மியன்மரில் அதிரடி – கமாண்டோக்களுக்கு பாராட்டுக்கள் … மோடிஜிக்கு….? தம்மாத்துண்டு….!!!

india-northeast-zone-map

செவ்வாயன்று ( ஜூன்,9 ) விடியற்காலைகாலையில்
இந்திய ராணுவத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட கமாண்டோக்கள்
அடங்கிய குழு ஒன்று –

விடியற்காலை 3 மணிக்கு, இந்திய எல்லையைக் கடந்து,
அதிரடியாக மியன்மர் ( முன்னாள் பர்மா ) எல்லைக்குள் புகுந்து
அங்கே முகாமிட்டிருந்த இரண்டு தீவிரவாத
குழுக்களின் மீது தாக்குதலை நடத்தி – சுமார் 100 தீவிரவாதிகளை
அழித்து விட்டு, எந்தவித சேதமுமின்றி திரும்பியது.

கமாண்டோக்களை ஏற்றிச்சென்று, பர்மிய காடுகளில் இறக்கி விட
இந்தியப்படையின் M-17 ரக ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டன.

மிகவும் ரகசியமாக நிகழ்த்தப்பெற்ற இந்த அதிரடி தாக்குதல்
குறித்த தகவல்கள் எல்லாம் செவ்வாய் மதியத்திற்கு மேல் தான்
இந்திய அரசால் வெளியிடப்பட்டன.

இந்திய ராணுவ தலைமைக்கும், கமாண்டோக்களுக்கும்
நமது உளம் நிறைந்த பாராட்டுகள்….!!!

அரசியல் தலைமைக்கு – மோடிஜிக்கு …?
தம்மாத்துண்டு பாராட்டுகள்…!!!
ஏன் ….? பின்னால் வருகிறேன் விளக்கமாக …!

இந்த தாக்குதல் பற்றி மேற்கோண்டு நாம் பேசும் முன்னர் –
இந்த விஷயத்தின் பின்னணி குறித்து கொஞ்சம் தெரிந்து
கொள்வது நல்லது.

east-india-map

நமக்கு வெகுதூரத்தில் இருப்பதாலும்,
நாம் பார்க்கும் அன்றாட செய்தி ஊடகங்களில் –
வடகிழக்கு மாநிலங்கள் குறித்த செய்திகள் எதுவும்
வருவதில்லை என்பதாலும்,

நம்முடைய அன்றாட வாழ்வை அங்கு நடப்பவை எதுவும்
பாதிப்பதில்லை என்பதாலும் –

வடகிழக்கு மாநிலங்களின் சரித்திர, அரசியல் பின்னணிகள்,
அங்கு நிகழும் சம்பவங்கள் ஆகியவை
குறித்தெல்லாம் இங்கு தமிழ்நாட்டில் பெரும்பாலும்
யாருக்கும் தெரிவதில்லை.

இந்த சம்பவத்தைப் பற்றி பேசும்போதாவது –
வடகிழக்கு மாநிலங்களின் பின்னணியை லேசாகச் சொல்வது
நமது வலைத்தள வாசகர்ளும் ஓரளவு இது குறித்த
அனுபவங்களை புரிந்து கொள்ள உதவும் என்று
எனக்கு தோன்றியதால் –

லேசாக அதன் பின்னணி –

இந்திய-மியன்மர் எல்லையில் நிகழ்ந்த
இந்த அதிரடியில் – அடி வாங்கியது –

National Socialist Council of Nagaland-Khaplang
(NSCN-K) என்றழைக்கப்படும் வடகிழக்கு மாநிலங்களில்,
குறிப்பாக நாகாலாந்து, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில்
கே.கே.கப்லாங்க் என்பவரின் தலைமையில் தீவிரமாக
செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு பிரிவினவாத இயக்கத்தின்
இரண்டு குழுக்கள்.

(NSCN-K) தலைவர் கே.கே.கப்லாங்கின் புகைப்படம் –
ss kaplang photo

kaplang

இந்த பிரிவினைவாத இயக்கத்தின் முக்கிய குறிக்கோள் –
” சுதந்திர கிறிஸ்தவ நாகாலாந்து”
(முதல் முறையாக – ஒரு கிறிஸ்தவ தீவிரவாத
இயக்கத்தைப்பற்றி கேள்விப்படுகிறீர்களோ ….!!!)

நாகாலாந்து மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை –
19,80,602 (வெறும் பத்தொன்பது லட்சம் மட்டுமே…!)
ஆட்சிமொழி – ஆங்கிலம்
கல்வியறிவு – 80.11 %
மதம்- 90.02 % கிறிஸ்தவர்கள்,
7.7 % இந்துக்கள், 1.8 % இஸ்லாமியர்கள்

மணிப்பூர் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை –
25,70,390 (வெறும் 25 லட்சம்)
ஆட்சி மொழி – மீதிய்லான், (திபெத்-பர்மிய கலப்பு மொழி )
கல்வியறிவு – 68.87%
மதம் – இந்துக்கள் -46.01%, கிறிஸ்தவர் – 34.04%,
இஸ்லாமியர் -8.81%

( தொடர்கிறது -பகுதி -2-ல் )

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to மியன்மரில் அதிரடி – கமாண்டோக்களுக்கு பாராட்டுக்கள் … மோடிஜிக்கு….? தம்மாத்துண்டு….!!!

 1. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  //” சுதந்திர கிறிஸ்தவ நாகாலாந்து” (முதல் முறையாக – ஒரு கிறிஸ்தவ தீவிரவாத
  இயக்கத்தை…//
  திபெத்தியர்களுக்கு தனி நாடு அந்தஸ்தை கொடுத்து தலாய்லாமாவை இந்தியாவில் பாதுகாப்பாக வைப்போம்
  தமிழர்கள் சுதந்திரம் கேட்டால்… “போராளிகள்”
  நாகாலாந்து கிறிஸ்தவர்கள் கேட்டால் … “கிறிஸ்தவ தீவிரிவாத இயக்கம்”

  வாழ்க நம் மனோபாவம்

 2. எஸ்.இளங்கோ சொல்கிறார்:

  திரு சைதை அஜீஸ்,

  நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் ?
  அது உங்களுக்கு மட்டும் புரிந்தால் போதுமா ?
  எழுதுவதை விளங்கும்படி எழுதுங்களேன்.
  “சுதந்திர கிறிஸ்தவ நாகாலாந்து” வேண்டும் என்று
  கேட்பது அந்த இயக்கத்தினர் தானே தவிர.
  இந்திய அரசு பயன்படுத்தும் வார்த்தை அல்லவே.

 3. Pingback: மியன்மரில் அதிரடி – கமாண்டோக்களுக்கு பாராட்டுக்கள் … மோடிஜிக்கு….? தம்மாத்துண்டு….!!! | Classic Tamil

 4. Ramachandran . R. சொல்கிறார்:

  கே.எம்.சார்,

  எந்த விஷயத்தை எடுத்துக் கொண்டாலும், சிறப்பாக,
  முழுமையான தகவல்களோடு எழுதுகிறீர்கள்.
  பின்னணியை சட்டென்று புரிந்துகொள்ள இது
  மிகவும் உதவியாக இருக்கிறது. நேற்றிரவு ஆங்கில
  டிவிக்களில் கூட மியன்மர் விஷயம் தான் டாபிக்.
  நன்றி சார்.

 5. srinivasanmurugesan சொல்கிறார்:

  கிருஸ்துவ தீவிரவாதம்-புதிதாகத்தான் இருக்கிறது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.