யூ டூ மிஸ்டர் அருண் ஜெட்லி ….???

dushyant and lalith modi

ராஜஸ்தான் முதலமைச்சர், மகாராணி வசுந்தரா ராஜே
அவர்களின் அருந்தவப்புதல்வன், திருவளர்(கின்ற ..!)செல்வன்
துஷ்யந்த் சிங் – பாரதீய ஜனதா கட்சியின் நடப்பு பாராளுமன்ற
உறுப்பினர் (sitting MP).

அவருக்கு சொந்தமான ஓட்டல் டெல்லியில் உள்ள -Heritage
Hotels Pvt Ltd Limited (NHHPL).

ஐபிஎல் மோசடி புகழ் லலித்மோடிக்கு சொந்தமான கம்பெனி –
Anand Heritage Hotels Pvt Ltd (AHHPL).
(பெயரில் உள்ள ஒற்றுமை-தொடர்பை கவனிக்க வேண்டும்..)

ஐபிஎல் கிரிக்கெட் ஊழல், கருப்புப்பணம், அந்நியச்செலாவணி
மோசடி ஆகியவற்றில் சம்பந்தப்பட்ட லலித் மோடியின் இந்த
கம்பெனி, மொரீஷியசில் உள்ள ( போலியான )
Wilton Investment Limited -விலாசத்திலிருந்து –
மகாராணியாரின் புத்திரனுக்கு கோடிக்கணக்கில்
பணம் அனுப்பி இருக்கிறது.

எப்படி ….?

புத்திரனுக்கு சொந்தமான ஓட்டலின் 10 ரூபாய் மதிப்புள்ள ஷேர் ஒவ்வொன்றிற்கும், 96,180 ரூபாய் என்று விலை கொடுத்து
815 ஷேர்களை வாங்கி கருப்பு பணத்தை வெள்ளையாக்கி
துஷ்யந்திற்கு ஓட்டலில் முதலீடு என்கிற பெயரில்
கொடுத்திருக்கிறது. (இது நடந்தது இரண்டு தவணைகளில்,
2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் -மொத்த பணப்பரிமாற்றம் –
சுமார் 7.83 கோடி ரூபாய் )

இதைத்தவிர, 3.80 கோடி ரூபாய் உத்திரவாதம் இல்லாத
கடனாகவும் கொடுத்திருக்கிறது.

ஆக மொத்தம் சம்பந்தப்பட்டுள்ள தொகை -11.63 கோடி ரூபாய்.

இது குறித்து, ஜெய்பூரைச் சேர்ந்த பூனம் சந்த் பந்தாரி என்கிற
வழக்குரைஞர் அமலாக்கப்பிரிவுக்கு ஒரு புகார் மனு
கொடுத்திருக்கிறார். நடவடிக்கை எடுப்பார்களோ, மாட்டார்களோ என்கிற சந்தேகத்தில், நவம்பர் 2013-ல் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கும் ( Public Interest Litigation) போட்டிருக்கிறார்.

இந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணக்கு வந்தபோது, அமலாக்கத்துறை சார்பில், Additional Solicitor General (ASG) திரு சஞ்சய் ஜெயின் என்பவர் ஆஜராகி –

“இந்த புகாரின் மீது ஏற்கெனவே நடவடிக்கை துவங்கப்பட்டு,
உரிய முறையில் விசாரணை நடந்து வருகிறது. விசாரணையில்
கிடைக்கும் தகவல்களின்படி மேற்கொண்டு உரிய நடவடிக்கைகள்
எடுக்கப்படும்”
என்று சொல்லி இருக்கிறார்.

இதில் முக்கியமாக விசாரிக்கப்பட வேண்டிய விஷயங்கள் – –

இந்த அந்நிய நேரடி முதலீட்டுக்கு உரிய அனுமதி
பெறப்பட்டிருக்கிறதா …?

அந்நியச்செலாவணி குறித்த பரிமாற்றங்களுக்கு ரிசர்வ்
வங்கியிடமிருந்து அனுமதி பெறப்பட்டிருக்கிறதா ?

