“சன்” விவகாரம் – அத்தனை பேரும் அலறுவது ஏன் ?

sun-tv-twitter

இது முதலில் வெளிவந்த செய்தி –

Five companies of Kalanithi Maran-promoted
Sun TV group will not be able to participate in
Phase III FM auctions as the Information and
Broadcasting Ministry has rejected their applications.

An Application Review Committee has rejected the
applications of the companies belonging to the
Sun group, which had failed to get a security
clearance from the Ministry of Home Affairs.

Security clearance from the Ministry of Home Affairs
is a necessary condition to apply for the FM auctions.

சன் குழுமத்திற்கு எஃப்.எம்.ரேடியோ விற்கான ஏலத்தில்
கலந்து கொள்ள மத்திய உள்துறை அமைச்சகத்தின்
ஒப்புதல் கிடைக்காததால், அது ஏலத்தில் கலந்து கொள்ள
முடியாது…..

உள்துறை அமைச்சகத்தின் அனுமதி ஏன் கிடைக்கவில்லை …?
இந்தியா மட்டுமல்ல, கிட்டத்தட்ட தொழில் உலகம் அனைத்தும்
அறிந்த உண்மை அது……

இந்த தகவல் வெளியான பிறகு, சன் குழுமத்தின் அதிகாரி
என்ன சொல்கிறார்….?

The Sun group will move court on Monday challenging
the government decision not to allow it to participate the
Phase-III auction process of FM radio.

“We will move the court on Monday challenging the
decision. I am hopeful that we will get justice.
We will knock the door of every court,” Sun group Chief
FINANCIALOfficer S L Narayanan told PTI.

He said that the company has an extremely strong case
and it will get relief from the court.

“We will get acquitted. Because nowhere in the world
anybody is punished before abjudication process is over.
Due process of law has to be exhausted. Till then I am
presumed innocent,” he said.

மேட்டர் ரொம்ப சிம்பிள். சம்பந்தப்பட்டவர்களே சொல்கிறார்கள்…
நாங்கள் உடனடியாக நீதிமன்றத்திற்கு போவோம். எங்கள் பக்கம்
மிகவும் சாதகமான நிலை இருப்பதால் நாங்கள் வெற்றி பெறுவது
நிச்சயம்.

இப்படி அவர்களே நம்பிக்கையுடன் இருக்கும்போது,
நம் தமிழக அரசியல்வாதிகள் அலறுவதேன்…?
கலைஞர் அலறினால் – காரணம் புரிந்துகொள்ள முடிகிறது…
சொந்தம் – ரத்த பந்தம்…!!!

மற்ற அரசியல்வாதிகளுக்கு என்ன ஆயிற்று…?
கே.டி.பிரதர்ஸ் பெரிய தியாகிகள் போலவும்,
மத்திய அரசால் – அரசியல் ரீதியாக பழிவாங்கப்பட்டு
விட்டது போலவும் சித்தரிக்கிறார்கள்… !
அவர்கள் மத்திய அரசுக்கு விரோதமாக எதையோ
எழுதியதாலோ, நடந்து கொண்டதாலோ அரசாங்கம்
அவர்கள் குரல்வளையை பிடித்து நெறித்து ஜனநாயக
நெறிமுறைகளை நசுக்கி விட்டது போல் பேசுகிறார்கள்…?

அவர்கள் ஆதரிப்பது இந்த மண்ணின் மக்களையும் –
அரசாங்கத்தின் வருமானத்தையும் – கொள்ளையடித்தவர்களை
என்பதை அவர்கள் உணரவில்லையா..?
எதைத்தான் எதிர்ப்பது என்று வியவஸ்தையே இல்லையா..?

சன் குழும அதிகாரி, அடுத்ததாக, ஒரு படி மேலே சென்று
இன்னொரு விஷயமும் சொல்கிறார் –

Narayanan claimed even assuming that Mr Maran
has to face consequences because he had done
(something) terrible, it should start and end with
the individual.

