ஜெ.வழக்கு – தமிழக காங்கிரசிலிருந்து ஒரு புதிய வித்தியாசமான குரல் ……

h.c. of karnataka-1

இந்த வழக்கு எப்படியும் அப்பீலுக்கு போய்த்தான் தீரும்
என்பது எல்லாருக்கும் தெரியும். கர்நாடகா அரசு, அது இல்லாவிட்டால்
திமுக, அதுவும் இல்லா விட்டால் சு.சுவாமி -யாராவது ஒருவர்
நிச்சயம் சுப்ரீம் கோர்ட்டுக்கு போவார்கள் என்பது தெரிந்ததே.

யதார்த்தமாகவும், இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டுக்கு
போனால் தான் இறுதி முடிவு கிடைக்கும்…
அதில் யாருக்கும் சந்தேகம் இல்லை.
எனவே, இன்று கர்நாடகா எடுத்த முடிவு குறித்து அதிர்ச்சி
எதுவும் ஏற்படவில்லை….

இருந்தாலும் தீர்ப்பு வந்த தேதியிலிருந்து – கடந்த 20 நாட்களுக்குள்
தான் எவ்வளவு கூப்பாடு….கூக்குரல்கள்…!!!

கலைஞர் 20 நாட்களில் 25 தடவை கூறி விட்டார்…
டாக்டர் ராமதாஸ் தினமும் காலையில்
இதைத்தான் முதலில் உச்சரிக்கிறார்….
விஜய்காந்த் கர்நாடகா முதல்வரை மிரட்டியே விட்டார்…
ஈவிகேஎஸ் – சொல்லவே வேண்டாம்….
வீரமணி அய்யா, திருமாவளவன், வைகோ – தமிழகத்தில் அத்தனை
எதிர்க்கட்சிகளும் – தினமும் கர்நாடகாவிற்கு –
வேண்டுகோள், அறிவுரை, மிரட்டல் – இவற்றில் எதாவதொன்று.

இன்று கர்நாடகா ஒரு முடிவெடுத்து விட்ட நிலையில் –
அடுத்ததாக ஒவ்வொருவராக – தினமும், அப்பீல் போட
இன்னும் ஏன் தாமதம் என்று கேட்கப்போகிறார்கள்…..!

என்னை அதிசயத்தில், வியப்பில் – ஆழ்த்தியது –

– கர்நாடகா இன்றைய முடிவை எடுக்கும் முன்னர் –
நான்கு நாட்களுக்கு முன்னதாக, தமிழக காங்கிரசிலிருந்து
(ஈவிகேஎஸ் காங்கிரஸிலிருந்து தான்…) ஒரு மூத்த தலைவர்
மிகவும் வித்தியாசமான கோணத்தில் இந்த வழக்கைப் பற்றி
பேசி இருப்பது தான். படித்துப் பாருங்கள் – உங்களுக்கும்
ஆச்சரியமாக இருக்கும்…. நான்கு நாட்களுக்கு முன் அவர்
கொடுத்த பேட்டியிலிருந்து சில பகுதிகள் கீழே –

—————————

” பெரியார், அண்ணா காலம் தொட்டு, திராவிட கட்சிகள் மாநில
சுயாட்சிக்காக போராடி வந்துள்ளன. இன்றும் இந்தியாவில் இருக்கும்
பல மாநிலங்கள் தங்களின் உரிமைக்காகப் போராடுகின்றன.

பீகார், குஜராத், ஜார்கண்ட், அருணாசலப்பிரதேசம், கர்நாடகம்,
மஹாராஷ்டிரா – என தேசிய கட்சிகள் ஆளக்கூடிய மாநிலங்களாக
இருந்தாலும் சரி, மாநில கட்சிகள் ஆளும் மாநிலங்களாக
இருந்தாலும் சரி-

அந்தந்த மாநிலங்களின் முதல்வர்கள், முன்னாள் முதல்வர்கள்
மீதான வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றுங்கள் என யாருமே
கேட்டது கிடையாது. லாலு பிரசாத் யாதவ், எடியூரப்பா,
அசோக் தவான் போன்றவர்கள் மீதான வழக்குகள் இதற்கு உதாரணம்.
அந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஒரு போதும் தங்களின்
மாநில சுயாட்சியை விட்டுக் கொடுக்க தயாராக இல்லை.

சட்டமன்றம், நிர்வாகம், நீதிமன்றம் – ஆகிய மூன்றில் தான்
மாநிலத்தின் சுயாட்சியே உள்ளது. கடந்த 45 வருடங்களாக
திராவிடக் கட்சிகள் தான் தமிழகத்தை ஆளுகின்றன. இந்நிலையில் –
” தமிழகத்தில் வழக்கு நடந்தால் சாட்சிகளை கலைத்து விடுவார்கள் –
போலீஸ் நிர்வாகம் சரி இல்லை, நீதிபதிகள் அச்சுறுத்தப்படுவார்கள் “-
என்றெல்லாம் காரணம் கூறி
ஜெயலலிதா வழக்கை கர்நாடகாவிற்கு
கொண்டு போய் நடத்தினார்கள்.

இது – குஜராத் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடி மீதான வழக்கை
இந்தியாவில் நடத்தினால் நியாயம் கிடைக்காது – பாகிஸ்தானுக்கு
மாற்றுங்கள் என்று சொல்வது போன்றது ….!

