அடானிக்கு மோடிஜியின் அடுத்த பரிசளிப்பு…! இப்போது பங்களா தேஷ் மின் உற்பத்தி ப்ராஜக்ட்…!!!

busi.modiji

( பின்குறிப்பு -இந்த புகைப்படம் கிடைக்கப்பெற்றது
கீழ்க்கண்ட வலைத்தளத்திலிருந்து –
https://www.facebook.com/SusuSwamy/photos/a.1438815056377080.1073741827.1437705413154711/1609353329323251/?type=1&theater )

ஆஸ்திரேலியா, கனடா, அடுத்து இப்போது பங்களா தேஷ்
விடாது துரத்தும் கருப்பு என்று – மோடிஜியுடன் கூடவே சென்று
பங்களா தேஷிலும் ஒரு மின் உற்பத்தி ப்ராஜெக்ட் பிடித்து
விட்டார் அடானி. கூடவே சென்ற அனில் அம்பானிக்கும் அடித்தது
அதிருஷ்டம்…!!!

மோடிஜியின் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ், “வேண்டப்பட்ட” இந்திய தொழிலதிபர்களுக்கு உலகம் முழுவதும் வியாபார விஸ்தரிப்பை மேற்கொள்ள வாய்ப்பு தேடித்தருவது தானே தற்போதைய அரசின் முக்கிய கொள்கை…!!!

அதன்படி, ஏற்கெனவே அடானிக்கு ஏற்படுத்திக் கொடுத்த வாய்ப்புகளுடன் இப்போது பங்களா தேஷில் புதிதாக ஒரு மின் உற்பத்தி நிலையம் அமைக்க மோடிஜியின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. கூடவே போன அனில் அம்பானிக்கும் அதிர்ஷ்டக் காற்று அடிக்கவே –
அவருக்கும் ஒன்று – இந்தா பிடி என்று கொடுக்கப்பட்டிருக்கிறது.
இருவருமாக சேர்ந்து 5 பில்லியன் அமெரிக்க டாலர் ( கிட்டத்தட்ட
40,000 கோடி …? ) பங்களா தேஷில் முதலீடு செய்கிறார்கள்…

(இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும், மின் உற்பத்தி
எக்கச்சக்கமாக குவிக்கப்பட்டு,

இனி மின் உற்பத்தி நிலையங்களுக்கே
தேவை இல்லை என்பதால் தான் வெளிநாடுகளுக்கு முதலீடு
கொண்டு செல்லப்படுகிறது என்றும் யாராவது இதற்கு விளக்கம்
கொடுக்க முன்வரக்கூடும் ….!)

வாழ்க “மேக் இன் இந்தியா” திட்டம்.
“பாரத் மாதா கி ஜெய் ”

இது குறித்த செய்தி விவரம் கீழே –

reliance-power-adani-to-invest-5-billion-in-bangladesh-power-plants-during-pm-modis-trip

adani and ambani in bangla desh

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

27 Responses to அடானிக்கு மோடிஜியின் அடுத்த பரிசளிப்பு…! இப்போது பங்களா தேஷ் மின் உற்பத்தி ப்ராஜக்ட்…!!!

 1. paamaran சொல்கிறார்:

  நீங்களும் அவ்வப்போது — மோடியின் வெளிநாட்டு பயணங்களின் போது நடைபெறுகின்ற ” அடானி மற்றும் அம்பானி ” களின் ஒப்பந்தங்களை பற்றி இடுக்கை எழுதிக்கொண்டு தான் இருக்கிறிர்கள் …! ஆனால் அதனால் யாருக்காவது — சூடு — சொரணை ஏதாவது ஏற்பட்டு இருக்கிறதா …? நடப்பது நடந்துக்கொண்டுதான் இருக்கிறது …!! ஊதற சங்கை ஊதுவோம் — விடியற பொழுது விடியட்டும் — என்பதை போல ….!!!

 2. Pingback: அடானிக்கு மோடிஜியின் அடுத்த பரிசளிப்பு…! இப்போது பங்களா தேஷ் மின் உற்பத்தி ப்ராஜக்ட்…!!! | Classic Tamil

 3. siva சொல்கிறார்:

  மோதி- அடானி டீலிங் பற்றி சங்கு சங்காக ஊதி காமை ஐயா விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து மகழ்ச்சி. அப்படியே அம்மா-அடானி டீலிங் குறித்தும் கண்டுகொண்டால் நன்றாக இருக்கும். தமிழ்நாட்டில் அடானி சூரிய மின்உற்பத்தி அமைக்க போகிறாராம். அதற்கு ஒரு மெகாவாட்டுக்கு 30 லட்சமென 50 கோடியை அம்மா அமைச்சரவையில் உள்ள மாண்புமிகு நத்தம் விசுவநாதன் கமிசனாக பெற்றுக்கொண்டார் என சவுக்கு செய்தி வெளியிட்டுள்ளார்.

  • today.and.me சொல்கிறார்:

   நண்ப சிவா,

   சவுக்கு தானே சொல்வதில்லை. அது யார் கையில் உள்ளதோ அவர்களால் சுழற்றப்படுகிறது. சுழற்றுகிறவர்களுக்கோ தன்பக்கம், தன் குடும்பம் பக்கம், தன் சுற்றத்தாரின் ஊழல்பக்கம், நீதித்துறையால் முடக்கப்படும் குடும்பத்தொழில்கள் பக்கம் மக்கள் கவனம் செலுத்திவிடக்கூடாது என்பதிலே கவனம்.

