“வியாபம்” கில்லர் டிஸீஸ் – பாவம், பிரதமர் என்ன செய்வார்….?

s.s.chouhan

கடந்த 72 மணி நேரங்களில் நான்கு சந்தேகத்திற்குரிய மரணங்கள் – மொத்த சாவு எண்ணிக்கை 45-ஐ கடந்தது. மத்திய பிரதேசத்தில் மர்ம மரணங்கள்…! திடுக்கிடும் திரைப்படம் போலத்தான் இருக்கிறது “வியாபம்” விவகாரங்கள்.

முதலில் சுருக்கமாக முன்கதை –

( Madhya Pradesh ) Vyavsayik Pareeksha Mandal
(Vyapam) என்பது மத்திய பிரதேச அரசால் உருவாக்கப்பட்ட
ஒரு அமைப்பு’. மருத்துவம், எஞ்சினீரிங் போன்ற
தொழிற்கல்விகளுக்கும், அரசு காலி இடங்களுக்கும், அவ்வப்போது
அதற்குரிய தேர்வுகளை நடத்தி,
தகுதியானவர்களை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு
இந்த அமைப்பிடம் ம.பி.அரசால் ஒப்படைக்கப்பட்டது –
இதை ஒருவகையான
நுழைவுத்தேர்வு வாரியம் என்று கூறலாம்.

இதில் தேர்வுகள் நடத்துவதிலும்,
தகுதியானவர்களை தேர்ந்தெடுப்பதிலும்,
பல வகையான ஊழல்கள் நடைபெறுகின்றன என்பது நீண்ட நாட்களாக இருந்து வந்த குற்றச்சாட்டு.

ஆனால், 2009 ஆம் ஆண்டில் தான் இதைக்குறித்து பெரிய அளவில் விஷயங்கள் வெளியே தெரிய வர ஆரம்பித்தன.

நுழைவுத்தேர்வு மற்றும் பணியாளர்கள் நியமனத் தேர்வில் –
அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் தொழிலதிபர்கள் கூட்டு
சேர்ந்து பல விதங்களில் ஏமாற்று வேலைகள் செய்து, தகுதியற்ற
ஆனால் அரசியல் செல்வாக்கு, பணபலம் உள்ள நபர்களை
தேர்ச்சி பெற்றதாக அறிவித்தனர். இந்த முறைகேடு பலவிதங்களில்
நிகழ்த்தப்பட்டது.

– ஹால் டிக்கெட்டில், புகைப்படத்தை மட்டும் மாற்றி ஒட்டி –
தேர்வு நிகழும் இடத்தில் – போலி ஆட்களை உட்கார வைத்து
தேர்வு எழுத வைத்தனர். தேர்வு எழுதி முடிந்ததும், புகைப்படத்தை
மீண்டும் மாற்றி விட்டனர்.

– நன்கு தேர்வு எழுதக்கூடிய நபரைப் பிடித்து ஏற்பாடு செய்து,
அவரருகே சுமாரான மாணவர்களை அமரச்செய்து, ஒவ்வொரு
தாளாக, எழுத எழுத – pass on – செய்து காப்பி அடிக்க
அதிகாரிகளின் உதவியோடு உதவினர்.

– சில மாணவர்கள், வெற்று விடைத் தாள்களை அளித்து,
பின்னர், அது அதிகாரிகளாலேயே, தகுந்த, சரியான பதில்களை
கொண்டு பூர்த்தி செய்யப்பட்டது.

இப்படி எவ்வளவோ விதங்கள் – ஒரு பெரிய குழுவே இதில்
தொடர்ந்து ஈடுபட்டது. தேர்வுக்குழு, கம்ப்யூட்டர் நிர்வாகிகள்,
விடை திருத்துபவர்கள், நிர்வாக அதிகாரிகள் என்று பலரும்
ஒன்று கூடி தொடர்ந்து பல வருடங்களுக்கு ஊரையே –
மன்னிக்கவும் – ஒரு மாநிலத்தையே ஏமாற்றி இருக்கின்றனர்.
எக்கச்சக்கமாக பணம் புரண்டிருக்கிறது.
சில சீட்டுகளுக்கு 10 லட்சம் முதல் 50 லட்சம் வரை…!

புகார்கள் பெரிய அளவில் வெளிவந்தபிறகு, 2009-ல் முதலமைச்சர்
சௌஹான் ஒரு விசாரணை கமிட்டியை அமைக்கிறார்.
2011-ல் அது தனது ரிப்போர்ட்டை தருகிறது. மருத்துவ கல்லூரிக்கு அட்மிஷன் பெற்ற மாணவர்களில் 114 பேர்கள் போலிகள்.

