மோடி 365 டிக்ரி – நானே ராஜா… நானே மந்திரி……!

.
.

எந்த தொலைக்காட்சி பக்கம் போனாலும் பாஜக வலிந்து
திணிக்கும் மோடிஜி அரசின் சாதனை நிகழ்ச்சிகள்.
ஒவ்வொரு முக்கிய ஊரிலும் எதாவது ஒரு மந்திரி செய்தியாளர் கூட்டத்தை நடத்துகிறார். ஆக மொத்தம், வலுக்கட்டாயமாக   அவர்களது ஆட்சியைப் பற்றியே அனைவரும் பேசும்படி செய்வது தான் அவர்களது உத்தியாகத் தெரிகிறது…..

அவர்கள் ஆசையை நாம் கெடுப்பானேன்….
நாமும் அதைப்பற்றியே பேசுவோம்….

பொதுவாக, நம் எல்லாருக்குமே, மோடிஜியின் பிரதாபங்கள் பற்றி
தெரிய வந்தது, அவரை பிரதமர் வேட்பாளராக பாஜக முன் நிறுத்த
முனைந்த பிறகு தான். அதற்கு முன்னால், நமக்கு “மோடிஜி” என்றால்
“கோத்ரா” மட்டும் தான் நினைவிற்கு வந்து கொண்டிருந்தது.

குஜராத் அரசை ஆட்சி செய்த சுமார் 11 வருடங்களில் அவரது
நிர்வாக நடைமுறைகள், குணாதிசயங்கள் எப்படி இருந்தன என்பது
பற்றி நாம் ஒன்றும் அறியோம். ( குஜராத்தில் அவர் சாதித்ததாக
சொன்னதைப் பற்றி எல்லாம் கடந்த மாதம் வெளியிடப்பட்ட
CAG report வெட்ட வெளிச்சமாக்கி விட்டது. )

அனிதா ஜோஷுவா – “ஹிந்து” நாளிதழில் எழுதியிருக்கும்
ஒரு கட்டுரையைப் படித்தேன். குஜராத்தில் இருக்கும்போது
மோடிஜியின் குணாதிசயங்கள் எப்படி இருந்தன, தற்போது
பிரதமர் ஆன பிறகு எப்படி இருக்கின்றன என்பதை விரிவாக
அலசுகிறார்.

அவற்றை நம் விமரிசனம் தள நண்பர்கள் அவசியம் தெரிந்து
கொள்ள வேண்டுமென்பதால் – அதன் தமிழ்ச் சுருக்கத்தை கீழே
தருகிறேன்……

இந்த தலைப்பும், போட்டோவும் கூட அவர்கள் போட்டது தான் –

மோடி 365° – நானே ராஜா… நானே மந்திரி!
( அனிதா ஜோஷுவா )

nane raaja -naane manthiri....

 

பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்வதற்கு முன் 20.5.2014 அன்று
நாடாளுமன்றத்துக்கு முதல் முறையாக வந்த மோடி,
அதன் வாயிற்படியைத் தன் தலையால் தொட்டு வணங்கினார்.
உள்ளே அடக்கமே உருவாக அமர்ந்திருந்தார்.
87 ஆண்டுகள்
பழமையான அந்த அரங்கில், பிரதமராக முடி சூட்டிக்கொள்ளப்
போகிறோம் என்பதால் உணர்ச்சிமயமாகக் காட்சி தந்தார்.
அத்வானியின் பாராட்டுரைக்கு நன்றி தெரிவிக்கும்போது
அவருடைய நா தழுதழுத்தது. பார்க்க எல்லோருக்குமே
ஆச்சரியமாகத்தான் இருந்தது.

சரியாக, 17 நாட்கள் கழித்து ஜூன் 6-ம் தேதி தனது அமைச்சரவை
சகாக்களை மக்களவையில் மோடி அறிமுகப்படுத்தும் போது,
அவருடைய உண்மையான சொரூபம் சில விநாடிகளுக்கு
வெளிப்பட்டது.

