மீண்டும் எமெர்ஜென்சி – வரக்கூடும் – எல்.கே.அத்வானிஜி

lk-advaniji-3

1975-ல் திருமதி இந்திரா காந்தி எமெர்ஜென்சி ( அவசர நிலை ) பிரகடனம் செய்ததன் 50 ஆண்டு நெருங்குவதையொட்டி,
செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளித்திருக்கும்
பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி அவர்கள்
அவசர கால நினைவுகள் சிலவற்றைப் பகிர்ந்திருக்கிறார்.

இந்த பேட்டியில் – தானும், வாஜ்பாய் அவர்களும் மற்றும்
பல தலைவர்களும் சுமார் 19 மாதங்கள் வரை எந்த காரணமும்
சொல்லப்படாமலே சிறையில் வைக்கப்பட்டிருந்ததை மீண்டும்
நினைவு கொள்கிறார்..

பேட்டியினூடே, அழுத்தந்திருத்தமாக – மீண்டும் எமெர்ஜென்சி கொண்டு வரப்படக்கூடிய எல்லா சூழல்களும் இருக்கின்றன
என்றும் கூறுகிறார்.

“அரசியல் தலைமை முதிர்ச்சியற்று இருக்கிறது என்று
நான் கூறவில்லை. ஆனால், அதே சமயம் எமெர்ஜென்சி மீண்டும்
கொண்டு வரப்படாது என்றும் என்னால் கூற முடியவில்லை.

தற்போதைய இந்திய அரசியல் சூழ்நிலை அத்தகைய
உத்தரவாதத்தை அளிக்கவில்லை.

சிறந்த தலைமைப்பண்பும் ஜனநாயகத்தின் மீது
முழுமையான நம்பிக்கையும் கொண்ட அரசியல் தலைமையை
என்னால் காணமுடியவில்லை ”
என்கிறார் அத்வானிஜி.

– லலித் மோடி விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு …

– வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மீது
கூறப்படும் குற்றச்சாட்டுகள் ….

– ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே மீது
கூறப்படும் குற்றச்சாட்டுகள்….

– வசுந்தரா ராஜேயின் மகன் துஷ்யந்த் சிங்- லலித் மோடி
இடையே நடைபெற்றதாக கூறப்படும் கோடிக்கணக்கான
ரூபாய் கருப்புப் பண பரிமாற்றம்…..

– எங்களுக்கு பாராளுமன்றத்தில் முழு பெரும்பான்மை இருக்கிறது
மக்கள் எங்களை 5 ஆண்டுகளுக்கு ஆட்சி செய்ய தேர்ந்தெடுத்து
இருக்கிறார்கள்…. காங்கிரஸ்காரர்களின் கேள்விகளுக்கு
பதில் சொல்ல வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை –
என்று மூத்த பாஜக தலைவர் ரவிசங்கர் பிரசாத் போன்றவர்கள்
கூறுவது –

– பிரதமர் மோடிஜி, எதற்கும் பதில் கூற பிடிவாதமாக
மறுத்து வரும் நிலை…..

-இவற்றை எல்லாம் பார்க்கும்போது, அத்வானிஜி சொல்வதில்
ஓரளவு உண்மைப் பின்னணி இருக்கிறது என்றே தோன்றுகிறது.

————-

பின் குறிப்பு –

மோடிஜி மோகத்தில் –
பாஜக முற்றிலுமாக அத்வானிஜியை புறக்கணித்தது
மிகப்பெரும் தவறு என்று தோன்றுகிறது.
அதிகார மையத்தில், அத்வானிஜியும்
இருந்திருந்தால், ஒரு வகை பேலன்ஸ் – இருந்திருக்கலாம்.
இன்றைய அதிகாரத் தலைமையின் –
ஆணவம், திமிர், எல்லாமே “நான் தான் ” என்கிற மமதை
ஆகியவற்றால் நாட்டிற்கு
ஏற்பட்டிருக்கும் கேடுகள் தவிர்க்கப்பட்டிருக்கும் என்று
தோன்றுகிறது.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

25 Responses to மீண்டும் எமெர்ஜென்சி – வரக்கூடும் – எல்.கே.அத்வானிஜி

 1. thiruvengadam சொல்கிறார்:

  We bound respect his seniority. But there was a unconfirmed press reports that he wished to take reigns of government in place of Adalji. I fear this interview may be a hurdle in his chances of next President

 2. ravi சொல்கிறார்:

  அத்வானி ஜனாதிபதி பதவிக்கு அடி போடுகிறார்.அவ்வளவே …
  சரி இவ்வளவு பேசுகிறாரே.. பாபரி மசூதி வழக்கு பற்றி ????
  இதில் கொடுமை எதிர் கட்சிகள் நிலைப்பாடு ..
  வாஜ்பாய் இருந்தபோது அத்வானி கெட்டவர்.
  மோடி வந்த போது அத்வானி நல்லவர். அவ்வளவே ..

