அரசியல் பிழைத்தோர்க்கு …..!

.

ஒன்று வெளிநாட்டு விஜயங்களாக இருக்க வேண்டும் ….
அல்லது தேர்தல் பேரணிகளாக இருக்க வேண்டும் ….
அல்லது யாரும் குறுக்கிட்டு கேள்வி கேட்க முடியாத –
“மன் கீ பாத்” போன்ற வானொலி உரைகளாக இருக்க வேண்டும்…!

வேறு எங்கும் வாயைத்திறக்கவே மாட்டார்….
பதவியேற்ற கடந்த 13 மாதங்களில் எத்தனை முறை
கேள்விகளைச் சந்தித்திருக்கிறார்…?

பேசத்தெரியாதா என்ன ?
வாய் திறந்தாலே மடை திறந்த வெள்ளமாக பேச்சு வருமே…!
பின் – ஏன் பேசுவதே இல்லை …?

அலட்சியமா, அகம்பாவமா, இவர்களால் என்ன செய்ய முடியும்
என்கிற இறுமாப்பா …? இல்லை ஆட்டு மந்தைகளுடன்
பேச்சென்ன வேண்டி இருக்கிறது என்கிற அகந்தையா ?

பேச வேண்டியவர்கள் இருவர்….
ஒருவர் பிரச்சினையில் இருப்பவர் – வெளியுறவுத்துறை அமைச்சர்…
அடுத்தவர், அவரது boss ….இந்த நாட்டின் சர்வ அதிகாரங்களையும் தன்னிடத்தே அடக்கியுள்ள பிரதமர்….

ஆனால், இவர்கள் இருவரையும் தவிர,
பாஜக வில் உள்ள பியூன், வாட்ச்மேன்,டிரைவர்கள் உட்பட
அனைவரும் பேசி விட்டதாகத் தெரிகிறது.

அதான் ராஜ்நாத் சிங் அவர்களே கூறி விட்டாரே –
the entire party stands behind her like a solid rock -என்று.
(பேசாத இன்னொருவர் அருண் ஜெட்லி அவர்கள்- அவருக்கான
காரணம் முற்றிலும் வேறானது ..!! )

– தன் உறவினருக்கு லலித் மோடி மூலம் பிரிட்டஷ் கல்லூரியில்
இடம் பிடிக்க சிபாரிசு செய்யக் கேட்டது…

– தன் கணவருக்கும் லலித் மோடிக்குமான – 22 வருட
பணித் தொடர்புகள் – கடிதத்தொடர்புகள் ….

– தன் மகள் லலித் மோடியின் வக்கீல்கள் குழுவில் பணியாற்றுவது….

– லலித் மோடி இந்திய வருமான வரித்துறையினராலும்,
அமலாக்கப் பிரிவினராலும், விசாரணக்காக தேடப்படுவது,

– அவர் மீது நிலுவையில் உள்ள அந்நிய செலாவணி மோசடி குறித்த
விசாரணைகள் …..

– லலித் மோடிக்கு எதிராக blue corner notice விடுக்கப்பட்டுள்ள
உண்மை தெரிந்த நிலை ….

– முந்தைய அரசால், லலித் மோடியை பிரிட்டனிலிருந்து இந்தியாவிற்கு
நாடு கடத்த துவங்கப்பட்ட முயற்சிகள் ….

– அவரது பாஸ்போர்ட் முந்தியதாக முடக்கப்பட்ட விவகாரம் –

இத்தனையும் தெரிந்தும், லலித் மோடிக்கு பயண ஆவணங்கள் பெற வெளியுறவுத்துறை அமைச்சர் உதவுகிறார் என்றால் –

அது மனிதாபிமான அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை
என்று சப்பைக்கட்டு கட்டுவது, அவர்களாலேயே கூட நம்ப முடியாத விஷயம்.

மத்திய அரசில், எந்த அமைச்சரவையில் எடுக்கப்படும், எந்த முடிவும், தன் பார்வைக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்று கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருக்கும் மோடிஜிக்கு இதைப்பற்றி ஒன்றும் தெரியாது என்று சொல்வது –
அபத்தத்திலும் அபத்தம் – வடிகட்டிய அபத்தம்…!!!