   என்ன செய்வது?அவர்கள் நினைத்தபடி மக்கள் எல்லாம் யோசிக்கத்தெரியாத மாக்களாகவே இருந்து விடுகிறார்கள்.

   அடானியைப் பொறுத்தவரை சூரிய மின் உற்பத்தியைப் பொறுத்தவரை நீங்கள் சொன்ன தகவல் உண்மையென்றால், தமிழகத்திற்குள் இந்தியாவிற்குள் இந்தியப் பணம் முதலீடு செய்யப்படுவதற்கு அடானியோ, அம்பானியோ வரவேற்பை அளிக்கவேண்டும். இது ஆளும்கட்சிக்கு மேலும் ஒரு feather in the crown தான். அந்தப் புகழைக் கெடுப்பதற்காகவும்கூட சவுக்கு சுழற்றப்படலாம்.

   அதேவேளையில் கமிஷன் வாங்குகிறசெய்தி உண்மையென்றால், அதை ஆதாரங்களுடன் (வதந்தி பரப்புவதிலேயே குறியாக உள்ள சவுக்கு உண்மையான ஆதாரங்களுடன் எழுதமாட்டார் என்பது எனக்கு உறுதியாகத்தெரியும்) நீங்கள் குறிப்பிட்டிருக்கலாமே !

   மந்திரி கமிஷன் பெற்றது உண்மையென்றால் அம்மா எப்பேற்பட்ட மந்திரியானாலும் எந்திரி என்பார். அம்மா, முக மாதிரிக் கிடையாது, இதுதான் மந்திரி ஆவதற்கு முதல் தகுதி என்று சொல்ல. கமிஷன் அம்மாவுக்கும் சேர்த்துத்தான் என்று சொல்கிறீர்களானால், எதிரிக்கட்சி உதிரிக்கட்சிகளெல்லாம் ஒன்றாகச் சேர்ந்து ஒரு வழக்கு போடவாவது நீங்கள் உதவியிருப்பீர்களே !

   • siva சொல்கிறார்:

    நண்பர் today.and.me அவர்களே, தாங்கள் கூறுவது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அம்மா உடனடியாக சவுக்கின் மீது அவதூறு வழக்கினை பதிவு செய்தால் மக்களுக்கு உண்மை விளங்கும். ‘இளையதாக முள்மரம் கொல்க’ என வதந்தி சிறியதாக இருக்கும் போது நடவடிக்கை தேவையல்லவா? இப்போதெல்லாம் இணையத்தில் ஓசியில் பிளாக்கும் பேஸ்புக்கு சுவரும் கிடைத்துவிட்டதால் டீக்கடையில் அரட்டை அடிக்கும் விடயத்தையெல்லாம் அனைவருக்கும் பரப்பிவிடுகிறார்கள். இதுவும் அது போன்ற விடயம் என தெளிவுபடுத்திவிடுவது நல்லது இப்படி ஒருவர் மீது நடவடிக்கை எடுத்தால் அனைவரும் திருந்தவும் வாய்ப்பாக அமையும். அம்மா ஆவன செய்வார்கள் என நம்புகிறேன்.

    • today.and.me சொல்கிறார்:

     நண்ப சிவா,
     தாங்கள்தான் முதலில் சவுக்கைப்பற்றியும், அவர்கள் கூறும் குறைக்ளைப் பற்றியும் கூறினீர்கள் எனவே அதைப்பற்றி ஆதாரத்துடன் விளக்கவேண்டியது உங்களுடைய கடமைதான்.

     நீங்கள் ‘அம்மா – அம்மா அமைச்சரவை ‘ என்று குறிப்பிட்டதாலேயே உங்களுக்கு விளங்கவேண்டும் என்று அம்மா என்றே நானும் குறிப்பிடுகிறேன். எனவே சவுக்குக்கு ஜால்ரா அடிக்கும் உங்கள்மீதும் சவுக்குமீதும அவதூறு வழக்கு போடுவதில் நேரத்தை வீணடிப்பதைவிட நீங்களும் சவுக்கும் சேர்ந்துவந்து குற்றத்தையும் கமிசனையும் நிரூபிக்க முயலும்போது அதை எப்படிகையாளவேண்டும் என்பதில் நேரத்தை செலவு செய்தால் போதும் என்பதே என் கருத்து.

     // இப்போதெல்லாம் இணையத்தில் ஓசியில் பிளாக்கும் பேஸ்புக்கு சுவரும் //
     ஆமாம்.அதே ஓசியில் கிடைக்கும் அடுத்தவர் இடத்தில் (தன்னுடைய இடத்தில் கூட இல்லை) கருத்துச்சொலகிறேன் பேர்வழி என்று வதந்தி கிளப்பும் உங்களைப்போன்றோர் திருந்தவும் நல்ல வாய்ப்பாக அமையும். என்ன செய்வது. நீங்களாகவே திருந்திவிடுவீர்கள் என்று எதிர்பார்ப்பார்களாக இருக்கும். நீங்கள் குறிப்பிட்ட ‘உங்கள் அம்மா’ அல்லவா?