அமைச்சர்களை ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தி மற்றவர்கள்
தெரிந்துகொள்ள அவகாசம் தராமல்,
வேகவேகமாகச் செய்து
முடித்தவரிடம் எரிசக்தித் துறை அமைச்சர் பியூஷ் கோயல்
அங்கில்லை என்று எதிர்க் கட்சியினர் சொன்னபோது கடுகடுத்தார்.

தான் புதிதாகப் பதவியேற்ற பிரதமர் புது பிரதமர் மட்டுமல்ல,
புது நாடாளுமன்ற உறுப்பினரும் கூட என்ற தயக்கம்கூட அவரிடம்
இல்லை. எதிர்க் கட்சிகளிடம் எடுத்த எடுப்பில் தன் முகத்தைக்
காட்டினார்.
இதுவரை பிரதமர் பதவி வகித்தவர்களில், மோடி
மட்டும்தான் நாடாளுமன்ற நடைமுறை முன்அனுபவம் இல்லாதவர்.
குஜராத்தில் முதல்வராகப் பதவி ஏற்றபோதும் அப்படித்தான்,
பேரவைக்கே அப்போதுதான் முதல் முறையாகச் சென்றார் மோடி.

எப்படியிருக்கிறது அவை?

மோடியின் ஓராண்டு கால ஆட்சியில் அவருடைய நாடாளுமன்றச்
செயல்பாடு எப்படி இருக்கிறது? மோடி பிரதமர் பதவி வகித்த
முதல் 5 மாதங்களில் இந்திய நாடாளுமன்றத்தில் பேசியதைவிட,
அயல் நாட்டு நாடாளுமன்றங்களில் பேசியதுதான் அதிகம்
என்று எதிர்க் கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன. உண்மை.

தவிர்க்கவே முடியாத தருணங்களில்தான் நாடாளுமன்றத்துக்கு
வருகிறார் மோடி.
சரக்கு சேவை வரிகள் தொடர்பாகக் கொண்டுவந்த
திருத்த மசோதா வாக்கெடுப்புக்கு வந்தபோது கூட அவர் அவைக்கு
வரவில்லை.

எதிர்க் கட்சி உறுப்பினர்களை விடுங்கள், தன்னுடைய சொந்தக்
கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களுடனும், அமைச்சர்களுடனும் கூட
பேசுவதில்லை மோடி.

மோடி வெளிநாடு சென்றுவந்தால் அந்தப் பயணம்பற்றிய
அறிக்கையைக்கூட வெளியுறவு அமைச்சர்தான் அவருக்குப் பதிலாக
வாசிக்கிறார்.
மன்மோகன் சிங்கை மவுன மோகன் சிங் என்றே
கேலி செய்தவர் மோடி. அவரைவிட அதிகமாகவே மவுனம் சாதிக்கிறார்.

ஆனால், இதில் எல்லாம் ஆச்சரியமே இல்லை. மோடி முதல்வராக
இருந்தபோது குஜராத் சட்டப்பேரவையில் எதிர்க் கட்சித் தலைவராக
இருந்தவர் சக்திசிங் கோஹில்.

அவர் சொல்கிறார்: “குஜராத்தில் முதல்வராக இருந்தபோது பேரவையை
எப்படி நடத்தினாரோ, பேரவையில் எப்படி நடந்துகொண்டாரோ
அதையேதான் நாடாளுமன்றத்திலும் செய்கிறார் மோடி.

ஒரு சமயம் எதிர்க் கட்சி உறுப்பினர்களை சட்டப்பேரவையிலிருந்து
இடைநீக்கம் செய்துவிட்டு 12 சட்டங்களை 17 நிமிஷங்களில்
நிறைவேற்றினார்.
அவர் முதல்வராக இருந்தபோது 6 மாதங்களுக்கு
ஒரு முறை சட்டப்பேரவை, சம்பிரதாயத்துக்காக மட்டுமே கூட்டப்படும்.
இதுதான் குஜராத் மாதிரி” என்கிறார் கோயல்.