இந்த விஷயம் எதிர்பாராத நேரத்தில்,
தங்களை தயார் செய்துகொள்ளாத நேரத்தில் -வெளி வந்து விட்டது. இப்போது மட்டும் அவசரப்பிரசவமாக –
இந்த விஷயம் வெளியில் வராமல் இருந்திருந்தால் –

விரைவிலேயே –

லலித் மோடி ஒன்றும் அறியாத அப்பாவி.
அவர் மீது காங்கிரஸ் அரசால் போலியாக வழக்குகள்
உருவாக்கப்பட்டன. அவர் மீது புனையப்பட்டிருக்கும்
போலி வழக்குகள்
அனைத்தும் வாபஸ் பெறப்படுகிறது.
மிகத் திறமையான தொழிலதிபர் ஒருவரை சொந்த
விரோதங்களுக்காக காங்கிரஸ் தலைமை
நாட்டை விட்டே விரட்டியது…

IPL திட்டத்தை உருவாக்கிய மகா மேதை.
இந்தியாவிற்கு கோடிக்கணக்கில் அந்நியச் செலாவணி கிடைக்க
காரணமாக இருந்தவர்…..

என்றெல்லாம் கூறப்பட்டு சிவப்பு கம்பள விரிப்போடு மீண்டும்
இந்திய மண்ணில் கால் பதித்திருப்பார்….
எதிர்பார்க்காத நேரத்தில் இந்த விஷயம் வெளியானது தான்
அவஸ்தையாகி விட்டது.

என்ன ….அருண் ஜெட்லி அவர்களை சமாளிக்க மட்டும்
கொஞ்சம் மெனக்கெட வேண்டியிருக்கும்…..
இருக்கட்டுமே – மஸ்தான் அறியாத வித்தையா … ?

——————
பின் குறிப்பு –

பதவிக்கு வந்து 13 மாதங்கள் ஆகியும், நித்தநித்தம்
செத்துப் பிழைக்கும் தமிழக ( அவர்கள் இந்திய .. அல்ல )
மீனவர்கள் மீது எந்தவித மனிதாபிமானத்தையும்
காட்டாத வெளியுறவுத்துறை அமைச்சர் –

பாசத்தையும், நேசத்தையும் கூட்டிப்பிசைந்து மனிதாபிமானத்தை
அப்படியே டன் டன்னாக அள்ளிக் கொட்டியிருக்கிறார் –
இந்த மனிதரின் மீது …!

அவர் சொல்லோணாத்துயரத்தில் ஆழ்ந்திருக்கும்
பரிதாப நிலையை கீழே பாருங்கள் …!!!

??????????????????????????????????????????????????????????

??????????????????????????????????????????????????????????

 

lalitmodi-hugs

வந்தே மாதரம் …
வாழ்க இந்திய ஜனநாயகம்…..!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

46 Responses to அரசியல் பிழைத்தோர்க்கு …..!

 1. மணிச்சிரல் சொல்கிறார்:

  கடைசி படம் சூப்பர்… நிறுத்தி நிதானமாக எடுத்திருக்காங்க….நடிகர்களுக்கு அரசியல் கதவு என்றும் திறந்தே இருக்கும்னு யாரோ சென்னது, இப்ப ஞாபகத்துக்கு வருது… ஏன் எதுக்குன்னு தெரியல….

 2. Sanmath AK சொல்கிறார்:

  Dear KM Sir,

  Few weeks back there was an announcement in cricket from media mogul Subaash Chandra, who runs the zeee channels. This person is very close to rss and also he was the brainchild of IPL. He introduced Indian Cricket League(ICL) under Kapil Dev. But he was not able to succeed as then BCCI under Sharad Pawar made their plans of starting their own version called IPL under Lalit Modi(it was all Lalit Modi’s ideas with which BBCI is earning a very good money from IPL). Later Lalit Modi was sent out after which Srinivasan and Pawar twisted hands. Connecting zeee’s present announcement and also BJP trying to help LaMo(as he is presently being called by media), something is cooking. May be LaMo and Subash may join hands as எதிரிக்கு எதிரி நண்பன்…………. as u said, of-course the issue had come up in an unexpected moment for BJP………

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் சன்மத்,

   ஆரம்ப காலத்தில் கபில்தேவ் பட்ட அவஸ்தை எல்லாம்
   எனக்கு லேசாக நினைவிருக்கிறது. அதில் சம்பந்தப்பட்ட
   மற்றவர்களையும், மற்ற சில விஷயங்களையும் என்னால்
   நினைவுபடுத்திக் கொள்ள முடியவில்லை.

