மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மிகவும் பரந்த மனது ……

.

டாக்டர் சுப்ரமணியன் சுவாமியின் கீழ்க்கண்ட ட்விட்டர் செய்தியையும்,
அவர் பிரசுரித்திருக்கும் புகைப்படத்தையும் பார்த்தவுடன் –
எனக்கு இந்த இடுகையை எழுதத் தோன்றியது.

twitter - swamy on stalin visit.jpg-2

stalin and s.swamy ....jpg-2

ஆனால் கூடவே ஒரு பிரச்சினையும் தலை தூக்கியது….

இந்த இடுகை வெறும் ட்விட்டர் செய்தியையும், புகைப்படத்தையும்
மட்டுமே கொண்டது – என் விமரிசனங்கள் எதுவும் இல்லை –
ஆதலால், பிரச்சினை இடுகையில் அல்ல …..

பிரச்சினை – தலைப்பில் தான் ….!!!

ஒரே சமயம் 4 தலைப்புகள் மனதில் தோன்றியது. அவற்றில் எதை
தேர்ந்தெடுப்பது என்று யோசித்து, யோசித்து பார்த்தேன்.
முடிவெடுக்க முடியவில்லை… இறுதியில்,
விஷயம் எப்படி இருந்தாலும், தலைப்பை நல்லதாகவே
போடுவோமே என்று முடிவெடுத்ததால் தான் மேற்கண்ட தலைப்பு.

என்னென்ன தலைப்புகள் தோன்றின என்பதையும் சொல்லி விடுகிறேன்….

முதல் தலைப்பு – ” ஸ்டாலின் அவர்களுக்கு பரந்து விரிந்த மனது ” –

காரணம் –
ஸ்டாலின், சுப்ரமணியன் சுவாமியை தன் 62 வயதுக் காலத்தில்
இதுவரை நேரில் சந்தித்ததே இல்லை. அவர்கள் இருவரும்
நண்பர்களும் இல்லை. குடும்ப நண்பர்களும் இல்லை.

சுப்ரமணியன் சுவாமி –

ஸ்டாலினின் தங்கை கனிமொழியின் 8 மாத “திஹார்”
சிறைவாசத்திற்கு காரணமாக இருந்தவர்.
ஸ்டாலின் அவர்களின் தாயார் தயாளு அம்மாள் அவர்களின்
மீது இந்த தள்ளாத வயதில் சிபிஐ வழக்கு தொடரவும்
காரணமாக இருந்தவர்.
ஸ்டாலின் அவர்களின் மாமன் மகன்களான, மாறன்
சகோதரர்களின் மீது 700 கோடி ஊழல் வழக்கு தொடரப்படவும்
காரணமாக இருப்பவர்.
ஸ்டாலின் அவர்களின் தந்தை கலைஞர் கருணாநிதி மீது,
தொடர்ந்து இன்னமும் ஊழல் குற்றச்சாட்டுக்களை அள்ளி
வீசி வருபவர்.

திமுக -வை ஒழித்துக் கட்டுவேன் என்று சபதம் போட்டிருப்பவர்.
ஈழத் தமிழர்களின் அழிப்புக்கு துணை போனவர்.
தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை திரும்பத் தரக்கூடாது
என்று சொன்னவர். ராஜபக்சேயின் “ஜிக்ரி” தோஸ்த்…!!!
காவிரி நீரைக் கேட்டு கர்நாடகாவை தொல்லைப்படுத்துவதை
தமிழகம் நிறுத்திக் கொள்ள வேண்டும். தஞ்சை டெல்டா
பாசன வசதிகளுக்கே – தேவையான நீரை –
கடல் நீரை நல்ல நீராக மாற்றுவதன் மூலம்
பெற்றுக் கொள்ள வேண்டும் –

– என்றெல்லாம் சு.சுவாமி சொல்லியும் கூட –

சு.சுவாமி – இதுவரை பார்த்தே இராத,
தம்பி தமிழரசுவின்
மகன் அருள்நிதியின்
திருமணத்திற்கு கட்டாயம் வந்தேயாக வேண்டுமென்று
என்று விடியற்காலையில் வீடு தேடிப்போய்,
சு.சுவாமிக்கே ‘சர்ப்ரைஸ்’ கொடுத்து –
வேண்டி, விரும்பி, அழைப்பிதழ் கொடுத்த விதம் இருக்கிறதே –

மிக மிகப் பரந்து விரிந்த மனம் உடையவரால் மட்டும் தானே
இதைச் செய்ய முடியும்…..?