 3. புது வசந்தம் சொல்கிறார்:

  ஏற்கனவே எங்கோ படித்தது போல உள்ளது. வேறு யாரோ ஒரு நபர் அவசர நிலை குறித்து எழுதியிருந்தார். இப்போது, அத்வானியும் இதனை வெளிபடுத்தியுள்ளார். எதற்கும் பதில் கூறாமல் இருப்பதும் …எங்கே போய் முடியுமோ ?

 4. Pingback: மீண்டும் எமெர்ஜென்சி – வரக்கூடும் – எல்.கே.அத்வானிஜி | Classic Tamil

 5. LVISS சொல்கிறார்:

  Opposition parties who called him a hardliner will go town with this observation of Mr Advani — That should be enough to dismiss this interview – —

 6. karthik sukumar சொல்கிறார்:

  There is a concerted effort by this blogger to continously undermine pm and bjp after may elections. Things didnt go the way some politicians expdcted in tn. May be thats a reason. Not even a word on whats hapoening in tn. He has not revealed his identity. Who knows who is behind tjis blog and who is funding… if not today one day it will come out. .

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   கார்த்திக் சுகுமார்,

   எந்தவித ஒளிவு மறைவும் இந்த வலைத்தளத்தில் இல்லை.
   நான் மறைமுகமாக எதையும் எழுதவில்லை.
   என்ன தவறு நடக்கிறதோ அதை
   வெளிப்படையாக விமரிசிக்கிறேன்.
   ஏன் – முன்பு மோடிஜியை ஆதரித்து எழுதினேனே …
   அதை நீங்கள் படிக்கவில்லையா ?
   எதிர்பார்த்தது போல் இல்லையென்றால் விமரிசிக்கத்தான்
   செய்வேன்.

   இந்த சுதந்திர நாட்டின் மூத்த குடிமகன் நான்.
   உங்கள் பாஜக வினரைப்போல், வெள்ளைக்காரன் போன பிறகு
   முளைத்த பரம்பரையை சேர்ந்தவன் அல்ல நான்.
   எந்தவித பலனையும் எதிர்பார்க்காமல் –
   இந்த நாட்டின் சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டு,
   சிறை சென்று, பல இன்னல்களை எதிர்கொண்ட ஒரு
   தேசபக்தனின் மகன் நான்.

   எந்தவித தயக்கமும் இல்லாமல்
   funding பற்றி பேசுகிறீர்களே –
   என்னைப்பற்றி, என் பின்னணி பற்றி –
   எதுவுமே அறிய முயற்சிக்காமல்
   இப்படிப் பேச மனம் கூசவில்லை உங்களுக்கு ..?

   கடவுள் அருளால், எனக்கென்று இருக்கின்ற ஒரு இடமும்
   மூன்று வேளை சோற்றிற்கு வருகிற பென்ஷனும் போதுமானது.
   கடவுளைத்தவிர, மனிதர் எவரிடமும் அடிபணிய வேண்டிய
   அவசியம் இல்லை எனக்கு.
   உங்களைப்போல் – எந்த கட்சிக்கோ, தலைவருக்கோ
   என் வாழ்நாளில் நான் அடிமையாக இருக்க மாட்டேன்.

   “not revealed his identity” என்று எழுதி இருக்கிறீர்கள்.
   முதலில் போய் about column ஐ பாருங்கள்.
   என்னைப்பற்றி மற்றவர்களுக்கு என்னென்ன தெரிய வேண்டுமோ
   அத்தனை தகவல்களையும் அதில் கொடுத்திருக்கிறேன்.

   ஆமாம். எத்தனை நாட்களாக இந்த வலைத்தளத்தை
   படித்து விட்டு இந்த முடிவிற்கு வந்திருக்கிறீர்கள்…?
   நான் ம.மோ.சிங் அரசில் நடந்தவற்றைப் பற்றியெல்லாம்
   எழுதியபோது எங்கே போயிருந்தீர்கள் ?

   இப்போதெல்லாம் தமிழக அரசை நான் விமரிசிப்பதில்லை தான்.
   அதிலும் ஒளிவு மறைவு எதுவுமில்லை.
   அதற்கான காரணங்களையும் நான் இந்த வலைத்தளத்திலேயே
   எழுதி இருக்கிறேனே.

   துவக்கத்திலிருந்து இந்த வலைத்தளத்தைப் படித்திருந்தால்,
   இதில் யார் யாரெல்லாம் விமரிசிக்கப்பட்டிருக்கிறார்கள் –
   யார் யார் எல்லாம் பாராட்டப்பட்டிருக்கிறார்கள் என்பது
   உங்களுக்கு புரிந்திருக்கும்.

