உத்தமரா… வில்லனா ..? நிதின் கட்காரியின் கதை சொல்வதென்ன ….?

nitin

மஹாராஷ்டிராவில் உள்ள “புர்தி நிறுவனம்” (Purti Sakhar Karkhana
Ltd (PSKL) ) திருவாளர் நிதின் கட்காரியால் சில வருடங்களுக்கு
முன் உருவாக்கப்பட்டது.

அது, சர்க்கரை ஆலைகள், விவசாயம், எண்ணை, மின் உற்பத்தி
என்று பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறது.
இதை கிட்டத்தட்ட குடும்ப நிறுவனமாகவே உருவாக்கி –
தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி, செழிப்பாக விரிவாக்கி,
வளர்த்து வந்த கட்காரி, அவர் பொறுப்பான பதவிகளை
ஏற்கும்போதெல்லாம் – அதிலிருந்து விலகிக் கொண்டு, தன் குடும்ப
உறுப்பினர்கள் யாரையாவது பொறுப்பாளராக்கி விடுவார்.

இந்த நிறுவனம் மார்ச் 2002-ல், ( திருவாளர் கட்காரி
இதன் டைரக்டர்களில் ஒருவராக இருந்த சமயத்தில் )
கரும்புச்சக்கையை பயன்படுத்தி,
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ( மின்சாரம் ) தயாரிப்பதாகக் கூறி,
ஒரு தொழிற்சாலையை துவங்க Indian Renewable Energy Development
Agency (IREDA) என்கிற அரசு நிறுவனத்திடம் 84.12 கோடி ரூபாய்
கடன் வாங்கி இருக்கிறது.

(இந்த கடனுக்கு, அப்போது டைரக்டர்களாக இருந்தவர்கள் –
இவரையும் சேர்த்து தான் – சொந்த பொறுப்பில்
உத்தரவாதம் (காரண்டி) கொடுத்திருக்கிறார்கள். )

(உங்களுக்கும் எனக்கும், எந்த கவர்ன்மெண்ட் கடன்கார
ஏஜென்சியாவது
இப்படி 84 கோடி ரூபாயை அள்ளிக்கொடுக்குமா…? )

கரும்புச்சக்கையை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்க வேண்டும்
என்கிற நிபந்தனையின் பேரில் சலுகை வட்டியில் இந்த கடன்
தரப்பட்டிருக்கிறது.

ஆனால், பிப்ரவரி 2004-ல் தொழிற்சாலை துவக்கப்பட போவதாக
கூறி கடன் பெற்றாலும், மார்ச் 2007-ல் தான் நிறுவப்பட்டிருக்கிறது.
(அதுவரை கடன் தொகை மற்ற காரியங்களுக்கு பயன்படுத்தப்
பட்டிருக்கலாம்….)

பொதுவாக கரும்புச்சக்கையை பயன்படுத்தி தான் மின் உற்பத்தி
செய்யப்பட வேண்டும் என்றும், தவிர்க்க முடியாத சமயங்களில்
25 % வரை நிலக்கரியையும் சேர்த்து பயன்படுத்தலாம் என்பதும்
சலுகை கொடுக்கப்பட விதிக்கப்பட்ட நிபந்தனைகள்.

ஆனால், ஜூன் 2009-ல் – இந்த நிறுவனம் முழுக்க முழுக்க
நிலக்கரியையே பயன்படுத்துகிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
எனவே, இந்த நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்ட சலுகை சட்ட
விரோதமாகிப் போனது.

வாங்கிய கடனின் தவணைகளை உரிய காலத்தில் செலுத்தத்
தவறியதால், மார்ச் 2007-லேயே இந்த நிறுவனத்தை,
வாராக் கடன் ( non-performing assets ) வகையில் சேர்த்திருக்கிறார்கள்.

