மோடிஜிக்கு மட்டும் ஏன் தம்மாத்துண்டு பாராட்டு …? (மியன்மரில் அதிரடி – பகுதி-2 )

.

(நேற்றைய தொடர்ச்சி )
நீண்ட நாட்களாகத் தொடர்ந்து வரும் இந்த பிரிவினைவாத
இயக்கங்களின் செயல் குறித்து இப்போது ஏன் திடீர் பரபரப்பு ?

14 வருடங்களாக இந்திய அரசுடன் “சண்டை நிறுத்த ஒப்பந்தம்”
செய்திருந்த பிரிவினைவாத NSCN-K தலைவர் கப்ளாங்க், கடந்த
மார்ச் 27ந்தேதி ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டார்.

பல்வேறு குழுக்களாகப் பிரிந்திருந்த பிரிவினைவாத இயக்கங்களை
ஒருங்கிணைத்து UNLFW ( United National Liberation Front
of Western South East Asia ) என்கிற
ஒருங்கிணைப்பை உருவாக்கி, சீனாவிடமிருந்து ஆயுத உதவி பெற்று, இந்திய அரசுடன் போரிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவர்களிடையே இன்னும் ஒருமித்த கருத்தொற்றுமை ஏற்படாத நிலையிலேயே –

இந்த மாத துவக்கத்தில், ஜூன் 4- ந்தேதியன்று,
மணிபூரில், சாந்தல் மாவட்டத்தில் – பாதுகாப்புப் படையினர்
சென்று கொண்டிருந்த ராணுவ வாகனம் ஒன்று
திடீரென்று, பிரிவினைவாதிகள் குழுவால் கண்ணிவெடி மூலமும்,
கிரனேடு மூலமும் தாக்கப்பட்டு நிலைகுலைந்தது.

manipur-chandel

gorkas ambushed -chandel

அதில் பயணித்துக் கொண்டிருந்த – 6 டோக்ரா ரெஜிமெண்ட் பிரிவைச் சேர்ந்த 20 ராணுவத்தினர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர்.
மேலும் 11 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
கடுங்கோபம் அடைந்த ராணுவம் உடனடியாக
அவர்களுக்கு தகுந்த பாடம் கற்றுக்கொடுக்க முனைந்தது.

விளைவு – தேசிய பாதுகாப்பு ஆலோசகரும், ராணுவ தலைமை
தளபதியும் உடனடியாக மணிப்பூருக்கு விரைந்தனர்.
தீவிரவாத குழுக்களுக்கு தக்க பதிலடி கொடுப்பது குறித்து
பல்வேறு வியூகங்கள் வகுக்கப்பட்டன. அதன் விளைவு தான் –
கடந்த செவ்வாயன்று அதிகாலை 3 மணிக்கு மியன்மரில்
நடந்த அதிரடி தாக்குதல்.

இந்த தாக்குதல் முடிந்து படைவீரர்கள் தங்கள் இடம் திரும்பிய
பிறகு ராணுவத் தலைமை மிகுந்த கவனத்துடன் ஒரு
செய்தியறிக்கை வெளியிட்டது.

“இந்திய-மியன்மர் எல்லையில், இரண்டு இடங்களில்
(நாகாலாந்தின் எல்லையில் “நோக்லாக்” என்ற இடத்திலும்,
வடகிழக்கு மணிப்பூர் எல்லையில் “சஸ்ஸாத்” -திலும் )
முகாமிட்டிருந்த தீவிரவாத குழுக்களின் மீது இந்திய ராணுவ
கமாண்டோ படையால், தேவைக்கு தகுந்தாற்போல்,
அறுவை சிகித்சை மேற்கொள்ளப்பட்டு
(“surgical strikes” were carried out with the
“specific intelligence that these rebels were
planning more attacks” )
சுமார் 70 தீவிரவாதிகள் அழிக்கப்பட்டனர்.”