ஜெயலலிதா மீதான சொத்து வழக்கு முடிந்து விட்ட ஒன்று.
அதில் தலையிட நான் விரும்பவில்லை. ஆனால், ஒரு மாநில
நிர்வாகத்தைப் பற்றி, நீதியைப்பற்றி – மற்றொரு மாநில அமைச்சரவை
கூடி முடிவெடுக்க வேண்டிய சூழலை – மாநில சுயாட்சி கேட்பவர்களே
ஏற்படுத்துவது சரியா ?

ஜெயலலிதா மீதான வழக்கு நடந்தது கர்நாடகா கோர்ட்டில்.
தண்டனை பெற்றது கர்நாடகா சிறையில்.
அப்பீல் போட்டு ஜெயிச்சது கர்நாடகா ஹைகோர்ட்டில் –

திரும்ப அப்பீல் போடுங்கன்னு சொல்றது –
கர்நாடகா அமைச்சரவையிடம் …!
இது எந்தவிதத்தில் மாநில சுயாட்சிக்கு உகந்தது ..?
என்பது தான்
என் கேள்வி.

மக்கள் செல்வாக்கால் பெரும்பான்மையாக தேர்ந்தெடுக்கப்பட்ட
ஒரு அரசின் மாநில சுயாட்சி – அரசியல் காரணம் மூலமாக –
முதுமக்கள் தாழியில் வைத்து பூட்டி வைக்கப்பட்டுள்ளது.

இது சேர, சோழ, பாண்டியர் என மூவேந்தர் காலந்தொட்டே
தமிழகத்தில் அரசியல் கட்சியினர் கடைப்பிடிக்கும் காட்டிக்கொடுத்தல்,
சிறையெடுத்தல், கப்பம் கட்டுதல், அடிமை ஆக்குதல் போன்றவற்றை
நினைவுபடுத்தும், மரபணுவின் வெளிப்பாடு.

இதனால் தான் சேர, சோழ, பாண்டிய மன்னர்களும் ஆட்சியிழந்து,
அதன் பின்னர் பல்லவர்களும் போய் – கடைசியில் மைசூர்
மஹாராஜாவும், திப்பு சுல்தானும் தமிழகத்தை பிடித்தார்கள்.
விஜயநகர சாம்ராஜ்ஜியம் ராஜபாளையம் வரை வந்தது.
இப்போதும், அதே நிலையை உருவாக்குகிறார்களோ என்கிற
எண்ணம் ஏற்படுகிறது.

பீகார், மஹாராஷ்டிராவில் இருப்பவர்கள் அந்தந்த நீதித்துறையை
நம்பும்போது, தமிழக அரசியல்வாதிகள் மட்டும் – தமிழக
நீதித்துறை மீது நம்பிக்கை வைக்காதது ஏன் ..? எடியூரப்பா மீதான
வழக்கை தமிழகத்திற்கா மாற்றினார்கள்..?

இன்னும் சொல்லப்போனால், டூஜி வழக்கின் பரிமாற்றங்கள் எல்லாம்
டெல்லியில் நடந்தவை என்பதால் அந்த வழக்கு இப்போது டெல்லியில்
நடக்கிறது. அதுவே, சென்னையில் நடந்திருந்தால்,
வழக்கும் சென்னையில் தான் நடந்திருக்கும். அதற்காக அந்த வழக்குகள்
சென்னையில் நடந்தால் நியாயம் கிடைக்காது – வேறு மாநிலத்திற்கு
மாற்றுங்கள் என்றா சொல்ல முடியும் ..?

எந்த தமிழ்நாட்டில் மாநில சுயாட்சிக்காக போராடினோமோ –
அந்த உரிமைகளை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறோம்.

ஜெயலலிதா மீண்டும் முதல்வர் ஆனதை மக்களாட்சி முறையில்
ஆச்சரியமாகவோ, அதிசயமாகவோ பார்க்க முடியாது. பல முதல்வர்கள்
சிறைக்கு செல்வதும், மீண்டும் ஆட்சிக்கு வருவதும் ஒன்றும் புதிதல்ல.
இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்ட நிர்வாக தொய்வை ஜெயலலிதா
எப்படி சரி செய்யப்போகிறார் என்பதைப் பொறுத்து தான் மக்கள்
தீர்ப்பளிப்பார்கள்.

நீதித்துறையையும், காவல்துறையையும் – நம்புவது தான் உண்மையான
மாநில சுயாட்சி. தமிழக நீதித்துறையை நம்பாமல், மாநில சுயாட்சியை
குழி தோண்டி புதைத்து விட்டு, ஒரு மாநிலத்தின் அரசியல் சட்ட
இரையாண்மையை மற்றொரு மாநிலத்திற்கு அடகு வைப்பது
வருந்தத்தக்கது.”

————————————–

– பேட்டி ஆச்சரியம அளிக்கிறதா – இல்லையா …?
சொன்னவர் யாரென்று தெரிந்தால் இன்னும் ஆச்சரியமாக இருக்கும்…!

இங்கேயே சொல்லி விட்டால் – சுவை குறைந்து விடும்.
யாராக இருக்கலாமென்று யோசியுங்களேன். ஒரு மணி நேரம்
கழித்து பின்னூட்டம் மூலமாக யாரென்று சொல்கிறேன்…

சில clues கொடுக்கிறேன் – சொன்னவர் ஒரு வழக்குரைஞர்.
நீண்டகாலமாக பாராளுமன்றத்தில் உறுப்பினராக இருப்பவர்.
காங்கிரஸ் ஆட்சியில் – மத்திய அமைச்சராக இருந்தவர்.
தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்….!!!

