சு.சுவாமிக்கு புதிய ” ரோல் “- ஊழல்வாதிகளை “பாதுகாக்கும் ” godfather ரோல் “…!!!

.

.

காங்கிரஸ் கூட்டணி மத்தியில் ஆட்சியிலிருந்தபோது, ஊழலுக்கு எதிராக திருவாளர் சுப்ரமணியன் சுவாமி பல வழக்குகளைத் தொடர்ந்ததன் மூலமாக படித்த நடுத்தர வகுப்பு மக்களிடையே ஒரு ” பாப்புலர் ஹீரோ ” ஆனார்.

ஆனால், பாஜக ஆட்சிப்பொறுப்பை ஏற்ற பிறகு, முதலாண்டு
முடியும் நேரத்தில், புற்றீசல் போல் வரிசையாக புறப்படும்
ஊழல் புகார்களை சமாளிக்க முடியாமல் கட்சித் தலைமையும்,
பிரதமரும் திணறுகிறார்கள்.

இப்போது பாஜக ஊழல்வாதிகளை பாதுகாக்கும் பொறுப்பை
ஏற்று சுப்ரமணியன் சுவாமி கட்சியில் தான் ஒரு தவிர்க்க
முடியாத சக்தி என்பதை தன் “தெறமையை காட்டி”
நிரூபிக்கப் புறப்பட்டிருக்கிறார்.
ஊழல் புகாரில் மாட்டிக்கொள்ளும் பாஜக வினர் யாராக
இருந்தாலும், அவர்களுக்கு இப்போது சு.சுவாமி தான் புகலிடம்.

முதலில் திருமதி சுஷ்மாவுக்கு ஆதரவாக இறங்கினார்.
பின்னர், திருமதி வசுந்தரா ராஜே – ஒரு ஜான்சி ராணி –
அவரை யாரும் அசைக்கக் கூட முடியாது என்று துணைக்கு
வந்தார். பின்னர் திருமதி ஸ்ம்ரிதி – கடைசியாக ம.பி.முதல்வர்
சௌஹான்.

மத்திய பிரதேச மெகா ஊழலாக “வியாபம்” வெடித்துக் கிளம்பியதும், எதிர்க்கட்சிகள் திரு. சௌஹானைக் குறி வைத்தன.
சௌஹானை குறை கூறுவது அபத்தம். ஊழலை வெளியே
கொண்டு வந்தது, STF விசாரணைக்கு ஏற்பாடு செய்தது எல்லாம்
சௌஹான் தான். அவரே ஊழலில் சம்பந்தப்பட்டிருந்தால்
தானே முன்வந்து விசாரணைக்கு ஏற்பாடு செய்வாரா என்றெல்லாம்
கேட்டார்.

நேற்று, “வியாபம்” தொடர்பாக NDTV தொலைக்காட்சி
ஒரு புயலைக் கிளப்பியது. வருமான வரி இலாகாவில்
தாக்கல் செய்யப்பட்டிருந்த ஒரு ‘ரிடர்ன்”-ஐ காட்டி
பல புகார்களை முன்வைத்தது.

சுதீர் சர்மா என்பவர் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பெரிய
கோடீஸ்வரர் – சுரங்கத் தொழிலதிபர்,
பல கல்லூரிகளை நடத்தும் “கல்வித் தந்தை” !
“வியாபம்” ஊழலில் இவர் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கூறி,
2014 ஜூலையில் STF அவரைக் கைது செய்து சிறையில்
வைத்திருந்தது.

sudhir-sharma-vyapam-scam
( சுரங்க மற்றும் கல்வி மந்திரியின் பினாமி –
சுரங்க”ஓனர்” மற்றும் “கல்வித் தந்தை”- சுதீர் சர்மா )

sudhir-sharma-house-

vns gp of colleges, bhopal
(இவை அவர் கொள்ளையடித்த பணத்தில் ஒரு பகுதி …)

இந்த சுதீர் சர்மா – பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் பலருக்கு பல விதங்களில் பண உதவி செய்திருப்பது
2013 ஆம் ஆண்டிற்கான அவரது வருமான வரி ரிடர்ன் – லிருந்து
தெரிய வந்திருக்கிறது….!
பல பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் முக்கியஸ்தர்களின் ( including Suresh Soni of the RSS and Prabhat Jha, then state president of the BJP,
Petroleum Minister Dharmendra Pradhan,
Laxmikant Sharma, former Mining and Education
Minister of Madhya Pradesh and others )
விமான டிக்கெட்டுகளை தானே ரொக்கமாக
பணம் கொடுத்து வாங்கிக் கொடுத்திருப்பது, மற்றும் அவர்கள்
சார்பாக பல “பில்”களுக்கு பணம் கொடுத்திருப்பது எல்லாம்
தெரிய வந்திருக்கின்றன. இந்த் சுதீர் சர்மாவிற்கு சொந்தமான
இரண்டு கல்லூரிகளின் சேர்க்கைகளிலும் பல ஊழல்கள்
நிகழ்ந்திருப்பதும், கல்லூரிகளிலிருந்து – லட்சக்கணக்கில் பணம்,
ரொக்கமாக சுதீர் சர்மாவிடம் அடிக்கடி கொண்டு வந்து
கொடுக்கப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

