LPG மான்யம் வேண்டாமென்று … பிரதமருக்கு விட்டுக் கொடுத்து விடலாமா ?

lpg

கொஞ்ச நாட்களுக்கு முன்பெல்லாம், சமையல் வாயு
சிலிண்டர் தீர்ந்தவுடன், அடுத்ததற்கு பதிவு செய்ய போன்
செய்தால், எடுத்தவுடன் -“நான் நரேந்திர மோடி பேசுகிறேன்”
என்று ஒரு குரல் ஆரம்பித்து ( இந்தியில் தான்…!)

நீங்கள் அரசு கொடுக்கும் சமையல் வாயுவுக்கான மான்யத்தை விட்டுக் கொடுத்து இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு
உதவலாமே ” – என்கிற வகையில் ஒரு லெக்சர் வரும்….!
(நாம் அழைப்பதால், போன் செலவு நம்முடையது தானே…! )

சில நாட்களுக்கு முன் பிரதமர் ஒரு சம்மேளனத்தில்
பேசும்போது ” இதுவரை 2.8 லட்சம் பேர் தங்களுக்கான
மான்யத்தை விட்டுக் கொடுத்திருக்கிறார்கள். இதனால்
நூறு கோடி ரூபாய் மிச்சமாகும்.
இது இந்த நாட்டின்
ஏழைகளுக்கான வளர்ச்சித் திட்டங்களுக்கு உதவும்.
இன்னும் அதிகம் பேர் ” மான்யத்தை தியாகம் செய்ய ”
முன் வரவேண்டும்” என்றார்.

சம்சாரி ஒருவர் இது குறித்து விலாவாரியாக
விவரித்து ஒரு கடிதம் எழுதி இருக்கிறார்.

“நான் ஏன் என் LPG மான்யத்தை விட்டுக் கொடுக்க மாட்டேன்”
என்று தலைப்பிட்டு ஆங்கிலத்தில் அந்த கடிதம்
அமைந்திருக்கிறது…. ஒரு நண்பர் அதை எனக்கு அனுப்பி
வைத்து இது குறித்து நீங்களும் எழுதுங்களேன்
என்று கேட்டிருக்கிறார்…

அந்த கடிதம் ஏற்படுத்திய தூண்டுதலில்
அதில் அவர் குறிப்பிடும் சில முக்கிய விஷயங்களையும்
உள்ளடக்கி கீழே நான் எழுதி இருக்கிறேன்….

————-

எங்கள் மதிப்பிற்குரிய பிரதமர் அவர்களுக்கு –

சமையல் எரிவாயு மான்யத்தை நான் விட்டுக் கொடுக்க
முன்வர வேண்டுமென்று,
வேலை மெனக்கெட்டு,
என் போனிலேயே,
என் செலவிலேயே – வேண்டி, விரும்பி
கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்….!
மகிழ்ச்சியோடு நானும் இதற்கு ஒப்புக்கொள்வேன்…
ஆனால் அதற்கு முன் கீழ்க்கண்ட விஷயங்கள்
நடைபெற்றால் தேவலை….!!!

– நாட்டின் சாதாரண குடிமகன் இதைச் செய்வதற்கு முன் –
இந்த நாட்டை வழிநடத்திச் செல்லும் அரசியல்வாதிகளும்,
அத்தனை அமைச்சர்களும், சட்டமன்ற, பாராளுமன்ற
உறுப்பினர்களும், முதலில் தங்கள் மான்யத்தை விட்டுக்
கொடுப்பதாக அறிவிக்கச் செய்ய முடியுமா …?

– உங்களில் முக்கால்வாசிப் பேர்கள் தேர்தலில்
போட்டியிடும் நேரத்தில், உங்கள் சொத்து விவரத்தை
அறிவித்திருக்கிறீர்கள்.
அதில் உள்ள கோடீஸ்வரர்கள் அனைவரும் – தங்களுக்கு
சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் என்கிற முறையில்
கிடைக்கும் சலுகைகளை விட்டுக் கொடுப்பதாக
அறிவிக்கச் செய்ய முடியுமா …?

