“தமிழ் இந்து” நாளிதழ் வலைத்தளத்தில் விமரிசனம் குறித்து …..

மூன்று-நான்கு நாட்களுக்கு முன்னர் எதேச்சையாக ஒரு விஷயம்
தெரியவந்தது. “தமிழ் இந்து” நாளிதழின் வலைத்தளத்தில் நமது
“விமரிசனம்” வலைத்தளம் குறித்து ஒரு விமரிசனம் வெளிவந்துள்ளது.

நண்பர் டுடேஅண்ட்மீ இதைக்குறித்து தனது பின்னூட்டத்தில்
குறிப்பிட்டு வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தார். ஆனால் அந்த
பின்னூட்டம் கீழே சென்று விட்டதால், அதிகம் கவனத்தில் வரவில்லை.

அந்த விமரிசனத்தை பார்த்தவுடன், முதலில், பிரதியெடுத்து நமது
தளத்தில் போடலாமே என்று நினைத்தேன். ஆனால், ஒருவேளை
தற்பெருமை பேசுவதாக அது கருதப்படுமோ என்று நினைத்து
விட்டு விட்டேன்.

இரண்டு-மூன்று நாட்களுக்குப் பிறகு மீண்டும் யோசித்ததில் –

நமது விமரிசனம் வலைத்தளத்தைப் பற்றியும்,
அதன் கூர்மையான வாசக நண்பர்களைப் பற்றியும்,
அதில் நிகழும் சுவையான விவாதங்களைப் பற்றியும் –
வெளியுலகம் எவ்வாறு நோக்குகிறது – எடை போடுகிறது என்பதை
விமரிசனம் நண்பர்களின் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டியது
அவசியமென்று தோன்றியது.
( நமது நண்பர்களில் நிறைய பேர் இந்து வலைத்தளத்தில் வந்த
இந்த கட்டுரையை பார்த்திருக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது….)

எனவே இந்து வலைத்தளத்தில் வந்த அந்த மதிப்பீட்டை
அப்படியே கீழே தந்திருக்கிறேன்.

நான் ஏற்கெனவே பலமுறை சொல்லி இருக்கிறேன் –

“இத்தளத்தின் முக்கிய அம்சமே, இடுகைகளுக்கு வாசகர்கள்
எழுதும் “பின்னூட்டங்கள்” தான். பல சமயங்களில், இடுகையைவிட,
பின்னூட்டங்களில் அதிக சாரமும், விறுவிறுப்பும், உயிரோட்டமும்
நிறைந்திருக்கும்”
என்று.

எனவே, “விமரிசனம்” வலைத்தளம் இந்த அளவிற்கு சிறப்பு பெறுகிறது
என்றால் அதற்கு அடிப்படைக் காரணம், வாசக நண்பர்களாகிய
நீங்கள் தான் என்பதால், உங்களுக்கு என் நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

-காவிரிமைந்தன்
21/05/2015

————————————————————————————————————————————————–

snap shot on tamil hindu vimarisanam page second half.jpg-e-2

நெட்டெழுத்து: என்றும் தணியாத ‘விமரிசனம்’

– க.சே. ரமணி பிரபா தேவி

பரபரப்பான தமிழக, இந்திய அரசியல் களத்தின் காய் நகர்த்தல்கள் பற்றியும், கட்சித்
தலைவர்களின் அன்றாட செயல்பாடுகள் குறித்தும்
தொடர்ந்து எழுதி வருபவர்களில்
முக்கியமானவர் காவிரி மைந்தன். இவர், ”விமரிசனம்” என்னும் பெயரில் வலைதளம் அமைத்து பதிவுகளைப் படிப்பவர்களின் முகம் கோணாமலும், பதிவர்களுக்கு தன் முகத்தையே காண்பிக்காமலும் எழுதி வருகிறார்.