  • எஸ்.இளங்கோ சொல்கிறார்:

   அறிவார்ந்த தோழர் சிவா

   அந்த துணுக்கை பார்த்தவுடன்
   என்ன ஏது என்று கேட்காமல் உடனேயே அப்படியே
   நம்புகிறீர்களே – எப்படி ?
   உங்கள் அம்மாவை பற்றி எவனாவது இப்படி ஆதாரம்
   இல்லாமல் எதாவது சொன்னால்
   உடனே நம்பி விடுவீர்களா ?
   எவனோ எங்கேயோ எதையோ சொன்னால் உடனே
   நீங்களும் வதந்தியை பரப்ப துணை இருப்பீர்களா ?
   உங்களுக்கு சுய புத்தி இல்லையா ?
   எழுதியவரை முதலில் ஆதாரமென்ன என்று
   கேள்வி கேட்டீர்களா ? பதில் தந்தாரா?
   பிறகு எதை வைத்து அந்த வதந்தியை பரப்புகிறீர்கள் ?
   காவிரிமைந்தன் சாரையும் எழுதச் சொல்கிறீர்கள் ?
   இந்த வதந்தி உண்மை என்று உங்களால் சொல்ல முடியுமா ?
   இந்த தளத்தில் ஆதாரம் இல்லாத செய்தி எதையாவது
   காவிரிமைந்தன் அவர்கள்
   இதுவரை எழுதி இருக்கிறாரா ?
   பின் எதை வைத்து அவரை
   //சங்கு சங்காக ஊதி//
   என்று கிண்டல் செய்கிறீர்கள் ?
   தெளிவாக, எந்த செய்தியையும் விமரிசன கண்ணோட்டத்தோடு
   அலசி ஆராயும் இந்த வலைத்தளத்தோடு எந்த
   மஞ்சள் பத்திரிகையோடு ஒப்பிடும் முயற்சி உங்களுக்கு வேண்டாம்.
   நாங்கள் மதிக்கும் ஒரு வலைத்தளத்தை கிண்டல் செய்வதை
   பொறுத்துக் கொள்ள முடியாது.

   • siva சொல்கிறார்:

    //உங்கள் அம்மாவை பற்றி எவனாவது இப்படி ஆதாரம்
    இல்லாமல் எதாவது சொன்னால்
    உடனே நம்பி விடுவீர்களா ?//
    உங்களிடம் ஒரு திமுககாரர் வந்து “கலைஞரைப் பற்றி இப்படி அவதூறு செய்கிறீர்களே, உங்க அப்பாவை எவனாவது இப்படி ஆதாரம்
    இல்லாமல் எதாவது சொன்னால் உடனே நம்பி விடுவீர்களா ?” என்று கேட்டால் – உங்களின் பதில் என்னவோ அதுதான் எனது பதிலும்!!!

    ////சங்கு சங்காக ஊதி//
    என்று கிண்டல் செய்கிறீர்கள் ?//

    மதிப்புக்குரிய காமை ஐயா அவர்கள் அடானியில் அக்குறும்புகள் குறித்து தொடர்பதிவுகளாக எழுதவதைத்தான் குறிப்பிட்டேன். அதில் கிண்டலும் இல்லை சுண்டலும் இல்லை.

    //இந்த வலைத்தளத்தோடு எந்த
    மஞ்சள் பத்திரிகையோடு ஒப்பிடும் முயற்சி உங்களுக்கு வேண்டாம்..// என்று நான் சொல்லாத விடயத்தை எழுதி நீங்கள்தான் இந்த வலைதளம் மஞ்சள் பத்திரிக்கை என்பது போல எழுதியிருக்கிறீர்கள். இது எப்படியிருக்கிறது என்றால் அரசியல்வாதிகள் தொண்டர்களை வன்முறையில் இறங்க வேண்டாம் என்பார்கள் – அப்படியெனில் அடித்து உடை என அர்த்தம் – அந்த மாதிரியிருக்குது உங்கள் பேச்சு.

    இந்த ஆதரிப்பது போல் நடித்து ஜாடை பேசும் வேலை வேண்டாம் என இந்த தளத்தின் வாசகர் சார்பில் பணிவுடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.

    • today.and.me சொல்கிறார்:

     //அதில் கிண்டலும் இல்லை சுண்டலும் இல்லை.//
     கிண்டல் இல்லை சரி….. அது என்ன சுண்டல்.
     இதுதான் கிண்டலோ?
     😦

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     நண்பர் சிவாவின் இந்த கூற்றுக்கு மட்டும்
     நான் விளக்கம் கூற விரும்புகிறேன் –

     இளங்கோ – ////உங்கள் அம்மாவை பற்றி எவனாவது இப்படி ஆதாரம்
     இல்லாமல் எதாவது சொன்னால்
     உடனே நம்பி விடுவீர்களா ?//

     சிவா – //உங்களிடம் ஒரு திமுககாரர் வந்து “கலைஞரைப் பற்றி
     இப்படி அவதூறு செய்கிறீர்களே, உங்க அப்பாவை எவனாவது
     இப்படி ஆதாரம் இல்லாமல் எதாவது சொன்னால்
     உடனே நம்பி விடுவீர்களா ?” என்று கேட்டால் –
     உங்களின் பதில் என்னவோ அதுதான் எனது பதிலும்!!! //

     நண்பர் சிவா –

     இந்த வலைத்தளத்தில் இன்றைய தினம் வரை,
     ஆதாரம் இல்லாமல் எந்த லஞ்ச ஊழல் குற்றச்சாட்டை
     பற்றியும் நான் எழுதியது இல்லை……

     -இதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா – இல்லையா ?