– சட்டமன்ற, பாராளுமன்ற – கூட்டங்களில் அநேக
பிரச்சினைகளில் – எதிரும் புதிருமாக நின்று
அடித்துக் கொள்ளும் நீங்கள் அனைவருமே,
அதெப்படி உங்களது சம்பளம், படி, சலுகைகளை
உயர்த்தி மசோதாக்கள் வரும்போது மட்டும்- ஒருமித்த
குரலில் ஒன்றுபட்டு – உடனடியாக விவாதமே இன்றி
நிறைவேற்றி கொள்கிறீர்கள் …?

– கட்சி அடிப்படையில் நாட்டின் பிரச்சினைகளை
விவாதிப்பதை விட்டு விட்டு, மக்களுக்கு எது நன்மை-
எது தீமை என்கிற கோணத்தில் உருப்படியாக நீங்கள்
விவாதிப்பதை
நாங்கள் என்று காண்பது …?

வளம் பெற்ற நாடான ஜெர்மனியின் சான்ஸ்லர் திருமதி
ஏஞ்சலா மெர்கெல் -தன் அலுவலகத்திற்கு பணிக்குச்
செல்லும்போது
பொதுமக்கள் பயன்படுத்தும்
சாதாரண ரயிலில் செல்லும்போது –

– கோடிக்கணக்கான மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழே
வாழும் இந்த இந்தியத் திருநாட்டில், அரசியல்வாதிகளான,
அமைச்சர்களான, சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களான
நீங்கள் மட்டும்,
அரசாங்க செலவில் தனித்தனியே ஒன்றுக்கு மேற்பட்ட கார்களை வைத்துக்கொண்டு பயணிப்பது எப்படி …?

– உங்கள் சொந்த வசதி, சௌகரியங்களுக்காக செலவழிக்கப்படும்
ஒவ்வொரு பைசாவும், இந்த நாட்டின் குடிமக்கள் செலுத்தும்
வரியிலிருந்து தான் எடுக்கப்படுகிறது என்பது உங்கள்
நினைவிற்கு வருவதே இல்லையா …?

– நீங்கள் ஒவ்வொருவரும் பயன்படுத்தும்
தொலைபேசிகளுக்காக –
உபயோகப்படுத்தும் மின் வசதிகளுக்காக –
குடும்பத்தோடு தங்கும் சொகுசு பங்களாக்களுக்காக –
இந்தியா முழுவதும் விமானத்திலும், ரயிலிலும்
பயணப்படுவதற்காக – உருப்படியான
வேலை எதுவும் இல்லாமல்,
சும்மாவே ஊர்சுற்றிப்பார்க்க நீங்கள் மேற்கொள்ளும்
வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக –

-எத்தனை கோடி ரூபாய்களை நாங்கள் வரியாகக்
கொடுக்கிறோம் என்பதை என்றாவது நீங்கள் நினைத்துப்
பார்த்திருக்கிறீர்களா ?

– உங்கள் சொந்த சௌகரியங்களுக்காக ஆகும் இந்த
செலவுகளை எல்லாம் நீங்களே ஏற்றுக் கொள்ளும்
சுபதினம் என்றாவது வருமென்று குடிமக்களாகிய நாங்கள்
எதிர்பார்க்கலாமா …?

– மிகச் சாதாரண தலைவலி, வயிற்று வலிகளுக்கெல்லாம் கூட,
நட்சத்திர வசதிகள் நிரம்பப்பெற்ற உயர் மருத்துவ மனைகளில்
தங்கி மருத்துவ உதவி பெறுகிறீர்களே….
உங்கள் சக இந்தியர்கள் எத்தனை பேர் சரியான மருத்துவ உதவி கிடைக்காமல்
தினமும் செத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை என்றாவது
நீங்கள் எல்லாம் நினைத்துப் பார்த்தது உண்டா …?

– இந்த வசதிகளை எல்லாம் நீங்கள் உங்கள் சொந்தக்காசில்
செய்துக் கொள்ளும் நாள் என்றாவது வருமா…. ?

