக்கின்ற நிலையில்,
  அந்தத் தண்டனையை அப்படியே தலைகீழாக மாற்றி
  இந்தத்தவறுகளை உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி செய்திருக்கலாமா?

  (நீதிபதி குமாரசாமி தவறுகளைச் செய்து விட்டாராம் !)

  இதற்கிடையே நீதிபதி குமாரசாமி, தனது தீர்ப்பிலே மிகப் பெரிய தவறு
  இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டு, அவரே தனது தீர்ப்பில் மாற்றம்
  செய்யக் கூடும் என்ற ஒரு கருத்தும் கூறப்பட்டது.

  ஆனால்அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கர்நாடக உயர்
  நீதிமன்றத் தலைமை நீதிபதி அவர்களேதீர்ப்பில் திருத்தங்களை
  மேற்கொள்ளத் தடை விதித்திருக்கிறார் !

  நீதிக்கே பங்கம் நேர்ந்து விட்டதோ என்று அனைவரும்
  கவலைகொண்டிருக்கின்ற நிலையில்,
  நீதியைக் காப்பாற்ற வேண்டிய பெரும் பொறுப்பு நமது ஜனநாயகத்திலும்,
  அரசியல் சட்டத்திலும் நம்பிக்கை உள்ள ஒவ்வொரு வருக்கும் உண்டு.

  (நீதிக்கே பங்கம் வந்து விட்டதே என்று தான் இவருக்கு கவலையாம் !)

  குறிப்பாக இந்த நேரத்தில்கர்நாடக அரசுக்கு உண்டு.
  (கர்நாடகா சித்தராமையா காலி விழுகிறார். காவிரியை நீங்களே
  முழுவதும் பிடித்து வைத்துக் கொண்டாலும் போதும், ஜெ.மீது
  அப்பீல் மட்டும் போட்டுவிடுங்கள் எங்கிறார் )

  • Lala சொல்கிறார்:

   இதையே மறுவளமகவும் பார்க்கலாம்.
   கர்னாடக அரசு சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யாது விட்டால் அம்மையார் காவிரி பிரச்சனையில் தமிழக நலன் களை ஒட்டு மொத்தமாக கைகழுவி விட்டு விடுவார் என்பதற்கு பெரிய அரசியல் அறிவு ஒன்றும் தேவையில்லை.

   இப்போதெ கர்னாடக சட்ட அமைச்சர் மேன் முறையீடு செய்வது பற்றி பரிசீலித்து வருகிறோம் என கூறி வருகிறார்.
   எனவே இதற்கு பெரம் மும்மரமாக நடந்து வருகிறதென பொருள் காண்க..

   • Ramachandran. R. சொல்கிறார்:

    Poi karunavidamum dr.raamdoss ayyavidam koorungal
    intha vaarthaiyai.
    kalaignar sidharamaiyaavin kaalil vizhunthavar
    innum yezhunthirukkave illai.- appeal podum varai yezhunthirukka maattaaraam.

    dr. ramadoss, maniyai anuppi kannadaththil pEsi already surrender
    aagi vittaar.

    only karuna jalras will talk like this.

 6. bandhu சொல்கிறார்:

  இந்த விஷயத்தை இவ்வளவு குழப்பியது கொடுமை. common good என்பது ஒன்று தான் இதை மறக்கச் செய்கிறது. கருணாநிதி அவர்களுக்கு 92 வயதாகிவிட்டது. ஸ்டாலின் மீது குறை சொல்ல பெரியதாக ஒன்றும் இல்லை என்றாலும் தலைமை தாங்கும் பண்பு இருக்கிறதா என்பது கேள்விக்குறி. எல்லாவற்றையும் விட, ஜெயலலிதா உள்ளே இருந்தால் ஒரே ஒரு கட்சி மட்டுமே அசுர பலத்துடன் இருக்கும். என்னைப் பொருத்தவரை ஜெயலலிதா வெளியே இருந்த ஸ்டாலின் முதலமைச்சர் ஆனாலும் சம்மதமே. கருணாநிதியை பொருத்தவரை அவர் காலம் முடிந்து விட்டது என்று அவர் உணர வென்றும். வயது என்று ஒன்று இருக்கிறதே!

  • Lala சொல்கிறார்:

   தலைமை தாங்கும் பண்பு என்று எதை சொல்கிறீர்கள் ?
   அமைச்சர் பெருமக்கள் எல்லாம் நெடுஞ் சாண் கிடையாக படுத்துக்கிடப்பதையா ?

   பாதியாக , வில்லாக வளைந்து குனிந்து நிற்பதையா ?

   • bandhu சொல்கிறார்:

    அரசியல் ‘தொண்டர்கள்’ (including அமைச்சர்கள்) எல்லோரும், எல்லா கட்சியிலும் கை குவிப்பதோ, காலில் விழுவதோ.. தன் நலம் கருதியே.. அதனால், அகங்காரமோ.. திமிரோ.. எதுவானாலும், அதிமுக வில் தலைவருக்கு எதிராக ஒரு முணுமுணுப்பாவது உண்டா? அதே போல தான் கருணாநிதிக்கு எதிராகவும். அது போல ஒன்று ஸ்டாலினுக்கு இல்லை என்றே சொல்லவந்தேன்.

    • Lala சொல்கிறார்:

     அதாவது ஸ்டாலின் (ரஷ்யா ) ,இட்லர் , முஸொலினி, மாவோ போன்று கட்சியில் அவர்களை தவிர வேறொருவரதும் முணுமுணுப்பு கேட் க கூடாதென் கிறீர்கள்.

     ஆனால் திமுக ஸ்டாலின் இன்னும் கட்சி தலைவராகவில்லை.
     எனவே இப்போதே கணித்து சொல்வது சரியாக இருக்காது.