     இந்த நிலையில் நீங்கள் கொஞ்சம் கூட பொறுப்பின்றி,
     “சவுக்கில்” எழுதப்பட்டுள்ள, எந்த வித ஆதாரத்தையும்
     உள்ளடக்கி இல்லாத ஒரு ஊழல் குற்றச்சாட்டைப்பற்றி,

     இந்த விமரிசனம் வலைத்தளத்தில் நான் எழுத வேண்டும்
     என்று எதிர்பார்ப்பது எப்படி ..?

     நீங்கள் “சவுக்கில்” படிக்க வேண்டிய விஷயத்தை
     அங்கே படியுங்கள். விமரிசனம் தளத்தில்
     எழுதப்படுவதை இங்கே படியுங்கள். இரண்டையும்
     ஒப்பிடும் வேலை எனக்கு வேண்டாம்…..
     நான் யாரையும் குறைகூற விரும்பவில்லை …
     அவர்கள் பாணி, செயல்முறை வேறு –
     என் அணுகுமுறை வேறு….

     வருந்துகிறேன் சிவா.. உங்களிடமிருந்து நான்
     இன்னும் பக்குவமான செயல்பாடுகளை எதிர்பார்த்தேன்….

     -வாழ்த்துக்களுடன்,
     காவிரிமைந்தன்

     • today.and.me சொல்கிறார்:

      நண்பர்களுக்கு,
      சவுக்குவில் ஜெவைப் பற்றி எழுதியதைக் குறிப்பிட்டு இங்கே சிலர் விவாதித்திருக்கிறீர்கள். எனவே அதைப்பற்றி ஒரு விமரிசனத்தை இங்கே குறிப்பிட்டால் சரியாக இருக்கும் எனக் கருதுகிறேன். அனுமதிப்பதும், நிராகரிப்பதும் கா.மைஜியின் கையில்.
      ————-
      ஒரு கட்டுரை படிக்க நேரந்தது … நேர்மையானவர் எழுதியதாம் …அதாவது தீர்ப்பை பற்றியது ,,,

      செல்வி ஜெயலலிதா தனது கழுத்தில் இருக்கும் சுருக்கங்களை போட்டோஷாப் செய்து பிரசுரிக்கச் சொல்கிறார் என்பது முக்கிய செய்தியாம் … சுருக்கத்துடன் செல்வி ஜெயலலிதாவின் புகைப் படம் என்று இணைப்பு வேற ….

      கருணாநிதி பென்சில் மீசை வரைந்துக் கொள்கிறார்

      வைகோ டை அடித்துக் கொள்கிறார்

      மருத்துவர் ராமதாஸ் தினமும் பிரஷர் செக் அப் செய்துக் கொள்கிறார் …

      என்பதெல்லாம் புலனாய்வுச் செய்தியா ?

      சரி அடுத்து நீதிபதி குமாரசாமி 300 கோடிகள் வாங்கினார் … அதை ஒரு தொழிலதிபர் கொண்டு போய்க் கொடுத்தார் என்று குறிப்பிடுகிறார் அந்த கழுதை சாட்டை … சரி குமாரசாமிக்கு கொண்டு போய்க் கொடுத்ததற்கு முழு ஆதாரம் வேண்டாம் ஏதாவது அடிப்படை ? ஊஹும் .. எதுவும் கிடையாது … சும்மா மனம்போன போக்கில் அடித்து விட வேண்டியது தான்

      அப்பறம் அன்னை இந்திரா காந்தியின் வழக்கில் 5 பேர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததாம் … அதுவும் சட்டப் படியில்லையாம் … என்ன ஒரு உளறல் பாருங்கள் … அதாவது அந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் 11 ஆகஸ்ட் 1975 அன்று துவங்கவிருந்த நிலையில் , 10 ஆகஸ்ட் 1975 அன்று நமது அரசியல் சாசனத்தின் 39 சட்ட திருத்தம் பாராளமன்றத்தில் தீர்மானமாக நிறைவேறியது . அதுவே சட்டமும் ஆனது , அதனடிப்படையில் நீதிமன்றம் தீர்ப்பை வழங்கவேண்டிய நிலை .

      அதாவது திருத்தப் பட்ட சட்டத்தின் படி அன்னை இந்திராகாந்தி மீதான குற்றச்சாட்டு சட்டப் படி குற்றமாகாது . அதற்கு மிகத் தெளிவாக 5 நீதிபதிகளும் ஏற்றுக் கொண்ட விஷயமாக முன் வைக்கப் பட்டது தீர்ப்பில் குறிப்பிடப் பட்ட இந்த வரிகள் தான்

      ” The power of the legislature to validate matters which have been found by judgements or orders of competent courts or tribunals to be invalid or illegal is a well laid pattern .. the effect of validation is to change the law so as to alter the basis of any judgement , which might have been given on the basis of the old law and thus make the judgement ineffective . A formal declaration that the judgement rendered under the old Act is not necessary . If the matter is pending in appeal ,the appellate court has to give effect to the altered law , and reverse the judgement .The rendering of a judgement ineffective by legislative enactment is not an encroachment on judicial power but a legislation within the competence of the legislature rendering the basis of the judgement non est ….”