– அப்படி என்ன தங்கள் உயிருக்கு ஆபத்து வந்துவிடுமென்று
இத்தனை பூனைப்படைகளையும், துப்பாக்கி ஏந்திய
சிப்பாய்களையும் துணைக்கு வைத்துக்கொண்டு Z என்றும்
Z+ என்றும் சொல்லிக் கொண்டு உங்கள் மந்திரிகள் ?திரிகிறார்கள் ?
தினமும் உங்கள் கூட படாடோபத்திற்காக துணைக்கு வரும்
பூனைப்படை, யானைப்படை – எல்லாவற்றிற்கும் கொடுக்கும்
சம்பளப்பணம் – எங்கள் வரியிலிருந்து வருவது தானே ?

– இந்த நாட்டையே பாதுகாக்க வேண்டிய பொறுப்பில்
இருக்கும் – உங்களை பாதுகாக்க நாங்கள் செலவழிக்க
வேண்டியிருக்கும் இந்த பரிதாப நிலை என்று மாறும் …?

– சம்பாதிப்பது ஒரு வேளை சாப்பாட்டிற்கே பற்றாமல்
எத்தனையோ ஏழைக் குடும்பங்கள் இந்த நாட்டின்
நடைபாதைகளில் பட்டினியோடு படுத்துத் தூங்கும்போது –

– உங்களுக்கு ஏன் பாராளுமன்ற கேண்டீன்களில்
மலிவு விலையில் உணவுப் பொருட்கள் …?

ஒரு கப் டீ ஒரு ரூபாய்க்கும்,
ஒரு சாப்பாடு 12 ரூபாய்க்கும்
எந்த குடிமகனுக்கும் இந்த நாட்டில் கிடைப்பதில்லையே….
கோடீஸ்வரர்களான உங்களிடம் கொடுக்க காசில்லையே
என்றா இந்த மலிவு விலை ….?

– உங்களின் இந்த மலிவு விலை சோற்றுக்கு கூட –
அன்றாடங்காய்ச்சியான இந்த நாட்டின் குடிமகன் தான்
காசு கொடுக்கிறான் என்பது உங்கள் மனசாட்சியை
என்றுமே உருத்தவில்லையா ?

– நாங்கள் செலுத்தும் வரிகள் எத்தனையெத்தனை …
Income tax,
Service Tax,
Professional Tax,
Value Added Tax,
Wealth Tax,
Corporation Tax,
Automobile Registration Tax and Property Tax –

சம்பாதிப்பதில் பாதியை வரியாகப் பிடித்துக் கொள்ளும்
இந்த அரசு நிர்வாகம் உங்களுக்கு மட்டும் எல்லாவற்றிலும்
விலக்கு கொடுத்திருப்பது உங்களுக்கு உறுத்தவில்லையா …?
உங்களுக்கும் சேர்த்து தானே, எங்களிடம் வசூல்
செய்யப்படுகிறது…?

உங்களுக்கு, நீங்களே இயற்றிக்கொண்ட சட்டங்கள் மூலம்
கிடைத்துள்ள அத்தனை சலுகைகளையும் விட்டுக் கொடுத்து
இந்த நாட்டின் கௌரவமுள்ள குடிமகனாக நீங்கள்
எல்லாம் மாறும் நாள் வருமா …?

– இந்த நாட்டை நேர்மையாகவும், பொறுப்புடனும்
நிர்வாகம் செய்வதற்கென்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள
நீங்கள் அனைவரும் – என்றைக்கு,
உங்களுக்கு நீங்களே கொடுத்துக் கொண்டுள்ள
இந்த சலுகைகள் அத்தனையையும் விட்டுக் கொடுக்கிறீர்களோ –

அன்றைக்கு நிச்சயம் குடிமக்களாகிய நாங்கள் அனைவரும்
எங்கள் சமையல் எரிவாயு மான்யத்தை –
நீங்கள் கோராமலேயே அவசியம் விட்டுக் கொடுப்போம்…!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

25 Responses to LPG மான்யம் வேண்டாமென்று … பிரதமருக்கு விட்டுக் கொடுத்து விடலாமா ?

 1. vignaani சொல்கிறார்:

  நெத்தி அடி.

