ப.சிதம்பரம் அவர்களின் கேள்வி …… “நரேந்திர மோடி இந்தி பேசும் மக்களுக்கு மட்டும் பிரதமரா..?”

PC

“கேள்வி கேட்பவர் யாரென்று பார்க்காதே ….
கேட்கப்படும் கேள்வியை கவனி…..”
இது கிரேக்க ஞாநி அரிஸ்டாடில் சொன்னது….

அதே கோணத்தில் கவனிக்க வேண்டிய கேள்விகள் இவை…
நாம் ப.சி. அவர்களை கவனத்தில் கொள்ளாமல்
கேள்விகளை மட்டும் பார்க்கிறோம்….

இன்றைய பத்திரிகைச் செய்தி ஒன்று கீழே –

——-
“நரேந்திரமோடி இந்தியாவுக்கு பிரதமரா?
அல்லது இந்தி பேசும் மக்களுக்கு பிரதமரா?” ப.சிதம்பரம் கேள்வி..

புதுக்கோட்டை மாவட்டத்தில் கட்சி நிர்வாகிகள்,
பொதுமக்களை சந்திக்கும் வகையில் பல்வேறு இடங்களில்
முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கட்சி கொடியேற்றி
வைத்துப் பேசினார்.

திருக்கட்டளை ஊராட்சியில் பேசிய அவர் –

தேர்தல் நேரத்தில் நல்ல காலம் பிறக்கும் என முழக்கமிட்டு
ஆட்சிக்கு வந்த பிரதமர் நரேந்திரமோடிக்கு மட்டும் தான்
நல்ல காலம் பிறந்ள்ளது.
விவசாயிகளுக்கு நல்ல காலம் இல்லை.
மாணவர்களுக்கு நல்ல காலம் இல்லை.
100 நாள் வேலைத்திட்டம் 40 நாளாக சுருங்கி விட்டது.
இதில் முதியோர், விதவை, மாற்றுத்திறனாளிகளுக்கு இடமில்லை.

கடந்த 15 நாட்களாக மராட்டிய அமைச்சர்கள் மீதும்,
ராஜஸ்தான் முதல்-அமைச்சர் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள்
எழுந்து உள்ளன. மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது
வாய்மூடி மவுனமாக இருந்தார் எனக்கூறிய பிரதமர் நரேந்திரமோடி,
கடந்த 15 நாட்களாக மவுனம் காப்பது ஏன்?

நரேந்திரமோடி இந்தியாவுக்கு பிரதமரா?
அல்லது இந்தி பேசும் மக்களுக்கு மட்டும் பிரதமரா?
பிரதமர் 21 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார்.
ஆனால் தமிழ்நாட்டிற்கு ஏன் ஒரு முறை கூட வரவில்லை…?

——————-

பின் குறிப்பு –

அவர் தமிழ்நாட்டிற்கு வரத்தயார் தான்.
ஆனால் இங்கு மக்கள் கேள்விகள் கேட்பார்களே ..
..

மீனவர் பிரச்சினை …….
காவிரி ஆறு மேலாண்மை வாரியம் …
முல்லைபெரியாறு ……
மேகேடாட்டூ …..
கச்சத்தீவு …. என்று வரிசையாக

முக்கியமாக, ” இந்தியில் பேச வேண்டாம் –
தமிழ் தெரியா விட்டால் ஆங்கிலத்தில் பேசுங்கள்”

என்று சொல்வார்களே…..!!

“இந்திக்காரர்களுக்கு தான் பிரதமரா ?”
என்று கேள்வி கேட்டு விட்டு ப.சி. அவர்கள் சுகமாக
போய்க்கொண்டே இருக்கலாம்….
அவருக்கென்ன தெரியும் பிரதமரின் கவலைகள்
எல்லாம் …!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

10 Responses to ப.சிதம்பரம் அவர்களின் கேள்வி …… “நரேந்திர மோடி இந்தி பேசும் மக்களுக்கு மட்டும் பிரதமரா..?”

 1. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  மோடியை தமிழகத்துக்கு வரவைக்க என்னிடம் ஒரு சூப்பர் ஐடியா இருக்கு சார்!
  தமிழ் நாட்டை தனி நாடாக பிரகடணப்படுத்தி, விசா வாங்கி பாஸ்போர்ட்-டோடு வாங்கன்னு சொல்லிபாருங்க….
  அடுத்த ஒரு மணி நேரத்தில் தமிழகத்துக்கு “அச்சே தின்” என்று சொல்லி ஒரு 50,000 கோடி லோனும் கொடுத்துட்டு போவார்!