   இப்போது விஷயம் – யாரும் எதிர்பார்க்காதபடி, அவசரப் பிரசவமாகி
   குறைப்பிரசவமும் ஆகி விட்டது.
   இப்போதைக்கு இந்த விஷயத்தை அமுக்கவே எல்லாரும் சேர்ந்து
   முயற்சி செய்வார்கள். ஆனால், லலித் மோடியை நம்ப முடியாது…
   எசகு பிசகாக எதையாவது செய்வார்….
   பொறுத்திருந்து பார்ப்போம்.,

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • today.and.me சொல்கிறார்:

    //இப்போதைக்கு இந்த விஷயத்தை அமுக்கவே எல்லாரும் சேர்ந்து
    முயற்சி செய்வார்கள். ஆனால், லலித் மோடியை நம்ப முடியாது…
    எசகு பிசகாக எதையாவது செய்வார்….//

    http://indiatoday.intoday.in/story/lalit-modi-to-rajdeep-sardesai-exclusive-interview/1/444980.html

    • today.and.me சொல்கிறார்:

     //இப்போதைக்கு இந்த விஷயத்தை அமுக்கவே எல்லாரும் சேர்ந்து
     முயற்சி செய்வார்கள். ஆனால், லலித் மோடியை நம்ப முடியாது…
     எசகு பிசகாக எதையாவது செய்வார்….//

     yes. anumaar vaall pola Tamilnattin muka, PC varai vanthirukkirathu. Innum engenge thee pidikkumo theriyavillai.

 3. Thiruvengadam (@veluran) சொல்கிறார்:

  I feel the photos are not to be posted to your Standard sir.

  • today.and.me சொல்கிறார்:

   இந்த புகைப்படங்கள் தகுதியாக இருக்குமா ஐயா?
   http://indianexpress.com/photos/picture-gallery-others/the-life-of-lalit-modi-in-12-instagram-filters/

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் திருவேங்கடம்,

   நீங்கள் சொல்வது உண்மை தான்.
   நான் கூட இதை விரும்பவில்லை தான்.

   ஆனால், சில கேவலமான மனிதர்களை வெளிப்படுத்தும்போது,
   அவர்களின் வக்கிரங்களும் கொஞ்சம் வெளியே தெரியத்தானே
   செய்கிறது…? என்ன செய்வது ?

   ஒரு உலகமறிந்த womaniser – ( இதை தமிழில் சொல்ல
   கஷ்டமாக இருக்கிறது.,..)
   அவன் தனது மனைவியின் ஆபரேஷனுக்காக
   போர்ச்சுக்கல் செல்ல வேண்டி இருக்கிறது என்று
   சொன்னானாம்… 25 ஆண்டுகளாக அவனை நன்கு தெரிந்த
   அமைச்சரும் அதை நம்பி மனிதாபிமான அடிப்படையில் அந்த கிரிமினலுக்கு உதவி செய்தாராம்.

   இவன் ஆவணங்களை பெற்றுக் கொண்டு -தினம் ஒரு நாடு –
   வரிசையாக ஸ்பெயின், பிரான்ஸ்,
   துபாய், சிசிலி, மாலத்தீவு, என்று டூர் அடித்து,
   கூத்தடித்து விட்டு வருவானாம்….

   இந்திய மக்களை வடிகட்டிய முட்டாள்கள் என்று
   நினைத்து தானே இவையெல்லாம் செய்யப்படுகின்றன.,..?

   இதையெல்லாம் பார்த்தும், நாம் சாமியார்கள் போல்
   உபதேசம் செய்ய வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்களா ..?

