இது பாஜக அரசு என்பது எங்களுக்கு நன்றாகவே புரிகிறது … …. சிங்ஜி…!!!

.

மத்தியில் தொடர்ந்து நிகழும் அரசியல் அவலங்கள்
எரிச்சலைக் கிளப்புகின்றன.

“முட்டாள் ஜனங்களே – எங்களையும்,
காங்கிரஸ்காரர்களைப் போல் இளிச்சவாயர்கள் என்று
நினைத்தீர்களா…?

இது பாஜக அரசு ….
நாங்கள் சொரணை கெட்ட ஜென்மங்களாக்கும்……
நீங்கள் கரடியாக கத்தினாலும், எங்கள் அமைச்சர்கள்
யாரும் ராஜினாமா செய்ய மாட்டார்கள் ”

– என்று உறுதியாகச்
சொல்லி விட்டார் மாண்பே இல்லாத ஒரு
மத்திய மந்திரி….

செருப்படி வாங்கிய பிறகு தான் திருந்துவோம்
என்று சொல்கிறவர்களைப் பார்த்து இனி நமக்கு
சொல்வதற்கு ஏதுமில்லை.
தாமாகவே -பட்டுத் திருந்தட்டும்….!!!

குறைந்த பட்சம் இன்னும் இரண்டு நாட்களுக்காவது
இதே நிலை தொடரும் என்று நினைக்கிறேன்.
“டைம்ஸ் நவ்” – அர்னாப் கோஸ்வாமி கத்திக் கொண்டே
இருக்க வேண்டியது தான்…

இவர்களை (தற்காலிகமாக) மறந்துவிட்டு – நாம்
இன்று வேறு திசையில் பயணம்
செய்யலாம் என்று தோன்றியது……!!!

———–

சிறு வயதிலிருந்தே எனக்கு இசை என்றால் உயிர்.
ரேடியோ என்கிற அதிசயமான ஒரு பெட்டியை நான்
முதன் முதலில் நான் பார்த்தது 1952-53 வாக்கில் இருக்கும் –

அப்போதெல்லாம், இந்தியாவில், ரேடியோ பரவலாக
அறிமுகம் ஆகவில்லை…!
என் அண்ணாவின் நண்பர் ஒருவர் புதிதாக ரேடியோ
ஒன்று ( மர்பி ) வாங்கினார்….அதை எங்கள் வீட்டில் 4 நாட்கள்
வைத்திருந்து டெஸ்ட் செய்தார்…அப்போது துவங்கியது…!

அதற்குப் பிறகு பல வருடங்கள் சென்றன –
எங்கள் வீட்டிற்கு என்று முதல் ரேடியோ பெட்டி வர ….!
(அதற்கும் முன்னதாக, ஒரு அழகிய கிராமபோன் பெட்டியும்,
சுமார் 400 HMV இசைத்தட்டுகளும் வீட்டில் இருந்தன.
எல்லாவற்றையும் ஹைதராபாத் கலவரத்தில் பறி
கொடுத்து விட்டோம்…)

என் சிறு வயதில் சில வருடங்கள் –
நாங்கள் வடக்கே புனாவில் இருந்தோம்.
எனவே, இந்தி-திரைபடப்பாடல்கள், கஜல், மிகவும் பிடிக்கும்.
பழைய தமிழ் திரைப்படப் பாடல்களும்….!!!

அப்போதெல்லாம், “ரேடியோ சிலோன்” ஒன்றில் தான் திரைப்பட
பாடல்கள் ஒலிபரப்பாகும். ஆல் இந்தியா ரேடியோவிற்கு
(ஆகாஷ்வாணி…!!!) திரைப்படப் பாடல்கள் என்றாலே அலர்ஜி.
கிட்டவே சேர்க்காது…

மாலை நேரங்களில், 5.00 முதல் 7.00 மணி வரை ரேடியோ சிலோனில் தமிழ் திரைப்பட பாடல்கள் ஒலிபரப்புவார்கள்.
வித்தியாசமான தலைப்புகளில் பாடல் நிகழ்ச்சிகள் வரும்….
இன்னமும் நன்றாக நினைவில் இருக்கிறது –

“ஒருபடப் பாடல்”,
“இசையும் கதையும்”
“ஜோடி மாற்றம்”,
“என் விருப்பம்”

செவ்வாய் இரவுகளில், 8 முதல் 9 மணி வரை “டாப் 18” இந்தி திரைப்பட பாடல்கள் “பினாகா கீத் மாலா” என்கிற பெயரில் ஒலிபரப்பப்படும்.

