ஹைதராபாத் நிஜாமும் – கொலைகார ரஜாக்கர்களும் …. (கலவர பூமி-2)

 

 

nizam in time magazine

  1937 Time magazine (Pic:Getty Images)

ஹைதராபத் நிஜாம் – மீர் உஸ்மான் அலி கான் – ஒரு விசித்திரமான
மனிதர். ஒரு சமயத்தில் உலகிலேயே மிகப்பெரிய பணக்காரராக
விளங்கியவர். 80 வயதில், அவர் இறக்கும் வரையில், (1967 வரை )
அவர் தான் உலகின் மிகப்பெரிய செல்வச் சீமானாக இருந்தார்.

1937-ம் ஆண்டில், இதற்காகவே, “டைம்” மேகசின் அவரது புகைப்படத்தை
அட்டையில் பிரசுரித்தது என்றால் பார்த்துக் கொள்ளலாம்.

செல்வக் களஞ்சியமாக விளங்கியது அவரது அரண்மனை.
பெண்கள் அவரது பலவீனம்.
அவரது அதிகாரபூர்வமற்ற 86 மனைவிகளும், அவர்கள் மூலம்
பிறந்த 100 குழந்தைகளும் அந்த அரண்மனையில் தான் வசித்தனர்.

nizam with his wives
(நிஜாம் தனது சில மனைவிகளுடன் )

Ladies_Band_of_the_Nizam_of_Hyderabad
( நிஜாமின் முழுவதும் பெண்களால் உருவாக்கப்பட்ட ‘பாண்டு ‘ வாத்திய குழு )

கூடவே அரண்மனை பணிகளைக் கவனிக்க அவர் நியமித்திருந்த
ஊழியர்களின் எண்ணிக்கை 14,718. அவரது பாதுகாவலர்களாக மட்டும்
சுமார் 3000 அராபிய மெய்க்காப்பாளர்கள் இருந்தனர்.
அரண்மனை சாண்டிலையர் விளக்குகளை அன்றாடம் துடைத்து
பராமரிக்க மட்டுமே 38 ஊழியர்கள் இருந்தனர்.

Nizam VII of Hyderabad poses in a car, one of the large fleet owned by him

இத்தனை இருந்தும் என்ன பயன் ….?
தன் குடிமக்களின் அமைதியான, வளமான வாழ்வை உறுதி செய்யாத
இந்த மனிதரை எதில் சேர்க்க முடியும்…? நயவஞ்சக நரி –
சுயநலத்தின் மொத்த உருவம் என்று தான் கூற வேண்டும்.

நிஜாமின் பிரதம அமைச்சர் பொறுப்பில் இருந்தவர் மீர் லாய்க் அலி;
சுமார் 22,000 பேரைக் கொண்ட படை தான் ஹைதராபாத்
நிஜாமின் அதிகாரபூர்வமான ராணுவமாக செயல்பட்டது.

ஆனால் -நிஜாமின் வலது கரமாக, நிஜ அதிகார மையமாகத்
திகழ்ந்தவன் கொலைகாரன் காஸிம் ரஜ்வி.

kolaikara razakkar padai thalaivan - kazim razvi

சுமார் இரண்டு லட்சம் பேரைக் கொண்ட மிகப்பெரிய கூலிப்படை
ஒன்றைத் “ரஜாக்கர்” என்கிற பெயரில் திரட்டி, சமஸ்தானத்தை
முழுவதுமாக தன் அதிகாரத்திற்குள் கொண்டு வந்து செயல்பட்டு
வந்தவன் காஸிம் ரஜ்வி.

அப்போதைய ஹைதராபாத் சமஸ்தானத்தின் மக்கள்தொகை
ஏறக்குறைய 1.6 கோடி. இதில் பெரும்பாலானோர் – சுமார் 85 %
பேர் இந்துக்கள். இந்தியாவின் இதர பகுதிகள் பிரிட்டிஷ்
ஆட்சியிலிருந்து விடுதலை பெற தீவிரமாக சுதந்திர போராட்டதில்
ஈடுபட்டுக் கொண்டிருந்த காலத்தில்,

ஹைதராபாத் சமஸ்தானத்து மக்கள் வித்தியாசமான சூழ்நிலையில்
வாழ்ந்து கொண்டிருந்தனர். ஹைதராபாத் என்றுமே
பிரிட்டிஷ் அரசின் நேரடி கட்டுப்பாட்டிற்குள் வந்ததில்லை.
பிரிட்டிஷ் ஆட்சியின் தலைமையை நிஜாம் ஏற்றுக் கொண்டு
செயல்பட்டதால், நிஜாம் தன் “சாம்ராஜ்ஜியத்தில்” தாம்
விரும்பியவாறு ஆட்சி செய்ய பிரிட்டிஷ் அரசு அனுமதித்திருந்தது….

சாதாரண பொது மக்களின் நல்வாழ்வுக்கான எந்தவித அக்கரையும்
நிஜாம் அரசுக்கு இல்லை. பசி, பட்டினி, கல்வியறிவின்மை,
நோய், வேலையில்லா திண்டாட்டம் அனைத்தும் சேர்த்து மக்களை
வாட்டியது. நிலங்கள் அனைத்தும் செல்வந்தர்களுக்கே சொந்தமாக
இருந்தன. நிலச்சொந்தக்காரர்களில் 40 % பேர் இஸ்லாமியர்கள்.

விவசாயக்கூலிகளாக – வாழ்ந்து வந்தனர் பெரும்பாலான மக்கள்.