அதாவது, ஏற்கெனவே டாக்டராக பணி புரிந்து கொண்டிருக்கும் சிலர், அவர்களுக்காக தேர்வை எழுதிக் கொடுக்க, இவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்கள். இவர்களில் முக்கால்வாசிப்பேர் பீகார், மற்றும் உ.பி.யைச் சேர்ந்தவர்கள். பரீட்சை எழுதியவர்களுக்கு 50,000 ரூபாய் வரை கொடுக்கப்பட்டிருக்கிறது. தேர்வு பெற்று சீட் கொடுக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களிடமிருந்து 10 முதல் 40 லட்சம் வரை
வசூல் செய்யப்பட்டிருக்கிறது…..

இது வெறும் சாம்பிள் தான்…..
இது போல் இன்னும் வருடந்தோறும் எக்கச்சக்கம்….!!!
2013ஆம் ஆண்டு வரை கூட இது தொடர்ந்திருக்கிறது.

நவம்பர் 2014-ல், மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் – இது குறித்த புகார்களை விசாரிக்க Justice Chandresh Bhushan,
retired Judge of the Madhya Pradesh High Court
அவர்கள் தலைமையிலான ஒரு 3 உறுப்பினர் சிறப்பு விசாரணைக்
குழுவை -special investigation team (SIT) – அமைக்கிறது.

விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதில் சம்பந்தப்பட்டவர் 4 ரகங்களில் வருகிறார்கள் –

– பரீட்சை எழுதாமலே பணம் கொடுத்து தேர்ச்சி பெற்றவர்கள் ….

– பணம் பெற்றுக்கொண்டு, மாணவர்களுக்கு பதில் போலியாக
பரீட்சை எழுதியவர்கள் (ஆசிரியர்கள் / டாக்டர்கள் ) –

– இதை முன்னின்று நிகழ்த்திய “வியாபம்” அதிகாரிகள்/நிர்வாகிகள் –

– கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்க இதை தொழிலாகவே செய்த
அரசியல்வாதிகள், எம்.எல்.ஏக்கள், மந்திரிகள், ( கவர்னர்….? )
(அனேகமாக எல்லாருமே பாஜக வினர்….. )

– இதுவரை கிட்டத்தட்ட 2000 க்கும் மேற்பட்டவர்கள் கைது
செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த வழக்கிற்கு தொடர்புடைய
45 பேர்களுக்கு மேல் மர்மமான முறையில் இறந்திருக்கிறார்கள்
அல்லது தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள் அல்லது
கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

(இதில் இன்னாள் ம.பி.கவர்னர் மேதகு ராம்நரேஷ் யாதவ்
அவர்களின் மகன் சைலேஷ்-ம் ஒருவர் )

– கைது செய்யப்பட்டிருப்பவர்களில் முக்கியமானவர்களின்
பட்டியல் கீழே –

vyapam_mos

முதலமைச்சர் சௌஹான் சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கிறார்., நீதிமன்றம் தான் சிறப்பு விசாரணை குழுவை அமைத்திருக்கிறதே – இன்னுமென்ன என்கிறார்…

இந்த அளவில் பிரதமர் மோடிஜி இந்த விஷயத்தில் என்ன
செய்ய முடியும் …? முழுக்க முழுக்க ஒரு மாநிலம் சம்பந்தபட்ட விஷயத்தில் பிரதமர் என்ன செய்ய முடியும் ?
எவ்வாறு தலையிட முடியும் …?

தேர்தலுக்கு முன்னர் ஒவ்வொரு பேரணியிலும், மோடிஜி
மக்களுக்கு வாக்கு கொடுத்தார் –

” நா காவூங்கா – நா கானே தூங்கா ”
( நானும் சாப்பிட மாட்டேன் –
மற்றவர்களையும் சாப்பிட விட மாட்டேன்..)

பிரதமர் சாப்பிடுகிறார் என்று யாரும் குற்றம் சாட்ட முடியாது. யாருக்கும் அத்தகைய சந்தேகங்களே எழவில்லை…
(அதிகம் போனால், கொஞ்சம் ஓவராக காஸ்டியூம்,
கொஞ்சம் ஓவராக ஊர் ( நாடு …?) சுற்றல் – அவ்வளவே ..)

ஆனால் – மற்றவர்களை சாப்பிட விட மாட்டேன் என்கிற
உத்திரவாதத்திலிருந்து மோடிஜி சறுக்கி விட்டார் என்றே
தோன்றுகிறது.