யோசியுங்களேன் – பின்னர், பின்னூட்டத்தில் வருகிறேன்…!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

31 Responses to ஜெ.வழக்கு – தமிழக காங்கிரசிலிருந்து ஒரு புதிய வித்தியாசமான குரல் ……

 1. today.and.me சொல்கிறார்:

  P C ?

  • Sharron சொல்கிறார்:

   Who ever it may be but he is exactly right. He needs appreciation. One person register his comment like this on Dinamalar WHY NOT SOME ONE FROM OTHER STATE FILE A CASE AGAINST MK BECAUSE EVERY INDIAN KNOWS ABOUT HIS FAMILY WEALTH. Utter shame for TN.

 2. appannaswamy சொல்கிறார்:

  pc

  • ராமச்சந்திரன். ஆர். சொல்கிறார்:

   கே.எம்.சார்,

   ப.சி. ஜெ.வுக்கு ஆதரவாக கனவில் கூடப் பேச மாட்டாரே..
   சொன்னது யாராக இருந்தாலும் சரி அவர் சொல்வதில்
   நிச்சயம் ஒரு நிஜம் இருக்கிறது.
   தமிழ் நாட்டில் எதிர்க்கட்சித் தலைவர்கள் –
   கலைஞர், ராமதாஸ், விஜய்காந்த் உட்பட அனைவருமே
   பேடிகள் – நேருக்கு நேர் நின்று போரிட
   துணிச்சல் இல்லாத
   கோழைகள்.

   .கண்ணேதிரே ஆர்.கே.நகர் தேர்தல் வந்து நிற்கிறது.
   துணிச்சல் இருந்தால், நேர்மை இருந்தால் , நேருக்கு நேர்
   நின்று போட்டியிட்டு பார்க்க வேண்டியது தானே ?
   மக்கள் காரித்துப்புவார்கள் என்று தெரிந்து தானே பதுங்குகிறார்கள்.
   பம்முகிறார்கள். ஓடி ஒளிகிறார்கள். ?
   அப்பீலுக்கு ஆதரவாகப் பேச ஆச்சாரியாவிற்கும், ரவீந்திர வர்மாவுக்கும் கலைஞர் எவ்வளவு கோடி கொடுத்திருப்பார்
   என்று மற்றவர்கள் பேச முடியாதா என்ன ?

   நீங்கள் ஒருசமயம் சொன்னது முற்றிலும் சரி.
   எல்லாம் எரிகிற கொள்ளிகள். ஆத்திரம், எழுதி விட்டேன்.
   தவறாக இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள். தப்பென்று
   நினைத்தால் delete செய்து விடுங்கள்.
   நன்றி சார்.

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    ராமச்சந்திரன்,

    நீங்கள் தவறாக எதையும் சொன்னதாக எனக்குத் தெரியவில்லை…
    ( nothing unparliamentary …!) எனவே வருந்த வேண்டியதில்லை.

    நண்பர்களுக்கு,

    உண்மையில், நான் கூட நண்பர் ராமச்சந்திரன் சொல்லி இருப்பது போல்
    தான் உணர்கிறேன்.

    //தமிழ் நாட்டில் எதிர்க்கட்சித் தலைவர்கள் –
    கலைஞர், ராமதாஸ், விஜய்காந்த் உட்பட அனைவருமே
    பேடிகள் – நேருக்கு நேர் நின்று போரிட
    துணிச்சல் இல்லாத
    கோழைகள்.

    .கண்ணேதிரே ஆர்.கே.நகர் தேர்தல் வந்து நிற்கிறது.
    துணிச்சல் இருந்தால், நேர்மை இருந்தால் , நேருக்கு நேர்
    நின்று போட்டியிட்டு பார்க்க வேண்டியது தானே ?
    மக்கள் காரித்துப்புவார்கள் என்று தெரிந்து தானே பதுங்குகிறார்கள்.
    பம்முகிறார்கள். ஓடி ஒளிகிறார்கள். ?
    அப்பீலுக்கு ஆதரவாகப் பேச ஆச்சாரியாவிற்கும், ரவீந்திர வர்மாவுக்கும் கலைஞர் எவ்வளவு கோடி கொடுத்திருப்பார்
    என்று மற்றவர்கள் பேச முடியாதா என்ன ?//

    இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்…..?

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

    • Sharron சொல்கிறார்:

     Acharya openly hates JJ. This is not good. But Karnataka wants only Acharya should appear in Supreme Court is not acceptable and also for KUNHA they gave promotion. This clearly shows how much they hate JJ [ that means how much they favour MK.].Supreme court should consider all these things. Why all our politicians are blindly going behind Karnataka?. Is Karnataka & its politicians are all immune to scams?.So many questions are behind this appeal. Anyhow hope Supreme court will free JJ because TN needs her now.

    • sella சொல்கிறார்:

     I agree that you stand by JJ for long time. But that does not mean you or other friends like ToM and Ramachandran can “brand” the readers as Pro-DMK who criticize JJ. I have a view just like Nithya but I dont need to be as you imagine or project.

     Condemn/criticize for the mistakes; but support on the basis of comparison – can be a better view. Unfortunately I see only the latter.