சில தரித்திர கடங்காரர்களிடம்,(சாவு கிராக்கி ….? )
கடன் கொடுத்தவர்கள் – இருப்பதை கொடுத்துத் தொலை என்று
கிடைப்பதை வாங்கிக்கொண்டு, மீதி கடனையும் வட்டியையும்
தள்ளுபடி செய்வது போல்,

ஒரு முயற்சி, வேண்டுமென்றே இந்த நிறுவனத்தின் கடனில்
மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. ( அதற்கு இவரது அரசியல் செல்வாக்கு
பயன்படுத்தப்பட்டிருக்கலாம் ..! )

Non-Performing Asset -லிருந்து, இயன்ற வரை வசூல் செய்கிறோம்
என்கிற போர்வையில்
கடன் கொடுத்த IREDA நிறுவனம், “புர்தி” நிறுவனத்திடமிருந்து
வரவேண்டிய 84.12 கோடி ரூபாய்க்கு பதிலாக 71.35 கோடி ரூபாயை
மட்டும் பெற்றுக் கொண்டு கணக்கை செட்டில் செய்து விட்டது.

( மிச்சப்பணம் 12.77 கோடியை நீங்களும் நானும், நமக்கு தெரியாமலே
மறைமுகமாக கொடுத்திருக்கிறோம்…
அம்புடுதேன் விஷயம் …!!!
மந்திரி அல்லவா … கெட்டிக்காரராகத்தானே இருப்பார் …!!! )

இப்போது வெளிவந்திருக்கும் CAG ரிப்போர்ட்டில் இந்த முறைகேடுகள்
எல்லாம் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.

முதலில் “ஆ” “ஊ” வென்றெல்லாம் துள்ளிக் குதித்தார் அய்யா.
நான் “ஒரு ரூபாயாவது திருடினேன்” என்று யாராவது நிரூபிக்கட்டும்
பார்க்கலாம் என்று சவால் விட்டார்.

(இவர் திருடினார் என்று யார் கூறியது…..? மஹா புத்திசாலித்தனமாக
கடனை அல்லவா அடைத்திருக்கிறார்…!!! )

அடுத்ததாக, “எனக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை” என்றார்.

பின்னர், “இந்த சம்பவம் நடந்த போது நான் என்ன மந்திரியாகவா
இருந்தேன் ?
எந்த பதவியிலும் இல்லையே” என்றார்….

பின்னர் மீண்டும் ” இந்த கடனை நான் எப்பவோ திரும்பக்
கொடுத்தாகி விட்டது – இப்போது, இவ்வளவு நாட்கள் கழித்து
வேண்டுமென்றே கிளறுகிறார்கள் “
என்று சீறினார்.

நேற்று கடைசியாக – ” CAG-யின் draft report-ல் என் பெயரே இல்லை.
நிறுவனத்தின் பெயர் மட்டும் தான் இருந்தது. இப்போது final report-ல்
வேண்டுமென்றே என் பெயர் சேர்க்கப்பட்டிருக்கிறது. யாரோ
எனக்கு எதிராக வேண்டுமென்றே ” சதி ” செய்கிறார்கள்”
என்று
சொல்லி இருக்கிறார்.

“எங்கப்பன் குதிருக்குள்ள இல்லை” என்று சொல்லை
தன்னையும் அறியாமல் நினைவுபடுத்தி விட்டார் அய்யா.
இவரது துறைக்கும் CAG report-க்கும்
சம்பந்தமே இல்லை. CAG-யின் draft report-ல் என்ன எழுதி
இருந்தது என்பது இவருக்கு எப்படி தெரிய வந்தது …?

final report இப்போது தான் பாராளுமன்றத்திற்கு வருகிறது…

“நாயகன்” கமலிடம் அவர் மகன் கேட்பது போல் –
(“அப்பா – நீங்கள் நல்லவரா – கெட்டவரா..?” )
இவரையே கேட்டு விடலாமா…”சார் நீங்கள் உத்தமரா –
வில்லரா ..?” என்று ..?

இவர் உத்தமர் இல்லை என்பது இவரது சரித்திரம், பூகோளம்
தெரிந்த அனைவருக்குமே தெரியும். ( பாஜக காரர்களையும்
சேர்த்து தான் சொல்கிறேன் …)

நமது கவலை இப்போது வெளிவந்திருக்கும் CAG report-
குறித்தோ, இவர் காந்தி கணக்கில் போட்ட 12 கோடியே சொச்சம்
பணத்தையோ பற்றி அல்ல.