(மற்ற 3 தலைப்புகளுக்கு விரிவான விளக்கங்கள் தேவைப்படாது –
யோசிக்காமலே உங்களுக்கே காரணம் புரிந்து விடும்…!!! )

இரண்டாவது தலைப்பு –

“காரியம் ஆகணும்’னா கழுதையானாலும் காலைப்பிடி ”

மூன்றாவது தலைப்பு –

“ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக் கோனே –
காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே”
(தூக்குத் தூக்கியில் சிவாஜி பாடலின் வரிகள் …)

நான்காவது தலைப்பு –

“எப்படியாச்சும், எதாச்சும் செய்யுங்க சார்….
ஒங்களைத்தான் நம்பி இருக்கோம் …”

———————————————————–
பின் குறிப்பு –
நான் கொடுத்த தலைப்பு,
கொடுக்க நினைத்த தலைப்புகள் – ஆகியவை
பொருத்தமாக இல்லை என்று நண்பர்கள் கருதுவீர்களேயானால்,
நீங்கள் கொடுக்கும் தலைப்பு பொருத்தமானதாக இருந்தால் –
அதையும் ஏற்றுக் கொள்ள நான் தயாராக இருக்கிறேன்.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

43 Responses to மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மிகவும் பரந்த மனது ……

 1. Pingback: மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மிகவும் பரந்த மனது …… | Classic Tamil

 2. மணிச்சிரல் சொல்கிறார்:

  தங்களின் தளத்தில் படித்த வார்த்தைகள் தான். “௨றவாடிக் கெடு” .” ௯ட்டணிக்கேது தர்மம்.”
  ஆட்டம் காணுமா இல்லை ஆட்டம் காட்டுமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இடுகைகள் சிந்தனையை துாண்டுது. அலசவும் என்று சொல்லி அரைமணிநேரம் ௯ட ஆகல. அதுக்கான பரிசா? தெரியவில்லை. நன்றி.

 3. ரிஷி சொல்கிறார்:

  ‘ஆரியனின் காலைப் பிடிக்கும் திராவிடன்’ இப்படி ஒரு தலைப்பைப் போட்டீங்கனா செம சூடாகும் பின்னூட்டக்களம்!! 🙂

  • salem guru சொல்கிறார்:

   மிக மிக சரியான தலைப்பு.
   திராவிட நாட்டில் பிறந்த ஒரு ஆரியனின் காலில் விழும் ஒரு திராவிடன்

   சேலம் குரு

 4. ரிஷி சொல்கிறார்:

  சாட்சிக்காரன் காலில் விழுறதை விட சண்டைக்காரன் காலில் விழலாம்னு சும்மாவா சொன்னாங்க 🙂

  • salem guru சொல்கிறார்:

   இப்போதெல்லாம் சாட்சிக்காரன் காலிலும் விழ வேண்டியதில்லை சண்டைக்காரன் காலிலும் விழ வேண்டியதில்லை எண்டு விழ வேண்டுமோ அங்கு விழுந்தால் போதும்.

   சேலம் குரு

 5. B.Venkata subramanian சொல்கிறார்:

  திரு காவிரிமைந்தன்,

  உங்களிடம் அற்புதமான எழுத்தாற்றல் இருக்கிறது.
  கிண்டலாகவும், அதே சமயம் சூடாகவும்,
  சொல்ல வரும் செய்தியை மற்றவர்கள் சுலபமாக
  புரிந்து கொள்ளும் வகையிலும், நேர்மையாகவும்
  எழுதும் உங்கள் திறமை இந்த வலைத்தளத்துடன்
  நின்று போய் விடக்கூடாது. உங்கள் எழுத்தும்,
  கருத்தும் இன்னும் நிறைய பேரிடம் போய்ச்சேர வேண்டும்.
  நீங்கள் ஏன் பெரிய பத்திரிகைகளில் எழுதக்கூடாது ?
  நீங்கள் சொல்லும் கருத்துக்களை ஏற்காதவர்கள் கூட
  உங்கள் எழுத்தையும், நேர்மையையும் ரசிக்கிறார்கள்.
  எனக்கு நரேந்திர மோடி அவர்களை மிகவும் பிடிக்கும்.
  இருந்தாலும் உங்களை வெறுக்க முடியவில்லை.
  அதே அளவிற்கு உங்களையும் விரும்புகிறேன்.

  நீங்கள் நல்ல உடல்நலத்தோடு, தொடர்ந்து
  நிறைய எழுத வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

 6. chollukireen சொல்கிறார்:

  முக குடும்பத்தைப் பற்றி சுப்பிரமணியம் ஸ்வாமி சொன்ன எல்லாக் குற்றங்களும் காலையில் இறைதேட மனதைவிட்டுப் பறந்திருக்கும்.
  மனதும் ஒரு கூடுதானே. தாற்காலீகமாக சாப்பாடு எங்கு கிடைக்கிறதோ. அழைப்பிதழ் ஒரு வலைப்பூ. அவ்வளவுதான். அன்புடன்

 7. today.and.me சொல்கிறார்:

  எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி, நான் எப்போ முதல்வராவேன் ?