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 4. drkgp சொல்கிறார்:

  Mr veluran,
  This is to illustrate the living standard of the poor people who need
  humanitarian help from the BJP government.
  KMji, is the stock over? Some more left for tomorrow ?
  Good method to expose with minimum description !

  • Thiruvengadam (@veluran) சொல்கிறார்:

   I just posted which i felt. All have individual standard in expression on happenings. Ur reply is on utter dismay, due to failure in our expectation from the changed govt. Even if KM sir not responded , i will take ,he may note that for future. But Ur feedback may lead to think KM sir also on the path of Modi`s way of leaving others to reply. He is not a such person to evade. Let us not trouble him.

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    நண்பர் திருவேங்கடம்,

    அவசியப்படும்போது – நானும் நிச்சயம் விளக்கம் அளிப்பேன்.
    ஆனால், எல்லாவற்றிற்கும் முந்திக் கொண்டு நானே
    பதில் அளிப்பதை நான் விரும்பவில்லை. இங்கு நண்பர்கள்
    பலரும் கலந்து கொள்ளும் ஒரு விவாதம் நடைபெற வேண்டும்
    என்பது தான் என் விருப்பம். எனவே, நண்பர்கள் கலந்து கொள்ள
    space அளித்து, காத்திருக்கிறேன்…

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

 5. Pingback: அரசியல் பிழைத்தோர்க்கு …..! | Classic Tamil

 6. புது வசந்தம் சொல்கிறார்:

  ஐயா, உங்களின் முந்தைய பதிவின் தலைப்பே சிவசேனாவின் கேள்வியாக உள்ளது. என்ன செய்ய இவர்கள் எல்லோரும் தேச பற்றாளர்கள். உங்கள் பதிவில் மிக சிறந்த கேள்விகள் உள்ளன ? விரைவில், நீங்கள் எழுதிய பதிலே வெளி வரலாம் அல்லது “அது அவரது தனிப்பட்ட மனிதாபிமான செயல் இதற்கு கட்சி மற்றும் அரசு பொறுப்பாகாது” என்று.

 7. paamaran சொல்கிறார்:

  என்ன சார் ! எல்லோரும் என்னென்னமோ எழுதிக்கிட்டு இருக்கிங்க —- லலித்— { மோடி } என்பதின் பின்னால் உள்ள பெயருக்கு மரியாதை செலுத்தும் விதமாக — வெளியுறவுத்துறை அமைச்சர் நடந்துக்கொண்டார் என்று யாராவது கூறிவிட போகிறார்கள் !

 8. today.and.me சொல்கிறார்:

  கா.மைஜி,
  இவர்கள் அனுமதியில்லாமலா நடந்திருக்கூடும் என்று இன்னமும் நம்புகிறீர்கள்.

  http://www.outlookindia.com/printarticle.aspx?265097

  அதனால்தான் வாயில் கொழுக்கட்டை.

 9. Taru சொல்கிறார்:

  உஸ் ச்ச்ச்ச் ….. யப்பா ……. ஒன்னுமே இல்லாததுக்கு ஏன். இப்டி. ஓகே. ஓகே . அரசியல் பண்ணனுமே

 10. today.and.me சொல்கிறார்:

  ———-
  வழக்கு நிலுவையில் இருக்கும் போது வெளிநாடு செல்லக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. செப்டம்பர் மாதம் அவரது மனைவிக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்பதற்காக பிரிட்டன் அரசு விதிகளை காட்டி நோயாளியின் உறவினர் ஒருவர் வர வேண்டும் என்பதற்காக மனிதநேய அடிப்படையில் சுஷ்மா சுவராஜின் உதவியோடு பிரிட்டன் செல்கின்றார்.ஆகஸ்டு மாதம் அவருக்கு எதிராக வலுவான ஆதாரம் இல்லையென நீதிமன்றம் தெரிவிக்கின்றது. மனைவியின் அறுவை சிகிச்சைக்காக சென்றவர் பிரிட்டன் அழகிகளோடு உல்லாசமாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. மேலும் பிரிட்டன் சென்ற அவர் சுஷ்மாவின் கணவருக்கு நன்றி சொல்லி இன்னொருவருக்கு மெயில் செய்கின்றார்.

