நேதாஜி சேமித்த INA பொக்கிஷத்தை நேருஜி தனதாக்கிக் கொண்டு விட்டாரா ..? சு.சுவாமி சொல்வது நிஜமா ?

.

இந்திய தேசிய ராணுவத்திற்காக நேதாஜி சுபாஸ் சந்திர போஸ்
சேர்த்த பொக்கிஷத்தில் ஒரு பகுதியை நேருஜி தன்னிடமே
இருத்திக்கொண்டு, தன் சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்திக்
கொண்டு விட்டார்…. முழு பொறுப்புடனும், நான் இதைச்
சொல்வதால் ஏற்படக்கூடிய விளைவுகளை கருத்தில் கொண்டும்
தான் இதைக்கூறுகிறேன் என்கிறார் டாக்டர் சுப்ரமணியன்
சுவாமி….! கடந்த ஜனவரியில் நேதாஜி பிறந்த நாளையொட்டி
பேசும்போது சு.சுவாமி இப்படி கூறி இருக்கிறார்.

கிழக்காசிய நாடுகளில் வசித்து வந்த இந்தியர்களால்,
நேதாஜி சுபாஸ் சந்திரபோசுக்கு இந்திய தேசிய ராணுவத்தை
உருவாக்குவதற்காக ( INA ) அளிக்கப்பட்ட பெரும்
அளவிலான தங்கம், மற்றும் விலையுயர்ந்த வைர நகைகள்
அடங்கிய INA பொக்கிஷத்தின் பெரும்பகுதி என்ன ஆனது
என்றே கண்டுபிடிக்கப்படவில்லை…

இது குறித்து பிரிட்டிஷ் அரசால், de-classify
செய்யப்பட்ட சில கோப்புகளை தாம் லண்டனில் பார்த்ததாகவும்,
இது குறித்து பல விஷயங்கள் தனக்குத் தெரியும் என்றும்
சொல்கிறார் சு.சுவாமி.

1952 நவம்பரில் ஜவஹர்லால் நேரு, அப்போதைக்கு அமெரிக்காவில் பணிபுரிந்து வந்த, இந்திய வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவரை
அங்கிருந்தே ரகசியமாக டோக்கியோவிற்கு அனுப்பினார்.
அந்த அதிகாரிக்கு நேருஜி நேரடியாக ஒரு சங்கேதமான
வார்த்தைகள் அடங்கிய செய்தியை அனுப்பினாராம்.

அதில் –
The decoded telegram read: “YOU SHOULD DEPART
TO TOKYO DIRECT TO DELHI WITH TWO TRUNKS
SEALED AND HANDED OVER TO YOU BY THE INDIAN

AMBASSADOR AT THE AIRPORT STOP
UPON ARRIVAL IN DELHI PLEASE BRING DIRECT TO
MY RESIDENCE AND HAND IT TO ME PERSONALLY
REPEAT TO ME PERSONALLY.”

அதாவது அந்த அதிகாரி, டோக்கியோ சென்று, அங்கே இந்திய
தூதரக அதிகாரி கொடுக்கும் இரண்டு பெட்டிகளை பத்திரமாக
சேகரித்துக் கொண்டு –
டெல்லிக்கு எடுத்து வந்து, தன் வீட்டுக்கு வந்து
தன்னிடம் நேரடியாக கொடுக்க வேண்டும் என்று நேருஜி
அந்த அதிகாரிக்கு உத்திரவிட்டாராம்.

அந்த அதிகாரி பெட்டிகளுடன் விமானத்தில் டெல்லி
வந்திறங்கியபோது, அவருக்காக விமான நிலையத்தின் உள்ளேயே
திரு. ஆர்.கே.நேரு ஒரு காருடன் காத்திருந்தாராம்.
ஆர்.கே.நேரு, அந்த அதிகாரியிடம் இரண்டு பெட்டிகளையும்
தன்னிடம் கொடுக்கும்படி சொன்னதற்கு,
அந்த அதிகாரி, தனக்கு நேருஜியிடமிருந்து வந்த செய்தியின்படி,
தானே நேரடியாகச் சென்று நேருஜியிடம் அந்தப் பெட்டியைக்
கொடுத்தாக வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்.

