திருமதி தமிழிசைக்கு பிடிக்காத ஒரு செய்தி….

.

திருமதி தமிழிசைக்கு பிடிக்காத ஒரு செய்தி….
தமிழ்நாட்டிற்கு அப்புறம் தான் குஜராத் ….!!!

நேற்று வெளியாகியுள்ள அதிகாரபூர்வமான ஒரு செய்தி இது –
(செய்தி புகைப்படம் தனியே – கீழே )

தமிழ் நாட்டில் முதலீடுகள் குறைந்து கொண்டிருக்கின்றன
என்று எதிர்க்கட்சிகள் – திருமதி தமிழிசை உட்பட – தீவிரமாக
குறை கூறிக்கொண்டிருக்கும்போது,

ரிசர்வ் வங்கி வெளியிட்டிருக்கும் தகவல், 2013-14 ஐ விட 2014-15-ல் தமிழ்நாட்டில் அந்நிய முதலீடு இரண்டு பங்கு அதிகரித்திருப்பதாக கூறுகிறது.

அதை விட – திருமதி தமிழிசை அவர்களை வருத்தப்படச் செய்யும் முக்கியமான செய்தி – அகில இந்திய அளவில் முதலீட்டில் தமிழ் நாடு மூன்றாவது இடத்தில் இருக்கிறது.

திருமதி தமிழிசை அவர்கள் மூச்சுக்கு மூச்சு உதாரணம்
சொல்லிக் கொண்டிருக்கும் –

மாண்புமிகு மோடிஜி அவர்கள் மாய்ந்து மாய்ந்து முதலீட்டாளர் மாநாட்டை நிகழ்த்திய குஜராத் – 5-வது இடத்தில்….!!!
(23,000 கோடி எங்கே 9000 கோடி எங்கே..? !!! )

foreign investment in tamilnadu-1a

foreign investment in tamilnadu-2a

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to திருமதி தமிழிசைக்கு பிடிக்காத ஒரு செய்தி….

 1. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  காமை ஐயா
  தயவுசெய்து நம்பிக்கைக்குகந்த நபர்கள் தரும் உணவை உண்டு
  அவர்கள் தரும் உடைகளை அணிந்து பாதுகாப்பாக இறுந்துகொள்ளுங்கள்.
  ஏனெனில் ம பி-யில் கடந்த சில நாட்களாக கல்வித்துறையில் நடந்த ஊழல் விஷயமாக டீன் ஏஜ் பெண், மருத்துவ கல்லூரி டீன், பத்திரிக்கையாளர் என பலதரப்பட்ட 40க்கும் அதிகமானவர்கள் திடீரென்று மாண்டுள்ளனர்.
  சூதானமா இருந்துக்கொள்ளுங்களையா!
  என்ன வேண்டுமானாலும் நடக்கும் போல இந்த நாட்டில்.
  பயமாக உள்ளது ஐயா

  • Sharron சொல்கிறார்:

   Really MP matter is going very serious. Quick investigation & immediate punishment is a must now to keep Indian Democracy.

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    நண்பர் ஷரொன்,

    சிவராஜ் சிங் சௌஹான் இவ்வளவு பெரிய வில்லனாக
    இருப்பார் என்று யாருமே நினைக்கவில்லை.
    ஊழலுக்கு வேறு யாராவது காரணமாக இருந்தாலும் கூட,
    இப்போது நடக்கும் மர்மச்சாவுகளுக்கு இவர் தானே
    பதில் சொல்ல வேண்டும் …?
    (இவருக்கு best friend தான் நமது வெ.உ.துறை அமைச்சர்…! )

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   அஜீஸ்,

   ம.பி. நிலவரம் ஒன்றுமே புரியவில்லை…
   மர்மக்கதையாகவே இருக்கிறது.
   அங்கே உள்ள உள்ளூர் ஆசாமிகள் எதாவது
   விளக்கமாக எழுதுகிறார்களா பார்ப்போம்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 2. Pingback: திருமதி தமிழிசைக்கு பிடிக்காத ஒரு செய்தி…. | Classic Tamil

 3. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  1. குஜராத்தில் இப்போது மோடியின் ஆட்சி நடக்கவில்லை.
  2. மொத்த முதலீட்டையும் கூட்டி, மோடி பிரதமர் ஆனபின்புதான் இப்படி இந்தியா முழுமைக்கும் அளவுக்கதிகமான முதலீடு கிடைத்துள்ளது. மோடியின் வெளினாட்டுப் பயணத்தின் பலங்களை ஒட்டுமொத்த இந்தியாவும் பெற்றுள்ளது என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

  அரசியல்வாதிக்குப் பேசக் கற்றுக்கொடுக்கவேண்டுமா என்ன? அது மட்டும்தானே அவர்களின் முதலீடு.

 4. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  நண்பர் நெல்லைத்தமிழன்,

  இந்த இடுகையை எழுதும்போதே – ஒருவேளை
  டாக்டர் அக்கா இதற்கு பதில் சொன்னால்
  என்ன சொல்லுவாரென்று நினைத்துக் கொண்டே
  தான் எழுதினேன்.

  அப்போது என் மனதில் அக்காவின் சார்பில் உதித்த
  அதே விளக்கத்தை நீங்கள் எழுதி விட்டீர்கள்.

  நமது தலைவர்களை நன்றாக எடை போட்டு
  வைத்திருக்கிறீர்கள்…
  பலே -பிரணமாதம்…!!!

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.