மோடிஜி அரசுக்கு பாராட்டுக்கள்…..!!!

SKILL-1

இரண்டு விஷயங்களுக்காக மோடிஜியின் அரசை மனதாரப்
பாராட்ட விரும்புகிறேன்.

முதலாவது –

இந்த நாட்டு இளைஞர்களின் தொழில் திறமையை
மேம்படுத்த pradhan mantri kaushal vikas yojana
என்கிற புதியதொரு திட்டத்தை இரண்டு நாட்களுக்கு முன்னர்
மோடிஜி டெல்லியில் துவங்கி வைத்தார்.

ஏற்கெனவே மாநில அளவில், Industrial Training Institute,
polytechnic போன்ற பயிற்றுவிக்கும் நிறுவனங்கள்
துணையுடன் நடந்து கொண்டிருக்கும் ஒரு விஷயம்
தான் என்றாலும் அது போன்ற ஒரு திட்டத்தை மிகப்பெரிய
அளவில் தேசிய அளவில் கொண்டு சென்று, மத்திய அரசின் நிதி
மற்றும் கட்டமைப்பு உதவிகளுடன் – 2022-ல் 40 கோடி பேர்
என்கிற இலக்குடன், முதல் கட்டத்தில் சுமார் 24 லட்சம்
இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி அளிக்க மத்திய அரசு
ஒரு திட்டத்தை உருவாக்கியுள்ளது.

இந்த திட்டத்தினை தொடர்ந்து இயக்குவதற்காகவே Ministry of
Skill Development and Entrepreneurship என்கிற
புதியதோர் அமைச்சகமும் உருவாக்கப்பட்டிருக்கிறது.
திரு.ராஜீவ் பிரசாத் ரூடி இதன் அமைச்சர்.
National Skill Development Corporation
(NSDC) என்கிற அமைப்பின் பெயரில் செயல்படுத்தப்படும்.

இந்த திட்டத்தில் சேர்ந்து, பயிற்சியை நல்லபடியாக முடிக்கும்
இளைஞர்கள் அனைவருக்கும் குறைந்தபட்சமாக 8000 ரூபாய்
அளவில் ஊக்கத்தொகை கொடுக்கப்படும். பயிற்சி பெறும் நாட்களில் –
அவர்களுக்கு 25,000 முதல் 1.5 லட்சம் வரை வங்கிக்கடனும்
கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. பயிற்சிக்காலம்
4 மாதம் முதற்கொண்டு, இரண்டு ஆண்டுகள் வரை
தேவைக்கேற்ப இருக்கும்.

மத்திய அரசின் பல அமைச்சகங்கள் – ரெயில்வே,
பாதுகாப்பு, சுரங்கம், கப்பல் கட்டும் துறை, தொலைதொடர்பு –
போன்றவைகளின், பலவகைப்பட்ட பிரிவுகளின் கீழ் வரும்
தொழிற்சாலைகள், மாநில அரசின் அதிகாரத்திற்குட்பட்ட
தொழிற்சாலைகள், பெரிய பெரிய தனியார் தொழிலமைப்புகள்
ஆகியவற்றில் இருக்கும் தொழில் கட்டமைப்புகளை
பயன்படுத்திக்கொண்டு –
மிகப்பெரிய அளவில் பத்தாவது,
மற்றும் பன்னிரெண்டாவது வரை படித்த ( தேறிய அல்லது தேறாத ) இளைஞர்களுக்கு பல்வேறு பிரிவுகளில் –முறைப்படியான
தொழில்பயிற்சி அளிக்க பலத்த கலந்தாலோசனைகளுக்குப் பிறகு,
ஒரு முறையான பாடதிட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

அனைத்துவித நவீன பயிற்றுவிக்கும் உபகரணங்களையும்
(training tools ) பயன்படுத்தி அவர்களுக்கு பயிற்சி கொடுக்க
திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே பலமுறை, பல வழிகளில் இதற்கான முயற்சிகள்
நடைபெற்றாலும், இந்த புதிய திட்டம் பல விதங்களில்
மாறுபட்டிருப்பதோடு, சரியான முறையில் நிறைவேற்றப்பட்டால் –
லட்சக்கணக்கான தொழில் திறமையுள்ள இளைஞர்கள்
( Skilled Technicians ) நிச்சயம் உருவாக்கப்படுவார்கள்.
துவக்கத்திலேயே எதிர்பார்க்கும் பலன்கள் கிடைக்காவிட்டாலும்,
இரண்டாண்டுகள் முனைந்து செயல்பட்டால் – நல்ல விளைவுகள்
நிச்சயம்….!

