கட்காரிஜியிடமிருந்து – பயமுறுத்தும் செய்திகள் …!!! ” நா காவூங்கா – நா கானே தூங்கா “

rameswaram-thalaimannar

நேற்று வெளியாகியிருக்கும் ஒரு செய்தி இது –

———-

ராமேசுவரத்திலிருந்து இலங்கைக்கு போக்குவரத்தை மேம்படுத்த
ரூ.22,000 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை மேற்கொள்ள
மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்தத் திட்டத்துக்கு ரூ.22 ஆயிரம் கோடி நிதியுதவி அளிப்பதாக
ஆசிய மேம்பாட்டு வங்கி தெரிவித்துள்ளது.

நெடுஞ்சாலைத் துறை எந்திரங்கள் தொடர்பான கருத்தரங்கம்
தில்லியில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மத்திய தரைவழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறுகையில்,

இந்தியாவிலிருந்து அண்டை நாடுகளுக்கு வாகனப் போக்குவரத்தை
மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ராமேசுவரத்திலிருந்து இலங்கைக்கு பாலம் கட்டும் திட்டத்துக்கு
ஆசிய வளர்ச்சி வங்கி ரூ.22 ஆயிரம் கோடி கடனுதவி வழங்கத்
தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்தத் திட்டத்தில் ராமேசுவரத்திலிருந்து இலங்கைக்கு கடல்வழிப் பாலங்களும், கடலுக்கு அடியில் சுரங்கங்களும் அமைக்க திட்டமிடப்பட்டு வருகிறது

ராமேசுவரத்தின் தனுஷ்கோடியிலிருந்து இலங்கைக்கு பாதை
அமைப்பது மூலம் சார்க் நாடுகள் அனைத்தும் சாலை மார்க்கமாக
இணைக்க வழி ஏற்படும். மேலும், நாடு முழுவதும் 50 லட்சம்
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க முடியும்.

நெடுஞ்சாலை, கப்பல் போக்குவரத்துத் துறைகளில்
ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு மத்திய அரசு
ஏற்கெனவே ஒப்புதல் அளித்துள்ளது என்று நிதின் கட்கரி
தெரிவித்தார்.

( http://www.nakkheeran.in/Users/frmnews.aspx?N=146501 )

————-

இது குறித்து பல கேள்விகள் எழுகின்றன –

– இந்த மாதிரி ஒரு யோசனை மத்திய அரசிடம் இருப்பதாகவே
இப்போது தான் செய்தி வெளிவருகிறது….
அதற்குள் முடிவே எடுத்து விட்டதாக அமைச்சர்
சொல்கிறார்… எப்படி ….?

– இந்தியா மட்டும் தன்னிச்சையாக இந்த திட்டத்தை
நிறைவேற்றி விட முடியாது. இது குறித்து இலங்கையிடம்
விவாதித்து, அவர்களின் ஒப்புதலைப் பெற்றாகி விட்டதா …?

-இதெல்லாம் என்ன அவ்வளவு ரகசியமான விஷயங்களா …?
இதைப்பற்றிய செய்திகளே இதுவரை ஏன் வெளிவரவில்லை …?

– தமிழ்நாட்டில், மத்திய அரசால் முன்னுரிமை கொடுத்து
நிறைவேற்றப்பட வேண்டிய எவ்வளவோ திட்டங்கள் இருக்கின்றன –

– இலங்கை ராணுவத்திடம் உதை/வதைபடுவதை தவிர்க்க- தமிழக மீனவர் ஆழ்கடலுக்குச் சென்று மீன் பிடிக்க
அரசு உதவியோடு ஒரு செயல் திட்டம்….

-குளச்சல் துறைமுக திட்டம் ( பாஜக தலைவர் பொன்ரா. அவர்கள் மிகத்தீவிரமாக முயற்சித்துக் கொண்டிருக்கும் திட்டம் )

-குலசேகர பட்டினத்தில் இஸ்ரோவின் ராக்கெட் ஏவுதளம்
அமைக்கும் திட்டம் …..