அவ்வப்போதைய அரசியல் சூழ்நிலைகளைப் பிரதிபலித்து எழுதப்படுபவைகளுக்கு
ஆயுள் குறைவு. ஆனால், சில இடுகைகள், நிரந்தரமாக வைத்துப் படிக்கவும், பலருக்கும்
சென்று சேரக்கூடிய அளவில் செய்திகளும், தகவல்களும் நிறைந்ததாகவும் இருக்கும்.
”விமரிசனம்” தளத்தில் அத்தகைய இடுகைகள்தான் வெளிவருகின்றன.

“இத்தளத்தின் முக்கிய அம்சமே அந்த இடுகைகளுக்கு வாசகர்கள் எழுதும்
“பின்னூட்டங்கள்” தான். பல சமயங்களில், இடுகையைவிட, பின்னூட்டங்களில் அதிக
சாரமும், விறுவிறுப்பும், உயிரோட்டமும் நிறைந்திருக்கும்” என்கிறார் காவிரி மைந்தன்.

பகடி பாணியில் சுவாரசியமாய் எழுதும் கலை வரப்பெற்றவர்களில் ஒருவர்
காவிரிமைந்தன். காலத்துக்கும், நேரத்துக்கும் தகுந்தாற்போல நடந்து கொள்பவர்கள்தான்
அரசியல்வாதிகள் என்பவர், கருணாநிதி தொடங்கி ஜெயலலிதா, ஓபிஎஸ், அன்புமணி
வரை எல்லோரின் செயல்பாடுகளையும் கேள்விக்கு ஆட்படுத்துகிறார்.

இதற்கு பிரதமர் மோடியும் விதிவிலக்கல்ல. சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட
பிரதமரின் புகைப்படங்களை இணைத்து எழுதியிருக்கும் இந்த ஒரு கட்டுரை போதும்
அதைப் பறைசாற்ற.

வாசிக்க: மோடிஜியின் ரசனையே தனி தான்..!

எவ்வாறு வெளிநாடுகளில் சிகரெட், குட்கா போன்ற பொருட்களால் ஏற்படும்
விளைவுகளை புகைப்படங்கள் மூலமே காட்டி விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றார்கள்
எனச் சொல்பவர், நம் நாட்டில் சிகரெட் விளம்பரங்களுக்கு ஏற்படும் தடைகள் குறித்து
கவலை தெரிவிக்கிறார்.

”இந்த வலைத்தளத்தின் பின்னூட்டங்களில் கருத்தாழமும், வாதத்திறமைகளும்,
இடுகையை விட சிறப்பாக இருக்கின்றன”.
இது காவிரி மைந்தனின் வார்த்தைகள்.
அதில் உண்மையும் இருக்கிறது. ஆரோக்கியமான விவாதங்களையும், பயனுள்ள
தகவல்களையுமே காணமுடிகிறது.

திருச்சி- முடிகண்டம், திருப்பூர்- கொசம்பாளையம், கோவை- குருடம்பாளையம், நீலகிரி-
பர்லியார், தூத்துக்குடி- மேலபுதுக்குடி, விருதுநகர்- அத்திப்பட்டி ஆகிய ஊராட்சி
ஒன்றியங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூபாய் 30 இலட்சம் ரூபாய் பரிசுத்தொகையாக
வழங்கப்பட்டிருக்கிறது. எதற்கு என்று தெரியுமா?

வாசிக்க: இந்த தகவல் உங்களுக்கே வியப்பாக இருக்கும்…!

ஒரு அரசு சில திட்டங்களுக்கு தங்களுக்கு பிடித்தமான பெயரை வைத்துவிட்டுப்
போவதும், அடுத்த கட்சி ஆட்சிக்கு வந்ததும் முந்திய அரசின் திட்டப் பெயர்களை
எல்லாம் தங்களுக்கு பிடித்தவாறு மாற்றுவதற்கும் பதிலாக எல்லாவற்றிற்கும் “மத்திய
அரசு திட்டம்” அல்லது “மாநில அரசின் திட்டம்” என்று பொதுவாக பெயர் வைத்து
விடுவது நல்லது என்றுதானே தோன்றுகிறது…? பிரதமருக்கு அளிக்கப்படும் சலுகை,
மாநில முதல்வர்களுக்கு மறுக்கப்படுவது சரியா.?