 3. Thiruvengadam (@veluran) சொல்கிறார்:

  Who ever tell this opinion: Please don`t compare after my posting with alagiri case. This is a case filed by Tamilnadu Govt.and proceeded to current status..It is usual to make appeal either by Defense or accused. Can we expect an appeal by TN govt now ? I do hope before taking the expected appeal by Karnataka Govt, a clarification suit may be filed whether who has the right to appeal since Karnataka is not a prosecutor.Only if there is a STAY for the last judgement made , there will be any hot news. Otherwise it will go like that of PC election case & period will be over for Assembly. Reg the person who gave this differed interview i think in two aspects. The reporter may have got this version after repeated questions OR the person may wish to get a public attraction like this. As usual we may get REFUSAL statement that he didn`t say so.In final I agree with Ur யதார்த்தமாகவும், இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டுக்கு
  போனால் தான் இறுதி முடிவு கிடைக்கும்…

 4. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  நண்பர்களுக்கு,

  பேட்டி கொடுத்தவர் – இந்த வித்தியாசமான கருத்தைச் சொன்னவர் –
  தமிழக காங்கிரஸின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் –
  திருவாளர் ப.சி. அவர்களின் செல்வாக்கையும் தாண்டி –
  தன்னை நிலை நிறுத்திக்கொண்டிருப்பவருமான –

  டாக்டர் சுதர்சன நாச்சியப்பன் ( ராஜ்ய சபா உறுப்பினர் )

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

  • today.and.me சொல்கிறார்:

   //திருவாளர் ப.சி. அவர்களின் செல்வாக்கையும் தாண்டி – தன்னை நிலை நிறுத்திக்கொண்டிருப்பவருமான// அருமை.

   இந்த மாதிரி ஏதாவது உருப்படியாகச் (சொல்லவாவது) செய்தால் தானே இவர் இருப்பதே தெரிகிறது. மனதில் தோன்றியதை வெளிப்படையாக அலசி ஆராய்ந்ததற்காக இவரைப் பாராட்டலாம்.

 5. Pingback: ஜெ.வழக்கு – தமிழக காங்கிரசிலிருந்து ஒரு புதிய வித்தியாசமான குரல் …… | Classic Tamil

 6. SENTHILNATHAN சொல்கிறார்:

  JJ’S LIFE, ALWAYS SHE IS GOING TO FACE A BIG PROBLEM AFTER HER BIG SUCCESS EVERYTIME. AGAIN SHE WILL WIN. THIS IS WHAT HAPPENING IN THE PAST.

 7. nithya சொல்கிறார்:

  அன்பின் காவேரி மைந்தன் ஐயா,

  நீங்கள் ஏன் ஒரு முகமாகவே எழுதுகிறீர்கள் என்று தெரியவில்லை..நீங்களா இப்படி என்று வேதனை தான் மிஞ்சுகிறது ..

  ஜெ ஜெ வுக்கு எதிரான மிக கடினமான வழக்கு இது. இந்த வழக்கு இந்தனை ஆண்டு (18) இழுத்தடிப்புக்கு காரணமே இடையில் ஜெ ஜெ ஆட்சி நடந்தது தான் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும். ,முற்றிலும் கொல்லப்பட்ட இந்த வழக்கு உச்ச நீதிமன்றம், அன்பழகன் கருத்தில் நியாயம் இருந்ததினால் (ஜெ ஜெ ஆட்சி காலத்தில் 60% பேரை பிறள் சாட்சிகளாக மாற்றியதால் வழக்கை கர்னடஹவுக்கு மாற்றியது. உங்களுக்கு தெரியாதது இல்லை இதே சுதாசன நாச்சியப்பன் ராஜீவ் கொலை வழக்கை (மூவர் தூக்கு ) சென்னை யில் இருந்து டெல்லிக்கு மாற்றியதற்கு மிக வரவேற்பு கொடுத்தார் .. மூப்பனார் பேரவை யில் இருந்து ஒருவர் வழக்கு போட்டு சென்னையில் நீதிபதி மிக அழுத்தத்திற்கு உள்ளாகிறார் என்று காரணம் கூறி அதை டெல்லிக்கு மாற்றினார்கள் ..சங்கரச்சர்யா வழக்கு இதே போல் பாண்டிச்சேரிக்கு மாற்றினார்கள் நீதிபதியிடம் சங்கராசார்யாவே நேரிடையாகவே பேரம் பேசிய ஒலிநாட வந்த பிறகும் பாண்டிச்சேரி அரசு மேல்முறையீடு செய்ய வில்லை.. இதற்கும் மாநில சுயாட்சிக்கும் என்ன சம்பந்தம் ..ஜெ ஜெ க்கு மேல்முறை ஈடு வேண்டாம் என்று சொல்லுபவர்களை பாருங்கள் ..ஜெகன் கட்சியை சேர்ந்த ரோஜா, சிவகுமார் கர்நாடகா (who is facing corrupt கேஸ்) , எடியுரப்ப, அருண் jaitley who met ஜெ ஜெ when ஷி வாஸ் acquested ) அய்யா நீங்கள் ஏன் ஜெ ஜெ வுக்கு ஆதரவு தெரிவிக்ரீர்கள் என்று தெரியவில்லை ..அப்படி எல்லாம் இல்லை என்று உங்களை நீங்கள் கேட்டுக்கொண்டு சொல்லுங்கள் நிச்சயம் கருணாநிதி கட்சியும் ஊழல் கட்சி தான் சட்டத்தின் படி அவர்களும் தண்டிக்கப்படவேண்டும் அவர்கள் நிச்சயம் வருமானத்திற்கு அதிகமாக சேர்த்து வைதிருக்கிறார்கள் என்றால் நிச்சயம் ஜெ ஜெ அவர்களுக்கு எதிராக இதை விட சிறந்த சிக்கலான வழக்கை தொடுத்து இருக்க முடியும் ஏன் செய்யவில்லை யார் தடுத்து நிறுத்தியது ..எனது எண்ணமெல்லாம் ஒருவர் நிச்சயம் குற்றவாளி என்பதற்கான ஆதாரம் இருந்து அதை நீதிபதி இல்லை என்று பொய் கூறும்போது சட்டத்தின் பார்வையில் குற்றவாளியா இருந்தும் நீதிபதி விலை போக கூடாது என்பதுதான் அது கருணாநிதியாக இருந்தால் என்ன ஜெ ஜெ வாக இருந்தால் என்ன மோடியாக இருந்தால் என்ன ..நிச்சயம் என் கருத்தின் நியாயத்தை புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்

