லலித் மோடி – பால-காண்டத்திலேயே, அமெரிக்காவில் போக்கிரி பட்டம் பெற்ற படலம்…..!!!.

Lalit Modi

ரெயில்வே ஸ்டேஷனில் டீ விற்ற அந்தச் சிறுவரைப்
பார்த்த யாராவது பிற்காலத்தில் உலகம் வியக்கும்
selfless salesman-ஆக அவர் உருவாகக்கூடும் என்று
நினைத்திருப்பார்களா …?

விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்கிற.
பழமொழி எல்லார் விஷயத்திலும் உண்மையாவதில்லை
என்றாலும்,

திருவாளர் லலித் மோடி அவர்கள் மட்டும் –
தான் வளர்ந்தால், எவ்வளவு பெரிய, உலகம் வியக்கும்
போக்கிரி ஆவார் என்பதை படிக்கும் பருவத்திலேயே தொட்டுக்
காண்பித்திருக்கிறார்.

பல அத்தியாயங்கள் எழுதக்கூடிய அளவிற்கு இந்த ஆசாமி
குறித்து விஷயங்கள் இருக்கின்றன. கொஞ்சம் சுவாரஸ்யமான,
வெளியில் அதிகம் கேள்விப்படாத, ஒரு விஷயத்தை
இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

லலித் மோடி, 1985-ல் ( இன்றிலிருந்து 30 வருடங்களுக்கு முன்பே )அமெரிக்காவில் Duke University-ல் ஒரு மாணவராக
படித்துக் கொண்டிருந்தபோது நிகழ்ந்த சம்பவம் இது.

1985-ஆம் ஆண்டு, அமெரிக்காவில் வட கரோலினா மாகாணத்தில்
( in the state of North Carolina ), நீதிமன்றத்தில்,
கொக்கேய்ன் போதைப்பொருள் வைத்திருந்ததாகவும், அடிதடி, ஆட்கடத்தலில் ஈடுபட்டதாகவும் நடந்த வழக்கு ஒன்றில் –
ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து – தன் மீது சாட்டப்பட்ட
குற்றங்களை ஒப்புக் கொண்டிருக்கிறார் நமது ஹீரோ..!

General Court of Justice, Durham County-யில்
லலித் மோடியின் மீது, ஆட்கடத்தல், அடிதடியில் ஈடுபட்டது,
400 கிராம் அளவிற்கு கொக்கேய்ன் போதைப்பொருள் வைத்திருந்தது ஆகிய குற்றங்கள் சாட்டப்பெற்றன.

அமெரிக்க சட்டங்களின்படி, குற்றம் சாட்டப்பட்டவர், தன் மீது
சுமத்தப்பெற்ற குற்றங்களை ஒப்புக்கொண்டு, மன்னிப்பு கோரினால்,
தண்டனைக் குறைப்பிற்கு வழி இருக்கிறது.

அந்த குற்ற வழக்கு குறித்த செய்திகள் ஏற்கெனவே – உள்ளூர்
செய்தித்தாள்களில் வெளியாகி விட்டன. அது மேற்கொண்டு
விரிவான அளவில் விளம்பரம் பெறாமல் தடுக்கவும்,
வழக்கு தொடர்ந்து நடந்தால் ஏற்படக்கூடிய தர்மசங்கடங்களையும்,
அதிகப்படியான செலவுகளையும் தவிர்க்கவும், தனது
கல்லூரிப் படிப்பைத் தொடர்வதில் ஏற்படக்கூடிய சிக்கல்களையும்
கருத்தில் கொண்டு – தான் குற்றங்களை ஒப்புக்கொள்வதாகவும்,
தனக்கு குறைந்த பட்ச தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்றும்
தனது வக்கீல்கள் மூலம் வாதாடி இருக்கிறார் லலித்ஜி.