இந்தியாவைப் போன்றே – மியன்மரிலும் பல தீவிரவாத கும்பல்கள்
இயங்கி வருகின்றன. சீனாவின் மறைமுகமான ஆதரவோடு,
அவை இயங்கி வருவதால் அவற்றை ஒழிக்க மியன்மர் அரசு
எடுத்து வரும் முயற்சிகள் முழு பலனை அளிக்கவில்லை. இரண்டு
நாடுகளிலும் இயங்கி வரும் தீவிரவாத குழுக்கள் – அடிக்கடி
எல்லை தாண்டிச் சென்று வருவதால் –

இந்திய அரசும் -மியன்மர் அரசும் ஏற்கெனவே இத்தகைய
தீவிரவாத கும்பல்களை அழிப்பதில் ஒருவருக்கொருவர்
உறுதுணையாக இருப்பது என்று ஒப்பந்தம் செய்திருக்கின்றன.

இவ்வாறு மியன்மர் எல்லைக்குள் சென்று
இந்திய ராணுவம் நடவடிக்கைகளை மேற்கொள்வது
இப்போது நடப்பது தான் முதல் தடவை அல்ல. ஏற்கெனவே
மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோதும் நிகழ்ந்துள்ளன.
ஆனால், அவை விளம்பரப்படுத்தப்படவில்லை. காதும் காதும்
வைத்தாற்போல் கச்சிதமாக நடைபெற்று வந்தன.

எனவே, தான் இந்திய ராணுவம் கச்சிதமாக செய்திக்குறிப்பை
வெளியிட்டது. ராணுவம் மிக ஜாக்கிரதையாக, முன்யோசனையுடன்
சில தகவல்களை தவிர்த்திருந்தது. தாக்குதல் நடைபெற்றது
இந்திய எல்லைக்குள்ளா அல்லது மியன்மர் மண்ணிலா ?
மியன்மர் அரசின் முன் அனுமதி பெற்று நடந்ததா அல்லது
நடந்த பிறகு அதற்கு தெரிவிக்கப்பட்டதா ? – என்கிற
சமாசாரங்களை எல்லாம் அது செய்திக்குறிப்பில் தவிர்த்து விட்டது.

இதனால் தான் இந்திய ராணுவத்திற்கு, அதன் பக்குவத்திற்கு –
நமது உளம் நிறைந்த பாராட்டுக்கள்…!!!

ஆனால் – ராணுவம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,
மோடிஜி அரசின் வீர சாகசங்கள் பற்றி பெருமையாக எதுவும்
சொல்லப்படாததால், இந்த சம்பவத்தை சுயவிளம்பரத்திற்கு
பயன்படுத்திக் கொள்ள விரும்பிய பாஜக அரசு –

மத்திய இணையமைச்சர் ராஜ்யவர்தன்சிங் ரத்தோர், மூலம்
ராணுவ செய்திக் குறிப்பு வெளியான பின்னர் –
தனியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டது. மோடிஜியின் அரசியல்
தலைமை எடுத்த முடிவினால் தான் இத்தகைய சாதனை
நிகழ்ந்தது என்று விளம்பரம் தேட முயன்றது.

மத்திய இணையமைச்சர் ராஜ்யவர்தன்சிங் ரத்தோர் –
பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவின் பேரில் ராணுவம் இந்த
துணிச்சலான அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.

இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத செயல்களை, ஊக்குவிக்கும்
அண்டை நாடுகளுக்கு இது ஒரு எச்சரிக்கை. தீவிரவாதத்தை
ஊக்குவிக்கும் அண்டை நாடுகளிலும் இதுபோன்ற நடவடிக்கைகள்
தொடரும். தீவிரவாதிகள் எங்கிருந்தாலும் புகுந்து தாக்குவோம்’
என்று பெருமிதத்துடன் ( ! )எச்சரிக்கை விடுத்தார்.

அத்தோடு நிற்கவில்லை அமைச்சர்….
56 இன்ச் மார்பளவு கொண்ட மோடிஜியால் மட்டுமே
இத்தகைய வீரமான செயல்களில் ஈடுபட முடியும் என்று
ட்விட்டர் வேறு விட்டிருக்கிறார்…..

56 - twitter

தீவிரவாத குழுக்களை அழிக்க –
எல்லை தாண்டி, மியன்மர் மண்ணில் இந்திய ராணுவம்
அதிரடியாகப் புகுந்து செயல்படுவதை மியன்மர் அரசு
எதிர்க்கவில்லை என்றாலும், அதை வெளிப்படையாக
இந்திய அரசு விளம்பரப்படுத்துவது, தன் சுய கௌரவத்திற்கு
இழுக்கு ஏற்படுத்துவதாக மியன்மர் அரசு நினைக்கிறது.
எனவே, மியன்மர் மண்ணுக்குள் எந்த அந்நிய ராணுவமும்
நுழையவில்லை. இந்திய ராணுவம் தீவிரவாதிகள் மீது
தாக்குதல் நடத்தியது இந்திய மண்ணில் தான் என்று கூறி விட்டது.