வாசிக்க: மக்கள் செலவில் அரசியல்வாதிகளுக்கு விளம்பரம்? சுப்ரீம் கோர்ட் தலையீடு
சரியா..?

வழக்கு இருக்கிறது.. வழக்கு இருக்கிறது என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார்களே
தவிர, இதைப்பற்றிய விஷயங்கள் என்ன ஏது என்று விவரமாக வெளிவந்ததாகத்
தெரியவில்லை என்று அன்புமணியைப் பற்றிக் கூறும் காவிரிமைந்தன், “வருங்கால
முதல்வர்” வேட்பாளராக அவரும் இருப்பதால், அந்த வழக்கு பற்றிய விவரங்களை
கொஞ்சம் சேகரித்துத் தொகுத்திருக்கிறார்.

வாசிக்க: சின்ன மருத்துவர் அய்யா மீது என்ன வழக்கு…?

அரசியல் செல்வாக்கோ, பண பலமோ இருந்தால் போதும். எத்தகைய குற்றங்களையும்
துணிந்து செய்துவிட்டு, காலரைத் தூக்கி விட்டுக்கொண்டு சமூகத்தில் உலவி வர
கொடியமிருகங்களை நாம் அனுமதிக்கிறோம். நமது சட்டங்கள் அனுமதிக்கின்றன. இந்த
நாட்டில் நல்லவர்கள்தான் பயப்பட வேண்டி இருக்கிறது. இஸ்லாமிய நாடுகளைப்
போல் கடுமையான சட்டங்களை கொண்டு வந்தால் இந்த நிலை இன்னமும்
இங்கிருக்குமா என்று கோபக்கனல் வீசுகிறார்.

வாசிக்க: தீமாபுர்- கற்பழிப்பு ஆசாமியை அடித்தே கொன்றது சரியா.. தவறா..?

தேர்தலுக்கு முந்தைய ஆண்டு வரை, ஆளும் கட்சிக்கு அதிகம் கொடுக்கும்
கம்பெனிகள், தேர்தல் ஆண்டுகளில் மட்டும் அடுத்து எந்த கட்சி ஆட்சிக்கு வரும்
என்பதை யூகித்து, அந்த கட்சிக்கு அதிகமாக நிதி கொடுப்பதைப் பார்க்க முடிகிறது.
பெரிய பெரிய வர்த்தக நிறுவனங்களும், தொழிலதிபர்களும், அரசியல் கட்சிகளுக்கு
பெரிய அளவில் தொகைகளை “நன்கொடை” என்கிற பெயரில் அளிக்கின்றன. இவ்வாறு
கொடுக்கப்படும் “கொடை”களுக்கு வருமான வரியிலிருந்து விலக்கு வேறு
அளிக்கப்படுகிறது எனக் கொதிக்கிறார்.

வாசிக்க: கட்சிகளுக்கு, கம்பெனிகள் கொடுப்பது “டொனேஷனா?” அல்லது “அட்வான்ஸ்
லஞ்சமா?”

சினிமாவுக்கு வந்தவர்களின் செயல்களை எல்லாம், அவர்களுக்குத் தெரியாமலே
எங்கோ உட்கார்ந்து கொண்டு யாரோ பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது தெரிய
வந்தால் அவர்களுக்கு எவ்வளவு பெரிய அதிர்ச்சியாக இருக்கும்..?

வாசிக்க: சினிமா பார்ப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை.. உங்களை யாரோ பார்த்துக்
கொண்டிருக்கிறார்கள்..!