Durham County Court – லலித் மோடியின் விண்ணப்பத்தை
ஏற்று, குற்றவாளி குற்றங்களை ஒப்புக்கொண்டு விட்டதால்,
மேற்கொண்டு விசாரணை தேவையில்லை என்று உத்திரவிட்டதோடு, இரண்டு வருட சிறைத்தண்டனையும், 10,000 அமெரிக்க டாலர் அபராதமும் விதித்தது.

தன் படிப்பைத் தொடர கருணை காட்டுமாறு லலித் மோடி
கேட்டுக்கொண்டதன் பேரில், நீதிமன்றம், தீர்ப்பை மேலும் லகுவாக்கி,

5 ஆண்டுகளுக்கான நன்னடத்தை விதிகளின் கீழும், 100 மணி
நேரங்களுக்கு சமூக சேவை செய்ய வேண்டும் என்கிற
கட்டுப்பாடுடனும் உத்திரவிட்டது. போதை மருந்தை
வைத்திருந்தது குறித்த குற்றத்திற்கான தண்டனையை
5 ஆண்டுக் காலத்திற்கு தள்ளி வைத்தது.
அதற்கு ஈடாக
50,000 டாலர் ரொக்க பத்திரமாக நீதிமன்றத்தில் ஒப்படைக்க
வேண்டுமென்றும் உத்திரவு. ( வட கரோலினாவில்
முதல் தடவையாக குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு
இத்தகைய சலுகைகள் கொடுப்பது வழக்கம் தானாம்…)

1986-ல் மோடி தனது படிப்பை Duke University-யில் முடித்த
பிறகு, மீண்டும் நீதிமன்றத்தை அணுகி –
தான் உடல்நலக்குறைவு காரணமாக மிகவும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும்
இந்தியா திரும்பினால், அவரது உடல்நிலை முன்னேற
வாய்ப்பு உண்டு என்று மருத்துவர்கள் அளித்த சான்றிதழ் ( !!! )
ஒன்றையும் இணைத்து,
மனு ஒன்றை அளித்து கருணை காட்ட வேண்டினார்.

அதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு, அவர் 1990-க்குள்ளாக –
200 மணி நேர அவகாசத்திற்கு சமூக சேவையில் ஈடுபட வேண்டும்
என்கிற நிபந்தனையோடு, அவரை இந்தியா திரும்ப அனுமதித்தது….!!!

கொக்கேய்ன் போதைப்பொருள் வைத்திருந்ததற்கான –
5 வருடங்களுக்கு ஒத்திப்போடப்பட்ட தண்டனை குறித்த விஷயம்
மீண்டும் -இன்று வரை – அந்த நீதிமன்றம் முன் வரவேயில்லை…..
( அமெரிக்காவிலேயே இப்படி ……!!!! )

இந்த விவகாரம் எப்படி வெளியே வந்தது ….?

எந்த அளவிற்கு நண்பர்கள் உண்டோ, அதற்கு சற்றும் குறையாமல் எதிரிகளும் உண்டு மோடிக்கு. 2007-ல் BCCI vice-president -ஆக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து போடப்பட்ட ஒரு வழக்கில்,
எதிராளி எங்கெல்லாமோ அலைந்து திரிந்து, இந்த விவரங்களை
எல்லாம் சேகரித்துக் கொண்டு வந்து, மும்பை நீதிமன்றத்தில்
வெளிப்படுத்தி விட்டார்…..!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

13 Responses to லலித் மோடி – பால-காண்டத்திலேயே, அமெரிக்காவில் போக்கிரி பட்டம் பெற்ற படலம்…..!!!.

 1. பெரியார்=பித்தன் சொல்கிறார்:

  இவ்வாறு பார்த்தால் இந்த நாட்டில் உள்ள அனைத்து மக்களும் வாழ தகுதி அற்றவர்கள் அல்லது ஏதாவது ஒரு வகையில் ஏமாற்றி வாழ்பவர்கள் தான்…… காரணம் நமக்கு நாம் செய்வது அனைத்தும் உத்தமம். அடுத்தவர்கள் செய்வது தவறு என்று தான் சொல்வோம்… அவர் selfless salesman என்றால் உங்களை போல் உண்மையாய் இருப்பவர்கள் தேர்தலில் நிக்கலாமே. உண்மையாய் இருப்பவர்கள் அரசியல் சாக்கடை என்று ஒதுங்கிவிடுவார்களாம்… ஆனால் விமரிசனம் மட்டும் செய்வார்களாம்…. அவர்கள் உண்மையானவர்கள் என்ற எண்ணத்தில்….

  • Madhavan சொல்கிறார்:

   ungal peyar “kaarana”peyaraa?

  • சைதை அஜீஸ் சொல்கிறார்:

   //…..உங்களை போல் உண்மையாய் இருப்பவர்கள் தேர்தலில் நிக்கலாமே….//
   பெரியார்=பித்தரே
   ஒரு டுபாகூரை பற்றிய உண்மைகளை கூறினால் “அது அப்படி இல்லை. இது இப்படி இப்படி” என்று கூறுவதை விட்டுவிட்டு உங்களைபோல…, உண்மையாய் இருப்பவர்கள்…, தேர்தலில்…என்று மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட முயல்வது…
   sorry boss, no good!

  • Siva சொல்கிறார்:

   Periyar pithan, I do not understand whether you think everyone including you is bad guy? Or human can do mistakes, but need to correct it?

   However, your wish for KM sir to contest the election at this age is less feasible. But we have the young people who can contest the election and fulfill ur wishes! So do not underestimate us or do not post useless comments to blindly support the modis.

   One last question for u. Periyar is pithan or you are pithan if periyar? Either way it will be good because periyar has changed the Tamil society, and you got the opportunity to change yourself!

   Good luck for spreading periyarism by silent way!

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பரே,

   அதென்ன பெரியார் = பித்தன் ???
   பெரியாரை பித்தன் என்று சொல்கிறீர்களா ?
   யோசித்துப் பாருங்கள் – உங்களுக்கே தவறாகத் தெரியவில்லை?

   நீங்கள் எழுதி இருப்பதை இன்னுமொரு முறை நீங்களே
   படித்துப் பாருங்கள். நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் ?
   நீங்கள் சொல்வது வெறும் விதண்டாவாதமாகத் தெரியவில்லை ?

   பின்னூட்டங்களால் சிறப்பு பெற்ற தளம் இது.
   இந்த தளத்தில் எழுதுபவர்களையோ, பின்னூட்ட கருத்துக்கள்
   இடுபவர்களையோ, யாராவது தவறாகச் சொன்னால் அது
   வெறும் காழ்ப்புணர்வு காரணமாகவே இருக்கும்.

   இங்கு எழுதப்பட்டிருக்கும் கருத்துக்கள் உங்களுக்கு ஏற்புடையதாக
   இல்லையென்றால், உங்களுக்காக நான் இந்த வலைத்தளத்தை
   மூடி விட்டுப் போய் விட முடியாது.,..

   நான் உங்களை இங்கு வரும்படி கூப்பிடவில்லை.
   என் தளத்தைப்பற்றி உங்கள் அபிப்பிராயத்தையும் கேட்கவில்லை.
   நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்வதற்கான
   பக்குவமோ, வயதோ உங்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை.

   இடுகையில் கூறப்பட்டுள்ள விஷயங்களைப்பற்றி
   உங்களுக்கு நியாயமாக கூற வேண்டிய கருத்துக்கள் இருந்தால்,
   அதை சரியான முறையில் எடுத்துச் சொல்லுங்கள்.