எனவே, அடுத்த முறை உதவி கேட்டு செல்லும்போது,
இத்தகைய ஒத்துழைப்பிற்கு மியன்மர் சம்மதிக்குமா என்பது
கேள்விக்குறியே…!

மோடிஜி அரசு – தன் சாதனையை, அமெரிக்க ஒபாமா அரசு
பாகிஸ்தான் மண்ணில், ஒசாமா பின் லாடனை தாக்கிக் கொன்ற
சம்பவத்துடன் ஒப்பிட்டு பெருமை பேசவும்,
பாகிஸ்தானை பயமுறுத்தவும் நினைக்கிறது.

ஆனால் – முக்கியமான பல வேறுபாடுகள் இதில் இருக்கின்றன என்பதை நாம் மறந்து விட முடியாது.


-மியன்மர் நமது தோழமை நாடு. மியன்மர் அரசுடன் நமக்கு –
தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக சேர்ந்து ஒத்துழைக்க
எழுதப்பட்ட, அதிகாரபூர்வமான ஒப்பந்தம் இருக்கிறது.

– இதே போக்கில் நமது மிரட்டும் அண்டை நாடுகளான
பாகிஸ்தானிடமோ, சீனாவிடமோ – நாம் செயல்பட முடியுமா ?

– 193 பேர் சாவுக்குக் காரணமான மும்பை குண்டுவெடிப்பில்
சம்பந்தப்பட்டுள்ள தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் தான்
இருக்கிறான் என்று திரும்ப திரும்ப இந்திய அரசு சொல்லிக்
கொண்டே இருக்கிறது.
இதே பாணியில் – பாகிஸ்தானுக்குள் சென்று தாவூத் இப்ராஹிமை
பிடித்து வர முடியுமா ? இல்லை அழிக்க முடியுமா ?

-இந்திய குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு காரணமான –
இந்தியாவால், உலக அளவில் – தேடப்படும் குற்றவாளியான –
ஹபீஸ் சயீத் ( Hafiz Muhammad Saeed ) தினமும்
பாகிஸ்தான் தொலைக்காட்சிகளில் தரிசனம் கொடுத்துக்
கொண்டிருக்கிறான். அவனைப் பிடித்து இழுத்து வர முடியுமா ?

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பல தீவிரவாத குழுக்கள் முகாமிட்டு இருக்கின்றன – ஆயுதப் பயிற்சி பெற்று இந்தியாவிற்குள் ஊடுருவ காத்திருக்கின்றன என்று இந்தியா பலமுறை சொல்லி இருக்கிறது.
இதே பாணியில் அதிரடியாக, ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் ( POK ) நுழைந்து அவர்கள் மீது தாக்குதல் நடத்த முடியுமா …?

நேற்று மத்திய அமைச்சர் அறிக்கை வெளியானவுடனேயே –
பாகிஸ்தான் அமைச்சர் நிசார் ஒரே வரியில் கூறி விட்டார் –
” பாகிஸ்தான் – மியன்மர் அல்ல….!!! “

————

வாய்ச்சொல்லில் வீரரடி …!!!
எனவே தான் “தம்மாத்துண்டு” பாராட்டுக்கள்…!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

16 Responses to மோடிஜிக்கு மட்டும் ஏன் தம்மாத்துண்டு பாராட்டு …? (மியன்மரில் அதிரடி – பகுதி-2 )

 1. today.and.me சொல்கிறார்:

  கா.மைஜி,
  நீங்கள் குறிப்பிட்டுள்ள இந்த நிகழ்ச்சிக்காக அடையாளம் மறைக்கப்பட்டவர்கள் என்ற போர்வையுடன் இந்திய மையஅரசால் வெளியிடப்பட்டுள்ள புகைப்படம், 2013ல் நடந்தது. இதற்கு அப்புறமும் தம்மாத்தூண்டு கூடக் கொடுக்க எனக்கு விருப்பமில்லை.
  —————————-
  2013 ல நடந்த சம்பவத்தின் புகைப் படங்களை எடுத்து பர்மாவில் சமீபத்தில் இந்திய ராணுவத்தின் நடவடிக்கைன்னு மத்திய அரசாங்கத்தின் ஊடகமே வெளியிடுது ….
  நன்றி: கிஷோர்ஸ்வாமி

