“எங்கப்பன் குதிருக்குள்ள இல்லை” … !!! (அதானி காட்டில்….பகுதி-2)

.

தமிழ்நாட்டில் – கன்னியாகுமரி அருகே, ‘குளச்சலில்,
சர்வதேச துறைமுகம் ஒன்று அமைக்கப்பட வேண்டும்’
என்பது தமிழக மக்களின் நீண்ட நாள் கனவு.

இது குறித்து தமிழக அரசு நீண்ட நாட்களாக மத்திய அரசிடம்
வேண்டுகோள் வைத்துள்ளது. தற்போது சர்வதேச அளவிலான
சரக்குப் பெட்டகங்கள், கண்டெயினர்கள் -இலங்கையில் உள்ள
கொழும்பு துறைமுகம் வாயிலாக கையாளப்படுகிறது.

குளச்சலில் துறைமுகம் அமைந்தால், அதில் பெரும்பகுதி
தமிழகத்துக்கு வந்துவிடும். இது, கன்னியாகுமரி மாவட்டத்துக்கு
மட்டுமான திட்டமல்ல. இதன்மூலம், கன்னியாகுமரி,
திருநெல்வேலி, துாத்துக்குடி, விருது நகர்,மற்றும் மதுரை
ஆகிய மாவட்டங்களும் நல்ல வளர்ச்சி பெறும்.
ஒட்டுமொத்த தமிழகமும் வளர்ச்சி அடையும்.
இந்தியாவின் பொருளாதாரமும் மேம்படும்.

அதனால் தமிழகத்தின் குளச்சலில், சர்வதேச துறைமுகம்
அமைப்பதற்கான சாத்திய கூறுகள் பற்றி, ஏற்கனவே ஆய்வு
நடத்தி முடிக்கப்பட்டு அறிக்கை தயாராக உள்ளது.

Colachel_portview

தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்
அவர்கள் இந்த திட்டம் நிறைவேற வேண்டும் என்பதில்
மிகத்தீவிரமாக இருக்கிறார்.
மத்திய அரசிடம் தனக்குள்ள
செல்வாக்கை பயன்படுத்தி, எப்படியாவது குளச்சல் துறைமுக
திட்டத்தை நிறைவேற்றியேயாக வேண்டுமென்று கருதுகிறார்.
தனக்கும், பாஜக விற்கும், தமிழ்நாட்டில் இந்த திட்டம்
ஒரு நல்ல இடத்தைத் தேடித்தரும் என்று நினைக்கிறார்.

கேரள தலைநகர் திருவனந்தபுரம் அருகேயுள்ளது
விழிஞ்ஞம் கடற்கரை. தமிழகம் குளச்சல் துறைமுகத்திற்காக
முயல்வது போலவே இங்கு, விழிஞ்ஞத்தில்
‘சர்வதேச துறைமுகம் ஒன்றை அமைக்க வேண்டும்’
என்று அங்கு ஆட்சியில் உள்ள,
உம்மன் சாண்டி தலைமையிலான, காங்கிரஸ் கூட்டணி அரசு
பல ஆண்டுகளாக கோரி வருகிறது.

Vizhinjam Artist_Impression

அந்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்று, அதற்காக
துறைமுகப் பணிக்கான டெண்டரும் கோரப்பட்டது.
இந்த டெண்டருக்கு – குஜராத் அதானி குழுமம் மட்டுமே
விண்ணப்பம் செய்துள்ளது. எனவே, துறைமுக திட்டத்தை,
அந்த நிறுவனத்திடமே வழங்க, மத்திய கப்பல் துறை
அமைச்சகம் தீர்மானித்திருக்கிறது.

ஆனால், கேரளாவில் உள்ள எதிர்க்கட்சிகள், முக்கியமாக
இடது கம்யூனிஸ்ட் கூட்டணி – ‘ விழிஞ்ஞம் துறைமுக
திட்டத்தை, தனியாரிடம் விடாமல், மத்திய அரசுத் துறை மூலம்
தான் நிறைவேற்ற வேண்டும் ‘ என்று வலியுறுத்துகின்றனர்.
அண்மையில் மார்க்சிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி கூட இது குறித்து வலியுறுத்திப் பேசியுள்ளார்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக, இரண்டு நாட்களுக்கு
முன் டில்லியில் செய்தியாளர்களிடம் பேசும்போது,
மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரிஜி –

விழிஞ்ஞத்தில், 7,000 கோடி ரூபாய் மதிப்பிலான,
சர்வதேச துறைமுக திட்டத்தை, அடானி குழுமம் நிறைவேற்ற,
அம்மாநில அரசியல் கட்சிகள் தொடர்ந்து
எதிர்ப்பு தெரிவித்தால், அந்தத் திட்டம் தமிழகத்திற்கு மாற்றப்படும்,”
என்று கூறி பயத்தை உண்டு பண்ணி இருக்கிறார்…..