      இதில் ஒரு நீதியரசர் எச் ஆர் கண்ணா தீர்ப்பில் உடன்படவில்லை என்று வேறு சொல்கிறார் அந்தக் கட்டுரையில் …..
      தீர்ப்பின் சில விஷயங்களில் மற்ற 4 நீதியரசர்களும் தலைமை நீதியரசரின் சில கூற்றுகளில் உடன்படவில்லை என்றாலும் , தீர்ப்பின் சாராம்சம் என்று கருதப் படும் OPERATIVE PORTION மேலே குறிப்பிட்டது தான் அதில் அனைவரும் உடன்பட்டனர் .

      All the 4 judges were together with the chief justice in ensuring one result : as the legislature had declared what was illegal to be legal and to have been always lawful , the illegalities of which Mrs.Gandhi had been found guilty were illegal and no longer and had never been illegal

      இதை எல்லாம் தமிழாக்கம்செய்ய வேண்டிய அவசியமில்லை என்றே கருதுகிறேன் , எப்படியும் உங்கள் உளறல்களுக்கு எல்லாம் சூப்பர்ஜி என்று சொல்ல ஒரு கும்பல் இருக்கத் தான் செய்யும் அவைகளுக்கு உணர்த்துவது என் வேலையில்லை என்றாலும் , இங்கே விஷயமரியாதவர்கள் இருப்பதாக நினைத்துக் கொண்டு திரியக் கூடாது என்பதற்காகத் தான் இதை நான் பதிவு செய்கிறேன்

      கொஞ்சம் சட்டம் ,கொஞ்சம் உளவுத் தகவல் , கொஞ்சம் நீங்களாக அடித்து விடுவது என்று ஒரு கலவையை வைத்து சிறை செல்லும் சீமாட்டி …. எதிர்த்த வீட்டு வைப்பாட்டின்னு எழுத்திட்டு இருந்தா , அந்த குறிப்பிட்ட ஜால்ரா கும்பல் வேணும்னா கொண்டாடும்…. மற்றப் படி ஆகப் போவது எதுவுமில்லை
      ————————– கிஷோர் ஸ்வாமி அவர்களின் முகநூல் பதிப்பிலிருந்து.

      அரசு, அரசியல், சட்டம், நீதி, மக்கள் மன்றம், மக்கள், வேட்பாளர், வாக்காளர், அரசாங்கம் பற்றியெல்லாம் தனிமனித விருப்புவெறுப்பு இல்லாமல் பார்ப்பதற்கு ஓட்டுப்போடும் நாமெல்லாம் கற்றுக்கொள்ளவேண்டும் என்று எண்ணுகிறேன். அப்பொழுது தான் உண்மையான ஜனநாயகம் மலரும்.

     • today.and.me சொல்கிறார்:

      நண்பர்களுக்கு,
      சவுக்குவில் ஜெவைப் பற்றி எழுதியதைக் குறிப்பிட்டு இங்கே சிலர் விவாதித்திருக்கிறீர்கள். எனவே அதைப்பற்றி ஒரு விமரிசனத்தை இங்கே குறிப்பிட்டால் சரியாக இருக்கும் எனக் கருதுகிறேன். அனுமதிப்பதும், நிராகரிப்பதும் கா.மைஜியின் கையில்.
      ———-
      சவுக்கு தன் எல்லையை மீறி சென்றுக்கொண்டிருக்கிறது.அதிமுகவினர் இவ்வளவு நாள் பொறுமை காத்துக்கொண்டிருந்தார்கள்.இனி அவ்வாறு இருப்பார்கள் என்று எண்ணவேண்டாம்.திமுகவுக்கு காவடி தூக்கும் சங்கருக்கு, நீதிபதிகளை விமர்சிக்கும் தகுதி உண்டா ?

      இதில் திரு. ராமானுஜம் அவர்கள் எங்கிருந்து வந்தார் ? ஷீலா பாலகிருஷ்ணன் இந்த வழக்கில் எதிர் சாட்சி சொன்னவர்.அவர் உதவிடுவார் என்று கூறினால் யாராவது நம்புவார்களா ? நீதிபதி குமாரசாமி 9 மனைகள் வாங்கினார் என்று கூறும் சங்கர், அதற்கான ஆதாரங்களை வைத்துள்ளாரா ? வைத்திருந்தால் அதை வெளியிடலாமே ?

      முதலில் நீதிபதி குமாரசாமி தீர்ப்பு எழுதியதில் பிழை என்றார்.பின் நீதிபதி தீர்ப்பில் ஏகப்பட்ட பிழை என்றார்.இப்போது நீதிபதி தீர்ப்பே எழுவில்லை என்கிறார்.மக்களை பார்த்தால் பைத்தியக்காரர்கள் போல தெரிகிறதா ?
      ———— ஹரிஸ் முகநூல் பதிவில்.