  இங்கே எழுப்பப்படும் கேள்விகள்:

  1. பிரிட்டனுக்கு வரும் 14-வயதுக்கு குறைவான நோயாளியுடன் ஒரு உறவினர் கட்டாயம் வர வேண்டும் என்ற சட்டம் இருக்கும் போது லலித்மோடியின் மனைவிக்காக லலி் மோடிக்கு ஏன் அணுமதி வழங்கினார்கள்?

  2. மனைவியின் அறுவை சிகிச்சைக்காக செல்லும் ஒருவருக்கு இரண்டு வருடங்கள் மற்றும் ஆறு மாதங்களுக்கான விசா வழங்கப்பட்டது ஏன்? அவ்வளவு நாட்கள் செய்யப்படும் அறுவை சிகிச்சையின் பெயர் என்ன?

  3. ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்காக ஊழலை காரணங்காட்டி ஆட்சிக்கு வந்த அரசின் ஓர் அமைச்சர் நேரடியாக பிரிட்டன் தூதருக்கு சிபாரிசு செய்தது ஏன்?

  4. தும்மினாலும் செல்ஃபி இரும்பினாலும் செய்தி என விளம்பர பித்து பித்து பிடித்து திரியும் பிதமர் அலுவலகம் இது சம்பந்தமாக இது வரை ஒரு வார்த்தையையும் சொல்லாதது ஏன்? டிவிட்டரில் கூட சொல்லப்படாதது ஏன்?

  5. மனிதாபிமான அடிப்படையில் ஒரு குற்றவாளிக்கு வெிநாு செல்வதற்க ஒரு அமைச்சரே உதவி செய்யலாம் என்றால் எந்தவித ஆதாரமும் இல்லாமல் கூட்டு மனசாட்சியின் படி தூக்குதண்டனை விதிக்கப்பட்டு தண்டனை நிறைவேற்றப்பட்ட அப்சல் குருவிற்காக அந்த மனிதாபிமானம் ஏன் வேலை செய்யவில்லை. அவர் முஸ்லிம் என்பதால் என்றால் சரி சாந்தன் முருகன் மற்றும் பேரறிவாளன் ஆகியவர்களுக்காக தமிழகம சிபாரிசு செய்கின்றதே அந்த மனிதாபிமானம் ஏன் வேலை செய்ய மாட்டேன் என்கின்றது?

  6. பா ஜ கவின் மனிதாபிமானம் சிறையில் விசாரனை கைதிகளாக பத்து பதினைந்து வருடங்களாக இருக்கும் ஏழைகளின் மீத வராதது ஏன்?

  ஏற்கனவே “டௌ கெமிக்ல்ஸ்” தலைவரை காங்கிரஸ் தப்ப விட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள்தான் இன்று லலித் மோடியை தப்ப விட்டுள்ளார்கள் என்பது உபரி தகவல்.

  ஆதாரங்களுக்கு: டைம்ஸ்நௌ தொலைகாட்சியின் 14 ஜுனிலிுந்து நடத்தப்பட்ட அனைத்து விவாதங்களும்.
  ——————— V M Shuaib in FB, RRPondey’s wall.

 11. தமிழன் சொல்கிறார்:

  பூனைக்குட்டி, புலிக்குட்டி, நாய்க்குட்டி என எல்லாக் குட்டிகளும் ஒவ்வொன்றாக வெளியே வருகின்றன;

  வரப் போகின்றன…

  https://twitter.com/LalitKModi

 12. today.and.me சொல்கிறார்:

  Tsunami BJP
  Benami Congress

  ———-
  http://www.dinamalar.com/news_detail.asp?id=1276652
  ———-

 13. பெரியார்=பித்தன் சொல்கிறார்:

  இது என்னுடைய சொந்த கருத்து அல்ல தினமனியின் இன்றைய தலையங்கம்…… பகுத்தறிவு உள்ளவர்கள் ஏற்றுக் கொள்ளவார்கள் இதை….
  “வெறும் வாய்; மெல்ல அவல்!”

