தயாநிதி மாறனுக்கு சிபிஐ மிரட்டலா …? என்ன சொல்ல விரும்புகிறது ஜூ. வி….!!!

.

திரு.தயாநிதி மாறன் மற்றும் அவரது சகோதரர் திரு.கலாநிதி மாறன் ஆகியோர் சம்பந்தப்பட்ட சிபிஐ வழக்கு குறித்து இன்று ஜூனியர் விகடன் இதழில் வெளியாகியுள்ள
கட்டுரை கீழே –

kd-1

kd-2

kd-3

பின் குறிப்பு –

மேற்படி கட்டுரையை படித்தவுடன், படிப்பவர் மனதில் –
பல ஆண்டுகளாக அரசியல் மற்றும் பணபல செல்வாக்கு
காரணமாக முடக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு வழக்கு
மீண்டும் சரியான திசையில் பயணிக்கத் தொடங்கி
இருக்கிறது என்கிற உணர்வு ஏற்படுவதற்கு பதிலாக –

மத்தியில் ஆட்சி மாறியவுடன், ஒன்றுமில்லை என்று
கிட்டத்தட்ட முடிந்திருந்த ஒரு புகாரை, முழுவீச்சுடன்
மீட்டெடுத்து மாறன் சகோதரர்களை முடக்கியே தீருவது
என்கிற நோக்குடன் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன
என்று லேசாக ஒரு எண்ணத்தை உருவாக்குவது போல்
கட்டுரை எழுதப்பட்டிருப்பதாகத் தோன்றவில்லை ….?

வழக்கமாக ஒரு ஊழல், மோசடி -புகாரைப் பற்றி
ஜூ.வி. எழுதும் விதம் (approach) இது தானா ?
கட்டுரையை மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்களேன்….!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to தயாநிதி மாறனுக்கு சிபிஐ மிரட்டலா …? என்ன சொல்ல விரும்புகிறது ஜூ. வி….!!!

 1. கொச்சின் தேவதாஸ் சொல்கிறார்:

  ஜுவி எப்பொழுதுமே இந்த மாதிரித்தான் பல விசயங்களைக் கையாண்டுள்ளது.
  இது ஒரு வியாபார தந்திரம்.
  ஆளும் கட்சிக்கு எதிராக எதையாவது எப்படியாவது பிரசுரம் செய்தால் அதனை எதிர்க்கட்சியை சார்ந்தவர்கள் படிக்க தங்களது ஜீவி யை வாங்குவார்கள் என்ற வியாபாரத் தந்திரம்தான்.
  வாரம் மூன்று முறை வெளிவரும் தங்களது பதிப்புகள் அனைத்தையும் விற்று தீர்க்க பரபரப்பாக ஏதாவது செய்தாக வேண்டுமே.
  .

 2. Pingback: தயாநிதி மாறனுக்கு சிபிஐ மிரட்டலா …? என்ன சொல்ல விரும்புகிறது ஜூ. வி….!!! | Classic Tamil

 3. today.and.me சொல்கிறார்:

  கட்டுரை வெளியானது ஜூவியில்
  கட்டுரையை எழுதியவர் ஸ்டாலின்

  வேறு எதை எதிர்பார்க்கமுடியும்.
  🙂

 4. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  கனிமொழி, தயானிதி ஆகிய இருவரைப் பற்றிய செய்திகளை, ஜூ.வி. நடுனிலையோடு வெளியிட்டுப் பார்த்ததில்லை. இதற்கு, விகடன் குழும உரிமையாளர்களின் சன் தொலைக்காட்சியை depend பண்ணியிருக்கும் வியாபாரம் ஒரு காரணம் என்று நினைக்கிறேன். இன்னொன்று சன் குழுமம் வாங்கியிருக்கும் பங்குகளினாலும். யாராகிலும் உண்மை அறிந்தவர்கள் சொன்னால்தான் உண்டு. நான் எப்போதும் ஜூ வி, விகடன் படிப்பவன். இந்த இருவரைப் பற்றியும் ஒருனாளும் நடுனிலைச் செய்திகளைப் படித்ததில்லை.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நெல்லைத்தமிழன்,

   நீங்கள் சொல்வது உண்மையே.

   விகடனில், வாசன் அவர்களின் குடும்பத்தினரைத்தவிர
   வெளியார்கள் யாருக்காவது பங்கு இருக்கிறதா –
   இருந்தால் யார், எவ்வளவு பங்கு – என்பது போன்ற
   விவரங்கள் நண்பர்கள் யாருக்காவது தெரிந்திருந்தால்
   தயவு செய்து இங்கே எழுதவும்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 5. gopalasamy சொல்கிறார்:

  இது வரை, விகடன் குழுமத்தினரின் பத்திக்கைகள், நாடு நிலைமையாக செய்தி வெளியிட்டு நான் பார்த்தது இல்லை. வெளிப்படையான தி மு க ஆதரவு குழுமம். தேசிய ஒற்றுமைக்கு எதிரான மறைமுகமான கட்டுரைகள் அதிகம்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.