தமிழில் மயில்வாகனன் அவர்களும்
இந்தியில் அமின் சயானி அவர்களும் ரேடியோ சிலோனின் மிகவும் புகழ் பெற்ற அறிவிப்பாளர்கள்.

கர்க்கி பஜாரில் ஒரு இரானி ஓட்டல் இருந்தது.
மாலை வேளைகளில்,அங்கே கொஞ்சம் உரக்கவே ரேடியோ
வைப்பார்கள். நாங்கள் ( 4-5 நண்பர்கள் – எல்லாரும் -10,12 வயது
சிறுவர்கள் ) பாட்டு கேட்பதற்காகவே “இரானி” ஓட்டல்
வாசலில் நின்று – கதை பேசிக் கொண்டிருப்போம்.
தினமும் மாலை வேளைகளில் அரை மணி
நேரமாவது அந்த ஏரியாவில் இருப்போம்.

தப்பித்தவறி யாரிடமாவது காசு இருந்தால், இரண்டு டீ வாங்கி 4 பேரும் சேர்ந்து பகிர்ந்து கொள்வோம். தொடர்ந்து சும்மாவே பாட்டு கேட்க மனசாட்சி உறுத்தும்…. அப்போதெல்லாம்
ஒரு டீ ஒரு அணா ( அதாவது 6 காசுகள்…!!! )
– அது ஒரு பொற்காலம்..!!!

இதையெல்லாம் இப்போது ஏன் சொல்கிறேன்…..?

இந்த வலைத்தளம் கொஞ்சம் விறுவிறுப்பாக போகத்
துவங்கியதிலிருந்து, என் தனிப்பட்ட விருப்பங்களை எல்லாம்
மூட்டை கட்டி வைக்க வேண்டியதாகி விட்டது.
இது கிட்டத்தட்ட – முழுநேர வேலையாகி விட்டது.

அரசியல், சமூக சேவை தவிர –
எனக்குப் பிடித்த விஷயங்கள் நிறைய உண்டு…
ஆன்மிகம், ஆழ்ந்த, சீரியசான விஷயங்கள் படிப்பது,
( உலக சரித்திரம், போர் அனுபவங்கள்,
உளவுத்துறை சம்பந்தப்பட்ட விறுவிறுப்பான சம்பவங்கள்) –

ஆன்மிக, இலக்கிய கூட்டங்களுக்குப் போவது,
நல்ல திரைப்படங்கள் பார்ப்பது,
பழைய இந்தி, தமிழ், திரைப்படபாடல்கள், கஜல் – கேட்பது, எங்கள் வீட்டிலும், அக்கம் பக்கத்து வீடுகளிலும் இருக்கும் சிறுவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பது…
வீட்டில் மனைவிக்கு உதவியாக –
காய்கறி நறுக்கிக் கொடுப்பது…,
சில சமயங்களில் வீட்டில் எல்லாருக்குமே சுடச்சுட
கோதுமைமாவு தோசை வார்த்துக் கொடுப்பது …
(அதில் நான் எக்ஸ்பர்ட்…! ) – என்று ஏகப்பட்டவை…!

நமக்குப் பிடித்த விஷயங்களை எல்லாம்
எவ்வளவு நாட்கள் ஒதுக்கி வைப்பது …. ?
என் ரசனை, பழைய அனுபவங்கள் சில என்று
சில விஷயங்களை இங்கு பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தால்,
அதற்கான விஷயங்களை தொகுக்கும்போது,
எனது சொந்த ரசனைகளையும், விருப்பங்களையும் –
திருப்தி செய்துகொள்ளலாம் அல்லவா…?
(கொஞ்சம் “டென்ஷனும்” குறையும்…!!! )

இனி வாரத்திற்கு ஒன்றிரண்டு நாட்கள் –
அரசியல் தவிர்த்த இதர நினைவுகளையும், செய்திகளையும்
பகிர்ந்து கொண்டால் தேவலை என்று தோன்றுகிறது.
(பயப்படாதீர்கள் – “போரடிக்க” மாட்டேன்….
அநேகமாக உங்களுக்கும் பிடிக்கும் விதமாகவே இருக்கும்…! )

நல்ல காரியங்களை என்றுமே
தள்ளிப் போடக்கூடாது அல்லவா …?
இன்றே துவக்கி விட்டால் போச்சு …..