 2. today.and.me சொல்கிறார்:

  //கடந்த 15 நாட்களாக மவுனம் காப்பது ஏன்?//
  Objection my Lord.
  அவர் பிரதமர் ஆனதிலிருந்தே மவுனமாகத்தான் இருக்கிறார்

  // இங்கு மக்கள் கேள்விகள் கேட்பார்களே …./
  இங்கே கேள்வி கேட்பார்கள் என்று என்னால் நம்பமுடியவில்லை.

 3. Pingback: ப.சிதம்பரம் அவர்களின் கேள்வி …… “நரேந்திர மோடி இந்தி பேசும் மக்களுக்கு மட்டும் பிரதமரா..?” | Classic Ta

 4. ravikumar சொல்கிறார்:

  PC is not eligible to talk about any person since when Tamil Issue cropped up , so many people were killed in Srilanka , he was silent inspite of holding the Power

 5. Pingback: ப.சிதம்பரம் அவர்களின் கேள்வி …… “நரேந்திர மோடி இந்தி பேசும் மக்களுக்கு மட்டும் பிரதமரா..?” | Classic Ta

 6. ravi சொல்கிறார்:

  சிதம்பரம் ஜி .. மோடி மோசமானவர் ..சரி .. ஓகே ..
  ஒரு டவுட் !! காவிரி பிரச்சனயில் அன்னை சோனியாவின் நிலை என்ன ??
  காவிரி , முல்லை பெரியார் , இலங்கை பிரச்னை இவற்றில் அன்னை மற்றும் இளவரசரின் நிலை என்ன ???
  அடிக்கடி அம்மாவும் பிள்ளையும் எங்கேயோ வெளிநாடு செல்கிறார்களே ?? அது எதற்காக ….
  சும்மா சொல்லுங்க ஜி..

  • Sirippou Singaram சொல்கிறார்:

   சிவகங்கையில் தோற்ற நீங்க திடீர்ன்னு ஜெயித்தது எப்படி? 2ஜி யில உங்க பங்கு என்ன? சிவகங்கையில் உள்ள( உங்க) ஃபேக்டரிய ரிலையன்ஸ் என்ன விலைக்கு வாங்கியது?

 7. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  ப.சி வெள்ளை வேட்டி அரசியல்வாதி. அவருக்கும் அவர் பையனுக்கும் என்ன லாபம் என்று பார்த்து அரசியல் வியாபாரம் செய்ய ஆரம்பித்துக் கிட்டத்தட்ட 11 வருடங்களாகி விட்டது. அவரிடம், ‘கண்ணுக்கு நாங்க இருக்கோம்’ குரூப், சென்னை மால்கள், துபாயில் 1000 கோடி முதலீடு எல்லாம் எப்படி வந்தன என்று கேள்வி கேட்பாரில்லை. பொதுவாகவே அரசியல் வாதிகள், எப்படி பிஸினஸ் செய்கின்றனர், எப்படி சொத்துக்களைக் குவிக்கின்றனர் என்பதை இன்னோரு தேசத்தைச் சேர்ந்த உளவுத்துறைதான் அம்பலப்படுத்த வேண்டும்.

  நிற்க, நம்ம பிரதமர் இப்படியே எதற்கும் பேசாமல் இருந்தால், அவர்மட்டும் ஊழல் செய்யாமல் இருந்தால் பெயர் கிடைக்காது. மாறாக மன்மோகன்சிங்கிலிருந்து அவர் எப்படி வேறுபடுகிறார் என்பது மக்களுக்குத் தெரியவே தெரியாது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.