சரணடைந்த நிஜாமும் – பாகிஸ்தானுக்கு சென்ற காசிம் ரஜ்வியும்…… (கலவர பூமி – கடைசி பகுதி-5 )

.

1948, செப்டம்பர் 13-ந்தேதி துவக்கப்பட்ட ராணுவ நடவடிக்கை
ஐந்தே நாட்களில் முடிவடைந்தது.

இந்திய ராணுவத்தில் வீரமரணம் அடைந்த ஜவான்களின்
எண்ணிக்கை – 32. காயமுற்றவர்களின் எண்ணிக்கை – 97.

நிஜாமின் தரப்பில் 490 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
122 பேர் காயமடைந்தனர்.
1373 ரஜாக்கர்கள் கொல்லப்பட்டனர்.
1911 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த சமயத்தில், இஸ்லாமியர்கள் மீது ஹிந்து வெறியர்களின்
பழி தீர்க்கும் படலமும் நிகழ்ந்தது. ஆயிரக்கணக்கிலான
இஸ்லாமிய குடும்பங்கள் பாதிக்கப்பட்டன.

செப்டம்பர்,17- ந்தேதி, தோல்வி நிச்சயம் என்கிற சூழ்நிலையில்
இந்திய ராணுவத்திடம் நிஜாம் நிபந்தனையற்றமுறையில்
சரணடைந்தார். நடந்தவற்றில் தனக்கு எந்த பங்கும் இல்லை
என்கிற மாதிரியும் ஹைதராபாத் சமஸ்தான பிரதம மந்திரி
மீர் லாய்க் அலியும், அவரது சகாக்களும் ( காசிம் ரஜ்வி
தலைமையிலான ரஜாக்கர் படை ) தான் அனைத்து
நிகழ்வுகளுக்கும் பொறுப்பு என்கிற வகையிலும் நடந்து கொண்டார்.
பிரதம மந்திரியும், அவரது ஆட்களும் பதவி விலகி விட்டதாகவும்,
தற்போது – இந்திய அரசு சொல்லும் யோசனைப்படி நடக்க –
தான் சித்தமாக இருப்பதாகவும் செய்தி அனுப்பினார்.

இந்திய அரசு, முதலில், ஹைதராபாத் சமஸ்தான குடிமக்கள்
அனைவரையும் பத்திரமாக பாதுகாக்கும்படி உடனடியாக சமஸ்தான
ராணுவ தளபதி Major General El Edroos -க்கு உத்திரவு பிறப்பிக்கும்படியும்,
நிஜாம் உடனடியாக ஹைதராபாத் வானொலி மூலம்
நாட்டு மக்களுக்கு இந்த செய்தியை தெரிவிக்க வேண்டும்
என்றும்
யோசனை கூறியது.

தன் வாழ்வில் முதல் தடவையாக, வானொலி நிலையத்தின்
படிக்கட்டுக்களை மிதித்து உள்ளே சென்ற நிஜாம் சமஸ்தானத்தின்
மக்களிடம் ரேடியோ மூலம் உரையாற்றினார்….

இந்திய அரசின் “போலீஸ் ஆக்ஷனை” தான் வரவேற்பதாகவும்,
இந்திய ராணுவம் வரவேற்கப்படுவதாகவும்,
அமைதியான முறையில் அதிகாரப் பரிமாற்றம் நடைபெறும் என்றும்,
ஐ.நா.சபைக்கு தான் கொடுத்த புகாரை வாபஸ் பெறுவதாகவும்
அறிவித்தார்.

அன்று மாலை 4 மணியளவில் சரணாகதி படலம் நடந்தது.

இந்திய ராணுவ ஜெனரல் சௌத்ரி யிடம் –
ஹைதராபாத் சமஸ்தான ராணுவ தளபதி Major General El Edroos –
சம்பிரதாயமாக சரணாகதியை அறிவித்து,
அதிகாரப் பொறுப்பை ஏற்கும்படி கேட்டுக் கொண்டார்.
இருவரும் கைகுலுக்கிக் கொண்டனர். தேநீர் விருந்து நடந்தது.
ராணுவ நடவடிக்கை அதிகாரபூர்வமாக முடிவுக்கு வந்தது.