“Why should the company be put out of business ?
Why should a company which is in radio business
which wanted to participate in phase III auction,
not be allowed to participate.

(http://www.dnaindia.com/money/report-sun-
group-to-move-court-on-monday-for-not-allowing-
fm-auction-2105568 )

அதாவது மாறன் ( திரு.தயாநிதி …? ) தவறு செய்திருந்து, தண்டிக்கப்பட்டாலும் கூட, அதன் பாதிப்புகள்
சம்பந்தப்பட்டவருடன் (அதாவது திரு.தயாநிதியுடன் )
நின்று விட வேண்டும்…..

அதன் பாதிப்புகள் – கம்பெனிக்கு எப்படி வர முடியும் ….?

வாதம் (ARGUMENT) எப்படி போகிறது பார்த்தீர்களா …?

இந்த வாதம் எப்படி சரியாகும் …?
எழுநூற்று சொச்சம் திருட்டு கேபிள்களை பயன்படுத்தி –
அதன் பலனை அனுபவித்தது கம்பெனி தானே ?
கம்பெனி மூலமாகத்தானே – அதன் முதலாளிகளுக்கு
பயன் போய்ச்சேர்கிறது ….?

அது உண்மை என்று நிரூபிக்கப்பட்டால் – முதலாளி தண்டிக்கப்படுவதோடு, சம்பந்தப்பட்ட கம்பெனியும் தானே தடை செய்யப்பட வேண்டும்…?

நம்ம ஊர் நீதிமன்றங்களில் இவர் போன்றவர்களுக்கு
எப்படி relief கிடைக்கும் என்பது தெரிந்ததே…!!!

எனவே – – இது ஒரு பக்கம் இருக்கட்டும்…. !!!

முற்றும் சட்டபூர்வமான இந்த விஷயத்திற்கு –
நம்ம ஊர் அரசியல்வாதிகள் அத்தனை பேரும் –
பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய அநியாயம் நடந்து விட்டது போல்
அலறுவது ஏன் …?

இன்னுமொரு விஷயம் –
இவர்கள் அத்தனை பேரும் வக்காலத்து வாங்கும் நிறுவனம்
நியாயமான, நேர்மையான முறையில்
தொழில் செய்யும் நிறுவனமா ?

வாடிக்கையாளர்களுக்கு நேர்மையாக சேவை தந்ததா ? தருகிறதா ?
அத்தனை சேனல்களையும் காட்டுகிறோம் என்று சொல்லி
லைசென்சு வாங்கினார்களே – வாடிக்கையாளர்கள் விரும்பிக்
கேட்ட சேனல்களை எல்லாம் ஓளிபரப்பியதா ?
“புதிய தலைமுறைகள்” செய்தியை அனுமதித்ததா ?
எத்தனை ஆண்டுகள் இழுத்தடிப்பு செய்தது …!
ராஜ் செய்திகளை ஒடுக்கவில்லையா ..?
விஜய் செய்தியை தடுக்கவில்லையா …?
இன்றும் “பாலிமர் சேனல்கள்” காட்டப்படுவதில்லையே ..?

இன்று அலறும் இந்த தமிழக அரசியல்வாதிகள்
சன் சேனலின் இந்த போக்கை ஏன் கண்டிக்கவில்லை …?

பங்காளிகள் செய்ய வேண்டிய வேலையை
நம் தமிழக அரசியல்வாதிகள் செய்வது ஏன் …?

Gallery | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

“சன்” விவகாரம் – அத்தனை பேரும் அலறுவது ஏன் ? க்கு 23 பதில்கள்

  1. Ramachandran. R. சொல்கிறார்:

    கே.எம்.சார்,

    உங்கள் கருத்து தான் எங்களது கருத்தும்.

    தமிழ் இந்து வலைத்தளத்தில் வெளியான
    தலைவர்களின் கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து
    எழுதியிருக்கும் சில வாசகர்களின் கருத்துக்கள் கீழே –

    KG
    சன் டிவி முடங்கினால் நாடு திவால் ஆகிவிடுமா என்ன? நிரந்தரமாக மூடவேண்டும். சமுதாய சீரழிவு குறையும்.