இதன் பின்னர், ஆர்.கே.நேரு அந்த அதிகாரியை காரில்
ஏற்றிக்கொண்டு, கஸ்டம்ஸ் விதிமுறைகள் எதையும்
கடைபிடிக்காமல், நேராக நேருஜியின் தீன்மூர்த்தி இல்லத்திற்கு
சென்றாராம்.

நேருஜி, தனது படிப்பறையில் அமர்ந்திருக்க, பெட்டிகள் அவர் முன்
எடுத்துச்செல்லப்பட்டபோது, அவற்றை திறக்கச் சொன்னாராம்.
பெட்டிகளை டோக்கியோவிலிருந்து எடுத்துச்சென்ற அதிகாரி –
அப்போது தான் பெட்டியின் உள்ளே இருப்பதைப் பார்த்தாராம்.
எக்கச்சக்கமான, தங்க மற்றும் வைர நகைகள் அவற்றில் இருந்தன.
சு.சுவாமி சொல்கிறார் – அவற்றின் அப்போதைய மதிப்பு
(1952) சுமார் இரண்டு கோடி இருக்கலாம் என்று….!!!

சு.சுவாமி மேற்கொண்டும் கூறுகிறார் – இந்த நகைகள் பின்னர்
அலஹாபாத் கொண்டு செல்லப்பட்டு உருக்கப்பட்டு,
நேருஜியின் சொந்த கணக்கில் சேர்த்துக் கொள்ளப்பட்டது.
இதன் பின்னர் இந்த பொக்கிஷத்தைப்பற்றி யாரும்
எங்கும் வாயே திறக்கவில்லை….!!!

இந்த ஆண்டு ஜனவரி மாதம் கல்கத்தாவில் பேசும்போது,
சு.சுவாமி மேலும் சொல்கிறார் –

“இந்தியப் பிரதமரின் அலுவலகத்தில், நேதாஜி சம்பந்தப்பட்ட
ரகசிய கோப்புகள் 41 இருக்கின்றன. அவற்றில் 2 ரகசியமற்றது
(declassified) என்று அறிவிக்கப்பட்டது. மீதி 39 கோப்புகள்
இன்னும் ரகசியம் என்றே சொல்லி வைக்கப்பட்டிருக்கின்றன.

இந்த ஆவணங்கள் அனைத்தும் வெளியிடப்பட்டால்,
நேதாஜி தொடர்பான அனைத்து மர்மங்களும் விலகி விடும்.
இவற்றை வெளியிடுவதால் – மற்ற நட்பு நாடுகளுடனான
உறவு கெட்டுப்போகும் என்பதால், PMO இவற்றை
வெளியிடவில்லை. நான் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை வற்புறுத்தி – விரைவில் இவற்றை வெளியிட ஏற்பாடு
செய்வேன் ”

நேதாஜி இறந்து விட்டார் என்று இந்திய அரசால்,
அதிகாரபூர்வமாக செய்தி வெளியிடப்பட்ட பின்னரும்,
தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கு நேதாஜியின் நெருங்கிய
உறவினர்களை மத்திய அரசு வேவு பார்த்துக் கொண்டு
இருந்தது ஏன் …? என்று கேட்கிறார் சு.சுவாமி.

தற்போது, மத்திய அரசில், பிரதமரின் அலுவலகத்தில் ( PMO )
“ரகசியம்” (classified ) என்று தலைப்பிடப்பட்டு
வைக்கப்பட்டுள்ள 39 கோப்புகளில், 20 கோப்புகள் நேதாஜியின்
மறைவு குறித்தவை. முதலில் இந்த கோப்புகள் de-classify
செய்யப்பட வேண்டும். பிறகு உள்துறை அமைச்சகம்,
வெளியுறவுத்துறை அமைச்சகம், ஐபி உளவுப்பிரிவு,
சிபிஐ புலனாய்வுப்பிரிவு, சரித்திர நிபுணர்கள் மற்றும் நேதாஜியின்
குடும்ப உறுப்பினர்கள் சிலர் – ஆகியோரைக் கொண்ட ஒரு
சிறப்பு விசாரணக்குழு அமைக்கப்பட்டு, நேதாஜி சம்பந்தப்பட்ட
அனைத்து விசாரணைகளும் விரிவாக மேற்கொள்ளப்பட
வேண்டும் –

இதைச் சொல்வதும் திருவாளர் சு.சுவாமி தான்….!!!