  • சைதை அஜீஸ் சொல்கிறார்:

   ரெண்டு பேருமே ஒருத்தரை ஒருத்தர் கேட்டுக்கிட்டாங்களா, டுடே.அண்ட்.மீ?

   • today.and.me சொல்கிறார்:

    ம்ஹூம். முன்னாள் துணை முதல்வரும் இந்நாள் இளைஞரணித் தலைவருமானவர் சாமியிடம் தான்.

    அவர் கேட்கவேண்டிய இடம் வேறே.

    😀

 8. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  SURPRISE VISITOR?
  Sir Price visitor
  or
  Sir Prize visitor

 9. எழில் சொல்கிறார்:

  எனக்கு அருள்நிதிய நெனச்சா தான் ரொம்ப பாவமா இருக்கு! 😉

 10. D. Chandramouli சொல்கிறார்:

  I go with the final heading that you chose among various other options. Stalin seems a relatively moderate, sincere and decent person who would like to carry even the opponents with him. For one thing, he shows himself to be different from his wily father. His visit to various leaders to extend marriage invitation could be construed as a coalition-building exercise to defeat AIADMK as an one point agenda. Anyway, Stalin looks the right person under current conditions to carry forward the torch for DMK but it is not understood what is holding back MK in not anointing him as Chief, when no one in family could match Stalin in the race for the chair.

  • சைதை அஜீஸ் சொல்கிறார்:

   சந்த்ரமௌலி சார்…
   அன்புமணிக்கு என்ன தகுதி இருக்குன்னு இவர் தன் வீட்டு கல்யாணத்துக்கு பத்திரிக்கை கொடுத்தார் என்று சொல்லமுடியுமா?

   • today.and.me சொல்கிறார்:

    2011தேர்தல் நேரத்தில் பாமக ராமதாஸ், முகவைப் போய்ப் பார்க்க தன் வீட்டு கல்யாணப்பத்திரிகையை பயன்படுத்தினார். அவுகவீட்டு கல்யாணத்துக்கு அழைத்த மரியாதைக்கு இவரும் இந்த தேர்தல் நேரத்தில் போய்க் குடுக்கிறார். இந்த ஒரு தகுதி போதாதா? அஜீஸ்ஜி.

    🙂

 11. salem guru சொல்கிறார்:

  இரண்டு மூன்று எண்ணங்கள் தோன்றுகின்றன.
  1) அரசியலில் நிரந்தர எதிரிகளும் கிடையாது நிரந்தர நண்பர்களும் கிடையாது என்று ஸ்டாலினின் தந்தை கலைஞர் சொல்வார்.
  அவசியம் என்றால் எதிரியின் காலில் கூட விழ நாங்கள் ரெடி என்று சொல்லாமல் சொல்கிறார்.
  2) கல்யாணம் ஒரு சாக்குதான். இந்த சாக்கை வைத்து அனைத்து தலைவர்களையும் ஸ்டாலின் சந்தித்து விட்டார். நாளைக்கு கூட்டணி ஏற்பட்டால் ஸ்டாலினின் சாதுர்யம் பாராட்டப்படும் இல்லையென்றால் கல்யாணத்துக்கு அழைக்கமட்டுமே சென்றேன் என்று தப்பித்துக்கொள்ளலாம்.
  3) அரசியல் நாகரிகம் (தமிழ் நாட்டில் அப்படி ஒன்று இருக்கிறதா என்ன?) கருதியே அனைத்து தலைவர்களையும் அழைக்கிறேன் என்று சொன்னால் ஜெயாவை ஏன் அழைக்கவில்லை? எனவே இது ஒரு சாக்குதான்.

  சேலம் குரு

  • ரிஷி சொல்கிறார்:

   முன்னர் ஒருமுறை ஜெ.வை ஸ்டாலின் நேரில் சந்தித்தது நினைவில் இருக்கிறது. வீட்டிலா அலுவலகத்திலா தெரியவில்லை. என்ன விஷயம்னும் மறந்து போச்சு. ஆனா அது ஸ்டாலினோட வீட்டு விசேஷம்தான்னு நினைக்கிறேன்.

   • today.and.me சொல்கிறார்:

    The DMK deputy general secretary, M.K. Stalin, met and handed over a cheque for Rs.21 lakhs for tsunami relief to the then Chief Minister, Selvi J Jayalalithaa, at the Secretariat, on Jan 10, 2011. Its official. Not personal.

    varalaaru mukkiyam amaichare!

    🙂 🙂

    • today.and.me சொல்கிறார்:

     // அது ஸ்டாலினோட வீட்டு விசேஷம்தான்னு நினைக்கிறேன்.//

     ஓஹொ, சுனாமி அவர் வீட்டு விசேஷமா??
     ரொம்ப விசேஷம்.