இனிய துவக்கமாக, இன்றைக்கு
எனக்குப் பிடித்த தமிழ் பாடல்கள் சில –

(இதில் உங்கள் விருப்பத்திற்கும் இடம் உண்டு …! )

————————

எனக்கு பிடித்த சில பாடல்கள் – ( பகுதி-1 )

குறையொன்றும் இல்லை… – எம்.எஸ்.

மனிதன் என்பவன் தெய்வமாகலாம் – பிபிஎஸ் -சுமைதாங்கி

மயக்கமா கலக்கமா – பிபிஎஸ் – சுமைதாங்கி

தனிமையிலே இனிமை காண முடியுமா ?
– ஏஎம் ராஜா-சுசீலா – ஆடிப்பெருக்கு

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

26 Responses to இது பாஜக அரசு என்பது எங்களுக்கு நன்றாகவே புரிகிறது … …. சிங்ஜி…!!!

 1. Ramachandran. R. சொல்கிறார்:

  கே.எம்.சார்,

  உங்கள் டேஸ்ட் எனக்கு ரொம்ப பிடிக்கிறது.
  உங்கள் சிறுவயது அனுபவங்களை எல்லாம்
  இப்போது கற்பனை செய்து பார்க்கும்போது –
  அந்த உங்கள் காலம் தான் உண்மையில் ” பொற்காலம் ”
  என்று தோன்றுகிறது. எங்களுக்கு இத்தகைய
  அனுபவங்கள் எல்லாம் ஏற்பட வாய்ப்பே இல்லையே.
  உங்களைப் போல் அனுபவித்தவர்கள் சொன்னால்
  தான் உண்டு.
  தொடர்ந்து அடிக்கடி இது மாதிரி அனுபவங்கள்,
  விருப்பங்கள் பற்றி எல்லாம் நிறைய எழுதுங்கள் சார்.
  நன்றி.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   ராமச்சந்திரன்,

   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
   மறக்க முடியாத, திரும்ப வர முடியாத நாட்கள்
   என்பது உண்மை தான்…..
   பல சமயங்களில் நினைத்துப் பார்த்தால்
   பிரமிப்பைக் கூடத் தருகிறது.
   பகிர்ந்து கொள்ள நிறைய இருக்கிறது.
   அவற்றில், நீங்கள் ரசிக்ககூடியதை மட்டும்
   சமயம் வரும்போதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக
   எழுதுகிறேன்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 2. காரிகன் சொல்கிறார்:

  தொடர்ந்து இசை பற்றி எழுதவும். அதுவும் நிறைய எழுதுங்கள்.

 3. Pingback: இது பாஜக அரசு என்பது எங்களுக்கு நன்றாகவே புரிகிறது … …. சிங்ஜி…!!! | Classic Tamil

 4. புது வசந்தம் சொல்கிறார்:

  /*அந்த உங்கள் காலம் தான் உண்மையில் ” பொற்காலம் ”
  என்று தோன்றுகிறது*/ – உண்மைதான். என் தந்தையின் கிராமத்து வாழ்கை எனக்கு கிடைக்கவில்லை, எனது வாழ்கை என் மகனுக்கு கிடைக்கவில்லை என்ற ஆதங்கம் எப்போதும் என்னில் உண்டு. இன்று என் மகனை கல்விச் சாலையில் இருந்து அழைத்து வரும் போது அவனது புத்தகப்பையை என்னால் சுமக்க இயலவில்லை. அப்போது அவனிடம் “உன் மகனை அரசாங்க பள்ளியில் சேர்த்து விடு” என்று.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் புதுவசந்தம் அன்பு,

   எவ்வளவோ வறுமையையும், துன்பங்களையும்
   சந்தித்துக் கொண்டிருந்தாலும் கூட,
   அந்தக் காலங்களில், சக மனிதரிடம்
   சமூகம் இன்னும் கருணையோடு, ஒத்தாசையாக,
   அனுசரணையாக இருந்தது.
   இப்போது – மனிதாபிமானத்தை மிகவும்
   அபூர்வமாகவே பார்க்க முடிகிறது.
   நாம் மற்ற எல்லாவற்றையும் விட,
   நம் குழந்தைகளுக்கு மனிதாபிமானத்தை
   சொல்லிக் கொடுப்போம்….
   அவர்கள் வளரும்போதாவது ஒரு நல்ல
   சமுதாயம் உருவாகட்டும்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 5. thiruvengadam சொல்கிறார்:

  தங்களின் நினைவுகள் போல : மயில்வாகனன் தமிழ்நாட்டு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது அவரை பேச அழைத்தபோது ” உங்களுக்கு நன்கு தெரிந்த ஒருவரை அழைக்கிறேன் என்று மட்டும் கூறியபின் வந்தவர் ” இப்போது நேரம் சரியாக ” என்றவுடன் அவரை நேரில் கண்ட மக்கள் ஆர்ப்பரித்தது நினைவுக்கு வருகிறது.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நன்றி நண்பர் திருவேங்கடம்.

   என்னைப்போன்ற நினைவுகளும்,
   உணர்வுகளும் உடைய
   ஒரு நண்பரைச் சந்திப்பதில்
   எனக்கு மகிழ்ச்சி.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 6. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  காலையில் செய்தித்தாளில் “நான் அவனில்லை” எனும் செய்தியை படித்ததும் உங்களின் நினைவுதான் வந்தது. கிழித்து காயப்போடப்போறார் என்று நினைத்து கொண்டேன். ஆனால் எரிச்சல்தான் வருகிறது என்று மட்டும் கூறிவிட்டு உங்களின் தனிவாழ்க்கையை எங்கோளோடு பகிர்ந்துகொள்ள நினைத்தீர்களே… class sir…
  hats off to you
  வாழ்க வளமுடன்

 7. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  நன்றி அஜீஸ்.

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

 8. கரிகாலன் சொல்கிறார்:

  உங்கள் பழைய நினைவுகள் செய்திகள் எழுதுங்கள் .வாசிக்க தயாராகக இருக்கிறேன் .அரசியலையும் தொட்டுக்கொள்ளுங்கள் .வானொலி பற்றி இன்னும்
  எழுதலாம் என் நினைக்கறேன்

 9. மணிச்சிரல் சொல்கிறார்:

  இத்தளம் அரசியல் அவலங்களை பொதுமக்களுக்கு எடுத்துக் காட்டுவதற்கு மட்டுமல்ல… இத இதத்தான எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறோம்…. தங்களின் விருப்பத்தையும் அறிய ஆவலாய் உள்ளது. கண்டிப்பாக புத்தகங்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பதிவுகள் இருக்கம் என நினைக்கிறேன்…. சமையலை தொட்டுக் கொண்டது அருமை. எனக்கு பிடித்த பாடல்கள்
  2. மலர்கள் நனைந்தன பனியாலே….
  1. ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்…
  மொத்தத்தில் நல்லதொரு கதம்பத்தை கொடுத்து இருக்கிறீர்கள். நன்றி.

 10. today.and.me சொல்கிறார்:

  எக்ஸ்பர்ட்-ன்னு நீங்களே சொல்லிக்கொண்டால் எப்படி?
  ஏதேனும் ஆதாரம் உண்டா ?
  🙂 🙂

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் டுடேஅண்ட்மீ,

   கொன்னுட்டீங்க நண்பரே……

   நல்ல வேளை – எங்கள் வீட்டில் என் வலைத்தளத்தை
   யாரும் பார்ப்பதில்லை…
   இவ்வளவு சுவையான சமாச்சாரம் எல்லாம் கூட சேர்த்து,
   இவ்வளவு நன்றாக கோதுமை தோசை செய்யலாம்
   என்பதே இப்ப தான் எனக்கும் உரைக்கிறது….!

   சூப்பர்… அடுத்த தடவை செய்யும்போது,
   நானாகவே கண்டுபிடித்தது போல் சேர்த்து – வார்த்து
   விடுகிறேன். நிஜமாகவே எக்ஸ்பர்ட் ஆகி விடலாம்.
   மிக்க நன்றி.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் டுடேஅண்ட்மீ,

   ஆழ்ந்த அக்கரையோடு தகவல்களை
   அள்ளித் தருகிறீர்கள்.
   மிக்க நன்றி நண்பரே.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 11. today.and.me சொல்கிறார்:

  கா.மைஜி,

  எங்கள் வீட்டில் இருந்ததும் மர்பி வால்வ் ரேடியோ செட் தான். ஸ்விட்ச்ஆன் செய்து வால்வ்கள் சூடாகியதும்தான் கொர் சப்தமே.