அரசியல் நிகழ்வுகளோடு, சமூக அக்கறை கொண்ட பதிவுகளையும் எழுதி வரும்
காவிரி மைந்தன், “இன்னும் தணியவில்லை எங்கள் சுதந்திர தாகம்” என்கிற
தலைப்பில் ஒரு மின் நூலை வெளியிட்டிருக்கிறார்.
சுதந்திரப் போராட்டத்தில் தங்கள்
இன்னுயிரை ஈந்த புரட்சி வீரர்கள் சிலரின் வீரச்செயல்களை நினைவுபடுத்தும் விதமாக,
விமரிசனம் வலைத்தளத்தில் எழுதப்பட்ட இடுகைகளைத் தொகுத்து உருவாக்கப்பட்ட
இந்நூலின் அஸ்திவாரம் பாரதியின் வார்த்தைகள்தான் என்கிறார்.

காவிரி மைந்தனின் வலைதள முகவரி: https://vimarisanam.wordpress.com/

( reference – http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D
%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-
%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE
%A4%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE
%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/article7219719.ece?
homepage=true&relartwiz=true )

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

20 Responses to “தமிழ் இந்து” நாளிதழ் வலைத்தளத்தில் விமரிசனம் குறித்து …..

 1. Pingback: “தமிழ் இந்து” நாளிதழ் வலைத்தளத்தில் விமரிசனம் குறித்து ….. | Classic Tamil

 2. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  சென்ற இடுக்கையில் வெங்கடசுப்ரமணியன் என்பவரின் பின்னூட்டத்தில் அவரின் ஆசையை “பெரிய பத்திரிகைகளில் எழுதலாமே” என்று பதிந்திருந்தார்.
  அவருடைய வாய் முகூர்த்தம் பலித்துவிட்டது.
  “செய்வன திருந்தச் செய்தால்” புகழை தேடி நாம் செல்லத்தேவையில்லை, புகழ் நம்மை தேடி வரும் என்பதற்கு காமை ஐயாவும் விமரிசனம் வலைத்தளமும் ஓர் உண்மை உதாரணம்.
  வாழ்த்துக்கள் ஐயா!

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நன்றி நண்பர் அஜீஸ்.

   நான் அதற்கு பதில் சொல்லாமல் விட்டு விட்டால்,
   விஷயம் கண்டு கொள்ளப்படாமல் போய் விடும்
   என்பதால் தான்
   பேசாமல் இருந்தேன்.

   இப்போது நீங்களும், நண்பர் டுடேஅண்ட்மீ- யும்,
   நண்பர் வெங்கட சுப்ரமணியன் அவர்களின் பின்னூட்டத்தை
   விளம்பரப்படுத்தி விட்டதால் – என் விளக்கத்தையும்
   சொல்லி விடுவது தான் நல்லது.

   தன்னடக்கத்திற்காக சொல்லவில்லை –
   உண்மையாகவே சொல்கிறென்….

   1) எனக்கு அந்த அளவிற்கு தகுதியோ திறமையோ கிடையாது.
   என் உயரத்தை நான் உணர்கிறேன்…
   இது ஊர்க்குருவி…. எவ்வளவு தான் உயரப் பறந்தாலும் –
   பருந்து ஆக முடியாது.

   2) இந்த வயதில், புகழோ-பெயரோ –
   என்னைக் கவரவில்லை. பணத்திற்காக இனி எந்த தொழிலும்
   பண்ணுவதாக உத்தேசமும் இல்லை.

   3) இங்கு எனக்கு உள்ள சுதந்திரம் வேறு எங்கும் கிடைக்காது.

   4) இந்த தளத்தில் உலா வரும் நண்பர்களுடன் உரையாடுவதில்
   எனக்கு கிடைக்கும் மகிழ்ச்சியும், திருப்தியும் வேறு எதிலும்
   கிடைக்காது.