   வீண் விதண்டாவாதம் செய்வதற்காகவே வந்தீர்கள் என்றால்,
   உங்கள் பின்னூட்டங்கள் இங்கு அனுமதிக்கப்பட மாட்டா
   என்பதை தெரிந்து கொள்ளவும்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 2. today.and.me சொல்கிறார்:

  I hereby remind to Periyar=Pithan that the title “selfless salesman” is given by Dr.SuSa.
  Not by KM

 3. Pingback: லலித் மோடி – பால-காண்டத்திலேயே, அமெரிக்காவில் போக்கிரி பட்டம் பெற்ற படலம்…..!!!. | Classic Tamil

 4. Sharron சொல்கிறார்:

  PERIYAR PITHAN atleast we are able to know about these culprits in these modern age through media. What is wrong in knowing about these people who are cheating us and the people who are bringing it out?.Instead of appreciating the people who are exposing these wrong doers to the people,you are criticizing.This is not good from you.

 5. பெரியார்=பித்தன் சொல்கிறார்:

  இந்த கட்டுரைக்கு அதிக பின்னூட்டம் வந்ததை விட நான் இட்ட ஒரு பின்னூட்டத்திற்கு அதிக பின்னூட்டங்கள் வந்து உள்ளது…. இதிலிருந்து தெரிகிறது மோடியை குறை கூறுவது தான் இந்த தளத்திற்கு வருபவர்களின் தலையாய கடமை என்று…. நான் ஒன்றும் லலித் மோடியை ஆதரிக்க வில்லை. யாரோ ஒருவர் செய்வதையும் மோடியின் குற்றம் என்று குறை கூறுவதை தான் கூறுகிறேனே தவிர அவரை ஆதரிக்க வில்லை….. அவர் அமைச்சராய் இருப்பினும்……

  • Ramachandran. R. சொல்கிறார்:

   அய்யா பெ.பித்தனே,

   பெரியார் பெயரை உச்சரிக்கக் கூட லாயக்கு இல்லாத ஆசாமியாக தெரிவதால், உங்களை பெ.(ரிய) பித்தன்(பைத்தியக்காரன்)
   என்று அழைப்பது தான் பொருத்தமாக இருக்கும்.
   எத்தனை நாட்களாக இந்த வலைத்தளத்திற்கு வருகிறீர்கள் ?
   இந்த தளத்தை பற்றியோ, இங்கு வரும் வாசகர்களைப் பற்றியோ
   உங்களுக்கு என்ன தெரியும் ? இத்தனை ஆண்டுகளாக இங்கு
   எந்தெந்த விஷயங்களை எல்லாம் விவாதித்திருக்கிறோம்
   என்று உங்களுக்கு தெரியுமா ?

   // மோடியை குறை கூறுவது தான் இந்த தளத்திற்கு வருபவர்களின்
   தலையாய கடமை // என்று உளறுகிறீர்களே,
   எவனோ குடிகாரன், சூதாட்டக்காரன்,
   பொம்பளைப் பொறுக்கி, ஊரை ஏமாற்றி, நாட்டை விட்டே
   ஓடிச்சென்ற சதிகாரனுக்கு வக்காலத்து வாங்குகிறீர்கள்.
   இந்த தளத்து வாசகர்களை குறை கூற உங்களுக்கு
   என்ன தகுதி இருக்கிறது ? பொறுக்கிகளை ஆதரிப்பவர்களும்
   பொறுக்கியாகத்தானே இருக்க முடியும் ? இடுகையில் சொல்லும்
   விஷயத்தைப் பற்றி உங்களுக்கு சொல்ல வேண்டிய கருத்துக்கள்
   எதாவது இருந்தால், அதைப்பேசுங்கள். கண்டதை உளறினால்,
   நிறைய வாங்கிக்கொள்ள வேண்டி இருக்கும்.

 6. drkgp சொல்கிறார்:

  Dear KMji,
  Intruders like this Pithan come here only to create hurdles for the
  smooth flow of ideas in this forum. Why not block them in
  the beginning itself so that you can save the wasteful discussion of the person.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.