  ____________________

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் டுடேஅண்ட்மீ,

   அந்த “தம்மாத்துண்டு”-ம்
   வாபஸ் பெற்றுக் கொள்ளப்படுகிறது …!!!!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

  • siva சொல்கிறார்:

   நண்பர் டுடேஅண்ட்மீ, என்ன இது புரட்டு செய்தி? ஒரு தவறான செய்தியையும் வெளியிடாத காமை ஐயாவையே ஏமாத்திவிட்டீர்களே?

   ANI news ஒரு தனியார் செய்தி அமைப்பு அதன் விரிவாக்கம்
   Asian News International (ANI)
   . அது பத்திரிக்கைகளுக்கு செய்திகளை காசுக்கு விற்கும் ராய்ட்டர்ஸ் போன்ற நிறுவனம். அது தவறாக இந்த போட்டோக்களை பத்திரிக்கைகளுக்கு கொடுத்துவிட்டது. மியான்மார் நடவடிக்கை குறித்தான படங்களை தான் வெளியிடவில்லை என ஏற்கனவே இந்திய அரசு அறிவித்துவிட்டது. இப்படித்தான் பல தவறான செய்திகள் இணையத்தில் ‘கிஷோர் கே’சாமி’களாலும் ‘டுடேஅண்ட்மீ’களாலும் பரப்பபடுகிறது. சில நாட்களுக்கு முன்பு தம்பியுடன் இருந்த மணப்பெண் புகைப்படத்தை – சிறுவயது பையனுடன் பெண்ணுக்கு திருமணம் என்று தலைப்பிட்டு பரப்பினார்கள் சில மனசாட்சியில்லா மனிதர்கள்.

   மற்றபடி இந்த நடவடிக்கையில் மோடிக்கு ஒரு பெருமையும் இல்லை எனும் காமை அவர்களின் கருத்து முற்றிலும் ஏற்படத்தகுந்ததுதான் – வேறு காரணங்களுக்காக!

   • today.and.me சொல்கிறார்:

    Dear siva,
    I think Reuters is an authorised news agency by the government. Initially, yes. They released the photos. But after some critics arised from Army and media in way of KMji described, படங்களை தான் வெளியிடவில்லை என ஏற்கனவே இந்திய அரசு அறிவித்துவிட்டது…….

    In this news the truth is scrutinized. This is not because of “Kishore K Swamy” / “today and me” , Truth is Truth. The “#56Inch” Never able to Rock, Even his own company.
    🙂

    • today.and.me சொல்கிறார்:

     //சிறுவயது பையனுடன் பெண்ணுக்கு திருமணம் என்று தலைப்பிட்டு பரப்பினார்கள் சில மனசாட்சியில்லா மனிதர்கள்.//
     Is that any connection to – this post / PM 56″ Modiji / Indian Army / MP RajvardhanSingh Radhore ?

     And I strongly condemn that you added me and kishore to spread the false propaganda of “//சிறுவயது பையனுடன் பெண்ணுக்கு திருமணம் என்று தலைப்பிட்டு பரப்பினார்கள் சில மனசாட்சியில்லா மனிதர்கள்.// ” Do you have any witness that I have spread the thing? provide here. I am open to discuss.

     • Sharron சொல்கிறார்:

      Don’t get upset. We know who you are? You are a precious gift for this site.Try to extend your help continuously for this site and also for Mr.KM.

     • siva சொல்கிறார்:

      //Is that any connection to – this post / PM 56″ Modiji / Indian Army / MP RajvardhanSingh Radhore ? //

      முடியல, அந்த மணப்பெண் செய்திக்கும் பதிவுக்கும் தொடர்பில்லை. ஆனால் அதற்கும் உங்களது பின்னூட்டத்திற்கும் உண்டு. இரண்டுமே தவறான செய்திகள் என்பதுதான்.