  • ராமச்சந்திரன். ஆர். சொல்கிறார்:

   திரு நித்யா,

   திமுக அடிமைகளிடம் புத்தி கேட்கும் அளவில்
   காவிரிமைந்தன் அய்யா அவர்கள் இல்லை.
   இவ்வளவு பேர் இந்த வலைத்தளைத்தை படிக்கிறார்களே,
   உங்களைத்தவிர வேறு யார் குறை சொல்கிறார்கள் ?
   கலைஞர் விசுவாசம் தானே உங்களை எழுத வைக்கிறது.
   நீதிக்காக கண்ணீர் வடிப்பதாக நாடகமாடுகிறீர்கள்.
   தன் வீட்டில் மூன்று குற்றவாளிகளை வைத்துக்கொண்டு,
   ஜெ. மீது குறை சொல்ல கருணாநிதி அவர்களுக்கு என்ன
   யோக்கியதை இருக்கிறது ?
   தலைவரின் மகள் வழக்கு பற்றியோ,
   தா.கி. வழக்கு பற்றியோ,
   கே.டி.சகோதரர்கள் பற்றியோ வெல்லாம் நீங்கள்
   எப்போதாவது இந்த தளத்திற்கு வந்து இதே அக்கரையுடன்
   பின்னூட்டம் போட்டிருக்கிரீர்களா ?
   தா.கிருட்டினன் கொலை வழக்கை, ஆந்திரா கீழ் கோர்ட்
   பிறழ்சாட்சிகள் காரணமாக தள்ளுபடி செய்தபோது –
   இதே போல் அப்பீல் செய்யும்படி கருணாநிதி அவர்கள்
   ஆந்திர அரசை ஏன் கோரவில்லை ?
   கொலைக்குற்றம் சாட்டப்பெற்றவர் தான் பெற்ற மகன்
   அழகிரி என்பதால் தானே ? அப்போது நீங்கள் எங்கே
   போயிருந்தீர்கள் ? நீதி ஜெயிக்க வேண்டுமே எங்கிற கவலை
   அப்போது உங்களுக்கு இல்லையா ?

   மதுரையில் தினகரன் ஆபிஸ் கொளுத்தப்பட்டு 3 அப்பாவிகள்
   இறந்தனரே அந்த வழக்கு என்ன ஆனது ?
   அப்போது ஏன் நீங்கள் நீதி கேட்டு கவலைப்படவில்லை ?

   இந்த வழக்கில் இழுத்தடிப்புக்கு முக்கிய காரணமே
   கருணாநிதியும், அன்பழகனும் தான். 18 வருடங்களில்
   11 வருடங்கள் அவர்களால் தான் தாமதமாகியது என்று
   உங்களுக்கு தெரியாதா ?
   குற்றவாளி என்று கருணாநிதி கூறி விட்டால்
   குற்றவாளியா ? நீதிபதி விலை போய் விடக்கூடாதே என்று
   நீங்கள் ரொம்பவும் கவலைப்படுவதாக கூறுகிறீர்களே,
   ஒரு வேளை கீழ்கோர்ட்டில் ஏற்கெனவே விலை போய்
   விட்டிருந்தால் ? என்று மற்றவர்கள் கவலைப்படுவதில்
   என்ன தவறு ?

   மேலும் நான் சொன்னது:

   //தமிழ் நாட்டில் எதிர்க்கட்சித் தலைவர்கள் –
   கலைஞர், ராமதாஸ், விஜய்காந்த் உட்பட அனைவருமே
   பேடிகள் – நேருக்கு நேர் நின்று போரிட
   துணிச்சல் இல்லாத
   கோழைகள்.

   .கண்ணேதிரே ஆர்.கே.நகர் தேர்தல் வந்து நிற்கிறது.
   துணிச்சல் இருந்தால், நேர்மை இருந்தால் , நேருக்கு நேர்
   நின்று போட்டியிட்டு பார்க்க வேண்டியது தானே ?
   மக்கள் காரித்துப்புவார்கள் என்று தெரிந்து தானே பதுங்குகிறார்கள்.
   பம்முகிறார்கள். ஓடி ஒளிகிறார்கள். ?
   அப்பீலுக்கு ஆதரவாகப் பேச ஆச்சாரியாவிற்கும்,
   ரவீந்திர வர்மாவுக்கும் கலைஞர் எவ்வளவு கோடி
   கொடுத்திருப்பார்
   என்று மற்றவர்கள் பேச முடியாதா என்ன ?//

   இதற்கு உங்களால் பதில் சொல்ல முடியாமல்
   போனது ஏன் ?