 2. ராஜமாணிக்கம் வீரா சொல்கிறார்:

  மிக மிக மேம்போக்கான அமெச்சூர் தனமான கம்யூனிஸ கடிதம். காவிரி மைந்தன் நீங்கள் கூடவா இதை ஆதரிக்கிறீர்கள்.

  • சைதை அஜீஸ் சொல்கிறார்:

   என்ன சொல்ல வர்றீங்க ராஜமாணிக்கம் வீரா சார்?

   • ராஜமாணிக்கம் வீரா சொல்கிறார்:

    அரசியல் வாதிகளுக்கு சம்பளம் கொடுக்கப்படுவதில்லை. ஆட்சியாளர்களுக்கு அவர்களின் நிர்வாகத்திற்கு தான் சம்பளம் கொடுக்கப்படுகிறது என்ற அடிப்படை தெரிந்தும் , மக்களை திசை திருப்பும் இப்படியான மேம்போக்கான வைரல்கள் பாமர மனங்களை சமாதானப்படுத்தும், கொந்தளிக்க வைக்கும், புளகாங்கிதப்பட வைக்கும். வரி இல்லாமல் எப்படி நிர்வாகம் செயல்படும். வரி கொடுப்பதாலேயே மக்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா?

    • today.and.me சொல்கிறார்:

     //அரசியல் வாதிகளுக்கு சம்பளம் கொடுக்கப்படுவதில்லை. //
     1. அரசியல்வாதிகள் சேவை பிழிய வருவதில்லையா?
     2. அதனால்தான் அடானிகளையும் அம்பானிகளையும் வளர்த்துவிடலாம் என்கிறீர்களா?
     3. அதையும் பாஜக செய்தால் தவறில்லை என்கிறீர்களா?

     • viiraa சொல்கிறார்:

      சேவை மட்டுமே புரிய வரும் அரசியல் வாதிகளுக்கு நாம் இடம் கொடுப்பதில்லை.காமராஜர் போல வருமா? ராஜாஜி, கக்கன் எல்லாம் நமக்கு வெறும் பிம்பங்கள் தான் அவர்களை போல ஒருவர் தேர்தலில் நின்றால் நாம் அவர்களை ஆதரிக்க மாட்டோம்.
      பிறகு சேவை பிழிய வரும் அரசியல் வாதிகளின் குடும்பம் என்ன செய்யும்., அவர் அடுத்த வேளை சோற்றுக்கு என்ன செய்வார்?
      இதனால் அடானிகளையும், அம்பானிகளையும் வளர்த்து விடலாம் என்று சொல்ல வில்லை.
      ஆனால் அடானியும், அம்பானியும் தான் வேலை கொடுக்கிறார்கள். முதலாளிகள் தான் வேலைகளை உருவாக்க முடியும். அவர்கள் தான் உற்பத்தி மூலம் மூலதனத்தையும், உபரியையும் ஏற்படுத்தி அடுத்த கட்ட வளர்ச்சிக்கு செல்ல முடியும். நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அது தான் நிதர்சனம்.

     • today.and.me சொல்கிறார்:

      Viraa
      //அவர்களை போல ஒருவர் தேர்தலில் நின்றால் நாம் அவர்களை ஆதரிக்க மாட்டோம்.// ஆதரிக்கமாட்டேன் என்று உங்களைச் சொல்லுங்களேன். இதிலெல்லாம் ஏன் சிந்திக்கத்தெரிந்த எங்களைப் போன்ற எல்லாரையும் இணைத்துக்கொள்ளுகிறீர்கள்.

    • Alien சொல்கிறார்:

     How ignorant you are Mr. Rajamanikam Veera.
     Before commenting, try to know something about it.
     Each MP is getting salary of Rs. 50000/- per month + allowances per month.

 3. bandhu சொல்கிறார்:

  உண்மைதான். Charity begins at home என்று சொல்வார்கள். முதலில் இந்த அரசியல்வாதிகள் எதையாவது விட்டுக் காட்டட்டும். பிறகு பார்க்கலாம்.