பிற்பாடு கர்நாடகாவுடனும், மஹாராஷ்டிராவுடனும்
இணைக்கப்பட்ட சில பிரதேசங்களையும் –
ஹைதராபாத் நகரம் உள்ளிட்ட தற்போதைய தெலுங்கானாதான் –
கிட்டத்தட்ட நிஜாம் சமஸ்தானமாக இருந்தது.

நிஜாம் சமஸ்தானத்தில், ஏழைகளை
நிலப்பிரபுக்களிலிருந்து விடுவிக்க கம்யூனிஸ்ட் கட்சியும் –

ஹைதராபாத் சமஸ்தானம் இந்தியாவுடன்
இணைய வேண்டும் என்று வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியும் –

விசால ஆந்திரா அமைக்கப்பட வேண்டுமென்று வற்புறுத்தி
ஆந்திர மகா சபையும் தீவிரமாகப் போராடி வந்தன.

இந்தக் கட்சிகளை ஒடுக்கவும்,
நிஜாமின் ஆதிக்கத்தை நிலை நிறுத்தவும்
ஆரம்பிக்கப்பட்ட குண்டர் படை தான் இந்த ரஜாக்கர் இயக்கம்.

1947-ல் – இந்தியாவிற்கு சுதந்திரம் அளித்து விட்டு
வெளியேறுவது என்று முடிவு செய்த பிரிட்டிஷ் அரசு –
தன்னால் முடிந்த அளவிற்கு – பிரச்சினைகளையும், சிக்கல்களையும்
சுதந்திர இந்தியாவுக்கு பரிசாக அளித்து விட்டுப் போக நினைத்தது.

முதல் பிரச்சினை –
இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையும் –
அதனால் ஏற்பட்ட பின்விளைவுகளும்…..

அடுத்த பிரச்சினை –
இந்தியாவையும் பாகிஸ்தானையும் தவிர –
பிரிடிஷாரின் பாதுகாப்பில் இருந்தன
பெரிதும் சிறிதுமான ( ஹைதராபாத் போன்ற )
595 சுதேசி சமஸ்தானங்கள் ( சுதேசி மன்னர்களால் ஆளப்பட்டவை )

அவர்களது எதிர்காலத்தை –
அதாவது இந்தியாவுடன் இணைவதா அல்லது
பாகிஸ்தானுடன் சேர்வதா அல்லது
தனிப்பட்ட நாடு என்ற அந்தஸ்துடன் தொடர்வதா
என்கிற நிலையை – தாங்களே தீர்மானித்துக்கொள்ளலாம் என்று
அறிவித்தது பிரிட்டிஷ் அரசு.

இந்தியாவின் நிலப்பரப்பிற்கிடையே குட்டி குட்டியாக
இப்படி 595 நாடுகள் இருந்தால் – இன்றைய தினம் இந்தியா எப்படி
இருந்திருக்கும் ….?

(தொடர்கிறது – பகுதி 3-ல் )

 

 

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to ஹைதராபாத் நிஜாமும் – கொலைகார ரஜாக்கர்களும் …. (கலவர பூமி-2)

 1. today.and.me சொல்கிறார்:

  //இந்தியாவின் நிலப்பரப்பிற்கிடையே குட்டி குட்டியாக
  இப்படி 595 நாடுகள் இருந்தால் – இன்றைய தினம் இந்தியா எப்படி
  இருந்திருக்கும் ….?// another Africa continent..!

 2. Pingback: ஹைதராபாத் நிஜாமும் – கொலைகார ரஜாக்கர்களும் …. (கலவர பூமி-2) | Classic Tamil

 3. KuMaR சொல்கிறார்:

  அந்த 10பேர் குடும்பம் யார் சார்?!?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் குமார்,

   தயவு செய்து கொஞ்சம் பொறுங்களேன்.
   விவரங்கள் வந்து கொண்டே இருக்கின்றன.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 4. கரிகாலன் சொல்கிறார்:

  படிப்பதற்கு ஆவலாய் இருக்கிறேன் விரைவில் தொடரவும்

 5. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  “பிரிட்டிஷ் அரசு –
  தன்னால் முடிந்த அளவிற்கு – பிரச்சினைகளையும், சிக்கல்களையும்
  சுதந்திர இந்தியாவுக்கு பரிசாக அளித்து விட்டுப் போக நினைத்தது” – இது பெரும்பாலான எல்லோருடைய கருத்தாக இருக்கிறது. ‘நள்ளிரவில் சுதந்திரம்-டொமினிக் லேப்பியர், லேரி காலின்ஸ்’ புத்தகம் சமீபத்தில் படித்தேன். அதில் எழுதியிருப்பது நன்’கு ஆராய்ச்சி செய்து எழுதப்பட்டதாகத்தான் தோன்றியது. பிரிடிஷார் இந்த சமஸ்தானங்களிடமிருந்துதான் ஒவ்வொருவரிடமும் ஆக்கிரமித்து மொத்த நிலப் பரப்பையும் ஆக்கிரமித்தனர். அதற்கு முன்னால் இந்தியா என்று ஒரே தேசமாக (including Lahore, karaachchi, etc.) இருந்ததில்லை. விட்டுவிட்டுப் போகும்போது யார் இந்த நிலப் பரப்புக்கு அதிகாரி (owner)? காந்தி, ஜின்னா, நேரு/படேல் என்று இரு பெரிய தலைவர்கள் போன்ற பலர் இருந்தனர். காந்திதான் தலைவர் என்று பெரும்பாலான தேசம் கருதியதால், அவரின் கருத்துக்கு முக்கியத்துவம் கிடைத்தது. சரி…சரி….விஷயம் எங்கயோ போகிறது.

  உங்கள் இடுகை நன்றாக இருக்கிறது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.