” கடலோர பகுதியில், சர்வதேச துறைமுகம் அமைய வேண்டியது
அவசியமானது. ஏனெனில், தற்போது பெரும்பாலான கப்பல்கள்,
கொழும்பு துறைமுகத்திற்கே சென்று, சரக்குகள் மற்றும்
கன்டெய்னர்களை இறக்குகின்றன.

கேரள மக்கள் வளர்ச்சியை விரும்பவில்லை எனில்,
இந்தத் திட்டம் குளச்சலுக்கு மாற்றப்படுவது உறுதி. பின்னர்,
என்னைக் குறை சொல்லக்கூடாது”
என்றிருக்கிறார்.

அதானி குழுமம், பிரதமர் நரேந்திர மோடிக்கு, நெருக்கமான
நிறுவனம் என நம்பப்படுவதாலேயே, பொதுத்துறை
நிறுவனம் ஒன்றின் மூலம் தான், குளச்சல் துறைமுக
திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என,
கேரள அரசியல் கட்சிகள் மறைமுகமாக உணர்த்தி
வருகின்றன

இதையறிந்த அமைச்சர் கட்காரிஜி –

– எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்கிற மாதிரி
தானே முன்வந்து விளக்கம் கூறுகிறார் பாருங்கள் –

—–
அதானி குழுமத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை.
அந்தக் குழுமத்துடன், மத்திய அரசுக்கும் எந்தத் தொடர்பும்
இல்லை.

அதேநேரத்தில், தங்கள் நிறுவனம் துறைமுக
திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் எனில், அதற்கு
அரசியல் ரீதியான எதிர்ப்பு இருக்கக் கூடாது என,
அந்த நிறுவனம் முன் நிபந்தனை விதித்துள்ளது.

துறைமுகங்கள் அமைக்கும் பணியில், நீண்ட காலமாக
ஈடுபட்டுள்ளது அதானி குழுமம். குஜராத் மாநிலத்தில்,
முந்த்ரா துறைமுகத்தை அமைத்தது அந்த நிறுவனமே.

தற்போது முந்த்ரா துறைமுகம், பெருமளவு வளர்ச்சி
அடைந்துள்ளது. அந்தத் துறைமுகத்தில், கையாளப்படும்
கன்டெய்னர்கள் மற்றும் பொருட்களின் அளவும்
அதிகரித்துள்ளது.”

——-

கேரள கட்சிகள் அடானி கம்பெனிக்கு தொடர்ந்து
எதிர்ப்பு தெரிவித்தால், சர்வதேச துறைமுகத்திட்டம்
குளச்சலுக்கு கொண்டு போகப்படும் என்று கட்காரிஜி
வெளிப்படையாகவே பயமுறுத்தி இருப்பதால் –
இறுதியில் கேரளா, துறைமுகத்திட்டத்தை அடானிக்கே
கொடுக்க ஒப்புக் கொள்ளும் என்று நம்பலாம்….

(கேரள சகோதரர்கள் நம்மை விட புத்திசாலிகள் –
எவ்வளவு தான் தத்துவம் பேசினாலும், இறுதியில் –
அடானியோ, அம்பானியோ – திட்டம் தங்களை விட்டு
நழுவிப்போக விட மாட்டார்கள் … அதுவும் தமிழகத்திற்கு
என்றால் நிச்சயம் விட மாட்டார்கள்….!!! )

இது ஒரு பக்கம் இருக்க –

தமிழக குளச்சல் திட்டம் கைநழுவிப்போக.
அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அவர்கள் விடுவாரா ?
அவர் தன் முயற்சிகளைத் தொடரும்போது –

கட்காரிஜி – அடானிஜியிடம் “கண்ணா, இன்னொரு லட்டு
திங்க ஆசையா..?” என்று கேட்கக்கூடிய சூழ்நிலை
உருவாகலாம்….!!!
குளச்சல் சர்வதேச துறைமுக திட்டமும் அடானி வசம் போகக்கூடும்….!!!

பிறகென்ன … அடானி காட்டில் அடை மழை தானே…?

——————-

பின் குறிப்பு – இங்கு நான் ஒன்றை சொல்ல
விரும்புகிறேன். அடானியின் திறமையையும்,
சாமர்த்தியத்தையும் குறைத்து மதிப்பிட முடியாது.
அபார திறமைசாலி அவர்.. அது இல்லாமல்
இந்த அளவிற்கு அவர் வளர்ந்திருக்க முடியாது.