  எந்தவித ஊழல் குற்றச்சாட்டோ, முறைகேடோ இல்லாமல் ஓராண்டு ஆட்சியை நடத்தி முடித்திருக்கும் நரேந்திர மோடி அரசின் மீது என்ன குற்றம் கண்டுபிடிக்கலாம், களங்கம் கற்பிக்கலாம் என்று தேடியலைந்து கொண்டிருந்த எதிர்க்கட்சிகளுக்கு வெறும் வாயை மெல்ல அவல் கிடைத்திருக்கிறது. ஒன்றுமில்லாத, எப்போதோ நடந்த ஒரு விவகாரம் இப்போது ஊதிப் பெரிதாக்கப்படுகிறது. பரபரப்பை ஏற்படுத்துவது மட்டுமே தங்களது தொழில் தர்மம் என்று செயல்பட்டுக் கொண்டிருக்கும் காட்சி ஊடகங்களும் அதற்குத் துணை போகின்றன……. மேலும் படிக்க http://www.dinamani.com/editorial/2015/06/17/வெறும்-வாய்-மெல்ல-அவல்/article2870641.ece

  அனைத்தையும் விமரிசிப்பவர்களே யோசியிங்கள்…..

  • today.and.me சொல்கிறார்:

   //பகுத்தறிவு உள்ளவர்கள் ஏற்றுக் கொள்ளவார்கள் இதை//
   இது உங்களுடைய சொந்த கருத்து தானே நண்பரே

   ————
   //காட்சி ஊடகங்களும்//
   என்ன காரணத்தினால் அச்சு ஊடகங்களை விட்டுவிட்டார் தினமணி.
   ———
   //லலித் மோடி ஒன்றும் யோக்கியமானவர் அல்லர். பல கோடி ரூபாய் புழங்கும் இடத்தில் முறைகேடுகள் இல்லாமல் எப்படி இருக்க முடியும்? //

   //பல்வேறு வழக்குகளில் விசாரிக்கப்பட வேண்டியவராக இருக்கிறார். இருந்தும் அவர் “தேடப்படும் குற்றவாளி”யாக அறிவிக்கப்படவில்லை.//

   //லலித் மோடியைத் தனது பதவிக் காலத்தில் கைது செய்யாத காங்கிரஸ் கட்சியும், அதன் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் நரேந்திர மோடி கருப்புப் பண முதலைக்கு உதவுகிறார் என்று சிறுபிள்ளைத்தனமாகப் பேசுவதுதான் வேடிக்கையாக இருக்கிறது.//

   //இதுபோன்ற நெருக்குதலை வாராவாரம் ஏற்படுத்த முற்பட்டு விடுவார்கள் என்பது பிரதமர் நரேந்திர மோடிக்குத் தெரியும். அதனால் செய்யமாட்டார். //

   அதானே. இப்படித்தானே “நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வை”யுமாக இருக்கவேண்டும்.
   ———

   //ஆனால், நரேந்திர மோடி செய்ய வேண்டியது ஒன்று இருக்கிறது. அது, லலித் மோடியைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவது!//

   தினமணிஆசிரியர் சொல்லியிருக்கும் இது உங்கள் கருத்து இல்லையா நண்பரே

   —————-
   பெரியார்=பித்தன் போன்ற 😦
   பகுத்தறிவுடன் விமரிசிப்பவர்களே யோசியிங்கள்…..

  • Sharron சொல்கிறார்:

   Did you read the comments given underneath that article?. Both BJP & Congress are doing the same thing. In no way BJP is better than Congress. This is the cry of every poor Indian.

  • srinivasanmurugesan சொல்கிறார்:

   இப்பொழது இது முதல் குற்றச்சாட்டு வெளி வந்துள்ளது. இன்னும் என்னென்ன குற்ற சாட்டுகள்/முறைகேடுகள் வெளிவருமோ…..