அடுத்த இரண்டு வருடங்களில், மத்திய அரசின் சார்பில் –
போக்குவரத்து துறையில் மட்டும் சுமார் ஐந்து லட்சம் கோடிகள்
முதலீடு செய்யப்பட விருக்கிறது.
அத்தனையும் “காண்டிராக்ட்”
முறையில் கொடுக்கப்படவிருக்கிறது….

சம்பந்தப்பட்ட தரைவழி, மற்றும் நீர்வழி போக்குவரத்து துறைக்கு
இவர் தான் அமைச்சர். இந்த உத்தம வில்லர் இன்னும்
என்னென்னவெல்லாம் செய்வாரோ ….?

Gallery | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

உத்தமரா… வில்லனா ..? நிதின் கட்காரியின் கதை சொல்வதென்ன ….? க்கு 8 பதில்கள்

  1. paamaran சொல்கிறார்:

    UTTHAMA VILLANO ….?

  2. KuMaR சொல்கிறார்:

    அதுக்கும் மேலே லே. . .

  3. seshan சொல்கிறார்:

    you can rely on this guy. he will complete all the committed projects very successfully.

    he will take 5% only. his motto.

    seshan

  4. Pingback: உத்தமரா… வில்லனா ..? நிதின் கட்காரியின் கதை சொல்வதென்ன ….? | Classic Tamil

  5. சைதை அஜீஸ் சொல்கிறார்:

    91-96-ல் சம்பாதித்ததில் 10% கணக்கில் காட்டாமல் இருக்கலாம் என்று தீர்ப்பு வந்த பிறகு 2012-ல் 15.18%-ஐ ஆட்டையை போடுவதில் தவறில்லை என்று 2025-ல் ஒரு தீர்ப்பு வந்தால் நாம் சரிதான் என்று கூறிவிட்டு அடுத்த “ஆட்டையை” போடுபவனை பற்றி இடுக்கை இட்டுக்கொண்டிருப்போம்.
    வாழ்க ஓட்டு ஜனநாயகம்.

    • ns raman சொல்கிறார்:

      Mumbai Pune highway his achievement better than TASAMC raja and Rani of TN. As you rightly said 10pct is legalized by now.

  6. Visuawesome சொல்கிறார்:

    விடுங்க நண்பரே… சிறுநீர் அடித்தே பழதோப்புகளை வளர்த்தவர் .. கரும்பு சக்கையில் இருந்து மின்சாரம் எடுக்க மாட்டாரா என்ன… ? வெள்ளையா வேற இருக்கார் … பொய் சொல்ல மாட்டார்.

  7. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

    பா ஜ காவினருக்குத் தெரியவில்லை. மோடி மட்டும் லஞ்சம் வாங்காமல் இருந்தால் போதாது. இப்போது மோடியைப் பற்றி ஒரு நல்லது, அவர் கொள்ளை அடிக்கவில்லை. மற்ற அமைச்சர்களையும் கொள்ளை அடிக்க விடுவதில்லை போல்தான் தெரிகிறது. இன்னும் இரண்டு வருடம் கழித்தபிறகுதான், காமன்வெல்த், 3ஜி, போர்த்தளவாடங்கள் போன்றவற்றில் ஏதாகிலும் நடந்திருக்கிறதா என்று தெரியும்.

    எனக்கு எரிச்சல் உண்டாக்குவது, நிறைய அல்லக்கைகள், கேவலமான கருத்துக்களை வெளியிடுவதுதான் (4 குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள், வேலன்ஸ்டே, சிறுனீர் செடிகளை வளர்க்கும் போன்ற இந்துத்துவா பெயரில் வெளியிடும் லூசுத்தனமான சிந்தனைகள்). இதனை எந்த இந்துவும் ஏற்றுக்கொள்ளமாட்டான். அதுமட்டுமல்ல, மதசார்பான வெறியுடன் கூடிய கருத்துக்களை யாவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.