திருவாளர் அடானியின் ராஜ்ஜியத்தில்….. அடை மழை ….!!!

adani-1

mining

power

பங்குச் சந்தை வர்த்தகத்தில், ஷேர்கள் வாங்குவதில் ஆர்வம்
உடையவர்கள் – உடனடியாக அடானியின் கம்பெனிகளில் எதாவது
ஒன்றில் முதலீடு செய்வது அவர்களின் எதிர்காலத்திற்கு நல்லது.
குறைந்தது அடுத்த 4 ஆண்டுகளுக்கு (அதாவது மோடிஜி
ஆட்சி நீடிக்கும் வரையில் …? ) அவரது கம்பெனிகள்
அனைத்துமே ஏறுமுகமாகவே இருக்கும் என்று சொல்கின்றன
செய்திகள்…..!!!

எதை வைத்து இப்படி ஆருடம் சொல்கின்றன செய்திகள்…?

கடந்த ஒரு வருட காலத்தில் – அதாவது சென்ற
மே மாதம் முதல் இன்று வரையிலான கால கட்டத்தில்,
அடானியின் சொத்து மதிப்பில் கூடுதலாக சுமார் 3 பில்லியன்
டாலர்கள் அதாவது 19,000 கோடி ரூபாய் உயர்ந்திருக்கிறதாம்…!!!

அதாவது அவரது கம்பெனிகளின் சொத்து மதிப்பு –
கடந்த ஒரு வருட காலத்தில் – சுமார் 48 % உயர்ந்து தற்போது
8.1 பில்லியன் டாலர், அதாவது சுமார் 51,600 கோடி ரூபாய்
என்கிற அளவில் நிற்கிறதாம்.

இதில் வேடிக்கை என்னவென்றால்,
இவர் சொந்த மூலதனம்
அஞ்சு ரூபாய் கூட கிடையாது….!!!
இந்த பணம் அத்தனையும், OPM -ல் பண்ணியது.
( OPM என்றால் என்ன என்பது கமலின் “மகாநதி” படம்
பார்த்தவர்களுக்கு உடனே நினைவிற்கு வந்து விடும் ….
Other People’s Money….!!!)

இந்த வளர்ச்சி எப்படி சாத்தியமாயிற்று ….?
மத்தியில் ஆட்சித்தலைமை பொறுப்பில் இருப்பவருக்கு –
இவர் மிகவும் வேண்டப்பட்டவர் என்கிற விஷயம்
வியாபார உலகிற்கு தெரிந்தாலே போதாதா….?

இவர் கேட்டதெல்லாம் கிடைக்குமே –
கேட்காமலே கூட பல விஷயங்கள் கிடைக்குமே …!!!

கடந்த ஒரு ஆண்டில் மட்டும் இவர் வாங்கிக் குவித்த
கம்பெனிகள் –

டாட்டா குழுமத்திலிருந்து 900 மில்லியன் டாலருக்கு
(5,700 கோடி ரூபாய் ) வாங்கிய “தாம்ரா துறைமுகம்”,

ஒரு பில்லியன் டாலருக்கு (6,300 கோடி ரூபாய் )
உடுப்பியில் உள்ள லான்கோ இன்ஃப்ராடெக்கின்
1200 மெகாவாட் “அனல் மின் உற்பத்தி நிலையம் ”

4,200 கோடி ரூபாயில், ‘அவந்தா’ நிறுவனத்திடமிருந்து
வாங்கிய 600 மெகாவாட் மின் உற்பத்தி நிலையம்….

ஏற்கெனவே, அடானி குழுமம் வைத்துள்ள
அதானி என்டர்பிரைஸஸ்,
அதானி போர்ட் அண்ட் செஸ் லிமிடெட்,
அதானி பவர் – ஆகிய நிறுவனங்களின் அசுர வளர்ச்சி….

இவையெல்லாம் உள்நாட்டில் அடானியில் வர்த்தக
வளர்ச்சிகள்….

வெளிநாடுகளில் இந்த ஒரு வருடத்திற்குள் என்னென்ன
செய்திருக்கிறார் என்கிற விவரங்கள் எல்லாம் இன்னும்
வெளியில் வரவில்லை. தெரியாத்தனமாக ஆஸ்திரேலியா
நிலக்கரி சுரங்கம் விவகாரத்தை மட்டும் வெளியே வர
விட்டு விட்டார்கள்.