 14. Ezhil சொல்கிறார்:

  இந்தாங்கையா! இதுக்கும் நல்லெண்ணத்துடன் உதவுங்க பாக்கலாம்…

  http://tamil.oneindia.com/news/tamilnadu/suba-udayakumar-asked-sushma-swaraj-redeem-his-passport-with-228903.html

  • today.and.me சொல்கிறார்:

   செல்லாது.. செல்லாது ..
   மனைவிக்கு கேன்சர் இருந்தாத் தான் செல்லும்
   🙂 🙂
   நீ ரிஜெக்டட். ஆ. நெக் ஸ்ட் (கவுண்டமணி ஸ்டைலில் படிக்கவும்)

  • Sharron சொல்கிறார்:

   No, we can’t do that because he is not RICH.

 15. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  இது எல்லாம் நம் பார்வையின், எதிர்பார்ப்பின் கோளாறு. அரசியல் பிழைத்தோர்கள்தான் பெரும்பாலும் உள்ள தேசம் இது. நாம் காங்கிரஸ் போனதும் உடனே புத்தர் ஆட்சி செய்ய வந்துவிட்டார் என்று நினைக்கிறோம். நம்மிடம் இருப்பது இத்தகைய மனிதர்கள்தாம். என்ன செய்வது?

  கபில்தேவ் நல்லவர் என்று நான் நினைத்தேன். அவருடைய கான்செப்டை ஹைஜாக் செய்து லலித் மோடி, பி.சி.சி.ஐ மூலமாக ஐ.பி.எல் ஆரம்பித்தார். அதன்மூலம் எல்லோரும் கருப்பை வெள்ளையாக்கினார்கள். அதன் விளைவுதான் சென்னை டீமின் மதிப்பு 5 லட்சம் என்று வெட்கமில்லாமல் சொல்ல வைக்கிறது.

  எப்போது அரசியல்வாதிகளும் பகல் கொள்ளைக்காரர்களும் பி.சி.சி.ஐயில் நுழைந்தார்களோ அப்போதே மிக மோசமான நிலைக்கு கிரிக்கெட் வாரியம் சென்று விட்டது.

  நாம், இனிமேல், பாஜகாவையும் காங்கிரஸையும், நம் அதிமுக திமுக போல்தான் நினைக்கவேண்டும். இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். அவர்களுக்கும் வேறு வழியில்லை.

  இன்றைக்கு நல்லவர், வல்லவர் என்று புகழப்படும் அனைவரையும் தோற்கடித்தது நாம்தானே. இதில் இரண்டாம் முறை, ஜெயலலிதா கொண்டுவந்த நல்ல திட்டங்களும் அடங்கும்.

  • பெரியார்=பித்தன் சொல்கிறார்:

   அவர்கள் மட்டும் அல்ல நாமும் தான் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள், ஏன் என்றால் நம்மில் இருந்து தானே அரசியல் வாதிகள் உருவாகிறார்கள் ஆகையால் நாம் நம் சமூகம் இது தான் இன்றைய அரசியல்…. அவர்கள் நாட்டில் அரசியல் செய்கிறார்கள் நாம் நம் வீட்டிலும் வேலையிலும் செய்கிறோம். ஆகையால் நாமும் நம் சமூகமும் மாறாமல், நம்மில் இருந்து வந்தவர்களான அவர்களை மாற சொல்வது அல்லது அவர்கள் மாற வேண்டும் என்று நினைப்பது என்பது “சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்” என்ற பழமொழி போல தான்……

   • today.and.me சொல்கிறார்:

    //நாம் நம் வீட்டிலும் வேலையிலும் செய்கிறோம். //
    ஓஹோ. உங்கள் வீட்டில் எப்பவுமே இப்படித்தானா

    • பெரியார்=பித்தன் சொல்கிறார்:

     நான் அனைவரையும் சேர்த்தே சொல்லியிருக்கிறேன். நீங்கள் இல்லை என்று சொன்னால் நீங்களும் அரசியல்வாதிகள் போலவே ஒத்துக் கொள்ள மறுக்கிறீர்கள் என்று அர்த்தம்…..

    • பெரியார்=பித்தன் சொல்கிறார்:

     அப்பொழுது வேலையில் அவ்வாறு நடக்கிறது என்று ஒற்றுக்கொள்கிறீர்கள்……

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.