     🙂 🙂

    • ரிஷி சொல்கிறார்:

     ஓ… சரிதான். இப்ப ஞாபகம் வருது..

     என்ன செய்ய குமாராசாமி அவர்களுக்கு “திடீர்னு” கணக்கு மறந்து போனது போல எனக்கு வரலாறு மறந்து போச்சு 🙂

   • சைதை அஜீஸ் சொல்கிறார்:

    சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி செய்ய அன்றைய முதல்வர் ஜெ-வை சந்தித்து முதல்வர் நிவாரண நிதி அளித்தது!
    வரலாறு ரொம்ப முக்கியம்!

 12. புது வசந்தம் சொல்கிறார்:

  எல்லா இடத்திலும் (ஒரு இடம் தவிர்த்து) ஒரு துண்டு போட்டு வைப்போம்.

 13. Pavan சொல்கிறார்:

  Sivajy’s song is in Parasakthi film not in thuku tuki i suppose (written by MK)

  • divmee சொல்கிறார்:

   திருத்தியதற்கு நன்றி. தேசம் ஞானம் கல்வி… என தொடங்கும் பாடல். கவிதை பாடியவர் (படம் பார்த்து புல்லரிப்பவர்களுக்கு “பாடல் எழுதியவர்”) உடுமலை நாராயணகவி.

   • today.and.me சொல்கிறார்:

    நண்ப pavan, divmee,

    //பைத்தியக்கார உலகம். இந்த உலகில் திருடினால்தான் பிழைக்கமுடியும்..
    51:58 மணித்துளிகளில் காணலாம். படம் பராசக்தி தான்.

    ————————————–

    படம்-பராசக்தி, இசை ஆர் சுதர்சனம், பாடியவர் சிஎஸ் ஜெயராமன், எழுதியவர் உடுமலை நாராயணகவி, வெளிவந்த ஆண்டு 1952.

    அறுபத்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. ம்ம். சரி,
    பாட்டையாவது பார்ப்போம்.கேட்போம்.ரசிப்போம்.

    //
    தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசையெல்லாம்
    காசு முன் செல்லாதடி – குதம்பாய் காசு முன் செல்லாதடி
    ஈசனும் ஈசனார் பூசையும் தேசத்தில்
    காசுக்குப் பின்னாலே – குதம்பாய் காசுக்குப் பின்னாலே
    காட்சியான பணம் கைவிட்டுப் போனப்பின்
    சாட்சி கோர்ட்டு ஏறாதடி – குதம்பாய் சாட்சி கோர்ட்டு ஏறாதடி
    பை பையாய் பொன் கொண்டோர்
    பொய் பொய்யாய் சொன்னாலும்
    மெய் மெய்யாய் போகுமடி – குதம்பாய் மெய் மெய்யாய் போகுமடி
    நல்லவரானாலும் இல்லாதவரை
    நாடு மதிக்காது – குதம்பாய் நாடு மதிக்காது
    கல்வி இல்லாத மூடரைக் கற்றோர் கொண்டாடுதல்
    வெள்ளிப் பணமடியே குதம்பாய் வெள்ளிப் பணமடியே

    ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோணே –
    காசுக் காரியத்தில் கண்வய்யடா தாண்டவக்கோணே
    உள்ளே பகைவையடா தாண்டவக்கோணே –
    காசுக்கு உதட்டில் உறவாடடா தாண்டவக்கோணே
    முட்டாப்பயலையெல்லாம் தாண்டவக்கோணே-
    சில முட்டாப்பயலையெல்லாம் தாண்டவக்கோணே-
    காசு முதலாளியாக்குதடா தாண்டவக்கோணே
    கட்டி அழும்போதும் தாண்டவக்கோணே –
    பிணத்தைக் கட்டி அழும்போதும் தாண்டவக்கோணே –
    பணப் பெட்டிமேலே கண்வையடா தாண்டவக்கோணே
    //

  • today.and.me சொல்கிறார்:

   நண்ப பவன்,
   பராசக்தி வசனம் தான் முக. ஆனால் இந்தப் பாடலை எழுதியவர் உடுமலை நாராயணகவி.

   அன்றே எழுத வி்டுபட்டுப்போய்விட்டது. வரலாறு முக்கியம் இல்லையா? அதனால்தான் லேட்டானாலும் பரவாயில்லை என்று இந்தப் பதிவு. 🙂

 14. வானரம். சொல்கிறார்:

  1) இதற்காக தானே ஆசைப்பட்டாய் கருணா குமாரா .

  2) நாங்க புதுசா கட்டிகிட்ட ஜோடிதானுங்க …

  3) இந்த ஊரு இன்னுமா நம்மள நம்புது ?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.