“குஜராத் சட்டப்பேரவையில் மோடி எப்போதும் உரையாற்றியதே இல்லை.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதுகூட முதல்வர்
என்ற வகையில் அவர் உரையாற்றியதில்லை. அவரது பொறுப்பிலிருக்கும் துறைகள்
குறித்த கேள்விகளுக்குக்கூட அவர் பதிலளிக்க மாட்டார்.

எதிர்க் கட்சிகள் எழுப்பும் முத்திரையிட்ட கேள்விகளில் மூன்றில்
ஒரு பங்கு பேரவைக்கே வராது. ஒவ்வொரு தொடரிலும் எதிர்க் கட்சி
உறுப்பினர்களை இடைநீக்கம் செய்வது வழக்கமாகவே இருந்தது.
அவர் முதல்வராக இருந்த காலத்தில் குஜராத் சட்டப்பேரவை ஆண்டுக்கு
மொத்தம் 23 நாட்கள்கூடக் கூடியதில்லை” என்கிறது காங்கிரஸ் கட்சி.

காந்திநகர் ஆகிடாது டெல்லி

ஆனாலும், டெல்லியை முழுமையாக காந்திநகர் ஆக்கிட முடியவில்லை
மோடியால் என்றே சொல்ல வேண்டும்.
இரட்டை அடுக்கு நாடாளுமன்றம்,
பல கட்சிகளைக் கொண்ட வலுவான எதிர்க் கட்சி, அவையில் நடப்பதைக்
கண்கொத்திப் பாம்பாகக் கவனித்துவரும் தேசிய ஊடகங்கள் இருப்பதால்
குஜராத்தில் நடத்தியதைப் போல டெல்லியில் நாடாளுமன்றத்தை மாற்ற
முடியவில்லை. மோடி பேசாவிட்டாலும் எதிர்க் கட்சிகள் பேசுகின்றன. இரு
அவைகளும் எப்போதையும்விட அதிகம் பணியாற்றுகின்றன.

ஆனாலும், உள்ளடி வேலைகள் நடக்கத்தான் செய்கின்றன.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் ஒன்றை மற்றதற்கு எதிராக
நிறுத்தும் முயற்சி நடக்கிறது.

நாடாளுமன்றத்தை ஜனநாயகத்தின் கோயில் என்று காட்டியே
அவைக்கு வந்தவர், அந்தக் கோயிலில் ஒரு கருவறைதான்,
ஒரு தெய்வம்தான் இருக்க வேண்டும்; அதற்கு எந்த எதிர்ப்பும் கூடாது
என்று கருதுகிறார். மசோதாக்களை விரைவாக நிறைவேற்ற வேண்டும்
என்ற போர்வையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய
நிலைக்குழுக்களின் பரிசீலனைகளுக்கே மசோதாக்கள்
அனுப்பப்படுவதில்லை.

புதிய மசோதாக்கள் கூடுதல் அவை நடவடிக்கையாக அவையில்
அறிமுகப்படுத்தப்படுகின்றன. சில சட்டங்களைத் திருத்துவதற்கான
மசோதா, நிதி மசோதா என்ற பெயரில் கொண்டுவரப்படுகின்றன.
மாநிலங்களவையில் அரசுக்குப் பெரும்பான்மை இல்லாததால்
எதிர்க் கட்சிகள் அதைத் தடுத்து நிறுத்திவிடும் என்பதற்காக
‘நிதி மசோதா’ என்று கூறுகின்றனர். அது மாநிலங்களவையில்
தோற்றாலும் மீண்டும் மக்களவையில் கொண்டுவந்து நிறைவேற்றி
சட்டமாக்கிவிடலாம்.