     • today.and.me சொல்கிறார்:

      இவ்வளவுதான் சவுக்கின் அதைச் சுழற்றுபவர்களின் தரம்:
      —————
      அது எப்படிப்பா ,ஒரு நீதிபதியை பற்றி தீர்ப்பு வரும் வரை புகழ்ந்துட்டு தீர்ப்பு வந்த உடனே அவரையே அசிங்கமா திட்ட முடியுது… கழுதை சாட்டை அலப்பரைகள் …
      https://scontent-nrt1-1.xx.fbcdn.net/hphotos-xtf1/v/t1.0-9/11407204_10204513194258237_1733368355923053479_n.jpg?oh=e3412df037008db8f1f1e734f1d64a15&oe=55EC9305
      ————– Courtesy : Kishore swamy

  • சைதை அஜீஸ் சொல்கிறார்:

   மிஸ்டர் சிவா, டோண்ட் வர்றீ!
   இப்படித்தான் ஒரு ஆண்டுக்கு முன் மோடியையும் தூக்கி தலையில் வைத்துக்கொண்டார்கள். இப்போது….
   //இன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா ?//

   எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்
   மெய்ப்பொருள் காண்ப தறிவு

   //தமிழகத்திற்குள் இந்தியாவிற்குள் இந்தியப் பணம் முதலீடு செய்யப்படுவதற்கு அடானியோ, அம்பானியோ வரவேற்பை அளிக்கவேண்டும்// இதுதான் தமிழகத்திற்கும் கேரளத்திற்கும் உள்ள வித்தியாசம் டுடேஅண்ட்மீ நண்பரே!

   //மந்திரி கமிஷன் பெற்றது உண்மையென்றால் அம்மா எப்பேற்பட்ட மந்திரியானாலும் எந்திரி என்பார்// அப்படியா டுடேஅண்ட்மீ?
   பாலில் ஊழல் நடந்ததே அது என்ன ஆச்சு? அது போக சென்னை மாநகர தந்தை சிறிது நாட்களாக அடக்கி வாசிப்பதன் இரகசியம் என்ன?

   //எதிரிக்கட்சி உதிரிக்கட்சிகளெல்லாம் ஒன்றாகச் சேர்ந்து ஒரு வழக்கு போட// ஒரு வழக்கு போட்டதற்கே 18 ஆண்டுகளுக்கு பின் ஒரு “அபத்தமான” தீர்ப்பு வந்துள்ளது. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு என்பது உங்களுக்கு தெரியாத டுடேஅண்ட்மீ?

   //உங்கள் அம்மாவை பற்றி எவனாவது இப்படி ஆதாரம் இல்லாமல் எதாவது சொன்னால் உடனே நம்பி விடுவீர்களா ?// அம்மா ஹெலிகாப்டரில் போனாலே இங்கே தரையில் விழுந்து கும்பிடுபவர்களையும் மிஞ்சிவிட்டீர்கள் திரு எஸ். இளங்கோவன் அவர்களே!

   //எந்த செய்தியையும் விமரிசன கண்ணோட்டத்தோடு அலசி ஆராயும் இந்த வலைத்தளத்தோடு.// வெல் ஸெட் திரு எஸ். இளங்கோவன் அவர்களே!

   //நாங்கள் மதிக்கும் ஒரு வலைத்தளத்தை கிண்டல் செய்வதை
   பொறுத்துக் கொள்ள முடியாது// இதை காமை சார்கூட சொல்லமாட்டாரே சார், நீங்க ஏன் இவ்வளவு உணர்ச்சிவசப்படுகிறீர்கள்.

   • எஸ்.இளங்கோ சொல்கிறார்:

    அய்யா அஜீசு,

    //இப்படித்தான் ஒரு ஆண்டுக்கு முன் மோடியையும் தூக்கி
    தலையில் வைத்துக்கொண்டார்கள்//

    “தப்பு”ந்னு தெரிஞ்சதும், அதே ஆளை இப்போ
    துவைக்கிறோமா இல்லையா ?
    ஒங்க மாதிரி கலைஞருக்கு வால் பிடிக்கிறோமா ?
    இல்ல தளபதிக்கு சாமரம் வீசுரோமா ?

    //பாலில் ஊழல் நடந்ததே அது என்ன ஆச்சு?//

    ஊழல் செஞ்சவன் உள்ளே போனானா இல்லையா ?

    //நல்ல மாட்டுக்கு ஒரு சூடு என்பது உங்களுக்கு
    தெரியாத டுடேஅண்ட்மீ?//

    ஒங்க தலிவரு வீட்டுல ஏகப்பட்ட மாட்டுக்கு
    சூடு போட்டும் ஒங்களுக்கு இன்னும் வெளங்கல்லையே ?

    //உங்கள் அம்மாவை பற்றி எவனாவது இப்படி ஆதாரம்
    இல்லாமல் எதாவது சொன்னால் உடனே நம்பி விடுவீர்களா ?//

    ஏன் நழுவறீங்க அஜீசு; ஒங்க அம்மாவை பத்தி
    எவனாவது ஆதாரம் இல்லாம எதாவது பேசினா
    நீங்க நம்புவீங்களா ? படிச்சுவங்க தானே ?
    ஆதாரம் கேக்க மாட்டீங்களா ?

    //இதை காமை சார்கூட சொல்லமாட்டாரே சார், நீங்க ஏன்
    இவ்வளவு உணர்ச்சிவசப்படுகிறீர்கள்.//

    காவிரிமைந்தன் சார் சொல்ல மாட்டாரே
    பொறுமையா பாத்துக்கிட்டே இருப்பாரே; அதனால தான்
    நாங்க உணர்ச்சிவசப்படறோம்.