கடந்த ஒரு ஆண்டில் அநேகமாக மோடிஜி சுற்றுப்பயணம்
மேற்கொண்ட அனைத்து நாடுகளுக்கும் மிஸ்டர் அடானி
அவர்களும் சென்றுள்ளார்…. ஆனால் பயண விவரங்கள்
வெளியிடப்படவில்லை…
சில செய்திகள் மட்டும்
வெளிநாடுகளின் செய்தி ஏஜென்சிக்களின் மூலம் வெளிவந்தன.
அவற்றைப் பெற்று, ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தித்தாள்
பின்வரும் செய்திகளை வெளியிட்டது……

———–
மோடிஜி அமெரிக்கா சென்றபோதும்,
பிரேசில் சென்றபோதும்,
ஆஸ்திரேலியா சென்றபோதும், ஜப்பான் சென்றபோதும்
அடானியும் கூடவே சென்றார். ஆஸ்திரேலியாவில் ஜி-20
மாநாடு நடந்தபோது, அவரும் மோடிஜியுடனேயே இருந்தது
பளிச்சென்று அனைவருக்குமே தெரிந்தது.

– பிரான்சில், யுனெஸ்கோ கூட்டத்தில் மோடிஜி
20 நிமிடங்களுக்கே உரையாற்றியபோது – அங்கும் கூட
அடானியை பார்க்க முடிந்தது. ஜனாதிபதி Froncois Hollende
அளித்த விருந்தில் கூட அடானி கலந்து கொண்டார்.

இந்திய தரப்பில் கொடுக்கப்பட்ட விருந்தினர் பட்டியலில்
அடானியின் பெயர் இல்லை. ஆனால், பிரெஞ்சு அரசு
வெளியிட்ட பட்டியலில்
அடானியின் பெயர் இருந்திருக்கிறது.
(இந்திய தரப்பு இந்த விவரத்தை வேண்டுமென்றே
மறைத்திருக்கிறது… )

கடைசியாக – மோடிஜி கனடாவிற்கு அணுசக்தி உற்பத்தி
சம்பந்தமாக பேச்சு வார்த்தை நடத்தியபோது, அடானியையும்
அங்கே காண முடிந்தது. அடானி மின் உற்பத்தியிலும் தன்
வணிகத்தை விஸ்தரிக்கும் முயற்சியில் தீவிரமாக
ஈடுபட்டிருக்கிறார்.

———–

ஏற்கெனவே ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் அவர்
பெற்று, இன்னும் நிலுவையில் இருக்கும் 72,000 கோடி
ரூபாய் கடன் அவரது வியாபார விஸ்தரிப்பிற்கு எந்த
விதத்திலும் தடையாக இல்லை.

இந்த அசாத்திய வெற்றி எப்படி சாத்தியமாயிற்று …?

தமிழ் இந்து நாளிதழில் ஒரு கட்டுரையில் சமஸ் கூறுகிறார் –

” இதுவும் ஒரு சாதனைக் கதைதான்.
மோடியின் குஜராத்தில், எல்லையோர சிறு நகரமான
தாரட்டிலிருந்து அகமதாபாத் நோக்கி பிழைப்புக்காகக்
குடிபெயர்ந்த ஒரு ஜவுளி வியாபாரக் குடும்பத்தின் கதை.
ஒரு தொழில் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய
சாமானியனின் கதை. மோடியின் தோழர் கௌதம்
அதானியின் கதை.

1988-ல் தொடங்கப்பட்ட அதானி குழுமம் எந்தெந்தத்
தொழில்களிலெல்லாம் இறங்கி வெறும் 27 ஆண்டுகளுக்குள்
எப்படிக் கிட்டத்தட்ட 28 நாடுகளில் கிளை பரப்பி நிற்கிறது
என்பது ஒரு பெரும் வரலாறு. அதை அப்படியே இங்கே விவரிப்பது
சாத்தியம் இல்லை.