இந்திய ராணுவத்தின் – ஜெனரல் சௌத்ரி, ஹைதராபாதின்
தற்காலிக கவர்னராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஹைதராபாத் சமஸ்தானத்து மக்கள் மகிழ்ச்சி ஆரவாரத்துடன்
இந்திய ராணுவத்தை வரவேற்றனர். ஒருவழியாக,
இந்தியா சுதந்திரம் பெற்று 13 மாதங்களுக்குப் பிறகு –
ஹைதராபாத் சமஸ்தானத்து
குடிமக்களுக்கு சுதந்திரம் கிடைத்தது.

ஹைதராபாத் சமஸ்தானத்தில் 1947-48- ஆம் ஆண்டுகளில்,
எந்தவித பாவமும் செய்யாத, அப்பாவிகளான
ஆயிரக்கணக்கான இந்துக்களும், இஸ்லாமியர்களும் –
கொல்லப்பட மூல காரணமாக இருந்த –

” ரஜாக்கர் ” குண்டர் படைத்தலைவன் காசிம் ரஜ்வி –
‘ஆபரேஷன் போலோ’ வின் போது கைது செய்யப்பட்டு,
வீட்டுக் காவலில் வைக்கப்பட்டான்.
இந்திய சட்டங்களின்படி,
அவன் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
1948-லிருந்து 1957 வரை அவன் சிறையில் இருந்த அவன்,
பின்னர், தன்னை விடுதலை செய்தால் – தான் பாகிஸ்தானுக்குச்
சென்று குடியேறத்தயாராக இருப்பதாக எழுதிக் கொடுத்ததன்
பேரில் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டான்.

( அவன் குடும்பம் ஏற்கெனவே 1949-லேயே பாகிஸ்தானுக்கு
குடிபெயர்ந்து விட்டது. )
பின்னர், தனது கடைசிக்காலம் வரை ( 1970-ல் இறக்கும்வரை )
காசிம் ரஜ்வி பாகிஸ்தானிலேயே இருந்தான்.

இது குறித்த சில பழைய புகைப்படங்கள் –

ஹைதராபாதின் கடைசி பிரதம மந்திரி மீர் லாய்க் அலி –

mir laik ali -last pm of hyd.

ஆபரேஷன் போலோ வின் போது – ஆக்ஷனில் காசிம் ரஜ்வி –

kasim razvi djuring polo operation

நிஜாம் படை வீரர்கள் –

nizam army

நிஜாமும் – சர்தார் படேலும் –

nizam and patel

நேருஜி – நிஜாம் – இந்திய ராணுவ தளபதியும் –
ஹைதராபாதின் முதல் கவர்னருமான ஜே.என்.சௌத்ரி –

nehru -nizam and jn choudhry

இன்றைய நவீன தொலைதொடர்பு சாதனங்களான,
தொலைக்காட்சி, வீடியோ, செல்போன் எதுவுமே இல்லாத –
சுமார் 67 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தில்,
மக்கள் நேரடியாகப் பார்த்து –
நிகழ்வுகளைத் தெரிந்து கொள்ள இருந்த ஒரே சாதனம் –
நியூஸ் ரீல். ( சினிமா படங்களுடன் இணைத்து காட்டப்பெற்ற
செய்திச் சுருள் )

1948-ல் “ஹைதராபாத் ஆக்ஷன்” – “ஆபரேஷன் போலோ”
பற்றி வெளிவந்த செய்திச் சுருள் கீழே –

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

21 Responses to சரணடைந்த நிஜாமும் – பாகிஸ்தானுக்கு சென்ற காசிம் ரஜ்வியும்…… (கலவர பூமி – கடைசி பகுதி-5 )

 1. Ramachandran. R. சொல்கிறார்:

  கே.எம்.சார்,

  இன்றைய தலைமுறைக்கு தெரியாத பல விஷயங்களை
  தந்திருக்கிறீர்கள்.
  அனைத்து விஷயங்களையும் உள்ளடக்கி
  விளக்கமாக, முழுமையாக இடுகை போடுவதில் உங்களுக்கு
  இணை நீங்களே தான் சார். மிக்க நன்றி. வாழ்த்துக்கள்.