    MMortin
    பாவம் கூட்டணிக்கு ஏங்கும்,கனவுலக ஆட்சியாளர்கள்,

    NNarayanan
    இவர்கள் எல்லாம் ஒன்றாக குரல் கொடுப்பது ஏனோ?

    DDandy
    தலைவர்கள் என்றால் என்ன விளக்கம் ???
    வெள்ளை வேஷ்டி கட்டியவர்கள் எல்லாம் தலைவர்களா ??

    மசமணமடை சுரேஷ்
    மிகவும் சரியான முடிவு வரவேற்க்க தக்கது!!

    மசமணமடை சுரேஷ்
    தற்போதைக்கு நிறுத்தி வைப்தே நல்லது சன் குழுமத்தின்
    அனைத்து வழக்குகளும் முடிந்த பிறகு வழங்குவதே
    சிறந்ததாக இருக்கும்!! :

    MIMohamed Ilyas
    இவர்கள் எல்லாம் ஒன்றாக குரல் கொடுப்பது ஏனோ?
    அதுவும் நாட்டின் சொத்தைத் திருடியவர்களுக்கு ஆதரவாக.

    கீழை ஜஹாங்கீர்
    மோடி அரசின் உருப்படியான நடவடிக்கையே
    இது மட்டும் தான்.இதையும் குறை கூற சிலர் முயல்வது கண்டனத்திற்குரியதாகும்.

    Tthukluck_junior
    இப்போ தமிழ் தமிழ், ஆதரவு தருபவர்கள் எல்லாம் சன் டிவி
    கிட்டே பணம் வாங்கிட்டுத்தான், தமிழ் தமிழ் சொல்லி
    முழக்கம் விடறாங்க, சன் டிவி, தப்பிக்க நடத்தும் நாடகம் ………….

    R Rangarajan retired executive from PSU
    அடுத்த தேர்தல் கூட்டுஅணி……… மத்தியில் மந்த்ரியாக
    இருந்து கொண்டு தன்னுடைய சுய நலத்துக்கு தன்னுடைய
    பொறுப்பிலுள்ள சென்னை டெலிபோன் டெபர்ட்மெண்டை
    தன்னுடைய சன் நிறுவனத்துக்கு பயன் படுத்தினால் …
    நேர்மை. இவர் பயன்படுத்தியது அரசாங்கத்தின் கருவிகள் …
    மிக மிக சக்தி வாய்ந்த கருவிகள் வெளி நாட்டு தொடர்பு
    உடையவை … இந்த வழக்கு ..போன UPA ஆட்சியின்
    போதே வந்துவிட்டது …ஏன் இந்தகட்சிகள் …இப்படி நடிக்கிறார்கள்

    ஆதாரம் –

    http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/article7437158.ece#comments

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நன்றி ராமச்சந்திரன்.

      எனக்குத் தெரியும். இந்த விஷயத்தில்
      தமிழ் மக்களே இந்த தலைவர்களின்
      பேச்சை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

  2. today.and.me சொல்கிறார்:

    1. ஜெ.ஜெ.யின் வீட்டில் அத்துமீறி நுழைந்து அவரது படுக்கையறை முதல் பாத்ரூம் வரை படம் பிடித்தது யார் ??
    2. ஜெ.ஜெ. டிவி, பாரதி டிவி, நிலா டிவி, தமிழ்திரை டிவி இன்னும் பல தொலைக்காட்சிகளை முடக்கியது யாரால் ???
    3. தமிழகத்தில் 75% இருந்த “ஹாத்வே” கேபிள் டிவி நிறுவனத்தை அழிந்து யார் ??
    4. தமிழ்திரைத்துறை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து தயாரிப்பாளர்களை மிரட்டி பெரும்பாலான திரைப்படங்களை குறைந்த விலையில் வாங்கி குவித்தது யார் ??
    5. “ராஜ்” டிவியை முடக்கும் நோக்கத்தில் அதன் உரிமையாளர்களை கைது செய்து சிறையில் அடைத்தது யார் ??
    6. தமிழகத்தில் ஜி டிவி குழுமம் தொலைக்காட்சி தொடங்குவதற்கு பல ஆண்டுகள் மறைமுகமாக தடையாக இருந்தது யார் ??
    7. “ஜி தமிழ்” தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிகொண்டிருந்த செய்திகளை தடுத்து முடக்கியது யார் ??
    8. “விஜய்” தொலைக்காட்சி NDTV வுடன் இணைந்து வழங்கிகொண்டிருந்த தமிழ் செய்திகளை தடுத்து நிறுத்தியது யார் ??
    9. தமிழகத்தில் உள்ள பல ஆயிரம் கேபிள் ஆப்ரேட்டர்களின் வாழ்க்கையை அழித்தது யார் ??
    10. “சன்” டிடிஎச் விவகாரத்தில் “ரத்தன்” டாடா -வை மிரட்டியது யார் ??
    11. மெகாத்தொடர் என்ற பெயரில் தமிழ் கலாச்சாரத்தையும், தமிழ்நாட்டுப் பெண்களின் வாழ்க்கையையும், ஆண்களின் வாழ்க்கையையும், சீரழித்துக்கொண்டிருப்பது யார் ??
    12. “ஜெயா” தொலைக்காட்சி குழுமத்தில் “ஜெயா ப்ளஸ்” தொலைக்காட்சி தொடங்க விண்ணப்பித்து 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் அனுமதிதராமல் இழுத்தடிப்பு செய்தது யாரால் ??
    13. இரண்டு ரூபாயில் சினிமா பார்த்த சாமானியன் இன்று ரூ.500 வரை கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது யாரால் ??

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நன்றி நண்பர் டுடேஅண்ட்மீ,

      நான் சொல்லத்தவறிய பாயிண்ட்டுகளையும்
      சேர்த்து வரிசைப்படுத்தி சொல்லி விட்டீர்கள்.,

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

  3. today.and.me சொல்கிறார்:

    ஆறு மணிக்கு முன்னால் – இது வேற வாய் –

    //வைகோ அன்று முழங்கியது ……
    கையில் ஒரு பிளாக் & ஒயிட் கைப்பேசியை காண்பித்து ..
    “இது தான் செல்போன் .. இதில் நான் பி.எஸ்.என்.எல் மத்திய தொலை தொடர்பு நிறுவன நெட்வொர்கை பயன்படுத்துகின்றேன் .. இதை நாம் எங்கு கொண்டு செல்கின்றோமோ அந்த பகுதியின் பெயர் திரையில் தெரியும் ..அண்ணா அறிவாலயத்தின் அருகில் செல்லும் போது இதில் அண்ணா அறிவாலயம் என்று காட்டுகிறது ..அது எப்படி சாத்தியம் ? அண்ணா சாலை என்று தானே காண்பிக்க வேண்டும் ???
    திமுக மத்திய அரசில் அங்கம் வகித்து அதிகார துஷ்பிரயோகம் செய்து இது போன்ற செயல்களில் ஈடுபட்டு விளம்பரம் தேடிக்கொள்கிறது ..
    இது மட்டுமல்ல இன்று கேபில் கொள்ளையர்களாக விளங்கும் திமுகவின் கேடி பிரதர்ஸல நாளை ஒட்டுமொத்த தகவல் தொலைதொடர்பையும் தன்னுடையதாக்கலாம் ..
    அது எப்படி என்றால் அமெரிக்காவிலே கேபில் டிவி கனெக்ஷன் மூலம் எப்படி இணைய சேவை வழங்கலாம் என ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது ..இதனை பார்த்துக்கொண்டு நாம் அமைதியாக இருக்கக்கூடாது //

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நான் மிகவும் வருந்துவது வைகோ அவர்களை நினைத்து தான்.
      நான் மிகவும் மரியாதை வைத்திருக்கும் தலைவர்களில்
      வைகோ அவர்களும் ஒருவர்.