 4. paamaran சொல்கிறார்:

  படித்தவன் முதல் படிக்காதவன் வரை — தள்ளாட்டம் போடுபவனில் இருந்து தள்ளாடும் கிழவன் வரை —- மொள்ளமாரியில் இருந்து முடிச்சவிக்கி வரை — ஏன் இந்த எம்.எல்.ஏ — எம்.பி — மந்திரி பதவிகளுக்கு ஆளாய் பறந்து அலையறானுங்க என்று இப்போதாவது புரிந்ததா மக்களே …? கேசுக்கான மானியம் வருடத்திற்கு வெறும் மூவாயரத்தி சொச்சம் ரூபாயை விட்டு கொடுங்கள் என்று கேட்பது எல்லாம் — வெளி வேஷம்தானே …? ஏழை பங்காளர்கள் — சேவை செய்ய பிறந்தவர்கள் — நாட்டை திருத்த போகிறேன் ..என்று கூறுவதெல்லாம் தேர்தல் நேர டயலாக்குகள் தானே …..??

 5. Pingback: LPG மான்யம் வேண்டாமென்று … பிரதமருக்கு விட்டுக் கொடுத்து விடலாமா ? | Classic Tamil

 6. kalakarthik சொல்கிறார்:

  எத்தனை கேள்விகள் கேட்டாலும் யார் காதில் போட்டுக் கொள்ளப் போகிறார்கள் ? நாம்தான் கஷ்டப் படுகிறோம்.
  கார்த்திக் அம்மா

 7. aji சொல்கிறார்:

  Pichakaran, kolakaran, kollaikaran, koothadi, mollamaru Evan kasu koduthalum thirunpi yosikama vote panra makaluku ithum ithuku apuravum venum. Apadi kastangal vanthal mattume avarkal sinthipparkal. Sinthithale ozika namathu nadu munnerathu. So ithum kalathin kattayame. Namum makkaluku puriya vaikka try pannuvom. Jaihindh.

 8. ராஜமாணிக்கம் வீரா சொல்கிறார்:

  நாம் விட்டு கொடுக்க கூடாது என்பதற்காக என்னென்ன நியாயங்களை மனம் தேடுகிறது என்று பாருங்கள். சமூக பாதுகாப்பு திட்டங்களில் இருந்து வசதி படைத்தவர்கள் தார்மீகமாக விலகி நிற்க வேண்டும் . இந்தியா மாதிரியான நாடுகளில் இப்படி நாம் பாமரனுக்கு கிடைக்க வேண்டிய பல விஷயங்களை திருடுகிறோம். அரசியல் வாதிகளும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் அரசியல்வாதிகளை மட்டும் காண்பித்து நாம் தப்பித்து கொள்வது என்ன வகையில் நியாயம் என்று பாருங்கள். சுமாரான ஒரு கணக்கு சொல்கிறேன் நாடு முழுக்க ஒரு 10,000 அரசியல் வாதிகள் பதவியில் இருப்பார்களா? சமூக பாதுகாப்பு திட்டத்தில் ஏழைகளுக்கான சலுகைகளை சுரண்டும் நடுத்தர , மேல் நடுத்தர வர்க்கத்தினர் சுமார் 10 கோடி பேர் இருப்பார்கள். 10,000 பேர்கள் 1 லட்சத்தை விட்டு கொடுப்பதற்கும் 10 கோடி பேர் 3000 ரூபாயை விட்டு கொடுப்பதற்கும் எவ்வளவு வேறுபாடு இருக்கிறது என்று பாருங்கள். நாம் ஒரு வசதியை அனுபவிக்க வேண்டும் என்கிற ஒரே காரணத்திற்காக எவ்வளவு சால்ஜாப்புகளை சொல்கிறோம் என்று பாருங்கள். நான் தார்மீக தளத்தில் இருந்து பேசுகி|றேன்.