சுப்ரமணியன் சுவாமி எதிர்க்கட்சியை சேர்ந்தவர் அல்ல.
பாஜக தலைமைக்கு எதிரானவரும் அல்ல.
பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவர்.
பாஜக தேசிய செயற்குழுவின் உறுப்பினர்.
கொள்கை வகுப்புக் குழுவின் தலவர் வேறு …!
ஆனால், அவரே இவ்வளவு தீர்மானமாக வலியுறுத்தியும்,
விஷயம் மேற்கொண்டு முன்னேறாததன் காரணம் என்ன ?

இந்த கோப்புகள் de-classify செய்யப்பட்டு, வெளியாகக்கூடிய
விவரங்களால் நமது நட்பு நாடுகளுடனான உறவு பாதிக்கப்படலாம்
என்று அச்சம் காரணமாக இருக்கலாம் – இதைச் சொல்வதும் சு.சுவாமி தான்.

இதில் சம்பந்தப்பட்ட நாடுகள் மூன்று மட்டும் தான்.
ஜப்பான், ரஷ்யா, பிரிட்டன்.
இதில் ஜப்பான் நேதாஜிக்கு ஆதரவாக செயல்பட்ட நாடு.
எனவே, அதற்கும் இந்த மர்மங்களுக்கும் சம்பந்தம் இருக்க முடியாது.

மீதியுள்ளவை ரஷ்யாவும், பிரிட்டனும் –
சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த சில விவரங்கள்
வெளியாவதால், இப்பபோது இந்த நாடுகளுடனான உறவு
எந்த விதத்தில் பாதிக்கப்படும் …?

குறிப்பாக – இப்போது பதவியில் இருக்கும் யாருக்கும்
இதில் எந்த தொடர்பும் இல்லை என்கிறபோது என்ன பாதிப்பு வரும் ?
அப்படியே மீறி பாதிக்கப்பட்டால் தானென்ன …?

உண்மை வெளியாவதன் விளைவாக அவர்கள் பாதிக்கப்படுவார்கள்
என்றால் – பாதிக்கப்படட்டுமே …!

எந்த காரணத்திற்காகவும் உண்மைகளை மறைக்கும் உரிமை-
யாருக்கும்,, எந்த அரசாங்கத்திற்கும் இல்லை…

ஆனால் – இங்கு வேறு ஒரு சந்தேகம் வருகிறது.
இந்த விஷயத்தில் கட்சிக்கோ, ஆட்சிக்கோ 5% ஆதாயம் கிடைக்கும்
என்றால் கூட, சற்றும் யோசிக்காமல் பாஜக மத்திய அரசு
ஆவணங்களை வெளிப்படுத்தி விடும்.

காங்கிரஸ் போய், பாஜக வந்த பிறகும் – விஷயங்கள் வெளியே
வரவில்லை என்றால், பாஜகவிற்கும் இதனால் எதாவது பாதிப்பு
இருக்குமோ என்கிற சந்தேகம் எழுகிறது…

எது எப்படி இருந்தாலும் சரி –
திருவாளர் சுப்ரமணியன் சுவாமி –
வெறும் வாய்ச்சவடால் சாமியாக இல்லாமல்
இந்த விஷயத்தில் தீவிரமாக செயல்பட்டு,
தானே வெளியிட்டுள்ள உண்மைகளை
அதிகாரபூர்வமாக வெளிவரச் செய்ய வேண்டும்.

இன்னும் எத்தனை நாட்கள் மத்திய அரசு –
இந்த விஷயத்திலும் மவுனமாக இருக்கப்போகிறது ..?

பின் குறிப்பு –

இந்த பகுதியில் எழுதப்பட்டிருப்பவை
முழுக்க முழுக்க சு.சுவாமி சொல்லி இருப்பவற்றை
அடிப்படையாகக் கொண்டே எழுதப்பட்டுள்ளன.