    ஏன் ஒங்களுக்கு காவிரிமைந்தன் சாரை பிடிக்காதா ?
    மத்தவங்க அவரை குறை சொன்னா நீங்க மட்டும்
    பொருத்துக்குவீங்களா ?

    இந்த வலைப்பக்கம்வரும்போது கொஞ்சம் பந்தபாசம்
    எல்லாத்தியும் விட்டூட்டு வாங்க சார் அஜீசு.

    • சைதை அஜீஸ் சொல்கிறார்:

     //இந்த வலைப்பக்கம்வரும்போது கொஞ்சம் பந்தபாசம் எல்லாத்தியும் விட்டூட்டு வாங்க சார்// இதை உங்களுக்கே மீண்டும் ஞாபகப்படுத்துகிறேன் திரு எஸ் இளங்கோவன்

     //ஒங்க தலிவரு வீட்டுல ஏகப்பட்ட மாட்டுக்கு சூடு போட்டும் ஒங்களுக்கு இன்னும் வெளங்கல்லையே ?// சூடு போடப்பட்ட மாட்டுக்கே வெளங்காத போது எனக்கு எப்படிங்க வெளங்கும்?
     ஆனாலும் உங்களுக்கு வெளங்கிடுச்சே! அதுவே போதும்.

     • today.and.me சொல்கிறார்:

      //சூடு போடப்பட்ட மாட்டுக்கே வெளங்காத போது எனக்கு எப்படிங்க வெளங்கும்?//
      அடிக்கடி சூடுபோட்டு காய்ச்சுப் போய்டும். அப்புறம் அதுவே பழகிடும். அப்புறம் எப்டிங்க விளங்கும்.

   • siva சொல்கிறார்:

    ஜி ஜனாப் சைதை அஜீஸ், தாங்களுக்கு வந்துள்ளது நல்ல கேள்விதான். அடாத பொருளீட்டும் அடானியின் பணத்தில் வாழும் அளவுக்கா தமிழகத்தின் நிலை போய்விட்டது?

    • today.and.me சொல்கிறார்:

     பரவாயில்லையே, ஜி, ஜனாப் ஆகிவிட்டாரா?

     அது அடானியின் பணமில்லை, மக்கள் பணம். மக்கள் வாயிலிருந்து பிடுங்கிய பணம். ஏழை எளியவர்களின் கேஸ்மானியத்திலும், சில்லரைவரியிலும் அரசு வாழும்போது, மக்கள் வரிப்பணம், இந்தியப் பணம் ஆஸ்திரேலியாவுக்கும், ஜெர்மனிக்கும், சீனாவுக்கும் மங்கோலியாவுக்கும் இதர நாடுகளுக்கும் போவதற்கு முன், இந்தியாவிற்குள் முதலீடு செய்ப்படுவதில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை.

   • today.and.me சொல்கிறார்:

    //ஒரு வழக்கு போட்டதற்கே 18 ஆண்டுகளுக்கு பின் ஒரு “அபத்தமான” தீர்ப்பு வந்துள்ளது. // 18 ஆண்டுகள் என்பது சட்டத்தாலும் நீதிமன்றினாலும் அனுமதிக்கப்பட்ட ஒன்றுதான் என்பதை ஜீரணிக்க இயலாத உங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். இதே காலவிரயத்தை (சொத்துக்காக இல்லை, இதே காலம் என்கிற ஒரு காரணியைக்கொண்ட வழக்கில்) ப.சி. மன்றஉறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக தொடுக்கப்பட்ட வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறதே. இந்த காலவிரயம் என்பது சட்டத்தால் அனுமதிக்கப்பட்டதுதான் என்பது ஏன் உங்களுக்குப் புரியவில்லை. அல்லது புரியாததுபோலவா?

    //“அபத்தமான” தீர்ப்பு // வழக்கே அபத்தம் என்பதாகத்தான் நீதிபதி கூறியிருக்கிறார். தீர்ப்பு அபத்தம் என்று நீங்கள் கருதினால் மேல்முறையீட்டுக்கு உங்கள்தரப்பில் இன்னும் ஒரு 18 ஆண்டுகள் நீங்கள் இழுக்கலாமே. அது முடியாது அல்லது போனாலும் வழக்குநிற்காது என்பதால்தானேயே இன்னும் அடக்கிவாசிக்கிறீர்கள். 🙂

    //பாலில் ஊழல் நடந்ததே அது என்ன ஆச்சு? அது போக சென்னை மாநகர தந்தை சிறிது நாட்களாக அடக்கி வாசிப்பதன் இரகசியம் என்ன?// தெரிந்தால் ஆதாரத்துடன் விளக்குங்களேன்.

    //இதை காமை சார்கூட சொல்லமாட்டாரே சார், நீங்க ஏன் இவ்வளவு உணர்ச்சிவசப்படுகிறீர்கள்.// விமரிசனத்தைப்பற்றி இளங்கோவன் பாராட்டினால் நீங்கள் ஏன் அஜீஸ் ஐயா இவ்வளவு உணர்ச்சிவசப்படுகிறீர்கள். அவர் என்ன உங்களையா பாராட்டிவிட்டார்?