10 ரூபாய் ஷேரை, 96,000 ரூபாய் கொடுத்து வாங்கியது
SEBI -யின் பார்வையிலிருந்து தப்பியது எப்படி ?

என்பன போன்ற குறைந்தபட்ச கேள்விகள் எழுகின்றன …
அமலாக்கப்பிரிவினர் (ED), நீதிமன்றத்தில் உறுதியளித்தபடி, இது குறித்து இன்னமும் சட்டப்படி – விசாரித்துக் கொண்டிருப்பதாகவே சொல்கிறார்கள்…!

டெல்லி தொலைக்காட்சிகளில் தினந்தோறும் புதிய புதிய
ஊழல் தகவல்கள் வெளியாகிக்கொண்டே இருக்கின்றன.
பிரதமர் மௌனம் சாதிப்பது குறித்து கடுமையான விமரிசனங்கள்
எழுந்துள்ளன.,

இதனை விரிவாக, விரைவாக – விசாரித்து நடவடிக்கை
எடுக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் அமலாக்கப்பிரிவு,
வருமான வரி இலாகா ஆகியவை மத்திய நிதியமைச்சரின் நேரடி
கண்காணிப்பின் கீழ் செயல்படுகின்றன.

இந்நிலையில், அமெரிக்கா சென்றுள்ள மத்திய நிதியமைச்சர்
திருவாளர் அருண் ஜெட்லியிடம், வாஷிங்டனில் –

arun jaitly -us foto

திருமதி வசுந்தரா ராஜே பதவி விலகுவாரா?
11 கோடி ரூபாய் கருப்புப்பணம் குறித்து அரசு என்ன
நடவடிக்கை எடுக்கப்போகிறது ?
துஷ்யந்த் சிங் – கட்சியை விட்டு நீக்கப்படுவாரா ?

-என்றெல்லாம் செய்தியாளர்கள்
பல கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

இந்த கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்ல மறுத்த திரு ஜெட்லி,
பின்னர், தாமாகவே முன்வந்து ஒரு அற்புத வியாக்கியானம் கொடுத்திருக்கிறார்.

” அது இரண்டு தனிப்பட்ட நபர்களிடையே ( லலித் மோடி-
துஷ்யந்த் சிங் ) வியாபார சம்பந்தமாக ஏற்பட்ட பண பரிவர்த்தனை. அதைக் குறித்து நான் கருத்து கூற என்ன இருக்கிறது…?

பல வருடங்களுக்கு முன்னர், இரண்டு தனிப்பட்ட நபர்களிடையே நிகழ்ந்த கடன் பரிவர்த்தனை குறித்து,
அதுவும் இந்த பணப்பரிமாற்றம் கடன் என்று அறிவிக்கப்பட்டு,
உரிய காசோலைகள் மூலம், வங்கிகளின் ஒத்துழைப்புடன்
நடைபெற்றிருக்கிற போது – இதில் அரசு கவலைப்படுவதற்கு –
( செய்வதற்கு ? ) என்ன இருக்கிறது …?”
என்று கூறி இருக்கிறார்.

ஆச்சரியப்படும் விதத்தில் இருக்கிறது ஜெட்லி அவர்களின்
வியாக்கியானம்.

-அவரது நேரடி நிர்வாகத்தின் கீழ் இருக்கும் அமலாக்கப் பிரிவு
(Enforcement Directorate ) – உரிய விசாரணை நடைபெற்று
வருகிறது என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் கூறி இருக்கும்
நிலையில், நிதியமைச்சர் – இது சட்டபூர்வமான கடன் பரிமாற்றம்
தான் என்றும், இதைப்பற்றி அரசு செய்ய
என்ன இருக்கிறது – என்றும் கேட்பது, முறையா …?

Enforcement Directorate விசாரணை முடிவடைந்து விட்டதா ? விசாரணையில் என்ன விவரங்கள் தெரிய வந்தன ?
எதை வைத்து இவர் அரசு செய்வதற்கொன்றும் இல்லை என்று
கூறுகிறார்…? விசாரணை இன்னும் முடியவில்லையென்றால் –
இவர் இப்படி கூறுவது விசாரணையின் போக்கை மாற்றாதா ?