அவர் சொல்லி இருப்பதை நிரூபிக்க வேண்டிய
பொறுப்பு சு.சுவாமிக்கு உண்டு என்பதால் –
முற்றிலுமாக அதை வலியுறுத்தியே இங்கு
எழுதப்பட்டிருக்கிறது.
சு.சுவாமி சொல்லி இருப்பதில் “ரீல்” எவ்வளவு,
“ரியல்” எவ்வளவு என்பது உறுதிப்படுத்தப்பட்டாக வேண்டுமே…!

ஆனால், சு.சுவாமி கூறுவதற்கு அப்பால் –
சில செய்திகளும் வெளிவந்திருக்கின்றன.
அவற்றின்படி, கடைசியாக நேதாஜி விமான விபத்து
நிகழ்ந்த இடத்தில் கிடைத்த அத்தனை பொருட்களும்
டெல்லியில் மியூசியத்தில் (National Archive )
“சீல்” செய்யப்பட்டு வைக்கப்பட்டிருக்கின்றன.

அது குறித்த தகவல் கீழே –

ina treasure-1

Gallery | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

நேதாஜி சேமித்த INA பொக்கிஷத்தை நேருஜி தனதாக்கிக் கொண்டு விட்டாரா ..? சு.சுவாமி சொல்வது நிஜமா ? க்கு 5 பதில்கள்

 1. Pingback: நேதாஜி சேமித்த INA பொக்கிஷத்தை நேருஜி தனதாக்கிக் கொண்டு விட்டாரா ..? சு.சுவாமி சொல்வது நிஜமா ? | Classic Ta

 2. வி.கோபாலகிருஷ்ணன் சொல்கிறார்:

  கே.எம்.ஜி,

  நேதாஜியைப் பற்றி தெரியாத பல விவரங்கள்
  இந்த தொடரின் மூலம் புதியதாக தெரிய வந்தது.
  இன்று தான் அரசியல் – சுயநலவாதிகளின்
  சாக்கடையாக இருக்கிறது என்று பார்த்தால்
  சுதந்திர போராட்டத்தின்போதே இதற்கு சற்றும்
  குறையா அளவில் பொறாமையும், வஞ்சனையும்
  பரவிக்கிடந்தது தெரிகிறது. நேதாஜி இருந்தபோதும்,
  மறைந்த பிறகும் கூட, அவர் புகழ் பரவாவண்ணம்
  தடுக்க நடந்திருக்கும் முயற்சிகள் அனைத்தையும்
  படிக்கப் படிக்க மனம் கனக்கிறது.
  அந்த மனிதர் தன் வாழ்நாள் முழுவதையும்
  பதட்டத்திலேயும், போராட்டத்திலேயுமே கழித்திருக்கிறார்.
  இன்று அவர் மறைந்த பிறகும் கூட அவரை பற்றிய
  உண்மைகள் வெளிவராமல் பதவியில் இருக்கும் ஒவ்வொரு
  அரசும் தன்னால் இயன்ற வரை தடுக்கின்றன.
  இந்த கட்டுரையை நீங்கள் எழுதியது அந்த மாமனிதர்
  நேதாஜிக்கு செய்திருக்கும் மிகப்பெரிய மரியாதை.
  வாழ்த்துக்கள் காவிரிமைந்தன் ஜி.

  வி.கோபாலகிருஷ்ணன்

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நன்றி திரு.கோபாலகிருஷ்ணன்.

   இந்த இடுகையின் மூலம் நான் காந்திஜியையோ,
   நேருஜியையோ – அவர்கள் செய்த தியாகங்களையோ
   குறைத்துக் கூற விரும்பவில்லை…

   அதே சமயம், இந்திய சுதந்திரப்போராட்டம் என்பது
   இந்த இரண்டு பேரைச் சுற்றி மட்டும் இல்லை –
   வெளியே தெரிந்த, பெயரே தெரியாத எத்தனையோ
   தேசபக்தர்களின் லட்சிய வெறியும், தியாகங்களும்,
   அடங்கியது தான் என்பதைத்தான் சொல்ல முயல்கிறேன்.

