சோட்டா மோடி – படா மோடி ….!!!

lamo and namo

தமிழ் இந்து நாளிதழில் ஒரு செய்தியைப் பார்த்து விட்டு,
பின்னோக்கிச் சென்றேன். சீரியசாக எதுவுமில்லை…..

ஆனால், காமெடியான சில விஷயங்கள் கிடைத்தன.
காமெடியையும் தான் கொஞ்சம் பகிர்ந்து கொள்வோமே……!!!.

முதலில் செய்தி –

– லண்டனில் பிரியங்கா, மற்றும் ராபர்ட் வதேராவை
சந்தித்ததாக இரண்டு நாட்களுக்கு முன்னர் சோட்டா மோடி
( லலித் மோடி ) ட்வீட் செய்து பரபரப்பை கிளப்பினார்..

(உண்மையில் போன வருடம் லண்டனில் ஏதோ
ஒரு ஓட்டலில் பிரியங்காவும் வதேராவும் இருந்தபோது
இவரும் அங்கே எதேச்சையாகப் போனபோது,
அவர்களைப் பார்த்து “ஹாய்” சொல்லி இருக்கிறார்…

ஆனால், வேண்டுமென்றே காங்கிரசை கடுப்பேற்ற
விவரங்களைக் கூறாமல் மொட்டையாக ட்வீட் செய்திருக்கிறார்.. )

உடனே, பாஜகவும் தன் பங்குக்கு, இது சீரியசான விஷயம்
என்றும் இந்த சந்திப்பு குறித்து சோனியா உடனடியாக
பதில் கூற வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தது.

கடுப்பான காங்கிரஸ் கட்சி, சோட்டா மோடி,
படா மோடிக்கு உதவி புரிவதற்காகவே, (விஷயத்தை
திசை திருப்பவே ) அப்படி எழுதியதாகச் சாடியது.

இடையில், யாரோ ஒரு ஆசாமி, சோட்டா மோடியிடம்,
இந்திய மீடியாக்களிடம் சிக்கித்தவித்து வரும்
படா மோடிக்கு உங்கள் “அட்வைஸ்”
என்ன
என்று கேட்க –

l.modi twitter-e

அதற்கு சோட்டா மோடி போட்ட பதில் ட்விட்டர் –

” பிரதமர் மோடிக்கு எனது அறிவுரை எல்லாம்
தேவையேயில்லை –
அவரே தனக்கு வரும் பந்துகளை மைதானத்துக்கும்
வெளியே அடிப்பார்

(அதாவது சிக்சருக்கும் மேலே …..!!! )

l.modi twitter-e2

சோட்டா மோடியை தகுந்த முறையில் உசுப்பேத்தினால் –
இந்திய அரசியல்வாதிகள் பலரைப்பற்றியும்
நிறைய “சங்கதிகள்”
வெளிவரும் என்று தோன்றுகிறது.

பார்ப்போம்- யார் அந்தப் பணியை
சிறப்பாகச் செய்கிறார் என்று….!!!

 

Advertisements
Gallery | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

சோட்டா மோடி – படா மோடி ….!!! க்கு 2 பதில்கள்

  1. Pingback: சோட்டா மோடி – படா மோடி ….!!! | Classic Tamil

  2. thiruvengadam சொல்கிறார்:

    Senior Journalist Prabhu Chawla was yesterday night was answering about his anguish Our Chota Modi’s suffering when others left ftee. As it was very much speeded one unable to fully follow. Any of friends may pl give any new in the current happenings

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.