 2. காரிகன் சொல்கிறார்:

  Rare information. A bit of history that is not taught or known.

 3. srinivasanmurugesan சொல்கிறார்:

  அற்புதமான தெளிவான பதிவுகள்.நமது நாட்டின் வரலாற்றை அறிய வைத்தமைக்கு நன்றி அய்யா.

 4. Pingback: சரணடைந்த நிஜாமும் – பாகிஸ்தானுக்கு சென்ற காசிம் ரஜ்வியும்…… (கலவர பூமி – கடைசி பகுதி-5 ) | Classic Tamil

 5. பஷீர் கான் சொல்கிறார்:

  திரு காவிரிமைந்தன்,

  நீண்ட நாட்களாக நான் தொடர்ந்து உங்கள் தளத்தைப்
  படித்து வருகிறேன்.
  மற்றவர்கள் எழுதும் விஷயங்களுக்குள்ளேயே எனது
  கருத்துக்களும் அடங்கி விடுவதால், தனியே
  பின்னூட்டங்கள் எழுதுகிற அவசியம் எனக்கு இதுவரை
  வந்ததில்லை.
  ஆனால் ஒரு விஷயத்தை இன்று அவசியம் எழுதியே
  ஆக வேண்டும் என்று
  தோன்றியதால் இன்று எழுதுகிறேன்.
  உங்கள் முதல் இரண்டு பகுதிகளையும் படித்தபோது,
  இந்துக்களுக்கு ஏற்பட்ட இழப்புக்களோடு இந்த இடுகையை
  முடித்து விடுவீர்கள் என்று ( தவறாக ) நினைத்து விட்டேன்.
  உங்களது நான்காவது பகுதியைப் படித்தவுடன்
  என்னை நானே நொந்துகொண்டென்.
  எந்தவித பாரபட்சமும் இல்லாமல், முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட
  இழப்புக்களைப் பற்றியும் அதேபோல் விவரித்திருக்கிறீர்கள்.
  இரண்டு தரப்பிலும் உள்ள மத வெறியர்களை ஒன்றுபோலவே
  கண்டித்திருக்கிறீர்கள்.
  சாதாரணமாக வலைப்பதிவுகளில்
  இத்தகைய பாரபட்சம் இல்லாமையை காண்பது மிகவும் அரிது.
  எதாவது ஒரு தரப்பினருக்கு சாதகமாகவே எழுதுகிறார்கள்.
  உங்கள் பரந்த உள்ளத்திற்கு என் மனதார பாராட்டுக்கள்.
  இது மாதிரி செய்திகளை தொடர்ந்து தாருங்கள்.
  இறைவன் உங்களுக்கு எல்லா நலமும் அருள வேண்டுகிறேன்.

 6. புது வசந்தம் சொல்கிறார்:

  அருமையான வரலாற்று பதிவு. உண்மைகளை உலகம் அறியச் செய்ய வேண்டும். ஐயாவின் பதிவுகளை அதிகம் பேர் படித்து பயன் பெற வேண்டும். இதன் மூலம் மனிதம் வளர்ப்போம். இந்த பதிவுகளை பலர் படித்து இதன் நடுநிலையை உணர்ந்து கொள்கிறார்கள், நண்பர். பஷீர் கான் போல. வெகு சிலர் மட்டுமே வேண்டாததை பேசுகிறார்கள். அது அவரவர் விருப்பம்.
  ஐயாவின் ஹைதராபாத் குறித்த முதல் பதிவை படிக்கும் போது ஒரு எண்ணம் உண்டானது. நம் வலைப்பதிவு நண்பர்கள் அனைவரும் ஒரு முறை ஐயாவை நேரில் சந்திப்பது என்று. நம் நண்பர்கள் இது குறித்து, ஐயாவின் அனுமதியுடன் இதனை முன்னெடுப்போம். (வெளிநாட்டு நண்பர்களும் இதில் இணையுமாறு வேண்டுகிறேன்).

