ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, கடைசியில் மோடிஜியையும் ………றார் சு.சுவாமி….!!!

.

மத்திய நிதியமைச்சர் பதவி தான் முதல் கனவு….
வேறு வழி இல்லையென்றால் உள்துறை அமைச்சர்
பதவி கூட ஓகே தான்….!

பாஜகவில் சேர்ந்து –
விஸ்வ இந்து பரிஷத்தில் உள்ள,
தீவிர இந்துத்வா ஆசாமிகளை தன் வசப்படுத்தி தனக்கென
ஒரு கோஷ்டியை சேர்த்துக் கொள்வது…..
.

மோடிஜிக்கு அழுத்தம் கொடுத்து எப்படியாவது
நிதி அல்லது உள்துறை அமைச்சர் பதவியைப் பெறுவது –

தனது கட்சியை பாஜக வுடன் இணைக்கும்போது –
இது தான் சு.சுவாமியின் திட்டமாக இருந்தது….

கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக எல்லா விதத்திலும்
முயற்சிகளை மேற்கொண்டு பார்த்து விட்டார்….

ஆர்.எஸ்.எஸ். மற்றும் விஹெபி யில் இருந்து ஆட்களை பிடித்து
தனக்கென ஒரு கோஷ்டியை சேர்த்து, விராட் ஹிந்துஸ்தான்
சங்கத்தையும் உருவாக்கி விட்டார்.

ஆனால் எவ்வளவு முயற்சி செய்தும் அருண் ஜெட்லி – மோடிஜி
நட்பை அவரால் உடைக்க முடியவில்லை.
ராஜ்நாத் சிங்கையும் அசைக்கக்கூட முடியவில்லை….
இருவரையும் மட்டம் தட்டி பல மட்டங்களில் பேசி விட்டார்…
எழுதி விட்டார்….உம்ஹூம் ….

அருண் ஜெட்லியை பல வழிகளில் மட்டம் தட்டி,
ராஜ்நாத் சிங்குடன் முட்டி மோதிப்பார்த்து –
ஒன்றும் நடக்காமல் போய் – கடைசியில் இப்போது
மோடிஜியையே முட்டிப் பார்க்கத் துணிந்து விட்டார்….!!!

“ஹிந்து” ஆங்கில இதழ் முழுக்க முழுக்க பாஜக விற்கு
எதிரானது. அதனுடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டு –
தன் கட்டுரைகள் குறிப்பிட்ட இடைவெளிகளில் அதில்
வெளிவர ஏற்பாடு செய்து கொண்டு விட்டார்.
( காரியம் ஆக வேண்டுமென்றால் – கழுதையானாலும்
காலைப்பிடிக்கத் தயாராக இருப்பவர் தானே…!!! )
அண்மைக்காலங்களில் – இப்போது வந்திருப்பது 3வது கட்டுரை…

நேற்று முன் தினம் ஜூன் 8-ந்தேதியிட்ட “ஹிந்து” ஆங்கில
நாளிதழில், நடுப்பக்கத்தில் சு.சுவாமியின் ஒரு கட்டுரை.
முழுக்க முழுக்க – மோடிஜி அரசின் கையாலாகாத தன்மையை
வெளிப்படுத்தும் விதமாக…வெளிவந்திருக்கிறது.

இதில் – பாராளுமன்ற தேர்தலின்போது, பொதுக்கூட்டங்களில்
மோடிஜி பேசியதை நினைவுபடுத்துகிறார் சு.சுவாமி….

1.5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பணம் வெளிநாடுகளில்
பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும், தான் ஆட்சிக்கு வந்தால்,
அந்தப்பணம் அத்தனையும், அப்படியே இந்தியாவிற்கு கொண்டு
வரப்பட்டு நாட்டுடைமை ஆக்கப்படும். அந்த பணத்திலிருந்து
இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் வங்கிக்கணக்கிலும்
15 லட்சம் ரூபாய் போடப்படும் என்றும் மோடிஜி பேசியதாக
ஊடகங்களில் வெளிவந்ததை நினைவுபடுத்துகிறார்….!!!

( 1.5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் என்றால் எவ்வளவு …?

A million is equal to a thousand thousands
(1,000 x 1,000).
A billion is equal to a thousand millions
(1,000 x 1,000,000).
A trillion is equal to a thousand billions
(1,000 x 1,000,000,000)

ஒரு அமெரிக்க டாலர் = 60 ரூபாய் என்று வைத்துக் கொண்டால் –
1.5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் = எவ்வளவு ரூபாய் …?
நீங்களே கூட்டி, கழித்து பார்த்துக் கொள்ளுங்கள்…. எனக்கு பணத்தாசை இல்லை ….!!! )

மோடிஜி எங்கே, எந்த கூட்டத்தில் பேசினார் என்பது தனக்கு
தெரியாவிட்டாலும், இன்று இந்த நாட்டு மக்கள் இது இன்னமும்
நடக்காததற்கு பாஜக அரசையே குற்றம் சாட்டுகிறார்கள்
என்று எழுதுகிறார் சு.சுவாமி.

ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் ஆகியும் இன்னமும்
வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை
வெளிக்கொண்டு வர மோடிஜி அரசால் உருப்படியாக எதையும்
சாதிக்க முடியவில்லை – என்பதை மீண்டும் மீண்டும்
சுட்டிக் காடுவது தான் main theme….!

அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட
கறுப்புப்பணம் சம்பந்தமான சட்டம் கூட
( Black Money Bill of 2015) எதற்கும் உதவாத ஒரு
உதவாக்கரை சட்டம் என்று அழுத்தந்திருத்தமாக
கமெண்ட்ஸ் வேறு….

அந்த கட்டுரைக்காக போடப்பட்டிருக்கும் கார்ட்டூனை கீழே
தந்திருக்கிறேன் –
( இதைவிட மோடிஜியின் கையாலாகாதத்தனம் என்றே கட்டுரைக்கு தலைப்பிட்டிருக்கலாம் சு.சுவாமி …)

hindu cartoon -sswamy article

ஆக மொத்தம், சு.சுவாமியின் – காத்திருத்தலுக்கான
காலகட்டம் முடிந்து விட்டதாகத் தோன்றுகிறது.

சு.சுவாமியை என்ன லாபம் கருதி மோடிஜி பாஜகவில்
சேர்த்துக் கொண்டாரோ, அந்த காரியம் நிறைவேறியதா
இல்லையா என்பதெல்லாம் – நமக்குத் தெரியாது.

ஆனால் வெகு விரைவில் – சு.சுவாமியை தங்களுடன்
சேர்த்துக் கொண்டதன் விளைவுகளை மோடிஜி அரசு சந்திக்க
வேண்டியிருக்கும் என்பது மட்டும் தெரிகிறது…!!!

( link -http://www.thehindu.com/opinion/op-ed/black-money-pinning-the-shadow-down-subramanian-swamy/article7291973.ece )

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, கடைசியில் மோடிஜியையும் ………றார் சு.சுவாமி….!!!

 1. கில்லர்ஜி சொல்கிறார்:

  நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் வங்கிக்கணக்கிலும்
  15 லட்சம் ரூபாயா ? எனக்குமா ? கிடைக்கும்னு உறுதியாக சொன்னால் இப்பவே கடன் வாங்கிகிருவேன்….

  • today.and.me சொல்கிறார்:

   கில்லர்ஜி, தேர்தலுக்குமுன் அப்படிச்சொல்லித்தான் ஓட்டுக்கேட்டார்கள். நீங்கள் அதைக் கேள்விப்படவே இல்லையா?
   🙂

 2. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  சு.சுவாமி எப்போதுமே காலைச் சுற்றியிருக்கும் பாம்பு. அவர் நம்பிக்கைக்கு உரியவர் அல்லர். தன் சொந்த நலத்தையே பார்க்கும் தன்மை உடையவர். பாம்புக்குத் தன்னை வளர்த்தவர், தன்னோடிருப்பவர், தன்னைத் தள்ளியிருப்பவர் என்று ஒரு வித்தியாசமும் கிடையாது. ஜெ.வழக்கைப் பற்றி அவ்வப்போது இவர் சொல்லுவதும் யாரையாவது மிரட்ட என்றே தோன்றுகிறது. (மோடி தன்னுடைய ஸ்டேண்டை மென்மையாக்கிக்கொள்ளச் சொல்லவில்லை என்பது போன்று வெளிப்படையாக இவர் பேசிவிடுவார்).

  சு.சுவாமியை நம்பிய யாரையும் நட்டாற்றில் விட்ட கதை அவருடையது.

 3. Siva சொல்கிறார்:

  I do not agree many things with Susa, but I completely agree with him in this matter. If modi cannot bring illegal money to India, why did he shout louder during election time?

 4. Pingback: ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, கடைசியில் மோடிஜியையும் ………றார் சு.சுவாமி….!!! | Classic Tamil

 5. vignaani சொல்கிறார்:

  For an earlier post on Su.Sa., I had quoted Sanjay Baru/PVNarasimhaRao/Arjun Singh: “Better to have him in the tent and his directing his piss outside rather than leaving him out and he would piss into the tent”. Ka.Mai had said this fits Su.Sa very well.

  May be for Su.Sa., we have to add: “Better to have him in the tent…… Of course, he (is unpredictable and) may soil the seat while being inside the tent too”.

 6. today.and.me சொல்கிறார்:

  காமைஜி,
  // மோடிஜி அரசின் கையாலாகாத தன்மையை வெளிப்படுத்தும் விதமாக…வெளிவந்திருக்கிறது.// ‘

  இன்னும் எதிலெல்லாம கையாலாகாத்தன்மை என்று பாருங்கள்.
  ————-
  https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-xaf1/v/t1.0-9/10425893_10204508910431144_5880968485118565450_n.jpg?oh=cb3a01c7d5d526335832d72f686c428f&oe=55FD360E&__gda__=1442520762_f37e9bd80386b55b1a87e741b4d932bb

  2013 ல நடந்த சம்பவத்தின் புகைப் படங்களை எடுத்து பர்மாவில் சமீபத்தில் இந்திய ராணுவத்தின் நடவடிக்கைன்னு மத்திய அரசாங்கத்தின் ஊடகமே வெளியிட்டிருக்கிறது.

  ————- நன்றி: கிஷோர்ஸ்வாமி.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.