சன் – விட்டுப்போன தகவல்கள் – சூடான பின்னூட்டங்களுடன்…..!!!

.

சில நண்பர்கள் இடுகை வெளிவந்தவுடன், வந்து
சுடச்சுட படித்து விட்டு போய் விடுகிறார்கள்.
சில சமயங்களில், பிறகு வரும், நிறைய தகவல்களுடன் கூடிய
சில பின்னூட்டங்கள் அவர்களின் கவனத்தைப் பெறாமல்
போய் விடுகின்றன.

“சன்” விவகாரம் – அத்தனை பேரும் அலறுவது ஏன் ? – என்கிற
தலைப்பிலுள்ள நேற்றைய இடுகையில் விடுபட்டுப்போன
சில தகவல்களுடன்,

– இன்னும் சில சூடான பின்னூட்டங்களின்
சாரங்களும்,
அனைத்து நண்பர்களின் கவனத்திற்கும்
போக வேண்டுமென்று விரும்புவதால், அதனை, கீழே தொகுத்து
தந்துள்ளேன். மேலதிக தகவல்களை தந்துள்ள – பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.,,,

today.and.me –
9:59 முப இல் ஜூலை 19, 2015-

1. ஜெ.ஜெ.யின் வீட்டில் அத்துமீறி நுழைந்து அவரது படுக்கையறை
முதல் பாத்ரூம் வரை படம் பிடித்தது யார் ??

2. ஜெ.ஜெ. டிவி, பாரதி டிவி, நிலா டிவி, தமிழ்திரை டிவி இன்னும்
பல தொலைக்காட்சிகளை முடக்கியது யாரால் ???

3. தமிழகத்தில் 75% இருந்த “ஹாத்வே” கேபிள் டிவி நிறுவனத்தை
அழிந்து யார் ??

4. தமிழ்திரைத்துறை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து
தயாரிப்பாளர்களை மிரட்டி பெரும்பாலான திரைப்படங்களை குறைந்த

விலையில் வாங்கி குவித்தது யார் ??

5. “ராஜ்” டிவியை முடக்கும் நோக்கத்தில் அதன் உரிமையாளர்களை
கைது செய்து சிறையில் அடைத்தது யார் ??

6. தமிழகத்தில் ஜி டிவி குழுமம் தொலைக்காட்சி தொடங்குவதற்கு
பல ஆண்டுகள் மறைமுகமாக தடையாக இருந்தது யார் ??

7. “ஜி தமிழ்” தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிகொண்டிருந்த
செய்திகளை தடுத்து முடக்கியது யார் ??

8. “விஜய்” தொலைக்காட்சி NDTV வுடன் இணைந்து
வழங்கிகொண்டிருந்த தமிழ் செய்திகளை தடுத்து நிறுத்தியது யார் ??

9. தமிழகத்தில் உள்ள பல ஆயிரம் கேபிள் ஆப்ரேட்டர்களின்
வாழ்க்கையை அழித்தது யார் ??

10. “சன்” டிடிஎச் விவகாரத்தில் “ரத்தன்” டாடா -வை
மிரட்டியது யார் ??

11. மெகாத்தொடர் என்ற பெயரில் தமிழ் கலாச்சாரத்தையும்,
தமிழ்நாட்டுப் பெண்களின் வாழ்க்கையையும், ஆண்களின்
வாழ்க்கையையும், சீரழித்துக்கொண்டிருப்பது யார் ??

12. “ஜெயா” தொலைக்காட்சி குழுமத்தில் “ஜெயா ப்ளஸ்”
தொலைக்காட்சி தொடங்க விண்ணப்பித்து 3 ஆண்டுகளுக்கு
மேலாகியும் அனுமதிதராமல் இழுத்தடிப்பு செய்தது யாரால் ??

13. இரண்டு ரூபாயில் சினிமா பார்த்த சாமானியன் இன்று
ரூ.500 வரை கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது யாரால் ??