மற்றுமொரு சீரியசான விஷயம் ஜெட்லி அவர்கள்
மிகச்சுலபமாக இது கடன் பரிமாற்றம் என்று கூறுகிறார்.
உண்மையில் 3.80 கோடி ரூபாய் மட்டும் தான் கடன்.
மீதி சுமார் 7.83 கோடி ரூபாய், பத்து ரூபாய் ஷேரை 96,180 ரூபாய்
என்று போலியாக விலை நிர்ணயித்து கடத்தப்பட்ட கருப்புப்பணம்.
ஒட்டுமொத்தமாக இவர் எப்படி அதை “கடன் பரிமாற்றம்” என்று கூற முடியும் …?

பாஜக மீது ஏற்கெனவே நாம் கொஞ்சம் கொஞ்சமாக
நம்பிக்கையை இழந்து வருகிறோம். எனவே, மொத்தமாக
பார்க்கும்போது, பெரிய அதிர்ச்சி ஒன்றும் ஏற்பட்டு விடவில்லை.

ஆனால், திரு அருண் ஜெட்லியின் மீது தனிப்பட்ட முறையில் gentleman politician என்கிற வகையில் ஒரு மதிப்பும்,
மரியாதையும் இருந்தது.
(ஒரு பக்கம் கிரிக்கெட் போர்டின் மீது இவருக்கு இருந்த பிடிப்பும், திரு ஸ்ரீநிவாசன் உடனான நெருக்கமும் உறுத்திக்கொண்டே இருந்தாலும் கூட …)

இப்போது திரு அருண் ஜெட்லி, வாஷிங்டனில் கூறி இருப்பதைப்
பார்க்கும்போது, ” யூ டூ மிஸ்டர் ஜெட்லி… ? ” என்று கேட்கவே தோன்றுகிறது.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

9 Responses to யூ டூ மிஸ்டர் அருண் ஜெட்லி ….???

 1. thiruvengadam சொல்கிறார்:

  Now an additional burdan to Namo. Jetley’s escapasim may start a furore to release from his minstry. If our FM contension okayed by PM , our Kalagnr TV 200 C scam case may give relief to Kani.

 2. today.and.me சொல்கிறார்:

  அப்பாடியோ.இப்பொழுதுதான் மனதுக்கு நிம்மதியாக உள்ளது.எங்கே 2ஜி மற்றும் ஸ்பெக்ட்ரம் பணப்பரிவர்த்தனைகளில் முக, தயாளு, கனி, ராசா, ஸ்டாலின், செல்வி, கேடி சகோதரர்கள் எல்லாரும் உள்ளே (ஒருவேளை) போய்விடுவார்களோ, இந்தச் சொத்துக்கள் எல்லாம் அரசின்வசம் வந்து நாட்டுடைமையாக்கப் பட்டுவிடுமோ என்று மிகுந்த மனவேதனைக்குள் இருந்தேன். மனதில் பால் வார்த்த ஜெட்லி அவர்களுக்கு நன்றி.

  • today.and.me சொல்கிறார்:

   ஒரு வருஷம் பொறுத்துக்கங்க, அடுத்த வருடம் திமுக ஆட்சிக்கு வந்து விடும்.. கனிமொழி அதிரடி பேச்சு

 3. Pingback: யூ டூ மிஸ்டர் அருண் ஜெட்லி ….??? | Classic Tamil

 4. drkgp சொல்கிறார்:

  When reporters asked about Nira Radia’s telephonic conversation with a former DMK woman
  minister ,the former CM snapped back that it was a talk between two ladies and it had
  nothing to do with 2G.
  Mr Jaitly, you remind me that episode with your cute answer. Thank you.

 5. அரசியலில் எவையும் நிகழும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

 6. vikeyekiv சொல்கிறார்:

  இப்படியெல்லாம் அதிர்ச்சியாகத் தேவை இல்லை பாஸ் .. ஏற்கனவே இவர் தான் குவத்ரோச்சிக்கு ஆஜரானவர். கோர்ட் சூட் போட்டவனெல்லாம் யோக்கியன் இல்ல

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.