எந்தவித எதிர்மறை விளைவுகளும் விளைவிக்காத ( without causing any negative impact ) ஒரு நல்ல திட்டத்தை செயல்படுத்த முன்வந்தமைக்காக –

மோடிஜி அரசுக்கும், இந்த அருமையான திட்டத்தை
வடிவமைத்த அந்த குழுவில் இருக்கும் அத்தனை பேருக்கும்
நமது மனமார்ந்த பாராட்டுக்கள்.

இது நன்கு வேகம் பிடித்து, விரைவில் நமது எதிர்பார்ப்புகளை
பூர்த்தி செய்ய வேண்டும் என்பது நமது நம்பிக்கை /ஆசை /
எதிர்பார்ப்பு எல்லாம்.

இரண்டாவது –

மத்தியில் மோடிஜி தலைமையில் பாஜக அரசு அமைந்தபிறகு, தமிழ்நாடு சுத்தமாக மறக்கப்பட்டு விட்டது. ஒன்றேகால் ஆண்டுகளுக்கு பின்னர் முதல் தடவையாக –

ஒரு கணிசமான பெரிய திட்டம் தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறது.
சுமார் 3000 கோடி ரூபாய் செலவில் தென் தமிழ்நாட்டில் –
பல புதிய நெடுஞ்சாலைகளும், பல நெடுஞ்சாலைகளின்
விரிவாக்கமும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

இன்று காலை/நண்பகல், அவற்றிற்கான துவக்க விழா
நாகர்கோவில்-சுசீந்திரத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரிஜி
மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய இணையமைச்சர்
பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில்
நடைபெற்றது.

pon.radhakrishnan-2

இந்த சாலைகள்/விரிவாக்க திட்டம் முழுக்க முழுக்க
திரு.பொன்.ராதாகிருஷ்ணன் அவர்களின் முயற்சியின் விளைவு
என்று தான் கூற வேண்டும். சற்றும் ஈகோ பார்க்காமல்,
சம்பந்தப்பட்ட அத்தனை பேரையும் நேரில் சென்று பார்த்து,
அனைவரின் ஒத்துழைப்பையும் பெற்று –
இந்த திட்டங்களை தமிழ்நாட்டிற்கு கொண்டு வர அவர்
எடுத்துக்கொண்ட முயற்சிகள் ஏராளம்.

இன்று விழாவில் பேசும்போது அவர் கூறிய விதம் –
விரைவில் “குளச்சல்” துறைமுகம் கூட சாத்தியப்படலாம் என்கிற நம்பிக்கையை உருவாக்குகிறது.

திரு.பொன்.ராதாகிருஷ்ணன் அவர்களின் விடாமுயற்சிக்கும், உழைப்பிற்கும் – நமது மனமார்ந்த பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்….

நல்லது நடக்கும்போது, யார் காரணமாக இருந்தாலும் –
தயக்கமின்றி, தாராளமாகப் பாராட்ட வேண்டும்.

அந்த பாராட்டுக்கள் தான் அவர்கள் தொடர்ந்து நற்பணியாற்ற
தூண்டுதலாக இருக்கும்.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

10 Responses to மோடிஜி அரசுக்கு பாராட்டுக்கள்…..!!!

 1. எஸ் சொல்கிறார்:

  அடக்கடவுளே, காமை சாரின் அக்கவுண்டை யாரே ஹேக் பண்ணி தொலைவிட்டார்கள் போலிருக்குதே?

  • சைதை அஜீஸ் சொல்கிறார்:

   உங்க புத்தி அப்படித்தானே யோசிக்க வைக்கும்?!