   திரும்பவும் ஆண்டுக்கணக்கில் இழுத்தடிக்கப் போகும்
   சுப்ரீம் கோர்ட்டுக்கு போகச்சொல்லி கர்நாடகா காலில்
   விழுவதை விட இவர்கள் அனைவரும் சேர்ந்து
   ஜெ.வை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தோற்கடித்து,
   ஒரே மாதத்தில் அவருக்கு தண்டனை கொடுத்து விடலாமே ?

   அதைச்செய்ய ஏன் தைரியமில்லை ?

   ஒருவேளை நீங்கள் சொல்வது போல் ஜெ. மீது அப்பீல் செய்து
   தண்டனை வாங்கிக் கொடுத்து விட்டால், அடுத்து தமிழகத்தை
   ஆளப்போவது யார் ?
   உங்கள் தலைவர் கருணாநிதி தானே ?
   இல்லையேல் சின்ன தலைவர் தளபதி தானே ?
   அதற்குத்தானே நீட்டி முழங்கிக்கொண்டு இவ்வளவு தூரம்
   எழுதுகிறீர்கள் ?
   போங்கய்யா போங்க எங்காவது முரசொலிக்கு கடிதம் எழுதி
   இருப்பை உறுதி செய்துக்குங்க.

   ராமச்சந்திரன். ஆர்.

   கே.எம்.சார்,
   நான் உங்களை ஒரு நல்ல வழிகாட்டியாக நினைக்கிறென்.,
   நான் இங்கு எழுதியதில் எதாவது தவறு என்று உங்களுக்கு
   தோன்றினால், அதை குறைக்கவோ, நீக்கி விடவோ
   உங்களுக்கு முழு உரிமையும் உள்ளது. நீங்கள் எது செய்தாலும்
   எனக்கு சம்மதமே. நன்றி.

 8. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  //…குஜராத் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடி மீதான வழக்கை…//
  இங்கேதான்யா நிக்கிறான் கதர் சட்டைகாரன் (சந்துலே சிந்து பாடுவது இதுதானோ?)

  //…தமிழகத்தில் அரசியல் கட்சியினர் கடைப்பிடிக்கும் காட்டிக்கொடுத்தல்,
  சிறையெடுத்தல், கப்பம் கட்டுதல், அடிமை ஆக்குதல்…// மல்லாக்க படுத்துக்கொண்டு துப்புகிறார் மை லார்ட்!

  என்ன ராமச்சந்திரன் சார் டபக்குன்னு
  “தமிழ் நாட்டில் எதிர்க்கட்சித் தலைவர்கள் – கலைஞர், ராமதாஸ், விஜய்காந்த் உட்பட அனைவருமே பேடிகள் – நேருக்கு நேர் நின்று போரிட துணிச்சல் இல்லாத கோழைகள்”-ன்னு சொல்லீட்டீங்க
  ஆளில்லாத டீ கடையில் டீ ஆத்த வேண்டாம்னு அவங்க நெனச்சத போய் நீங்க பேடி கோழை என்று சொல்வது ரொம்ப ஓவர்.

  //Anyhow hope Supreme court will free JJ because TN needs her now.//
  அப்படீங்களா ஷரோன்?

  தமாக-வில் ஒரு எஸ்.ஆர்.பி என்றால் காங்கிரஸில் ஒரு சுனா நாவன்னா… அவ்வளவுதான். விடுங்க… அரசியலில் இதெல்லாம சகஜம்.
  லெஸ் டென்ஷன் மோர் பதிவுகள்!

  • Sharron சொல்கிறார்:

   Congress can’t think about winning in TN now. TMK is new. So no chance. Again who will win? The criminal who is bigger than JJ. This is not necessary for TN now until the other parties develop themselves.This is my opinion.

 9. nithya சொல்கிறார்:

  அன்பின் காவேரி மைந்தன் ஐயா மற்றும் ராமசந்திரன் சார் ,

  என்னை நீங்கள் திமுக அடிமை? என்று விளித்ததற்கு நன்றி. ஒருவர் ஜெ ஜெ வழக்கில் தப்பு நடந்து இருக்கிறது என்றால் அவர் கருணாநிதி ஆதரவாளரா? உங்கள் புரிதலுக்கு மிக்க நன்றி ஐயா. நான் எனது முதல் வாக்கை ஜெ ஜெ கு தான் போட்டேன் ராஜீவ் இறந்த அந்த தேர்தலில்..சுப்பிரமணியன் சுவாமிக்கு vote போட்டேன் 96 ல் மதுரையில்..(ரஜினி சார் இரசிகர இருந்த போதும்) நான் இதெயெல்லாம் சொல்லித்தான் நான் கருணாநிதி ஆதரவாளர் இல்லை என்று …. நான் சொல்லுவது கருணாநிதியா இருந்தால் என்ன ஜெ ஜெ வாக இருந்தால் என்ன சட்டத்தின் முன் குற்ற்றவாளி என்பதற்கு எல்லாவிதமான ஆதாரம் இருந்தும் நீதிபதி தவறான தீர்ப்பு அளிக்க கூடாது என்பது தான். மேலும் அழகிரி, கருணாநிதி , கனிமொழி, மோடி, அமீட்ஷா இன்னும் பல பேர் தண்டிக்கப்பட்டால் சந்தோசப்படும் நபர்களில் நானும் ஒருவன் ..யாரவவது ஆதிரித்து தான் ஆகணுமா உண்மையை பேச? துக்ளக்கின் தீவிர வாசகனாய் இருந்து எப்பொழுது ஒரு பக்க சார்பாக எழுத ஆரம்பித்தாறூ , குருமூர்த்தி சாதி அவசியம் என்று மறைமுகமாக எழுத ஆரம்பித்தாரோ ஹிந்துத்துவம் எப்பொழுது தூக்கி பிடிக்கப்பட்டதோ அப்பொழுது நிறுத்திவிட்டேன் அதை படிப்பதை..நான் கடவுள் மறுப்பாளன் அல்ல ..நான் இந்திய அரசால் சொல்லப்பட்ட ஹிந்து தான்..தேர்தலில் வெற்றி பெறுவது என்பது வேறு சட்டத்தின் முன் குற்ற்றவாளி என்பது வேறு ..இருக்கும் திருடர்களில் மாற்று இல்லை என்பதால் ஒருவரை தேர்ந்து எடுப்பதால் அவர் நீதிமானாக சிறந்தவராக , உதாரனராக ஆகி விட முடியாது எனது குழந்தைகளுக்கு காமராஜரை கக்கனை உத்தரனராக சொல்வேனே தவிர ஜெ ஜெ கருணாநிதியு அல்ல ..இங்கே நாம் பேசுவது ஜெ ஜெ வழக்கை பற்றி என்பதால் எழுதுகிறேன் இங்கே மற்ற ஊழல் கொலை வழக்கை பற்றி ஐயா எழுதி இருந்தால் நிச்சயம் எனது கருத்தை பதிவு செய்வேன் என் மன சாட்சிபடி ..தமிழில் தட்டச்சு செய்ய தடுமாறுகிறேன் பிழைகளுக்கு மன்னிக்கவும் ..அதே போல் எல்லா விஷயதிலேய்ம் கரத்து சொல்ல வேண்டுமா என்ன 🙂 ..திமுக அடிமை, பேடி என்ற வார்த்தை பிரயோகங்கள் வேண்டாம் ..மொழியால் தமிழன் , இந்த நாட்டில் இருப்பதால் இந்தியன் ..பாலால் ஆண் ..மனிதன் அவ்வளவு தான் …

  • Sharron சொல்கிறார்:

   Don’t misunderstand anyone. Everyone is an Indian here. Every one loves our country and our state too. Except ADMK or DMK other parties are not strong enough to give tough fight for them.So in 2016 election either ADMK or DMK only is going to come.May be for 2021 BJP , TMC …others have the chance. But for 2016 among both the criminal parties ADMK is better than DMK. This is the feeling of most Tamilians I feel.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் நித்யா மற்றும்
   அனைத்து நண்பர்களுக்கும்,

   நண்பர் ராமச்சந்திரனின் சொல் பிரயோகங்கள்
   சிலவற்றை நான் ஏற்கவில்லை.

   ஆனால், அவர் சொல்லும் கருத்துக்கள்
   பெரும்பாலும் உண்மையே. விவாதம் என்று
   வரும்போது, அவர் சொல்வதில் உள்ள உண்மைகளை
   ஏற்கத்தான் வேண்டும்.

   நண்பர் நித்யா – நான் புதிதாக ஏதோ கருத்து
   சொல்வது போல் நீங்கள் எப்படி நினைக்கலாம்…?

   ஜெ.வழக்கு முடிவு வெளிவந்த நாளிலிருந்து,
   நான் ஒரே நிலையில் நின்று தான் எழுதி வருகிறேன்.

   தமிழ்நாட்டைப் பொருத்த வரையில் –
   ஆட்சி நிர்வாகப் பொறுப்பை ஏற்க இரண்டே கட்சிகள்
   தான் இருக்கின்றன.
   ஜெ. இல்லையென்றால் கே.

   துணிச்சல், விடாமுயற்சி, சாமர்த்தியம், நிர்வாகத்திறன்,
   இறையுணர்வு, சமுதாயத்தின் அடித்தட்டு மக்களுக்கான
   நலத்திட்டங்கள், தமிழ் நாட்டின், தமிழர்களின்
   உரிமைகளைக் காப்பது – இவை எல்லாவற்றிலும்
   கே.யை விட ஜெ. பலமடங்கு சிறந்து விளங்குகிறார்.

   ஜெ.யை சுற்றியிருந்த கும்பலை அவர் துரத்தி விட்டார்.
   ஆனால் கே.யை சுற்றியுள்ள கும்பல் ( முக்கியமாக மகள்,
   மகளுடைய நண்பர், பேரன்கள் ) என்றுமே
   அவரை விட்டு விலகாது.

   ஜெ.யை, அவரது சொந்த குணாதிசயங்கள் காரணமாக
   சிலருக்கு பிடிக்காமல் போகலாம்… அதை என்னால்
   புரிந்து கொள்ள முடிகிறது.

   ஆனால், ஏற்கெனவே பலமுறை விவாதித்தது போல்-
   “எரிகிற கொள்ளியில்” லாஜிக் தான் இறுதியில்
   இங்கு நிற்கிறது.

   தமிழ் நாட்டு அரசியலில், மற்றுமொரு புதிய சக்தி,
   உருவாகும் வரையில் – ஜெ. தான் தமிழ்நாட்டுக்கு,
   தமிழருக்கு நல்லது என்பது என் கருத்து.

   நான் இங்கு என் கருத்தை யார் மீதும் திணிக்கவில்லை.
   எனக்குத் தோன்றுவதை மூடி மறைக்காமல், பளிச்சென்று
   சொல்லி வருகிறேன். சில நண்பர்களுக்கு மாற்றுக்
   கருத்துகள் இருக்கலாம் … இருக்கட்டுமே …
   அதனாலென்ன …?