————–

today.and.me –
10:01 முப இல் ஜூலை 19, 2015-

//வைகோ அன்று முழங்கியது ……

கையில் ஒரு பிளாக் & ஒயிட் கைப்பேசியை காண்பித்து ..
“இது தான் செல்போன் .. இதில் நான் பி.எஸ்.என்.எல்
மத்திய தொலை தொடர்பு நிறுவன நெட்வொர்கை
பயன்படுத்துகின்றேன் .. இதை நாம் எங்கு கொண்டு
செல்கின்றோமோ அந்த பகுதியின் பெயர் திரையில்
தெரியும் ..அண்ணா அறிவாலயத்தின் அருகில் செல்லும்
போது இதில் அண்ணா அறிவாலயம் என்று காட்டுகிறது ..
அது எப்படி சாத்தியம் ? அண்ணா சாலை என்று தானே
காண்பிக்க வேண்டும் ???

திமுக மத்திய அரசில் அங்கம் வகித்து அதிகார துஷ்பிரயோகம்
செய்து இது போன்ற செயல்களில் ஈடுபட்டு விளம்பரம்
தேடிக்கொள்கிறது ..
இது மட்டுமல்ல இன்று கேபில் கொள்ளையர்களாக
விளங்கும் திமுகவின் கேடி பிரதர்ஸல நாளை ஒட்டுமொத்த
தகவல் தொலைதொடர்பையும் தன்னுடையதாக்கலாம் ..
அது எப்படி என்றால் அமெரிக்காவிலே கேபில் டிவி கனெக்ஷன்
மூலம் எப்படி இணைய சேவை வழங்கலாம் என ஆராய்ச்சி
மேற்கொள்ளப்பட்டு வருகிறது ..இதனை பார்த்துக்கொண்டு
நாம் அமைதியாக இருக்கக்கூடாது //

————

karuthaan –
12:27 பிப இல் ஜூலை 19, 2015-

அய்யா ! எந்த முதலாளி நேர்மையான முறையில் முன்னேறி
மேலேவந்தார்கள் ? எல்லோரும் அதிகார பலத்தையும்
ஆட்சியில் இருப்பவர்களை தங்கள் கைக்குள் வைத்து கொண்டும்
கொள்ளை அடித்து வந்தவர்கள் தான் (டாட்டா -பிர்லா முதல்
அம்பானி அதானி………..) வரை. இதில் நம்ம ஊர்
திருடர்களின் ( கே.டி சகோ ) செயலை நாம் அருகில் இருந்து
பார்ப்பதால் நமக்கு கூடுதலாக தெரிகிறது !

————

today.and.me –
3:57 பிப இல் ஜூலை 19, 2015-

//இன்னுமொரு விஷயம் – இவர்கள் அத்தனை பேரும்
வக்காலத்து வாங்கும் நிறுவனம் நியாயமான, நேர்மையான
முறையில் தொழில் செய்யும் நிறுவனமா //

சன்தொலைக்காட்சிக்காக வக்காலத்து வாங்கும் அத்தனை

அரசியல்வாதிகளுக்கும் சில கேள்விகள் –

1) சன்டீவி சமுதாயத்திற்கு செய்த சேவை ஒரு புறம்
இருக்கட்டும் ..(குறைந்த பட்ச ) தொழில் தர்மத்தையாவது
அந்த நிறுவனம் கடை பிடித்தது உண்டா… .

2) அந்த டீவியின் சொந்த நிகழ்ச்சி என்று ஏதாவது ஒரே ஒரு

நிகழ்ச்சியையாவது சொல்ல முடியுமா?.

3) கலக்கப் போவது யாரு ? விஜய்தொலைக்காட்சியில்
இருந்து திருடினார்கள் .

4) இமாண் அண்ணாச்சியை மக்கள்தொலைக்காட்சியில்
இருந்து திருடினார்கள் .

5) கோடீஸ்வரன் நிகழ்ச்சியை ஸ்டார்தொலைக்காட்சியில்
இருந்து திருடினார்கள் .