– இவை எதைப்பற்றியும் யோசிக்காமல், முக்கியமாக தேவைப்படும் திட்டங்களை புறந்தள்ளி விட்டு –
இந்த ராமேஸ்வரம்-தலைமன்னார் கடல்-ரோடு திட்டம் எந்த “மன்னாரி”ன் தலையில் உதித்தது ?

-எப்போது, யார் மூலம் இந்த திட்டம் முன்மொழியப்பட்டது… (தமிழக கட்சிகள் எதுவுமே, இதுபற்றி யோசித்தது கூட கிடையாது… )

– இந்த மாதிரி ஒரு திட்டம் நிறைவேறினால் அது தமிழ்நாட்டில்
எத்தகைய விளைவுகளை உண்டாக்கும் என்று யோசித்தார்களா …?
இது குறித்து தமிழக அரசிடம் கலந்தாலோசிக்கப்பட்டதா ..?

– இந்த பிராந்தியத்தில் உயிர்பிழைக்கும் மீனவர்களின்
வாழ்வாதாரம் எந்த அளவிற்கு பாதிக்கப்படும் என்று
யோசித்தார்களா ?

– இந்த கடல்பிராந்தியத்தின் சுற்றுச்சூழல் எந்த அளவிற்கு
பாதிக்கப்படும் என்பதைப் பற்றி எதாவது ஆராய்ச்சி நடந்ததா ?

எல்லாவற்றிற்கும் மேலாக –
இப்போது திடீரென்று இப்படி ஒரு திட்டத்திற்கான
அவசியம் என்ன …? இப்படி ஒரு பாதை வேண்டுமென்று
யார் கேட்டது …?

– இந்த திட்டம் உண்மையில் பலன் அளிக்கக்கூடியதா …?
தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு தினமும் பயணிக்கும் தோராயமான பயணிகளின் எண்ணிக்கை குறித்த
புள்ளி விவரங்கள் திரட்டப்பட்டனவா ?

– வாரம் இரண்டு முறை என்று தூத்துக்குடிக்கும்,
தலைமன்னாருக்கும் இடையே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு
முன்னர் நடத்தப்பெற்ற கப்பல் சர்வீஸ், குறிப்பிட்ட அளவில்
பயனாளிகள் இல்லை என்கிற காரணத்தால் கைவிடப்பட்ட
விஷயம்
சம்பந்தப்பட்ட அமைச்சகத்திற்கு தெரியுமா …?
அது தெரிந்தும் தான் – இந்த திட்டமா …?

-22,000 கோடி ரூபாய் என்பது அமைச்சருக்கு அவ்வளவு லகுவான தொகையாகத் தெரிகிறதா …? இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால்,

அசலை எடுப்பது கிடக்கட்டும், வட்டியை
கட்டும் அளவிற்கு கூட வருமானம் இருக்காது என்பது
அமைச்சகத்திற்கு தெரியாதா …?

– இவர்கள் எப்போது feasibility study நடத்தினார்கள் …?

– உரிய முறையில் project report தயாரிக்கப்பட்டதா …?
எந்த கம்பெனியால் …? “புர்தி” கம்பெனியா …?

– நான்கு வருடங்களுக்கு முன்னர், ஐக்கிய முன்னணி மத்திய
அரசில் ஆட்சியிலிருந்தபோது, கப்பல் போக்குவரத்து அமைச்சர் ( தமிழ்நாட்டுக்காரர் தான் ) – கணக்கில் ஒரு 800 கோடி ரூபாய் போய்ச்சேர்ந்தது …..முடிக்க முடியாத திட்டம் என்று தெரிந்தே – சாப்பிடுவதற்கென்றே திட்டம் துவக்கினார்கள்…

– இந்த ஆட்சியில் நிச்சயம் முடிக்க முடியாது என்று
தெரிந்தே -இப்போது 22,000 கோடியில் இப்படி ஒரு திட்டமா …?
யாருக்காக இந்த திட்டம் …. ?

கட்காரிஜி யோசனைகள் எல்லாமே திகிலைக் கிளப்புவதாக
இருக்கிறது…. எல்லாமே ஆயிரக்கணக்கான கோடிகள் தான் ….!!!