      //you have any witness that I have spread the thing? provide here. I am open to discuss.//
      ANI என்பது அரசு செய்தி நிறுவனமா என்ன? நீ அந்நிறுவனம் அரசு நிறுவனம் என்று தகவலை இங்கு பின்னூட்டமிட்டவர் நீங்கள்தான். அவ்வாறிருக்க யார் தவறான தகவலை பரப்புவதாக அர்த்தம்? கிசோர்சாமி சொன்ன தவறாக தகவலை விசாரிக்காமல் இங்கு கொடுத்துவிட்டேன் என சொல்லுங்கள் அதை ஒப்புக்கொள்ளுவேன்.

      மேலும் அந்த நிறுவனத்திற்கு அரசுதான் படங்களை கொடுத்தது என்பதற்கு ஆதாரங்களை தரவும். மற்றபடி இந்த தளத்தின் ஆதரித்து பல புல்லுறுவிகளை விரட்டி தாங்கள் ஆற்றிய பணியினை கண்டு மதிப்புமிகு Sharronயை போலவே வியக்கவே செய்கிறேன். தமிழ் கூறும் நல்லுலகில் சிறந்த கொபசெ தாங்கள்தான்! 🙂 (அம்மாவுக்கு அடுத்ததாகத்தான், அதிமுக கொபசெ வாக அம்மா கலக்கியதை நினைவுட்டுகிறீர்கள் )

      மற்றபடி தொடர்ந்து விவாதிப்பதில் அர்த்தமில்லை. படிப்பவர்கள் முடிவு செய்யட்டும். Peace!

 2. Thiruvengadam (@veluran) சொல்கிறார்:

  This is an example of last word of Comment by PC to NDTV : ” Well, good on intentions, short in delivery, very high and rhetoric”

 3. புது வசந்தம் சொல்கிறார்:

  வெளிநாடு போகாத போது விளம்பரம் வேண்டுமே !!!

 4. Pingback: மோடிஜிக்கு மட்டும் ஏன் தம்மாத்துண்டு பாராட்டு …? (மியன்மரில் அதிரடி – பகுதி-2 ) | Classic Tamil

 5. today.and.me சொல்கிறார்:

  நண்ப சிவா,

  நான் எழுதிய பின்னூட்டத்தில் நீங்கள் தவறு கண்டிருந்தால் என்ன செய்திருக்கவேண்டும்? அதைத் தவறு என்று சொல்லியிருக்கலாம். சான்றுகளோடு.

  அதைவிடுத்து பதிவுக்குச் சம்பந்தமில்லாத, நான் சொல்லாத (இங்கே மட்டுமல்ல-எங்கேயுமே) செய்தியை நான் பரப்புவதாக ஏன் வதந்தி கிளப்புகிறீர்கள். உங்களுக்கு மோடிஜிக்கும் கொஞ்சூண்டு (மாத்திரம்) புகழ்போக வேண்டும், காமைஜிக்கும் (அவர் ஏமாறிவிட்டதாக) லேசாகக் குட்டவேண்டும், மற்ற வாசகர்கள் மத்தியில் இந்த ‘டுடே அன் மீ’யை வதந்தியாளர் என்று பெயிண்ட் பண்ணவேண்டும் என்று தோன்றுகிறது, இல்லையா?? நான் அறிவாளி என்றுமே எங்குமே சொன்னதில்லை. விமரிசனத்தில் படிப்பதில் எனக்குத் தெரியாத பலவிசயங்களைத் தெரிந்துகொண்டிருக்கிறேன். ஆனால் பல அறிவாளிகளைத் ஒரே தட்டாகத் தட்டி அறிவிலித்தனமாக ஒரே பதிவில் ஒரே பின்னூட்டத்திலேயே ஒரே கல்லிலேயே இவ்வளவு மாங்காய்களை அடிக்க ஏன் யோசிக்கிறீர்கள்?

  சமூகப் பொறுப்பு கொஞ்சமும் இல்லாமல், யாரோ ஒரு பையனைப் பற்றியும் பெண்ணைப் பற்றியும் தவறாக செய்திபரப்புவது நான் அல்ல. நண்பரே,

  இந்தப் பதிவுக்குச் சற்றும் சம்பந்தமில்லாமல் அப்படிப்பட்ட ஒரு செய்தியை இங்கே பரப்பும் நீங்கள்தான் அந்த அடாத செயலைச்செய்கிறீர்கள்.