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • nithya சொல்கிறார்:

    மறுமொழிக்கு நன்றி ஐயா

   • Rasan சொல்கிறார்:

    அப்படியானால் காற்றலை மின்சாரம் Rs 4 க்கு கிடைக்கும் போது தனியார் அனல்மின்சாரம் Rs 16க்கு வாங்குவது நிர்வாக .திறமை போல.

    காவேரி யில் தினமும் 1000 லோர்ரிக்கு மேல் மண் எடுத்து செந்தில் பாலாஜி & co கர்நாடகா வுக்கு கடத்துவது தமிழ்நாட்டு நலம் காப்பது போல.

    ராஜீவ் கொலை வழக்கு , அப்பாவிகளை விடுதலை செய்ய பார்லிமென்ட் election க்கு அப்புறம் கண்டுகொள்ளதது தமிழர் நல்வாழ்வுக்கு குரல் கொடுப்பது போல. (முன்னொரு முறை போர் என்றல் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்பதை மறந்து விடுங்கள்)

    அனைத்து வழிபாட்டு தளங்களிலும் உருண்டு புரளும் அமைச்சர் களை கண்டிக்காமல் விடுவது தான் நிர்வாகம் போல.

    JJ எந்த கும்பலை துரத்தி இருக்கிறார் சார்?. சசிகலா, இளவரசி, அவர் மகன் , மருமகன் எல்லாரும் இன்னும் சுற்றி தான் இருக்கிறார்கள்.

    டாஸ்மாக் கொள்முதலில் நடக்கும் பேரங்கள் , முட்டை, பருப்பு வாங்குவதில் நடக்கும் பேரங்கள் , ஆசிரியர் இட மாறுதலில் திளைக்கும் கல்வி அமைச்சர், அதிகாரிகள் தற்கொலை க்கு உள்ளாகும் அமைச்சர்கள், இவர்களை கண்டிக்கத தன்மை இவை அனைத்தையும் மறந்து விட்டால் உங்களின் நிலைக்கு நானும் வரலாம்.

  • Tomorrow சொல்கிறார்:

   நித்யாவின் பதிவு நீதியின் குரல்.

 10. SENTHILNATHAN சொல்கிறார்:

  தமிழ் நாட்டு அரசியலில், மற்றுமொரு புதிய சக்தி,
  உருவாகும் வரையில் – ஜெ. தான் தமிழ்நாட்டுக்கு,
  தமிழருக்கு நல்லது. This is what TRUE.

 11. Ganpat சொல்கிறார்:

  ஐயோ கடவுளே! எங்களுக்கு என்று நெருப்பிலிருந்தும் தீச்சட்டியிலிருந்தும் விடுதலை?

 12. drkgp சொல்கிறார்:

  Dear KMji,
  These discussions in this forum are lively and thought provoking.
  This will help the readers to develop an informed opinion on
  matters or persons of relevance to the topic. Thank you for
  encouraging readers to come out with their own perception .
  With regards.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நன்றி Dr.KGP.

   விவாதத்தை துவக்கும் விதத்திலும்,
   என் எண்ணங்களை பிரதிபலிக்கும் விதத்திலும்
   தான் நான் இடுகைகளை எழுதுகிறேன்.

   அதனால் தான் – எல்லா பின்னூட்டங்களுக்கும்
   நானே பதில் எழுத முற்படுவதில்லை.
   வாசகர்களே விவாதிக்கட்டும்
   என்று விட்டு விடுகிறேன். அவசியப்படும்போது
   மட்டும் என் கருத்தையும் கூறுகிறேன்.

   நாம் யார் மீதும் எந்த கருத்தையும் திணிக்க
   வேண்டாம்.

   அவரவர் சொல்ல நினைக்கும் கருத்துக்களை,
   நாகரிகமான வார்த்தைகளில் சொல்லட்டும்.
   பண்பான வகையில் விவாதங்கள் நடக்கட்டும்.

   அனைத்தையும் படிக்கும் வாசக நண்பர்கள் –
   அவர்களாகவே ஒரு முடிவிற்கு வரட்டும் –
   என்பதே என் எண்ணம்.

   உங்களைப் போன்றே, பெரும்பாலான வாசக
   நண்பர்கள் இதைப் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

   புதிதாக வரும் சிலரும்,
   மிகவும் கட்சி சார்புடையவர்களாக இருக்கும் சிலரும்
   மட்டும் தான் – இங்கு தவறான புரிதலில்
   செயல்படுகிறார்கள்.
   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 13. bandhu சொல்கிறார்:

  என்னைப் பொறுத்தவரையில் ஜெ கருணாநிதியை விட ஒரு விஷயத்தில் நிச்சயம் பெட்டெர்.. ஜெ வெறுப்பை தூண்டிவிட்டு அரசியல் செய்வதில்லை. பிரிவினை அரசியல் செய்வதில்லை.. இந்து என்றால் திருடன் என்று சொல்லி மக்களிடையே பிரிவினை செய்வதில்லை. தீபாவளிக்கு வாழ்த்து சொல்லமாட்டேன் ஆனால் ரம்ஜானுக்கு கட்டாயம் சொல்வேன் என்று போலி வேஷம் போடுவதில்லை..

  ஜெ வெளியே வருவது common good என்ற வகையில் மட்டுமே நல்லது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.