– அரசியல்வாதிகளின், செல்வாக்கு, அதிகாரம்,
பலம் ( மற்றும் பலவீனம்….! ) ஆகியவற்றை
அவர் நன்கு புரிந்து வைத்திருப்பதுடன், அவற்றை
எப்படி தன் வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்வது
என்பதையும் மிக நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறார்….!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

24 Responses to “எங்கப்பன் குதிருக்குள்ள இல்லை” … !!! (அதானி காட்டில்….பகுதி-2)

 1. புது வசந்தம் சொல்கிறார்:

  ஐயா, ஒன்றை மறந்து விட்டீர்களே, நம்ம மந்திரி நமக்கு கிடைப்பதை விட அவர்களுக்கு கிடைப்பதில் தான் ஆர்வம் காட்டுவார். சும்மா, ஒரு பேச்சுக்கு எதாவது சொல்லுவார். முல்லை பெரியார் அணையில் கேரள அரசுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது குறித்து இங்கு என்ன செய்ய போகிறார்கள் ? வெறும் அறிக்கை மட்டும் தானா ?

 2. Madhavan சொல்கிறார்:

  கேரள சகோதரர்கள் நம்மை விட புத்திசாலிகள் –
  எவ்வளவு தான் தத்துவம் பேசினாலும், இறுதியில் –
  அடானியோ, அம்பானியோ – திட்டம் தங்களை விட்டு
  நழுவிப்போக விட மாட்டார்கள் … அதுவும் தமிழகத்திற்கு
  என்றால் நிச்சயம் விட மாட்டார்கள்….!!!

  appuram yenna கேரள “சகோதரர்கள்”??

  ippadiye thinnayil thalaikku namadhu kaiyai muttukoduthu
  padukkvaithu viduvaargal !!

  • today.and.me சொல்கிறார்:

   நண்ப மாதவன்
   புத்திசாலித்தனம் எங்கே இருந்தாலும் பாராட்டும் நாம், நம் சகோதரர்களிடம் இருந்தால் இன்னும் அதிகமாகப் பாராட்ட வேண்டும் இல்லையா காமை ஜி. தங்களுக்கு வரும் திட்டத்தை அவர்கள் ஏன் விட்டுக் கொடுக்கவேண்டும்?

   • Madhavan சொல்கிறார்:

    My question where is
    நம் புத்திசாலித்தனம்?

    நம் state problem ippo Karnataka, Andhra, Kerala Kaiyil.

 3. Pingback: “எங்கப்பன் குதிருக்குள்ள இல்லை” … !!! (அதானி காட்டில்….பகுதி-2) | Classic Tamil

 4. today.and.me சொல்கிறார்:

  I am not telling anything.
  But Swamy shared in his facebook :-
  ———————-
  Modi govt :
  Nepal-10000cr
  Bhutan-4500cr
  Mongolia-6400cr
  FIJI-476cr
  Bdesh-12800cr
  Adani-6200cr
  SpiceJet-600cr
  Farmers-Rs32
  Disabled-0
  OROP-0
  Via ~ @DrunkVinodMehta
  —————
  🙂

  • குமார் சொல்கிறார்:

   விவசாயிகளுக்காக இப்படி பரிதவிக்கிறீகளே நீங்கள் விவசாயிகளுக்காக என்ன செய்து இருக்குறீர்கள். ஒரு சொம்பு தண்ணீர் கொடுத்தது உண்டா…… இதே காங்கிரஸ் 60 வருட காலம் விவசாயிகளுக்கு என்ன செய்தது என்பதையும் செல்லுங்கள்……

   • today.and.me சொல்கிறார்:

    நண்ப குமார்…
    ‘ நீங்கள்’ என்று யாரைக் குறிப்பிடுகிறீர்கள்? என்னையா? சுவாமியையா?காங்கிரசையா? விமரிசனத்தையா? அல்லது அனைத்து நண்பர்களையுமா? கொஞ்சம் தெளிவாகக் கேளுங்களேன்.

    🙂

 5. குமார் சொல்கிறார்:

  இது வரை காங்கிரஸ் ஆட்சியில் இருந்து நீங்கள் சொன்னதில் எதை சாதித்து இருக்கிறது. ஒருவரை மட்டும் குறை கூறுவதை விட்டுவிட்டு மொத்தமாக அரசின் செயல்பாட்டை பாருங்கள். நீங்களே ஆட்சிக்கு வந்தாலும் இதே நிலை தான் அல்லது இதை விட மோசமாக தான் இருக்கும். ஒரு பக்கமாகவே பார்க்கும் வரை உங்களை மாற்ற முடியாது. நீங்கள் எல்லாம் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி வந்து கஷ்டப்படுவதற்காக உழைக்கிறீர்கள். பார்ப்போம் இதே விமரிசனம் காங்கிரஸின் ஆட்சியில் எப்படி இருக்கும் என்று…… உங்களை நினைத்து நொந்துக் கொள்வதை தவிர வேறு என்ன செய்ய……