   நேதாஜி என்னும் மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரனுக்கு,
   ஒரு தலை சிறந்த போராளிக்கு, நமது சரித்திரத்தில்
   உரிய இடம் கொடுக்கப்படவில்லை என்பதையும்
   சொல்ல விரும்புகிறேன்.

   நண்பர் தங்க.ராஜேந்திரன் கூறியது போல் – நம்மில்
   பெரும்பாலோர் – நடுநிலைப்பள்ளியில் பாட புத்தகங்களில்
   படித்தது மட்டும் தான் சரித்திரம் என்று நினைத்துக்
   கொண்டிருக்கிறோம்.

   இதை எழுத இன்னொரு காரணம் – நிகழ்காலத்தில்,
   வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி, வாய்ச்சவடால்
   அரசியல் நடத்தி வரும் திருவாளர் சு.சுவாமி
   போன்றவர்களின் பொய் வேடங்களையும் இயன்ற
   வரையில் களைய வேண்டும் என்பது.

   தங்கள் கருத்துக்களுக்கு நன்றி நண்பரே.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 3. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  “எரிகின்ற வீட்டில் பிடுங்கியவரை இலாபம்” என்றொரு சொல்லடை நம் தமிழில் உள்ளது. இதுதான் எனக்கு இப்போது ஞாபகத்திற்கு வருகிறது.
  அதேபோல “வாய்ப்பு கிடைக்காதவன்தான்” யோக்கியன் என்பதிலும் எனக்கு நம்பிக்கை உள்ளது.
  மேலும், மோதிலால் நேரு தன் மகன் ஜவஹர்லால் நேருவை இங்கிலாந்திற்கு படிக்க அனுப்பியபோது அந்த கல்லூரியில் பல வாசல்கள் இருப்பதாகவும், தன் மகன் எந்த வாசலிலிருந்து வெளியே வந்தாலும் காத்திருக்கக்கூடாது என்பதற்காக அனைத்து வாசல்களிலும் ஒரு ஓட்டுனரோடு ஒரு கார் நிற்குமாம். அவ்வளவு பெரிய செல்வந்தரின் மகனான ஜவஹர்லால் நேருக்கும் ஆசை விட்டுவிடவில்லை என்பதைதான் இதிலிருந்து நான் அறிந்துக்கொள்வது.

  சுபரமணியம் சாமியை நினைத்தால்… “யோக்கியன் வர்றான், சொம்பை எடுத்து உள்ளே வை” என்பதும் எனக்கு ஞாபகம் வருது.

  ஆக மொத்தத்தில் “ஜெய்ஹிந்த்” என்று உத்வேகப்படுத்திய ஒரு வீரனுக்கு நாம் செய்யும் மரியாதை இந்தளவுக்குத்தான் உள்ளது. இந்த லட்சணத்தில் தேசிய கீதத்தில் இப்போது மாற்றம் செய்யவேண்டுமாம்!

  இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாக போகட்டும் என்று சொல்ல நினைத்தாலும்… பாரதி, சுபாஷ் சந்திர போஸ், திலகர், கப்பலோட்டிய தமிழன் வ உ சி போன்றோரின் தியாகத்தால்… இன்றில்லாவிட்டாலும் நாளையாவது மாறும் என்ற நம்பிக்கை தூரத்தில் தெரிகிறது.

  ஒரு தேசிய வீரனை பற்றி இன்றைய தலைமுறையினர் அறிந்துகொள்ள நீண்ட விவரமான அருமையான ஒரு பதிவை தந்த திரு காவிரிமைந்தன் அவர்களுக்கு என் வாழ்த்துகள்.

 4. Jayakumar சொல்கிறார்:

  இன்னும் கொஞ்சம் போனால் நான் தான் அட்லி கிட்டே சொல்லி இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி தந்தேன் என்று சொல்வார் இந்த சு சாமி.

  அவர் சொல்வதை எல்லாம் ஒரு பொருட்டா எடுத்திகிட்டு ஆராய்ச்சி பண்ணப் போயிட்டீங்களே.

  Jayakumar

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.