6) விரைவு செய்திகளை ஜீ தொலைக்காட்சியில்
இருந்து திருடினார்கள் .

7) 9 மணி டாக் ஷோ மக்கள்தொலைக்காட்சியில் இருந்து
திருடினார்கள் .

8) இப்படி உடன் உள்ள ஊடகங்களை அழித்து தன்
பண + அதிகார பலத்தால் வேரூன்றிய டீவிதானே இது.

9) புதிய தலைமுறை சாணல் வந்த போது சற்று புதுமையாக
இருந்தவுடன் பல மாவட்டங்களில் இருட்டடிப்பு செய்தார்கள் .

10) பாட்டுக்கு பாட்டு சாகுல்ஹமீது சார் நிகழ்ச்சி கூட
வேற டீவி அறிமுகம்தான்.

11) இப்ப சூப்பர் சிங்கரும் அதேதான் . .

.12) வருடக்கணக்கில் ஓடக்கூடிய மெகா சீரியல்களால்
பெண்களுக்கு மன அழுத்தத்தை உருவாக்கியதுதான்
சன்தொலைக்காட்சியின் மெகாசாதனை.

13)சன் டிவியே மறைந்த எழுத்தாளர் லக்ஷ்மி அவர்களின்
மகனிடமிருந்து சுட்டதுதானே. இந்த டிஷ் ஆன்டினா
ஐடியாவே அவருடையதுதான். அவரை பார்ட்னர் என
ஏமாற்றினார்கள் சன் குழுமம்.

எல்லாவற்றுக்கும்மேலாக சன் குழுமம் தனது சொந்தத்தாத்தா
முகவின் நிகழ்ச்சிகளை இருட்டடிப்பு செய்ததினால்
முக உருவாக்கியதுதானே கலைஞர் தொலைக்காட்சியும்
அதன் கிளைகளும்….

தமிழக அரசியல் வியாதிகளே
எந்த நியாயத்திற்காக சன்டீவியை ஆதரிக்கிறீர்கள் ….?

————-

paamaran –
5:42 முப இல் ஜூலை 20, 2015

சன் டி.வி.யை முடக்குவது சட்ட விரோதம் —
மோடி அரசின் எதேச்சார நடவடிக்கை —
ஜன நாயக விரோத செயல் என்றெல்லாம் —
ஓய்வு பெற்ற நீதிபதிகள் – வக்கீல்கள் –
லெட்டெர் பேடு கட்சிகாரர்களில் இருந்து
தேசிய கட்சி பிரமுகர்கள் மற்றும் தொலைகாட்சி
அடிமைகள் வரை பலமாக கூக்குரல் இடுவதற்கு —

காரணம் ” உண்மையானதா ? செயற்கையானதா ? ”
எல்லோருடைய பேட்டிகளையும் சன் டி.வி . மற்றும்
அவர்கள் சார்ந்த பத்திரிக்கைகள் எல்லாம் மாய்ந்து —
மாய்ந்து — வெளியிடுவதின் — மர்மம் என்ன ?

—————–

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

18 Responses to சன் – விட்டுப்போன தகவல்கள் – சூடான பின்னூட்டங்களுடன்…..!!!

 1. Paramasivam சொல்கிறார்:

  சன் டிவி ஊழல்கள் 2G க்கு இணையாக இருக்கும் போல் உள்ளதே!

 2. Pingback: சன் – விட்டுப்போன தகவல்கள் – சூடான பின்னூட்டங்களுடன்…..!!! | Classic Tamil

 3. today.and.me சொல்கிறார்:

  சன்டிவி தமிழகத்தின் செல்லப்பிள்ளை……..திருமாவளவன்.

  😦 😦

 4. thiruvengadam சொல்கிறார்:

  The supporters can just go thro Gurumurti articles in Express & help Maran Brs with tangible points to proove their clean hands. Knowingly or unknowingly they have lost their own credits.

 5. paamaran சொல்கிறார்:

  தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும்: கருணாநிதி —– 20 July 2015 09:15 PM ISt தினமணி செய்தி ! இது பற்றி தங்களின் கருத்து ?