     ஏனைய தமிழகத்தின் ஏனைய கட்சிகளில் இருப்பவர்கள் தலைமைக்கு கட்டுப்பட்ட தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் .

     ஆனால் அதிமுகவில் இருப்பது தலைவர் ஒருவரை தவிர்ந்த அடிமைகள் .

   • today.and.me சொல்கிறார்:

    அதானே. எதுக்கு வில்லா பாதியாக்கூட குனியனும், மூட்டுவலி இருக்குல்ல….

    (function(d, s, id) { var js, fjs = d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js = d.createElement(s); js.id = id; js.src = “//connect.facebook.net/en_US/sdk.js#xfbml=1&version=v2.3”; fjs.parentNode.insertBefore(js, fjs);}(document, ‘script’, ‘facebook-jssdk’));

    இது எப்புடி இருக்குPosted by மன்னாதி மன்னன் on Sunday, March 2, 2014

 7. Killergee சொல்கிறார்:

  கோடி கோடி கோடி தலையைச்சுத்துது தெருக்கோடியிலே சோத்துக்கே வழியில்லாமல் எத்தனை கோடிப்பேர் ஏன் ? இந்த ஓட்டுப்போடும் பாமரர்கள் இருக்கின்றார்களோ…..

 8. edindia சொல்கிறார்:

  Mr. KM, you are always trying to emphasize all thru your articales and indirectly to force the readers to think that JJ only savior of TN. I know we have to choose best among the worst, but what makes you to keep praising on JJ? whats your view on last 4 years ADMK rule? never seen any comment on recent corrupt charges….

 9. Lala சொல்கிறார்:

  ## நமது எம்ஜிஆர் சந்தா தொகை முன்பணமாக
  பெறப்பட்டு, வருமான வரி இலாகாவாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட
  சுமார் 14 கோடி ரூபாயை குற்றம் சாட்டப்ட்டவர்களின் வருமான
  கணக்கில் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று கூறுகிறார். ##

  1991 இலிருந்து 19996 ஆம் அண்டு வரை நடைபெற்ற சொத்துக்குவிப்பு பற்றியே வழக்கு நடந்தது . ஆனால் பிரதிவாதியின் சட்டத்தரணிகள் 2004 ஆம் ஆண்டு வரை நமது எம்ஜீஆர் பத்திரிகையை விற்று 14 கோடியை (?? ) சம்பாதித்தார்கள் என சமர்ப்பித்த ஆதாரத்தை (?? ) அப்படியெ ஏற்று அந்த 14 கோடியையும் அப்படியே ஏற்று வருமானமாக சேர்த்து விட்டார் .

  காலநேரத்தை அப்படியே முன்னகர்த்தும் பின்னகர்த்தும் ஆற்றலை எப்படி அம்மையாரின் சட்டத்தரணிகளும் நீதிபதியும் பெற்றுக்கொண்டார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம்

 10. 'நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  தமிழ்னாட்டில்தான் எந்த விஷயத்துக்கும் அரசியல்சார்பாகக் கருத்துச் சொல்கிறார்கள். காவிரிமைந்தன் தீர்ப்பில் கொடுக்கப்பட்டுள்ளதைச் சொல்லியுள்ளார். மற்றவர்கள் அவர்கள் ஆசையைக் கூறியுள்ளனர். குன்’ஹா குத்துமதிப்பாகச் சொன்னபோது நேர்மையாகத் தோன்றியது, குமாரசாமி சொன்னபோது நேர்மையாகத் தோன்றாதது ஆச்சர்யம்தான். பட்டிமன்றம்மாதிரி, தீர்ப்பு சொல்லும்போது ஒரு பாயிண்டை வைத்துத் தீர்ப்புச் சொன்னாலும் அதை நோக்கிக் கொண்டுபோவதற்கு நிறைய பாயிண்டுகள் சொல்வார்கள். குமாரசாமிக்கு ஜெ மீது சொன்ன குற்றச்சாட்டிலும் ஆதாரங்களிலும் நியாயம் என்று தோன்றவில்லை. அதைத்தான் அவர் தீர்ப்பு முழுமையாகத் தெரிவிக்கிறது. இதனை எத்தனை முறை படித்தாலும் அவர் தீர்ப்பு நடுனிலையாளர்களுக்குத் தெளிவாகப் புரியும். ஒரு சதுர அடி கிரானைட் 20 ஆயிரம்(1991ல்) என்று சொல்லியிருப்பதே போதும், தமிழக ஊழல் தடுப்பு அதிகாரிகளின் நேர்மையைச் சொல்ல.

  இந்தத் தீர்ப்பை எதிர்ப்பவர்கள் அவர்களின் கனவு சிதைவதனால்தான் எதிர்க்கிறார்கள். சு.சுவாமி யாரைத்தான் குற்றம் சுமத்தவில்லை? நவம்பருக்குள் (2014) சோனியா உள்ளே இருப்பார் என்றார். 2ஜியில் கருணானிதி கூட்டம் உள்ளே செல்லும் என்று சொல்லியிருக்கிறார். (கலானிதி உட்பட). ஜெ. அரசியலில் இருக்கும்போது, பல முதலமைச்சர் கனவு கொண்டவர்களுக்கு வாய்ப்பு குறைவு. பேரம் பேசும் வாய்ப்பும் குறைவு. இத்தனை நியாயம் பேசுபவர்கள், ஏன் 2ஜி, டி.வி ஊழல், மருத்துவக் கல்லுரி ஊழல், டெலபோன் கேபிள் ஊழல் போன்ற வழக்குகளை உடனே நடத்த வேண்டும் என்று போராட மாட்டேன் எங்கிறார்கள்?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.