   நீங்கள் அறியாமையால்,
   பாஜக ஆதரவாளர் என்கிற முறையில்,
   உணர்ச்சி வசப்பட்டு என் மீது
   இந்த குற்றச்சாட்டை எழுதி இருந்தால் –
   அந்த ஆண்டவனிடம் மன்னிப்புக் கேளுங்கள் –
   கடவுள் உங்களை மன்னிப்பார்.

   ஆனால், வேண்டுமென்றே,
   என்னை, இந்த வலைத்தளத்தை அடக்க வேண்டும்
   என்கிற திமிரில் எழுதி இருந்தால் –

   சுயநலமற்று – மனசாட்சி கூறுகிற வழியில்
   மட்டுமே செல்லும்
   72 வயது கிழவன் ஒருவனின்
   மனதைப் புண்படுத்தியதற்கு –
   அந்த ஆண்டவனே உங்களுக்கு கூலி கொடுப்பார்..

   -காவிரிமைந்தன்

   • Sharron சொல்கிறார்:

    Don’t worry KM sir.We are there for you. We want your work to continue without any disturbance.

   • Ramachandran. R. சொல்கிறார்:

    கே.எம்.சார்,

    இது போன்ற ஜால்ராக்களுக்கெல்லாம்,
    கட்சி வெறியர்களின் கடிதங்களுக்கெல்லாம்,
    நீங்கள் சற்றும் வருந்த வேண்டிய அவசியம் இல்லை.
    இது அவர்களின் தரத்தைக் காட்டுகிறது.
    இந்த வயதில் உங்கள் மனோதிடத்தையும்,
    உழைப்பையும் கண்டு நாங்கள் வியக்கிறோம்.
    தொடருங்கள் உங்கள் பணியை.
    உங்கள் துணைக்கு நாங்கள் இருக்கிறோம்.

    எப்போது வேண்டுமானாலும், எத்தகைய உதவி
    தேவைப்பட்டாலும் தயங்காமல் கூப்பிடுங்கள்,
    நானும் சென்னையில் தான் இருக்கிறேன்.
    என் email ID உங்களிடம் இருக்கும்.
    நன்றி.

  • today.and.me சொல்கிறார்:

   காய்த்த மரம் கல்லடி படும் – நான் விமரிசனத்தைச் சொல்லுகிறேன்., நீரோஜீயைச் சொல்லவில்லை. அவரும் மரம் தான்.
   இந்தியாவில் கூர் தீட்டி இந்தியாவையே விற்கும் —— மரம்.

   எங்கே தங்கள் தலைமையின் குறைகள் முழுவதும் வெளியே வந்துவிடுமோ என்ற பயத்திலேயே இந்த மோடி பக்தர்கள் பதறுவது புரிகிறது.

   இதற்கெல்லாம் மனம் புண்படலாமா? திருப்பிக் கொடுத்துவிடலாம் காமை ஜி

   ——
   அன்ப கார்த்திக் சுகுமார்,

   பாஜகவையும் மோடிஜியையும் ஆதரித்தும், எதிர்ப்பவர்களை பர்சனலாகத் தாக்கியும் மீடியாக்களில் எழுதுபவர்களுக்கு ஒரு SMS / Like / Unlike / comment / tweet / retweet க்கு இவ்வளவு என்று பட்டுவாடா செய்யாப்படுகிறதே. அது மாதாமாதம் உங்களுக்கு சரியாக வந்து விடுகிறதா? கணக்கை அவ்வப்போது சரிபார்த்துக்கொள்ளுங்கள். இல்லையென்றால் உங்களையே மொட்டை அடித்துவிடுவார்கள் பூசாரிகள்.

 7. rajanat சொல்கிறார்:

  @karthik sukumar! Hope you are not a band wagon of BJP and co.This blog is reflecting what’s happening around and I have observed some issues are omitted too.As Indian governing body lacking a constructive opposition to save Indian democracy atleast media and free expressionists are doing their best to protect Indian democracy.

  Keep going KM Sir!

 8. paamaran சொல்கிறார்:

  எங்கே தங்களின் கருத்துக்களுக்கு அதிமான ” மறுமொழி “கள் வந்து விடுமோ என்கிற எண்ணத்திலும் — தமிழில் சரியான வார்த்தைகள் கிடைக்காததை போலவும் — தங்களின் அரைகுறை ஆங்கில புலமையை காட்டவும் — இந்த தளத்தை பலர் பயன் படுத்துவது — வேதனை , மற்றும் வேடிக்கையானது ! கா.மை — அவர்கள் ஏன் ஆங்கிலம் மற்றும் தமிழில் இடுக்கையை வெளியிட்டு இவர்களின் ” அபிலாஷைகளை ” தீர்க்க ஒரு நடவடிக்கை எடுக்கலாம் — அல்லவா ? எப்படி இருந்தாலும் ” தமிழ் வாழ்க ” !!