எனினும், ராகுல் காந்தியின் கூற்றுப்படி, “குஜராத்தில்
மோடி ஆண்ட 2002-2014 காலகட்டத்தில் மட்டும்
ரூ. 3,000 கோடியிலிருந்து ரூ. 40,000 கோடியாக அதானி குழுமத்தின் சொத்து மதிப்பு உயர்ந்தது எப்படி?”
என்ற கேள்விக்கு,

பின்னாளில் ‘ஃபோர்ப்ஸ்’ வெளியிட்ட ஒரு கட்டுரை
பதிலுக்கான திசையைக் காட்டியது. மோடியின் ஆட்சியில்
கட்ச் வளைகுடா பகுதியில் மட்டும் அதானி குழுமத்துக்கு
7,350 ஹெக்டேர் 30 வருஷக் குத்தகைக்கு அளிக்கப்பட்டதையும்
அப்படி அளிக்கப்பட்ட நிலத்தைக் கிட்டத்தட்ட 15 மடங்கு அதிக
தொகைக்கு ‘இந்தியன் ஆயில்’ உள்ளிட்ட நிறுவனங்களுக்கு
அதானி குழுமம் உள்குத்தகைக்கு விட்ட கதையெல்லாம்
அந்தக் கட்டுரை சொன்னது.

இடையிடையே வெளியான தலைமைக் கணக்குத்
தணிக்கையாளர் அறிக்கைகளும் மோடி அரசு பெருநிறுவனங்கள்
மீது, அதானி குழுமத்தின் மீது காட்டிய பாசத்தையும் அதீத
சலுகைகளையும் கூறின.”

—————–

அம்பானிக்கு காங்கிரஸ் கிடைத்தது போல –
அடானிக்கு மோடிஜி….!!!

நேற்று முன் தினம் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி,
செய்தியாளர்களிடம் பேசும்போது ஒரு செய்தி
சொன்னார்…. தமிழகத்தின் நலன் கருதி அதை வரவேற்பதா
அல்லது நாட்டின் பொதுநலம் கருதி எதிர்ப்பதா என்று
தீர்மானிக்க முடியவில்லை…..!!!

( பகுதி -2-ல் தொடர்கிறது )

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

10 Responses to திருவாளர் அடானியின் ராஜ்ஜியத்தில்….. அடை மழை ….!!!

 1. பிரபுவின் சொல்கிறார்:

  நிஜங்களின் தரிசனம்.சிறப்பான பதிவு.

 2. Pingback: திருவாளர் அடானியின் ராஜ்ஜியத்தில்….. அடை மழை ….!!! | Classic Tamil

 3. Jayachandran .N. சொல்கிறார்:

  French President is Mr Froncois Hollende please…..

 4. R.Srinivasan சொல்கிறார்:

  This article in part 1 brought out nicely about the abnormal growth of Mr.Adani and his business empire during the tenure of Mr.Modi as gujarat CM. waiting to see the part 2.Good effort by the author to bring-out such facts about the high level connection and their growth. It is not “Sab-ka Saath sab-ka vikas”,but it is “sab-ka vote,ek-ka growth”.

 5. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  //தமிழகத்தின் நலன் கருதி அதை வரவேற்பதா அல்லது நாட்டின் பொதுநலம் கருதி எதிர்ப்பதா என்று தீர்மானிக்க முடியவில்லை//
  சேது சமூத்திர திட்டம் நடைமுறைக்கு வராதவரை, அதானி தமிழகத்தில் துறைமுகம் கட்டினாலும் நாட்டுக்கு நன்மை இல்லை என்பது என் கருத்து.

 6. today.and.me சொல்கிறார்:

  Dear KMji
  is it OPM or Opium?

 7. today.and.me சொல்கிறார்:

  //(இந்திய தரப்பு இந்த விவரத்தை வேண்டுமென்றே
  மறைத்திருக்கிறது… )// எங்கே இந்த பாஜக/மோடி அன்பர்கள்? இதையெல்லாம் வன்மையாகக் கண்டிக்கவேண்டாமா? 🙂 🙂

 8. குமார் சொல்கிறார்:

  எவர் ஆட்சியில் இருந்தாலும் இதே நிலை தான். ஒருவரை மட்டும் குறை கூறுவதை விட்டுவிட்டு மொத்தமாக அரசின் செயல்பாட்டை பாருங்கள். நீங்களே ஆட்சிக்கு வந்தாலும் இதே நிலை தான் அல்லது இதை விட மோசமாக தான் இருக்கும். ஒரு பக்கமாகவே பார்க்கும் வரை உங்களை மாற்ற முடியாது. நீங்கள் எல்லாம் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி வந்து கஷ்டப்படுவதற்காக உழைக்கிறீர்கள். பார்ப்போம் இதே விமரிசனம் காங்கிரஸின் ஆட்சியில் எப்படி இருக்கும் என்று…… உங்களை நினைத்து நொந்துக் கொள்வதை தவிர வேறு என்ன செய்ய……

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.