பதுங்கலும் பாய்ச்சலும்

புதிய நாடாளுமன்றத்தின் முதல் இரு தொடர்களில் எதிர்க் கட்சிகள்
நிதானம் காத்தன. ஆனால், 2014 குளிர்காலக் கூட்டத் தொடரிலிருந்து
தாக்குதலில் இறங்க ஆரம்பித்துவிட்டன. சமீபத்திய நன்றி தெரிவிக்கும்
தீர்மானத்தின் மீது 3 திருத்தங்களை எல்லா எதிர்க் கட்சிகளும் சேர்ந்து
கொண்டுவந்தன. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 3 முறைதான்
இப்படி நடந்திருக்கிறது. இந்த முறை இப்படி நடக்க தன்னுடைய
‘அரிதான உரை’யில் காங்கிரஸையும் கம்யூனிஸ்ட்டுகளையும்
வம்புக்கு இழுத்த மோடியின் பேச்சே காரணம்.

இந்த திருத்தத் தீர்மானத்தைக் கொண்டுவந்த சீதாராம் யெச்சூரி,
“நான் பேசுவதை மோடி கேட்க இங்கிருந்தால் திருத்தத் தீர்மானத்தை
விலக்கிக்கொள்வேன். ஆளும் தரப்பினர் மோதலை விரும்புகின்றனர்,
எனவே, மோதிப்பார்ப்போம்”
என்று கூறி அதில் உறுதியாக இருந்தார்.

ஒருவரே எல்லாம் என்ற பிரதமரின் யுகத்தில் எதற்கும் தயார்
அணுகுமுறையில் எதிர்க் கட்சிகள் இருப்பது ஜனநாயகத்துக்கு
நல்லதுதான்!

அதிகம் உதிர்க்கப்பட்ட 5 வாக்கியங்கள்

– தேநீர் விற்றுத்தான் இன்று இருக்கும் நிலையை
நான் அடைந்திருக்கிறேன்.

– எளிதான பணிகளைத்தான் செய்ய வேண்டும் என்றால்
நான் பிரதமராகியிருக்கக் கூடாது. நான் பிரதமரானதே
கடினமான பணிகளைச் செய்வதற்காகத்தான்.

– நான் இதயத்திலிருந்து பேசுகிறேன். ஏழையான எனக்கு
ஏழைகளின் தேவை என்ன என்று தெரியும்.

– நான் உங்களிடம் உறுதியளிக்கிறேன். நீங்கள் 12 மணி நேரம்
உழைத்தால் நான் 13 மணி நேரம் உழைப்பேன்.
நீங்கள் 14 மணி நேரம் உழைத்தால்
நான் 15 மணி நேரம் உழைப்பேன்.

– நான் இந்த நாட்டின் பிரதமர் அல்ல, பிரதான சேவகன்!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

16 Responses to மோடி 365 டிக்ரி – நானே ராஜா… நானே மந்திரி……!

  • today.and.me சொல்கிறார்:

   ட்வீட்டுகள் அருமை.

   ஒருவருடத்தில் சுற்றுப்பயணம் – ஒரு அவுட்லைன் மட்டுமே

   மே 2014 – மோடி பிரதமராகப் பதவியேற்றார்
   ஜூன் 2014 – பூட்டான் சுற்றுப்பயணம்
   ஜூலை 2014 –பிரேசில் சுற்றுப்பயணம்
   ஆகஸ்ட்2014 – நேபாள், ஜப்பான் சுற்றுப்பயணம்
   செப்டம்பர் 2014– அமெரிக்கா சுற்றுப்பயணம்
   அக்டோபர் 2014 – மகாராஷ்ட்ரா-ஹரியானா தேர்தல் பணிகளுக்காக இந்தியாவில் தங்கல்
   நவம்பர் 2014 – மியான்மர், ஆஸ்த்ரேலியா, பிஜி, நேபாள் சுற்றுப்பயணம்
   டிசம்பர் 2014 – ஜம்முகாஷ்மிர், ஜார்க்கண்ட் தேர்தல் பணிகள்
   ஜனவரி 2015 – பெப்ரவரி 2015 -. டெல்லி தேர்தல் பணிகள்
   மார்ச் 2015 – சீசெல்ஸ், மொரிஷியஸ், ஸ்ரீலங்கா, சிங்கப்பூர் சுற்றுப்பயணம்
   ஏப்ரல் 2015 – ப்ரான்ஸ், ஜெர்மனி, கனடா சுற்றுப்பயணம்
   மே 2015 – சீனா, மங்கோலியா, சியோல் சுற்றுப்பயணம்
   ஜூன் 2015 – … இந்திய மாநிலங்களில் தேர்தல் இல்லையெனில் தொடரும்.