 4. ADMK Jalra சொல்கிறார்:

  this is ADMK Jalra page

  • today.and.me சொல்கிறார்:

   பரவாயில்லையே.. ஒரு ஜால்ராவே ஜால்ரா அடிக்கிறதே,
   மூணு புள்ளி, ஒரு ஆச்சரியக்குறி.

   🙂 🙂

 5. Madhavan சொல்கிறார்:

  nice and interersting three .

  Point 1 Fantastic view:

  today.and.me சொல்கிறார்:
  4:28 முப இல் ஜூன் 9, 2015
  பரவாயில்லையே, …………

  அது அடானியின் பணமில்லை, மக்கள் பணம். மக்கள் வாயிலிருந்து பிடுங்கிய பணம். ஏழை எளியவர்களின் கேஸ்மானியத்திலும், சில்லரைவரியிலும் அரசு வாழும்போது, மக்கள் வரிப்பணம், இந்தியப் பணம் ஆஸ்திரேலியாவுக்கும், ஜெர்மனிக்கும், சீனாவுக்கும் மங்கோலியாவுக்கும் இதர நாடுகளுக்கும் போவதற்கு முன், இந்தியாவிற்குள் முதலீடு செய்ப்படுவதில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை.

  this view is correct, need to change the attitude
  will be more beneficial to Tamilnadu for Industrial and small scale industries development
  and job/business opportunities. source of investment may be checked through proper channels and RTI, but investment to be ourself.

  “Thanakku minjina pin Dhaanam”
  not like
  “1st wife and children don’t have food, Man went Kashi to pray god for children to 2nd wife”

  Point 2 this may be true also.

  Point 3 From yesterday discussion:

  If there is project good for the wealth of their state

  கேரள சகோதரர்கள் நம்மை விட புத்திசாலிகள் –
  எவ்வளவு தான் தத்துவம் பேசினாலும், இறுதியில் –
  அடானியோ, அம்பானியோ – திட்டம் தங்களை விட்டு
  நழுவிப்போக விட மாட்டார்கள் … அதுவும் தமிழகத்திற்கு
  என்றால் நிச்சயம் விட மாட்டார்கள்….!!!

  This attitude to be developed for our state development.
  this is my own view/perception, some may agree some may not..

  thanks !

 6. today.and.me சொல்கிறார்:

  சவுக்கு-வால் வெளியிடப்பட்டடுள்ள ஒரு ட்விட்டரில் TAG செய்யப்பட்டுள்ள நபர்களைக் கவனிக்கவும்.
  ——————————
  சவுக்கு சங்கர் நடுநிலையான ஆளுன்னு ஏற்கனவே தெரியும்.எந்த அளவுக்கு நடுநிலைன்னு இதை பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

  ஒளியத்தெரியாத களவாணி தலையாரி வீட்டுக்குள்ள ஓடி ஒளிந்தான்னு ஊர் பக்கம் பழமொழி சொல்லுவாங்க.

  Tag செய்யப்பட்டிருக்கும் ஆட்களை பாருங்க

  https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-xft1/v/t1.0-9/11407097_987265507972743_6168769801753614378_n.jpg?oh=721d82983a2d1b47c783dabf7ef2dfda&oe=55FFCBF7&__gda__=1441174653_0882191a3de0dd2d152d215420a23b22

  ———————– courtesy: Nambikairaj.FB

  • today.and.me சொல்கிறார்:

   சவுக்கால் எந்த ஆதாரமும் இல்லாமல் எழுதப்பட்ட இந்த கதையை கருணாநிதி, ராமதாஸ் அப்படியே திருப்பி சொல்லுவாங்க. அப்புறம் கீபெல்ஸ் தியரிப்படி தொடர்ந்து சொல்லப்பட்ட பொய் உண்மையா மாறும்
   __________ courtesy: Nambikairaj. FB

 7. sundar சொல்கிறார்:

  its too late, but hope it will help:
  கர்நாடகத்தின் அப்போதைய லோகாயுக்தா நீதிபதி சந்தோஷ் ஹெக்டே ரூ.16,000 கோடி சுரங்க ஊழல் முறைகேடுகளை வெளிக்கொண்டுவந்தார் (சுவாரஸ்யமான ஒரு விஷயம், அந்த அறிக்கையில் இன்றைய பிரதமருக்கு நெருக்கமான அதானியின் குழுமமும் சிக்கியிருந்தது. சட்ட விரோதமான இரும்புத் தாதுவை பெலகரே துறைமுகத்தின் வழியே கையாள அனுமதி கேட்டு லஞ்சம் கொடுத்ததாக அதானி என்டர்பிரைசஸ் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. கூடவே, அந்நிறுவனத்தைத் தடைப் பட்டியலில் சேர்க்குமாறும் கூறியிருந்தது அறிக்கை). கிட்டத்தட்ட 18 மாதங்கள் சந்தோஷ் ஹெக்டேவின் அறிக்கை மீது பாஜக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காத சூழலில் அவர் பதவி விலகும் முடிவை எடுத்தார்.

  From:
  http://tamil.thehindu.com/opinion/columns/நம்புங்கள்-ஊழலுக்கு-எதிரான-அரசு-இது/article7332344.ece?homepage=true

  From: tamil.hindu.com website dated 19-July-2015

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.