  பொய்ச் செய்தியைப் பரப்புவது மட்டுமல்ல, அப்படிப்பட்ட பொய்ச்செய்தியை நான் பரப்புவதாக ஆதாரமில்லாமல் என்மீது ‘வதந்தி கிளப்புவர்’ என்று வர்ணம் வதந்தி கிளப்புகிறீர்கள். எப்போதுமே ஆதாரம் இருந்தால்தான் என் கருத்தை வைப்பேன் என்று தெரிந்தும் இந்த வலைத்தள வாசகர்களிடையே என்னைப்பற்றி வர்ணம்பூச முயலுகிறீர்கள்.

  அது மட்டுமல்லாமல், பதிவர் ஏமாறுவதாக என்று அவரை வேறு குழப்பிவிடப் பார்க்கிறீர்கள்.

  மேலும் ‘பதிவர் சொன்னமுடிவுதான் தன்னதும்’ என்று ஒரு முகத்திரை வேறு.

  இவற்றில் இருந்தே தெளிவாகத் தெரிகிறது: “பொய்வதந்திகளைக் கிளப்புவதும், மற்றவர்கள் வதந்திகிளப்புவதாகக் குழப்புவதும் நீங்கள்தானென்று”. உங்களுக்கு தனிப்பட்ட விதத்தில் கிஷோர்மீதோ டுடே அன் மீ-மீதோ பகையோ வெறுப்போ இருந்தால் அதைக்காட்டும் இடம் விமரிசனம் இல்லை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

  பின்னூட்டம் இடும்போது கொஞ்சமாவது சமூகப் பொறுப்புணர்வோடு இடப் பாருங்கள்.
  ——————————–
  கா.மை.ஜி,
  பதிவுக்குச் சற்றும் சம்பந்தமில்லாத கருத்துகளை வதந்தியாகக் கூறியதோடு அதனை நான் செய்வதாகப் நண்பர் சிவா கூறியிருப்பதால் கொஞ்சம் விரிவாக என்தரப்பு வாதங்களை வைத்திருக்கிறேன். நண்பர் சிவாவின் பின்னூட்டத்தின் உள்நோக்கத்தையும், தரத்தையும் வலைத்தள வாசகர்கள் அறிந்துகொள்ள இந்த எனது மறுமொழியை அனுமதிக்கவேண்டுகிறேன்.
  ——————————–
  மற்ற அனைத்து வாசகர்களுக்கும்,
  இதுநாள்வரை பொதுவலைத் தளத்தில் மட்டுமல்ல, ஆதாரமில்லாத வதந்திகளோ-செய்திகளோ, பெண்கள்-குழந்தைகள்-பால்வேறுபாடின்றி தனிநபர்மீது தாக்குதல் போன்றவற்றை எப்போதுமே நான் அனுமதிப்பதில்லை. நானும் கிளப்பிவிடுவதில்லை. இதில் நான் உறுதியுடன்தான் இருக்கிறேன். நண்ப சிவா போன்றவர்கள் என்மீது அப்படிப்பட்ட வர்ணம் பூசும்போது அந்த அழுக்கைக் கழுவவேண்டிய கடமையும் எனக்கு இருப்பதாக உணர்ந்து இந்தப் பின்னூட்டத்தை இட்டிருக்கிறேன்.

  கட்சிகள்-ஆட்சிகள்-கட்சித்லைவர்கள்-ஆட்சித்தலைவர்கள்-செய்திகள் – அவற்றின் மீதான விமரிசனங்களை வைக்கும்போதும், படிக்கும்போதும் மீள்விவாதம் செய்யும்போதும் ஆறஅமர யோசித்துத்தான் உண்மைநிலையையைப் புரிந்துகொள்கிறோம்.