சுதீர் சர்மாவின் இருப்பிடங்களில் வருமான வரி இலாகாவும், அமலாக்கப்பிரிவும் நிகழ்த்திய ரெய்டுகளில் சிக்கிய டயரிகள் மூலமாகவும், வருமான வரி ரிடர்ன் மூலமாகவும் இந்த
தகவல்கள் வெளிப்பட்டிருக்கின்றன.

இந்த சுதீர் சர்மா,
முன்னதாக சுரங்க மற்றும் கல்வி மந்திரியான லக்ஷ்மிகாந்த்
சர்மாவிடம் உதவியாளராக பணியாற்றி பின்னர் சுரங்க மற்றும்
கல்வி அதிபராக மாறியவர் ( லக்ஷ்மிகாந்த் சர்மாவின் பினாமி
என்றும் வைத்துக் கொள்ளலாம் ).

சம்பந்தப்பட்டவர்களை, NDTV தொலைக்காட்சி நிருபர்
இது குறித்து கேட்டபோது – எங்கள் விமான பயண டிக்கெட்டுகள்
கட்சி அலுவலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டன. அதற்கு
சுதீர் சர்மா பணம் கொடுத்தது பற்றி எங்களுக்கு தெரியாது.
ஏன் – கட்சி சார்பாக அவரே கொடுத்திருந்தால் தான் என்ன ..?
என்று கேட்டிருக்கிறார்கள்….!!!

இதெல்லாம் ஒரு பக்கமிருக்க –

ஊழல் குற்றவாளிகளை காப்பாற்ற புதிய பொறுப்பினை
ஏற்றுக்கொண்டிருக்கும் நமது ஹீரோ நேற்றிரவு கேட்கிறார் –

“NDTV தொலைக்காட்சிக்கு – வருமான வரி ரிடர்ன்
விவரங்கள் எப்படித் தெரிய வந்தன …? வருமான வரி
இலாகாவில் ஊழல்வாதிகள் நிறைந்து விட்டனரா ..? ”

சு.சுவாமியின் ட்விட்டர் –

su.swamy twitter on vyapam-2

இனி சு.சுவாமிக்கு நிறைய புதிய வாடிக்கையாளர்கள்
கிடைப்பார்கள்… வேட்டை தான்….!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to சு.சுவாமிக்கு புதிய ” ரோல் “- ஊழல்வாதிகளை “பாதுகாக்கும் ” godfather ரோல் “…!!!

 1. Pingback: சு.சுவாமிக்கு புதிய ” ரோல் “- ஊழல்வாதிகளை “பாதுகாக்கும் ” godfather ரோல் “…!!! | Classic Tamil

 2. Siva சொல்கிறார்:

  SuSa is a Great joker/baboon with skills in somersault/monkey jumping etc. so it is not surprising that he protects criminals in bjp.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் சிவா,

   மன்னிக்கவும். சில பகுதிகளை விலக்கி விட்டேன்.
   நமக்கு ஜாதிகள் வேண்டாமே…

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 3. ravi சொல்கிறார்:

  கே.எம் .. NDTV — ஈயத்தை பார்த்து இளித்ததாம் பித்தளை என்பார்கள். தொடர்ந்து நஷ்ட கனக்கு காட்டி கொண்டே ஒரு நிறுவனத்தை தொடர்ந்து நடத்த முடியும் என்பதற்கு NDTV ஒரு சிறந்த உதாரணம்.இவர்களின் தொடர்புகள் 2ஜி விஷயத்தில் தான் பல் இளிததே.. அதிலும் பர்கா தத் லட்சணம் உலகு அறிந்தது . இப்போது பாருங்கள் .. லலித் மோடி பற்றி வாயே திறக்க மாட்டார்கள் ..

  தோல்பூர் அரண்மனை விஷயத்தில் , இவர்களின் இரட்டை நிலை பற்றி பார்தேன் .. ஆங்கிலத்தில் சொல்வார்கள் ..(Lie Big retract small ). அது போலதான் ndtv யும் ..

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.