 9. Kishor K Sami சொல்கிறார்:

  உங்க சொந்த பெயரை கூட உங்களால் வெளிப்படுத்த முடியவில்லையே …..

  கிஷோர் கே சாமி

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் கிஷோர் கே.சாமி என்று கூறிக்கொள்கிறவரே –

   உங்கள் உண்மைப்பெயர் இது தான் என்று எப்படித் தெரியும் ?
   வலைத்தளத்தில் நீங்களே இது போல் ஒரு டஜன் பெயர்
   வைத்துக்கொண்டிருக்கலாம்.
   எதை நிஜமென்று எடுத்துக் கொள்வது …?

   பெயரைக் கேட்பது அபத்தமென்று உங்களுக்கே தெரியவில்லை ?

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • today.and.me சொல்கிறார்:

    காமைஜி
    இது உங்களுக்கான மறுமொழி அல்ல.
    காங்கிரஸ் கிஷோர் கே ஸ்வாமியை வம்புக்கு இழுக்க வந்து நுழைந்துள்ள கபட ‘Kishor K Sami ‘

    😦 😦

    அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா
    🙂 🙂

 10. Kishore K Swamy சொல்கிறார்:

  தேவையில்லாமல் என்னை வம்புக்கு இழுக்கவே இந்த போலிப் பெயரில் வந்துள்ளார் அந்த ஆசாமி… இவர்களுக்கு உருப்படியாக எந்த வேலையும் இல்லை போலும்

  Kishore K Swamy

 11. ரிஷி சொல்கிறார்:

  //oops!! .. he has gone back on his statement,//

  அப்படினா இந்தப் பதிவின் கருத்துகளுக்கு வேலிடிட்டி போச்சா?

 12. ravi சொல்கிறார்:

  ரிஷி … நேற்று கூறியதை இன்று மறுத்து பேசுகிறார்.
  அவருக்கான நேரம் 2010 தோடு முடிந்து விட்டது …
  எப்படியும் ஜனாதிபதி , பாரத ரத்னா வாங்கி விடுவார்.
  அதற்கு மேல் இவருடைய கருத்துக்களை பற்றி விவாதிப்பது வீண்.
  சரி .. ஜனதா கட்சியினர் (பீகார்) ஆட்கள் , காங்கிரஸ் கட்சி உடன் கூட்டணி வைக்கின்றனர். இதற்கு முன் பா.ஜா.கா உடன் கூட்டணி. அப்போது இதெல்லாம் தெரிய வில்லையா.
  காங்கிரஸ் கட்சி – வாழ்வா சாவா பிரச்னை (குறிப்பாக ராகுல் )
  ஜனதா கட்சி – பிகார் தேர்தல் மற்றும் முஸ்லிம் வாக்கு வங்கி பிரச்னை .. கிட்டத்தட்ட வேலிக்கு ஓணான் சாட்சி கதை தான்

 13. ravi சொல்கிறார்:

  http://www.dinamalar.com/news_detail.asp?id=1278401
  — சுத்தம்…ஒரு சுற்று வந்து விட்டார் ..

  • ரிஷி சொல்கிறார்:

   ஹா…ஹா… ஆகச்சிறந்த நகைச்சுவை செய்தியாக உள்ளது. அத்வானி இந்த அளவுக்கு காமெடிப்பீசாக ஆகிப்போயிருப்பது சற்று வருத்தமே!!!!

   (இன்னும் சற்று ஆழ்ந்து யோசித்தால் அத்வானியை விட நாம் படு காமெடிப் பீசாக ஆகியிருப்பது நன்கு விளங்கும்.)

 14. Saravanakumar சொல்கிறார்:

  ஃபேஸ்புக், ட்விட்டர், இணைய பத்திரிக்கை என அனைத்திலும் மோடி பக்த பதர்கள் அதிகமாக உள்ளனர்.. எதிர்த்து கருத்து சொன்னாலே தகாத வார்த்தைகள் பேசி எழுத விடாமல் செய்வதே அவர்கள் நோக்கம்

 15. ரிஷி சொல்கிறார்:

  //Not even a word on whats hapoening in tn. //

  புரட்சித்தலைவியின் பொற்கால ஆட்சியில் தமிழகத்தில் அனைத்துமே சிறப்பாக நடந்து வரும் வேளையில் தேசிய அரசியலைப் பற்றி மட்டும்தானே விமர்சிக்க முடியும் கார்த்திக் சுகுமார்?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.