      அவரும் கூட உளறல்வாதிகளின்
      பட்டியலில் சேர்ந்து விட்டாரே…!
      கே.டி.களுக்கு வக்காலத்து வாங்கும் அளவிற்கு
      என்ன நிர்பந்தம் அவருக்கு …?

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

  4. கொச்சின் தேவதாஸ் சொல்கிறார்:

    திரு.வைகோ அவர்களுக்கு இருக்கும் இரண்டு காரணங்கள்.
    1.அவருடைய மேடைப் பேச்சுக்களை சில நொடிகள் ஒளிபரப்புவது.
    2.திரு.மோடி அரசைக் குறை சொல்லி புழுதிவாரி துாற்றவேண்டும்.அதற்கு எதுவாக இருந்தாலும் சரி அதனை உபயோகப்படுத்திக்கொள்வது.
    கொச்சின் தேவதாஸ்

  5. drkgp சொல்கிறார்:

    It is a pity that SunTV was allowed to go scot free for so long. Even the minimal
    punisinhment of not allowing it to participate in an auction for further expanding its empire is
    evoking such protests from our so called leaders is shocking. Honesty rating of
    these leaders is a benchmark for the world leaders to follow!! Pity our people.

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      டாக்டர் கேஜிபி,

      தலைவர்கள் விலை போனாலும்,
      நல்ல வேளையாக இந்த விஷயத்தில் தமிழக மக்கள்
      விழிப்பாக இருக்கிறார்கள். சன் / எஸ்.சி.வி. விஷயத்தில்
      தமிழ்நாட்டு மக்களுக்கு நேரடி அனுபவம் இருக்கிறது.
      இவர்களின் அட்டகாசத்தை, அராஜகத்தை ஒவ்வொரு
      தமிழ்க் குடும்பமும் நேரடியாக தங்கள் வீட்டு அறையிலேயே
      கண்டிருக்கிறது.யாருக்கும் மறந்திருக்காது.

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

  6. Pingback: “சன்” விவகாரம் – அத்தனை பேரும் அலறுவது ஏன் ? | Classic Tamil

  7. karuthaan சொல்கிறார்:

    அய்யா !எந்த முதலாளி நேர்மையான முறையில் முன்னேறி மேலேவந்தார்கள் எல்லோரும் அதிகார பலத்தையும் ஆட்சியில் இருப்பவர்களை தங்கள் கைக்குள் வைத்து கொண்டும் கொள்ளை அடித்து வந்தவர்கள் தான் (டாட்டா -பிர்லா முதல் அம்பானி அதானி………..) வரை இதில் நம்ம ஊர் திருடர்களின்(கே.டி சகோ ) செயலை நாம் அருகில் இருந்து பார்ப்பதால் நமக்கு கூடுதலாக தெரிகிறது !

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்பர் கருத்தான்,

      நீங்கள் சொல்வது உண்மை தான் – என்றாலும்,
      இங்கு நம் தமிழக அரசியல்வாதிகளும்
      இந்த கொள்ளைக்காரர்களுக்கு ஆதரவாக
      கூட்டு ஒப்பாரி வைப்பது தான் எரிச்சலாக இருக்கிறது.