   எனவே உங்கள் ( நண்பர் வெங்கட சுப்ரமணியன் அவர்களையும்
   சேர்த்து சொல்கிறேன் ) நல்ல எண்ணங்களுக்கு நன்றி
   தெரிவித்துக் கொள்வதோடு – இந்த விஷயத்தை முடித்து வைக்க
   விரும்புகிறேன்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • today.and.me சொல்கிறார்:

    கா.மை.ஜி,
    எல்லாம் சரிதான். முந்தின இடுகையில் தூக்குதூக்கியை பராசக்தி என்று கரெக்ஷன் சொல்லியிருக்கிறோமே. அதை ஏன் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டீர்கள். இந்தப் பக்கம் 3 நன்றி பார்சல்.
    🙂 🙂 🙂

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     நண்பர் டுடேஅண்ட்மீ,

     என்னை விட நல்ல ஞாபக சக்தியுள்ள,
     புத்தி கூர்மையான வாசக நண்பர்களிடையே
     நான் மாட்டிக் கொண்டிருக்கிறேன்….!

     ஒருவர், இருவர் என்றிருந்தால் பரவாயில்லை.
     வருபவர்கள் பெரும்பாலானோர் அப்படி இருந்தால் …?

     நன்றியோ, உதையோ – எது பார்சல் வந்தாலும்
     பெற்றுக் கொள்ள வேண்டியது தான்….!!!
     (wordpress -ல் smiley- ஐ எப்படி கொண்டு வருவது
     என்று தெரியாததால் – இங்கு போட வேண்டியதை
     போடவில்லை ….. !!! )

     -வாழ்த்துக்களுடன்,
     காவிரிமைந்தன்

 3. today.and.me சொல்கிறார்:

  அஜீஸ் ஜி,

  திரு வெங்கடசுப்ரமணியன் அய்யா அவர்களுக்கே எழுதவேண்டுமென்று நினைத்தேன். முதல்முறை எழுதுபவரை பின்னிழுக்க வேண்டாமே என்று பின்வாங்கிவிட்டேன். 😀

  பெரிய பத்திரிகைகளில் அவர்களுக்கென்று ஒரு கொள்கை இருக்கும். அங்கே unbiased வேலையில்லை என்று நினைக்கிறேன்.

  //வாய் முகூர்த்தம் பலித்துவிட்டது//
  ம்ஹூம். இதெல்லாம் கள்ளாட்டம்.
  அவர் சொல்வதற்குமுன்னேயே ‘தமிழ் இந்து’வில் வெளிவந்துவிட்டது.

  //“செய்வன திருந்தச் செய்தால்”// I like it.

 4. புது வசந்தம் சொல்கிறார்:

  வாழ்த்துகள்

 5. இ.பு.ஞானப்பிரகாசன் சொல்கிறார்:

  ‘தமிழ் இந்து’ போன்ற இதழ்கள் நம்மைப் போன்ற நடுநிலையாளர்களுக்கும் சமூக அக்கறையாளர்களுக்கும் பிடிக்காதவைதான் என்றாலும் அப்படிப்பட்ட மாற்றுக் கருத்தாளர்களும் அங்கீகரிக்கிறார்கள் எனும் வகையில் இது பெருமைக்குரியதே! வாழ்த்துக்கள் ஐயா!

 6. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  செய்யும் தொழிலில் நேர்த்தி இருந்தால் கவனிக்கப் படாமல் போகாது. உங்கள் இடுகைகளில் நான் நேர்மையான விமரிசனத்தைப் பார்க்கிறேன். ஒருதலைப்பட்சமானது என்று கருதும்படி இருந்ததில்லை.