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் ( புதுவசந்தம் ) அன்பு அவர்களுக்கு,

   மத நல்லிணக்கம் நிலவ வேண்டும்.
   அவரவருக்கு பிடித்த வழியில் செல்லும்
   சுதந்திரம் அனைவருக்கும் வேண்டும்.
   இரு தரப்பிலும் உள்ள வெறியர்களையும்,
   சுயநலவாதிகளையும் நாம் ஒதுக்கி வைக்க
   கற்றுக் கொண்டால் – இது நிச்சயமாக முடியும்
   என்பதே என் கருத்து.

   குறைந்த பட்சம் இந்த வலைப்பதிவு நண்பர்களாவது
   இதில் உறுதியாக இருப்போமே…
   இந்த செய்தி பரவ உறுதுணையாக இருப்போமே.

   நேரில் கூடுவது – தயவுசெய்து மன்னியுங்கள் –
   இப்போதைக்கு இந்த முயற்சி வேண்டாம்.
   பின்னர் எப்போதாவது எனக்குத் தோன்றினால்,
   நானே சொல்கிறேன்.
   தங்கள் அன்புக்கு நன்றி.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • புது வசந்தம் சொல்கிறார்:

    நன்றி, ஐயா. நீங்கள் மறுத்தது வருத்தமே, எனினும் காத்திருப்போம்.

    • today.and.me சொல்கிறார்:

     நேரே பார்க்காமலேயே அடிபிடி என்று சண்டை களைகட்டுகிறது. இன்னும் நேரில் பார்த்து கூடிவிட்டால்…. நண்ப புதுவசந்தம்.. ஏன் உங்களுக்கு இந்த விபரீத ஆசை. நானெல்லாம் தாங்கமாட்டேன் ஐயா.
     🙂

     • புது வசந்தம் சொல்கிறார்:

      ஒத்த கருத்துடைய மக்களை மட்டுமே கொண்ட ஒரு கூடலாக இருக்கட்டுமே என்ற எண்ணம். ஒரு நல்ல மனிதரை நம் வாழ்நாளில் சந்தித்தோம் என்ற ஆவலும் உண்டு.

 7. சீனிவாசன் சொல்கிறார்:

  இரு தரப்பிலும் உள்ள மத வெறியர்களால் பாதிக்கப்படுவது, இரு தரப்பிலும் உள்ள தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வலுவற்ற சாதாரண மக்கள்தான். எங்கே கலவரத்தை நுணுக்கமாக விவரித்து இரு சாராரின் உணர்ச்சிகளைத் தூண்டிவிடுமோ இந்தக்கட்டுரை என்று பயந்திருந்தேன்.அப்படி எழுதாமைக்கு மிக்க நன்றி.
  அன்புடன்,
  சீனிவாசன்.

 8. D. Chandramouli சொல்கிறார்:

  Dear KM,
  Generally, we have read a lot about what happened in the western and eastern part of India just after independence. In our childhood, we were just told that there was a dramatic ‘one night’ police operation ordered by Patel, and the Hyderabad Nizam had to surrender. I never knew that atrocities were committed against both Hindu and Muslim communities in Hyderabad too. You brought out the details in a vivid manner, even with photos of that period. Very surprising that your own father was in the thick of all the action and the family had to move out of the State. Yes, in our father’s times, patriotic feelings ran deep in their veins and in a way, majority of the population in our own surroundings were Congress-men!

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர்கள் அனைவருக்குமே,

   என்னுடைய அனுபவத்தைச் சொல்கிறபோது
   மத நல்லிணக்கத்தை வலியுறுத்த ஒரு வாய்ப்பு
   கிடைக்கும் என்பதாலும்,

   வட மாநிலங்களில் – பிரிவினை காரணமாக ஏற்பட்ட
   துயரங்கள் குறித்து மக்களுக்கு தெரிந்திருந்தாலும் –
   ஹைதராபாத் நிகழ்வுகள் பெரும்பாலும்
   நமது மக்களுக்கு தெரியவில்லை என்பதால் –

   இதைக்குறித்து சிறிது விவரமாக எழுதினேன்.
   அது அனைவருக்கும் பிடித்திருந்தது குறித்து
   மிகவும் மகிழ்ச்சி. அனுபவங்கள் தான் வாழ்க்கை
   நமக்கு கற்றுக் கொடுக்கும் பாடம்…..