  அப்பொழுது ரேடியோவுக்கு லைசென்ஸ் இருந்ததாக நினைவு.

  அதேபோல சைக்கிளுக்கும் லைசன்ஸ், சைக்கிளில் டைனமோ கம்பல்சரி..

  உண்மையில் அது ஒரு கனாக்காலம்தான்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் டுடேஅண்ட்மீ,

   மிகச்சரி….அற்புதமான நினைவுகள்…..
   அந்த ரேடியோ லைசென்சை போஸ்ட் ஆபீஸ்களில் தான்
   வருடத்திற்கொரு தடவை புதிப்பிக்க வேண்டும்.
   அதற்கென்று ஒரு பாஸ்புக் உண்டு.
   என் நினைவில் – கடைசியாக வருடத்திற்கு 15 ரூபாய்
   என்று கட்டினேன் என்று நினைக்கிறேன்….
   அது ஆகி இருக்கும் 30-35 வருடங்களுக்கு மேல்….

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 12. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  காவிரிமைந்தன் அவர்களே… உங்கள் அனுபவம் மற்றும் பிடித்த நிகழ்ச்சிகளை எழுதுங்கள். நன்றாக இருக்கும்.. எப்போவும் அரசியல் பற்றியே எழுதினால் பிரஷர் ஏறுவதுதான் மிச்சம்.

  வீடியோவில் தோசை, ரவா தோசைபோல் உள்ளது. கோதுமை/அரிசியில் தோசை இப்படி வராதே.. நீங்கள் செய்துபார்த்துச் சொல்லுங்கள். ரவா சேர்த்தால்தான் இவ்வாறு வரும்.

 13. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  நண்பர் நெல்லைத்தமிழன்.

  ரவா சேர்ப்பது போல் இருக்கிறதே ……!!!

  ரொம்ப சிம்பிள் –

  // இவ்வளவு சுவையான சமாச்சாரம் எல்லாம் கூட சேர்த்து,
  கோதுமை தோசை செய்யலாம் என்று//

  என்று தான் நான் பொய் சொல்லாமல் கோடி காட்டி
  விட்டேனே…

  கோதுமை மாவு இருந்தால் போதும்,
  கூட எதைச்சேர்த்தாலும் சரி –
  அது கோதுமை மாவு தோசை தான்…
  ( இல்லையென்றால், வீடியோவில் கற்றுக் கொடுத்த
  பெண்மணி கோபித்துக் கொள்ள மாட்டாரா……!!! )

  உங்கள் கருத்துக்களுக்கு நன்றி நண்பரே.

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

  • today.and.me சொல்கிறார்:

   //கோதுமை/அரிசியில் தோசை இப்படி வராதே//
   ரவை சேர்க்கத்தேவையில்லை. அரிசிமாவுதான். கொஞ்சம் நீர்க்கக் கரைத்து அதிகமான ஓட்டைகள் தெரியும்படி ஊற்றி, எண்ணெயில் மிதக்கவிடவேண்டும். அங்கேதான் எக்ஸ்பர்ட் ஆகிறீர்கள்.
   🙂

   //கூட எதைச்சேர்த்தாலும் சரி –// ம்ஹூம்.
   மைனராக எதைச் சேர்த்தாலும் சரி. மேஜர்தான் பெயர்.
   மேத்ஸ் குரூப்பில் மேத்ஸ் மட்டும்தான் படிக்கிறோமா என்ன?

   சில இடங்களில் மைனரும் காரணப் பெயர் ஆவதுண்டு, நாலு மிளகைத் தட்டிப்போட்டுவிட்டு மிளகுப் பொங்கல் என்பதுபோல. 😀

   • Rangarajan Rajagopalan சொல்கிறார்:

    TAM sir,

    இப்படியும் வைத்து – கொல்லலாமா –
    தேமுதிக, பாமக ஆகிய பெரிய அண்ணங்களை கூட்டணியில்
    வைத்துக்கொண்டு, பொடியனாகிய பாஜக,
    அதை பாஜக கூட்டணி என்று சொன்னது போல …..?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.