   • எஸ் சொல்கிறார்:

    என்ன பாய், ரம்ஜான் அன்னிக்கே இந்த தாக்கு தாக்குறீர்! யாராவது மோடி பக்தர் வேலையை காட்டிவிட்டாரா என்ற சந்தேகம்தான். எனிவே ஈத் முபாரக்!

    • Siva சொல்கிறார்:

     You are such a bullshoot thats why you unnecessarily pull the religious ring here!

     Azees is one of the regular follower of this blog. He doesn’t have selective amnesia to post comment on any particular date like you. Next time, mind your words!

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     நண்பர் எஸ்,

     கவலையே படாதீர்கள் –
     இந்த விமரிசனம் தளம் என்றும், எப்போதும் – எவருக்கும்
     பஜனை பாடும் தளமாக செயல்படாது.

     நாளையே மோடிஜி அவர்களின்
     இன்னொரு மெகா திட்டத்தில் உள்ள ஓட்டைகளைப்பற்றி
     வேறொரு இடுகை வரலாம்.

     இந்த தளம் – நல்லது என்று தெரிந்தால் பாராட்டும்.
     தவறானது என்று தெரிந்தால் அதையும் எடுத்துச் சொல்லும்.

     கண்ணை மூடிக்கொண்டு யாருக்கும்
     “ஜால்ரா” போட வேண்டிய அவசியம் நமக்கு இல்லை.

     ( தயவு செய்து ஜாதி, மத உணர்வுகளைத் தூண்டும் விதத்தில்
     இங்கு இனி எதையும் எழுத வேண்டாம். மீறி எழுதினால் –
     உங்கள் பின்னூட்டங்கள் நிரந்தரமாக தடை செய்யப்படும். )

     -வாழ்த்துக்களுடன்,
     காவிரிமைந்தன்

  • Siva சொல்கிறார்:

   Moodi koojakkal (modi supporters) like you might have hacked this website! If not, this is a true appreciation for a good work done by any government servants

 2. Pingback: மோடிஜி அரசுக்கு பாராட்டுக்கள்…..!!! | Classic Tamil

 3. paamaran சொல்கிறார்:

  நல்ல முயற்சி ! இதே போல தொழிற்கல்வி பயின்று — பயிற்சி பெற்று பல ஆண்டுகளாக ” வேலையில்லாமல் ” தற்போது உள்ளவர்களுக்கு — என்ன செய்ய போகிறார் நமது பிரதான சேவகன் ?

 4. கிரி அனகை. சென்னை. சொல்கிறார்:

  நல்லது நடக்கும்போது, யார் காரணமாக இருந்தாலும் தயக்கமின்றி, தாராளமாகப் பாராட்ட வேண்டும்.அந்த பாராட்டுக்கள் தான் அவர்கள் தொடர்ந்து நற்பணியாற்ற
  தூண்டுதலாக இருக்கும்.அதை போலவே கடந்த பத்து ஆண்டுகள் அதிகாரத்தில் இருந்தவர்கள் தங்கள் குடும்பத்திற்கு சொத்துக்களை சேர்க்கும் சொந்த காரியத்தை மட்டும் கவனித்து கொண்டு இருந்தார்கள் என்பதையும் எண்ணிப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.

 5. Jayakumar சொல்கிறார்:

  ஆட்சிக்கு வந்தவுடன் இது போன்று ஏதாவது திட்டம் தொடங்கவில்லை என்றால் ஆட்சி என்பது அர்த்தமற்ற ஒன்றாகிவிடும். ராஜீவ் காந்தி ஒரு தடவை சொன்ன மாதிரி திட்டத்தில் ஒரு ரூபாய் செலவு செய்தால் அதில் 15 பைசா உண்மையான பயனாளிக்கு கிடைக்கிறது.

  நம் தமிழ் நாட்டில் வருடந்தோறும் பொறியியற் கல்லூரிகளில் இருந்து வருபவர்கள் தொழில் சாரா கல்வியா கற்றுக் கொண்டு வெளிவருகிறார்கள்??? ஏன் அவர்களுக்கு வேலை கிடைப்பதில்லை. இப்போதே ITI மற்றும் polytechnic இல் சேர ஆள் கிடைப்பதில்லை.

  எல்லாம் ஒரு விளம்பரம் தான்.


  Jayakumar

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.