சு.சுவாமி – சூதாட்டகிரிக்கெட்டை தடை செய்ததற்கு தமிழர்கள் வருந்துகிறார்களாம் – ஸ்ரீனிவாசனுக்காக – அப்பீல்..!

.

.

சூதாட்ட கிரிக்கெட்டை தடை செய்ததால்
தமிழர்களின் பெருமை குலைந்து விட்டதாம்.
BCCI திரு என்.ஸ்ரீனிவாசன் அவர்கள் மீது தமிழர்கள்
மிக உயர்ந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறார்களாம்…

எனவே, விதிக்கப்பட்ட தடையை மறு பரிசீலனை செய்ய
வலியுறுத்தி, மைலாப்பூர்வாசி என்கிற முறையிலும்,
முன்னாள் மதுரை பாராளுமன்ற உறுப்பினர் என்கிற முறையிலும்
தமிழர்களின் பெருமையை மீட்க
– தான் பொது நல மனு தாக்கல் செய்யப்போவதாக கூறுகிறார் திருவாளர் சு.சுவாமி….!!!

திரு சு.சுவாமி அவர்களின் செய்தி அறிக்கை கீழே –

s.swamy on csk - tamil pride-2

புதிய பிசினஸ் துவங்கி இருக்கிறது –
வரிசையாக வாதாட ஆரம்பித்திருக்கிறார்….
முதலில் கற்பழிப்பு சாமியார் ஆசாராம் சார்பில் –
பிறகு ராஜஸ்தான் – திருமதி வசுந்தரா ராஜே சார்பில் –
பின்னர் ம.பி.”வியாபம்” ஊழல் ஆசாமிகளின் சார்பில் –
தற்போது – கிரிக்கெட் சூதாடிகளின் சார்பில் –

அடேயப்பா – எப்பேற்பட்ட கொள்கை வீரர் …!!!
( இப்போதெல்லாம் சம்பந்தப்பட்டவர்களுக்கே தெரிகிறது …எங்கே, யாரைப்பிடித்தால் காரியம் நடக்குமென்று …!!!
அதான் க்யூவில் வருகிறார்கள் … )

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

9 Responses to சு.சுவாமி – சூதாட்டகிரிக்கெட்டை தடை செய்ததற்கு தமிழர்கள் வருந்துகிறார்களாம் – ஸ்ரீனிவாசனுக்காக – அப்பீல்..!

 1. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  படிப்பறிவு இல்லாமல் வேலைவெட்டியும் இல்லாதவன் போக்கிரி ஆகிறான்.
  படிப்பறிவு பெற்று வேலைவெட்டியில்லாதவன் சுனா சானா ஆகிறான்.

 2. Pingback: சு.சுவாமி – சூதாட்டகிரிக்கெட்டை தடை செய்ததற்கு தமிழர்கள் வருந்துகிறார்களாம் – ஸ்ரீனிவாசனுக்

 3. bandhu சொல்கிறார்:

  சீனிவாசன்.. ‘குடுத்த காசுக்கு மேல கூவறாரே இவர்..’ ன்னு நினைச்சிருப்பாரோ?

 4. Siva சொல்கிறார்:

  Susa is onna number thillalangadi person. He changes his color more than pachonthi. Any way he acknowledge himself that at last/at least he is a Tamil.

  Note: I have doubt whether use of Tamilian to describe Tamil people is correct. I think we can simply say Tamils

  • R.Palanikumar சொல்கிறார்:

   When English speaking people are called as English,no harm in Tamil speaking people are called Tamils.(But the problem is many Tamils are named as Tamil…Tamil selvan,Tamilarasan,Tamil mani,Tamil selvi..etc. So if one person is introduced as ,He/She is Tamil,there will be a little confusion)

 5. today.and.me சொல்கிறார்:

  சுவாமி ப(க்)தர்கள் லைன் கட்டி சண்டைக்கு வருவார்களே? இந்த இரண்டு இடுகைகளிலும் யாரையும் காணோமே? சுவாமி வாங்கிவைப்பதை எண்ணி அடுக்குவதற்குச் சென்றுவிட்டார்களா….. ஆச்சரியக்குறி.

  • எஸ் சொல்கிறார்:

   எதிர்கருத்து பின்னூட்டம் போட்டால் எப்படியும் காமை டெலீட் செய்துவிடுவார். ஆகையால் உருப்படியாக வேறு வேலை செய்ய போயிருப்பார்கள்!!! ( இதையும் நீக்குவார் என்பது தெரிந்தும் தற்போதைக்கு வேலைவெட்டி ஏதும் இல்லாததால் இப்பின்னூட்டம் போட்டுள்ளேன்)

 6. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  “தமிழர்கள் வருந்துவார்கள்” என்று சொல்லக்கூடிய தகுதி, முதலில் அ.தி.மு.காவுக்கும் (35+%) இரண்டாவது திமுகாவுக்கும் (22+%) உண்டு. மற்ற யாவருக்கு அந்த உரிமை கிடையாது. வேண்டுமானால், எங்கள் கும்பல் வருத்தப்படுகிறது என்று சொல்லிக்கொள்ளலாம். இந்த இரண்டு கட்சியும்தான் ஆட்சியமைக்கக்கூடிய இரு கட்சிகள். மற்றவர்கள் எல்லோரும் இவர்கள் பின்னால் சீட்டுக்காகப் போகக்கூடியவர்கள்.

  சீனிவாசனை ஆதரிப்பவர்கள் இரண்டுவகையைச் சேர்ந்தவர்கள். ஒன்று, அவரின் தி.மு.கா தொடர்புகளால் ஆதரிப்பவர்கள். (வருங்கால விளம்பரத்துக்கு 60 கோடி அள்ளிக்கொடுத்தது ஞாபகம் வந்திருக்கணமே! வருடக் கணக்காக குங்குமம் இதழில் ஒரு பக்கம் வண்ணத்தில் சிமெண்ட் விளம்பரம் வருவது ஞாபகம் வந்திருக்கவேண்டுமே). இரண்டாவது.. பி.சி.சி.ஐயைக் கைப்பற்றும் நோக்கம் கொண்டவர்கள். அதனால் வரும் வருமானத்தை மறவாதவர்கள். பி.சி.சி.ஐ என்பது, ‘கொள்ளையடிக்கும் கூடாரம்’ என்று சொல்லவில்லை (?). ஆனால், அதில் சம்பந்தப்பட்டிருப்பவர்கள் எல்லோரும் கோடிகளில் பணம் சம்பாதிக்கிறார்கள்.

  சு.சுவாமிக்கு, அருண் ஜேட்லியின்மீது எரிச்சல். (‘நிதித் துறை சுவாமிக்கு வந்திருக்க வேண்டியது, ஜேட்லிக்குப் போய்விட்டதே என்று சுவாமியே நினைத்துக்கொண்டிருக்கிறார்). ஜேட்லியை எரிச்சலூட்ட, சீனிவாசனை ஆதரிக்கிறார்.

  ‘படித்தவன் சூதும் வாதும் செய்தால் அய்யோ என்று போவான்’ என்று ஒரு தமிழர் (பாரதியார்) சொன்னதாக நினைவு.

  தமிழர்களின் பெருமையை அவர் மீட்க வேண்டாம். காவிரிப் பிரச்சனையில், தமிழனின் உரிமையை அவர் மீட்கட்டும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.