பிரதமர் வேறு – கட்சி வேறல்ல.
மோடிஜி பார்த்து நியமித்த கட்சித்தலைவர் தான் அமீத் ஷா.
எனவே கட்சி ரீதியாக அழுத்தம் கொண்டு வர முடியும்….
ஆனால் –

ம.பி.முதலமைச்சர் சிவ்ராஜ்சிங் சௌஹானை – ராஜினாமா செய்ய வற்புறுத்தலாம் என்றால் –

அவர், முதலில் வசுந்தரா ராஜே கதையை முடித்து விட்டு
பிறகு என்னிடம் வாருங்கள் என்பார் –

வசுந்தராவிடம் போனாலோ – அவர், முதலில் சுஷ்மாஜியை கவனித்து விட்டு என்னிடம் வாருங்கள் என்பார் –

சுஷ்மாஜியிடம் நெருங்கவே முடியாதபடி ஆர்.எஸ்.எஸ்.
பாதுகாப்பு வட்டம். மிஞ்சி நெருங்கினாலோ, அவர் –
முதலில் நேற்று வந்த பங்கஜா முண்டே-யை கவனித்து விட்டு,
பிறகு என்னிடம் வாருங்கள் என்பார் –

பங்கஜா முண்டேயை கண்டிக்கலாம் என்றால் –
ஏற்கெனவே மஹாராஷ்டிராவில் மைனாரிடி பாஜக அரசு –
சிவசேனா தயவில் “நித்ய-கண்டம், பூர்ண ஆயுசு” ….!!!
முறைத்துக் கொண்டால் – மஹாராஷ்டிரா அரசு கவிழலாம்….!

பாவம் – என்ன செய்வார் மோடிஜி….?

ஒன்றே ஒன்று செய்யலாம்….
ம.பி.கவர்னர் மேதகு ராம்நரேஷ் யாதவ் – அவர்களை –
காங்கிரஸ்காரர் தானே – தூக்கி விடலாம்…!
(ஏற்கெனவே தூக்காத கவர்னர்களா என்ன …)

Ram-Naresh-Yadav-MP-PTI

ஆனால் பிரச்சினை என்னவென்றால் – ஏற்கெனவே “வியாபம்”
ஊழல் பிரச்சினையில் அவர் மகனை பறிகொடுத்து விட்டார்.
இந்த “வியாபம்” பற்றிய சகல விஷயங்களும் அறிந்தவர் அவர்.

இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை என்கிற நிலைக்கு
அவரை கொண்டு சென்றால் –

“வியாபம்” விவகாரம் முழுவதும் வெளிவந்து –
ம.பி. பாஜக அரசு கவிழக்கூடிய ஆபத்து இருக்கிறது …!

எனவே, மோடிஜி பாவம் …
அவரை குறை கூறுவது எளிது….
செயலாற்றுவது எவ்வளவு கடினம் என்பதை
அவர் நிலையில் இருந்து யோசித்தால் தான் தெரியும்…..!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to “வியாபம்” கில்லர் டிஸீஸ் – பாவம், பிரதமர் என்ன செய்வார்….?

 1. Pingback: “வியாபம்” கில்லர் டிஸீஸ் – பாவம், பிரதமர் என்ன செய்வார்….? | Classic Tamil

 2. புது வசந்தம் சொல்கிறார்:

  அருமை, “வியாபம்” குறித்து அனைவரும் அறிந்து கொள்ள மிக சரியான பதிவு.

 3. paamaran சொல்கிறார்:

  மத்தியப் பிரதேசத்தில் வியாபம் வழக்கு ஒரு ஸில்லி விவகாரம் என்றும், அது பற்றி எல்லாம் பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் தர முடியாது என்றும் செய்தியாளர்களிடம் பேசியமத்திய சட்டத் துறை அமைச்சர் டி.வி. சதானந்த கௌடா கூறியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது ! ” வியாபம் ” வியப்பை அளிக்கிற நேரத்தில் — சட்ட அமைச்சரின் ” ஸில்லி மேட்டர் ” — என்ன விளைவை எதிர்நோக்குகிறது என்பது புரியாத — புதிரா ?

 4. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  தேவை ஏற்படின் தேசத்தந்தையையே கொல்லும் எங்களுக்கு, கவர்னர் மகன் என்ன, டீன் என்ன போலீஸ் அதிகாரி என்ன
  ஜெய் ராம்ஜீகீ!!!

 5. Sharron சொல்கிறார்:

  It is like a crime story.Really thrilling and shocking.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.