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

  8. today.and.me சொல்கிறார்:

    //இன்னுமொரு விஷயம் – இவர்கள் அத்தனை பேரும் வக்காலத்து வாங்கும் நிறுவனம் நியாயமான, நேர்மையான முறையில் தொழில் செய்யும் நிறுவனமா //

    சன்தொலைக்காட்சிக்காக வக்காலத்து வாங்கும் அத்தனை அரசியல்வாதிகளுக்கும் சில கேள்விகள் .
    .
    1) சன்டீவி சமுதாயத்திற்கு செய்த சேவை ஒரு புறம் இருக்கட்டும் ..
    (குறைந்த பட்ச ) தொழில் தர்மத்தையாவது அந்த நிறுவனம் கடை பிடித்தது உண்டா. . ..
    2) அந்த டீவியின் சொந்த நிகழ்ச்சி என்று ஏதாவது ஒரே ஒரு நிகழ்ச்சியையாவது சொல்ல முடியுமா?.
    3) கலக்கப் போவது யாரு ? விஜய்தொலைக்காட்சியில் இருந்து திருடினார்கள் .
    4) இமாண் அண்ணாச்சியை மக்கள்தொலைக்காட்சியில் இருந்து திருடினார்கள் .
    5) கோடீஸ்வரன் நிகழ்ச்சியை ஸ்டார்தொலைக்காட்சியில் இருந்து திருடினார்கள் .
    6) விரைவு செய்திகளை ஜீ தொலைக்காட்சியில் இருந்து திருடினார்கள் .
    7) 9 மணி டாக் ஷோ மக்கள்தொலைக்காட்சியில் இருந்து திருடினார்கள் .
    8) இப்படி உடன் உள்ள ஊடகங்களை அழித்து தன் பண + அதிகார பலத்தால் வேரூன்றிய டீவிதானே இது.
    9) புதிய தலைமுறை சாணல் வந்த போது சற்று புதுமையாக இருந்தவுடன் பல மாவட்டங்களில் இருட்டடிப்பு செய்தார்கள் .
    10) பாட்டுக்கு பாட்டு சாகுல்ஹமீது சார் நிகழ்ச்சி கூட வேற டீவி அறிமுகம்தான்.
    11) இப்ப சூப்பர் சிங்கரும் அதேதான் . .
    .12) வருடக்கணக்கில் ஓடக்கூடிய மெகா சீரியல்களால் பெண்களுக்கு மன அழுத்தத்தை உருவாக்கியதுதான் சன்தொலைக்காட்சியின் மெகாசாதனை.
    13)சன் டிவியே மறைந்த எழுத்தாளர் லக்ஷ்மி அவர்களின் மகனிடமிருந்து சுட்டதுதானே. இந்த டிஷ் ஆன்டினா ஐடியாவே அவருடையதுதான். அவரை பார்ட்னர் என ஏமாற்றினார்கள் சன் குழுமம்.

    எல்லாவற்றுக்கும்மேலாக சன் குழுமம் தனது சொந்தத்தாத்தா முகவின் நிகழ்ச்சிகளை இருட்டடிப்பு செய்ததினால் முக உருவாக்கியதுதானே கலைஞர் தொலைக்காட்சியும் அதன் கிளைகளும்….

    தமிழக அரசியல் வியாதிகளே
    எந்த நியாயத்திற்காக சன்டீவியை ஆதரிக்கிறீர்கள் .

  9. today.and.me சொல்கிறார்:

    இன்னும் காமெடியைக் காட்டிக்கொண்டிருக்கிறார்கள் சன்தொலைக்காட்சியில்:

    //சன் டிவி மூடுறது விவசாயத்துக்கு எதிரானதாம் எங்க இருந்து டா டிசைன் டிசைனா கிளம்புறிங்க //

    //சாப்பாடு இல்லாம கூட இருந்திடுவோம். சன்டீவி இல்லாம இருக்க முடியாது . .
    ஒரு அக்கா சன் டீவில ஆவேசம் . .//
    🙂🙂🙂🙂 😀 😀 😀

    • Sharron சொல்கிறார்:

      Good to see u back after a long time.I always enjoy reading your comments.

      • today.and.me சொல்கிறார்:

        நன்றி ஷரோன். எப்பொழுதும்போல வந்துபோய்க்கொண்டுதான் இருக்கிறேன். கருத்தைப் பதியவேண்டிய வாய்ப்புகள் வரவில்லை. அவ்வளவுதான்.