” நா காவூங்கா – நா கானே தூங்கா “
தமிழர்களே, தமிழர்களே – சீக்கிரம் இந்தி கற்றுக் கொள்ளுங்கள்….!
தேசத்தில் என்ன தான் நடக்கிறது என்றாவது
தெரிந்து கொள்ள வேண்டாமா …!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to கட்காரிஜியிடமிருந்து – பயமுறுத்தும் செய்திகள் …!!! ” நா காவூங்கா – நா கானே தூங்கா “

 1. கந்தசாமி சொல்கிறார்:

  1. Please go thro the link https://en.wikipedia.org/wiki/Odious_debt.

  2. 1927 இல் அலெக்சாண்டர் சாக் என்பவர் “முறையற்ற/நியாயமற்ற கடன்” என்கிற புதிய கோட்பாட்டை உருவாக்கினார். அதன்படி, சில கடன்களை முறையற்றதாகவும் நியாயமற்றதாகவும் வரையறுத்து விடலாம். அவ்வாறு வரையறுக்கப்பட்ட கடன்களை, திருப்பிச் செலுத்தத் தேவையில்லை என்றார்.

  “முறையற்ற கடனாக” அறிவிக்கப்படுவதற்கு மூன்று முக்கிய காரணிகள் இருக்கவேண்டும்:
  மக்களின் அனுமதி பெறப்படாமல் அரசாங்கமே தன்னிச்சையாக கடன் வாங்குதல்,
  வாங்கிய கடனை மக்களின் நலன்களுக்குப் பயன்படுத்தாமல் இருத்தல்,
  கடன் கொடுத்தவருக்கும் இவ்வுண்மைகள் தெரிந்திருத்தல்
  ஆகிய மூன்றும் ஒரு கடனில் தொடர்புடையவையாக இருந்தால், அக்கடனை “முறையற்ற கடன்” என அறிவித்து, திருப்பிச் செலுத்தத் தேவையில்லை என்பதுதான் அக்கோட்பாட்டின் விதி.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் கந்தசாமி,

   அற்புதமான வியாக்கியானம்….
   எப்படித்தான் உங்களுக்கு இது நினைவிற்கு வந்ததோ…!

   கடன் கொடுக்கப்போகிறவர்கள் Asian Development Bank -ஆம்….
   யாரிடம் அய்யோ பாவம் சொல்வது என்று தெரியவில்லை…!

   ஆக – யாருமே கட்காரிஜியின்
   இந்த திட்டத்தை எதிர்ப்பதாக இல்லை …..!!!
   தமிழகத்தின் எந்த கட்சியும் இதை கண்டுகொள்ளவே இல்லை…

   மக்களுக்கு மறத்து போய் விட்டது….

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 2. today.and.me சொல்கிறார்:

  கா.மை.ஜி,

  //தமிழர்களே, தமிழர்களே – சீக்கிரம் இந்தி கற்றுக் கொள்ளுங்கள்….!
  தேசத்தில் என்ன தான் நடக்கிறது என்றாவது
  தெரிந்து கொள்ள வேண்டாமா …!!! //

  உண்மை. உண்மை….

  மையஅரசின் திட்டங்கள் அறிவிப்புகள் செயல்பாடுகளைப் பொறுத்தவரை
  1. நமது கேள்விகேட்கும் திறனை அதிகரித்துவிட்டார்கள்.
  2. ஒவ்வொரு தமிழனும் கண்டிப்பாக இந்தி படித்துக்கொண்டுதான் ஆகவேண்டும்.

  ————-

  இது பதிவுக்குச் சம்பந்தமில்லாததுதான். ஆனாலும் இந்தப் பதிவைப் பயன்படுத்திக்கொள்கிறேன், அனுமதியுங்கள்.