 1. சுந்தர ராமன். எம். சொல்கிறார்:

  எந்த தொலைக்காட்சி சானலைத் திருப்பினாலும் இதே மோடி பஜனை தான்.
  சகிக்க முடியவில்லை.
  இது மக்களிடையே விரோத மனப்பான்மையையே தோற்றுவிக்கும்.
  அமீத் ஷா செய்தியாளர் கூட்டத்தில் கேள்வி கேட்பவர்களை
  மிரட்டுகிறார். பாதியிலேயே பேச விடாமல் தடுக்கிறார்.
  இவரைச் சுற்றி செக்யூரிடி ஆட்கள் கேள்வி கேட்பவர்களை தனியே
  விசாரிக்கின்றனர். இதெல்லாம் நல்லதற்கல்ல.

 2. paamaran சொல்கிறார்:

  அதற்கு முன்னால், நமக்கு “மோடிஜி” என்றால்
  “கோத்ரா” மட்டும் தான் நினைவிற்கு வந்து கொண்டிருந்தது….! இப்போது மோடி என்றால் ” கோட்டு தான் ” ஞாபகத்திற்கு வந்து கொண்டு இருக்கிறது ….!! ஓராண்டு சாதனையாக மானியங்கள் மக்களை நேரடியாக சென்று சேர்கிகறது — என்கிறார்கள் ? ஆமாம் இங்கே “852 ” -ம் பக்க கணக்கு சூரப்புலிகள் — மோடி அரசு சமையல் கேசுக்கு ஒரு சிலிண்டருக்கு எவ்வளவுதான் மானியமாக கொடுக்கிறது என்பதை கணக்கிட்டு சொல்ல முடியுமா …? ஓராண்டு சாதனையாக தமிழ் நாட்டுக்கு எய்ம்ஸ் மருத்துவமனையும் — முதியோர் மருத்துவமனையும் வர போகிறது என்று கூறும் தமிழிசைதான் — இன்றைய ” காமெடி பீசு ” —-எப்போவோ வர போற ரயிலுக்கு இப்பவே கேட்டை சாத்திய கதையாக ….!!! காகிதத்தில் உள்ள திட்டங்கள் எல்லாம் — சாதனை என்று கூறும் —- பிரதம சேவகனின் கட்சினரை கண்டிப்பாக பாராட்ட வேண்டும் ……

 3. Pingback: மோடி 365 டிக்ரி – நானே ராஜா… நானே மந்திரி……! | Classic Tamil

 4. today.and.me சொல்கிறார்:

  //அவர்கள் ஆசையை நாம் கெடுப்பானேன்….
  நாமும் அதைப்பற்றியே பேசுவோம்….//
  🙂 🙂
  முடிவே செய்துவிட்டீர்களா? ஜி.

 5. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  இன்னும் இரண்டு வருடங்கள் இருக்கிறது மோடியைப் பற்றிச் சரியாகக் கணிக்க. இப்போதைக்கு நேரடியாக ஒன்றும் பண்ணியதுபோல் தெரியவில்லை. சூரப்புலிகள், பெட்’ரோல் டீசல் விலை குறைந்தபோது மோடியினால் என்றவர்கள், ஒரேயடியாக விலை உயர்ந்தவுடன், போன இடம் தெரியவில்லை. அம்மாபோல் மக்கள் நலத் திட்டங்கள் (வளர்ச்சிக்கு உதவாவிட்டாலும்) அறிவித்தால்தான் ஏழைகளுக்கு ஒரு மாற்றம் உணரமுடியும். இல்லையென்றால், பேசாமல் இந்தியாவை அமெரிக்காவோ அல்லது பிரித்தானியர்களோ எடுத்துக்கொண்டு மக்களை முன்னேற்றலாம். சிங்கப்பூர் அரசியல்வாதிகள் கூட எடுத்துக்கொள்ளலாம்.