        என் கருத்துக்கும்கூட ஒரு ரசிகமனம் இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி.
        மீண்டும் நன்றி

        • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

          நண்பர் டுடேஅண்ட்மீ,

          சீரியசாக ஆட்சேபிக்கிறேன் – ” ஒரு ” – ரசிக மனம்
          என்று சொல்லுவதை….!!!

          -வாழ்த்துக்களுடன்,
          காவிரிமைந்தன்

  10. Pingback: “சன்” விவகாரம் – அத்தனை பேரும் அலறுவது ஏன் ? | முக்கிய செய்திகள்

  11. Pingback: “சன்” விவகாரம் – அத்தனை பேரும் அலறுவது ஏன் ? | முக்கிய செய்திகள்

  12. paamaran சொல்கிறார்:

    சன் டி.வி.யை முடக்குவது சட்ட விரோதம் — மோடி அரசின் எதேச்சார நடவடிக்கை — ஜன நாயக விரோத செயல் என்றெல்லாம் —- ஓய்வு பெற்ற நீதிபதிகள் —- வக்கீல்கள் — லெட்டெர் பேடு கட்சிகாரர்களில் இருந்து தேசிய கட்சி பிரமுகர்கள் மற்றும் தொலைகாட்சி அடிமைகள் வரை பலமாக கூக்குரல் இடுவதற்கு — காரணம் ” உண்மையானதா ? செயற்கையானதா ? ” எல்லோருடைய பேட்டிகளையும் சன் டி.வி . மற்றும் அவர்கள் சார்ந்த பத்திரிக்கைகள் எல்லாம் மாய்ந்து — மாய்ந்து —- வெளியிடுவதின் — மர்மம் என்ன ? நியாய படுத்த முயல்வதும் குற்றம்தானே ? நடவடிக்கை என்னவாக இருக்கும் !

  13. karutthu@gmail.com சொல்கிறார்:

    சன் டி.வியின் பழைய நடத்தை பற்றிய விமர்சனத்திற்க்குள் போக விரும்பவில்லை. அவர்கள் செய்த பிரச்சினைகள் என்று நீங்கள் குறிப்பிட்ட கருத்தில் மாற்று கருத்து இல்லை. இப்போதைய‌ பிரச்சினை பாதுகாப்பு சான்றிதழ் பற்றியது. வழக்கு நிலுவையில் உள்ளது. அவர்கள் செய்தது குற்றம் என்றால் அதற்குரிய தண்டனை அவர்களுக்கு சேர வேண்டியது நியாயம். இந்தியா முழுவதும் உள்ள சேனல்களின் மேல் பல வகையான குற்றசாட்டுகள் உள்ளன. ஆனால் பாதுகாப்பு சான்றிதழ் மறுக்கப்பட்டது சன் குழுமத்திற்க்கு மட்டும் எனும்போது அதில் உள் நோக்கம் உள்ளது போல தெரியவில்லையா. யாரையோ திருப்தி படுத்த எடுத்த நடவடிக்கை என அனைவரும் சொல்வது உண்மை போல தெரியவில்லையா. சென்னையில் நடந்த ஒரு திருமணத்திற்க்கு பிறகே இந்த நடவடிக்கைகள் தொடங்கியது என சொல்லப்படுகிறது. இது போன்ற நடவடிக்கைகள் வருங்கால அரசுகளால் தங்களுக்கு பிடிக்காத சேனல்கள் மேல் இனி வரும் காலத்தில் எடுக்கப்படுவதற்க்கு முன் உதாரணம் ஆகி விடும் என்ற பதட்டம் எல்லோருக்கும் இருக்கிறது.

  14. Sridhar சொல்கிறார்:

    Dear karutthu,
    If i remember correct, Raj news was blocked for one such reason.

    As you say if this is with some intention, then that is also with some intention.

    For such cunning person, the rule one mistake cannot be justified with another mistake will not apply. They are in war front any everything is fair in war.

    I definitely feel that they have to ammunition to win this war and they will win this war.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.