  ஒவ்வொரு இதழுக்கும், பத்திரிகைக்கும், வலைத்தளத்திற்கும் ஒரு கொள்கை இருக்கத்தான் செய்யும். அதன்படி அப்பத்திரிகை நடக்கிறதா என்பது வாசகனுக்கு நன்றாகவே தெரியும். உதாரணமாக, நக்கீரன், சன் தொலைக்காட்சிகள் ‘நடுனிலை’ என்று சொன்னாலும், எந்தக்கூட்டத்தின் நடுவில் நிற்கிறார்கள் என்று வாசகர்களுக்கு நன்றாகத் தெரியும். இது அந்தக்காலக் குமுதம் முதல் தற்போதைய ரிப்போர்ட்டருக்கும், பு.தலைமுறைக்கும் பொருந்தும். அதனால்தான், சோ ஓரளவு எல்லோரையும் விமரிசனம் செய்தாலும், பா.ஜ.க, அ.தி.மு.க போன்றவற்றை விமரிசனம் செய்யும்போது சாஃப்ட்டாகவும், அந்தக்காலத்தில் இந்திராகாந்தியை மிகக் கடுமையாகவும் விமரிசனம் செய்தார்.

  விமரிசனம் – தனக்கு நேர்மை எனப்பட்டதைச் சொல்வதால்தான், அது பெரும்பாலும் சரியாக இருப்பதால்தான் அவருக்கு இந்த கௌரவம் கிட்டியுள்ளது. வாழ்த்துக்கள் ஐயா.

 7. சேலம்_மைந்தன் சொல்கிறார்:

  உங்களின் வாசகனாக இருப்பதில் நானும் பெருமைபடுகிறேன்.

 8. Surya சொல்கிறார்:

  வாழ்த்துகள் காவிரி மைந்தன் அவர்களுக்கு. உங்கள் சேவை தொடர்க!

 9. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  அனைத்து நண்பர்களுக்கும்,

  வாழ்த்துக்களை தெரிவித்திருக்கும் அனைத்து
  நண்பர்களுக்கும் என் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்
  கொள்கிறேன்.

  நான் ஏற்கெனவே சொல்லி இருப்பது போல்,
  இந்த வாழ்த்துக்களுக்கு உண்மையான சொந்தக்காரர்கள்
  நீங்கள் தான்.

  தொடர்ந்து பயணிப்போம்.

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்
  21/05/2015

  • Mani Rajendran சொல்கிறார்:

   திரு KM,

   சுமார் 18 மாதங்கலாஹ தொடர்பில் இருக்கின்றோம்! உங்களுடுன் ஒரு முறை பேசும் போது , உங்களுடைய எண்ணங்கள், எழுத்துக்கள், நமது தமிழ் மாநிலம் மற்றும் இந்தியா முழுவதும் சென்று மக்களுக்கு ஒரு விழிப்புணர்ச்சியை உண்டாக்க வேண்டும் என கூறினேன்.

   Today, what we see in Hindu is a Tribute and Testimony to you! I have lots of respect and admiration for the followers in this blog as well. Once again, you are proving that “Pen is mightier than the Sword!”.

   All the best sir, continue your journey and we are with you!

   Sincerely,

   Mani Rajendran

 10. K. Ganapathi Subramanian சொல்கிறார்:

  Dear K M Sir,
  Congratulations and best wishes. My prayers to almighty for a healthy and peaceful life to you and a long innings in writing for all our benefit.

  Best regards

  K.Ganapathi Subramanian

 11. Siva சொல்கிறார்:

  It is nice to know that Tamil print media (medium) have/has some space to write about good things (e.g., vimarisanam blog) happening in Tamil Nadu!

  However, our long walk towards bringing positive and constructive changes in our society remains a lot! We have to walk a long along with KM sir.

  By the way, if you get a chance to write for print media, do not hesitate to take it. In fact, It is your/ our unbiased approach towards the public issues that is strength for all of us!

  Good luck!

 12. Sharron சொல்கிறார்:

  Congrats.Really your work is adorable. The comments add extra value for your writing. Well done.

 13. R.Puratchimani சொல்கிறார்:

  வாழ்த்துக்கள் ஐயா

 14. ஆம். நண்பரே.

  நான் கூட அங்கு பார்த்து படித்துவிட்டுதான் உங்களது வலைதளத்தைதேடி வந்தேன். உங்களது எளிய விமர்சனங்கள் எளியநடையிலிருப்பதே அதன் பலம்.

  வாழ்த்துக்கள்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.