  அவ்வாறு யோசித்துவிடக்கூடாது என்பதற்காகவே, திசைதிருப்புவதற்காகப் பயன்படுத்தப்படும் இந்த வகையான பதிவுக்குச் சம்பந்தமில்லாத வதந்திகளை சிவா மட்டுமல்ல, வேறுயார் கிளப்பிவிட்டாலும் அதை வதந்தியாக மட்டுமே பார்க்கவேண்டுகிறேன். நன்றி நண்பர்களே.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர்கள் எல்லாருக்குமே,

   கடைசியாக நான் நண்பர் சிவாவின் பின்னூட்டத்திற்கு
   பதிலளிக்கும்போது –
   ( 09/065/2015 – அடானிக்கு மோடிஜியின்
   அடுத்த பரிசளிப்பு…! இப்போது பங்களா தேஷ் மின் உற்பத்தி
   ப்ராஜக்ட்…!!! )
   – கீழ்க்கண்டவாறு எழுதி இருந்தேன் –

   //வருந்துகிறேன் சிவா.. உங்களிடமிருந்து நான்
   இன்னும் பக்குவமான செயல்பாடுகளை
   எதிர்பார்த்தேன்….//

   -அவரிடமிருந்து இதற்கு பதிலோ, விளக்கமோ
   இதுவரை இல்லை. என்னுடைய கருத்தை அவர்
   கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. ஆனால்,
   தொடர்ந்து பின்னூட்டங்கள் மட்டும் எழுதிக்
   கொண்டிருக்கிறார்.

   நண்பர் டுடேஅண்ட்மீ அவர்கள் இந்த
   வலைத்தளத்திற்கு கிடைத்திருக்கும் ஒரு அருமையான
   பரிசு. அவரது தேடுதலும், புத்திசாலித்தனமும்,
   எதையும் சிறப்பாக விளக்கும் முறையும் –
   இந்த வலைத்தளத்திற்கு பெருமை சேர்க்கின்றன.
   அவரது கருத்துப் பங்களிப்புகளால், இந்த வலைத்தளமும்,
   இதன் வாசக நண்பர்களும் நிறைய பயன் பெறுகிறார்கள்.

   ஆதாரம் இல்லாமல் எழுதுகிறார் என்று அவரைப்பற்றி
   நண்பர் சிவா கூறுவதை நான் முற்றிலுமாக நிராகரிக்கிறேன்.
   உண்மையில், பெரும்பாலும் இந்த வலைத்தளத்தில்,
   எந்த செய்தியைக் கூறினாலும், தானாகவே முன்வந்து
   அதற்கான ஆதாரத்தையும் தரும் வழக்கத்தை
   அவர் மேற்கொண்டிருக்கிறார். இதை இந்த வலைத்தளத்திற்கு
   தொடர்ந்து வருகை தரும் நண்பர்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள்.

   பொதுவாக அரசியல் பற்றிப் பேசும்போது கருத்து வேறுபாடுகள்
   தோன்றுவது சகஜம். தங்களுக்கு பிடிக்காத கருத்துக்களை
   மற்றவர்கள் முன்வைக்கும்போது, பண்பான முறையில்
   அதை எதிர்ப்பது தான், எதிர்கொள்வது தான், சிறப்பு.

   நண்பர் சிவா அவர்களுக்கு மீண்டும் ஒரு முறை நான்
   முன்பு சொன்னதையே திரும்பச் சொல்ல வேண்டியிருக்கிறது.

   //வருந்துகிறேன் சிவா.. உங்களிடமிருந்து நான்
   இன்னும் பக்குவமான செயல்பாடுகளை
   எதிர்பார்த்தேன்….//

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • siva சொல்கிறார்:

    அடடா இதை கவனிக்கவில்லை. இனி எனது செயல்பாடுகளை மாற்றிக்கொள்ளுகிறேன். அட்வைஸுக்கு நன்றி திரு காமை மற்றும் டுடே அன் மீ!!!

  • சைதை அஜீஸ் சொல்கிறார்:

   நண்பர் டுடேஅண்ட்மீ அவர்களே
   “people will question all the good things they hear about you
   but believe all the bad without a second thought”
   என்பதை புரிந்துகொண்டால் போதும்!
   நம் பாதை சரியான பாதை… வாருங்கள் சேர்ந்து பயணிப்போம்.

 6. drkgp சொல்கிறார்:

  It is apt that Modiji can not be creditted anything for the trumpeting of state
  security matters, that too when a friendly neighbour is discreetly involved.

 7. LVISS சொல்கிறார்:

  In our country, like in USA and other democracies , the defence forces work under the direction of the civilian government unlike in Pakistan and many other countries -The truth is that without a go ahead signal from the PMO and PM this operation could not have taken place –The govt had the option not to go a counter attack and forget the attack on our forces but it chose to give the green signal for the counter offensive —Giving credit or not to the govt is not the issue here —

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.