 6. மணிச்சிரல் சொல்கிறார்:

  360 சுத்தாதா? டிகிரி படிக்காததால் இடிக்கிறது ஐய்யா?

 7. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  சக்திசிங் கோஹில் இப்போ இவ்ளோ கூவுறாரே
  ஆனா ஒரு தபாவாவது போன எலெக்ஷனப்போ இந்த அடாவடிய சொன்னாராபா!
  அன்னிக்கு கப்சிப்னு இருந்துகினு இன்னிக்கு பல்பு காட்றாருபா.
  அல்லாருமே மட்டைஸ் ஆஃப் ஒரே குட்டை
  2016-ல் பல ஸ்டேட்லே எலெக்ஷன் வர்து. ராஜ்யசபா கணக்கு மாறும்.
  புது ஜனாதிபதி வருவார். அப்புறம் கீதுபா ஷோ!
  இப்போ வெறும் ந்யூஸ் ரீல்தான். பார்க்குறவன் பாரு.

 8. today.and.me சொல்கிறார்:

  //அவர்களது ஆட்சியைப் பற்றியே அனைவரும் பேசும்படி செய்வது தான் அவர்களது உத்தியாகத் தெரிகிறது…..
  அவர்கள் ஆசையை நாம் கெடுப்பானேன்….
  நாமும் அதைப்பற்றியே பேசுவோம்…./

  வால்ஸ்ட்ரீட் ஜர்னலே பேசும்போது விமரிசனம் பேசக்கூடாதா? பேசலாம். பர்மிஷன் க்ராண்டட். 🙂 🙂

  http://blogs.wsj.com/indiarealtime/2015/05/25/indias-narendra-modi-underperforms-previous-prime-ministers-in-his-first-year-on-the-market/

 9. today.and.me சொல்கிறார்:

  //அவர்களது ஆட்சியைப் பற்றியே அனைவரும் பேசும்படி செய்வது தான் அவர்களது உத்தியாகத் தெரிகிறது…..
  அவர்கள் ஆசையை நாம் கெடுப்பானேன்….
  நாமும் அதைப்பற்றியே பேசுவோம்…./

  ப.சி.யே பேசும்போது விமரிசனம் பேசக்கூடாதா? பேசலாம். பர்மிஷன் க்ராண்டட். 🙂 🙂

  Across the aisle: How long can hot air keep balloon afloat?
  http://indianexpress.com/article/opinion/columns/across-the-aisle-how-long-can-hot-air-keep-balloon-afloat/

 10. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  நண்பர் டுடேஅண்ட்மீ,

  நீங்கள் தந்துள்ள சுட்டிகளுக்கு நன்றி.

  எனக்கென்னவோ, திருவாளர் ப.சி. அழகாகவே, கச்சிதமாக ,
  புள்ளி விவரங்களுடன் எழுதி இருக்கிறார் என்றே தோன்றுகிறது.

  அவரை காங்கிரஸ் கட்சி – ராஜ்ய சபாவிற்காவது அனுப்பி
  வைக்கலாம். (புள்ளி விவரங்களுடன், தெளிவாகப் பேசக்கூடிய
  தலைவர்கள் எதிர்க்கட்சியில் தற்போது அவசியம் தேவை …. )