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 9. Bala Murali சொல்கிறார்:

  உண்மையிலே எனக்கு ஹைதராபாத் பற்றி குழப்பம் இருந்தது. தங்களின் பதிவால் தீர்த்து விட்டீர்கள்.. நன்றி..

 10. gopalasamy சொல்கிறார்:

  தயவு செய்து தாங்கள் யாரையும் நேரில் சந்திக்க வேண்டாம் என கேட்டு கொள்கிறேன்

 11. Prakash சொல்கிறார்:

  Nandri Sir.

 12. Madhavan சொல்கிறார்:

  Photo:
  ஹைதராபாதின் கடைசி பிரதம மந்திரி மீர் NAலாய்க் அலி?
  Today I had a discussion with a sikh driver, who also explains the same way
  (he is a migrant before separation from Pak-punjab) what a co-incident sir

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   Thank you Madhavan.

   ” NA லாய்க் ” – good definition.
   Looks you live in north india and
   are familiar with hindi.

   with all best wishes,
   Kavirimainthan

 13. Madhavan சொல்கிறார்:

  ஐ.நா.சபைக்கு “தான்”(???) கொடுத்த புகாரை வாபஸ் பெறுவதாகவும்
  அறிவித்தார்.

  நடந்தவற்றில் தனக்கு எந்த பங்கும் இல்லை
  என்கிற மாதிரியும் ஹைதராபாத் சமஸ்தான பிரதம மந்திரி
  மீர் லாய்க் அலியும், அவரது சகாக்களும் ( காசிம் ரஜ்வி
  தலைமையிலான ரஜாக்கர் படை ) தான் அனைத்து
  நிகழ்வுகளுக்கும் பொறுப்பு என்கிற வகையிலும் நடந்து கொண்டார்.

  what a difference in tone!!!
  (it remembers vidra vidra suu naa paanaa – vadivel joke)

  Sardar Patelij Looks is like a Lion in photo!!
  (p.s. I am not a RSS or any political follower, so don’t try to paint on me)

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   Madhavan,

   No doubt – Sardar Patel was really a Great Leader
   and Strong Administrator.
   ( But- Nehruji was more popular and close to Gandhiji –
   That’s why Patel, though deserving – lost his chance …..)

   One thing – Even if you are a RSS – what is there to object.
   You are entitled to your own views.

   with best wishes,
   Kavirimainthan

 14. today.and.me சொல்கிறார்:

  //நடந்தவற்றில் தனக்கு எந்த பங்கும் இல்லை
  என்கிற மாதிரியும் ஹைதராபாத் சமஸ்தான பிரதம மந்திரி
  மீர் லாய்க் அலியும், அவரது சகாக்களும் ( காசிம் ரஜ்வி
  தலைமையிலான ரஜாக்கர் படை ) தான் அனைத்து
  நிகழ்வுகளுக்கும் பொறுப்பு என்கிற வகையிலும் நடந்து கொண்டார்.//

  உலக அதிகார வரலாற்றின் எந்தப் பக்கத்தைத் திருப்பிப்பார்த்தாலும் இப்படித்தான் இருப்பார்கள்.

  உலக அடியாட்களின் வரலாற்றின் எந்தப் பக்கத்தைத் திருப்பிப்பார்த்தாலும் இப்படித்தான் ஆக்கப்பட்டிருப்பார்கள்.

  இதனால் அதிகாரமையங்கள் கேலிக்கு உள்ளாவதோடு, அடிமைகளும் கேவலத்திற்கு உள்ளாகிறார்கள். அப்பாவி மக்களோ பலியாடுகள்.

  அதனாலேதான், மனிதன் அதிகாரபோதையோடோ, அடிமைகளாகவோ இல்லாமல் கொஞ்சம் சிந்தனையையும் பயன்படுத்தவேண்டும் 🙂

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.