  • today.and.me சொல்கிறார்:

   தார்மீக அடிப்படையில் மானியம் வேண்டாமென்று உங்களுக்குத் தோன்றினால் எழுதிக் கொடுத்துவிடுங்களேன் வீரா. அனுமதிக்கப்பட்ட மானியத்தைப் பெறும் மற்றவர்களை பிச்சைக்காரர்கள் போலச் சித்தரிக்க உங்களுக்கு என்ன உரிமை

  • சைதை அஜீஸ் சொல்கிறார்:

   நண்பர் பந்து சொல்வதை போல //Charity begins at home//
   அப்படி உதாரண புருஷராக இருந்து அவர் சொல்லியிருந்தால் மேலும் ஒரு feather in his crown என்று இதே விமரிசனத்தில் ஒரு பதிவு கண்டிப்பாக வெளிவரும் என்பதை காமை அவர்கள் சார்பாக இங்கே தெரிவித்துக்கொள்கிறேன்.
   அப்படியில்லாமல் உபதேசம் ஊருக்கு மட்டும்தான் என்பதாலேயே இவ்வளவும் சொல்லி புரியவைக்க வேண்டியுள்ளது.
   //நாம் ஒரு வசதியை அனுபவிக்க வேண்டும் என்கிற ஒரே காரணத்திற்காக எவ்வளவு சால்ஜாப்புகளை சொல்கிறோம் என்று பாருங்கள்//
   இது உங்களுக்கும் பொருந்துகிறதே திரு ராஜமாணிக்கம் வீரா

   • ராஜமாணிக்கம் வீரா சொல்கிறார்:

    தார்மீக அடிப்படையில் அதை சொல்லும் உரிமை எனக்கிருக்கிறது. நான் தம்பட்டம் அடிக்க வில்லை

    • today.and.me சொல்கிறார்:

     தார்மீக அடிப்படையில் சொல்லுவது மட்டும் அல்ல உரிமை. ஒரு பதிவர் எழுதிய பதிவை மறுத்து ஒரு கருத்தை நீங்கள் சொல்லும்போது அது பொதுவான கருத்தாக இருந்தால் அதற்கான ஆதாரத்தைத் தரவேண்டும். இல்லை இது உங்களுடைய சொந்தக்கருத்து என்றால் தார்மீக அடிப்படையில் நான் இப்படிச் செய்திருக்கிறேன் என்று சொலலவேண்டும். இதில் என்ன தம்பட்டம் இருக்கிறது.

     முதலாளிகளையும், தொழில்களையும், உற்பத்திகளையும், உபரிகளையும், அடுத்தகட்ட வளர்ச்சிகளையும் விரும்பும் நிசர்சன மனிதரான வீரா.. உங்களது கேஸ் மானிய ரிட்டர்ன் நிசர்சன காப்பியை இணைக்க வேண்டுகிறேன்.

     அப்படி இல்லாதபட்சத்தில்,

     நன்றி-அஜிஸ் ஜி

     //….//நாம் ஒரு வசதியை அனுபவிக்க வேண்டும் என்கிற ஒரே காரணத்திற்காக எவ்வளவு சால்ஜாப்புகளை சொல்கிறோம் என்று பாருங்கள்//
     இது உங்களுக்கும் பொருந்துகிறதே திரு ராஜமாணிக்கம் வீரா…//

  • bala சொல்கிறார்:

   super

 9. lenin சொல்கிறார்:

  We gave him vote for economic development. But he ask us to make economic development. But his party ppl says he is the best economist india has ever seen. I dont understand what our P M and financial ministers role . American economist jim said so far modi has done nothing but talk. Its clearly known this guys know nothing to run a govt. We fooled and we must bear it till the five years.

 10. kt srinivasan சொல்கிறார்:

  yes its terue indeed ..he cal call all the MPs and MLA’s to relinquish some of their perks they enjoy right now that ill get the exchequer more than 1000 crores

 11. Noor Muhammad சொல்கிறார்:

  எத்தனை ஓலம் இட்டாலும் பணம் வாங்கிக் கொண்டு ஓட்டு போடும் பிணம் திண்ணிகள் இருக்கும் வரை நம் கருத்துகள் செவிடன் காதில் ஊதிய சங்கு தானே.

 12. Kokki Kumaru சொல்கிறார்:

  Funny PM.

 13. Philomin Raj சொல்கிறார்:

  Can you send the letter written in English detailing why he will not give up the gas subsidy? I want to circulate among my friends who can’t read Tamil!

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் பிலோமின் ராஜ்,

   நீங்கள் விரும்பியபடியே, ஆங்கிலப் பதிவை உங்கள்
   மெயில் விலாசத்திற்கு அனுப்பி இருக்கிறேன்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.