  • today.and.me சொல்கிறார்:

   காங்கிரஸ் போயே ஆக வேண்டும் என்று ஒரு காலத்தில் உழைத்தது விமரிசனம் என்பது உங்களுக்குத் தெரியவில்லை. கொஞ்சம் பழைய பதிவுகளைப் படித்துவிட்டு வாருங்களேன் நண்ப குமார்…

   இவ்வளவுதான் உங்கள் அறிவுத்தேடலின் அளவு என்னும்போது
   …… உங்களை நினைத்து நொந்துக் கொள்வதை தவிர வேறு என்ன செய்ய……

  • Raajkumaar சொல்கிறார்:

   Who is this Kumar ?
   What happened to him ?
   When vimarisanam supported congress ?
   Why is he blabering like this ?

 6. yogeswaran சொல்கிறார்:

  sir,

  they are intelligent,

  they gifted koodankulam to us and asking electricity from us.

  yogi

 7. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  //நீங்கள் எல்லாம் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி வந்து கஷ்டப்படுவதற்காக உழைக்கிறீர்கள். பார்ப்போம் இதே விமரிசனம் காங்கிரஸின் ஆட்சியில் எப்படி இருக்கும் என்று…… //
  குமாரே ஒத்துக்கொண்டாருங்கோ… டும் டும் டும்
  காங்கிரஸ் ஆட்சி வரப்போகுது… டும் டும் டும்
  மோடி ஆட்சி போகப்போகுது … டும் டும் டும்

  திரு குமார் அவர்களே தயவு செய்து ஓராண்டுக்கு முன்னுள்ள விமரிசன பதிவுகளை பொறுமையாக வாசியுங்கள். பொறுமை எருமையைவிட பெரியது என்பது புரியும்.

  • today.and.me சொல்கிறார்:

   அவருடைய பேஸ்புக் பக்கத்தில் அவரே வெளியிட்டுள்ளதை இங்கே இணைத்துள்ளேன். நானாக எதுவும் சொல்லவில்லை. 🙂

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் டுடேஅண்ட்மீ,

   இந்த புகைப்படத்திற்கு கிடைக்க வேண்டிய மரியாதையே தனி…!

   இதற்கென்றே பொருத்தமாக ஒரு செய்தியும் நேற்று வெளியாகி
   இருப்பதால், இந்த புகைப்படைத்தை தலைப்பு பக்கத்திற்கே
   கொண்டு செல்கிறேன். உங்கள் “கொடை”க்கு நன்றி.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • today.and.me சொல்கிறார்:

    நன்றி கா.மைஜி,
    இந்தப் பக்கத்தை ஸ்க்ரீன்ஷாட் ஆக அடுத்தபதிவின் தலைப்பில் போடுங்களேன். ஆதாரத்தோடு இருக்கும். இல்லையென்றால் படத்தை கட்டிங்ஒட்டிங் செய்து சுவாமிபெயரை வம்புக்கு இழுத்துவிட்டதாக யாராவது ப(க்)தர்கள் சண்டைக்கு வந்துவிடப்போகிறார்கள். எல்லாம் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான். 🙂

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     நண்பர் டுடேஅண்ட்மீ,

     இந்த இடுகையிலேயே லிங்க் கொடுத்து விட்டேன்.

     -வாழ்த்துக்களுடன்,
     காவிரிமைந்தன்

 8. Madhavan சொல்கிறார்:

  unrelated directly to this subject, but UNAVOIDABLE….TO THINK…

  http://www.dinamalar.com/photogallery_detail.asp?id=1213&nid=25425&cat=Album#.VXUgVtKqqkp

 9. Madhavan சொல்கிறார்:

  sorry!, pl. see the second video about bargaining in the above attachment

  also another video hear at 1:02 to 1:08

 10. today.and.me சொல்கிறார்:

  //எப்படி என்றால்?//
  ஒருநாள் பதிவைப் படித்து அல்லது ஒரு மனிதனை துதிபாடி ஜனநாயகத்தில் நானும் ஜனம் என்று சொல்லும் உங்களைப் போன்ற அறிவுஜீவி வாசகர்களையும் அறிவுஜீவி பின்னூட்டவியலாளர்களையும் கொண்டதுதான் சமத்துவ இந்த ‘விமரிசனம்’.

  இது ஒருநாள் கூத்துக்கு பணம்வாங்கிக்கொண்டோ, சூடம்சாம்பிராணிதலையில் சத்தியம் செய்துவிட்டோ ஆடுகிறவர் பகுத்தறிவுக்கு வெங்காயங்களுக்குத் தெரியவாய்ப்பில்லை.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.