இன்றைய ” துக்ளக்” – அட்டைப்பட கலைஞர் கார்ட்டூன் …..

.

இன்று வெளியாகியுள்ள “துக்ளக்” வார இதழின்
அட்டைப்பட கார்ட்டூன், நண்பர்கள் காண – கீழே தந்துள்ளேன் –

thuglaq-1

இது ஆ.ராசா கொசுறு கார்ட்டூன் –

thuglaq-2

பின்குறிப்பு –

கலைஞரின் பேரன் அருள்நிதியின் திருமணத்திற்கு
விருந்தினர்கள் வந்தது குறித்த செய்தி – வீட்டில் அமர்ந்துகொண்டு
தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தேன்.

நண்பர் ஒருவரும் என்னுடன் இருந்தார். தாலி கட்டும் நிகழ்ச்சி
வந்ததும் எனக்கு – திருவாளர் கி.வீரமணி அவர்களின்
நினைவு வந்தது.( அவர் அண்மையில் தானே தாலியை கழற்றும்
போராட்டம் நடத்தினார் ) கூட இருந்த நண்பரிடம் எங்கே
வீரமணி அய்யாவை காணோம் என்றேன்.

அதற்கு நண்பர் அடித்த ஜோக்.

” முகூர்த்தத்திற்கு வந்தால், தாலி கட்ட விட மாட்டார் என்பதால், கலைஞர் அவரை முதல் நாள் வரவேற்பின்போதே வந்து விட்டு போகச் சொல்லி விட்டார் ”

– இது நிஜமாகவே கூட இருக்கலாம்….தாலியை எதிர்க்கும்
வீரமணி அவர்களின் கண் முன்னாலேயே தாலி அணிவிக்கும்
நிகழ்ச்சி நடந்தால் எப்படி இருக்கும் ?

( ஊருக்குத்தானே உபதேசம் – திராவிட இயக்கத்தின்
தூண்களுக்கும், முன்னோடிகளுக்கும் அல்லவே ..!)

பின்னர் உறுதிசெய்துக்கொள்ள மெனக்கெட்டு வரவேற்பு
நிகழ்ச்சி வீடியோவைத் தேடிப் பார்த்தேன்…. உண்மை தான்….!!!
வீரமணி அய்யா அப்போதே வந்து சென்றிருந்தார்…

arulnithi marriage -k.veeramani

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

10 Responses to இன்றைய ” துக்ளக்” – அட்டைப்பட கலைஞர் கார்ட்டூன் …..

 1. கோபாலன் சொல்கிறார்:

  இந்து என்றால் திருடன் என்று அவர் எங்கோ படித்தாராம்.

  கருணாநிதி என்றால் மக்களின் கருணையால் குடும்பத்திற்கு நிதி சேர்ப்பவர் என்று எங்கோ நானும் படித்தேன். ஒவ்வொரு இளைஞனும் இப்படி ஆனால் கட்சியின் கதி ??

  கோபாலன்

  • salem guru சொல்கிறார்:

   முதலில் நாட்டை பற்றி கவலைப்படுங்கள். இப்போதும் கட்சியை பற்றித்தான் கவலைபடுகிறீர்கள். அதனால்தான் கருணாநிதி போன்ற ஆட்களால் இப்படி பேச முடிகிறது.

   சேலம் குரு

 2. கில்லர்ஜி சொல்கிறார்:

  நல்ல காமெடியாகத்தான் இருக்கு ஐயா.

 3. Pingback: இன்றைய ” துக்ளக்” – அட்டைப்பட கலைஞர் கார்ட்டூன் ….. | Classic Tamil

 4. today.and.me சொல்கிறார்:

  அவர் மக்கு ஸ்டூடன்ட்னு அவர் படிக்கும்போதே தெரியுமே!
  🙂

 5. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  ஒரு கருணாநிதிக்கே தமிழகம் பாடாய்படுகிறது.
  இதுலே ஒவ்வொருத்தனும் கருணநிதி என்பதை நினைக்கவே குலை நடுங்குகிறது.

  • salem guru சொல்கிறார்:

   ஒவ்வொருவரும் கருணாநிதியானால்? அப்பப்பா நினைத்துப்பார்க்கவே பயமாக இருக்கிறது. ஊழலை தமிழ்நாட்டுக்கு அறிமுகபடுத்தியவர், தன குடும்ப நபர்களுக்காக யாரையும் தூக்கி எறிய தயங்காதவர், சர்க்காரியா கமிஷனால் விஞ்ஞானபூர்வமாக ஊழல் புரிபவர் என்று வர்ணிக்கப்பட்டவர், அந்த சர்க்காரியா கமிஷனில் இருந்து விடுபடவேண்டும் என்பதற்காக இந்திராகாந்தியின் வேண்டுகோள்படி காவேரி 1974இல் புதுப்பிக்கப்பட வேண்டிய ஒப்பந்தத்தை கிடப்பில் போட்டவர், வாய்சொல்லில் வீரர், ஹிந்தி போராட்டத்துக்காக எத்தனையோ முறை தன் உயிரை விட்டவர், “கொள்ளை”க்காக “கொள்கை”யை விட்டவர், நேற்று ஒன்று இன்று ஒன்று என்று சொல்லிக்கொண்டிருப்பவர், தனது கட்சி ஆளின் நெற்றி குங்குமத்தை அழித்துவிட்டு தான் மட்டும் மஞ்சள் துண்டு அணிபவர், சொல்லிக்கொண்டே போகலாம்.
   ஆனால் ஒன்று ஒவ்வொருவரும் கருணாநிதியாகி விட்டால், ஏமாற்றுவதற்கு ஆள் இருப்பார்களே ஒழிய ஏமாற (கருணாநிதியை யாராவது ஏமாற்ற முடியுமா?)யாரும் இருக்கமாட்டார்கள் அல்லவா? அதுவரை நல்லதுதானே.

 6. drkgp சொல்கிறார்:

  Dear KMji,
  Views similar to yours had been expressed way back in the 1960s by
  Kannadasn in his famous book, Vanavasam. Therein he says that
  Dravidian leaders of that time would express hopelessness about
  their cardinal policies in private as soon as they got down from
  the stage after delivering a firebrand speech for the audience.
  With regards

 7. கரிகாலன் சொல்கிறார்:

  வயது போனாலும் தலைவருக்கு நாற்காலி மேல் இன்னும் காதல் தான்

 8. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  திராவிட இயக்கக் (எல்லா திராவிட இயக்கங்களும், வீரமணி கழகம் உள்பட) கொள்கைகள் எல்லாம் அடுத்தவருக்கே. தாங்கள் பின்பற்றுவதற்கல்ல. இதற்கு ஏராளமான உதாரணம் எல்லோருக்கும் தெரியும். ஸ்டாலினுக்குத் தெரியாத ஏராளமான பிடிகளைக் கருணானிதி தன்னுள் வைத்துக்கொண்டிருப்பார். அவருக்குத் தெரியாதா எல்லா வித்தைகளையும் கற்றுக்கொடுத்துவிட்டால் தன் நிலை என்ன வாகும் என்று. (அப்பாவி எம்.ஏ.எம்.ராமசாமி வயதான காலத்தில் அழுவதைப் பார்க்கும்போது, படிப்பு இல்லாத கருணானிதி, எப்படி இத்தனை வித்தைகளைக் கற்றுக்கொண்டார் என்பது ஆச்சர்யத்துக்கு உரியது. அவர் பிறவி அரசியல்வாதி)

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.