 6. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  நண்பர் பாமரன்,

  ஒரு தடவைக்கு இரண்டு தடவையாக எல்லா
  செய்தித்தளங்களையும் பார்த்து விட்டேன்….

  ———————-
  dinamani –

  திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு அமல்படுத்தினால்
  என்ன என கேள்வி எழுகிறது. சமுதாய மாற்றத்திற்கும் ஏற்றத்திற்கும் வழிவகுக்கும் வகையில் மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என கூறியுள்ளார்.

  dhinathanthi –

  மீண்டும் மதுவிலக்கு சட்டத்தை நடைமுறைப் படுத்தினால் என்ன
  என்ற கேள்வி எழத்தான் செய்கிறது. எனவே திமுக மீண்டும்
  ஆட்சிக்கு வந்தால் சமுதாய மாற்றத்திற்கும், ஏற்றத்திற்கும்
  வழி வகுக்கும் வகையில் மதுவிலக்கை அமல்படுத்த தீவிர
  நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று கருணாநிதி கூறியுள்ளார்.

  maalai malar –

  இந்த சூழ்நிலையில் மீண்டும் மதுவிலக்கு சட்டத்தை அமல்படுத்துவது
  பற்றிய கேள்வி எழுந்துள்ளது. எனவே, தி.மு.க. ஆட்சிக்கு வந்தால்,
  சமுதாய மாற்றத்திறகும் ஏற்றத்திற்கும் வழி வகுக்க மதுவிலக்கு
  சட்டத்தை அமல்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்”
  என்று கூறியுள்ளார்.

  tamil hindu –

  மீண்டும் மதுவிலக்கு சட்டத்தை நடைமுறைப் படுத்தினால் என்ன
  என்ற கேள்வி எழத்தான் செய்கிறது. எனவே, திமுக மீண்டும்
  ஆட்சிக்கு வந்தால் சமுதாய மாற்றத்திற்கும், ஏற்றத்திற்கும்
  வழி வகுக்கும் வகையில் மதுவிலக்கை அமல்படுத்த தீவிர
  நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று கருணாநிதி கூறியுள்ளார்.

  ——————————–

  சந்தேகமே இல்லை – நிஜமான அறிக்கை தான்….!!!
  ஆனால் கலைஞர் மிகவும் கெட்டிக்காரர்.
  வார்த்தைகளில் விளையாடக்கூடியவர்…
  இன்னமும் கலைஞர் மீது நம்பிக்கை வர மறுக்கிறது…

  அதென்ன ….

  // சமுதாய மாற்றத்திற்கும், ஏற்றத்திற்கும்
  வழி வகுக்கும் வகையில் மதுவிலக்கை அமல்படுத்த தீவிர
  நடவடிக்கைகள் எடுக்கப்படும்” //

  திமுக ஆட்சிக்கு வந்தால் – “உடனடியாக பூரண மதுவிலக்கு
  அமலுக்கு கொண்டு வரப்படும் ”

  என்றல்லவா இருந்திருக்க வேண்டும் அறிவிப்பு…?

  ———-

  எப்படியாவது இருக்கட்டும்.

  என் கருத்து –

  கலைஞருக்கு அந்த வாய்ப்பை கொடுக்காமல்,
  ஜெ.அவர்கள் தேர்தலுக்கு முன்னரே மதுவிலக்கை
  அறிவித்து விடுவார் – என்றே நான் கருதுகிறேன்.