  நண்பர்களே, பேச்சுவழக்கு இந்தி சொல்லிக்கொடுப்பவர்கள் யாராவது சென்னைப்பகுதியில் இருக்கிறீர்களா? அல்லது ஸ்கைப் போன்ற வசதிகளில் முடியுமா? யாராவது பின்னூட்டத்தில் தகவல் தெரிவியுங்களேன்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் டுடேஅண்ட்மீ,

   வெறும் “பேச்சு வழக்கு இந்தி” போதுமா…..!
   யாருடைய பேச்சு புரியவேண்டும்….?
   (குஜராத்திகாரர்கள், பீகாரிகள், உ.பி.வாலாக்கள் –
   ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பேசுவார்களே …!!! )

   என்ன சம்பளம் கொடுப்பீர்கள் …?
   கட்டுப்படியாகும் என்றால் யோசிக்கலாம்….!!!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 3. Pingback: கட்காரிஜியிடமிருந்து – பயமுறுத்தும் செய்திகள் …!!! ” நா காவூங்கா – நா கானே தூங்கா “ | Classic Tamil

 4. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  திட்டம் போட்டு நிதி ஒதுக்கியாச்சா?
  அப்படீன்னா ஒதுக்கவேண்டியதுதானே?
  ஹிந்தியை தமிழில் எழுதி அதை படித்தால் ” நான் பாடவுமாட்டேன், பாட விடவுமாட்டேன்” என்று அர்த்தமாகிறது!
  என்னமோ ஒண்ணுமே புரியவில்லை!

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   அஜீஸ்,

   இப்படி உங்களைப் போல் இந்தி தெரிந்தவர்கள் நாலு பேர்
   வந்தால் தானே மொழியின் அழகை
   இந்த மாதிரியெல்லாம் ரசிக்க முடிகிறது… !
   very good interpretation …!!!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 5. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  ஆட்சிக்கு வருவதே, சுருட்டத்தான். வெறும் ஆளாயிருந்த பாலு, எத்தனை ஆயிரம் கோடி சுருட்டியுள்ளார் என்பது எல்லோருக்கும் தெரியும். கட்காரி ஏற்கனவே ‘பிஸினஸ்மேக்னட்!. நல்லவேளை, தில்லியிலிருந்து ‘நேராக, சென்னைக்கு ஒரு மேம்பாலம் போடப்போகிறோம் என்று சொல்லவில்லையே. அதை நினைத்து சந்தோஷப்பட வேண்டியதுதான். கடலில் தோண்டுவதற்கு பகுதி கான்டிராக்ட் பாலுக்குக்கொடுத்தால், திமுகாவும் மர்றவர்களும் வாயைப் பொத்திக்கொள்வார்கள்.

  கா.மை..சார்.. அது எப்படி எல்லா அரசியல்வாதிகளின் பிள்ளைகள் சிறு வயதிலேயே, கணக்கில்காட்டும் பணமாக 25+ கோடிக்குச் சொந்தக்காரர்களாகிவிடுகிறார்கள்? ‘நாங்கள்ளாம் வெளினாட்டில் பலவருடங்கள் உழைத்தும் ஒரு கோடியைக் கண்ணால் காணமுடிவதில்லை. அந்த ரகசியத்தை நீங்களாவது புலனாய்வு செய்து எழுதக்கூடாதா? (உதாரணம், க.மொழி-27 கோடி, உதயனிதி-25+ கோடி, ஸ்டாலின் (கடுமையாக கட்சிக்காக உழைப்பவர். அவருக்கு எப்படி பிஸினஸுக்கு நேரம் இருக்கும்?) – 30+ கோடி, திருமதி தயாளு அம்மாள் – 60 சதவிகிதத்துக்கு எப்படி பணம் வந்தது? என்ன பிஸினஸ்? அன்புமணி-ரியல் எஸ்டேட்டாம் (டாக்டர். ஆனால் அந்த புரொபஷனில் இத்தனை கோடி வருமானம் கணக்குக் காண்பிக்க முடியாது என்று நினைக்கிறேன்). ப.சி.மைந்தன் பல்லாயிரம் கோடி. பா.ஜா.கா(?) தயா அழகிரி-பொறியியல் கல்லூரி (அவர் படித்ததே டிகிரிகூட இல்லை)

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.