  (அதற்காக, பழசை எல்லாம் மறந்து விட்டேன் என்று யாராவது
  நினைத்து விடப்போகிறார்கள். அது தனி கணக்கு ……
  நேற்று ஒரு ஆன்மிக கட்டுரை படித்தேன் – அற்புதமாக இருந்தது.
  (நான் அதைப்பற்றி எல்லாம் இங்கே எழுதினால், அடிக்க வருவார்கள்….)
  பாவக் கணக்குகள் தனியாகவும்,
  புண்ணியக் கணக்குகள் தனியாகவும் வைக்கப்படுகின்றன.
  செய்த பாவத்திற்கு அனுபவிக்க வேண்டியதை அனுபவித்து தான்
  கழிக்க முடியும்……)

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

 11. R.Srinivasan சொல்கிறார்:

  The article published in the Hindu about Mr.Modi’s 365 days in power translated in tamil by your website is excellent and its easily understandable. Mr. Modi not only bent his body towards the steps of the parliament and respected it, he also talked in a very subdued tone in his parliamentary board meeting and went very emotion to the extent his eyes were watered. During the election campaigns he undertook “chai-pe-charcha” and attracted thousands of ordinary tea sellers towards him by saying he is one amongst them and do all the things they need from the govt. if he comes to power. He further went in front of retired army personnel (that was where he started his campaign) he really touched their hearts and promised them that he will bring one rank one pension as soon as he comes to the power. He promoulgated on the dias that when he comes to power he will bring “Acche din” for everybody.Then he went on to say that he will bring black money within 100 days and distribute 15L to each citizen.He also promised our farmers to provide them all the necessary things to come out of their problems and also to the youth of this country,the much needed jobs by creating 2 crore jobs each year. Now as rightly pointed-out in this article he has not even respected the parliament which he touched the steps and given respect. The promises are in cold storages. His ministers has got no role to play and he and he alone has to take all decisions. This is the present situation.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் ஸ்ரீநிவாசன்,

   இந்த கட்டுரையின் பெருமை முழுவதும் இந்துவில் முதலில்
   எழுதியவருக்குத்தான் போய்ச்சேர வேண்டும்.

   நீங்கள் மிகக் கோர்வையாக, அத்தனையையும் விவரித்திருக்கிறீர்கள்.
   மோடிஜி எக்கச்சக்கமாக “பில்டப்” பண்ணி ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை
   உண்டு பண்ணி இருந்தார்.

   பதவிக்கு வந்த பிறகு கொஞ்சம் கூட அவற்றைப் பற்றி எல்லாம்
   கவலைப்படவே இல்லை. “சூட்-பூட்” மட்டும் தான்.
   வெட்கமும் இல்லை – குற்ற உணர்வும் இல்லை.

   எல்லாரும் நில அபகரிப்பு சட்டம் பற்றி பேச ஆரம்பித்து விட்டதால் –
   இதோ அடுத்த வேடம் ஆரம்பித்து விட்டது –
   இப்போது விவசாயிகளின் நண்பன் வேடம்.
   இன்னும் கொஞ்ச நாளைக்கு நம் எல்லாரையும் விட வேகமாக
   விவசாயிகளுக்காக குரல் கொடுப்பார்…..

   இன்றைய தினம் இந்தியாவின் அதி உன்னத நடிகர் –
   சூப்பர் ஸ்டார் நமது பிரதமரே தான்…!!!
   சினிமா ஹீரோக்கள் காசு வாங்கிக்கொண்டு நடிப்பார்கள்.
   இவர் நமக்காக, நம்மை ஏமாற்றுவதற்காக –
   இனாமாகவே நடிக்கிறார் – ஏனெனில், இது அவருக்கு பிடிக்கிறது –
   நன்றாக வரவும் செய்கிறது….!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 12. R.Srinivasan சொல்கிறார்:

  Dear Vimarisanam-Mr.Kaveri minthan, Thank you for your kind reply. Though Mr.Modi can be a super star, one cannot ignore the facts that most of the voters,though simple,humble,cannot be fooled like this for ever.Mr.Modi must remember that he and his party got only 31% of vote shares .and the rest 69% got by his opponents who fought seperately without any alliance. Therefore, if he is not really walking the talk,then in next election our most matured voters will give fitting reply to him and his party and their alliances.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.