  எப்படியோ – யார் மூலமாவது தமிழ்நாட்டிற்கு
  விடிவு காலம் பிறக்கட்டும்…

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

  • paamaran சொல்கிறார்:

   நன்றி அய்யா ! எப்படியாவது ஆட்சி நாற்ககலியில் அமர வேண்டும் என்கிற எண்ணத்தில் விட்ட அறிக்கை போல தெரிகிறது ? பூரண மது விலக்கு என்று அறிவிக்க அவருக்கு — ” பூரண மனது இல்லை ” என்றே புலனாகிறது — அப்படிதானே ? தினமணி செய்தியும் அதற்கு வாசகர்களின் கமெண்ட்களும் அப்படியே —- .4 Comments
   Sort by Latest
   Tharun Swamy1 Minute ago

   அன்றும் இன்றும் கருணா ஆட்சியை பிடிக்க மக்களை ஏமாற்ற கபட அறிவிப்பு.
   Reply
   Share
   Sri Ram29 Minutes ago

   ராஜாஜி இந்தியாவில் முதலில் மது விலக்கை, தமிழகத்தில் கொண்டு வந்தார் . ! திமுக ஆட்சி கருணா முதல்வர்க இருந்த போது, கள-சாராய கடை திறக்க செய்த போது , பட்ஜெட் பற்றாகுறை , சரியானவுடன் மூடுவேன் என்று கடையை திறந்த – திருக்குவளை கொக்கன் ! இன்று நாடகம் ஆடுகிறார் . பாக்கெட்டில் சாராயம் கொடுத்த இவர் மது பானம் பற்றி பேசுவது கேவலமானது !
   Reply
   Share
   Namasivayam Chokkalingam2 Hours ago

   ‘கொடுத்தவனே எடுத்துக்கொண்டாண்டி, மானே …………………………………’
   Reply
   Share
   Sundar Murthy2 Hours ago

   கள்ள சாராய சாவுகள் அதிகரிக்கும். கட்சி மற்றும் தொண்டர்கள் கள்ள சாராயம் விற்று பெரும் பணக்காரர்களாகி விடுவார்கள். கட்சி பணக்கார கட்சியாகி விடுமே?
   இப்போது அரசுக்கு கிடைக்கும் பல கோடிகள் கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் வீட்டில் அல்லவா சரணடைந்து விடும்.
   இந்த எழவுக்கு தானே மதுவிலக்கு அமல் படுத்தாமல் இருக்கிறோம்.
   வேண்டுமானால் ஒன்று செய்யலாம்.
   “குடிக்க வேண்டாம்” என்று பிரசராம் செய்து குடிப்பவர்களை குறைக்கலாம். இது ஒன்று தான் நல்ல வழி.
   1
   Reply
   ஷேர்

 7. selvam சொல்கிறார்:

  KM Sir,
  I don’t beleive karuna. I always remember “Malai vittum thuvanam vidavillai”.

 8. drkgp சொல்கிறார்:

  குழந்தையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டுவதில் கருணாநிதிக்கு
  நிகர் இன்னும் இந்த பூவுலகில் யாரும் பிறக்கவில்லை .
  மூன்று தலைமுறை தமிழ் இளைஞர்களை மதுவில் மூழ்கடித்த பாவம் கருணாநிதியை
  மட்டுமே சாரும்.

 9. paamaran சொல்கிறார்:

  கலைஞர் வார்த்தைகளில் விளையாட கூடியவர் —- பல கோணங்களில் சிந்திக்க கூடியவர் ! முன்பு லாட்டரிக்கு ஜெயலலிதா தடைவிதித்து நடவடிக்கை எடுத்தார் — அடுத்த தேர்தலில் அவர் தோற்றார் —- இப்போது கா.மை .அய்யா கூறியதை போல ஒருவேளை இவரது அறிக்கைக்கு மாறாக தேர்தலுக்கு முன்னரே ஜெயலலிதா மதுவிலக்கு கொண்டு வந்தால் — அதிக எண்ணிக்கையில் உள்ள ” குடிகாரர்களின் ” வாக்குகள் அ.தி.மு.க.வுக்கு எதிராக மாறும் — மதுவினால் அரசுக்கு வரும் வருமானம் இல்லாமல் திட்டங்கள் நிறைவேற்ற முடியாமல் போகும் —- தான் ஈசியாக ஆட்சியை பிடித்து விடலாம் என்று கணக்கு போட்டு இந்த அறிக்கையை விட்டிருப்பாரோ ? என்கிற சந்தேகமும் எழுகிறது !! எப்படியோ மதுவிலக்கை தமிழ்நாட்டில் ரத்து செய்து மூன்று தலைமுறைகளை வீணாக்கிய கலைஞர் இப்போது பரிகாரம் செய்ய முனைவது எதனால் ?

  • குமார் சொல்கிறார்:

   சரியா சொன்னீங்க பாமரன் அய்யா…. எடுத்துட்டா ரெண்டு கழகங்களும் ஆடிடும்…

   காமை அய்யா, அரசாங்கம் இதலெல்லாம் யோசிச்சு முடிவு எடுக்க கொஞ்சம் தாமதம் ஆகுங்கிறேன்….

   1. டாஸ்மாக் ஊழியர்கள் வேலை இழப்பாங்க… அவுங்களுக்கு தீர்வு…
   2. பெப்சி, கோலா, தண்ணீர் சப்ளை செய்யும் நிறுவனங்கள் சும்மா இருக்குமா? இந்த உதிரிகளோட வருமானம் எவ்வளவு தெரியுமா?
   3. கறி முட்டை இதர வகையில் வரும் இழப்பு… கட்சிகாரங்களுக்கு தான் வரும், இருந்தாலும் அவர்கள் அனைவரும் உடன்பிறப்புகள் இல்லயா…
   4. பாண்டிச்சேரி மற்றும் பிற அண்டை மாநிலங்களுக்கு வருமானம் இங்கிருந்து செல்ல வேண்டுமா?

   குடியால சாகுறவுங்கள விட புகையிலையால சாகுறவுங்க/பாதிப்பு அதிகம்.ஏட்டிக்கு போட்டியா அத தடை பண்ணுவாங்கன்னு நினேக்கேன்…

   எல்லா காவும், தங்க வசதிக்கு ஏத்த மாதிரி அறிக்கை விடுறாங்க….
   அப்படியே எடுத்தாலும், கள்ள சந்தைல, நல்ல வருமானமும் வரும்… நிறைய சாவுகளும் வரும்…

 10. Nanban சொல்கிறார்:

  சில வருடங்களுக்குன் முன் , ரிலையன்ஸ் நிறுவனம் , வெளி நாட்டில் இருந்து வரும் தொலை பேசி அழைப்புகளை உள்ளூர் அழைப்பு போன்று காட்டி , சுமார் 1500 கோடி வரை அரசுக்கு வருமான இழப்பு ஏற்படுத்தியபோது , அவர்களுக்கு சுமார் 150 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டது. நிறுவனம் இன்றும் செயல்படுகிறது.
  சன் குழுமம் செய்தது எப்படி பாதுகாப்பு அச்சுறுத்தலோ , அதே போன்ற அச்சுறுத்தல்தான் அப்போதும் நிகழ்ந்தது.
  ஆனால் மத்திய அரசின் அணுகுமுறை?
  அம்பானிகளுக்கு எதிராக சுட்டுவிரலையும் அசைக்க தயங்கும் நியாயவாதிகள், இப்போது வானத்துக்கும் பூமிக்குமாக குதிக்கிறார்கள். இரு நிறுவனங்களுமே தண்டிக்கப்பட வேண்டும் , சரியான முறையில். ஆனால் நடைமுறையில் அவ்வாறு செய்ய மாட்டார்கள்.

  • today.and.me சொல்கிறார்:

   கவலையே படாதீர்கள் நண்பன்,
   கேடிக்கோ, அம்பானி்க்கோ அதானிக்கோ அல்லது அநீதிக்கோ எதிராக மத்திய அரசு மட்டுமல்ல யாருமே சுட்டுவிரலையும் அசைக்கமாட்டோம். அதற்குபதிலாக அவர்கள் இயங்க அனுமதி கொடுப்போம். கோடாலிக்காம்பு அரசியல்வியாதிகள்.

   இன்றைக்கு அனுமதி வந்தாகிவிட்டது, அவர்கள் ஏலத்தில் கலந்துகொள்ள.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.